Aug 13, 2010

கத்தி பார்றா


 

சில மாதங்களாகவே வலது கண்ணில் சிறு பிரச்சினை இருக்கிறது. மெட்ராஸ் ஐ போல சிவந்து விடும். எரிச்சலும் இருக்கும். சென்ற வாரம் தெரிந்த (அந்த தெரிந்த இல்ல) டாக்டர் ஒருவரிடம் சென்றேன். ஐ டிராப்ஸ் தறேன். போடு என்றார். பின்ன கண்ணுல என்ன பைப் வச்சா மருந்த விட முடியும்? ட்ராப் ட்ராப் தானே டாக்டர் விட முடியுமென்றேன். சிரித்தாரா முறைத்தாரா என்று தெரியவில்லை. நேற்று மீண்டும் அவரிடம் சென்றேன். ரைட் ஐலதானே பிரச்சினை என்றார். ரைட் ஐய்யா இருந்தா எப்படி டாக்டர் பிரச்சினை இருக்கும்? பிரச்சினை இருந்தா எப்படி டாக்டர் ரைட் ஐய்யா இருக்குமென்றேன். முதல் முறையாவது மருந்து எழுதி தந்த பின் தான் பேசினேன். இந்த முறை அதற்கு முன்பே பேசிவிட்டதால் அவர் எழுதி தந்த  ட்ராப்ஸை கண்களில் போடும் திட்டத்தை டிராப் செய்துவிட்டேன். ஏற்கனவே நம்ம கண்ணு பெர்ர்ர்ர்ர்சு. இதுல இன்னும் சுருங்குனா?

________________________________________________________________________________

நண்பன் ஒருவன் அழைத்தான். நல்லதொரு வேலைத் தேடி வருடக்கணக்கில் அலைந்துக் கொண்டிருந்தவனை சில பி.பி.ஓக்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பினேன். வேலை கிடைத்தவுடன் முதலில் என்னை அழைத்தான்.

மச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.

கலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி?

ஆல்செக்(Allsec) BPO டா.

எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?

என்னைத் திட்டவும் முடியாமல், பதில் சொல்லவும் முடியாமல் வைத்துவிட்டான்

________________________________________________________________________________

”அது ஏண்டா என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட” என்று பப்லுவிடம் நான்காவது முறையாக நான் கேட்டபோது அம்மா, அக்காவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசி முடிப்பதற்குள்  எட்டு முறைக் கேட்டுவிட்டேன் பப்லுவிடம் அதேக் கேள்வியை. அவனும் “வெள்ளை செந்தில்” மாதிரி முழித்துக் கொண்டிருந்தான். அன்று வீட்டில் எட்டு பேருக்கு மேல் இருந்தோம். அவங்களையெல்லாம் விட்டு என் கிட்ட ஏன் கேட்ட என்று நான் மீண்டும் கேட்ட போது எண்ட்ரீ ஆனார் எங்க வூட்டு ராமராஜன் வினோத்.

அப்படி என்னதாண்டா கேட்டான்?

என்ன கேட்டானா? நோபல் பரிசு வாங்கிய முதல் இந்திய பெண்மணி த்ரிஷா தானேன்னு கேட்கிறாண்டா என்றேன்

முகத்தை வாழைப்பழ செந்தில் போல வைத்துக் கொண்டு பதில் சொன்னான் பப்லு “ எங்க மிஸ் mother teresa வை மதர் திரிசான்னு சொன்னாங்க. அது எனக்கு சரியா ஞாபகமில்லை. அதான் த்ரிஷாவான்னு கேட்டேன் என்றான். தலையிலே நங்கென்று குட்டினேன்.

பின் நானே அவனுக்கு நோபல் பரிசென்றால் என்ன என்றும், யார் யார் வாங்கினார்கள் என்றும் விளக்கினேன். த்ரிஷாவுக்கெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்றேன். படித்து முடித்த பின், புத்தகத்தை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு சிறிது தூரம் சென்ற பப்லு, அங்கிருந்த எட்டு பேருக்கும் கேட்கும் படி கத்தினான்

“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”

________________________________________________________________________________

   ரொம்ப நாள் கழித்து கொஞ்சம் ஸ்மார்ட்டான் விஜயை காண முடிந்தது. ஒரு விளம்பரத்தில்.  ஜோஸ் ஆல்லுக்காசின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் நியமிக்கப்பட்டிருக்கிறார். எனக்கு ஒரு சந்தேகம். முதல்ல வீடியோ பாருங்க. அப்பாலிக்கா டவுட்ட சொல்ரேன்

 

___________________________________________________________________________

நண்பன் ஒருவன் அழைத்து புது கார் வாங்கிருப்பதாக சொன்னான். சூப்பர் மச்சி. என்ன கார் என்றேன்.

