Aug 24, 2010

காக்கும் உறவு


 

   முதல் வரியிலே கதை தொடங்கி விட வேண்டுமாம். இந்த விதியெல்லாம் எனக்கு தெரியாதுங்க. ஆனா கல்லூரிக்கு வந்த முதல் நாளே அவள பார்த்துட்டேன். அவள பத்தி சொல்றதுக்கு முன்னாடி என்னை பத்தியும் கொஞ்சம்… பேரு மதுசூதனன். என் பக்கத்துல உட்கார்ந்திருக்கும் சுனில் தான் அத மதன்னு சுருக்கி வச்சான். சுந்தரமணிகண்டவடிவேலு என்ற அவன் பேர நான் சுனில்னு சுருக்கல. அது வேற யாரோ. 12வது வரைக்கும் போளுர் பக்கம் தச்சாம்பாடியிலதான் படிச்சேன். மாவட்ட அளவுல முதலா வந்தேன். ஒரு நல்லவர்தான் சென்னையில இஞ்சனியரிங் படிக்க உதவி செய்றாரு. இவரு கதைக்கு எந்த உதவியும் செய்ய போறதில்லை. நாம நேரா அவள பார்க்க போலாம்.

அவ பேரு திவ்யா. பார்க்கவும் திவ்யமா இருப்பா. காருலதான் காலேஜுக்கு வருவா. அவ மேல பட்டா அவ கருத்துடுவாளோன்னு சூரியன் கூட அவ மேல யோசிச்சுதான் விழும். அட! காதல் எல்லாம் இல்லைங்க. அவள பார்த்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கும். அவள தங்கச்சியா எப்போதிலிருந்து நினைக்க ஆரம்பிச்சேன்னு தெரில. ஆனா எனக்கு அவள மாதிரி ஒரு தங்கச்சி இருக்கக் கூடாதான்னு ஏங்கினேன். அப்படி ஒரு நல்ல பொண்ணு. எல்லோருக்கும் நல்லதையே நினைப்பா. எல்லோர் கூடவும் சகஜமா பழகுவா. என் கூடவும்.

என் பக்கத்துலதான் உட்காருவா. எனக்காக தயிர்சாதம் வீட்டுல இருந்து எடுத்துட்டு வருவா. ஹாஸ்டல்ல போடுற தயிர் சாதம் ****ராட்டும் இருக்கும். அந்த வார்த்தை கூட அவளுக்கு புடிக்காது. கிராமத்தான் எப்படி பேசுவான்னு கேட்டா உன்னை மாத்துறேண்டான்னு சிரிப்பா. நான் மாறினா சிரிப்பா இருக்கும்ன்னு தெரிஞ்சுதான் சிரிச்சாளோ என்னவோ. பெசண்ட் நகர், சத்யம்ன்னு சுத்தாம எனக்கு புடிச்ச இடத்துக்கு கூட்டிட்டு போய்  சென்னைய அழகா காமிச்சா. அம்மா அப்பாவ விட்டு இருக்கிற கஷ்டமே தெரியாம பார்த்துக்கிட்டா. காலேஜ்ல இருந்த சீனியர் எல்லாம் என்னை மச்சான்னு தான் கூப்பிடுவாங்க. நிறைய பேர் அவகிட்ட லவ் லெட்டர் எல்லாம் கொடுக்க சொல்லியிருக்காங்க. எதுவுமே அவளுக்கு தெரியாம பார்த்துக்கிட்டேன். ஒரு வருஷம் எப்படி ஓடுச்சுன்னே தெரில. எக்ஸாம் வந்துடுச்சு. நல்லபடியா எழுதினேன். அவதான் காரணம்.

