Aug 10, 2010

பெ.ரா. ட். சு &கார்க்கி


 

   எனக்கு பெரியாரை பிடிக்கும். பெரியாரையும் பிடிக்கும் என்பதே சரியானதாய் இருக்கும். கடவுள் இல்லையென்று சொல்வதை விட கடவுளை மற.மனிதனை நினை என்ற அவரின் வார்த்தைகளே எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் பெரியாரும் அவரின் கருத்துகள் மட்டும்தான் அறிவுத்தேடலுக்கான எல்லையா?. அத்தேடலின் எல்லை பெரியாருடன் நின்று விடுவதில்லை. சில விதிகள் எக்காலத்திற்கும் பொருந்துமென்றாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மட்டுமே மாறாத விதியென்று நம்புகிறேன். இன்று நமக்கு சரியெனப்படுவது நாளையே தவறாகலாம். சமீபத்தில் படித்த வலைப்பதிவொன்றில் இன்று நடக்கும் எல்லாவற்றையும் பெரியாரின் கருத்துக்களுடனே ஒப்பிட்டு எழுதப்பட்டதை பார்த்துதான் இதை எழுத வேண்டுமென்று தோன்றியது. மற்றபடி விசேஷமேதுமில்லை. வெங்காயம் சாப்பிடுவதால் நான் பெரியாரிஸ்ட் என்றி சொல்லிக் கொள்ளும் நபர்கள் இருக்கையில் எனக்கு தெரிந்த பெரியாரிசத்தை சொன்ன மகிழ்வு எனக்கும், அசுவாரஸ்யமான பத்தி ஒன்றை படித்த அசூசை உங்களுக்கும் வாய்த்ததற்கு அந்தப் பதிவரே காரணம்.

சமீபத்தில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதில் பெரியார் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும் ஹேராமில் கோட்சேவை ஆதரித்து சில காட்சிகள் வருவதால் அதற்கும் இசையமைக்க மாட்டேன் என்றும் ராஜா மறுத்ததாக கட்டுரையாளர் சொல்லியிருக்கிறார். மேலும் இதற்கெல்லாம் மறுப்பு சொன்ன ராஜா தேவர் மகன் படத்தில் ”போற்றி பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணே” என்று ஆதிக்க சாதிக்கு ஆதரவாக பாடியதை சாடியிருந்தார். இருக்கலாம். ஆனால் தேவர் மகன் வெளிவந்த ஆண்டு 90களின் தொடக்கம். ஹேராம் 99 என நினைக்கிறேன். 7,8 வருடங்களில் ஒரு மனிதனின் சிந்தனையில் மாற்றம் வந்திருக்காதா? ஒரு வேளை 90களிலே பெரியார் படம் எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் ராஜா மறுத்திருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியுமா? சாதியை மறந்து புள்ளக்குட்டிகளை படிக்க வைங்கடா என்ற தகவல் சொன்ன படமாகவே எனக்கு தேவர் மகன் தெரிகிறது. மறைமுகமாக தேவர் இனத்தை போற்றும் படமென்று சொன்னாலும் கமல் அதை செய்ய வேண்டிய அவசியமென்ன? அவர் என்ன தேவரா? சினிமாத்துறை என்பது புரியாத புதிர். சொல்ல வரும் தகவல்கள் ஒரு வேளை சரியான முறையில் சொல்ல முடியாமல் போனாலும் வணிக காரணங்களால் அப்படியே வெளியிட வேண்டிய கட்டாயம் உண்டு. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவன் என்றாலும் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கியது என் கையாலாகாத்தனம் என்றெண்ணுவதைப் போலத்தான் அதுவும்.

