Aug 9, 2010

அவள் அப்படியொன்றும் அழகில்லை


 

அழகாய் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவு வேகமாய் திறந்தது. மூச்சிரைக்க உள்ளே நுழைந்தார்கள் மதனும், பாலாஜியும். இருவரின் முகத்திலும் பயத்தின் அடையாளங்கள் தெளிவாய் தெரிந்தன. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃப்ரிட்ஜின் உள்ளே இருந்து தண்ணீரை எடுத்தான் பாலாஜி.

அப்படியேண்டா அடிச்ச? போய்ட்டான். இப்ப என்ன செய்ய?

நீயும்தானே அடிக்கலாம்னு வந்த.. அவனையெல்லாம் விடக்கூடாதுடா. எனக்கு இன்னும் ஆத்திரம் அடங்கல. ஆனா அவன் இப்படி போயிடுவான்னு நினைக்கல.

போச்சு. எனக்கும் ஒண்ணும் புரியல. உன் மொபைல் கொடு. அண்ணன்கிட்ட சொல்லிடலாம்.

என்னடா?

மொபைல காணோம்டா.

அங்கேயே விட்டியாடா? லூசாடா நீ? மவனே வர்ற ஆத்திரத்துக்கு.. என்னும்போதே அவள் அப்படியொன்றும் அழகில்லை” என ஃப்ரிட்ஜுக்குள் இருந்து பாடியது. பெருமூச்சு விட்டபடி இதுக்க்குள்ள ஏண்டா வச்ச என்ற மதன் வந்த மெசெஜைப் படித்தான்.

நான் வைக்கலடா. நான் தண்ணிதான் எடுத்தேன். சத்யமா நான் வைக்கல.

”Plz forward this message to 10 persons in next 2 mins to avoid an accident”

இவனுங்கள… டேய். போலிஸ் கண்டுபுடிச்சிடுவாங்களா? உனக்கு அவன்கிட்ட இருந்து கடைசியா எப்ப ஃபோன் வந்துச்சு?

டேய். என் மெசெஜ் டோனும் அந்த பாட்டு கிடையாதுடா. ஃபோன நான் வைக்கலடா. எப்படி இந்த ஃப்ரிட்ஜுக்குள்ள வந்துச்சு?

இப்ப அதுவா முக்கியம் என்னும்போதே எந்த வித சத்தமமுமின்றி மிக அமைதியாக வெடித்து சிதறியது ஃப்ரிட்ஜ். அறை முழுவதும் குளிர்ந்த பாலும், காய்கறிகளும் தெறித்தன. அப்போதுதான் ஒரு கொலை செய்துவிட்டு பயந்து ஓடிவந்த மதனுக்கும், பாலாஜிக்கும் கிட்டத்தட்ட இதயம் நின்று போயிருந்தது. தேக்கு மரக்கதவு மெல்ல தன்னைத்தானே மூடிக் கொண்டதை பார்த்த மதன் செய்வதறியாமல் நின்றான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று பாடியது மீண்டும். ஸ்தம்பித்து நின்ற மதனின் கைகளில் இருந்து மொபைலை வாங்கிய பாலாஜி படித்தான்.

“Dont stop reading this message loudly. Else you will be killed”.

நிறுத்தாமல் சொல்லத் தொடங்கினான் பாலாஜி. 12 நிமிடம் வரை நீடித்தது அவனது ஸ்ரீராமஜெயம். 

போதும்டா. சொல்லிட்டே இருந்தா எப்படி என்றான் மதன்.

ஃப்ரிட்ஜ பார்த்த இல்லை என்ற பாலாஜியின் தலை சிதறு தேங்காயைப் போல வெடித்தது. எதிரில் இருந்த மதனின் முகத்தில் சதைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. பாலாஜியின் ஒரு கண் மட்டும் மொபைலோடு ஒட்டியிருந்தது. இன்னொரு கண் டிவியின் மேல் இருந்தது. தலையில்லாத உடல் மட்டும் நின்றபடியே இருந்தது. கத்த முயற்சித்த மதனால் வெறும் காற்றை மட்டுமே வெளியிட முடிந்தது. முண்டத்தை கீழே தள்ளிவிட்டு மாடிக்கு ஓடினான் மதன். எதுவோ அவனை இழுப்பது போல் இருந்தது. அசுர வேகத்தில் தள்ளிவிட்டு மாடிப்படியில் கால் வைத்த போது மீண்டும் அந்தப் பாடல்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

