Jul 28, 2010

ஜோக்கர் ஏழு


 

அப்போது ஏழுமலை தண்ணியடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்தியிருந்தான்.பாலாஜியின் நண்பன் ஒருவனின் பிறந்த நாள் ட்ரீட்டில் மட்டும் அடிப்பதற்கு ஆறுவிடம் அனுமதி வாங்கிக் கொண்டான். இரண்டு ஃபுல் எம்சியும் ஒரு டஜன் பியர்களும் அடிப்பதற்கு வெறும் எட்டு பேர் மட்டுமே இருந்தோம். வரவேண்டியவர்களில் மூவர் வராதது ஏழுவுக்கு அதீத சந்தோஷத்தை கொடுத்தது.

   சைட் டிஷ்களும்,சாப்பிட சப்பாத்திகளும் நிரம்பி வழிந்தன. சியர்ஸ் சொல்லி முதல் சிப் மட்டுமே அடித்திருந்தோம். முதல் சிப்பிலே ஹீரோ ஆட ஆரம்பித்தார். பர்த்டே பேபிக்கு ஏழுமலையின் லீலைகள் தெரியாது. சப்பாத்தியை ஒரு கடி கடித்த பேபி சொன்னார்

"மச்சி சப்பாத்தி சாஃப்ட்டா(soft) இருக்குடா. எங்க வாங்கின?"

"சாப்ட்டா எப்படிடா இருக்கும்? காலியாயிடுமே" என்றான் ஏழு.

"இல்ல. தின்னா(Thin) இருக்குன்னு சொன்னேன்"

"தின்னா மட்டும் எப்படிடா இருக்கும்"?.

ங்கொய்யால உனக்கு சப்பாத்தி கிடையாது

எனக்கு மெஸ்சில் இருந்து கொண்டு வந்த‌ உப்புமாவே போதும்.

சும்மா சொன்னேன்டா. கோச்சிக்காத.

அதுக்கில்லடா. உப்புமா வாரத்துல ஒரு நாள்தான் போடறாங்க. அதான் உப்புமா சாப்பிட்டாவாது என் உடம்பு "உப்பு-மான்னு” பார்க்கிறேன்

(வெறுப்புடன் பாலாஜி பக்கம் திரும்பி சொன்னான்)

உஸ்ஸ்ஸ். போதுமடா சாமி.  எனக்கு தக்காளி ரசம் வேணும் மச்சி.சரக்கடிச்சா அதான் நம்ம ஃபேவரிட்.

(குறுக்கே பாய்ந்த ஏழு சொன்னான்)

எங்க ஹாஸ்டல் மெஸ்ஸுல ரசம் ரொம்ப தண்ணியா இருக்கும் சார்.

ரசம் அப்படித்தாங்க இருக்கும்

அட நீங்க வேற எங்கம்மா நல்லா ரவுண்டா கெட்டியா செய்வாங்க.

என்னது கெட்டியாவா?

ஆமாம் பாஸ். ஆனா அது தக்காளி ரசம் இல்ல. அதிரசம்ன்னு சொல்வோம்.

பாதரசத்தை முகத்தில் கொட்டியது போல் கடுப்பான அவரிடம் மீண்டும் சொன்னான் ஏழு

“இப்ப நமக்கு தேவை அதிரசமோ தக்காளி ரசமோ இல்ல சார். சமரசம் தான். சமாதானமா போயிடுவோம்.

தன் பங்குக்கு ஒரு ரசத்தை சொல்லுவோமென பாலாஜியும் களத்தில் இறங்கினான் “பார்த்து ஏழு. அப்புறம் அவன் விரசமா திட்டிடுவான்”

பழரசம் குடிக்கிறப்ப நவரசமும் வெளிய வரத்தாண்டா செய்யும்.இல்லைன்னா இந்த கருமத்த எதுக்கு குடிக்கனும்?

