Jul 15, 2010

கிரிக்கெட்.. அன்றும் இன்றும்


 

cricket-ball

வறண்டு கிடக்கும் ஏரியைப் பார்த்து யார் வயிறு எரிந்தாலும் எங்களுக்கு எரிந்ததில்லை. எங்களுக்கு என்றால் எனக்கும் எங்கள் டீமுக்கும், எங்களோடு மோதும் டீமுக்கும், மற்றும் அந்த ஏரியில் கிரிக்கெட் விளையாடும் ஏனைய 37 டீம்களுக்கும் தான். . 92 உலக கோப்பைக்குப் பின்னால் எங்கள் ஊர் ஏரிகளுக்கு பெயர் மாறின. சின்ன ஏரிக்கு அடிலைட். பெரிய ஏரிக்கு சிட்னி. வழியில் கிடக்கும் சின்ன சின்ன திட்டுகளுக்கு மெல்பர்ன் உட்பட இதர பேர்கள். ஏரி கிரிக்கெட்டும், ஏரியா கிரிக்கெடும் களைக் கட்டிய நாட்கள் அவை.

நிஜமாக ஆஸ்திரேலிய செல்ல அவ்வளவு மெனக்கெடத் தேவையில்லை. ஆனால் எங்கள் சிட்னியில் மேட்ச் என்றால் போச்சு. சைக்கிளில்தான் போக வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பும்போது கையில் ஓரிரு நோட்டுகள் அவசியம். ஜாண்ட்டி ரோட்ஸை ஆஸ்தான வீரராக கொண்டவர்கள் என்றால் புதுசாக இல்லாமல், தடியான பேண்ட்டாக இருக்க வேண்டும். ஏரிகளில் சறுக்கினால் பேண்ட்டோடு காலும் கிழிய நேரிடும். உள்ளே ஒரு ரவுண்ட் நெக் டீஷர்ட்டும் மேலே முழுக்கை சட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும். சித்திரை மாச வெயிலுக்கு சரியான டிரஸுடா என்று அக்கா கிண்டலடிப்பாள். ஹிஹிஹி என இளித்துவிட்டு போய்விடுவது நல்ல கிரிக்கெட் வீரனுக்கு அழகு.மைதானத்தை.. மன்னிக்க, சிட்னியை அடைந்தபின் மேல் சட்டையை கசங்காமல் கழட்டி வைத்துவிட்டு விளையாட வேண்டும்.

  பிளந்து கிடக்கும் பூமியில் ஸ்டெம்ப்பை இறக்குவது கடினமில்லை. அதை விழாமல் பாதுகாப்பதுதான் விஷயமே. ஒரே ஒரு ஸ்டெம்ப்பை மட்டும் நட்டு வைத்துவிட்டு எதிரணி வரும்வரை லேக் பிராக்டீஸ  செய்வது மரபு. நாலைந்து பேர் ஆடுவதை வேடிக்கைப் பார்த்து மூன்றாம் உலகப்போருக்கு முன்னோட்டம் போல அமையும் ஒரு சின்ன சண்டையின் முடிவில் பேட் நம்ம கைக்கு வரும். பொடியனை அழைத்து போடுடா என்றால் ஒத்தை ஸ்டெம்ப்பையும் குறிப்பார்த்து வீசிவிடுவான். முதல் பந்திலே நட்ட ஸ்டெம்ப் நாலைந்தடி தள்ளிச் சென்று விழுவதை பார்ப்பது போல் கொடுமை வேறில்லை.  பொடியனுக்கு டீமில் இடம் கிடைத்து விடும். அடுத்து எப்போது நம்ம கைக்கு பேட் வருமென்று பொடியன் கவனிக்க ஆரம்பித்துவிடுவான். அவன் பந்து போட்ட உடன் மூன்றாம் உலகப் போரை நிஜமாகவே நடத்தி பேட்டை வாங்கினால், பந்து வீசுபவன் கூலாக அந்த பொடியனை கூப்பிடுவான். இந்த முறை கோவத்தில் வெளுக்கலாம் என்று மட்டையை சுழட்டினால்… ம்ஹும்..

