Jul 21, 2010

கார்க்கி என்கிற பால்..


 

  பப்லு பெரியவனாகிக் கொண்டேயிருக்கிறான். சென்ற வாரம் நானும் பப்லுவும் அவரவர் அம்மாவும் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கைத்தறி கண்காட்சிக்கு சென்றுக் கொண்டிருந்தோம்.  கார்க்கிக்கு கல்யாணம் (ம்க்கும்) ஆயிட்டா இப்படியெல்லாம் போக முடியாது என்ற ரீதியில் ஏதோ ஒன்றை சொன்னார் அக்கா. உடனே பப்லு சொன்னான் “ஆண்ட்டிக்கிட்ட உங்க ஹஸ்பெண்ட கொஞ்சம் நேரம் கொடுங்கன்னு கேட்டு கூட்டிட்டு போயிடலாம் பாட்டி. கவலைப்படாத”.

வெங்காயத்தில் ஒண்ணுமில்ல உரிச்சுப் பார்த்தா...
கல்யாணம் கூட வெங்காயம்தான் செஞ்சு பார்த்தா..
மனம் எனும் தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித் தரும்
தோழிதான் எப்போதும் இங்க  காந்தி தாத்தா

______________________________________________________________________________

சென்ற வார ஞாயிற்றுக்கிழமை பதிவர் கிரிக்கெட் அணி ஆட்டத்தை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தது. புது பால், செகண்ட் ஹேண்டில் வாங்கிய புது பேட், கடனாக 3 ஸ்டம்ப்பு என எல்லாம் தயார். ஆள் ஒல்லியாக இருந்தாலும் ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் என லக்கியும், வாட் எ கோ இன்சிடன்ஸ் தோழர்! நானும் ஆல் ரவுண்டர் தான் என அதிஷாவும் கூட ரெடி. எங்க பக்கம்தான் வெற்றி என்பதை நிரூபிக்க பதிவர் வெற்றியையும் அழைத்துக் கொண்டோம். இன்னும் ரிஷி உள்ளிட்ட வாசகர்ளையும் தயார்படுத்திவிட்டோம். போக வேண்டியதுதான். ஸ்டெம்ப்ப நட வேண்டியதுதான். பந்த போட வேண்டியதுதான் என்ற நினைத்த நேரத்தில் வந்தது மழை. சபையை அடுத்த ஞாயிறு வரை ஒத்தி வைத்திருக்கிறோம்.  இதுவே எங்களுக்கு தோல்வியென இன்னொரு சாரார் சொல்லிக் கொண்டிருப்பதாக தகவல். இந்த வாரம் மழை வந்தாலும் விளையாட வேண்டும் என்று அணியின் தலைவர் சொல்லியிருக்கிறார்.

அட நோகாமத்தான் நோம்பிருக்க முடியாதப்பா..
கொஞ்சம் தோற்காமத்தான் வெற்றிவந்தா நிலைக்காதப்பா
வெற்றி மட்டும் ஆசைப்பட்டா தோல்வி மேல கோவப்பட்டா
நிச்சயமா அவன் ஒரு காலி டப்பா

________________________________________________________________________________

திருவாளர். சாரு அவர்களுக்கு 20 ஆயிரம் பணம் தந்த பதிவர் ஒருவர் இருக்கிறார். சில மாதம் முன் அவரை சந்தித்த போது இந்த விஷயத்தை சொன்னார். உண்மையிலே அவர் அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படுவதாக நினைத்துதான் தந்தாராம். நித்யானந்த ஆசிரமத்தில் ஏதோ ஸ்பெஷல் பூஜைக்கு சாரு அவர்கள் ஒரு லட்சம் தந்து ஏமாந்ததாக எழுதியிருந்தாராம்.அவர் தந்த பணம் அதில் போயிருக்குமோ என்று பெருங்கவலை கொண்டார். அது பரவாயில்லை என்று இப்போது நினைத்திருப்பார். சாருவும், அவர் வளர்க்கும் உயர் ரக நாயும் இருக்கும் புகைப்படம் சென்ற வார விகடனில் வந்திருக்கிறது. அது மட்டும் அவர் கண்ணில் பட்டால் அந்த நாய்க்கா என் காசு என்று துணுக்குறக்கூடும்.

