Aug 2, 2010

எந்திரன் இ(ச்)சை

எந்திரன். அற்புத விளக்கு நம் கையில் கிடைத்துவிட்டது. பூதம் வெளிவர வேண்டியதுதான் பாக்கி. சில மாதங்கள் முன்பு இணையத்தில சில புகைப்படங்கள் வெளியானபோது ஏற்பட்ட சத்தம் அடங்கவே வெகு நாளானது. ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு ஆரூடம் சொல்ல ஆரம்பித்தார்கள் அப்போது.இப்போது இசை வெளியாகிவிட்டது. ரோபோ என்று சொன்னபின் வழக்கமான ரஜினி பாணி அல்லது ஷங்கர் பாணி பாடல்கள் மட்டும் இருக்கப்போவதில்லை என்பது யாவரும் அறிந்ததே. என் கசின் ரொம்ப நாட்களாக கேட்டுக் கொண்டேயிருக்கிறான் “ரோபோ மாதிரி படத்துல கூட பாட்டு வேணுமா?”. இதுவரை புன்னகையையே பதிலாக சொல்லிக் கொண்டிருந்த நான் நேற்று சொல்லிவிட்டேன் “புதிய மனிதா.. பூமிக்கு வா.. பாட்டு கேளுடா”.

image    எஸ்.பி.பியின் பாடலோடு தொடங்குகிறது ஆல்பம். அதுவே வெற்றிக்கு அடையாளம். பாபாவின் முதல் பாடலை பாடியவர்  ஷங்கர் மஹாதேவன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாட்டுக்கு வருவோம். ரஜினி ரோபோவை உருவாக்குக்கிறார். பேக்கிரவுண்டில் இந்தப் பாடல் ஒலிக்கிறது. ரோபோவின் பெருமைகளை பாடலில் சொல்கிறார்கள். இதுதான் சிச்சுவேஷன். வைரமுத்து மொழியையும் அறிவியலையும் காதல் செய்யவிடுகிறார். எஃகை வார்த்து / சிலிக்கான் சேர்த்து / வயரூட்டி உயிரூட்டி / ஹார்டிஸ்க்கில் நினைவூட்டி என்று தொடங்குகிறது பாடல். பொறுமையான வேகத்தில் ரகுமானின் குரலிலும், அவரது வாரிசு கதிஜாவின் குரலிலும் பயணிக்கும் பாடல் ”எந்திரா..என் எந்திரா” என்று எஸ்.பி.பியில் குரல் தொடங்கும் இடத்தில் ரப்பர் பந்தை போல் எகிறுகிறது. ரோபோ உருவாகிவிட்டான் திரையில் என்பதை இங்கே உணர முடிகிறது. இன்னும் அதே ஆட்டோக்காரன் குரல். வேண்டுமென்றால் கொஞ்சம் இளமையாகியிருக்கிறது எனலாம். பாலுவின் குரலில் இருக்கும் பெப் பாடலை இன்னும் அழகாக்கியிருக்கிறது. நல்ல surround system ல் கேட்கும்போது பல புதிய ஒலிகளை கேட்க முடிகிறது. இது வேறு மாதிரியான, புதுமையான படம் என்கிற போது இசையும் அப்படித்தானே இருக்க வேண்டும்?அதே கிடாரிலும், அதே ட்ரம்பெட்டிலும் வேறு நோட்ஸ் எழுதி வாசிக்க எதற்கு ரகுமான் என்று யாரும் சொல்லிவிட முடியாத அளவிற்கு உழைத்திருக்கிறார்கள். இது படத்தின் முதல் பாடலா என்று தெரியாது. ஆனால் ரோபோ உருவாவது இந்தப் பாடலில்தான்.தொகுப்பில் எனது இப்போதைய ஃபேவரிட். “புதிய மனிதா..பூமிக்கு வா..”

