Aug 6, 2010

அப்போ நான் 65 கிலோதான்


 

என்னையும் ஒரு பதிவர் என மதித்து, மிகுந்த மரியாதையுடன், சீரிய முறையில் “தங்களால் எழுத இயலுமா” எனக் கேட்டு இந்தத் தொடரை தொடர அழைத்த புன்னகை அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இனி வரும் காலங்களில் என்னை மீண்டும் அழைக்க வேண்டுமென அதே முறையில் மதித்து, மிகுந்து மரியாதையுடன், சீரிய முறையில் கேட்டுக் கொள்கிறேன். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

கார்க்கி.

இது ஒரு கேள்வியா? உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் பதிவுல என் பேர் கார்க்கி மட்டும்தாங்க. அதான் உண்மையான பேரும். ஆனால் சில பேரு ”??? புகழ் கார்க்கி”ன்னு சமீபமா சொல்லிட்டு இருக்காங்க.ஹிஹிஹி

அமெரிக்காவுல கூப்டாகோ..அடைமொழி தந்தாங்கோ. இந்த டகால்ட்டி எல்லாம் இங்க வேணாம் மவனே

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

அது ஒரு கஷ்ட காலங்க. உங்களுக்குத்தான். அத பத்தி எல்லாம் மறுபடியும் சொல்லி உங்கள இன்னும் கஷ்டப்படுத்தணுமா? விடுங்க

நீ ஒரு முள்ள மாறி. பதிவுலகம் ஒரு முடிச்சவுக்கி. இவங்க ஒண்னா சேர்ந்தாங்களாம். அதுக்கொரு கதையாம். நாராயணா.. இந்த கொசுத் தொல்லை தாங்கலடா!!

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

கமெண்ட் போட்டேங்க.

ஓ. போட்ட உடனே பிபிசில பேட்டி எடுத்தாங்களா?இல்ல செவ்வாய் கிரகத்துக்கு விருந்தாளியா கூப்டாங்களா? மறுபடியும் சொல்றேன் நீ ஒரு டிரைவர். டிரைவர்ர்ர்ர்ர்ர்

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சரியா போச்சு. நான் எது எழுதினாலும் அது என் சொந்த விஷயம்தானே? நான் என்ன குமுதமா இல்ல பாக்யாவா.. அடுத்த ஆளுடைய விஷயத்த எடுத்து போட்டுக்க? எழுத எந்த விஷயமும் இல்லைன்னா என் சொந்த வாழ்க்கைல நடந்த சில சம்பவங்கள எழுதுவேன். ஆமா நீங்க சொந்த விஷயம்ன்னு எதை கேட்கறீங்க??

இவரு பெரிய சுஜாதா. எழுதுவாராம். டேய் பேனா மூடி தலையா!! இதோட நிறுத்திக்க. அதான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்க எழுதவில்லை சமூகத்தை பழுது பார்க்க எழுதுகிறேன்னு சொல்லணுமா?

பாரு. தம்படி காசு சம்பாதிக்க வழியில்லை. இவரு எழுதி வசந்த மாளிகை கட்டுவாராம். இந்த கழிசடை பசங்க கூடலாம் ஏண்டா என்ன சேர வைக்கிற?

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்ணுதான். அப்புறம் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் வந்தப்ப 48ல இருந்த கணக்க 50 ஆக்கா ரெண்டு புரொஃபைல் நானே க்ரியேட் செஞ்சேன். ஆனா அது அப்படியே இருக்கு.பாஸ்வேர்ட் மறந்து போச்சு. அதுல எதுவும் எழுதல.

எதுக்கு இந்த விளம்பரம்? ஒண்ணையே உன்னால ஒழுங்கா வச்சிக்க முடியல. போய்டு. டேய் இந்த பக்கம் போடா..