இன்னோவா கார் என்றான்.

ஏன்டா லட்சக்கணக்குல காசுப் போட்ட வாங்கின காரு பேரு தெரியாதா? என்னவோ கார் வாங்கியிருக்கேன்னு சொல்ற.

நல்லவேளை ஃபோனில் சொன்னேன். நேரில் சொல்லி இருந்தால் காரை விட்டே ஏத்தி இருப்பான்

________________________________________________________________________________

   கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும்போது  என் மொபைல் சிக்னல் கிடைக்காமல்  ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்கும்போதே கட்டாகிவிடுகிறது. இரண்டு முறை இதை கவனித்த பப்லு என்னடா ஆச்சு என்றான். இங்க சிக்னல் இருக்க வேண்டாம்ன்னு இந்த மேம்பாலம் கட்டிட்டாங்க இல்ல. அதான் சிக்னல் இல்லாம கட்டாவுது என்றேன். அங்கிருந்து ஆதம்பாக்கம் வரும்வரை பேசாமல் இருந்தவன் வீட்டருகே வந்ததும் சொன்னான் “அந்த இடத்து பேரு. கத்திபாராதானே? அதான் எல்லாரும் கத்திப்பாக்கட்டும்ன்னு கவர்மெண்ட்டே அப்படி வச்சிருக்காங்க”.

___________________________________________________________________________

அந்த டவுட்டு என்னன்னா.. எத்தனை புது கார் வந்திருக்கு? இன்னும் பிராண்ட் அம்பாசிடர் தானா? பிராண்ட் ஐ10, பிராண்ட் ரிட்ஸ், பிராண்ட் ஜாஸ் எதுவும் கிடையாதா?

42 கருத்துக்குத்து:

vinu on August 13, 2010 at 12:20 AM said...

me he firstttu karchippppuuuuuuuuuuuuuuu

vinu on August 13, 2010 at 12:24 AM said...

so now through this post karki you proven as such you and Eazumalai both are same nnunaan thaan intha aRiya kandupudippai piduchu irrukirathaala

ozunga karrkiyai follow pannura ellarum enn accountla prize maniyai pottudanum okkkkkkkkk

vinu on August 13, 2010 at 12:25 AM said...

avaru pear Eazu mazaiya illa Eazaraiya what mr.karki unga peroda unmaiyaana notatoina konjam solla mudiyumaaa

தர்ஷன் on August 13, 2010 at 12:30 AM said...

//ஏற்கனவே நம்ம கண்ணு பெர்ர்ர்ர்ர்சு. இதுல இன்னும் சுருங்குனா?//

பிரச்சினை இல்லை சகா நம்ம தளபதிக்கும் கண்ணு சின்னதுதான்

பப்லுவுக்கு மாமனார் குசும்பு அப்படியே வைத்திருக்கிறது போலும் வாழ்த்துக்கள்

vinu on August 13, 2010 at 12:31 AM said...

aang veedio paathukkunnu vanthaachhu innammo keethunnu koovikkunnu irrunthiyeaa pa athhu innapa ippoo koovu konjam

யோ வொய்ஸ் (யோகா) on August 13, 2010 at 12:33 AM said...

கலக்கல் சகா, ரொம்ப நாளைக்கு அப்புறம் செம மொக்கை பதிவு

“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”

இது செம கலக்கல், நம்ம தலைவி அனுஷ்காவுக்கு எப்ப நோபல் பரிசு கொடுப்பாங்க?

தர்ஷன் on August 13, 2010 at 12:34 AM said...

வீடியோவை இப்பத்தான் பார்த்தேன் விஜய் அழகாய்த்தான் இருக்கிறார். கான்செப்ட் எனக்கு பிடிக்கல.

அப்புறம் மேலே வாய்த்திருக்கிறது என வர வேண்டும்

vinu on August 13, 2010 at 12:43 AM said...

athu pa namma ilaiya thalabathi ippo konjam pazzaiya thalapathi aayittaarulla athunnaala thaan pazaiya model car name koduthhu irrukkangallo ennovo[ithu innova illai] ennovo?