image    ரகுமானின் பாடல்கள் எப்போதும் ஸ்லோ பாய்சன் என்பது இசை கேட்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படியிருக்க அவர் பாடல்களை சுமாரான ஸ்பீக்கரில், கம்ப்ரஸ் செய்து  எம்.பி3 வடிவத்தில் தரவிறக்கம் செய்துவிட்டு, ஒரே ஒரு முறை கேட்டுவிட்டு ரகுமான அவ்ளோதாம்ப்பா என்று சொல்பவர்களை என்ன செய்வது? அதுவும் ஆரம்பமே கிட்டார் போன்ற ஒரு கருவியென்றால் சுத்தம். ஹெட்ஃபோனில் கேட்டால்தான் கிடாரின் அழகு புரியும்.  அதுவும் பொதுவாக ரகுமானின் மெட்டுகள், பாடலோடு நாமும் சேர்ந்து “செண்பகமே செண்பகமே” என்று பாடுவது போல் இருக்காது. 1/4, 2/4 என்ற வழக்கமான நோட்சிலும் இருந்து தொலையாது. அந்த சூட்சமம் புரிந்து அப்பாடல் நம்முள் இறங்க சில காலம் தேவைப்படும். அப்படித்தான் “காதல் அணுக்கள்” பாடலும். இந்தப் பாடல் வழக்காமன ஷங்கர் பாணி மெலடியாக தெரிந்தாலும் வார்த்தைகள் வித்தியாசப்படுகின்றன. ”நீ நியூட்டன் நியூட்டனின் விதியா/ உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?” என்பதிலே இது ஒரு விஞ்ஞானியின் காதல் என்று சொல்கிறார் கவிப்பேரரசு. வழக்கமாக சரணம் முடிந்தவுடன் மீண்டும் பல்லவி. பின் interlude . இப்படித்தான் கம்போஸ் செய்வார்கள். இதில் இரண்டாம் சரணம் முடிந்தவுடன் ஒரு அட்டகாசமான interlude.பின் பல்லவி வருகிறது. கொடியிலே மல்லிகைப்பூ பாடலிலே இதை நம்ம ராஜா முயற்சி செய்தார். பின் டும்டும்டும்மில் கார்த்திக்ராஜாவும் செய்ததாக நினைவு. இப்பாடலில் அந்த interlude கேட்கும்போது நாம் கேட்பது எந்திரன் பாட்டல்லவா என்று நினைவு திரும்புகிறது. ஓம் சிவ ஓம், ஹொசன்னா என்று டாப் கியரில் போகும் விஜய் பிரகாஷின் இசைப்பயணத்தில் இன்னொரு மைல்கல். ஆப்பிரிக்காவில் மனித காலடியே படாத இடத்தில் படம் பிடித்திருக்கிறார்களாம்.

image     பொதுவாகவே ஷங்கர் பாடல்களில் கிராஃபிக்ஸ் தூக்கலாக இருக்கும். அப்படியிருக்க கிராஃபிக்ஸ் உருவான ரோபோவுக்கு தனியே பாடல் இல்லாமலா இருக்கும்? அரிமா அரிமா என்ற பாடல் ரோபோரஜினி ஐஷ்வர்யா மீது மோகம் கொண்டு பாடுவதாக  அமைத்திருக்கிறார்.  உலகையே வென்றுவிட்ட அரசன் ஒருவன் நாடு திரும்பும்போது அவனை வரவேற்க எத்தகைய அதிரடி வரவேற்பு செய்திருப்பார்கள்?அப்படியொரு அதிரடி இசையோடு தொடங்குகிறது பாடல். இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் / இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் / அட அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்”. தொடக்க இசைக்கு எந்த வித குறைவுமின்றி வார்த்தைகளால் வானுயரத்திற்கு தூக்குகிறார் பாடலாசிரியர். பில்டப் ஏறுகிறது நமக்கு. அதைத் தொடர்ந்து கர்ஜிக்கும் குரலோடு ”அரிமா அரிமா.. நானோ ஆயிரம் அரிமா” என வருகிறார் ஹரிஹரன். கண்மூடிக் கேட்கும் போது காட்சிகளாக விரிகிறது. ”ஷங்கர் எப்படி இதை காட்சிப்படுத்தி இருப்பார்? சூப்பர்ஸ்டார் எப்படியிருப்பார்?” வேறு வழியில்லை. காத்திருக்கத்தான் வேண்டும். சாதனா சர்கம்மின் குரலில் ஏதோ குறைகிறது. ஒருவேளை ரோபோவின் தொந்தரவால் பாடுபடும் ஐஷுவின் குரல் அப்படி இருக்க வேண்டுமென இயக்குனர் எதிர்பார்த்தாரோ என்னவோ? பென்னி தயாளும், நரேஷ் அய்யரும் கோரஸாம். பிரம்மாண்ட பாடலாக அமையும்.

