Aug 16, 2010

பேரரசு


 

  திருச்சி ஹலோ எஃப்.எம்மில் பல்லாங்குழி என்றொரு நிகழ்ச்சி வருகிறது. ராஜா என்பவர் அதை தொகுத்து வழங்குகிறார். சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது. இரண்டு தலைப்புகள் தருவார்கள். முதல் தலைப்பை பற்றி சீரியசா ஒரு நிமிடம் பேச வேண்டும். இரண்டாம் தலைப்பை பற்றி கிண்டலாக ஒரு நிமிடம் பேச வேண்டும். முதல் ஆளே நான் தான். தலைப்பு ?

“குடியரசு –பேரரசு”

நான் பேசுவதற்காக எழுதி வைத்த குறிப்புகளை தருகிறேன். வாரத்தின் முதல் நாளே பதிவு போடாம இருக்கக் கூடாது என்பது பிளாகானந்தா சுவாமிகளின் அறிவுரை. கைவசம் வேறெதுவும் டிராஃப்பட்டில் இல்லாததால் இந்தக் கொடுமை. திருச்சி அலைவரிசையில் வந்ததால் சென்னையில் இருந்து பதிவு செய்ய  முடியவில்லை.

குடியரசு

இந்தியா 1947லே சுதந்திரமடைந்தாலும் அதற்கென ஒரு அரசியல் அமைப்பு இல்லாமலே இருந்தது. 1935ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Government of India Act 1935 என்றதையே பின்பற்றி வந்தார்கள்.  திரு.அம்பேத்கார் தலைமையில்  சட்டத்திட்டங்களை முறையாக அமைக்க ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழு உருவாக்கிய சட்டம், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பின் 1950 ஜனவரி 26 ஆம் தேதி முழுமையாக அமலுக்கு வந்தது., அந்த நாளையே நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

   இந்த தேதியை தேர்வு செய்ததன் பின்னணியில் இன்னொரு வரலாறும் உண்டு. தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். அந்த நாள் தான் பிறகு குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது. இன்னும் சில தகவல்கள்.

1. இந்தியா உலகிலேயே மிகப் பெரிய குடியரசு நாடாகும்.
2. எழுத்து வடிவில் உள்ள ஒரே அரசியலமைப்புச் சட்டம் நமது தேசத்தின் அரசியலமைப்பு மட்டும் தான்.
3. டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராவார்.

___________________________________

இனி சரவெடி.. அதாங்க பேரரசு பற்றி

பேரரசு. இவரைத் தெரியாதவர் இருப்பார்களா? இருந்தாலும் சொல்கிறேன். திருப்பாச்சியில் பிறந்தவர். சிவகாசியில் வளர்ந்தவர். முதல் அடி திருப்பதியில். மரண அடி தர்மபுரியில். மொட்டையானது பழனியில். துண்டு போட்டு சுத்தியது திருவண்ணாமலையில்.  இப்போது ஜெயிப்போம் என நம்பி நகர்வலம் வருவது திருத்தணியில். இவர் படத்தில் நடிக்கும் துணை நடிகர்களுக்கெல்லாம் லன்ச் கிடைக்கிறதோ இல்லையோ ஒரு பன்ச் வசனம் கிடைத்துவிடும். ஒரே ஒரு காட்சியில் வரும் செக்யுரிட்டி கூட “இன்னைக்கு நான் வீட்டுக்கு செக்யூரிட்டி. மக்கள் மனசு வச்சா இந்த நாட்டுக்கே செக்யுரிட்டி” என்பார். கேட்டை திறக்கிறவன் முழுமையா உழைச்சா கோட்டையே புடிப்பான் என்பார்.  கட்சி ஆரம்பிக்க நினைக்கும் எல்லா நடிகர்களும் முதல் வேலையாக செய்வது பேரரசு படத்தில் நடிப்பதைத்தான். அந்த வகையில் கேட் வே ஆஃப் தமிழக அரசாக விளங்கும் பேரரசுவை இந்த நல்ல நாளில் நினைவுக் கூறுவது நல்லது. சாதாரணமாக நினைக்கலாமா? அவர் ஸ்டைலிலே சொல்வோம்

இந்தியா இப்ப குடியரசு

2020ல வல்லரசு

எல்லாத்துக்கும் காரணம் பேரரசு.. பேரரசு..பேரரசு..

