Aug 3, 2010

தோழி கள்


 

   மது விலக்கு பற்றி மீண்டும் யோசிக்கிறதாம் தமிழக அரசு. வா.நாம் கேரளாவுக்கு ஓடி விடுவோம் என்றேன் தோழியிடம். ”எதுக்கு. நான் என்னை உன்ன மாதிரி குடிக்கிற ஆளா” என்கிறாள் தன்னையறியாத தோழி.

வாரயிறுதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று திரும்பிய தோழியிடம் “உன் பிரிவில் உன்னிடத்தில தான் பேச முடியவில்லை. ஆனால் அனைவரிடமும் உன்னைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை” என்றேன். ”என்னத்த எல்லாம் உளறி வச்சியோ” என்று திட்டினாள்.

  சாக்லெட்டை சாப்பிட்ட தோழியின் உதட்டில் ஒட்டியிருந்தன சில துகள்கள். நல்ல காரியம் செய்யும் முன்பு இனிப்பு சாப்பிட வேண்டுமென்ற cadbury விதியை சொன்னேன். சரியென்று உதட்டைக் காட்டியவள், அதன் பின் கேட்டாள் “என்ன நல்ல காரியம் செய்யப் போற” என்று.  இந்த முறை கீழுதட்டை கடித்து வைத்தேன்

நான் ஒருத்திதானே? அப்புறம் ஏன் ”தோழிகள்” என்றே சொல்கிறாய் என்பது தோழியின் கேள்வி. அது தோழிகள் இல்லை. என் “தோழி கள்” என்று எப்படி புரியவைப்பது அவளுக்கு?

என் லேப்டாப்பும் உன்னை மாதிரியே இருக்கு. சீக்கிரம் சூடாகுது” என்றாள் தோழி . மடிகணிணி என்றால் மடித்து வைப்பது என்ற அர்த்தமும் உண்டு. நீ மடி மீது வைத்தால் அப்படித்தான் ஆகுமென்று சொல்லி வந்தேன்.

என்னடா மச்சி ஆச்சு என்ற நண்பனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பெப்பே என்று சைகை காட்டிக் கொண்டிருக்கிறேன் நான். என்ன சாப்பிட்ட என்ற சிநேகிதியிடம் ”காலைல அவன் உதடு, மதியம் அவன் கன்னம்” என்று வெட்கமே இல்லாமல் சொல்லியிருக்கிறாள் தோழி

வெளிர்நீல தாவணியில் இரட்டை பின்னலோடு மிக அழகாய் இருந்தாள் தோழி அந்தப் புகைப்படத்தில். இந்த அழகுக்கு எல்லாம் வரி போட்டா எவ்ளோ ஆகும் தெரியுமா என்றேன். இப்பவே கட்டிடறேன் என்று இரண்டு கன்னங்களில் நான்கு முத்தம் தந்தாள்.  கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் ”கள்ள” அழகிற்கு என்ன செய்வாள்?

பிறந்ததில் இருந்தே இந்த வீடுதான். எதிரிலே பீச். இப்ப மாறிப் போக கஷ்டமா இருக்கு” என்ற தோழியை கவனிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தேன். “இனியும் சூரியன் கிழக்கு திசையில் தான் உதிக்குமா?”

29 கருத்துக்குத்து:

ஆதிமூலகிருஷ்ணன் on August 4, 2010 at 12:35 AM said...

1. Be Frank.. பொறாமையாக இருக்கிறது. இன்னும் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதைகள்தான் வந்து தொலைவதில்லை. அதெல்லாம் ஒரு காலம் என்றாகிவிட்டது. வயதாகிவிட்டதோ.?

2. நீ ஏன் இத்தனைக் கவிதைகளை மனதிற்குள் வைத்துக்கொண்டு மொக்கை போட்டுக்கொண்டிருக்கிறாய்? உனக்கு தர்பூஸ் மாதிரி ஒரு பெண்தான் வரப்போகிறாள் போ.!

3. இவ்வளவு காதலைப் பெறப்போகிறவள் அதிர்ஷ்டசாலி. ஆனால் வழக்கமான ஆண்களைப் போல நீயும் துரதிருஷ்டசாலிதான். அதில் மாற்றமில்லை.

:-))

சுசி on August 4, 2010 at 12:51 AM said...

