Aug 26, 2010

ராக்கி கட்ட வருகிறாள் தோழி


 

 

எல்லா நாளும் கரெக்டா வர்ற. வீக் எண்ட் ஆனா மட்டும் என்னை பார்க்க ஏன் வர மாட்ற என்றாள் தோழி. நம் உறவில் எண்ட்டே இருக்க கூடாது என சமாளித்து வைத்தேன்.

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

பேரழகிகளை பிடிக்காது என்றெழுதியது தப்பா போச்சு.என்னை உனக்கு பிடிக்காதா என்கிறாள் தோழி. யார் சொன்னா?உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன். புரியாமல் சிரித்து வைக்கிறாள் காதல் பிசாசு.

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

  எங்க தெருவுல ஒரு ஃபிகர் கூட இல்லை என்று தோழியிடம் சொன்னால் நிஜமாவா என புருவம் உயர்த்தினாள். . அவளைப் பார்த்த கண்களுக்கு வேற யார் ஃபிகராக தெரிவார்கள்?

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நடுச்சாலையில் ராக்கியுடன் ஓடி வருகிறாள் தோழி. என்ன ஆச்சு என்றால் “உனக்கு எல்லாமுமாக நான் இருக்கேனேடா. வேற யாரும் வேணாமே” என்று செல்லம் கொஞ்சுகிறாள். கையில் கட்ட வந்ததைப் பிடுங்கி அப்போதே கழுத்தில் கட்ட வேண்டும் போலிருந்தது.

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

என்னடா செய்ற ஆஃபிஸ்ல என்றாள் தோழி. பாட்டுக் கேட்டு கொண்டிருக்கிறேன் என்றேன். என்னைப் பார்க்க வராம இதென்னா வேலை? இதையும் சேர்த்து கேள் என செம பாட்டு விட்டாள். அதாங்க திட்டினா

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

திருவிழா அன்று சிறுவயதில் காணாமல் போய் மீண்டும் கிடைத்தாளாம் தோழி. அவள் ஊர் திருவிழாவிற்கு நான் போகும் வழியில் அலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தாள். ஊர் சேர்ந்து திருவிழாவில் தாவணியில் வந்த தோழியைப் பார்த்த போது திருவிழாவே காணாமல் போனதாக இருந்தது எனக்கு.

29 கருத்துக்குத்து:

இராமசாமி கண்ணண் on August 26, 2010 at 1:00 AM said...

இடம், பொருள் பார்க்காமல் முதலிரவையும் அங்கேயே நடத்தி விடுவாள் என்பதால் கையை மட்டும் காட்டினேன்.
---
இதல்லாம் கொஞ்சம் ஒவரா இல்லையா கார்க்கி :)

சுசி on August 26, 2010 at 1:09 AM said...

எல்லாமே கலர்ஃபுல்லா இருக்கு.

கலக்கலா இருக்குன்னு சொல்லி சொல்லி அலுத்து போச்சுப்பா.

vinoth on August 26, 2010 at 1:15 AM said...

super :)

vinoth on August 26, 2010 at 1:15 AM said...

super :)

king on August 26, 2010 at 3:04 AM said...

மூக்கு பொடப்பா இருந்தா இப்டி தான் யோசிக்க தோணும், அதுவும் நாடு ரோட்ல first நைட், என்னா வில்லத்தனம்... பட் அந்த டீல் எனக்கு புடிச்சிருக்கு.

Balaji saravana on August 26, 2010 at 6:33 AM said...

//திருவிழாவே காணாமல் போனதாக இருந்தது எனக்கு //
எங்களுக்கு திருவிழா ஸ்டார்ட் ஆயிடுச்சு சகா, "தோழி அப்டேட்ஸ" சொன்னேன் :)

//எல்லாமே கலர்ஃபுல்லா இருக்கு.
கலக்கலா இருக்குன்னு சொல்லி சொல்லி அலுத்து போச்சுப்பா//
ரிப்பீட்டு! புதுசா எதாவது வார்த்தை தான் கண்டுபுடிக்கணும் கார்க்கிகாக!

Mohamed Faaique on August 26, 2010 at 8:52 AM said...

weakend matter superb saha....

taaru on August 26, 2010 at 9:12 AM said...

//கையை மட்டும் காட்டினேன்//
எங்கேயோ இடிக்குதே???

சுருதி கொறஞ்ச மாதிரி இருக்கே??? ரொம்ப பச்சக்குன்னு ஓட்டுற மாதிரி இந்த update ல இல்லியே? என்ன காரணம்? யார் செய்த தாமதம்???

Mohan on August 26, 2010 at 9:24 AM said...

எல்லாமே நல்லாயிருக்கின்றது!

vinu on August 26, 2010 at 9:38 AM said...