  கடைசி எக்சாம் முடிஞ்ச அடுத்த நாள் கடைசி வருஷ பசங்களுக்கு ஒரு செண்ட் ஆஃப் ஃபங்க்‌ஷன் இருந்துச்சு.  அவ அப்பா தான் சீஃப் கெஸ்ட்டா வந்தாரு. ஆமா அவங்க அப்பா பெரிய தொழிலதிபரு. ஒரு நடிகையை பார்த்து கல்யாணாம் பண்ணிக்காம இவங்க அம்மா கூடவே வாழுற நல்ல தொழிலதிபர். இந்தியாவே அவர பத்தி பேசுதுன்னு நினைக்கிறேன். அவர் கிட்ட என்னையும், நண்பர்களையும் அறிமுகப்படுத்தினா. எல்லோரும் ஹலோ அங்கிள், ஹாய் அங்கிள்ன்னு சொன்னாங்க. நான் மட்டும் நல்லா இருக்கிங்களாப்பான்னு கேட்டேன். என்ன நினைச்சரோ? கோவமா அவள பார்த்து “வாட் இஸ் திஸ் திவ்யா”ன்னு கோவமா போயிட்டாரு.திவ்யா எவ்ளோ சொல்லியும் கேட்காம வேகமா போயிட்டாரு. எல்லோரும் என்னை காட்டான்னு திட்டினாங்க.திவ்யாவும் என்னை முறைச்சிட்டு கூடவே போயிட்டா. ரெண்டு நாள் வெயிட் பண்ணிட்டு நானும் ஊருக்கு போயிட்டேன். என்னை மாதிரி ஒரு கிராமத்தான மருமகனா மட்டும் இல்ல, மகனா கூட ஏத்துக்க மாட்டாங்கன்னு அப்பதான் தெரிஞ்சுது.

மே மாசத்துல ஊரே காய்ஞ்சு போய் இருக்கும். தச்சாம்பாடியும் அப்படித்தான் இருந்துச்சு. ஆனா நான் இன்னும் மோசமா காய்ஞ்சு போயிட்டேன். என்னடா மதுசூதனான்னு பழைய பேரு மறுபடியும் வச்சிட்டாங்க.. அவகிட்ட பேச கூட முடியல. ஆமா. அவ லீவுக்கு லண்டனோ,நார்வேயோ போயிருந்தா. ஒரு மெயில் கூட இல்ல. மூணு நாளைக்கு ஒரு தடவ சேத்பட் வந்து பிரவுசிங் செண்டருக்கு அழுததுதான் மிச்சம். ஜூலை மாசம் காலேஜுக்கு வந்தப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு. ஆனா அவ வரல. பாஸ்போர்ட்ல ஏதோ பிரச்சினை ஆகி ஆகஸ்ட் மாசம் தான் வந்தா. வந்தப்புறமும் என்கிட்ட சரியாவே பேசல. நான் பேச போனப்ப எல்லாம் ஏதாவது சாக்கு வச்சு அவ ஃப்ரெண்ட்ஸ் கூட போயிடுவா. தனியா இருக்கிறப்ப பேசினா பேசாமலே போயிடுவா.

அன்னைக்கு ரக்‌ஷா பந்தன். பசங்க எல்லாம் பொண்ணுங்க ராக்கி கட்டிடுவாங்கன்னு பயந்து ஓடிட்டு இருந்தாங்க. நான் மட்டும் திவ்யாவுக்கு கொடுக்க பாக்கெட் நிறைய சாக்லெட் வாங்கிட்டு போனேன். கேண்டின்ல இருக்கிறதா இன்னொரு திவ்யா சொன்னா. நானும் போனேன். எனக்கு ராக்கி கட்ட மாட்டியான்னு கேட்டேன். முறைச்சிட்டே இருந்தவ அழ ஆரம்பிச்சிட்டா. என்ன ஆச்சோன்னு இன்னொரு திவ்யாவ போய் கேட்க சொன்னேன். பாவி மக.  நான் இல்லாம வாழ முடியாதாம். எத்தனை கதை படிச்சிருக்கிங்க?  அதையெல்லாம் சொன்னா. என்னை லவ் பண்றாளாம். :(

40 கருத்துக்குத்து:

SenthilMohan on August 24, 2010 at 11:15 PM said...

Me the first...!!!

பரிசல்காரன் on August 24, 2010 at 11:19 PM said...

நல்லா இருக்குடா.. முடிவைச் சொல்லும்போது கொஞ்சம் நெகிழ்ச்சி சேர்த்திருக்கலாம். அதுவும் காட்டானோட மனப்போக்குலயே இருக்கட்டும்னு விட்டிருக்க போல.. வெல்!

♠ ராஜு ♠ on August 24, 2010 at 11:21 PM said...

ஏஞ்சாமீ இப்பிடி..?!?

மகேஷ் : ரசிகன் on August 24, 2010 at 11:25 PM said...

very tragic plot!

பின்னே லவ்வாம் லவ்வு...

தர்ஷன் on August 24, 2010 at 11:25 PM said...

ம்ம் ஓகே என்ன ஹீரோயின் பேரு காதல் கொண்டேனை ஞாபகம் படுத்துகிறது.