image

முணுமுணுத்துக் கொண்டிருக்கு இன்னொரு பாடல் “பூம் பூம் ரோபோடா..ஸூம் ஸூம் ரோபோடா”. நம்ம ரோபோ ரஜினி மக்கள் மனசுல இடம் பிடிக்கிறார். இந்தியன் தாத்தா டிரெஸ்ஸ எல்லோரும் போட்டுட்டு சுத்துவாங்களே!!அப்படி ஒரு சிச்சுவேஷன்ல வர்ற பாட்டென்று நினைக்கிறேன். பாடலை எழுதியவர் கார்க்கி. அட மதன் கார்க்கிங்க. “ஆட்டோ ஆட்டோக்காரா.. ஏ ஆட்டோமேட்டிக்காரா.. கூட்டம் கூட்டம் பாரு. உன் ஆட்டோகிராஃபுக்கா” என்றும் “பட்டித்தொட்டி எல்லாம் நீ பட்டுக்குட்டியோ” என்றும் வருவதைப் பார்த்தால் மேலே சொன்ன சிச்சுவேஷன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. ஆனால் “திருமண திருநாள் தெரியும் முன்னே நீ எங்கள் பிள்ளையோ” என்ற வரியும் வருகிறது இது ஐஷ்வர்யா பாடுவது போல் தெரிகிறது. எது எப்படியோ இன்னொரு அடிக்ட் செய்ய வைக்கும் பாடல். யோகி பியின் ராப்பும் தூள் பரத்துகிறது.

image   பாடல்காட்சிகளினால் ஷங்கருக்கு இன்னொரு பயனும் இருக்கிறது. அவரின் அடங்காத கற்பனை குதிரை தரும் அனைத்தையும் கதைக்குள் நுழைப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால் பாடல்காட்சிகளில் எல்லாமே சாத்தியம். அதை தனித்தொகுப்பாக போடுமளவிற்கு ஆல்பங்களுக்கு இங்கே ஆதரவில்லை. இந்தப் பாடலும் அப்படி ஏதோ அவர் மனதில் தோன்றிய ஒன்றின் காரணமாக இருக்கலாம்.ரோபோ ஸ்டைல் பாடல்களாகவே எல்லாம் இருப்பதால் சற்றே வித்தியாசப்படுத்த ரஜினையையும் ஐஷுவையும் காதல் பாஸ்போர்ட்டில், முத்த விசாவோடு நாடு கடத்துகிறார். 2 வருடம் முன்பு வெறும் பாடலாசிரியராக இருந்த பா.விஜய் எழுதியிருக்கிறார். “ஏவாளோட தங்கச்சியே எங்கூடத்தான் இருக்கா/ ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா” என்ற வரியை தவிர வேறெதுவும் கவரவில்லை என்னை. நெட்டில் வெளியான படங்கள் இந்த பாடல் காட்சிதான்.

