Aug 17, 2010

நினைவுகளின் இடுக்கில்..


 

நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்..

   நா.முத்துக்குமாரின் வரிகள் இவை. எல்லோருக்கும் இப்படி ஏதாவது ஒன்று நினைவுகளை கிளறி விடும் ஊக்கியாக இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பதின்ம வயது காதலை நினைவுப்படுத்தும் வஸ்துக்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கக்கூடும். பலரின் காதலை நினைவுப்படுத்தும்படி அமைந்ததால் தான் ஆட்டோகிராஃப் போன்ற ஒரு மெதுவான, இழுவையான படம் அதிரி புதிரி வெற்றி பெற்றது. எனக்கும் அப்படி சில விஷயங்கள் உண்டு. பேருந்து அதில் முக்கியமானது. காதல் சொல்ல வந்தேன் படத்தில் promo stills பார்த்த போதே பிடித்து போனது. யுவனின் பாடல்களை பற்றி எழுதியிருந்ததை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நாயகன் பாலாஜி. கனா காணும் காலங்கள் என்ற விஜய் டிவி நாடகத்தை இவருக்குக்காக மட்டுமே பார்த்தேன். இவர் காணாமல் போன பிறகு பார்த்ததாக ஞாபகமில்லை. அத்தனை இயல்பான, கலகலப்பான இளைஞன். அவர் நடிக்கும் படம் என்றபோது எதிர்பார்ப்பு இன்னும் சில அடிகள் உயர பறந்தன. இத்தனை முன்முடிவுகளோடு ஒரு படம் பார்க்கும் போது அது சுமாராக இருந்தாலும் மனதில் ஃபெவிகால் கொண்டு ஒட்டிக் கொள்ளத்தானே செய்யும்? ஆனால் அப்படியேதும் இல்லாமல் மணல் வீடு போல பொலபொலவென உதிரியாக கொட்டிவிட்டது படம்.

kadhal solla vandhen tamil moviephotos (6)

முதல் ஏமாற்றம் பாலாஜியின் டப்பிங் குரல். எனக்கு அவரிடம் பிடித்த முக்கியமான விஷயம். என்ன காரணத்துக்காக அவருக்கு டப்பிங் என்று புரியவில்லை. அடுத்த ஏமாற்றம் நாயகி. மொத்த படமும் பாலாஜி காதலை சொல்ல படும் பாடும், அவரை சம்மதிக்க வைக்க படும் அவஸ்தையும்தான். அதுவும் முதல் பார்வையிலே வரும் காதல். ஆயின் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? ப்ச். அவர் இருக்கட்டும். எனக்கு நினைவுகளை கிளறிவிட்ட இந்தப் படத்தைப் பற்றி சொல்லும்போதே எனக்கு பிடித்த பெண் எப்படி இருந்தாள் என்றும் சொல்லிவிடுகிறேன். ஆதி அவர்கள் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அதையும் இதனூடே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்திலும் வழக்கமான தமிழ் சினிமா நாயகி மேல் விழும் பூதான் காதலை தொடங்கி வைக்கிறது. நாயகன் அடித்த கல் மரத்தை உலுக்க, அதலிருந்து விழும் பூ நாயகி மேல் விழ, அதற்குள் நம் நாயகன் நாயகியின் எதிரில் வந்துவிட, நாயகியை நனைத்த ஒரு பூ நாயகனிடமே திரும்புகிறது. அந்த மொக்கை காட்சியை கண்கள் பார்த்தாலும் மனம் வேறெதையோ அசை போட்டுக் கொண்டிருந்தது. முதல் முறை அவளைப் பார்த்த போதே மணி சத்தம், லைட் எரிவது என எதுவும் நடக்கவில்லை. அலைகள் அந்தரத்தில் நிற்கவில்லை. ரங்கநாத தெரு கூட்டத்தில் யாரோ ஒருவரை கடக்கும் போது நிகழும் அதிர்வுகள் தான் எனக்கு அவளைப் பார்த்த போதும் இருந்தது. முதல் பாயிண்ட். எனக்கான பெண் சராசரியாக இருக்க வேண்டும். பேரழகிகள் எனக்கு எப்போதும் ஒவ்வாமைதான்.

நாயகியின் பாத்திரம் பேசும் வசனங்களில் தொடர்பே இல்லை. ஒரு காட்சியில் படு சீரியஸ் என்பது போல் தெரிகிறது. சில காட்சிகளிலே காமெடியாகிறது. ஒரு காட்சியில் பெரிய அறிவாளி போன்று பேசுவதும், மீண்டும் ஏமாறுவதும் சலிப்பைத் தருகிறது. பாலாஜியிடம் அவர் பேச வரும்போதெல்லாம் அவளுடனான முதல் சந்திப்பே நினைவில் வந்தது. நீதானே ஏழு என்று இப்போதும் சிலர் கமெண்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பது என் மொக்கை பேச்சுதான். அதனாலே என்னிடம் நண்பர்கள் “கூடக்கூட” பேசாமல் சரண்டர் ஆகிவிடுவார்கள். ஆனால் அவள் முதல் சந்திப்பிலே 15 நிமிடம் பதிலுக்கு பதில் பேசி எங்களை சுற்றி இருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாள். பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்த நான் அவளின் “பேச்சாற்றலை” சிலாகிக்கவில்லை. அடுத்த பாயிண்ட். கலகலப்பான, அதிகம் பேசும், நகைச்சுவை உணர்ச்சி மிக்கவர் என்றால் பிடிக்கும்.

