Jul 22, 2010

டீ.ஆரின் புதிய படம் - அதிர்ச்சிகரமான தகவல்கள்


 

மீண்டும் ஒரு முறை தன்னை அழுத்தமாய் நிரூபிக்க காதல் கதைகள் கை கொடுக்காதென்று தெரிந்து அதிரடி மசாலா படங்கள் இயக்குவதென்று முடிவு செய்து சில உச்ச நடிகர்களை சந்திக்கிறார் தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர் (சப்பா.. முடிச்சுட்டேன்).முதலில் சுள்ளான் தனுஷிடம் செல்கிறார்.

டீஆர்: தம்பி தனுஷு உனக்குத்தான் திரையுலகம் புதுசு
எனக்கு பழசு..எப்பவும் உண்டு எனக்கு தனி மவுசு

தனுஷ்: சார்.. கதைய சொல்லுங்க சார்.

டீஆர்: உங்கிட்ட இல்லாதது சதை
எங்கிட்ட இருக்கறது கதை
வில்லனுக்கு விழும் உதை
நீதான் கொடுக்கனும் அதை..

வில்லனுக்கு ஒரு தங்கச்சி
ஆனா அவளோ உன் கட்சி
அவள தூக்கிட்டுபோய் வச்சி
பாட்டு ஒன்னு பாடுற மச்சி..

தனுஷ்: மெலடியா குத்துப் பாட்டா சார்?

டீ.ஆர்: (கையில் சிட்டிகை போட்டுக்கொன்டே பாடத் துவங்குகின்றார்)
உன் தங்கச்சியை கண்டேன்
என் கட்சியில் இழுத்தேன்
அழைத்ததும் வந்துவிட்டாள்
அவளுடன் வருவேன்
வேண்டியதை தருவேன்
ஆப்பை அவளே வைத்திடுவாள்"னு உன் பாட்டையே ரீமிக்ஸ் பண்ணிடுவோம்...

(அதற்குள் கஸ்தூரிராஜா அங்கே வர ஏரியா சூடாகிறது. இது சிம்புவின் சதி என க.ராஜா சொல்ல தனுஷ் உஷாராய் எஸ்கேப்புகிறார்)

அடுத்து அஜித்திடம் செல்கிறார் டீ.ஆர்.

அஜித் : சார்.வாங்க சார். நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும்.

டீ.ஆர் : உன் வயித்துல இருக்கு பாரு தல 12 பேக்
பேசும்போதே வருது ஸ்பெல்லிங் மிஸ்டேக்
வாலி ஆசையெல்லாம் பழைய வரலாறு
உனக்கும் தமிழுக்கும் இருக்கு தகறாரு

அஜித் : என்ன சார் நீங்க. அத்திப்பட்டி தெர்யுமா ஸார். அது ஒரு கர்ப்பு சர்த்திரம். இன்னமும் வய்று எர்யுது ஸார்.

டீஆர் : உடம்பு மேல ஓடு வச்சிருக்கும் ஆமை
என் கதையில் வர்ற ஹீரோ ஒரு ஊமை
இந்தப் படத்துல உனக்கு இல்ல டயலாக்
ஓப்பனிங் ஸீன்லயே நடக்குது வெட்லாக்..

க்ளோஸப்புல காட்டுறோம் மும்தாஜோட செஸ்டு
இதுதான் இந்தக் கதையில வர்ற முதல் ட்விஸ்டு
அதுக்குள்ள‌ இருக்கு ஒரு பர்ஸ்
கதைப்படி அவங்க ஒரு நர்ஸ்

அஜித்: ஸார் அப்டியே ஓப்பனிங் சாங்குக்கு அவங்களையே ஆடிட சொல்லுங்க. நான் ஆட்னா அஜித் ரொம்பத்தான் ஆட்றானு சொல்வாங்க.

டீஆர்: அதுதான் உன் படத்துல‌ வழக்கம்
எனக்கும் இனி அதுதான் பழக்கம்
பரமசிவன்ல ஆடினாங்கப்பா ரகஸியா
இதுல மும்தாஜ் ஆடனும் செக்ஸியா

இதுதான் ஓப்பனிங் சாங். மை நேம் இஸ் பில்லாவ மறுபடியும் ரீமிக்ஸ் பண்றோம். ரீமிக்ஸையே ரீமிக்ஸ் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட்டு. இதாம்ப்பா பாட்டு. அதுக்கேத்தா மாதிரி உன் உடம்ப நீ ஆட்டு

"பே பே பே பேபே
பேபே பேபே
பே பே பேபே பேபே பேபே
பேபே பேபே
பேபேபே பேபேபே பேபே....." (இதை மை நேம் இஸ் பில்லாவின் ராகத்தில் பாட முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு ஷொட்டு வைத்துக் கொள்ளுங்கள்)

அஜித் : பாட்ல அப்பப்ப நான் திர்ம்பி திர்ம்பி பார்க்ற மாத்ரி செய்யலாம் ஸார். பேக்கிரவுண்ட் சவுண்ட்ல “i am back i am back”வச்சிடுங்க ஸார்.