image   இதை தவிர சிட்டி ஷோ கேஸ் என்ற தீம் மியூசிக்கும், இரும்பிலே ஒரு இதயமென்ற பாடலும் இருக்கிறது. மற்ற பாடல்களோடு ஒப்பிடும்போது அவை என்னை அதிகம் கவரவில்லை. எனக்கு இப்போது இருப்பது இரண்டு டவுட்.  ரோபோ ஓக்கே. பாட்டு ஓக்கே. ஸ்டில்ஸ் ஓக்கே. ஆனா இந்த ரோபோ எழுந்து வந்து லஞ்சம் வாங்குபவரையும், கள்ளப்பணம் வைத்திருப்பவரையும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவரையும், அலட்சியம் செய்பவரையும் துவம்சம் செய்ய நினைத்தால்???? இரண்டாவது சந்தேகம். படம் போராக சென்றால், எந்திரா எந்திரா என்று எஸ்.பி.பி பாடியதை வைத்து ரசிகர்களும் “எந்திரா. ..எந்திர்ரா” என்று சொல்லிவிட்டால்?

அடிக்க வராதிங்கப்பா. இது மாதிரி பாடலையோ, படத்தையோ பற்றி எழுதினால் முடிவில் அதன் நெகட்டிவ் விஷயங்கள் குறித்தும் எழுத வேண்டுமாம். எந்திரனின் இசையில் அப்படி எதுவும் எனக்கு தெரியாததால் சந்தேகம் என்ற பெயரில் சொல்லிவிட்டேன்.

Totally, Enthiran music

ROCKSSSSS..

பி.கு:

1) ஆகஸ்ட் 8ஆம் தேதி YMCA மைதானத்தில் இசை வெளியீட்டு விழாவை மீண்டும் நடத்த சன் பிக்சர்ஸ் திட்டமிட்டிருக்கிறார்கள்.

2) படத்தில் ரோபோவின் பெயர் சிட்டி என நினைக்கிறேன்.

30 கருத்துக்குத்து:

Kafil on August 2, 2010 at 12:36 AM said...

naanthaan mothalla

வெற்றி on August 2, 2010 at 12:54 AM said...

என்னை அதிகம் கவர்ந்தது 'இரும்பிலே ஓர் இதயம்' தான் சகா..

படத்தில் ரோபோவின் பெயர்தான் 'சிட்டி' என நினைக்கிறேன்..

ஆல்பத்தில் எல்லா பாடல்களும் நன்றாக உள்ளன..

பாடல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது..

டிரைலர் பாத்தாச்சா?

ஷங்கர் on August 2, 2010 at 2:03 AM said...

////படத்தில் ஐஷுவின் பெயர் சிட்டி என நினைக்கிறேன்./////

பாஸ் ,ரோபோ ரஜினி பேர் தான் சிட்டி ..,ஐஷுவின் பெயர் சனா ....,

ரோபோ ரஜினி trailerla சொல்லுவாரு ,''என்னக்கு சனா வேணும் ,got it '''....

அப்புறம்

காதல் அணுக்கள் பாடலில்
சனா ! சனா !
ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா ?

சுசி on August 2, 2010 at 2:59 AM said...

அழகான விமர்சனம்.

நிறைய்ய வித்தியாசம் இருக்கு உங்க எழுத்தில..

வர வர கலக்கல் கூடிக்கிட்டே போது..

கடைசில மொக்கைசாமி வந்துட்டாரே :))

Balaji saravana on August 2, 2010 at 6:19 AM said...

வழக்கம்போல கலக்கல் விமர்சனம் சகா..
படம் பட்டயக் கிளப்பும், நோ டவுட்!

கார்க்கி on August 2, 2010 at 7:55 AM said...

kafil, நீங்க முதலையா பாஸ்ஸ்?

வெற்றி, அப்படியா? அட, ரோபோ பெயர்தான் சிட்டின்னு சொல்ல வந்தேன்/ ஐஷு இப்படி ஆக்ரமிச்சிட்டாளே!!!