எந்தவொரு படைப்பும் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்தே அது நல்ல படைப்பா இல்லையா என்று முடிவு செய்யலாம் என்கிறார் கவிஞர் தாமரை. நல்ல சினிமா என்பது என் அன்றாட வாழ்க்கையை இரண்டு நாட்களுக்காவது பாதிக்க வேண்டுமென்கிறார் பி.சி.ஸ்ரீராம். பசுபதியின் அளவுகோல் இன்னும் வித்தியாசமானது. அவருக்கு நல்ல படம், கெட்ட படம் என்று இரண்டு வகைகள்தான். படம் பார்க்கும் போது தன்னால் ஒன்றிப் போக முடிந்தால் அது நல்ல படம் என்கிறார். பார்வைகள் பல்லாயிரம். டப்பர்வேரில் தயிர்சாதத்துடன் வேலைக்கு செல்ல பஸ் பிடிக்க ஓடும் ஒருவன் பிசி.ஸ்ரீராம் சொல்வது போன்ற ஒரு படத்தை ரசிக்க முடியுமா? அவனுக்கென்று ஒரு சினிமா வருவது தேவையில்லாத ஒன்றா? அல்லது கலையையும், அரசியலையும் பஞ்சாமிர்தம் ஆக்கி எந்த ஒரு செயலிலும் பிரதி சொல்லாத கற்பிதங்களை எடுத்துக் கொண்டு கோஷமிடுவது நேர்மையா? எல்லோருக்கும் பிரத்யேகமாய்  ஒரு அரசியல் இருக்கிறது. ரசனை இருக்கிறது. இதை புரிந்துக் கொள்ளாமல் தனக்கு ஒவ்வாத படைப்பை இகழ்வதும், அதை ரசிப்பவனை மட்டம் தட்டுவதும் காலம் காலமாய் நடந்தேறிக் கொண்டுதானிருக்கிறது. ட்விட்டரை அதன் உச்சம் என்பேன். 140 கேரக்டர்களில் அநாயசமாக சிலரால் ஏறி மிதித்து செல்ல முடிகிறது. உணர்சிகளின் குவியல் ஆயிற்றே மனிதன்!!  மேலும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விழைகிறேன். ஆகவே  சில நாட்களாக மெளனராகம் மோகன் - ரேவதியைப் போல பட்டும் படாமலும் இயங்கிக் கொண்டிருக்கிறேன் ட்விட்டரில்.

சமீபத்தில் என் பயோடேட்டாவைப் பதிவேற்றியிருந்தேன். வீட்டில் திருமணப் பேச்சு எழுந்த போது தோன்றிய ஐடியா அது.அதைப் படித்துவிட்டு அன்றிரவு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதன் பின் நடந்தவை இதோ..

Hi karki. I am your regular reader. you really entertain us.

thanks a lot. May i know who is this?

I am sumathi, an MBA student from chennai.

cool. Thanks for your encouragement

karki, i read your bio data today.Are you seriously looking for girl?

yes. But amma thaan paarkiraanga :)

ok. then i have to speak to your mum. Shall i get her number?

no issues. you can call this number. I will ask her to speak.

உடனே கால் வந்தது.


hi am sumathi.

என்ன கால் பண்ணிட்டிங்க.?

நீங்கதானே பண்ன சொன்னிங்க. அம்மா கிட்ட கொடுங்க

விளையாடாதிங்க

ஹலோ. நான் சீரியஸாதான் சொல்றேன்.

முதல்ல உங்க ஃபோட்டோ அனுப்புங்க. நான் பார்த்துட்டு அப்புறமா அம்மாகிட்ட பேசலாம்..

என் ஃபோட்டோ எதுக்கு?

பின்ன?

கார்க்கி, நான் சொன்னது எங்க ஹாஸ்டலில் இருக்கும் அக்காவுக்கு. எனக்கு வயசு 21 தான் ஆகுது.

!@##$$%%^^&&&&

__________________

என்ன கொடுமை சார் இது? எனக்கு 27 தானே ஆகுது? அவங்க என் வயசு என்னன்னு நினைச்சிட்டாங்க??????

31 கருத்துக்குத்து:

வழிப்போக்கன் - யோகேஷ் on August 10, 2010 at 1:01 AM said...

உங்கள வச்சி நிஜமாவே காமடி பண்ணியிருக்காங்க...

கல்யாணம் முடியிர வரைக்கும் லைவ் அப்டேட் பண்ணுறதா வேண்டுதலா???

vinu on August 10, 2010 at 1:06 AM said...

me the seconduuuuuu , chumma karcheeepu pottu seat pudikka vandhean ippo posttukku poi padicchuttu vanthu comment podurean vartaaaaaaaaaaa

vinu on August 10, 2010 at 1:15 AM said...

ok now the comment ennakku kooda unga age thaampa, but naanum ithea problem face paani irrukkean pala thadavai, enna panna

puthan giragathhuukku theariyuma poomiyoda arumai........

konjam puthu mozi sollaleameannu he he he .....

சுசி on August 10, 2010 at 1:16 AM said...

இப்டி அவசரப்பட்டா எப்டி கார்க்கி??

அவங்க அக்காவுக்கு வயசு 22ஆ இருந்திருக்கும். விசாரிச்சு பாருங்க.

பெரியார், ராஜா, ட்விட்டர், சுமதி கலக்கல் :))

ப்ரியமுடன் வசந்த் on August 10, 2010 at 1:50 AM said...