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஹிஹிஹி..பிம்பிளாக்கி பிலாப்பி

இவரு பெரிய விஞ்ஞானி. இவர் கண்டுபிடிப்ப பார்த்து நாங்க அசந்துடுவோம். மவனே கடல்ல நண்டு வறுத்து தின்றதோடு நிறுத்திக்க. திமிங்கலத்த மேல எல்லாம் ஆசை வேணாம்

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அப்போ என் புராஜெக்டில் இருந்த ஒரே தமிழ்ப்பெண் ஆனந்தி.  நீ சீக்கிரமே பெரிய பதிவரா வருவேன்னு சொல்லுச்சு. அப்ப என் வெயிட் 65தான் :(((

இதை தஞ்சாவூரு கல்வெட்டுல எழுதி பக்கத்துல உட்கார்ந்துக்க.

10. கடைசியாக --- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இது என்ன சார் கொடுமை? கடைசியாவா? ஏன்? தூக்கா எனக்கு????

உன் இத்து போன மூஞ்சில எத்தனை தடவ் தாண்டா ஆசிட் ஊத்துறது?

பிகு: அதேதாங்க. வெள்ளை எழுத்த படிக்க செலக்ட் ஆல் செய்ங்க. இன்னொரு பதிலும் தெரியும்

28 கருத்துக்குத்து:

புன்னகை on August 6, 2010 at 11:14 AM said...

நன்றிங்கண்ணா!

ரமேஷ் வைத்யா on August 6, 2010 at 11:17 AM said...

hihi

ப.செல்வக்குமார் on August 6, 2010 at 11:21 AM said...

///ஒன்ணுதான். அப்புறம் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் வந்தப்ப 48ல இருந்த கணக்க 50 ஆக்கா ரெண்டு புரொஃபைல் நானே க்ரியேட் செஞ்சேன். ஆனா அது அப்படியே இருக்கு.பாஸ்வேர்ட் மறந்து போச்சு. ///
அட இப்படி கூட பண்ணலாமா ...??

முரளிகுமார் பத்மநாபன் on August 6, 2010 at 11:21 AM said...

ஒ சகா வாட் எ கோ-இன்சிடென்ஸ்..ஹி ஹி... :))

ப.செல்வக்குமார் on August 6, 2010 at 11:22 AM said...

//அப்ப என் வெயிட் 65தான் :(((
இதை தஞ்சாவூரு கல்வெட்டுல எழுதி பக்கத்துல உட்கார்ந்துக்க.

////
எனக்கு வேலை இருக்கு அண்ணா ...!!

புன்னகை on August 6, 2010 at 11:23 AM said...

//என்னையும் ஒரு பதிவர் என மதித்து, மிகுந்த மரியாதையுடன், சீரிய முறையில் “தங்களால் எழுத இயலுமா” எனக் கேட்டு இந்தத் தொடரை தொடர அழைத்த புன்னகை அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இனி வரும் காலங்களில் என்னை மீண்டும் அழைக்க வேண்டுமென அதே முறையில் மதித்து, மிகுந்து மரியாதையுடன், சீரிய முறையில் கேட்டுக் கொள்கிறேன்.//
நக்கலா? ஏதோ பாவம் பாத்து உங்கள தொடர் பதிவுக்கு அழச்சதுக்கு, இப்படி எல்லாம் பேசுனீங்க, அப்புறம் உங்க பேச்சு கா விட்டுடுவேன் :-(

தராசு on August 6, 2010 at 11:26 AM said...

நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் தல.

பரிசல்காரன் on August 6, 2010 at 11:40 AM said...

ரசிச்சேன் சகா.

கார்க்கி on August 6, 2010 at 11:48 AM said...

புன்னகை, ரைட்டுங்க

ரமேஷண்ணா, புன்னகை அழைத்த தொடர்பதிவென்பதால் இந்த சிரிப்பா?

செல்வக்குமார், ஹிஹிஹி

என்ன முரளி? நீங்களும் கமெண்ட் போட்டிங்களா? :))

புன்னகை, அப்பாடா..

தராசண்ணே, உங்க ஃப்ரெண்ட் ஆச்சே!!

பரிசல், நான் என்ன நமீதா ஃபோட்டோவா போட்டு இருக்கேன்? ரசிச்சாராம்!!!

யோ வொய்ஸ் (யோகா) on August 6, 2010 at 12:43 PM said...