படத்தில் ஒரு காட்சி. நாயகியை விரும்பும் மாணவன் ஒருவன் அவனை காதலிக்காவிட்டால் மேலிருந்து குதித்துவிடுவேன் என்று மிரட்டுவான். நாயகியும் சொல்லிவிடலாமா என்று யோசிப்பாள். பாலாஜி அதை டீல் செய்த விதம் அருமையென்றாலும் எனக்கு வேறு சில ஞாபகங்கள் வந்து தொலைத்தது. இதே போல் அவளின் கல்லூரியில் ஒருவன் ப்ரபோஸ் செய்தானாம். இவள் பதிலுக்கு காதல் மனசுல இருந்து வரணும். உண்மையிலே நீ செத்துப் போனா கூட என்னுடைய அறிவுதான் பாவம்னு சொல்லும். ஏன்னா உன் மேல இருக்கும் கொஞ்ச அன்பும், அக்கறையும் கூட உன் மிரட்டலில் காணாம போயிடுச்சு என்றாளாம். இது சரியான்னு தெரியாது. ஆனால் அவள் அப்படித்தான். எந்த சூழ்நிலையிலும் தனக்கு தோன்றுவதையே செய்வாள். இரக்கப்பட்டு அவளால் உதவிதான் செய்ய முடியும். வார்த்தைகளால் ஜாலம் செய்வதில்லை அவள். எனக்கு அதுதான் பிடித்தது. எப்போதும் அவள் அவளாக இருப்பது. பெண்களுக்கு பேரழகு தரும் குணம் இதுவென்பது என் கருத்து.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை எனக்கான பெண் என்பவள் அவளைப் போல இருக்க வேண்டும். அவள் அப்படி இருந்ததால் தான் எனக்கு பிடித்திருக்கக்கூடும். Vice verca ஆக இருக்க வாய்ப்பில்லை. சரி. இப்போது படத்திற்கு வரலாம்.

ஒன்றுமே இல்லாத நமுத்துப் போன கதை. சுமாராக நடிக்க தெரிந்த நட்சத்திரங்கள். தெளிவான, ஆனால் எந்தவித திருப்பங்களும் இல்லாத தட்டையான திரைக்கதை. காதலையும், காமெடியையும், யுவனையும் நம்பி எடுத்திருக்கிறார்கள். காமெடி சற்று சொதப்பினாலும் மற்ற இரண்டும் கைகொடுக்கின்றன.உங்களுக்கு கல்லூரி காதல் அனுபவம் உண்டா? முதல் காதலை அவ்வபோது அசை போடுவது பிடிக்குமா? காதல் வந்த ஒருவனின் மன ஓட்டங்களை வார்த்தைகளாலும், இசையாலும் கேட்பது பிடிக்குமா? படம் முடிந்தபின் கடற்கரை மணலில் தனியாக அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாற நேரம் இருக்குமா? எல்லாவற்றிற்கும் ஆம் என்பீர்களேயானால் இந்த திராபை படத்துக்கு தாராளமாக போகலாம்.

22 கருத்துக்குத்து:

மகேஷ் : ரசிகன் on August 17, 2010 at 11:49 PM said...

Yo Man.

மகேஷ் : ரசிகன் on August 17, 2010 at 11:51 PM said...

நல்லாயிருக்குன்னு தான் எல்லாம் சொல்றீங்க.. பார்க்கனும்

Cable Sankar on August 18, 2010 at 12:07 AM said...

இதைத்தான் டைம்பாஸ் படம்னு சொன்னேன்.. ஓகேயா..

சுசி on August 18, 2010 at 1:47 AM said...

// காதல் மனசுல இருந்து வரணும். உண்மையிலே நீ செத்துப் போனா கூட என்னுடைய அறிவுதான் பாவம்னு சொல்லும். ஏன்னா உன் மேல இருக்கும் கொஞ்ச அன்பும், அக்கறையும் கூட உன் மிரட்டலில் காணாம போயிடுச்சு என்றாளாம். //

எவ்வளவு உண்மை..

//இது சரியான்னு தெரியாது//

சரியே தான் கார்க்கி.

தலைப்பும் நல்லா இருக்கு.

Balaji saravana on August 18, 2010 at 7:46 AM said...