உங்களோட ட்விட்டர் எல்லாம் வாசிச்சுட்டுத்தான் இருக்கேன் அமைதியாத்தான் புயல் வீசிட்டி இருக்கு ஏன் அப்பிடி?

புயல்னா அமைதியா வீசக்கூடாது சகா!

கட்சீ மேட்டரு பாவம்யா நீரு அட்லீஸ்ட் 28 வயசு பொண்ணு கூடயாச்சும் மேரேஜ் ஆகக்கடவதாக...!

Kafil on August 10, 2010 at 3:07 AM said...
This comment has been removed by the author.
siva on August 10, 2010 at 5:51 AM said...

HAHAHA..

ETHU NALLA IDEAVA ERUKKEY..

ENGA VETILA CHONNA...ENNA VAYASU ACHU ATHUKULA KALAYANUMNU KEKRANGA..

ENIMEY ARUMAI ANNAN
KAVIGAR SARALAM
"ULAGA PUGAL"
kARKIYIN
FORMULAVA PINPATRALAM ENDRU ERUKIROM...
(ATHAVATHU ORU GROUPATHAN ERUKOMNU CHOLA VAROM)

Balaji saravana on August 10, 2010 at 6:24 AM said...

என்ன சகா இவ்ளோ பெரிய பல்பு வாங்கியிருக்கீங்க
விடுங்க விடுங்க அரசியல்ல இதல்லாம் சாதாரணம் தான.. :)
சரி கடைசில அவங்க அக்கா போட்டோவாவது வந்துச்சா?

//சில விதிகள் எக்காலத்திற்கும் பொருந்துமென்றாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மட்டுமே மாறாத விதியென்று நம்புகிறேன். இன்று நமக்கு சரியெனப்படுவது நாளையே தவறாகலாம்.//
//7,8 வருடங்களில் ஒரு மனிதனின் சிந்தனையில் மாற்றம் வந்திருக்காதா?//

நல்ல கேள்வி கார்க்கி...

நாய்க்குட்டி மனசு on August 10, 2010 at 8:15 AM said...

அம்மா எண் னு சொல்லி உங்க
நம்பரை தெரியப் படுத்தினீங்க பாருங்க there stands karkki.எந்த நேரமும் பெண்களை கலாய்ச்சிட்டே இருந்தா இப்படி தான் பல்ப். வாங்கோணும்.

Mohamed Faaique on August 10, 2010 at 9:08 AM said...

count down start achchu... bast of luck...

விக்னேஷ்வரி on August 10, 2010 at 9:13 AM said...

பதிவு நல்லா வித்தியாசமாப் போகுதேன்னு வாசிச்சுட்டே வரும் போது கடைசில உங்க டச். நல்லாருக்கு சகா.

பை த வே, அந்தக்கா பேரு, வயசு, பயோடேட்டா அனுப்புங்க. அம்மாகிட்ட வேணும்னா நான் பேசறேன். :)

தராசு on August 10, 2010 at 9:34 AM said...
This comment has been removed by the author.
sivakasi maappillai on August 10, 2010 at 9:35 AM said...

குறும்படம் பாத்துட்டு கூப்டிருப்பாங்க....

தராசு on August 10, 2010 at 9:44 AM said...

ஒண்ணுமே புரியல, உலகத்துல.

Sen22 on August 10, 2010 at 10:28 AM said...

Sema Kalakkal...

Nalla Kalachiirukkanga...

ஆதிமூலகிருஷ்ணன் on August 10, 2010 at 10:34 AM said...

இறுதிப்பகுதி செம சுவாரசியம்.

ஆதிமூலகிருஷ்ணன் on August 10, 2010 at 10:36 AM said...

@susi

ஒருவேளை அவங்களுக்கு உங்களை மாதிரி 40 வயசா இருந்தா என்ன பண்றதாம்.? :-))

கார்க்கி on August 10, 2010 at 10:37 AM said...

யோகேஷ், அவங்க கலாய்க்கல. நானாதான்... :))

வினு, புதுமொழி சூப்பர் சகா

சுசி, அது சரி..21ன்னா கூடாதோ?

வசந்த், ஹிஹி.. அமைதியாவே இருப்போம் சகா :)

சிவா, நம்ம டீம் தான் பெரிசு போல. எல்லோரும் அதே சொல்றீங்க :)

பாலாஜி, உங்க அக்கா எனக்கும் அக்கா மாதிரின்னு சொல்லிட்டு வச்சிட்டேன் :)

நாய்க்குட்டி, எப்பவாதுதானே பல்பு வாங்குறேன். சோ, ப்ரவாயில்லை :)

முகமது, அது கூட தப்பா சொல்றீஙக்ளே!!! எனக்கு அவ்ளோதானோ?

