Aug 12, 2010

ஏழுவின் காதலி


 

  அதுவரை எந்தப் பெண்ணின் பின்னாலும் போகாத ஏழுவுக்கு அவளைக் கண்டவுடன் பிடித்துவிட்டது. ஆறுமுகம் வந்து இந்த மேட்டரை சொன்னபோது எங்களால் நம்பவே முடியவில்லை. குடித்துவிட்டு ஒரு நாள் பேண்ட்டே இல்லாமல் ஹாஸ்டலுக்கு வந்த அன்று கூட வராத வெட்கம் இன்று ஏழுவின் கண்களில் தெரிந்தது. இதற்கு மேல் ஏழுவை மலையேற்றினால்தான் விஷயத்தை கறக்க முடியும் என்று முடிவு செய்து அன்று பூஜைக்கு ஏற்பாடு செய்தான் பாலாஜி.

  முதலில் அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை இரண்டு பியர் தருவதாக உறுதி கூறி அடிக்க வைத்தோம். திட்டமிட்டபடி பாதி பியரை குடித்துவிட்டு தண்ணி கலந்து வைத்திருந்தான் பாலாஜி. அந்த பாதி பியரில் பாதி அடித்த ஏழு சிரித்தான்.

அழகுடா... இது வரைக்கும் யாரையும் இப்படி பார்த்ததில்ல.

எப்படி பார்த்தான் தெரியுமா மச்சி? சொன்னா கேட்காம மூனு பஃப் இழுத்துட்டு மப்புல தடுக்கி கீழ விழுந்துட்டான். அப்ப அவ சரியா எதிர்ல வர, தலைவர் ஸ்ரீரங்கப்பெருமாள் மாதிரி தலைல கைய முட்டுக் கொடுத்துட்டு சைட் அடிச்சாரு என்றான் ஆறு.

டேய். அதுவா முக்கியம்.. என்ன சாப்பிடறான்னு தெரியல மச்சி. அவ கண்ணம் அப்படியே மொழு மொழுன்னு...

அவ சைவம் மச்சி. தயிர் சாதம் தான் – இது பாலாஜி.

சான்ஸே இல்லடா.. அவள போய் சைவம்ன்னு.. அவ கண்ண பார்த்தியா.. கண்ணுல மீன் இருக்குடா.. அவ சைவம் இல்ல மச்சி..

அவ சாப்பிடறது சைவம்டா வென்ரு.. மீன் இருக்காம். முயல் இருக்காம் என்று பொங்கினான் பாலாஜி

ரைட்டு விடு. அவ பேரு கலைவாணி மச்சி. எங்க கல்யாணத்துல வெளியே பெருசா பேனர் வைப்பிங்க இல்ல.. அப்ப இப்படித்தான் எழுதனும்..

தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர்

இப்படிக்கு,
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..

எல்லாம் ஓக்கேடா. அது என்ன‌ ஏழு பீர் ஏழும‌லை?

போன‌ நியூ இய‌ர்ல ஏழு பியரடிச்சேனே. அத சொன்னேன்.

டேய் போன இயர்ல நீ அடிச்ச மொத்த பியரே நாலரைதான்டா.

ரைட்டு விடு. இப்ப அதுவா பிரச்சனை. அவள எப்படி கரெக்ட் பண்றது.. அதுக்கு ஐடியா கொடுங்கடா. அதுக்கு முன்னாடி சைடு டிஷ் எதுவாச்சு சொல்லு. இனிமேல நானும் சைவம்தான். அதனால மட்டன்ல ஏதாச்சும் சொல்லு

எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி.

. நான் வாயை மூடிக்கிறேன். ஏற்கனவே தலைவலி பொறுக்க முடியல என்றான் பாலாஜி.

கூட்டணி பற்றி அறிவிக்க வந்த வைகோ போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் ஏழு “தலைவலிக்கும் போது நீ ஏண்டா பொறுக்க போற? ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல?”

ஆறு மட்டும் சீரியஸாக "மச்சி, அவ உனக்கு செட்டாவாளா? அவ கேரக்டர் எப்படின்னு விசாரிக்காலான்டா முதல்ல என்றான்

எனக்கு அவள பிடிச்சு போச்சுடா. இது வேணும் அது வேணுமெல்லாம் எனக்கு ஆசை கிடையாது. ஆனா என்ன மாதிரி வாய் அதிகமில்லாம, நீங்க சொல்வீங்களே மொக்கை போடறேன்னு.. அது மாதிரி பேசமா இருந்தா போதும் என்று உண்மையை ஒப்புக் கொண்டான் ஏழு.

  மறுநாள் ஆறுவும் ஏழுவும் அவளை சந்தித்து பேசுவதாக திட்டம் தயார் ஆனது. வழக்கம்போல அரைபியரில் ஃபுல் டைட்டாக ஆனார் ஏழு.

  அடுத்தநாள் அவள் வரும் வழியில் காத்திருந்தோம். ஆறுவும் ஏழுவும் மட்டும் சற்று முன்னால் சென்றார்கள்.   மச்சி. எப்படியாவது ஓக்கே சொல்ல வைக்கணும்டா. பார்த்தா அமைதியான பொண்ணு மாதிரிதான் தெரியுது என்று கிசுகிசுத்தான் ஏழு.