// “இனியும் சூரியன் கிழக்கு திசையில் தான் உதிக்குமா?”//

கண்டிப்பா.. உங்க தோழி அப்டேட்ஸ்காக.

மறக்காம அம்மா கிட்ட சொல்லி சுத்திப்போட சொல்லுங்க..

முத்துகுமரன் on August 4, 2010 at 1:31 AM said...

ஆதி!

கனவு இருக்குறவரைக்கும் தான் கவிதை வரும். காதலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு கனா காண கண்டா பஞ்சாயத்துதான் ஆகும்

Logan on August 4, 2010 at 2:45 AM said...

அனைத்தும் அருமை....

//இனியும் சூரியன் கிழக்கு திசையில் தான் உதிக்குமா?”//

பீர்+பால் குடிச்சீங்கலா ?

வழிப்போக்கன் - யோகேஷ் on August 4, 2010 at 3:10 AM said...

//
அது தோழிகள் இல்லை. என் “தோழி கள்” என்று எப்படி புரியவைப்பது அவளுக்கு
//
பாஸ் : எங்கயோ போயிட்டீங்க...

Kafil on August 4, 2010 at 3:26 AM said...

ச்சே கொஞ்சம் நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தா கூட பொழைக்க வச்சுருக்கலாம்...
இனிமேல் ஒன்னும் பண்ண முடியாது முத்தி போச்சு,!!!! கார்கி என்ற கலைஞனின் இதயத்தை மொக்கை என்னும் பேரின்பத்தில் இருந்து, காதல் என்னும் சிற்றின்பத்தை நோக்கி செல்ல வைத்த தோழியை வன்மையாக கண்டிக்கிறோம்- இவண் மொக்கை கார்கி ரசிகர் மன்றம் - பெங்களூரு கிளை

Anonymous said...

ஆதிக்கு பொறாமை. விட்டுத்தள்ளுங்க :)

Balaji saravana on August 4, 2010 at 7:07 AM said...

//“உன் பிரிவில் உன்னிடத்தில தான் பேச முடியவில்லை. ஆனால் அனைவரிடமும் உன்னைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை”//

சகா பின்றிங்க!

//”காலைல அவன் உதடு, மதியம் அவன் கன்னம்”//

ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்...
அனைத்தும் அருமை கார்க்கி!

மகேஷ் : ரசிகன் on August 4, 2010 at 7:59 AM said...

பந்தாவா இருக்கு!

நாய்க்குட்டி மனசு on August 4, 2010 at 8:14 AM said...

“உன் பிரிவில் உன்னிடத்தில தான் பேச முடியவில்லை. ஆனால் அனைவரிடமும் உன்னைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை” //

மிக அழகான உண்மையான வரிகள்
கற்பனைக் காதல் தான் கவிதையை உற்பவிக்கும் என்று ஆதிக்கு தெரியல. உங்களுக்கு தெரிந்திருக்கு

R Gopi on August 4, 2010 at 8:20 AM said...

//கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் ”கள்ள” அழகிற்கு என்ன செய்வாள்? //

மூன்று மடங்கு அபராதத்துடன் வட்டியும் கட்டுவாள். ​​கொடுத்து ​வைத்தவர் நீங்கள்.

ஆர் ​கோபி

தராசு on August 4, 2010 at 8:58 AM said...

அந்த சன்ரைஸ் மேட்டரு கலக்கல்பா!!!!

ஷஹி on August 4, 2010 at 9:30 AM said...

yaar antha thoazi?....

vanila on August 4, 2010 at 9:31 AM said...

கள் கல் ளக்கள் லக்கல் கள்ளக்கள் கலக்கல் ..

கார்க்கி on August 4, 2010 at 9:59 AM said...

@ஆதியண்ணே,
ஏன் இந்த சாபம்?????? நன்றி

@சுசி,
தலைலதான் போடுவாங்க.

@முத்துக்குமரன்,
அபப்டி இல்ல சகா. தோழி பக்கதுல இருக்கும்போது மூளை வேலை செய்யுமா?