வெற்றியில சிரிச்சாக்கா திமிரு மச்சி
தோல்வியில சிரிச்சாக்கா தில்லு மச்சி
ஜெயிக்கிறவன் மைனாரிட்டி தோற்கிறவன் மெஜாரிட்டி
அவன் போடும் ஓட்டுலதான் ஆளுங்கட்சி

________________________________________________________________________________

தில்லாலங்கடி பாடல்களோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். மனதை உருக்கும் மெலடி இல்லை. உயிரைப் பிழியும் சோகப் பாடல்கள் இல்லை. சிம்பொனி போன்ற புது முயற்சிகள் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களும் பிடித்திருக்கிறது. முடிந்தால் சமீபத்தில் வந்து ஹிட்டாகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் குறித்தும், நான் மகான் அல்ல பற்றியும் எழுதவிரும்புகிறேன்.  இந்த வருடம் யுவனின் வருடம். கோவா, பையா, காதல் சொல்ல வந்தேன், தில்லாலங்கடி, நான் மகான் அல்ல என்று கோல்களாக அடித்துக் கொண்டிருக்கிறார். (எவ்வளவு நாள்தான் சிக்சர் என்றே சொல்வது!)

  மேலே இருக்கும் பத்திகளின் முடிவில் இருக்கும் வரிகள் தில்லாலங்கடி படத்தில் வரும் ஒரு பாடலில் வரிகளின் சாயலில் எழுதப்பட்டவையே. . தோல்வியை பற்றி மட்டுமே பாடுகிறது அப்பாடல். தோல்வியை பற்றி மட்டுமே பாடி வெற்றிப்பெற்ற பாடல்கள் பல உண்டு. ஆனால் இவ்வளவு குதூகலத்தோடும், கொண்டாட்டத்தோடும் சொன்னதாக நினைவிலில்லை.

உன் நண்பன் யாருன்னு தெரிந்துக்கொள்ள தோத்தா போதும்
உன்னை ஒட்டிவந்த கெட்டதெல்லாம் காத்தா ஓடும்
சொந்தங்கள தேர்ந்தெடுக்கும் தப்புகள ஓரங்கட்டும்
தோல்விக்கு கோவிலே கட்ட வேணும்.

________________________________________________________________________________

இந்த ஜூலையோடு பதிவெழுத வந்து இரண்டு வருடம் முடிகிறது.ஒரு சில மாதம் தவிர மற்ற நாட்களில் முழுவதுமாக இயங்கியிருக்கிறேன். இந்த அனுபவத்தை எழுத எத்தனித்தால் தொடர்கதையாகத்தான் எழுத  நேரிடும். மேலும் விக்ரமண் பட ரீதியில் செண்டிமெண்ட் காட்சிகளும் வருமென்பதால் விட்டுவிடுகிறேன். 2 வருடமாக பிளாகர் சேவையை பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு ஒரு சின்ன ஐடியாவோடு முடித்துக் கொள்கிறேன்.

பின்னூட்டங்கள்தான் பதிவுலகத்தின் அபார வெற்றிக்கு காரணமென சொன்னார் நண்பர் ஒருவர். நாம் எழுதும் பதிவுக்கு வெளியிட்ட சில நிமிடங்களிலே வந்து சேரும் கருத்துரைகள் தரும் உத்வேகம் அடர்த்தியானது என்கிறார். எனவே பதிவை படிக்கும் வாசகர்கள் தங்கள் கருத்துகளை அவர்கள் குரலிலே பதிவு செய்ய வாய்ப்பளித்தால் எப்படியிருக்கும்? அனானிகள் ஆசை தீர திட்டக்கூடுமென்றாலும் இது ஒரு புதுவித அனுபவம் தரக்கூடுமில்லையா? வாய்ஸ் கமெண்ட்ஸ் என்றொரு வசதி வந்தால் நல்லா இருக்கும் தானே!

நம்ம பதிவ படிச்சு பிளாகர் இத செய்யப் போறதில்லைன்னு தெரியும். . சும்மா சொல்லி வைப்போம். நாளையே இந்த சேவை வந்தால் என் பெயரை Karki The paul (ஆக்டோபஸ் மேட்டர் தெரியுமில்ல) என்று அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

25 கருத்துக்குத்து:

தர்ஷன் on July 21, 2010 at 11:14 PM said...

முன்ன தோழி அப்டேட்ஸ் அப்பப்ப வந்துச்சு. இப்பெல்லாம் எல்லாப் பதிவுகளிலும் தோழி வந்துர்றாங்க போல

Ŝ₤Ω..™ on July 21, 2010 at 11:21 PM said...

வாழ்த்துக்கள் சகா..

Ŝ₤Ω..™ on July 21, 2010 at 11:24 PM said...

ஏன் சகா?? வாய்ஸ் கமெண்ட்ஸ் வந்தா, missed call போல, blank sms போல blank voice பின்னூட்டம் போடலாமே.. நல்ல சஜெஷன்..

☼ வெயிலான் on July 21, 2010 at 11:25 PM said...