சரிடா என்ற ஆறு அவளைப் பார்த்து "ஹலோ..இங்க வா நீ" என்றான்

திரும்பிய அவள், நானா என்பது போல கேட்க, ஆறு ஆமாம் என்று ஆமோதித்தான்.

அருகில் வந்தவள் "என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி"  என்று சிரித்து விட்டு சென்றாள்.

பியரடிக்காமலே மயங்கி விழுந்தான் ஏழு.

24 கருத்துக்குத்து:

Anbu on August 12, 2010 at 9:09 AM said...

:-))

Muthukumar on August 12, 2010 at 9:39 AM said...

Nallarukku....

R Gopi on August 12, 2010 at 9:50 AM said...

//அதுவரை எந்தப் பெண்ணின் பின்னாலும் போகாத ஏழுவுக்கு அவளைக் கண்டவுடன் பிடித்துவிட்டது.//

ஏழரை தானே?

//அந்த பாதி பியரில் பாதி அடித்த ஏழு சிரித்தான்.//

//குடித்துவிட்டு ஒரு நாள் பேண்ட்டே இல்லாமல் ஹாஸ்டலுக்கு வந்த அன்று கூட வராத வெட்கம் இன்று ஏழுவின் கண்களில் தெரிந்தது.//

//ஆனா என்ன மாதிரி வாய் அதிகமில்லாம, நீங்க சொல்வீங்களே மொக்கை போடறேன்னு.. அது மாதிரி பேசமா இருந்தா போதும் என்று உண்மையை ஒப்புக் கொண்டான் ஏழு.//

ஏழுங்கிறது நீங்கதானே கார்க்கி:)

Mohamed Faaique on August 12, 2010 at 10:43 AM said...

பதிவர்கள் copy பண்ண ஒரு நல்ல பதிவு கிடைத்துவிட்டது..

ஆதிமூலகிருஷ்ணன் on August 12, 2010 at 11:23 AM said...

செமை.

ஆதிமூலகிருஷ்ணன் on August 12, 2010 at 11:24 AM said...

ஆமா.. பட்ச்சா மேரியே இருக்குதே. ரிப்பீட்டா.?

தர்ஷன் on August 12, 2010 at 11:33 AM said...

மீள்பதிவுதான் என்றாலும் முழுசாத்தான் படித்தேன்.
அருமையாக இருந்தது முதல்முறை படித்தது போலவே

சுசி on August 12, 2010 at 11:53 AM said...

:))))))))))))))))

விக்னேஷ்வரி on August 12, 2010 at 12:19 PM said...

மறுபடி வாசித்தாலும் நல்லாவே இருந்தது.

Mohan on August 12, 2010 at 12:40 PM said...

Superb :-)

லேகா on August 12, 2010 at 12:44 PM said...

:-))

Sen22 on August 12, 2010 at 12:49 PM said...

//தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர்

இப்படிக்கு,
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..//

:))) Superb:)

ப.செல்வக்குமார் on August 12, 2010 at 1:27 PM said...

///ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி.
///
கண்டிப்பா ஆடு சைவம் தான் அண்ணா ..!!
//அருகில் வந்தவள் "என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி" என்று சிரித்து விட்டு சென்றாள்.
///
ஹய்யோ ஹய்யோ ..!!

அமுதா கிருஷ்ணா on August 12, 2010 at 1:54 PM said...

பாவம் அந்த கலைவாணி..

Balaji saravana on August 12, 2010 at 3:00 PM said...

அப்படி போடு போடு போடு...
கலக்கல்ஸ் கார்க்கி..

http://balajisaravana.blogspot.com/

கொஞ்சம் அப்டியே நம்ம வூட்டுக்கும் வா சகா :)

vinu on August 12, 2010 at 6:59 PM said...

அருகில் வந்தவள் "என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி" என்று சிரித்து விட்டு சென்றாள்.

பியரடிக்காமலே மயங்கி விழுந்தான் ஏழு


athu ippadi illama

see this

"பியரடிக்காமலே
பிளாட்ஆனான்" eppudi?

kavithai

kavithai

vinu on August 12, 2010 at 7:20 PM said...

chumma oru try wasn't thought to interfear at your own creativity saga

தெய்வசுகந்தி on August 12, 2010 at 7:55 PM said...

:))))))))))))))!!!!!

Kafil on August 12, 2010 at 7:55 PM said...

ipdi palaya pathiva repair panni podurathulaya irunga... ama meen ok athu enna muyal.. varavara rombo ketta payyanagiteenga

vinu on August 12, 2010 at 9:43 PM said...

http://cablesankar.blogspot.com/2010/06/130610.html

the story which you posted about a week before

தமிழ்ப்பறவை on August 12, 2010 at 10:26 PM said...

இட்லி உப்புமா... :-)

வெற்றி on August 14, 2010 at 1:30 AM said...

டாப்பு சகா :)

தமிழ்மகள் on August 17, 2010 at 5:55 PM said...

:)
kalakura po nee.... :P

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 10:15 PM said...

மற்ற கதைகளை விட இது அப்படி ஒன்றும் ஈர்த்து விட வில்லை

 

all rights reserved to www.karkibava.com