சுசி on August 13, 2010 at 12:48 AM said...

பப்லு பப்லுதான்.. :))

விஜய் விஜய் தான்.. :))

கார்க்கி கார்க்கி தான் :))

எல்லாருமே கலக்கல் தான் :))

ஒண்ணு விட்டுப் போச்சோ?? அது தான் உங்களுக்கே தெரியுமே :))

ப்ரியமுடன் வசந்த் on August 13, 2010 at 1:35 AM said...

எனக்கும் அதே டவுட்தான்! சகா

கத்திப்பார்றாதான் ஹைலைட்..

Balaji saravana on August 13, 2010 at 7:14 AM said...

கலக்கல் காக்டெயில் சகா...
//“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”//

என்னா வில்லத்தனம், நான் கார்க்கிய சொன்னேன்!

மகேஷ் : ரசிகன் on August 13, 2010 at 7:34 AM said...

விஜய் நல்லா தான் இருக்கார். ஆனா இது விஜய் விளம்பரமா இல்ல ஜாஸ் அலுக்காஸ் விளம்பரமானு தான் தெரியவில்லை

மகேஷ் : ரசிகன் on August 13, 2010 at 7:35 AM said...

// கத்திப்பார்றா//

உங்களுக்கு ஏத்த மருமகன் தான்... :))))

மொக்க பாஸ்.... :)))))))

மகேஷ் : ரசிகன் on August 13, 2010 at 7:36 AM said...

எல்லாமே தூளு.

R Gopi on August 13, 2010 at 7:48 AM said...

//சில மாதங்களாகவே வலது கண்ணில் சிறு பிரச்சினை இருக்கிறது. //

இது ஒண்ணும் சிறு பிரச்சனை இல்ல. வேற நல்ல டாக்டர்கிட்ட போங்க. த்ரிஷா எந்த விதத்துல சுனைனாவ விடக் கொறைஞ்சு போய்ட்டாங்க? கண்ணைச் சரி செய்து கொண்டு அப்புறமா நல்லா பார்த்துச் சொல்லுங்க

//“அந்த இடத்து பேரு. கத்திபாராதானே? அதான் எல்லாரும் கத்திப்பாக்கட்டும்ன்னு கவர்மெண்ட்டே அப்படி வச்சிருக்காங்க”. //

உங்கள் அரசியல் வாரிசு, ச்சே உங்கள் பதிவுலக வாரிசு உருவாகி விட்டாங்க போலிருக்கே (மன சாட்சி: பப்லுவ எப்படியாவது கார்க்கியோட bad influence இல் இருந்து காப்பாத்தனும்)

நாய்க்குட்டி மனசு on August 13, 2010 at 8:07 AM said...

டாக்டர் கிட்ட, அதுவும் கண் டாக்டர் கிட்ட, உங்க விளையாட்டை வச்சுக்காதீங்க ஆமாம் சொல்லிபோட்டேன்.

vanila on August 13, 2010 at 9:10 AM said...
This comment has been removed by the author.
vanila on August 13, 2010 at 9:10 AM said...

mee(A)ls

"ராஜா" on August 13, 2010 at 10:11 AM said...

அதுக்கு பேருதான் கியூட்டுங்கலான்னா?..... எனக்கு இப்பதான் அந்த வார்த்தைக்கு "அர்த்தமே" புரிஞ்சது....

கார்க்கி on August 13, 2010 at 10:37 AM said...

வினு, ஹிஹிஹி... அடி விழாம இருந்தா சரி

தர்ஷம், அதேதான் நனௌம் நினைச்சுக்கிட்டேன். நன்றி

யோ வாய்ஸ், அனுஷ்கா என்னை விட வயது அதிகமாம். அதனால் நோ தலைவி. ஒன்லி ஆண்ட்டி :))

சுசி சுசிதான்.. ஓகேவா?

வசந்த், நன்றி

பாலாஜி, அவன் ரொம்ப நல்லவன் ஆச்சே? நானும் கார்க்கியத்தான் சொன்னேன்

மகேஷ், அது விஜய் வரும் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் :)

கோபி, என்னது? த்ரிஷா சுனைனா விட சூப்பரா? எடுறா வண்டியா.. கொடுங்கடா பொருள... இப்பலாம் பப்லு கிட்ட இருந்து நான் எஸ் ஆக வேண்டியிருக்கு

நாய்க்குட்டி, ரைட்டுங்க.

