Aug 11, 2010

தோழி மார்க்


 

  உன் இடையும்  என்ன ட்விட்டரோ… ஒன்லி ஒன் ஃபார்ட்டி கேரக்டரோ என்றேன் தோழியிடம். பஸ்ஸை எதனுடன் ஒப்பிடுவேன் என்று பயந்து ஓடிவிட்டாள்.

_______________________________________________________________________________

oven என்பதை அவன் என்பதா, ஓவன் என்பதா என்ற சந்தேகம் தீர்ந்ததாம் தோழிக்கு. சூடாகுவதால் அது “அவன்” தான் என்றாள். பதிலுக்கு நான் ”அது சூடாகுவதில்லை. சூடாக்குகிறது எனவே அவனில்லை. அவள்தான்” என்றேன். உதட்டைக் கடித்து சற்று நேரம் அவள் யோசித்ததைப் பார்த்தேன். அவள் அவனாகிக் கொண்டிருந்தாள். நான் உள்ளிருக்கும் பாத்திரமாகிப் போனேன்

_______________________________________________________________________________

அமாவாசையன்று இரவு வெகு நேரம் பேசிக் கொண்டேயிருந்தாள் தோழி. எனக்கு மட்டும் இன்று பெளர்ணமி என்றேன். அதிருக்கட்டும். எப்படா நீ ஆர்ம்ஸ்ட்ராங் ஆகப்போற என்று தோழி கேட்டபோது காரணமே இல்லாமல் என் சப்பையான ஆர்ம்ஸை பார்த்து விட்டேன் நான். சிரித்து சிரித்தே மானத்தை வாங்குகிறாள்.

_______________________________________________________________________________

நட்பு, நண்பன் என்றால் உதடுகள் ஒட்டும். காதல், காதலி என்றால் ஒட்டாது என்று நண்பன் சொல்கிறான் என்றேன் தோழியிடம். அவன் கிடக்கிறான் லூசு என்று உதடுகள் ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி காண்பித்தாள்.

_______________________________________________________________________________

”இவன் என்னை நான் ஸ்டாப்பா 12 நிமிஷம் கிஸ் பண்ணான் தெரியுமா” என்று என் சகாக்களிடம் சொல்லி வைத்தாள் தோழி. “வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா” என்று கடிந்துக் கொண்டதற்கு “நீ வாய வச்சிட்டு சும்மா இருந்தா நான் ஏன் சொல்றேன்” என்றாள். உன்னை மாதிரி ஒரு அழகி தோழியா இருக்கும்போது வாய் வச்சிட்டு சும்மா இருக்க முடியுமா?” என்றேன். இப்படி ஒரு செல்லம் இருக்கும்போது அவனைப் பத்தி சொல்லாம என் வாய் இருக்குமா” என்றாள். “வழக்கிற்கு கொடுத்துவிடு  வாய்தா . இப்போ முத்ததிற்கு உன் வாய் தா” என்றேன்.

_______________________________________________________________________________

புதிதாய் ஒன்றை கண்டுபிடித்தால் அதற்கு அதைக் கண்டறிந்தவரின் பெயரையே வைப்பார்களாம். உன் உள்ளங்கால் மச்சத்திற்கு என் பெயரை வைத்துவிடேன் என்றேன் தோழியிடம். அது புதிதாய் ஒன்றை உருவாக்குபவர்களுக்குத்தான் என்றவள் கடித்துவிட்டாள். இனி இது தோழி மார்க் என்றழைக்கப்படுவதாக என்ற வரமளித்தாள்

29 கருத்துக்குத்து:

vinu on August 11, 2010 at 2:14 AM said...

me the firstuuuuuuuuuuuuuuu

as usual firstu karchheeeepu pottu idam pudikkanam aapaaala poi post padikkanum so vartttaaaaaaaaaaa

vinu on August 11, 2010 at 2:19 AM said...

not at your best "Thozi Updates", but at 12am when i visit your blog i some what came with some expectaion to read a Thozi updates but that time it wasn't here, now when i decided to go to sleep i just want to check one more time, and luckily i got what i expected,

அதிருக்கட்டும். எப்படா நீ ஆர்ம்ஸ்ட்ராங் ஆகப்போற

single meaningthaanea?