விக்கி, நீங்கதானே? சரியா போச்சு. எனக்கு ஆன மாதிரிதான்..கல்யாணத்த சொன்னேன்

சிவகாசி மாப்ள, பார்த்தும் கூடவா கூப்பிடுவாங்க?????

தராசண்ணே, மோர் சாப்பிடுங்க

சென், என்னை கலாய்ச்சா கமெண்ட் போட்டுட்விஙக்ளே :))

தனுசுராசி on August 10, 2010 at 10:55 AM said...

தொப்பி தொப்பி...

சுசி on August 10, 2010 at 11:07 AM said...

@ஆதி.. மைண்ட்ல போட்டாச்சு..

@கார்க்கி.. நீங்க 22டே ஜாஸ்திங்கரிங்க.. ஆதி அவங்களுக்கு 40 இருக்கும்கிறார்.

மோகன் குமார் on August 10, 2010 at 12:32 PM said...

நெசமாத்தான் சொல்றீங்களா ??

ப.செல்வக்குமார் on August 10, 2010 at 12:51 PM said...

//ட்விட்டரை அதன் உச்சம் என்பேன். 140 கேரக்டர்களில் அநாயசமாக சிலரால் ஏறி மிதித்து செல்ல முடிகிறது. ///
உண்மை அண்ணா ..!!
//கார்க்கி, நான் சொன்னது எங்க ஹாஸ்டலில் இருக்கும் அக்காவுக்கு. எனக்கு வயசு 21 தான் ஆகுது.
///
ஹா ஹா .. வச்சோம்ல ஆப்பு ..

கார்க்கி on August 10, 2010 at 2:27 PM said...

//இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

iamkarki yaavatumnalam vasanth1717 radhikaram jyovramsundar vannan //

யாருப்பா இந்த vannan? நெகட்டிவ் ஓட்டுக்கு நன்றி.

__________________
நன்றி ஆதி

தனுசு, சந்தோஷமா சகா? :)))

சுசி, :)

மோகன்,எத சொல்றீங்க?

நன்றி செல்வா

Karthik on August 10, 2010 at 4:33 PM said...

LOL. :))

Really? Charu Niveditha-esque. :))

Kafil on August 10, 2010 at 5:48 PM said...

finala enna solreenga

அறிவிலி on August 10, 2010 at 6:01 PM said...

ஒரே ஒரு கால்தான் வந்துதா???

கார்க்கி on August 11, 2010 at 12:29 AM said...

கார்த்திக், கெட்ட வார்த்தை பேச வைக்காத :))

கஃபில், அதெல்லாம் ஏதுமில்லப்பா

அறிவிலி, வரும்..வரும்..வந்துக்கிட்டே இருக்கும்.. போங்க சகா

நித்திலம்-சிப்பிக்குள் முத்து on August 11, 2010 at 8:15 AM said...

உங்களுடைய அலசல் நன்றாக உள்ளது.உங்களுடைய எண்ணத்தில் தெளிவு உள்ளது. பாராட்டுக்கள்.அவரவர் ஞாயம் அவரவர்க்கு.

தமிழ்ப்பறவை on August 11, 2010 at 10:25 PM said...

நல்லா இருக்கு சகா...
ராஜா பத்தி சொன்னது நல்ல அலசல்.. அவர் 70களில் ஒரு படத்தை ஒத்துக் கொள்வதற்கும், 90 களில் ஒத்துக் கொள்வதற்குமே எட்டிப்பிடிக்க முடியா வித்தியாசங்கள் உண்டு...
இன்னைக்கு ஒரு விளம்ப்ரம் பேப்பர்ல பார்த்து ஆவலா இருக்கேன். சுசீந்திரன் இயக்கத்துல ‘அழகர்சாமியின் குதிரை’, இசை இளையராஜா...

பதிவின் ஃபோன் மேட்டர் சூப்பர்...

யோ வொய்ஸ் (யோகா) on August 11, 2010 at 11:17 PM said...

உண்மைக்குமா நடந்துச்சு சகா?

வெற்றி on August 14, 2010 at 1:53 AM said...

அந்த சுமதி மேட்டர் படிக்கும் போது கடைசில சத்தமா சிரிச்சுட்டேன் :)

//எனக்கு வயசு 21 தான் ஆகுது//

அவங்க சொல்ல வந்தது..'21 வயசுல எனக்கு எதுக்கு கல்யாணம்?' சோ டோன்ட் வொர்ரி சகா..

 

all rights reserved to www.karkibava.com