"கையில் கட்ட வந்ததைப் பிடுங்கி அப்போதே கழுத்தில் கட்ட வேண்டும் போலிருந்தது"


"ஊர் சேர்ந்து திருவிழாவில் தாவணியில் வந்த தோழியைப் பார்த்த போது திருவிழாவே காணாமல் போனதாக இருந்தது எனக்கு"


MaRakkama pathirikkai annuppidunga

ok

Sen22 on August 26, 2010 at 9:47 AM said...

//ஊர் சேர்ந்து திருவிழாவில் தாவணியில் வந்த தோழியைப் பார்த்த போது திருவிழாவே காணாமல் போனதாக இருந்தது எனக்கு.//

Superb...!!!

vanila on August 26, 2010 at 10:10 AM said...

:)...

//கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...// :))

vinu on August 26, 2010 at 10:11 AM said...

saari saga [chea vara vara intha blog thanglish adichu adichu sorry spelling kooda maranthu pochuuu]

ithu oru 6 days assignment saga.

friday night again bangalore kilambanum.........

last friday morning 7'o clock thaaan chennai vanthean so, so sorry unga number kooda illa call panna.........

vinu on August 26, 2010 at 10:15 AM said...

currently, Radha Guest house, 10/11, smith road, TVS petrol bunk oppsite, mount road,office at Knowledge house, 6, Kasthurirangan road, Allvarpet, the road next to HOTEl Soza,

பித்தன் on August 26, 2010 at 10:58 AM said...

//முதலிரவையும் அங்கேயே நடத்தி விடுவாள் என்பதால் கையை மட்டும் காட்டினேன்.//

சகா சொல்லிட்டு செய்யுங்க ப்ரீயா படம் பார்க்க ஆசையா இருக்கு.....

இவன் சிவன் on August 26, 2010 at 11:59 AM said...

//இடம், பொருள் பார்க்காமல் முதலிரவையும் அங்கேயே நடத்தி விடுவாள் என்பதால் கையை மட்டும் காட்டினேன்.//
தோஸ்து இது கொஞ்சம் 'A'டாகூடம்

சகா இப்டியே அனத்திகிட்டே இருந்திங்கன்னா சொந்த காச போட்டு நம்ம பதிவர்களே கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க..சூதானமா இருங்க...

Anbu on August 26, 2010 at 12:47 PM said...

நீங்க நடத்துங்க பாஸ்...

Anbu on August 26, 2010 at 12:48 PM said...

ச்சே..ச்சே.. இந்த தமிழ் சினிமா பார்த்து பார்த்து ரொம்ப கெட்டுபோயிருக்கீங்க...

Ponkarthik on August 26, 2010 at 12:59 PM said...

யோவ் யோவ் வயிருஎரியுதுயா :-)

நிவாஸ் on August 26, 2010 at 2:21 PM said...

லொள்ளுக்கு அளவே இல்ல - ஆனாலும் ரசிக்க முடிகிறது

Karthik on August 26, 2010 at 3:09 PM said...

nexxtt resstt..:)

மறத்தமிழன் on August 26, 2010 at 4:00 PM said...

கார்க்கி,

..கடைசி சூப்பர்...
இதெல்லாம் சரி...எப்போ மேரேஜ்?
வயசு ஏரிட்டே போகுதில்லையா..

தமிழ்ப்பறவை on August 26, 2010 at 5:30 PM said...

4ம், 6ம் நல்லாருக்கு சகா

நாய்க்குட்டி மனசு on August 26, 2010 at 8:00 PM said...

என்னடா செய்ற ஆஃபிஸ்ல என்றாள் தோழி. பாட்டுக் கேட்டு கொண்டிருக்கிறேன் என்றேன்//

அப்போ வேலை எங்கே செய்வீங்க ? வீட்லையா?

அன்பரசன் on August 26, 2010 at 9:37 PM said...

//யார் சொன்னா?உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன்//

பிரமாதம் போங்க..

R Gopi on August 26, 2010 at 10:26 PM said...

\\ஊர் சேர்ந்து திருவிழாவில் தாவணியில் வந்த தோழியைப் பார்த்த போது திருவிழாவே காணாமல் போனதாக இருந்தது எனக்கு. \\

நாங்க திருவிழாத் தேர் மாதிரின்னு சொல்லுவோம்.

எட்வின் on August 26, 2010 at 10:53 PM said...

தோழி அப்டேட்ஸ் கொஞ்சம் ஓவராத் தான் போயிக்கிட்டு இருக்கு... ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க

மகேஷ் : ரசிகன் on August 26, 2010 at 11:48 PM said...

Sorry சகா.... மொத்தத்தையும் ஒரே ஒரு அப்டேட் அப்செட் பண்ணிடுச்சு.

ஆதிமூலகிருஷ்ணன் on August 30, 2010 at 9:53 PM said...

அழகிய ஒன் லைனர்கள். தொடர்க..

 

all rights reserved to www.karkibava.com