ஷ்ங்கர், டெக்னிக்கல் ஃபால்ட். சிட்டி சிட்டி ரோபோனுதான் பாடுறாங்களே..

நன்றி சுசி..

நன்றி பாலாஜி

Mohamed Faaique on August 2, 2010 at 8:49 AM said...

என்னை அதிகம் கவர்ந்தது 'இரும்பிலே ஓர் இதயம்' தான் சகா..

Bala on August 2, 2010 at 9:16 AM said...

இரும்பிலே ஒரு இருதயம் பாடல் மரங்கொத்தியை நினைவு படுத்தினாலும் தாளம் போடா வைக்கிறது. அதிலும் ரகுமானின் குரல் மின்சாரம் பாய்ச்சுகிறது. என்னதான் இளம் தலைமுறை வந்தாலும் தாங்கள்தான் இன்னும் அரிமா என்று எஸ்பிபியும் ஹரிஹரனும் நிருபித்திருக்கிறார்கள்.

ஜில்தண்ணி - யோகேஷ் on August 2, 2010 at 9:30 AM said...

எனக்கு ரொம்ப பிடித்தது புதிய மனிதா பூமிக்கு வா தான்,பாலு சாரின் கம்பீர குரலுக்கே சரியாப்போச்சு

சிட்டி பார்டி பாடல் - பார்பி பாடல் போல் இருக்கிறது

மீதம் எல்லாம் பக்கா :)

"ராஜா" on August 2, 2010 at 10:03 AM said...

ஐயையோ சகா நீங்க பாராட்டிடீங்களே???? அப்போ இதுவும் புட்டு இல்ல ஹிட்டுதானா?

நான் இன்னும் கேக்கல... ரகுமானின் பாடல்கள் எப்பொழுதும் கேக்க கேக்கதான் மனசை அள்ளும்.... ஆனா எந்திரன் எல்லாருமே கேட்டவுடனே புடிச்சிருக்குன்னு சொல்லுறாங்க .. அதான் பயமா இருக்கு ... இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ஒருத்தர் போதாதா?... பாட்டு எப்படி இருந்தாலும் மெகா ஹிட் ஆக...

"ராஜா" on August 2, 2010 at 10:07 AM said...

உங்க விமர்சனம் சூப்பர் ... நெறைய புது மேட்டர் சொல்லிருக்கீங்க ....

M.G.ரவிக்குமார்™..., on August 2, 2010 at 10:44 AM said...

ரெண்டு நாளா இந்த விமர்சனம் இன்னும் வரல்லயேன்னு காத்துக்கிட்டே இருந்தேன்!.....நெம்ப டாங்க்ஸ் !....

பரிசல்காரன் on August 2, 2010 at 12:52 PM said...

மறுபடி ஒருமுறை இசை விமர்சனம் என்றால் கார்க்கிதான் என்று நிரூபித்து விட்டாய் சகா.

நீ சொல்வது போல, கேட்கக் கேட்க புதிய மனிதா என் லிஸ்டில் முதலிடத்தைத் தொடுகிறது...

Balavasakan on August 2, 2010 at 1:00 PM said...

சகா ! ரொம்ப சரி சகா புதிய மனிதா எஸ்பிபி வந்த பிறகு பிச்சி கொண்டு போகிறது ஹைபிட்சிலும் லோபிட்ச்சிலும் மாறி மாறி பாடுவது சூப்பர்..ஆனால் நீங்கள் எனது பேவரைட் கிளிமாஞ்சாரோ பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமைக்கு ஒரு தனிபிளைட் புடிச்சி வந்து காதை திருகப்போறேன்... ஏன் சகா இரும்பில் ஒரு இதயம் கூட நல்லாத்தான் இருக்கு லிரிக்ஸ் கூட நல்லாருக்கே...

"எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா
இரத்தம் இல்லாகாதல் என்று ஒத்தி போக சொல்வாயா"

Balavasakan on August 2, 2010 at 1:10 PM said...