இந்த களேபரங்களுக்கு இடையே எதிரணியும் வந்துவிடும். நம்பர் போட்ட டீஷர்ட்டை கண்டதும் முதல் நடுக்கம் வரும். வந்தவர்கள் நம்மைப் போல ஓசி காஜுடன் ஆரம்பிக்காமல் சிட்னியை வலம் வருவது, கேட்ச் பிராக்டிஸ் செய்வது என நடுக்கத்தை கூட்டுவார்கள்.  தமிழ் சினிமாவில் வில்லன் குரூப் ஹீரோயினை கதற கதற கற்பழிக்க வேண்டுமென்று துரத்தும் போது ஹீரோவுக்கு செய்தி போகும். அது போல எதிரணி பலமறிந்து யாராவது ஒரு பொடியனை அழைத்து ”மோட்டுக் கடையில ரமேஷண்ணன் இருப்பாரு. அவரையும், செந்திலண்ணாவையும் மேட்ச் இருக்குன்னு கூட்டிட்டு வாடா” என தந்தி பறக்கும். வழக்கம் போல டாஸ் தோத்துவிட்டு எதிரணி கேப்டனிடம் அண்ணன்கள் இன்னும் வரல. பவுலிங் எடுத்துக்கிறீங்களா பாஸ்” என்ற பேச்சுவார்த்தை நடக்கும். பெரும்பாலும் இது போன்ற பேச்சுவார்த்தைகள் நமக்கு சாதகமாக இருக்குமென்பதாலே கேப்டன் பதவி நம்மிடம் தங்கும். இல்லையேல் போச்சு.

பிறந்ததே பீடி பிடிக்க என்பதுதான் செந்திலண்ணாவின் கொள்கை.பாதி தூரம் வந்ததும் பொடியனிடம் ”கடைக்கு திருப்புடா. பீடி வாங்கனும்” என்பார். இதை முதலிலே தெரிந்து பொடியனிடம் காசு கொடுத்தனுப்பவது கேப்டனின்  பொறுப்பு. அண்ணன்கள் வருவதற்குள் இங்கே 10 ஓவர் முடிந்திருக்கும். உண்மையில் 12 ஓவரே முடித்திருக்கலாம்.. ஆனால் இருந்த 8 விக்கெட்டும் அப்பீட் ஆனதால் காத்திருக்கும் படலம் தொடங்கியிருக்கும். எடுத்த 32 ரன்னை 33வது முறையா கூட்டி பாஸ் 34 என்றால் கூலாக “ஓக்கே ஜி. 35ஆ வச்சிக்கோங்க” என்று பந்தால் அடித்தது போதாமல் வார்த்தையால் வெளுப்பான் எதிரணி 10ஆம் நம்பர். அவன் தான் அவங்க விஜய்காந்த்.

பீடியோடு செந்திலும், ரமேஷும் வருவார்கள். இன்னும் அஞ்சு ஓவர் இருக்குண்ணா. 80ரன்னாச்சும் வேண்டுமென்றால் சிரிப்பார். போதுமாடா என்பததன் அர்த்தம். அதுவரை சோர்ந்து போயிருக்கும் எங்க டீமுக்கு உற்சாகம் வரும். செந்திலண்ணாவின் முதல் ஃபோருக்கு சவுண்ட் பறக்கும். உடனே ஃபீல்டிங்கை மாத்துவான் 10ஆம் நம்பர். செந்திலண்ணா பீடியை கீழே போட்டு விட்டு கையை மணலில் தேய்க்கும் போதே ஜிவ்வென ஏறும் நமக்கு. அடுத்த ஓவரில் சிக்சர் லைனில் ஒரு கேட்ச் பிடிப்பார்கள். ரமேஷண்ணாவின் கட் அண்ட் ரைட் பேச்சில் அது சிக்சர் என ஆகிவிடும். அப்படியும் ஸ்கோர் கடைசியில் அம்பத்தி மூணோ நாலோதான் இருக்கும்.

எதிரணி ஹைலைட்ஸை வர்ணிக்க ஏதுமிருக்காது. 7வது ஓவரிலே 42ஐ தொட்டிருப்பார்கள். பீடி கட்டு முடிந்திருக்கும். அல்லது முடித்திருப்பார்கள். இதை சாக்காக வைத்து ஒரே சைக்கிளில் இரண்டு அண்ணாக்களும் கிளம்பிவிடுவார்கள். செந்தில் போட்ட ஓவரை தொடர பாதி பேரும், ரமேஷ் நின்றிருந்த லாங் ஆனுக்கு மீதிப் பேரும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

தோற்ரது என்னவோ கேப்டன் மட்டும்தான் என்பது போல மற்ற அனைவரும் சினிமா கிசுகிசுக்களை சந்தோஷமாக பேசிக் கொண்டு வருவார்கள். நாம் மட்டும் ஆட்டோகிராஃப் சேரனைப் போல சைக்கிளை மெதுவாக சிந்தினையோடு உருட்டிக் கொண்டு போவோம். அந்த சிந்தனை கூட அடுத்த வாரம் யாரோடு மேட்ச் போடலாம் என்பதாகத்தான் இருக்கும்.