வாநிலா, அமைதி அமைதி

ராஜா, க்யூட்ன்னு யார சொன்னேன்? நீங்க யார சொல்றீங்க? போங்க பாஸ்>. நேத்து ரெட் பார்த்திங்களா? குடும்பத்தோட இப்படி மனசு விட்டு சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு பாஸ்..

"ராஜா" on August 13, 2010 at 12:04 PM said...

பரவா இல்ல தல உங்க குடும்பத்தோடதான மட்டுந்தான சிரிச்சீங்க.. ஒருத்தர் படம் டிவியில வந்தா தமிழ்நாடே வயிறுவலிக்க சிரிக்கிதாம்....

ரெட் என்னங்க சகா .. சுரான்னு ஒரு படம் இருக்காம் அத பாக்க சொல்லுங்க மனசு மட்டும் இல்ல வாய் வயிறு கண்ணீரு இப்படி எல்லாத்தையும் விட்டு கேப் விடாம சிரிக்கலாம்...

sivakasi maappillai on August 13, 2010 at 12:06 PM said...

இந்த விளம்பரத்தை விட விஜய் படமே பெட்டர்... விளம்பரம் படத்த விட மொக்கயா இருக்கு....

பப்லு... ராக்ஸ்

sivakasi maappillai on August 13, 2010 at 12:10 PM said...

//கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும்போது என் மொபைல் சிக்னல் கிடைக்காமல் ///

கல்யாணம் ஆகிறவரை வண்டி ஓட்டும் போது மொபைல் பேசாதே... தம்பி....

கார்க்கி on August 13, 2010 at 12:26 PM said...

ராஜா, உண்மைதான். விஜய் படத்த தமிழகமே பார்க்குது. சிரிக்குது. தல படத்த நாம ரெண்டு பேரும் பார்த்தாதான் உண்டு. :)

சிவகாசி மாப்ள, விளம்பரம் டார்கெட் ஆடியன்ஸ கவரவே எடுகக்பப்டுகிறது. அவரக்ளின் டார்கெட் நாம் இல்லை :). நான் சொன்னது அதில் விஜய் ஸ்மார்ட்டாக இருப்பதாக எனக்கு தெரிகிரது. ஃபோன் நான் பேசினேன். ஆனா அப்ப பப்லுவின் அப்பாதான் கார் ஓட்டிக் கொண்டிருந்தார்

ஆதிமூலகிருஷ்ணன் on August 13, 2010 at 12:59 PM said...

டாய்.. திரும்பவும் ரிப்பீட்டு.! :-(

Sen22 on August 13, 2010 at 1:01 PM said...

//"கத்தி பார்றா"//

Heading Superb...

Babblu ROcks..!!!!!!!!

மோகன் குமார் on August 13, 2010 at 1:07 PM said...

அலோ என்னங்க?? எப்படி எங்க கம்பனியை கலாய்க்கலாம்? இருங்க லீகல் நோட்டிஸ் அனுப்புறேன் :))

"ராஜா" on August 13, 2010 at 1:16 PM said...

//விஜய் படத்த தமிழகமே பார்க்குது. சிரிக்குது.

ஹை... தமிழ்நாட்டுல கார்க்கி கார்க்கின்னு "ஒரே ஒரு" விஜய் ரசிகர் இருந்தார் , இந்த வாக்கு மூலத்த பாக்கும்போது அவரும் மாறிட்டார் அல்லது திருந்தி விட்டார் என்று அப்பட்டமாக அறியபடுகிறது .... பாவம் தளபதி இருந்த ஒன்னும் போச்சே அவருக்கு....

//தல படத்த நாம ரெண்டு பேரும் பார்த்தாதான் உண்டு. :)

சகா எப்பவுமே லவ் மூடுல வீட்டுக்குள்ள அடைஞ்சி கெடந்தா இப்படிதான் உலகம் தெரியாத சின்ன புள்ளையாவே இருக்க வேண்டியதுதான் ... ((((:)))

கார்க்கி on August 13, 2010 at 1:28 PM said...