@லோகன்,
ஒன்லி பால் சகா. பீரடிக்க 18 வயசு ஆயிருக்கனுமாம் :(

@வழிப்போக்கன்,
எங்கயும் இல்ல சகா. தோழி மனசுக்குள்ளதான் இருக்கேன் ஹிஹி

@கஃபில்,
ஆவ்வ்வ்.. இருங்க அந்த பார்சலை எடுக்க வேணாம்ன்னு சொல்லிடறேன் :)

@சின்ன அம்மிணி,
ஹிஹிஹி.நன்றி

@பாலாஜி,
நன்றி சகா

@ரசிகன்,
அய். புது பின்னூட்டமா இருக்கே

@நாய்க்குட்டி,
அபப்டி எல்லாம் இல்லங்கோவ்...

@கோபி,
அதான் கணக்குல வரலையே. எப்படி கட்டுவாள்? முதல் வேலை மறைத்து வைத்திருக்கும் பணத்தை ”அதிகாரியிடம்” காட்ட வேண்டும். ஹிஹிஹி

@தராசு,
நன்றிங்க

@ஷஹி,
அதுதாங்க சர்ப்ரைஸ். நன்றி

@வாநிலா,
ன்றிந

புன்னகை on August 4, 2010 at 10:37 AM said...

அனைத்தும் அழகு! நான் ஆதியின் பின்னூட்டத்தைச் சொன்னேன்! :-)

வெற்றி on August 4, 2010 at 11:41 AM said...

கலக்கல் சகா..இந்த தொகுப்புகளை புக்காக போடலாம் ..அனைத்துமே அருமை :)

நர்சிம் on August 4, 2010 at 12:26 PM said...

கள், கலக்கல்.

விக்னேஷ்வரி on August 4, 2010 at 2:41 PM said...

வர வர தோழியோட மொக்கை தாங்க முடியல சகா. சீக்கிரமே இதுக்கு எதிரா தோழன் மொக்கைஸ் ஸாரி அப்டேட்ஸ் ஆரம்பிக்கறேன்.

ஆதி’ஸ் கமெண்ட்ஸ் - ஹாஹாஹா... நல்ல அனுபவசாலி.

vanila on August 4, 2010 at 3:03 PM said...

@ வயதாகிவிட்டதோ.?

Yesss ...

@ உனக்கு தர்பூஸ் மாதிரி ஒரு பெண்தான் வரப்போகிறாள் போ.!

Aamen..

யுவகிருஷ்ணா on August 4, 2010 at 3:08 PM said...

//கள், கலக்கல்.//

நர்சிம் டச் :-)

ப.செல்வக்குமார் on August 4, 2010 at 3:29 PM said...

எல்லாமே அருமை ..
ஆதி சார் .. ஹா ஹா ஹா ..!!!

தெய்வசுகந்தி on August 4, 2010 at 6:44 PM said...

அருமைங்க கார்க்கி!!!!!

பரிசல்காரன் on August 4, 2010 at 11:00 PM said...

உன் தோழி(கள்) கொடுத்து வைத்தவர்கள்.இதுக்கு-

’தோழிகள் கொடுத்து வைத்தவர்கள் என்கிறார் என் நண்பர். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். நான் தான் கொடுத்து, வைக்கவில்லை. கொடுத்ததை உடனே திருப்பி வாங்கிக் கொண்டு விடுவேன்’ ன்னு அடுத்த அப்டேட் எழுதிடாத!

கார்க்கி on August 4, 2010 at 11:41 PM said...

அனைவருக்கும் நன்றி

பரிசல், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

vinu on August 5, 2010 at 1:32 PM said...

as usual
cuteeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

இரசிகை on August 5, 2010 at 3:32 PM said...

last one remba nallaayirunthuchchu....

Sanjay krishna on August 31, 2010 at 7:13 PM said...

“உன் பிரிவில் உன்னிடத்தில தான் பேச முடியவில்லை. ஆனால் அனைவரிடமும் உன்னைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை” இரு கண்கள் போதாது இந்த பதிவை படிக்க...!

parthi on October 28, 2011 at 1:19 PM said...

// என் லேப்டாப்பும் உன்னை மாதிரியே இருக்கு. சீக்கிரம் சூடாகுது” என்றாள் தோழி . மடிகணிணி என்றால் மடித்து வைப்பது என்ற அர்த்தமும் உண்டு. நீ மடி மீது வைத்தால் அப்படித்தான் ஆகுமென்று சொல்லி வந்தேன்.//
பாஸ் சூப்பர் ஸ்டோரி ..

 

all rights reserved to www.karkibava.com