________________________________________________________________________________

   இப்படித்தாங்க நானும் இருந்தேன். கிரிக்கெட் என்றால் தூக்கம், சாப்பாடு எதுவும் தேவைப்படாது. ஏற்கனவே ஒரு முறை பதிவர்கள் கிரிக்கெட் அணி தொடங்க நினைத்தோம். வேறு சில காரணங்களால் முடியாமல் போனது. இப்போது லக்கியும் அதிஷாவும் உறுதியாக இருக்கிறார்கள்.  எப்படி திமுக அதிமுக ஒன்றாக இணைவது நடக்காதோ, அது போல இவர்கள் பிரிவதும் சாத்தியமில்லை. எனவே தைரியமாக களத்தில் இறங்க முடிவு செய்தோம். இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தி.நகர் சோமசுந்தரம் மைதானத்தில் முதல் போட்டி. காலை 7 மணிக்கு. யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். வராவிட்டாலும் சின்ன போட்டியாட 8 பேர் இருக்கிறோம். ஆர்வம் இருப்பவர்கள் வாருங்கள். அடுத்த வருட கலைஞர் கோப்பை தான் நம்ம டார்கெட்.

மேலதிக தகவலுக்கு:

லக்கி       : 9841354308

அதிஷா : 9500061607

கார்க்கி : 9789887048

டிஸ்கி : படம் பார்த்து பயம் வேண்டாம். நாம் விளையாடப் போவது டென்னிஸ் பந்தில்தான்

22 கருத்துக்குத்து:

இனியா on July 15, 2010 at 11:53 PM said...

நியூ ஜெர்சியிலிருந்து skype இல் கலந்துக்கொள்ளலாமா ?

இனியா on July 15, 2010 at 11:54 PM said...

நல்ல முயற்சிங்க கார்க்கி!!!

மகேஷ் : ரசிகன் on July 16, 2010 at 12:24 AM said...

கிரிக்கெட்டா? நான் எஸ்கேப்பு

தமிழ்ப்பறவை on July 16, 2010 at 12:50 AM said...

வாழ்த்துக்கள்...

Kafil on July 16, 2010 at 2:03 AM said...

Thala, katta doraikku kattam seriyilla....

Mohan on July 16, 2010 at 9:43 AM said...

அட்வான்ஸ் வாழ்த்துகள்!

பித்தன் on July 16, 2010 at 10:31 AM said...

sagaa naanum redy aanaa gtakil vilaiyaadalaamaa......?

நாதஸ் on July 16, 2010 at 10:43 AM said...

நானும் வரேன்.

pinkyrose on July 16, 2010 at 10:59 AM said...

ஆம என்னை சேர்த்துக்குவீங்களா?

யுவகிருஷ்ணா on July 16, 2010 at 12:30 PM said...

//நாதஸ் said...
நானும் வரேன்.//

பேரே வெவகாரமா இருக்கே தோழர்?

வாழைப்பழம் காமெடி மாதிரி எதுவும் பண்ணிட மாட்டீங்களே?

அதிஷா on July 16, 2010 at 12:38 PM said...

மக்களே கிரவுண்டில் சந்திப்போம்

கண்ணா.. on July 16, 2010 at 12:57 PM said...

அடிச்சு ஆடுங்க தல....

சு.சிவக்குமார். on July 16, 2010 at 1:00 PM said...

all the very best for safe play...

வால்பையன் on July 16, 2010 at 1:39 PM said...

குறுகிய காலத்தில் சொன்னதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை, அடுத்த முறை கொஞ்சம் முன்னாடியே சொல்லவும், நிச்சயம் வருகிறேன்!

விக்னேஷ்வரி on July 16, 2010 at 1:57 PM said...

பதிவு நல்லா இருக்கு. யார் எழுதினது? ;)

விளையாட்டிற்கு வாழ்த்துகள். கவனமாக ஆடுங்கள்.

ப.செல்வக்குமார் on July 16, 2010 at 3:37 PM said...

///படம் பார்த்து பயம் வேண்டாம். நாம் விளையாடப் போவது டென்னிஸ் பந்தில்தான்///
நாங்க புட் பால பார்த்தே பயப்படல ...

Nivas on July 16, 2010 at 6:30 PM said...

கிரிக்கெட் னா!!!!!!!!? தமிழ்ல கூடைபந்துனு சொல்லுவாங்களே அதானே? ஆடுங்க ஆடுங்க.

Karthik on July 17, 2010 at 12:01 AM said...

வாழ்த்துக்கள் தோழர்ஸ்.. :)

பிரதீபா on July 17, 2010 at 3:54 AM said...

நானும் வரலாமா?

ஆதிமூலகிருஷ்ணன் on July 19, 2010 at 10:42 AM said...

முயற்சி வெற்றியடைய அவாழ்த்துகள்.! :-))

A Simple Man on July 19, 2010 at 5:32 PM said...

I am so late.
Did you really play the match?
Reports please.

vignesh on October 18, 2010 at 3:46 PM said...

Bow........!

 

all rights reserved to www.karkibava.com