மகேஷ் : ரசிகன் on August 24, 2010 at 11:26 PM said...

குத்துங்க எசமான் குத்துங்க...

தமிழ்ப்பறவை on August 24, 2010 at 11:29 PM said...

நல்லாக்கீதுப்பா...
இந்த மாதிரி ஏகப்பட்ட நிகழ்ச்சி எங்க காலேஜ்ல நடந்துச்சு..
ஆமா கார்க்கி... ஜில்தண்ணியோட ட்விட்டர்தான இந்தக் கதையோட ஒன்லைன்.. :-)

மகேஷ் : ரசிகன் on August 24, 2010 at 11:30 PM said...

// ம்ம் ஓகே என்ன ஹீரோயின் பேரு காதல் கொண்டேனை ஞாபகம் படுத்துகிறது //

எனக்கும்.

மகேஷ் : ரசிகன் on August 24, 2010 at 11:30 PM said...

Btw, Nice one சகா...

டச்சிங் டச்சிங்

SenthilMohan on August 24, 2010 at 11:35 PM said...

அப்பானு சொன்னா அவர் சந்தோசந்தான படனும்? ஒருவேளை பொண்ணு மொதல்லயே வீட்டுல persmission வாங்கிடுச்சோ?
ரெண்டாவது திவ்யாவும், திவ்யமா இருப்பாளா சகா?

சுசி on August 24, 2010 at 11:38 PM said...

காதல்னா கார்க்கிய கேக்கவா வேணும்.

கலக்கலா இருக்கு. எளிமையான நடை.

Mohamed Faaique on August 24, 2010 at 11:50 PM said...

காதல் வரம் வாங்கி வந்த கார்க்கி வாழ்க.....
தபூ சங்கர் கவிதை படிக்கும் போது ஒரு “இது” இருக்கும்..
அது உங்கள் நடையிலும் இருக்கு...
கதையின் ஆரம்பத்தில் இருந்த தாக்கம் முடிவில் குறைந்து விட்டது....

king on August 25, 2010 at 1:14 AM said...

athaana neenga love panra character storyla vantha " Anitha"nnu thaana irukkum..

பா.ராஜாராம் on August 25, 2010 at 3:03 AM said...

கார்க்கி,

ரொம்ப செயற்கையாய் இருக்கு. sorry.

Balaji saravana on August 25, 2010 at 6:35 AM said...

நல்ல நடை! எதிர்பாராத முடிவு, பட் ஏதோ ஒரு பீல் குறையுது சகா :(
தப்பா நினைக்கவேண்டாம் கார்க்கி, ஒரு பொண்ணு பசங்க என்ன மென்டாலிட்டியோட பழகுறாங்கன்னு ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்களே, கடைசிவரைக்கும் திவ்யாக்கு தெரியலையோ?!

கார்க்கி on August 25, 2010 at 8:05 AM said...

வாங்க செந்தில்

பரிசல், அதான்

ராஜூ, என்ன ஆச்சு சாமீ?

தர்ஷன், எந்த பேரு வச்சாலும் நம்ம ஆளுங்க யூஸ் பண்ணதாவே இருக்கு

மகேஷ், தூக்க கலக்கம் இல்லையே :)

தமிழ்ப்பறவை, நீங்க ரொம்ப ஷார்ப் சகா :)

சுசி, நன்றி

நன்றி முகமது

கிங், அப்படியா? அது அடிக்கடி மாறுமே!!

பா.ரா, உண்மைதான். இப்படி நடப்பது அருதுதான். ஆனால் ரக்‌ஷா பந்தன் அன்று நிரைய பொண்ணுங்க அண்ணான்னு கவுத்த கதை தெரியும். கொஞ்சம் மாத்தி போடுவோமேன்னு எழுதினேன். செயற்கைத்தனம் தான் :)

பாலாஜி, அப்படி எல்லாம் சொல்ல முடியாதுங்க. பொண்ணுங்க சில பேரு இப்படிம் இருக்காங்க. தமிழ்ப்பறவை கமெண்ட் பாருங்க.

vinu on August 25, 2010 at 9:26 AM said...