கடுப்பான பர்த்டே பாய் ஆறு பக்கம் திரும்பி “can i say something?” என்றான். அதற்குள் அடுத்த சிப்பை சுவைத்த ஏழுவுக்கு கோபம் குலுங்கிய பியர் போல பொத்துக் கொண்டு வந்தது.

டேய். யாரை பார்த்து கேணைன்னு சொல்ற?”

என்னடா உளர்ற என்றான் ஆறு

இவன்தானே மச்சி உன்னைப் பார்த்து “கேணை சே சம்திங்க்”னு சொன்னான்

என்ன செய்வது என்று புரியாத ஆறு பர்த்டே பேபியை வெளியே அழைத்து சென்றான். ஏழுவைப் பற்றி விளக்கி சொன்னான். பியருக்கும், தண்ணிக்கும், ஏழுவுக்கும் இடையே இருக்கும் பந்தம் அவருக்கு விளக்கப்பட்டது.உள்ளே  வரும்போது சிரித்துக் கொண்டே வந்தார்கள். ஏழுவைப் பார்த்து பிறந்தநாள் கொயந்த சொல்லுச்சு

“பீர்பால் கூட இப்படித்தான். ஏதாவது காமெடியா சொல்லிட்டே இருப்பார். ஆனா புத்திசாலித்தனமா பேசுவார். எனக்கு இவர புடிச்சு இருக்கு”

அப்படி புத்திசாலித்தனமா ஏதாவது பண்ணான்னா பரவாயில்லையே. இவன் ஒரு ஜோக்கருங்க என்று ஆறு சொன்னவுடன் ஏழுவுக்கு அழுகை அழுகையாக வந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் வேகமாக அறையை விட்டு வெளியேறினான். தடுக்கப் போன பாலாஜியையும் தடுத்து நிறுத்தினான் ஆறு. அரை மணி நேரம் கழித்து கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடனும், கண்ணில் கொஞ்சம் கண்ணீருடனும் வந்தான் ஏழு.

எங்கடா போனா? எதுக்கு அழுவுற என்றேன் நான்.

அதான் சொன்னானே.. பீர்பால் தான் புத்திசாலியாம். அதான் நானும் புத்திசாலி ஆகப் போகிறேன் என்றபடி பிளாஸ்டிக் பையிலிருந்த பால்பாக்கெட்டை எடுத்தவன் சொன்னான்.

“இந்த பீரோட இந்த பாலை மிக்ஸ் பண்ணா பீர்பால். அதை அடிச்சா நானும் புத்திசாலி ஆயிட போறேன்.”

என்ன செய்வதென்று தெரியாமல் கன்னாபின்னாவென சிரித்து வைத்தோம்.

22 கருத்துக்குத்து:

ப்ரியமுடன் வசந்த் on July 29, 2010 at 12:01 AM said...

அதிரசம் , கேனை ரசிக்க முடிஞ்சது

உப்புமா உபயம் பரிசல்...???

சுசி on July 29, 2010 at 12:09 AM said...

// கோபம் குலுங்கிய பியர் போல பொத்துக் கொண்டு வந்தது//

எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது..

நான் என்னமோ கிரிக்கெட் பாலோ, ஃபுட்பாலோ வாங்கி வர போறார்னா பால் பாக்கெட்டா..

வெக்கேஷன் போய் வந்த அலுப்பு தீர சிரிச்சேன்.. :)))))

Bala on July 29, 2010 at 12:29 AM said...

கார்க்கி நீங்க எந்த yearla CPT hostel இருந்தீங்க.

Balaji saravana on July 29, 2010 at 5:58 AM said...

//“இந்த பீரோட இந்த பாலை மிக்ஸ் பண்ணா பீர்பால். அதை அடிச்சா நானும் புத்திசாலி ஆயிட போறேன்.”//

பீர்பாலுக்கு புது விளக்கம்! ஹா.. ஹா.. ஹா..

கலக்கல் கார்க்கி !

