Jul 15, 2010

ஏழுவும் ஸ்டேஷனும்


 

  அன்று பாலாஜியின் பிறந்த நாள். ஏழுவை நம்பி  பாருக்கு போவதில் யாருக்கும் உடன்பாடில்லை. ஹாஸ்டலுக்கே சரக்கை வாங்கி வருவதென முடிவு செய்தோம். ஏழுவும் நானும் நண்பனின் பல்சரை வாங்கிக் கொண்டு மஹாலட்சுமி ஒயின்ஸுக்கு சென்றோம். MC, Signature என்று எல்லாவற்றிலும் ஆஃப் வாங்கிக் கொண்டோம். வாங்கும்போதே ஆரம்பித்தான் ஏழு. ஒயின்ஷாப் ஓனரை நோக்கி சொன்னான் “சச்சின் டெண்டுல்கரை விட உங்க கிட்டதான் சார் நிறைய பேர் Signature வாங்கி இருப்பாங்க”

  நான் சைட் டிஷ் வாங்க சென்ற கேப்பில் ஒரு மினி பியரை அடித்துவிட்டான் ஏழு. அவசரத்தில் ராவாக வேறு அடித்துவிட்டான். இருவரும் சரக்கோடும் சைட் டிஷோடும் கிளம்பினோம்.

மச்சி நான் ஓட்டறேன்டா வண்டிய என்றான் ஏழு.

நானும் சரி என்று சொல்லிவிட்டு பாட்டில்களை சைட் பாக்ஸில் வைத்தேன். தத்துவம் சொல்லும் முன் ஏழு ஒரு டைப்பாக சிரிப்பான். அதே போல சிரித்தவன் சொன்னான் “பாரு மச்சி. சரக்க சைட் பாக்ஸ்ல வச்சிட்டு சைடு டிஷ நீ வச்சிருக்க. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல சரக்கு மெயினுக்கு வந்துடும். இது சைடுல போயிடும்.

நானும் என் பங்குக்கு வாழ்க்கை ஒரு வட்டம்தான்.ஆனா இவ்ளோ சின்ன வட்டமா இருக்கே என்றேன். மீண்டும் சிரித்தவன் சொன்னான் “அதனால்தான் தண்ணியடிக்கும் போது ரவுண்டுன்னு சொல்றோம் மச்சி”

இதுக்கு மேல் ஆகாதென்று வாயை மூடிக் கொண்டு கிளம்பினோம். சிறிது தூரம் வரை சரியாகத்தான் ஓட்டினான். மெதுவாக வண்டியும், ஏழுவும் ஆடுவதை பார்த்துவிட்டு வண்டியை நிறுத்த சொன்னேன். படுபாவி சரியாக அங்கே நின்றிருந்த போலிசின் அருகில் சென்று நிறுத்தினான். இறங்கும் போதே ஆடியவனை அவர்களும் பார்த்துவிட்டார்கள். அருகில் வந்தவர் இன்ஸ்பெக்டர் போல தெரிந்தது.

என்னப்பா இப்படி ஆடுற என்றார் இன்ஸ்பெக்டர். திருவாய் மலர்ந்தான் ஏழு

ஜோடி நம்பர் ஒன் சீசன் 4க்கு ட்ரை பண்றேன் சார்.

ஆனா உன்னை பார்த்தா கேடி நம்பர் 1 மாதிரி இருக்கே. ஓட்டத் தெரியுமா?

எங்க செட்டிலே நான் தான் எல்லோரையும் நல்லா ஓட்டுவேன் சார்.

டேய். என்ன நக்கலா? உன் உருவத்துக்கு இந்த வண்டி தேவையா?

அப்ப கப்பல், ப்ளைட் ஓட்டறவங்க எல்லாம் உங்கள மாதிரி இருப்பாங்களா சார்?

எனக்கு வேர்க்க ஆரம்பித்தது. குறுக்கே பேச முயன்றபோது வாயை மூட சொன்னார்கள்.

வண்டில RC இருக்காடா?

MCதான் இருக்கு சார்

நல்ல வேளை அவருக்கு புரியவில்லை. ஆனால் ஏழு தண்ணியடித்திருக்கிறான் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்த வண்டில மொத்தம் எத்தன கீரு இருக்குன்னு தெரியுமா?

அது தெரில சார். ஆனா ரெண்டு பீரு இருக்கு என்று இந்த முறை தெளிவாக சொன்னான் சண்டாளன். எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. என்னையும் அவனையும் ஜீப்பில் ஏற்றினார்கள். நான் கெஞ்சும் போதெல்லாம் சிரித்து சிரித்து அவர்களை மேலும் எரிச்சல் படுத்தினான் ஏழு.

சார். நாங்க என்ன சரக்கையா கடத்தனோம்? ரூமுக்கு வாங்கிட்டு போய் அடிக்கறது தப்பா சார்?