Pune Bangalorennu irrukkum potheallam first three illatti atleast first 10 commentsla onnavavathu poottuduvean , inga ippo chennai vanthathukku appuram thaan internet load aaagavea maatteanguthu.............


ennna ooorupaaa ithu chennaiill ithu oru mazaikkkaaalam!

appuram kathai eathoo onnu sollittu iruntheengallea athoda mudivu enna sonneenga konjam busyaa irrunthaaathunaala keakka maranthuttean..........

appudiyea unga sister divya voda mobile numberum soneeenganna konjam vasathiya irrukkum naamalum oru kayithaai eduthukkittu poi nikkalaamunnu plan?

enna onnu ithu veaara idathulla kattura onnu @#$%^& goiyyaala, avan avan inga 6,7 varusama figure kidaikaalaiyeannu kaaaaaaaaaaaanjhu poi kidakkuraaaan ithulla ungallukku T>R sentiment varuthooooooooo, pichupuduvean pichu

Anbu on August 25, 2010 at 9:50 AM said...

எனக்கு என்னமோ காதல் சொல்ல வந்தேன் படத்தோட தாக்கம் அதிகமா தெரியுது.. முடிவைத்தவிர..

taaru on August 25, 2010 at 9:57 AM said...

ஹா ஹா ஹா சஹா....இந்த முடிவ நான் எதிர்பாக்கல....!!!

Karthik on August 25, 2010 at 10:13 AM said...

நல்ல ஐடியாதான். உங்க ஸ்டைல்ல எழுதியிருக்கலாம்.

sivakasi maappillai on August 25, 2010 at 10:27 AM said...

கிராமத்து கதையிலும் கலக்குகிறாயே தம்பி... வம்சம் பாத்த எஃபக்டா???

பாலா அறம்வளர்த்தான் on August 25, 2010 at 11:26 AM said...

பா ரா சொல்லியதுதான் எனக்கும் தோன்றியது கார்க்கி. முன் பாதியில் உங்கள் எழுத்து நடை பிரமதாமான எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தது. அதை சின்னா பின்னமாக சிதைத்து விட்டது பிற்பகுதி. திருப்பி போட்டு நீங்கள் எழுத நினைத்திருந்தால் வேறொரு மொழி நடையில் இருந்திருக்கலாம்.

நாமெல்லாம் மிகவும் கிண்டலடிக்கும் டைரக்டர் விக்கிரமனின் முதல் படம் பார்த்திருக்கிறீர்களா? ஒரு பெண் ஐந்து பேருடன் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியும் என்று சொன்னது எங்கள் கல்லூரிக் காலத்தில் புதிய விஷயம் .. அந்த ஒரே காரணத்துக்காகவே அந்த படம் வெற்றி பெற்றதாகத்தான் நான் நினைக்கிறேன். கல்லூரியில் ஒருவன் தன் classmate ஐ தங்கையாக பாவிக்கும் ஒரு கதையை நான் இன்னமும் படிக்கவில்லை - அட்லீஸ்ட் பதிவுலகில் இல்லையென்றே நினைக்கிறேன். பிரமாதமாக எழுதி இருந்திருக்கக் கூடிய விஷயத்தை மொக்கையாக முடித்ததில் வருத்தமே.

அதனாலென்ன பாஸ் - உங்களுக்கென்று ஒரு ஈர்க்கும் மொழி இருக்கிறது. தோழி அப்டேட்ஸ் மொக்கையில் கலக்குவதுபோல் நல்ல சிறுகதைகளிலும் கலக்குவீர்கள் என நம்புகிறேன் - தொடர்ந்து சிறுகதைகளும் எழுதுங்கள்.

kumaresh on August 25, 2010 at 11:44 AM said...

simple n gud. sirukathai nalla ezhudureenga boss..

யாசவி on August 25, 2010 at 11:49 AM said...

ஏதோ மிஸ் ஆகுது கார்க்கி.

ஆனா விவரணைகள் வழக்கம் போல :)

கார்க்கி on August 25, 2010 at 11:58 AM said...

வினு, சென்னையா? எங்க இருக்கிங்க சகா?

அன்பு, ஆமா. இப்பதான் எனக்கே தெரியுது

டாரு, ஹிஹிஹிஹி

கார்த்திக்,அவசரம்.அவசரம். என்னை சொன்னேம்ப்பா

சிவகாசி மாப்ள, இல்ல சகா. ரக்‌ஷா பந்தன் எஃபெக்ட்

பாலா, முக்கியமா கருத்து பகிர்வுக்கு முதலில் நன்றி. இதை வழக்கமான மொக்கையாக எழுத எண்ணித்தான் ஆரம்பித்தேன். அதனால் வந்த பிரச்சினை. வலையில் இருக்கும் நல்ல விஷயமே இதானே. இப்ப நீஙக்ளும், பா.ராவும் சொன்னதை நினைவில் வச்சிட்டு மாத்தி எழுதி பார்க்கிறேன். கொஞ்ச நாள்ல இதே களத்தில் உருப்படியா எழுத முயற்சி செய்கிறேன்.