விமர்சனத்துக்கு நடுவிலே தோழியின் வர்ணிப்பா?
கலக்குங்க சகா!
//உங்களுக்கு கல்லூரி காதல் அனுபவம் உண்டா?
இல்லாதவங்க உண்டா சகா?
//முதல் காதலை அவ்வபோது அசை போடுவது பிடிக்குமா?
காதல் வந்த ஒருவனின் மன ஓட்டங்களை வார்த்தைகளாலும், இசையாலும் கேட்பது பிடிக்குமா?
படம் முடிந்தபின் கடற்கரை மணலில் தனியாக அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாற நேரம் இருக்குமா? //
இப்டியெல்லாம் சொல்லிட்டு திராபை படம்னு சொல்லிட்டியே சகா!
அப்புறம் எப்படி போகமுடியும் நண்பா!

R Gopi on August 18, 2010 at 8:06 AM said...

\\ஆதி அவர்கள் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். \\

நூறு ஆயிசு ஒங்களுக்கு. நான் இதைப்பற்றி உங்களுக்கு நினைவூட்டலாம் என்று இருந்தேன். இதைத்தான் great men think alike என்பார்களோ:)

taaru on August 18, 2010 at 9:59 AM said...

என்ன சகா!! போட்டு வறுத்து எடுதுட்டாப்புலையா பூபதி.......ரொம்ப நொந்து போய் இருக்கீரு? திராபை - இத நான் எதிர்பாக்கல...!!! ;) :)

மோகன் குமார் on August 18, 2010 at 10:24 AM said...

சினிமா விமர்சனம்.. பட பெயர் மற்றும் விமர்சனம் என மேலே சொல்லாமலே!! கார்க்கி ஸ்டைல் ??

vinu on August 18, 2010 at 10:35 AM said...

coooooool

appa entha padam paaka "naan magaan alla " va illa intha padamaa eathu pa unga suggestion

கார்க்கி on August 18, 2010 at 11:45 AM said...

மகேஷ், படம் நல்லா இருக்குன்னு யார் சொன்னா? படம் பார்த்தா நல்லா இருக்கும்ன்னுதான் சொன்னேன் :)

கேபிள், டபுள் ஓக்கே

சுசி, நன்றி

பாலாஜி, படம்ன்னு பார்த்தா சொதப்பல்தான். நன்றி

கோபி, ஹிஹிஹி. நம்மள யாராவது வந்து கலாய்க்க போறாங்க.

டாரு, பூபதி எல்லா ஷாட்டையும் ஒரே டேக்கிலே எடுத்துட்டர போலிருக்கு. கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். பட்ஜெட் பிரச்சினைன்னா ஒதுங்கி இருக்கலாம். அவர் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்

மோகன், :)).. ஒரே மாதிரி எழுத வேணாமனுதான்

வினு, பாடல்களுக்காக பார்க்கலாம் இந்த படத்த

Karthik on August 18, 2010 at 3:24 PM said...

லவ், பொண்ணுங்க, ப்ரேக் அப் தவிர வேற எதாச்சும் பேசுங்கப்பா. உஃப்!

நர்சிம் on August 18, 2010 at 3:42 PM said...

நல்ல தலைப்பு. நல்ல பதிவு

"ராஜா" on August 18, 2010 at 3:42 PM said...

விண்ணைத்தாண்டி வருவாயாவை விடவா???

sivakasi maappillai on August 18, 2010 at 4:38 PM said...

Cable Sankar said...


//இதைத்தான் டைம்பாஸ் படம்னு சொன்னேன்.. ஓகேயா..///


என்ன தல...யாரவது திட்டி வுட்டாங்களா?? இந்த படத்தோட எல்லா விமர்சனத்துலயும் வாலண்டியரா வந்து, நானும் இதத்தான் சொன்னேன்.. நானும் இதத்தான் சொன்னேன் னு புலம்புறீக‌

sivakasi maappillai on August 18, 2010 at 4:41 PM said...

//நர்சிம் said...
நல்ல தலைப்பு. நல்ல பதிவு

//

அப்ப‌
நல்ல தலைப்பு. கெட்ட‌ பதிவு

கெட்ட தலைப்பு. நல்ல பதிவு

கெட்ட தலைப்பு. கெட்ட பதிவு

அப்படியெல்லாம் இருந்தால் உதாரணம் ப்ளீஸ்

மகேஷ் : ரசிகன் on August 18, 2010 at 9:51 PM said...

Misunderstood that tis movie is good. :((((

Boss thookathula padichathu. Seriously.

RaGhaV on August 18, 2010 at 10:06 PM said...

:-))

தமிழ்ப்பறவை on August 18, 2010 at 11:29 PM said...

good review... nice approach...எப்படியும் படம் பார்த்துதான் ஆகணும்...

siva on August 19, 2010 at 8:32 AM said...

ullen iyya..

தாரணி பிரியா on August 19, 2010 at 10:55 AM said...

ம் ம் :)

vanila on August 19, 2010 at 4:43 PM said...

மகேஷ், படம் நல்லா இருக்குன்னு யார் சொன்னா? படம் பார்த்தா நல்லா இருக்கும்ன்னுதான் சொன்னேன் :)

எப்போ இருந்து கமல் ரசிகனா மாறினீங்க?.

மறத்தமிழன் on August 20, 2010 at 4:41 PM said...

சகா,

படம் பாக்கலாமா? வேண்டாமா?

 

all rights reserved to www.karkibava.com