பிகு:

இதே நிகழ்ச்சியில் நம்ம பரிசல் பேசிய தலைப்பு. “அஹிம்சை – இம்சை”

என்னது “ கார்க்கி – பரிசல்” என்பது போலவே இருக்கா??????

17 கருத்துக்குத்து:

ரமேஷ் வைத்யா on August 16, 2010 at 10:46 AM said...

paavi paavi...

sivakasi maappillai on August 16, 2010 at 11:00 AM said...

புரியலை

Sen22 on August 16, 2010 at 11:05 AM said...

//கேட் வே ஆஃப் தமிழக அரசாக விளங்கும் பேரரசுவை //

Ithu nalla irukke...!!!!

அமுதா கிருஷ்ணா on August 16, 2010 at 11:28 AM said...

இல்லை கார்க்கி-பரிசல் போல இருக்கே...

Mohamed Faaique on August 16, 2010 at 11:33 AM said...

தலைப்பு குடுத்தவர் யாருங்க.... பீரரசுவுடன் என்ன கோவமோ...

Balaji saravana on August 16, 2010 at 11:35 AM said...

அது “பரிசல் –கார்க்கி” இல்ல சகா, "கார்க்கி - பரிசல்"
என்னது பேரரசுவோட அடுத்த படத்துல கார்க்கி ஹீரோவா ஆ ஆ ஆ?!

taaru on August 16, 2010 at 11:46 AM said...

/// கேட் வே ஆஃப் தமிழக அரசாக//
அய்யயோ... அது அப்டி இல்ல... gate way of மொக்கராசுனு சொன்னா சரி... போதும் சாமி..போதும்...

ஆதிமூலகிருஷ்ணன் on August 16, 2010 at 11:50 AM said...

:-))

M.G.ரவிக்குமார்™..., on August 16, 2010 at 12:32 PM said...

சூப்பர் சகா!......

அமுதா கிருஷ்ணா on August 16, 2010 at 2:06 PM said...

இப்ப பரிசல்--கார்க்கி போலவே இருக்கே...

சுசி on August 16, 2010 at 2:34 PM said...

//எல்லாத்துக்கும் காரணம்//

//“அஹிம்சை – இம்சை” “ கார்க்கி – பரிசல்”//

Karthik on August 16, 2010 at 3:12 PM said...

ஹிஹி குடியரசு அருமை. :))

தராசு on August 16, 2010 at 3:28 PM said...

:-))

R Gopi on August 16, 2010 at 5:45 PM said...

//முதல் தலைப்பை பற்றி சீரியசா ஒரு நிமிடம் பேச வேண்டும். இரண்டாம் தலைப்பை பற்றி கிண்டலாக ஒரு நிமிடம் பேச வேண்டும். முதல் ஆளே நான் தான். தலைப்பு ?

“குடியரசு –பேரரசு”//

நல்ல வேளை நான் பயந்துட்டேன். குடியரசுன்ன ஒடனே நீங்க நம்ம ஏழுவப் பத்தி அதாங்க ஒங்களப் பத்தித் தானோன்னு நெனச்சேன். :)

//என்னது “ கார்க்கி – பரிசல்” என்பது போலவே இருக்கா??????//

உலக்குல என்ன கிழக்கு மேற்கு? கார்க்கின்னா என்ன பரிசல்னா என்னா ரெண்டும் ஒண்ணுதான் எங்களுக்கு:)

கார்க்கி on August 16, 2010 at 10:45 PM said...

அனைவருக்கும் நன்றி

தேனம்மை லெக்ஷ்மணன் on August 16, 2010 at 11:02 PM said...

கட்சி ஆரம்பிக்க நினைக்கும் எல்லா நடிகர்களும் முதல் வேலையாக செய்வது பேரரசு படத்தில் நடிப்பதைத்தான். அந்த வகையில் கேட் வே ஆஃப் தமிழக அரசாக விளங்கும் பேரரசுவை //

haahaahaa superbbbbbbbbbbbbb

பிரதீபா on August 17, 2010 at 12:11 AM said...

"அனைவருக்கும் நன்றி"-ஆதியண்ணன் கோவிச்சுக்கப்போறாரு, பாத்துங்க !!

 

all rights reserved to www.karkibava.com