Jul 25, 2010

விஷுவல் ட்ரீட்


 

  நாளை மாலை ரெசிடன்சியில் ட்ரீட் தருகிறாளாம். வரச்சொல்கிறாள் தோழி.ஒவ்வொரு முறையும் அவளைப் பார்ப்பதே எனக்கு விஷுவல ட்ரீட் தான் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்வாள் அவள்?

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

”என்னை கல்யாணம் பண்ணிப்பியா” என்றேன் தோழியிடம். ”நான் உன்னை லவ் பண்றதே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கதாண்டா” என்றாள். நான் அவளை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதே காலம் எல்லாம் அவளைக் காதலிக்கத்தான் என்பதை அவளிடம் எப்படி சொல்வது?

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

DSC00488

”எனக்கு உன் புகைப்படங்களில் பிடித்ததே இந்த ஒரு படம் தான். நான் முத்தமிட்ட கன்னத்தை வேறு யாரும் தொட்டுவிட முடியாதாபடி வேலி அமைத்து வைத்திருக்கிறாயே. அதனால்” என்று சிரிக்கிறாள் என் உயிர்வாங்கிப்பிசாசு.

”உம் என்று சொல்.வில்லாய் வளைவேன்.குருவியாய் பறப்பேன். சுறாவாய் கடலில் நீந்துவேன்”என்றேன் தோழியிடம். “ம்ஹூம். எனக்கு இந்த அழகியதமிழ்மகன் போதும்” என்கிறாள்.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

”இப்பலாம் நீ என்கிட்ட மிஸ் யூ ன்னு சொல்றதே இல்லை” - தோழியின் லேட்டஸ்ட் புலம்பல் இது. எப்படித்தான் அவள் பிறந்தநாளன்று நடந்ததை மறந்தாளோ தெரியவில்லை.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

   சாப்பிட்டுக் கொண்டே அலைபேசிய தோழி கேட்டாள் “ என்னை நினைச்சியா செல்லம்? பொறையேறுச்சு.. அதான்”. இதெல்லாம் உண்மையென்றால் நீ எப்பவோ பொறையேறியே செத்திருக்கனும்” என்றேன். “அது தெரியும் எங்களுக்கு. ஏடாகூடமா ஏதாவது நினைச்சியான்னு கேட்டேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பொறையேறியது எனக்கு. கள்ளி.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தோழி சிரிக்கும் போது விழுந்த கன்னக்குழியில் வழக்கம் போல் முத்தமிட்டேன். ”புதுசா எங்க டீமுல கார்த்திக்ன்னு ஒருத்தன் வந்திருக்கான். அவனை கூப்பிடறப்பலாம் கார்க்கின்னு சொல்லி மாட்டிக்கிறேண்டா அம்மு” என்று முத்தம்மறந்து புலம்பினாள் தோழி. அவளிடம் என் புது டீம் மேட் அனிதாவிற்கும் கன்னத்தில் குழி விழுகிறது என்பதை எப்படி சொல்வது?

27 கருத்துக்குத்து:

கார்க்கி on July 26, 2010 at 12:03 AM said...

(3வது அப்டேட்ஸ் தொடர்பா) உனக்கு எங்கடா தாடி இருக்கு? தோழிக்கு கண்ணா தெரியலன்னு சொல்றவங்க ஒரு தடவ உத்த்த்த்த்த்து பாருங்க. எனக்கு தாடி இருக்கு.. இருக்கு இருக்கு

தமிழ்ப்பறவை on July 26, 2010 at 12:07 AM said...

நல்ல அப்டேட்ஸ்...
2வது பிடித்தது.
ஆனாலும் அப்ளாஸ் அள்ளிட்டுப் போறது கடைசி அப்டேட்தான்..

Rajeev on July 26, 2010 at 12:25 AM said...

கார்க்கி, எந்திரன் லே நீங்களுமா??
http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs171.snc4/37907_460393210999_609595999_7046951_932180_n.jpg

ILA(@)இளா on July 26, 2010 at 12:53 AM said...