டீஆர்: எனக்கே வேலை சொல்ல நீ யாரு?
அப்படின்னா வேற டைரக்டர பாரு
திரையுலகத்தில நான் தான் சாரு
என் ஹீரோ தயிறு.. நீ வெறும் மோரு

கோபமாக அங்கிருந்து வெளியேறி விஜயிடம் செல்கிறார் அடுக்குமொழி ஆண்டவன். அஜித்திடம் கோபப்பட்டு வருவதை அறிந்து ஆவலுடன் வரவேற்கிறார் இளைய தளபதி.. போக்கிரியில் பிரபுதேவாவை அழைப்பது போல ராகத்துடன் அழைக்கிறார்.

விஜய் : அண்ணா... வாங்கண்ணா.. வாங்கண்ணா..

(பதிலுக்கு டீ.ஆர். ஆடுங்கடா பாடலின் பீட்டை வாயாலே போடுகிறார்.போதாதென்று ஒரு குட்டி ஆட்டமும் போடுகிறார்)

விஜய் : அப்புறம் என்னங்கண்ணா மேட்டரு. வீராசாமி மாதிரி ஏதாவது படம் எடுக்கிறீங்களா?

டீஆர்: எலுமிச்சைன்னா இங்கிலீஷ்ல லைம்
உங்களுக்கு இப்ப பேட் டைம்
டீஆரு பேச்சுல‌ எப்பவுமே ரைம்
நாம ஒன்னா படம் பண்ண எய்ம்.

(டீ.ஆரின் சதியை "ககபோ" செய்து கொண்ட தளபதி உஷாராகிறார்)

விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா. வேணும்னா உங்க பையன் சிம்புவ வச்சி எடுங்க. நான் ஒரு பாட்டு பாடுறேன்.

டீ.ஆர் : என் கையே எனக்கு ஒரு கம்பு
எனக்கு இன்னுமிருக்கு தெம்பு
எனக்கு பிடிக்காத பையன் சிம்பு
ஏன்னா அவன் பொண்ணுங்க சொம்பு.

அதே வேகத்தில் திரும்பி வந்து பிரஸ் மீட் வைத்து அடுத்த படத்தின் பெயர் "கருப்பனின் காதலி" என‌ வெளியிடுகிறார் டீ.ஆர்.

நிருபர்: படத்தோட பேர பார்த்தா விஜய்காந்த் நடிக்கிற படம் மாதிரி தெரியுதுங்களே. யார் சார் ஹீரோ?

டீ.ஆர்: உங்க கேள்வி ரொம்ப நைஸு
அவருக்கு வைக்கிறீங்க ஐஸு
எனக்கு இன்னும் ஆகல வயசு
38 தான் என் இடுப்பு சைஸு

(சிரித்துக் கொண்டே குறிப்பெடுக்க மறந்து செல்கின்றனர் நிருபர்கள்)

13 கருத்துக்குத்து:

தர்ஷன் on July 23, 2010 at 12:05 AM said...

நான்தான் முதலாவதா?
தன்னம்பிக்கையின் சிகரத்தைக் தயவு தாட்சணியமின்றி கலாய்த்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Ponkarthik on July 23, 2010 at 12:32 AM said...

சகா இது எங்கயோ படிச்சா மாதிரி இருக்கு? மீள் பதிவா?

மகேஷ் : ரசிகன் on July 23, 2010 at 7:52 AM said...

அப்பட்டமான அவதூறு

நாய்க்குட்டி மனசு on July 23, 2010 at 8:17 AM said...

பில்லா பாடல் தான் சூப்பர். நான் பாடிட்டேன். அடிக்கடி பாடலின் வார்த்தைகள் மறந்து இப்படி பாடிப் பழக்கம்.
எந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருக்க கூடாதுங்கறதுக்கு 'அவர்' ஒரு உதாரணம்.

தராசு on July 23, 2010 at 8:59 AM said...

ஒரு சகல கலா வல்லவனை கலாய்ப்பதை கண்டித்து டீ குடிக்க வெளியேறுகிறேன்.

Anbu on July 23, 2010 at 10:04 AM said...

Meals...

vanila on July 23, 2010 at 2:00 PM said...
This comment has been removed by the author.
vanila on July 23, 2010 at 2:02 PM said...

ஏதோ ஒண்ணு ரெண்டு மிஸ் ஆகுற மாதிரி தெரியல.. கார்க்கி..
நெறயவே மிஸ் ஆகுற மாதிரி தெரியுது..

Nivas on July 23, 2010 at 2:05 PM said...

Meaaaaaaaaaalsssssssssmca

ப.செல்வக்குமார் on July 23, 2010 at 3:19 PM said...

///எப்பவும் உண்டு எனக்கு தனி மவுசு///
ஒரு வேல கம்பியூட்டரா இருப்பாரோ ..?
ஹய்யோ .. செம காமெடியா இருக்குண்ணா ...
இளைய டீ.ஆர் னு உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம் போல இருக்கு ...

Kafil on July 23, 2010 at 6:40 PM said...

Engal annan, TR avargalai asingapduthiyarkaha vanmayana kandanangalai therivithu kolikirom

Ivan- Veerasaami rasigar mandram

Bala on July 24, 2010 at 2:54 PM said...

Hi Kaarki, I would like you to hear Ranam sugam songs.. beter than most of the latest songs.. and your review..

Karthik on July 26, 2010 at 11:26 AM said...

//vanila said...
ஏதோ ஒண்ணு ரெண்டு மிஸ் ஆகுற மாதிரி தெரியல.. கார்க்கி..
நெறயவே மிஸ் ஆகுற மாதிரி தெரியுது..

+1. :(

 

all rights reserved to www.karkibava.com