சுசி on August 11, 2010 at 2:38 AM said...

தோழியிடம் மார்க் வாங்கிய கார்க்கி என்று நீங்கள் இன்றிலிருந்து அழைக்கக் கடவீர்கள்.

எல்லாமே வ போ ந இ.

மகேஷ் : ரசிகன் on August 11, 2010 at 7:57 AM said...

பட்டாசு சகா!

நாய்க்குட்டி மனசு on August 11, 2010 at 8:33 AM said...

காரணமே இல்லாமல் என் சப்பையான
ஆர்ம்ஸை பார்த்து விட்டேன் நான். //
அப்போ profile ல இருக்கிறது graphics ஆ ?

R Gopi on August 11, 2010 at 8:35 AM said...

// vinu said...
அதிருக்கட்டும். எப்படா நீ ஆர்ம்ஸ்ட்ராங் ஆகப்போற

single meaningthaanea? //

அதுக்கு ஒரே மீனிங் தான், பாவம் கார்க்கிக்குத்தான் ​கேள்வி புரியல:)

தராசு on August 11, 2010 at 9:28 AM said...

கடி வாங்கிய கார்க்கி வாழ்க

sivakasi maappillai on August 11, 2010 at 9:40 AM said...

உனக்கு பொண்டாட்டி புள்ள ன்னு ஆனபிறகு இந்த பக்கம் வர்றேன்....
அது வரை வணக்கம் கூறி விடை பெறுகிறேன்

தாரணி பிரியா on August 11, 2010 at 9:43 AM said...

இப்படி தோழி அப்டேட்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டே இருந்தா எப்படி தம்பி பொண்ணு பாக்கறது; தோழியோட அட்ரஸ் தாங்க. தோழி வீட்டுல பேசி முடிச்சுடலாம்

புன்னகை on August 11, 2010 at 9:54 AM said...

//உன் இடையும் என்ன ட்விட்டரோ… ஒன்லி ஒன் ஃபார்ட்டி கேரக்டரோ//
எந்திரன் தாக்கமா? :-)

Mohamed Faaique on August 11, 2010 at 9:58 AM said...

உங்க மேல் மாடி சூபர் அப்பு..

taaru on August 11, 2010 at 10:10 AM said...

//என்றவள் கடித்துவிட்டாள். இனி இது தோழி மார்க் என்றழைக்கப்படுவதாக என்ற வரமளித்தாள் //
முத்தாய்ப்பு...

Sen22 on August 11, 2010 at 10:18 AM said...

//தராசு on August 11, 2010 9:28 AM said...
கடி வாங்கிய கார்க்கி வாழ்க//

வாழ்க!! வாழ்க!! வாழ்க!!

கார்க்கி on August 11, 2010 at 10:39 AM said...

vinu, தொடர் ஆதரவுக்கு நன்றி.. :)

சுசி, நன்றி..

நன்றி மகேஷ்

நாய்க்குட்டி, நோ நோ நோ அது ஒரிஜினல்

கோபி, பல்பு வாங்கின அதையே குத்தி குத்தி காட்டுவீஙக்ளே!!!

தராசண்ணே, அடி வாங்கியவர் ஆச்சே நீங்கள்..

சிவகாசி மாப்ள, என்னப்பா இப்படி சொல்லிட்டிங்க? இதுக்காச்சும் நான்....

தா.பி, பிரச்சினை தோழி வீட்டுல இல்ல

புன்னகை, இல்ல. தோழி தாக்கம் :))

முகமது, என்ன மேல் மாடி???

நன்றி டாரு

நன்றி சென்

ரமேஷ் வைத்யா on August 11, 2010 at 11:23 AM said...

Fantastic!!!!!!

Aravind on August 11, 2010 at 11:38 AM said...

கார்க்கி, ம‌ச்ச‌ மேட்ட‌ர் அருமை.. ம‌னுஷ்ய‌ புத்திர‌னின் பாதிப்போ..!!

நர்சிம் on August 11, 2010 at 11:43 AM said...

//ரமேஷ் வைத்யா on August 11, 2010 11:23 AM said...
Fantastic!!!!!!
//

அப்புறம் என்ன சகா. சூப்பர்.

"ராஜா" on August 11, 2010 at 11:55 AM said...