//ஒரு தடவ உத்த்த்த்த்த்து பாருங்க/இப்படித்தான் உத்த்த்த்துதான் .....விஜய்...

தர்ஷன் on July 26, 2010 at 12:59 AM said...

//(3வது அப்டேட்ஸ் தொடர்பா) உனக்கு எங்கடா தாடி இருக்கு? தோழிக்கு கண்ணா தெரியலன்னு சொல்றவங்க ஒரு தடவ உத்த்த்த்த்த்து பாருங்க. எனக்கு தாடி இருக்கு.. இருக்கு இருக்கு//

ஒ இதுக்கு பேர்தான் தாடியா


//இப்பலாம் நீ என்கிட்ட மிஸ் யூ ன்னு சொல்றதே இல்லை” - தோழியின் லேட்டஸ்ட் புலம்பல் இது. எப்படித்தான் அவள் பிறந்தநாளன்று நடந்ததை மறந்தாளோ தெரியவில்லை.//

அடப்பாவி,
சகா எனக்கு நீங்கள் ஹீரோவா பண்ணுன குறும்படத்தில் அப்பாவித்தனமாய் புலம்பியதெல்லாம் ஞாபகம் வருது

Kafil on July 26, 2010 at 3:14 AM said...

yaar antha anitha--- ithoda 2ndavathu vatti anithava pathi mention panniteenga

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... on July 26, 2010 at 6:12 AM said...

//
அவளிடம் என் புது டீம் மேட் அனிதாவிற்கும் கன்னத்தில் குழி விழுகிறது என்பதை எப்படி சொல்வது?
//
சொன்னா உங்க கன்னத்தில் குழி விழுமே பரவா இல்லியா...

Priya K on July 26, 2010 at 7:15 AM said...

Thozi mela Poramaiya irukku......

மகேஷ் : ரசிகன் on July 26, 2010 at 8:05 AM said...

நீ தூள் பண்ணு.... :)

மகேஷ் : ரசிகன் on July 26, 2010 at 8:05 AM said...

பதிவுகளுக்கெல்லாம் சென்சார் போர்டு இல்லையாப்பா?

நாய்க்குட்டி மனசு on July 26, 2010 at 8:07 AM said...

கார்த்திக்கு உங்களிடம் தோழிக்கு பிடிச்ச ஏதாவது அம்சம் இருக்கானு எதுக்கும் தெரிஞ்சுக்கோங்க . alert ஆ இருந்துக்கனும் தம்பி

பித்தன் on July 26, 2010 at 10:02 AM said...

இப்பவே கண்ணக் கட்டுதே.....!

கார்க்கி on July 26, 2010 at 10:27 AM said...

நன்றி பறவை..

ராஜீவண்ணே, ஏன் இந்த மர்டர்வெறி?

இளா, பீ கேர்ஃபுல்

தர்ஷன், அது போன வாரம். நான் சொல்றது இந்த வாரம் :)

கஃபில், நிறைய பேர அதை விட அதிகமா சொல்லியிருக்கேன். உங்களுக்கு அனிதா மட்டும்தான் ஞாபகம் இருக்குன்னா சம்திங் இருக்கு போல.. யாருங்க அது?

வழிப்போக்கன், குசும்புங்க உங்களுக்கு

ப்ரியா, ஒய்?ஒய்?ஒய்?

மகேஷ், ஏன்? அபப்டியென்ன நான் தப்பா எழுதிட்டேன்????நீங்களா ஏதாவ்து ஏடாகூடமா அர்த்தம் பண்ணிக்கிட்டா கம்பெனி பொறுப்பேற்காது

நாய்க்குட்டி, யக்கோவ்வ். ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு.. ஆவ்வ்

பித்தன், பேர மாத்துங்க. சரியா போயிடும். காஃபி அதிகமா குடிக்காதிங்க :))

புன்னகை on July 26, 2010 at 10:43 AM said...