விட்டு விட்டு எரிந்த மொபைலின் மேலிருந்த கண் மதனுக்கு என்னவோ செய்தது. மொபைலை எடுக்காமல் மாடிக்கு ஓட முடிவெடுத்து இரண்டாம் படியில் காலடி வைத்தான். ஃப்ரிட்ஜ் வெடித்தது போல நிசப்தமாக எஞ்சியிருந்த படிகள் அவன் கண் முன்னே சரிந்து விழுந்தது. எல்லாக் கதவுகளும் திறக்க முடியாவண்ணம் மூடியிருக்க அப்படியே சுவரில் சாய்ந்து அழுதான் மதன்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வேகமாக இடிபாடுகளினிடையே சிக்கியிருந்த மொபைலைத் தேடி எடுத்தான் மதன்.

cut your fingers to retain your hand”

ஏதோ ஒரு வேகத்தில் கத்தியை எடுத்தவன் வெட்ட முடியாமல் திகைத்தான். நொடிகள் நிமிடங்களாயின. மீண்டும் மொபைல் ஒலித்தது

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வலது கையில் கத்தியோடு இடதுகையால் எடுத்தான். டமால்… மொபைல் வெடித்துச் சிதற, மதனின் இடது கை சில அடிகள் தள்ளி தனியே பறந்துக் கொண்டிருந்தது. வலி தாங்காமல் அலறினான் மதன். மொபைல் வெடித்ததில் அடுத்த கட்டளை எப்படி வருமென்று பயந்தான். வலியோடும், ஒரே ஒருகையோடும் அங்குமிங்கும் ஓடியவன் மயங்கி விழுந்தான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

கண் விழித்த மதனின் பதட்டம் குறையவேயில்லை. மொபைலை பார்த்துக் கொண்டேயிருந்தான்.

ஃபோன் அடிக்குது இல்ல. எடேண்டா என்ற குரலும், எடுக்க வந்த பாலாஜியின் கையையும் பார்த்த மதனுக்கு எதுவும் புரியவில்லை.

மச்சி டெரர் கனவு. அந்த பரதேசி பையன நாம ரெண்டு பேரும் செம அடி அடிக்கிறோம். நான் போய் கண்டினியு பண்றேன் என்ற பாலாஜி போர்வைக்குள் மீண்டும் அடைக்கலமானான். மதன் மட்டும் ஃப்ரிட்ஜையே பார்த்துக் கொண்டிருந்தான்.  டமால் என்ற சத்தம் வந்த அதிர்ச்சியில் பதறி எழுந்தான் பாலாஜி.  ஃப்ரிட்ஜ் அப்படியே இருக்க, பெருமூச்சு விட்டபடி திரும்பினான் மதன். அழகாய் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவு வேகமாய் திறந்தது.

24 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on August 9, 2010 at 1:03 AM said...

புரியுது... ஆனா... புரியல... ...

நான் மப்புல இருக்கேனா? இல்ல நீயா?

சுசி on August 9, 2010 at 1:16 AM said...

ஹீரோ கார்க்கி.. வாழ்த்துக்கள்ப்பா.. கலக்கிட்டிங்க..

இவ்வ்வ்வளவு பயங்கரமாவா கனவு காணுவார் உங்க கதையோட ஹீரோ..

அவ்வ்வ்.. உங்க எழுத்துக்கு உயிர் கொடுத்து படிச்சு பழகியதோட விளைவு.. இன்னைக்கு நான் ஸ்ரீராம ஜெயம் சொல்லிட்டே தூங்கணும் போல இருக்கே.. ஆவ்வ்வ்..

தர்ஷன் on August 9, 2010 at 1:45 AM said...

Inception பார்த்தீங்களா சகா?
அப்புறம் நடிப்பெல்லாம் கலக்குறீங்க

Kafil on August 9, 2010 at 3:40 AM said...

thala..heheh..hehhehe padam edukka bayanthuthana, kadha eluthuneenga unmaya sollunga

Kafil on August 9, 2010 at 3:57 AM said...

natpooo, unga nadippoo sooper,(o potrukken pa), aana enakennavo neenga nejammave thanni adicha mari oru doubt...

சீனு on August 9, 2010 at 6:05 AM said...

அசத்தலா இருக்குங்க கார்க்கி...
வறைமுறைகளே இல்லாது தான் கனவுகள்....
அப்புறம் incpetion பார்த்தாச்சா ???

வழிப்போக்கன் - யோகேஷ் on August 9, 2010 at 7:56 AM said...

Etho solla vareenkannu mattum puriyuthu...

Balaji saravana on August 9, 2010 at 8:13 AM said...

ஒன்னும் புரியலையே சகா :(

நாய்க்குட்டி மனசு on August 9, 2010 at 8:19 AM said...

ராத்திரி சரியா தூங்கிறதில்லைன்னு தெரியுது

Mohamed Faaique on August 9, 2010 at 8:20 AM said...

என்ன சொல்ல வாறீங்க....

தராசு on August 9, 2010 at 9:34 AM said...