ஆதியண்ணே, உங்க பிளாக கொஞ்சம் பாருங்க :)

சென், நன்றி

மோகன், கிகிகிகி

ராஜா, உங்க தலைய போலவே நீங்க சீரியஸா பேசி பேசியே எங்கள சிரிக்க வைக்கறீங்க. உங்கக்கிட்ட சுட்டும், கன்ணாடியும் இருக்க சகா? :))

இப்படிக்கு,
ஒரே ஒரு விஜய் ரசிகன்
கார்க்கி

taaru on August 13, 2010 at 2:09 PM said...

என்னா பாசு... மீள்ஸ் பண்ணிட்ட்டீங்கோ...
"சுனைனா பாப்பா சூசைட் போர்ஸ்" இங்க ஒன்னு இருக்கு சேந்துக்கிறீன்களா?

விக்னேஷ்வரி on August 13, 2010 at 3:21 PM said...

விஜய் ஸ்மார்ட்டா இருக்காரு. மறுபடி மறுபடி பார்த்தேன் விளம்பரத்தை.

"ராஜா" on August 13, 2010 at 4:17 PM said...

உங்க தளபதி மாதிரியே காமடிய சீரியசாவும் சீரியசா காமடியாவும் புரிஞ்சிகிரீன்களே உங்ககிட்ட முண்டா பனியனும் ஜீன்சும் நெறைய இருக்கோ?


//இப்படிக்கு,
ஒரே ஒரு விஜய் ரசிகன்
கார்க்கி

அவர் மாதிரியே நீங்களும் திருந்த மாட்டேங்களா?

Ŝ₤Ω..™ on August 13, 2010 at 5:01 PM said...

ரசிச்சு சிரிச்சேன் சகா..

கார்க்கி on August 13, 2010 at 5:35 PM said...

டாரு, என்னை தலைவரா ஏத்துப்பாஙக்ளா?

விக்கி, நன்றி

ராஜா, பிளாக் போரடிக்குது. பைக்கோ, காரோ எடுத்துட்டு ஒரு டிரைவ் போகலாமா? இல்லைன்னா சொல்லுங்க, தி.நகர்ல பொறுமையா, ஸ்டைலா ஒரு வாக் போயிட்டு வரலாம்

நன்றி சென்

நீர்ப்புலி on August 13, 2010 at 6:47 PM said...

பாவம் ஜோஸ் அலுக்காஸ்.
இவங்களும் துட்ட திருப்பி கேப்பாங்களோ?
-தினா

R Gopi on August 13, 2010 at 7:18 PM said...

//கத்தி பார்றா//

தலைப்பைப் பார்த்ததும் சம்பந்தமே இல்லாமல் "பண்ணி பார்றா பண்ணி பார்றா" என்று வடிவேலு மாதவனிடத்தில் ஒரு படத்தில் சொல்வது ஞாபகம் வருகிறது (மனசாட்சி: டே கோபி, கார்க்கியோட ப்ளாக பாலோ பண்ணி நீயும் மொக்கையா யோசிக்க ஆரம்பிசிட்டியேடா)

reena on August 13, 2010 at 9:46 PM said...

Rasithu padithu sirithen:-D
oru kannil mattum redness irritation irupathu normal illai. Serious ah vera doctor kitta poi, overa pesama treatment eduthukonga. Sankara nethralaya wil be a better option

வெற்றி on August 14, 2010 at 1:44 AM said...

இந்த விளம்பரம் 3 இடியட்ஸ் படத்தின் முன்னோட்டம் போன்ற ஒரு கான்செப்டில் எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்..விஜய்,பின்னணி இசை,ஒளிப்பதிவு எல்லாமே க்யூட் :)

siva on August 15, 2010 at 2:23 PM said...

am the 39thhhhhhhhhhhhhhh..

valakkam pola ellama konjam different padivu..

siva on August 15, 2010 at 2:24 PM said...

40....

RAJ on August 15, 2010 at 4:28 PM said...

படம் ஓடாட்டி விளம்பரதுலதான் சம்பாதிக்கணும் வேற வழி.

கான்செப்ட் மண்ணு.

R Gopi on August 16, 2010 at 9:02 AM said...

ஒங்க ஸ்டைல்ல ஒரு பதிவு போட்டிருக்கேன். படிச்சுப் பார்த்துட்டு நல்ல இருக்கான்னு சொல்லுங்க. நன்றி.

http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_7709.html

 

all rights reserved to www.karkibava.com