தோழி பிறந்த நாளன்று அப்படி என்ன நடந்துச்சு???????????

தராசு on July 26, 2010 at 11:07 AM said...

//வில்லாய் வளைவேன்.குருவியாய் பறப்பேன். சுறாவாய் கடலில் நீந்துவேன்// உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.....

ப.செல்வக்குமார் on July 26, 2010 at 11:44 AM said...

//அவளிடம் என் புது டீம் மேட் அனிதாவிற்கும் கன்னத்தில் குழி விழுகிறது என்பதை எப்படி சொல்வது?///
அப்புறம் அடி விழும் ,,,!!

ர‌கு on July 26, 2010 at 12:59 PM said...

//வில்லாய் வளைவேன்.குருவியாய் பறப்பேன். சுறாவாய் கடலில் நீந்துவேன்//

தோழி அப்டேட்ஸிலேயுமா???? ஸ்ஸ்ஸ்ஸ்....

ஜில்தண்ணி - யோகேஷ் on July 26, 2010 at 1:15 PM said...

எல்லாமே செம செம

உங்க அப்டேட்சை படித்து படித்து நானும் அப்டேட் ஆகிட்டேன்

சுசி on July 26, 2010 at 5:18 PM said...

// உத்த்த்த்த்த்து // பாக்க வச்சு உங்க தோழி கிட்ட குத்த்த்த்த்த்த்து வாங்க வைக்கிற எண்ணமா??

//ஏன் இந்த மர்டர்வெறி?//

Sureshkumar C on July 26, 2010 at 5:55 PM said...

நல்லாருக்குன்னு ஒரு வார்த்தையில சொல்லிட்டு போக மனசு இல்ல கார்க்கி... ஆனா நல்லா இருக்குறத நல்லாருக்குன்னு சொல்றதத் தவிர வேற எப்படி சொல்ல?

உண்மையச் சொல்லிடுறேன் கார்க்கி... உங்களை நெனச்சா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு...

இவ்ளோ சரக்கு இருக்குற உங்க மைன்ட் கோடௌன்-ஐ எப்படி மெயின்டெயின் பண்றீங்க? எங்கள மாதிரி புதுப்பசங்களுக்கு கொஞ்சம் சொல்லிக்குடுங்க பாஸ்...

அத்திரி on July 26, 2010 at 8:46 PM said...

பித்தம் தெளிய சகாவுக்கு ஏதாவது கொடுங்கப்பு

karuthu on July 26, 2010 at 8:50 PM said...

ஸ்..யப்பா....ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

y blood...same blood...

Nivas on July 26, 2010 at 9:28 PM said...

loooooooooooooooti

கயல் on July 26, 2010 at 10:01 PM said...

ஆகா! என்ன இந்த தடவ எல்லாமே கொஞ்சம் அதிகமா இருக்கு? ஏன்?
//
அத்திரி said...
பித்தம் தெளிய சகாவுக்கு ஏதாவது கொடுங்கப்பு
//
ஆமா! ஆமா! சீக்கிரம் யாராவது ஏதாவது செய்யுங்கப்பு!

தாரணி பிரியா on July 26, 2010 at 11:04 PM said...

ரெண்டாவது நல்லா இருக்கு :)

ஜில்தண்ணி - யோகேஷ் on July 26, 2010 at 11:06 PM said...

அண்ணே நானும் தோ(ழி)ழன் அப்டேட் பதிவு ஒன்னு போட்டிருக்கேன் பாருங்க

http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_20.html

கார்க்கி on July 27, 2010 at 9:48 AM said...

அனைவருக்கும் நன்றி

சுரேஷ், ஹிஹிஹி..அப்படியெல்லாம் எதுவும் இல்ல சகா

ஜில்தண்ணி, கும்மு மாமு கும்மு :)

 

all rights reserved to www.karkibava.com