Aug 30, 2010

குவார்ட்டர் வித் குரு


 

 குறும்படங்களாக எடுத்து தள்ளும் எங்க டைரக்டர் ஆதிக்கு நான் எழுதி தந்த ஸ்க்ரிப்ட். காஃபி வித் அனுவை லொள்ளு சபா ஸ்டைலில் பகடியாக்கும் முயற்சி.   விரைவில் இதை படமாக பார்க்கலாம். இதை படமா எடுத்தா எப்படி இருக்கும்ன்னு கருத்து சொல்லுங்க. காசா பணமா.. அட்வைஸ்ன்னா தான் நம்ம மக்கள் அள்ளி தெளிப்பாங்களே!!!! :)

_______________________________________

குரு : வெல்கம் டூ ”கிங்ஃபிஷர்” குவார்ட்டர் வித் குரு சீசன் ஏழரை. (தரை பெருக்குபவரை நோக்கி) நம்மளோட டுடேஸ் கெஸ்ட்ட பத்தி நான் ஒரு க்ளூ கொடுக்கிறேன். சாப்பாட்டு கடைன்னா உங்களுக்கு யாரு பேரு ஞாபகத்துக்கு வரும்?

பெருக்குபவர்: சரவண பவன் அண்ணாச்சி

குரு: நம்ம ஸ்டூடியோ ஸ்வீப்பர் வழக்கம் போல மப்புல கரெக்டா சொல்லிட்டாரு. இவர் பேரும் “ச”லதான் ஸ்டார்ட் ஆகுது. கெஸ்ட் பேரும் ”ச”லதான் ஸ்டார்ட் ஆகுது. Our today;s guest is an incredible idiot and most importantly a wonderful eater. we are most irritated to welcome our future director Mr cable sankar to “Kingfisher” quarter with guru season ezarai

(கைத்தட்டல் சத்தம்) அதைத் தொடர்ந்து கேபிள் டாஸ்மாக்கில் இருந்தோ, அல்லது உடைந்த படிகள் உடைய மாடியில் இருந்தோ வருவதைக் காட்டுகிறார்கள்.  பேக்கிரவுண்ட் மியூசிக். வந்தவுடன் ஒரு காலி கிங்ஃபிஷர் பியர் பாட்டிலை கொடுக்கிறார்கள்

குரு : உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சார். நம்ம ஸ்வீப்பர் கிட்ட கூட நான் கேட்டேன். “சாப்பாட்டு கடைன்னா உங்களுக்கு யார் பேரு ஞாபகத்துக்கு வரும்ன்னு. அவங்க கரெக்டா சொல்லிட்டாங்க. எப்படி சார் இந்த சாப்பாடு கடை தொடர்பதிவு போடுற ஐடியா வந்துச்சு

சங்கர்: (சிரிக்கிறார்). அது ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ். என்னோட முதல் படத்துல கூட ஒரு சீன். உப்பிட்டவனை உள்ளளவும் நினைன்னு சொல்வாங்க.

குரு: நான் கூட டாடாவை மறக்கவே மாட்டேன் சார். எங்க வீட்ல டாடா சால்ட் தான்.

சங்கர்: நான் சினிமாக்காரன். அதனால் எனக்கு ஏஞ்சலீனா ஜோலி சால்ட்தான். ஹாஹாஹா

குரு: உங்க படத்த பத்தி சொன்னிங்களே

சங்கர்: ஆமா. என் படத்திலும் முக்கிய கருவே அதான்.ஹீரோவுக்கு சாப்பாடுதான் எல்லாமே. யாரெல்லாம் அவனுக்கு சாப்பாடு போட்டாஙக்ளோ அவங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வான். சின்ன பபுள் கம் வாங்கித் தந்தவனுக்கு தன் சட்டையே கழட்டி தருவான். இப்படி போற அவன் வாழ்க்கைல சாப்பாடு போட்டு வளர்த்தவனே வில்லன்னு தெரியும் போது நம்ம ஹீரோ என்ன செய்றார்ன்றதுதான் கதை.

குரு: வாவ். ருசிகரமான கதைன்னு சொல்லுங்க சார்

சங்கர்: இது வரை இந்த 75 வருஷ தமிழ் சினிமாவுல, சாப்பாட்ட மையமா வச்சு சில பாடல்கள் வந்திருக்கு. ஆனா முழு நீள படம் வந்ததில்ல. இதான் ஃபர்ஸ்ட்  (முகத்துல ஒரு பிரைட்னஸ் காட்றாரு)

குரு: சார். நீலப்படம்ன்னா. எப்படி சார்? படம் இங்க ரிலீஸ் ஆகுமா?