//உள்ளங்கால் மச்சத்திற்கு என் பெயரை வைத்துவிடேன்

இப்பத்தான் உள்ளங்காலேவா? போங்க சகா நீங்க ரொம்ப லேட்டு...

அன்புடன்-மணிகண்டன் on August 11, 2010 at 12:24 PM said...

Good Ones Karki!!!

நல்லவேளை.... அவங்க உங்கள பார்த்து.. "அவனா" நீயி'ன்னு கேக்கல..

புன்னகை on August 11, 2010 at 12:53 PM said...

//இப்பத்தான் உள்ளங்காலேவா? போங்க சகா நீங்க ரொம்ப லேட்டு...//
கார்க்கியை இப்படியெல்லாம் இழிவா பேசாதீங்க! இது பாதாதிகேசம் இல்லை, கண்டிப்பா கேசாதிபாதமா தான் இருக்கும்! :P

தர்ஷன் on August 11, 2010 at 2:12 PM said...

நல்லா இருக்கு சகா

ஜில்தண்ணி - யோகேஷ் on August 11, 2010 at 2:18 PM said...

ம்ம்ம் தோழி பக்கா பக்கா :)

oven-அவன் எப்டித்தான் யோசிக்கிறீங்களோ இப்படியெல்லாம் :)

கார்க்கி on August 11, 2010 at 2:52 PM said...

@ர.வைத்யா,
அண்ணா, நல்லா இருக்கிஙக்ளா?

@அரவிந்த்,
என்ன யோசிச்சாலும் இதே மாதிரி யாரவது யோசிச்சு வச்சிருப்பாங்க சகா. எப்படி மாத்தி டகால்ட்டி வேலை பண்ணி எழுதறோன்கிறதுதான் மேட்டரே. அந்த ம.பு. அப்டேட்ட நான் படிக்கல

நன்றி நர்சிம். நீஙக்ளும் சொல்லிட்டிங்க. ரைட்டு

@ராஜா,
ஹிஹிஹி

@அன்.மணிகண்டன்,
நலமா சகா?

@புன்னகை,
சந்தோஷமா?

@தர்ஷன்,
நன்றி

@ஜில்தண்ணி,
அதெல்லாம் தானா வருது சகா?

ப.செல்வக்குமார் on August 11, 2010 at 3:39 PM said...

///நட்பு, நண்பன் என்றால் உதடுகள் ஒட்டும். காதல், காதலி என்றால் ஒட்டாது என்று நண்பன் சொல்கிறான் என்றேன் தோழியிடம். அவன் கிடக்கிறான் லூசு என்று உதடுகள் ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி காண்பித்தாள்.
///
இது அருமை ...!!

Venkatesh on August 11, 2010 at 4:33 PM said...

கார்கி அவர்களே எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது. கவிதைகள் அருமை, ரசித்தேன்

சிவகுமார் on August 11, 2010 at 4:44 PM said...

"பொண்டாட்டி புள்ள ன்னு ஆனபிறகு இந்த பக்கம் வர்றேன்....
அது வரை வணக்கம் கூறி விடை பெறுகிறேன்"
தோழி அப்டேட்ஸ் Mudiyala ..,,

விக்னேஷ்வரி on August 11, 2010 at 10:11 PM said...

தோழியே இல்லாம என்னா பில்டப்பா தோழி அப்டேட்ஸ். நல்லா இருந்தது சகா.

தமிழ்ப்பறவை on August 11, 2010 at 10:26 PM said...

தோழி மார்க் மட்டும் பாஸ்... :-)

கயல் on August 12, 2010 at 3:48 AM said...

நண்பா உங்க கஷ்டம் வார்த்தயில தெரியுது! வீட்டுல சொல்லுறதுக்கு முன்னாடி அவங்க விலாசம் சொல்லுங்க ஆளத் தூக்கிடுவோம்!அப்புறம் நீங்க மனைவி அப்டேட்ஸ் எழுதலாம்.:)).

//
சுசி said...
தோழியிடம் மார்க் வாங்கிய கார்க்கி என்று நீங்கள் இன்றிலிருந்து அழைக்கக் கடவீர்கள்.
//
பாஸா பெயிலா கேளுங்க சுசி!

 

all rights reserved to www.karkibava.com