பதில்களை விட ஒளிந்திருக்கும் கமெண்டுகள்தான் கலக்கல் சகா..

பாக்யா, குமுதம் மேட்டர் சூப்பர்

ஜ்யோவ்ராம் சுந்தர் on August 6, 2010 at 1:11 PM said...

இந்த select all தேர்வு செய்து மறைந்திருக்கும் எழுத்துகளைப் படிக்க வைத்திருப்பது ரொம்ப நல்லா இருக்கு. இப்படித்தான் இணையத்துல கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளணும்னு நினைப்பேன் (ஆனா எனக்குத் தெரியாது, அதனால செய்யறதில்ல).

இந்த மாதிரி வித்தியாசமா முயற்சி பண்ணுங்க கார்க்கி.

அமுதா கிருஷ்ணா on August 6, 2010 at 1:32 PM said...

select all மேட்டர் மட்டும் சூப்பர்...

விக்னேஷ்வரி on August 6, 2010 at 1:46 PM said...

:)

Karthik on August 6, 2010 at 1:52 PM said...

கறுப்பு பதில்களிலேயே முழு திருப்தி அடைந்து விட்டேன். :))

சுசி on August 6, 2010 at 2:27 PM said...

நன்றி கார்க்கி. கொஞ்சம் மனசு சரியா இல்லை ஆஃபீஸ் வரும்போது..

இப்போ.. நீ இன்னைக்கு சரியா இல்லைன்னு கலீக்ஸ் திட்ற அளவுக்கு சிரிச்சிட்டு இருக்கேன்.

மறுபடி நன்றி :))

பிரபா on August 6, 2010 at 2:30 PM said...

எப்பிடி ஐயா உங்களால மட்டும் இப்பிடியெல்லாம் முடியுது,, யாரையா அங்க எங்களையும் அழைக்க வேணும் சரியா.. இல்லேன்னா !!!
நானாகவே வந்து தொடருவன்... ஹீ ஹீ ஓகே யா?

Nivas on August 6, 2010 at 3:11 PM said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா!!!!!!!!

பத்மநாபன் on August 6, 2010 at 3:21 PM said...

கார்க்கி வெள்ளெழுத்து தொழில் நுட்பம் அருமை. இது தான் வரிக்கு நடுவுல படிக்கிறதா?.

நுட்பம் தெரிஞ்ச சிலர் இப்படி எழுதுகிறார்கள்.தெரியாதவங்க மனசுக்குள்ளேயே வைத்து கொள்கிறார்கள்.

Sureshkumar C on August 6, 2010 at 4:13 PM said...

Attractive answers in awesome writing sprit...(Black & white = Colourful)

நாய்க்குட்டி மனசு on August 6, 2010 at 6:31 PM said...

இப்படி ரெண்டு ரெண்டா எழுதுறது எப்படின்னு எனக்கு தெரியுமே.
ஆனாலும் ரசிக்கும் விதமாய் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி எழுதியதற்கு பாராட்டுக்கள்

அன்பரசன் on August 6, 2010 at 8:52 PM said...

வெள்ளை எழுத்து பதில்கள் சூப்பர்

தமிழ்ப்பறவை on August 6, 2010 at 10:50 PM said...

கவுண்ட மணி ஸ்டைய்ல் கவுண்ட்டர்கள் சூப்பர் சகா...

வழிப்போக்கன் - யோகேஷ் on August 6, 2010 at 11:42 PM said...

Kounter style anwered were too good.........

செந்தழல் ரவி on August 6, 2010 at 11:46 PM said...

ரசிக்கும்படி இருக்கு !!

ஹேமா on August 7, 2010 at 1:39 AM said...

கேட்ட கேள்விக்கு
"டக் டக்" ன்னு பதில்!

Mohamed Faaique on August 7, 2010 at 8:31 AM said...

கார்க்கியின் சரக்கு குறைஞ்சிருக்கே என்று பார்த்தேன். "ஆப்பு வெளங்காது" என்பது இதுதானா?

இரசிகை on August 7, 2010 at 4:25 PM said...

:)

இரசிகை on August 7, 2010 at 4:26 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com