சங்கர்: ஃபுல் லெந்த் ஈட்டிங் மூவின்னு சொல்ல வறேன்

குரு: இந்த இடத்துல நான் இன்னொரு விஷயத்தையும் சொல்லனும் சார். உங்க கூட ஷார்ட்பிலிம்ல ஒர்க் பண்ண எல்லோருமே சொன்ன விஷயம். சங்கர் சார் படத்துல ஒர்க் பண்ணா சாப்பாடு நல்லா கிடைக்கும். இன்ஃபேக்ட் நான் கூட உங்க படத்துல ஒரு சின்ன கேரக்டர் செஞ்சிருக்கேன்.

சங்கர்: அந்த சின்ன கேரக்டரே நீ எவ்ளோ நேரம் செஞ்ச? (மீண்டும் சிரிக்கிறார்). வெலை செய்றது எதுக்கு? சம்பாதிக்க. சம்பாதிக்கிறது எதுக்கு? சாப்பிட. சாப்பிடறது எதுக்கு? வேலை செய்ய தெம்பு வேணும். வேலை செய்றது எதுக்கு? சம்பாதிக்க. சம்பாதிக்கிறது எதுக்கு?

குரு: (சிரிக்கிறார்) போதும் சார். உங்க முதல் படத்த பத்தி சொல்லுங்க

சங்கர்: என் சினிமேட்டோகிராஃபர் மண்டோரா தனி சொன்னது இது. சங்கர் சீக்கிரம் நீ பெரிய படம் பண்ணனும்,. ஏன்னா ஷார்ட் ஃபிலிம் படம் பண்றப்ப ஸ்மால் வாங்கித் தருவ. எனக்கு லார்ஜ் அடிச்சாதான் பத்துது. அதுக்காச்சும் நீ படம் பண்ணனுன்னு

குரு: ஹவ் ஸ்வீட். உங்க கூட ஒர்க் பண்ற எல்லோருக்குமே உங்கள் புடிக்குதே. எப்படி சார்?

சங்கர்: அத அவங்கதான் சொல்லனும்.

குரு: கரெக்டா சொன்னிங்க.  அடுத்த செக்மண்ட். “அந்த டேஷா”. இவரோட வேலை செஞ்சவங்க இவர பத்தி என்ன சொல்றாங்கன்னு கேட்போம். ஸ்டே ட்ரங்ட் வித் ”கிங்ஃபிஷர்” குவார்ட்டர் வித் குரு சீசன் ஏழரை.

மூணாவது பார்ட்ல புதுசா ஒரு சீஃப் கெஸ்ட் வருகிறார். அவர் கேபிளின் பட ஹீரோ.

குரு: நம்மளோட அடுத்த கெஸ்ட். இவரப் பத்தி சொல்லனும்ன்னா நிறைய இருக்கு. ஆனா இவரப் பத்தி நல்லத சொல்லனும்ன்னா ம்ஹூம்ம்.. இந்நேரம் கண்டுபுடிச்சி இருப்பிங்க. பட்டினிக்காரன் படத்தின் ஹீரோ மிஸ்டர். கண்ணன்.

அதே எண்ட்ரி சம்பிரதாயங்கள் மீண்டும் காட்டப்படுகின்றன

குரு: பார்க்கவே சூப்பரா இருக்கு. ரெண்டு பேரும் நல்ல டீம். அது என்ன சார் தொடைல?

கண்ணன்: இது என்னோட அடுத்த படத்தோட கெட்டப். வெளிய தெரியக்கூடாதுன்னு மறைச்சு வச்சிருக்கேன்.

குரு: உங்க ஸ்பேஷாலிட்டியே கெட்டப்தான் சார். அது என்ன ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கெட்டப் பண்றீங்க.

கண்ணன்: அதுக்கு சார்தான் காரணம் (சங்கரை). மைனருக்கு செட்டப்பும், நடிகருக்கு கெட்டபும் முக்கியம். அதுவும் அடிக்கடி மாத்திட்டே இருக்கணும்ன்னு சார் அடிக்கடி சொல்வார்.

சங்கர்: ஆமாங்க. இப்பலாம் ஆடியன்ஸ் வெரைட்டி எதிர்பார்க்கிறாங்க. ஒரே மாதிரி நடிச்சா போரிங்க ஃபீல் பண்றாங்க. என் படத்துல பார்த்திங்கன்னா, முதல் சீன்ல பாட்டியா நடிச்சவங்க இடைவேளைக்கு பிறகு வர மாட்டாங்க. வேற ஒருத்தவங்க நடிக்கிறாங்க.

___________________________________________________________________________________

மற்றவை திரையில் :)

31 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on August 30, 2010 at 12:30 AM said...

அட ஆண்டவா.. என்னை ஏன் இந்தமாதிரி கழிசடப் பசங்ககூடயெல்லாம் பழகவெக்கற?

Cable Sankar on August 30, 2010 at 1:07 AM said...

:)))

ப்ரியமுடன் வசந்த் on August 30, 2010 at 1:12 AM said...