ஒண்ணு மறந்திட்டேன் சகா...

ஆகா..! ஆகா..! ஆகா..!ஆகா..!

விக்னேஷ்வரி on August 2, 2010 at 4:29 PM said...

இன்னும் அதே ஆட்டோக்காரன் குரல். வேண்டுமென்றால் கொஞ்சம் இளைமையாகியிருக்கிறது எனலாம். //
அதே தான் கார்க்கி.

இந்த முறை உங்க இசை விமர்சனத்துல ஏதோ ஒண்ணு குறையுது. ஒரு வேளை இசை நுணுக்கங்கள் நல்லா சொல்லி, வரிகளைக் குறைச்சுட்டீங்களோ...

பரிதி நிலவன் on August 2, 2010 at 5:27 PM said...

S.P.B ன் பாடல் பட்டையை கிளப்புகிறது.
வயதாக வயதாக குரல் இளமையாகி நம்மை வியக்க வைக்கிறது.

SenthilMohan on August 2, 2010 at 6:01 PM said...

//*எஸ்.பி.பியின் பாடலோடு தொடங்குகிறது ஆல்பம். அதுவே வெற்றிக்கு அடையாளம். **/
ஒவ்வொரு Super* ரசிகரின் நினைப்பும் இது தான். இது Opening song-காக இருக்க வாய்ப்பு குறைவு. இருப்பினும் தலைவர் பற்றி மற்றவர்கள் சொல்லி முடிந்ததும் தலைவர் தனது ஆராய்ச்சிக் கூடத்தில் இருப்பதைக் காட்டும் போது Background-ல் இப்பாடலின் தொடக்கம் இருக்கும் என்பது எனது கற்பனை. நானே இப்படி யோசித்துவிட்டதால், Shankar நிச்சயம் வேறு விதமாகத் தான் யோசித்திருப்பார்.
//*வைரமுத்து மொழியையும் அறிவியலையும் காதல் செய்யவிடுகிறார்**/ கிளிமஞ்சாரோ பாடல் தவிர அனைத்துப் பாடல்களிலும் அறிவியலும் தமிழும் சேர்ந்து காதல் செய்கின்றன. இல்லையில்லை தந்தையும் மகனும் சேர்ந்து காதல் செய்ய விட்டிருக்கின்றனர்.
//*தொடக்க இசைக்கு எந்த வித குறைவுமின்றி வார்த்தைகளால் வானுயரத்திற்கு தூக்குகிறார் பாடலாசிரியர். பில்டப் ஏறுகிறது நமக்கு**/
Super*-ன் வில்லத்தனம் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். அந்த விதத்துல வில்லத்தனமான Song. Opening scene-னுக்கு நிகரான buildup இந்த பாட்டுக்கு. என்னோட Favorite. First வாட்டி கேட்ட போதே பிடிச்சுப் போச்சு. ஆசையா Caller tune set பண்ணிட்டேன். நாசமாப் போன "இந்த பாடலை உங்கள் tuneனாக்கிட * பட்டனை அமுத்துங்கள்" விளம்பரம் வந்து கடுப்பேற்றுகிறது.
//*ரஜினையையும் ஐஷுவையும் காதல் பாஸ்போர்ட்டில், முத்த விசாவோடு நாடு கடத்துகிறார்**/
ஏதேது... போற போக்கப் பாத்தா நீங்களும் பாட்டெழுதப் போய்டுவீங்க போலிருக்கு.
கிளிமஞ்சாரோ பாடல் ஆல்பத்தின் மற்றவற்றிலிருந்து முற்றும் வேறுபட்டுள்ளது. ஆனால் நிச்சயம் சின்மயிடமிருந்து இப்படி ஒரு பாடலை நான் எதிர்பார்க்கவில்லை. தமிழ் விஞ்ஞானியின் காதல் குத்துப் பாட்டா இது?
இரும்பிலே இருதயம் பாட்டில் எனக்கு பார்பி கேர்ள் voice-சையும், வேறு சில English Album பாடல்களையும் நினைவுபடுத்துகிறது. ஆனாலும் நன்றாக இருக்கிறது. வார்த்தையில் கார்க்கி விளையாடியிருக்கிறார். காதல் அணுக்கள் நிச்சயம் Slow poison தான். இப்பொழுது தான் அதனை முழுமையாகக் கேட்க ஆரம்பித்துள்ளேன்.
//*ஆனா இந்த ரோபோ எழுந்து வந்து லஞ்சம் வாங்குபவரையும், கள்ளப்பணம் வைத்திருப்பவரையும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவரையும், அலட்சியம் செய்பவரையும் துவம்சம் செய்ய நினைத்தால்???? **/
நிச்சயம் இது போல் இருக்காது என்று நம்புகிறேன்.
//*படத்தில் ரோபோவின் பெயர் சிட்டி என நினைக்கிறேன்.**/
நினைக்காதீர்கள் அது Confirmed. ஷங்கர் ஒரு பேட்டியில் சொல்லியிருருந்தார். தலைவரின் பெயர் கூட அரசல் புரசலாகக் கேள்விப்பட்டேன். உண்மையா என்பதைத் திரையில் தான் பார்க்க வேண்டும்.