நன்றி குமரேஷ்

நன்றி யாசவி. நல்லா தேடுங்க. இங்கதான் இருக்கும். :)))))

Sen22 on August 25, 2010 at 12:17 PM said...

Superb Story...!! :)))


But, Climax :(((

சிவகுமார் on August 25, 2010 at 1:15 PM said...

Story Ok .
Girl Friend Ku LEAVE va.

sivakasi maappillai on August 25, 2010 at 1:33 PM said...

//சிவகாசி மாப்ள, இல்ல சகா. ரக்‌ஷா பந்தன் எஃபெக்ட்

///

ஓ... மறந்துட்டேன்.... கல்யாணம், புள்ளன்னு ஆனப்புறம் அண்ணேன்னு கூட எவளும் சீண்ட மாட்டேங்குறா....

ப்ரியமுடன் வசந்த் on August 25, 2010 at 2:00 PM said...

ரொம்ப பிடிச்சது சகா! கிராமத்தான் பாணியிலயே சொல்லியிருக்கீங்க ... தர்ஷன் சொன்ன மாதிரியே எனக்கும் தோணுச்சு...!

இவன் சிவன் on August 25, 2010 at 5:00 PM said...

கார்க்கி,
எனக்கென்னவோ சேவாக் 90 ல out ஆன மாதிரி இருந்துச்சு.. எங்கயோ சின்ன miss ஆன மாறி இருக்கு. மற்றபடி உங்க Touch இருந்துச்சு... தொடருங்கள் வாழ்த்துக்கள்

sahana on August 25, 2010 at 6:18 PM said...

I loved it machan... sorry!!! thambi...

நர்சிம் on August 25, 2010 at 6:50 PM said...

மிக நன்றாகவே இருந்தது சகா. நல்ல முயற்சி. தொடரவும்.

மறத்தமிழன் on August 25, 2010 at 8:09 PM said...

கார்க்கி,

கதை எனக்கு பிடிச்சிருக்குங்க...

பரிசல் சொன்ன மாதிரி முடிவுல கொஞ்சம் நெகிழ்ச்சி சேர்த்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்கலாம்..

இந்த மாதிரி அப்பப்ப கதை எழுதுங்க சகா...

அன்புடன்
மறத்தமிழன்.

R Gopi on August 25, 2010 at 9:07 PM said...

புட்டிக்கதை, தோழி அப்டேட்ஸ் அளவுக்கு இல்ல பாஸ்.

படம் பாக்கப் போனா முழுப் படத்தையும் பாக்கணும். சுனைனாவ மட்டும் பாத்தா இப்படித்தான் நடக்குமாம்:)

கார்க்கி on August 26, 2010 at 12:45 AM said...

நன்றி சென்.

நன்றி சிவக்குமார்

வசந்த் நன்றி. வேற பேர் தோணல திடீர்னு.

இவன்சிவன், நன்றி. முயற்சிக்கிறேன், சதமடிக்க

நன்றி சஹானா மாமா. சாரி, அண்ணா :))

நன்றி நர்சிம்

நன்றி மறத்தமிழன்.

கோபி, படம் நல்லா இருந்தா நான் ஏன் சுனைனாவ மட்டும் பார்க்கிறேன்?

pappu on August 26, 2010 at 4:28 PM said...

வொய் மீ?

ஆதிமூலகிருஷ்ணன் on August 30, 2010 at 9:56 PM said...

பாலாவின் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்டு.

வெற்றி on September 4, 2010 at 11:49 AM said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்..நைஸ் சகா..இது கல்லூரி வாழ்வில் எனக்கு நடந்ததுதான்..ஆனா நான் இவ்ளோ டீப்பா போகல :)

நான் எழுதணும்ன்னு நினைச்ச டாபிக்..பட் நீங்க முந்திட்டீங்க

வெற்றி on September 4, 2010 at 11:49 AM said...

:)

Anitha on May 25, 2011 at 2:51 AM said...

pasanga ponnungala sincera love pannina 'annaa'nu kalati viduvanga. idhula adhuku rivit kuduthaapla iruku.

 

all rights reserved to www.karkibava.com