// வாசகர்கள் தங்கள் கருத்துகளை அவர்கள் குரலிலே பதிவு செய்ய வாய்ப்பளித்தால் எப்படியிருக்கும்? //

ஏற்கனவே இது மாதிரி வசதி இருக்கு கார்க்கி. இந்தப் பதிவுல பாருங்க.

http://blog.balabharathi.net/ken-marriage/#

ஆதிமூலகிருஷ்ணன் on July 21, 2010 at 11:30 PM said...

நல்லாருந்தா நல்லாருந்துன்னு கூட சொல்ல முடியல. எவனாவது வந்து காக்கா புடிக்கிறேன்னுவானுங்க. சே.!

வெயிலான் கமெண்ட் பாத்தியா. உன் வட போச்சு.

ஜில்தண்ணி - யோகேஷ் on July 21, 2010 at 11:43 PM said...

பஞ்ச் வரிகள் பிரமாதம் அண்னே :)

வாய்ஸ் கமெண்ட்ஸ் அடடா என்ன ஒரு தொலைநோக்கு பார்வை :))

Rajasurian on July 21, 2010 at 11:44 PM said...

//நல்லாருந்தா நல்லாருந்துன்னு கூட சொல்ல முடியல. எவனாவது வந்து காக்கா புடிக்கிறேன்னுவானுங்க/

:))))

Kafil on July 22, 2010 at 12:05 AM said...

Ippudi yosichu yosichu thaan ivarukku mandaila mudi kottipochunnu nenaikkiren... Karki the paul illa.. Karki kku paal..(Innum kolandhayave irukkeenga maapu)

டம்பி மேவீ on July 22, 2010 at 6:38 AM said...

erndu varshathukku valthukkal karkki...

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

Balaji saravana on July 22, 2010 at 6:39 AM said...

வழக்கம் போல கலக்கல் கார்க்கி...
பஞ்ச் வரிகள் superb சகா..

@ஆதி..
//நல்லாருந்தா நல்லாருந்துன்னு கூட சொல்ல முடியல. எவனாவது வந்து காக்கா புடிக்கிறேன்னுவானுங்க. சே.! //
அண்ணே, stomach burning பக்கிகளை பத்தி நீங்க ஏன் பெருசா எடுத்துகிறீங்க.
உங்களுக்கு நான் சொல்லி தெரியனும்னு இல்ல.. ஜஸ்ட் சொல்லனும்னு தோனுச்சு.
தப்பா இருந்தா மன்னிச்சுக்கங்க ஆதி.

நட்புடன்,
பாலாஜி

விஜய் ஆனந்த் on July 22, 2010 at 8:25 AM said...

// ஏதோ ஒன்றை சொன்னார் அக்கா. உடனே பப்லு சொன்னான் “ஆண்ட்டிக்கிட்ட உங்க ஹஸ்பெண்ட கொஞ்சம் நேரம் கொடுங்கன்னு கேட்டு கூட்டிட்டு போயிடலாம் பாட்டி//

இதுல லாஜிக்கல் எர்ரர் மாதிரி தெரியுதே பாஸ்...

Faaique Najeeb on July 22, 2010 at 8:39 AM said...

சொந்த குரல்லயே திட்டு வாங்கணும் என்று ஆசைப்படுறீங்க.... காதுல blood வரும் வரை விட மாட்டங்க.... பரவாயில்லையா ...

மோகன் குமார் on July 22, 2010 at 10:08 AM said...

ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு ஒன்னு திருப்தியா படிச்ச மாதிரி இருந்தது. I dont know why.

தில்லாலங்கடி பாடல்கள் இதுவரை என்னை கவரலை; இப்போதைக்கு மதராசபட்டினம் தான் என் சாய்ஸ்

புன்னகை on July 22, 2010 at 10:29 AM said...

எப்போ கார்க்கி உங்க கல்யாணம்? :P

அமுதா கிருஷ்ணா on July 22, 2010 at 10:38 AM said...

ப்ப்லுக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னாடி முந்திக்கோங்க கார்க்கி....

கும்க்கி on July 22, 2010 at 11:03 AM said...

Faaique Najeeb said...

சொந்த குரல்லயே திட்டு வாங்கணும் என்று ஆசைப்படுறீங்க.... காதுல blood வரும் வரை விட மாட்டங்க.... பரவாயில்லையா ...

அமுதா கிருஷ்ணா said...

ப்ப்லுக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னாடி முந்திக்கோங்க கார்க்கி....


ஹூம்....இதேதான் ப்ரதர்..நான் சொல்ல நினைச்சதும்.

தராசு on July 22, 2010 at 11:08 AM said...