//அது என்ன சார் தொடைல?

கண்ணன்: இது என்னோட அடுத்த படத்தோட கெட்டப். வெளிய தெரியக்கூடாதுன்னு மறைச்சு வச்சிருக்கேன்.//

;)))))))

டோட்டலா கேபிள்ஜி டேமேஜ் வலிக்காதது மாதிரியே சிரிக்கிறார் பாருங்க..!

சுசி on August 30, 2010 at 1:38 AM said...

ஆவலோட வெயிட்டிங்..

வெளி நாடுகளிலேம் திரையிடுவிங்க இல்லை..

பா.ராஜாராம் on August 30, 2010 at 5:09 AM said...

ஹா..ஹா..ஹா (டாப் டு பாட்டம் கார்க்கி!)

fantastic!

விடுங்க குரு,

வில்லனுக்கு கார்கின்னு பேர் வச்சு வெளுத்துருவோம் வெளுத்து.

மகேஷ் : ரசிகன் on August 30, 2010 at 8:09 AM said...

Nice.... :)

மகேஷ் : ரசிகன் on August 30, 2010 at 8:09 AM said...

// அட ஆண்டவா.. என்னை ஏன் இந்தமாதிரி கழிசடப் பசங்ககூடயெல்லாம் பழகவெக்கற? //

very nice.. :)

R Gopi on August 30, 2010 at 8:12 AM said...

திங்கட் கிழமைக்குத் தேவையான ஒரு stress buster. நல்லா எழுதி இருக்கீங்க. உக்கார்ந்து யோசிப்பீங்களோ அல்லது அதுவா வருதா?

வழிப்போக்கன் - யோகேஷ் on August 30, 2010 at 8:22 AM said...

ஹா ஹா ஹா........... நல்லா இருக்கு.......

நாய்க்குட்டி மனசு on August 30, 2010 at 8:31 AM said...

பொ,,,றா..மை விஜய் டிவி நிகழ்ச்சிக்கு நம்மள விட்டுட்டு எல்லோரும் போயிட்டாங்களேன்னு. அதிலயும் சீட்டிங் ல நர்சிம் பார்த்து காதில பொகையா வந்திருக்குமே ?

ஜில்தண்ணி - யோகேஷ் on August 30, 2010 at 9:21 AM said...

அடடே தாரு மாறு தல :)

"குவார்ட்டர் வித் குரு" சீசன்-2 எப்ப ?

Sen22 on August 30, 2010 at 9:44 AM said...

:))) Kalakkal...

Sen22 on August 30, 2010 at 9:45 AM said...

//"குவார்ட்டர் வித் குரு" சீசன்-2 எப்ப ?//

waiting for PART 2... :))

கார்க்கி on August 30, 2010 at 10:03 AM said...

பரிசல், இந்நிகழ்ச்சிக்கு நீங்க வரும்போது இந்த டயலாக்கை சொல்லலாம் என்றிருந்தேன். முந்திக் கொண்டீர்கள்

நன்றி கேபிள்..:))

வசந்த், அவருக்கு நிஜமாகவே வலிக்காது சகா

சுசி, செவ்வாய் கிரகத்திலும் ரிலிஸ் செய்ய சொன்னார் எங்க இயக்குனர் கேபிள் :)

பா.ரா, சந்தோஷம் சார். அவர் கதையில் வரும் வில்லன் ஸ்த்ரிலோலனாம் :)

மகேஷ், ரைட்டு. நேத்து எவ்ளோ தூரம் ஓடுன?

கோபி, அதுவாதான் வந்துச்சு சகா. இருந்தாலும் உட்கார்ந்துதான் டைப் பண்ணேன்

நன்றி யோகேஷ்

நாய்க்குட்டி, ஹிஹிஹி. அந்த அரசியல் வேற. நான் எஸ்கேப் ஆனது நல்லதுக்குதான் :)

ஜில்தண்ணி, ஆதரவு நல்லா இருந்தா வாராவாரம் ஆரவாரம் தான் :)

நன்றி சென்

♠ ராஜு ♠ on August 30, 2010 at 10:15 AM said...

பரிசலோட கமெண்ட்டுக்கும் அவரோட புரஃபைல் ஃபோட்டோவிற்கும் ஏக பொருத்தம்!
:-)

♠ ராஜு ♠ on August 30, 2010 at 10:27 AM said...

தலைப்பிலேர்ந்து ஆரம்பிக்கிறேன்!

குவார்ட்டர் வித் குரு.
முதலில்,குவார்ட்டர்ன்னாலே கோவிந்தன்தான் என்ற சீதோஷ்ண நிலையை தர்த்தெறிந்தற்கு பாராட்டுகிறேன்.