இதுக்குத்தான் அந்த பேய் பங்களாவுக்கெல்லாம் போகாதேன்னு சொன்னா கேக்கறீங்களா?

கார்க்கி on August 9, 2010 at 10:32 AM said...

பரிசல், நான் இல்லை

நன்றி சுசி

தர்ஷன், இன்னும் பார்க்கல சகா. நன்றி

கஃபில், ரகசியத்த எல்லாம் வெளிய சொல்லக்கூடாது பாஸ்

சீனு, நன்றி. இன்னும் பார்க்கல

வழிப்போக்கன், நீங்க அறிவுஜீவிண்ணே :)

பாலா, வடை போச்சா?

நாய்க்குட்டி, ஹிஹிஹிஹி

முகமது, வேறென்ன? நன்றிதான்

தராசண்ணே, ஆதியண்ண வீட்ட சொல்றீங்களா?

vanila on August 9, 2010 at 10:51 AM said...

ஆதிபுரத்து வீடு.. கார்க்கி பாறைகள்..

புன்னகை on August 9, 2010 at 11:43 AM said...

சொல்வதொன்று செய்வதொன்று! :-(

விக்னேஷ்வரி on August 9, 2010 at 12:13 PM said...

ஹிஹிஹி...

Jenbond on August 9, 2010 at 4:11 PM said...

என்ன சகா ரீமேக் ஸ்டோரியா? (Red, Black, Yellow). ஆனாலும் நல்லாத்தான் இருக்கு.

vinu on August 9, 2010 at 8:19 PM said...

no i have seen this story in such a vay of short film in recent time on either one blog or in some what @kalangar TV short films, am not sure where i have sheen this but i am sure i did in that story ther wher three people reading one notebook which says some things going to happen sond at the end it will reopen from one of the perrsons eyes as a drem but again that time only the other guy start reading that note book.


so so karki eventhis is your's genuine creativve story ,i can't accept this is the first attempt on this story line..

but apart from that


......

கார்க்கி on August 9, 2010 at 8:58 PM said...

நன்றி வாநிலா

புன்னகை, :))

என்ன ஆச்சு விக்கி???

ஜென்பாண்ட், வினு,

இப்பதான் அந்த படம் தேடிப் பார்த்தேன். ஆன் அதை பார்த்து எழுதவில்லை. இன்று ஆதியின் தளத்தில் க்ரைம் படம் என்று ஒன்று விளையாட்டா போட்டிருக்கோம். அதனால் பேய்க்கதை இன்று எழுதலாம் என்று நினைத்தேன். இதே மாதிரி ஏதோ ஒரு ஆங்கிலப்படம் பார்த்த நினைவு. எங்கே எப்போது என்று நினைவிலில்லை. இந்த யுத்தி வினோ சொன்னது போல் புதிதல்ல. அரதப்பழசான ஒன்றுதான். அதனால் அந்த குறும்படம் பார்த்து எழுதியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்களும் நான் பார்த்த அப்டத்தைப் பார்த்தே எடுத்திருக்கலாமில்லையா? :))

vinu on August 10, 2010 at 1:12 AM said...

ஜென்பாண்ட், வினு,

adappaavi naan nijamalumea gen thaan pa, its ok, wasn't you checked my blog. ok good the story line only i said, i wasn't comment about the story.


soory what i can do? some time my nature?

if it hurts u means sorry!

கார்க்கி on August 10, 2010 at 9:55 AM said...

vinu,

நான் ஜென்பாண்ட் என்று உங்கல சொல்லல. உங்க கமெண்ட்டுக்கு முந்தைய கமெண்ட் பாருங்க. ஜென்மாண்ட் அன்பவரும் அந்த குறும்படம் பத்தி சொல்லியிருந்தார். அதனால் இரண்டு பேருக்கும் சேர்த்து பதில் சொன்னேன்..

ஆவ்வ்வ்..எதுக்கு சாரியெல்லாம்???

ஆதிமூலகிருஷ்ணன் on August 10, 2010 at 11:29 AM said...

ஒண்ணியும் புரியலை.

Karthik on August 10, 2010 at 4:46 PM said...

Wow. Nalla Irukku. :)

vinu on August 10, 2010 at 7:50 PM said...

oops understood konjam unarchivasappattuutammooooooooooo


but, thanks for the unlimited joy which you provides through the "thozi updates, and some of your personal profile - telephonic calls whic you received" kind off post.

aduthaavanga bulb vangurathu nammakku ennaikkumea santhosamthaan illaiya saga

தமிழ்ப்பறவை on August 11, 2010 at 10:20 PM said...

//Wow. Nalla Irukku. :)//
வன்மையாகக் கண்டிக்கிறேன்...

 

all rights reserved to www.karkibava.com