SenthilMohan on August 2, 2010 at 6:06 PM said...

SenthilMohan on August 2, 2010 at 6:07 PM said...

Kafil on August 2, 2010 at 7:58 PM said...

girrrrrrrrr

யோ வொய்ஸ் (யோகா) on August 2, 2010 at 8:56 PM said...

நல்லா அலசியிருக்கிறீர்கள் சகா, 2 நாளாக பாட்டு கேட்காமலிருக்க முடியவில்லை. தொடர்ந்து கேட்கிறேன்

தர்ஷன் on August 2, 2010 at 10:25 PM said...

கலக்கல் பாடல்கள் சகா
கிளிமாஞ்சாரோ மட்டும் இன்னும் மனதில் ஓட்ட மாட்டேன் என்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன் on August 3, 2010 at 12:02 AM said...

பரிசல் :
மறுபடி ஒருமுறை இசை விமர்சனம் என்றால் கார்க்கிதான் என்று நிரூபித்து விட்டாய் சகா.

நீ சொல்வது போல, கேட்கக் கேட்க புதிய மனிதா என் லிஸ்டில் முதலிடத்தைத் தொடுகிறது..//

யோவ் இப்பதான்யா உங்க பதிவப் படிச்சிட்டு வர்றேன். அதுக்குள்ள லிஸ்ட்ட மாத்திப்போடுறீரே.!

vanila on August 3, 2010 at 6:48 PM said...

தலைவன் = ரஜினிகாந்த் = தலைவன் = ரஜினிகாந்த் = தலைவன் = ரஜினிகாந்த் = தலைவன். அதற்க்கடுத்துன்னு ஒரு பேச்சு வந்தால் தல'....

தமிழ்ப்பறவை on August 3, 2010 at 10:28 PM said...

paatellaam okthaan... aanalum enthiran paeraik kettaale veRukkum padiyaa seythittirukku media :-(

vairamuthu appadi oNNUm siRappaaka ezuthividavillai.. paadal kaettuvittu writer payon ezuthiya 'adaiththaal thappuvaen' padiththaen.. athu nanRaaka irunthathu...

twitterla ithellaam solla ninaichen, officela irunthathaala mudiyala...

கிரி on August 5, 2010 at 3:22 PM said...

கார்க்கி தலைப்பு ;-)

இரசிகை on August 5, 2010 at 3:42 PM said...

SBP......patri yezhuthirunthathu azhgu.

sanjay on September 21, 2010 at 8:38 PM said...

பாடல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது..

all rights reserved to www.karkibava.com