ஆனாலும், குவார்ட்டர் என்று சரக்கு பெயர் வந்தாலே அதை கோவிந்தன் அல்லது குரு என்ற நாமம் கொண்ட ஆண்கள்தான் குடிப்பர் என்கிற கிளிஷே நிலை இங்கு தொக்கி நிற்பதை தவிர்க்கமுடிவதில்லை.

எனவே, ”குவார்ட்டர் வித் குழல்வாய்மொழி” என்றி வைத்திருப்பின் நலம். குவன்னாவுக்கும் குவன்னா, காவன்னாவுக்கு காவன்னா போட்டு எழுதும் தமிழக எழுத்தாளர்களின் நிலை இங்கு பளிச்சிட்டாலும் பரவாயில்லையென வைத்துக் கொள்ளலாம்.

தலைப்புக்கே மூச்சு வாங்குது. பதிவை அப்பாலிக்கா வந்து படிக்கிறேன்!

நர்சிம் on August 30, 2010 at 11:40 AM said...

கலக்கல் சகா.. வெயிட்டிங்.

Ponkarthik on August 30, 2010 at 12:02 PM said...

அருமை சகா!!

நான் சினிமாக்காரன். அதனால் எனக்கு ஏஞ்சலீனா ஜோலி சால்ட்தான் ::)))

vinu on August 30, 2010 at 12:21 PM said...

avaru paattukku eatho eatheatho nalla nalla sappaaada sollittu irunthaaru avaru mealla ungalukku ean saga ivalovu kolai verii

appuram again back to chennai today morning for upto next monday location @ ECR road near to Tidle park

நிவாஸ் on August 30, 2010 at 12:50 PM said...

suuuuuuuuuuuuuuuuuuuper appu

sivakasi maappillai on August 30, 2010 at 1:24 PM said...

ஆ...ரம்பமே....... அமர்க்களம்.....

காவேரி கணேஷ் on August 30, 2010 at 2:22 PM said...

சூப்பர்.

கார்க்கி ஸ்டைல்.

முரளிகுமார் பத்மநாபன் on August 30, 2010 at 2:24 PM said...

இது எப்ப சகா வீடியோவா வரும்? வெயிட்டிங்....
:-)

ப.செல்வக்குமார் on August 30, 2010 at 3:15 PM said...

//நான் கூட டாடாவை மறக்கவே மாட்டேன் சார். எங்க வீட்ல டாடா சால்ட் தான்///
இதுக்கு இப்படி கூட விளக்கம் சொல்லலாமா ...?

பிரியமுடன் ரமேஷ் on August 30, 2010 at 3:57 PM said...

//குரு: சார். நீலப்படம்ன்னா. எப்படி சார்? படம் இங்க ரிலீஸ் ஆகுமா?

கலக்கிட்டீங்க...உண்மைல இந்த டபுள் ஸ்லாஸ்கு அப்புறம்..இந்தப்பதிவையே காபி பண்ணி பேஸ்ட் பண்ணியிருக்கனும்..அது ரொம்ப ஓவரா இருக்குமேன்னு...சேம்பிலுக்கு ரெண்டே லைன்...

kumaresh on August 30, 2010 at 4:10 PM said...

கோபி, அதுவாதான் வந்துச்சு சகா. இருந்தாலும் உட்கார்ந்துதான் டைப் பண்ணேன்
superrrrrr.....

கார்க்கி on August 30, 2010 at 4:51 PM said...

ராஜூ, நடிக்க வேண்டிய நபர் ஆண். குழல்வாய்மொழியின் கால்ஷீட்டிற்கு நாங்க என்ன செய்வது?

நன்றி நர்சிம். விரைவில் தஙக்ளையும் இந்நிகழ்ச்சியில் காண அவா

நன்றி பொன்.கார்த்திக்.

வினு, கால் பன்ணுங்க. 9789887048

நன்றி நிவாஸ்

சிவகாசி, ஹிஹிஹி. அறுவை என்பதை பயபுள்ள எவ்ளோ பாலிஷா சொல்லுது :)

நன்றி காவேரி கணேஷ்.

முரளி, இன்னும் பூஜையே போடல :)

நன்றி செல்வா

நன்றி ரமேஷ்.

நன்றி குமரேஷ்

அன்பரசன் on August 30, 2010 at 5:51 PM said...

கலக்கல் ரகம் தல

வெறும்பய on August 30, 2010 at 6:31 PM said...

பாஸ் இப்படி கூட கலாய்க்கலாமா..

தமிழ்ப்பறவை on August 30, 2010 at 8:04 PM said...

:-) பாதில முடிஞ்ச ஒரு ஃபீலிங்...

ஆதிமூலகிருஷ்ணன் on August 30, 2010 at 9:50 PM said...

எழுதி முடிச்சா கொஞ்சம் பொறுமையாக இருக்க முடியாதே நமக்கு. அட போங்கப்பா.!

 

all rights reserved to www.karkibava.com