மகேஷ் : ரசிகன் on July 29, 2010 at 8:02 AM said...

கேணை மேட்டர்... நைஸ்.

Mohamed Faaique on July 29, 2010 at 8:40 AM said...

Can i say something? இன்று இலக்கிய நயம் பொங்கி வழியுது boss...

தராசு on July 29, 2010 at 8:58 AM said...

கலக்கல்,

ஏழு வாராவாரம் வரமாட்டாரா?????

டம்பி மேவீ on July 29, 2010 at 9:29 AM said...

raittu..raittu :)

கலவை - பொதுவாழ்க்கை / பொது கழிப்பிடம்

கார்க்கி on July 29, 2010 at 10:42 AM said...

வசந்த், உப்புமா மேட்டர 2008 திசம்பரிலே நான் எழுதிட்டேன். இப்ப ரீயூஸ் :))

சுசி, வெகேஷன் போனா அலுப்பா? என்னங்க?

பாலா, 1997 - 2000. நீங்க சிபிடியா?

நன்றி பாலாஜி

மகேஷ், நல்ல வேளை. “கேணை..மேட்டர் நைஸ்ன்னு” சொல்லியிருந்தா நான் கேணையாயிருப்பேன்

நன்றி முஹமது. :)

தராசன்னே,எனக்கும் ஆசைதான். பார்ப்போம்

மேவீ, எதுக்கு இந்த விளம்பரம்?

நர்சிம் on July 29, 2010 at 11:14 AM said...

டக்கர் ஏழு.

vanila on July 29, 2010 at 11:22 AM said...

ஏழேழு ஜன்மத்துக்கும் எழுவ மறக்க முடியாது ...

nivas@12 on July 29, 2010 at 12:20 PM said...

Meals but not Last

விக்னேஷ்வரி on July 29, 2010 at 2:24 PM said...

:)

தர்ஷன் on July 29, 2010 at 4:25 PM said...

ம்ம் வழமை போல சூப்பர்

ப.செல்வக்குமார் on July 29, 2010 at 4:55 PM said...

///அப்படி புத்திசாலித்தனமா ஏதாவது பண்ணான்னா பரவாயில்லையே. இவன் ஒரு ஜோக்கருங்க ///
என்னை மாதிரியா அண்ணா ...!!

கார்க்கி on July 29, 2010 at 5:37 PM said...

நர்சிம், ஹிஹிஹி.வாங்க சகா

வாநிலா, அவ்ளோ கொடுமையாங்க????

நிவாஸ். நிறைய. முதல் பகுதி மட்டுமே மீள்ஸ்

நன்றி விக்கி

நன்றி தர்ஷன்

நன்றி செல்வா. ஏம்ம்ப்பா?

Bala on July 29, 2010 at 10:19 PM said...

இல்ல பாஸ்
நான் ஜீபிடி. நீங்க 2nd year படிக்கும் போது ஆரம்பிச்சாங்க
ஞாபகம் இருக்கா

மதுரை சரவணன் on July 29, 2010 at 10:53 PM said...

பீர் பால் சூப்பர்...

கார்க்கி on July 30, 2010 at 10:26 AM said...

பாலா, ஞாபகம் இருக்கு... புரசைவாக்கத்துல கூட ஒண்ணு இர்க்கு இல்ல?

சரவணன், நன்றி.

பிரதீபா on July 30, 2010 at 7:53 PM said...

மொதல்ல இருந்த துடிப்பான மொக்கை இப்போ ஏழு கிட்ட காணோம்.. வயசாகி போய்டிச்சோ? (Brand Name தக்க வைத்துக்கொள்ள வேண்டும் அமைச்சரே !!)

தமிழ்ப்பறவை on August 3, 2010 at 10:25 PM said...

beerpaal matter super saka

Logan on August 4, 2010 at 2:41 AM said...

ரசம் அதிரசம், பீர் + பால் = பீர்பால் செம காமெடி

 

all rights reserved to www.karkibava.com