// கார்க்கிக்கு கல்யாணம் (ம்க்கும்) ஆயிட்டா //

காஷ்மீர் பிரச்சனை சுமுகமா முடிஞ்சுட்டா, இஸ்ரேலர்களும் பாலஸ்தீனர்களும் கட்டிப் புடிச்சு கை குலுக்கிட்டா, தளபதி படத்துல கூட கதைன்னு ஒன்னு இருந்துட்டா,......,,,,,,

அட விடுங்க தல, எல்லாத்துக்கும் ஒரு நாள் முடிவு வரும்.

vinu on July 22, 2010 at 11:12 AM said...

So unfortunately "The paul" award ungalukku kidaikkama ponathulla nammalukkum knojam varuthaam thaan....


appuram post pathi enna solla as usual


kalakkal karki..........

கார்க்கி on July 22, 2010 at 11:31 AM said...

தர்ஷன், அதான் சகா தோழி. கொஞ்சம் கொஞ்சமா சிஸ்டம் முழுக்க பரவும் வைரஸ் அவ. :)

நன்றி சென். ஹிஹிஹி

ஆவ்வ்வ்.. வெயிலான். வட போச்சா? இல்லையில்ல பால் போச்சா?

ஆ.மூ.கி, இதுல கூத்து என்னன்னா, இதுவரைக்கும் நான் உஙக்ளுக்கு ஓட்டு போட்டதில்ல. நீங்க எனக்கு போட்டத்தில்ல. எ.கொ.ஆ.இ?

ஜில்தண்ணி, உங்க பதிவு ஹிஹிஹி

நன்றி ராஜசூரியன்

கஃபில், உஙக்ளுக்கு அப்படியே 60 அடி கூந்தலோ? எகத்தாளத்த பாரு. லோலாயி பாரு

மேவீ, இதே தலைப்புலதான் வெண்பூவும் எழுதினாரு. சாரி குத்துனாரு

மிக்க நன்றி பாலாஜி. :)

விஜய், என்ன எரர் சகா? வந்தோமா ஸ்மைலிய போட்டோமான்னு இல்லாம, இது என்ன புதுசா?

நஜீப், நாங்களாம் இந்த விஷயத்துல ”அவங்க” கட்சி. என்ன கத்தினாலும் பதிலே சொல்ல மாட்டோம் இல்ல:)

மோகன், நன்றி. எனக்கும் ம.பட்டிணம் புடிக்குது. அதுவும் கேட்டுட்டுதான் இருக்கேன்

புன்னகை, ந்ன்ன ஒரு ஆர்வம்? ஆதியண்ணே..என்னை மாட்டிவிட பார்க்குறாங்க

அமுதா மேடம், ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். கமெண்ட் ஆஃப் தி இயர்

கும்க்கி, ரைட்டுங்க. அடுத்த தடவ சாய்னாவ பார்க்க வராமலா போயிடுவீங்க?

தராசண்ணே, அதெல்லாம் நடக்கட்டும். நீங்க ஃபோட்டோவ மாத்துறத எப்ப நிறுத்துவீங்க?

நன்றி வினு, தொடர் ஆதரவுக்கு

ர‌கு on July 22, 2010 at 11:43 AM said...

//ஆண்ட்டிக்கிட்ட உங்க ஹஸ்பெண்ட கொஞ்சம் நேரம் கொடுங்கன்னு கேட்டு கூட்டிட்டு போயிடலாம் பாட்டி. கவலைப்படாத//

ப‌ப்லு இன்னும் ப‌ச்ச‌ புள்ள‌தான் கார்க்கி (இதை "ப‌ச்ச‌ புள்ள‌தான் கார்க்கி"ன்னு ப‌டிச்சிடாதீங்க‌). "எல்லா ஆண்ட்டிங்க‌கிட்டேயும்"னுதானே சொல்லிருக்க‌ணும் ;))

Nivas on July 22, 2010 at 1:24 PM said...

:-)

ப.செல்வக்குமார் on July 22, 2010 at 3:32 PM said...

//இந்த ஜூலையோடு பதிவெழுத வந்து இரண்டு வருடம் முடிகிறது.ஒரு சில மாதம் தவிர மற்ற நாட்களில் முழுவதுமாக இயங்கியிருக்கிறேன்//

வாழ்த்துக்கள் அண்ணா ..!!

கார்க்கி on July 22, 2010 at 11:05 PM said...

ரகு, கார்க்கி “படிச்ச புள்ள”

நன்றி நிவாஸ்

நன்றி செல்வா

தமிழ்ப்பறவை on July 22, 2010 at 11:08 PM said...

'தில்லாலங்கடி’ பாடல்களை உங்களுக்காக இன்னொரு முறை கேட்டுப் பார்க்கிறேன் சகா...
இரண்டாண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்...

A Simple Man on July 23, 2010 at 9:04 PM said...

Velachery railway station ground will be opt for cricket match

 

all rights reserved to www.karkibava.com