வாய மூடிட்டு வாடா. உன்னையெல்லாம் கவனிக்கற விதத்துல கவனிச்சாதான் திருந்துவீங்க என்றார் ஏட்டு.

சார் போலிஸ்ன்னா எதையும் முறையா செய்யனும் தான். ஆனா வன்முறையா செய்யக் கூடாது என்றவன் வாயில் லத்தியால் லேசாகத் தட்டினார் ஏட்டு. ஸ்டேஷனுக்குள் நுழைந்தது ஜீப். இருவரையும் ஒரு பென்ச்சில் அமர வைத்தார்கள்.

பரவாயில்ல மச்சி. என் நாலாங்கிளாஸ் வாத்யாரே நான் தப்பு செஞ்சா பென்ச்சுல நிக்க சொல்வார். போலிஸ் உட்கார சொல்றாங்க” என்றான் ஏழு. நான் செய்வதறியாமல் முழு சரக்கிருந்தும் ஆடாமல் அசையாமல் நிற்கும் ஜான் எக்‌ஷா ஃபுல் பாட்டிலைப் போல் இருந்தேன்.ஒரு லெட்டர் ஒண்ணு வாங்கிட்டு விட்டுவிட சொன்னார் இன்ஸ்பெக்டர். ஆனால் அந்த ஏட்டு எங்களுக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கினார்.

ஏம்ப்பா. காலேஜ் படிக்கற. இப்படியா நடக்கறது? நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போணும்னு ஆசை இல்லையா?

எனக்கு மூணு ஆசை சார் என்றான் ஏழு. கம்முன்னு இருடா என்ற என்னை அவன் மதிக்கவேயில்லை.படிக்காமலே பாஸ் ஆகனும். இண்டெர்வ்யூவே இல்லாம வேலைக்குப் போகனும். வேலையே செய்யாம சம்பளம் வாங்கனும்.

இதெல்லாம் எப்படிப்பா நடக்கும் என்று இன்னமும் பொறுமையாக கேட்டார் ஏட்டு.

மத்தத விடுங்க சார். இப்ப நீங்க வேலையே செய்யாம‌ சம்பளம் வாங்லையா?

ஏட்டுவின் முகம் மாறியது. ஏழுவை கன்னத்தில் ஒண்ணு விட்டு மன்னிப்புக் கேட்க தொடங்கினேன். இதெல்லாம் சரிப்படாது நீங்க ட்ரெஸ் கழட்டுங்க என்றார்.அடி பலமாக விழுந்து விட்டது ஏழுவுக்கு. கன்னத்தைத் தடவிக் கொண்டே சன்னமான குரலில் கேட்டான். “சார் எங்கள ரேப் பண்ணப் போறீங்களா?”

நல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் வந்து எங்களை விடுதலை செய்தார். ஆனால் சரக்கையெல்லாம் கொடுக்கவில்லை. கடுப்பில் இருந்த நான் ஏழுவை அங்கேயே விட்டுவிட்டு ஹாஸ்டலுக்கு சென்றேன். எனக்கு முன்பே அங்கு ஆட்டோவில் வந்த ஏழு கலாட்டா செய்துக் கொண்டிருந்தான். நாங்களும் கண்டுக்காமல் விட்டதில், பிரச்சனை பெரிதாகி மறுநாள் அவனை விடுதியில் இருந்து எடுத்து விட்டார்கள். வழக்கம்போல் தொட்டியில் தலையைக் கவிழ்த்து மப்பை இறக்கிக் கொண்டிருந்தவனிடம் வந்த ஹாஸ்டல் வார்டன், ஏண்டா ஹாஸ்டலுக்குள்ளே தண்ணியடிக்கலாமா என்றார்.

தலையை சிலுப்பிக் கொண்டு பதில் சொன்னான் ஏழு “ பாட்டில்ல குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடுன்னு” போட்டிருக்கு சார். விடுதிக்குனு போடல.”

28 கருத்துக்குத்து:

problogger on July 15, 2010 at 12:35 AM said...

me the first podanum summa athuku than comment

தமிழ்ப்பறவை on July 15, 2010 at 12:43 AM said...

ஒரு வருக்ஷம் கழிச்சு ஃபுல் பீரை ஆம்லேட்டோட அடிச்ச மாதிரி இருக்கு சகா..
செம கலக்கல்...
சிக்னேச்சர் முதற்கொண்டு ஜான் எக்‌ஷா வரை ஒரே கிக் மயம்தான்...
சூப்பர்...

வெட்டிப்பயல் on July 15, 2010 at 12:51 AM said...

கலக்கல்... :-)

Kafil on July 15, 2010 at 12:52 AM said...

:):)

ப்ரியமுடன் வசந்த் on July 15, 2010 at 12:56 AM said...

சினேச்சர்ல ஆரம்பிச்ச சிரிப்பு கப்பல்,ஃப்ளைட்,ஆர்சி,எம்சி,சைட்பாக்ஸ்விடுதி வரைக்கும் போயும் நிக்கல..

போஸ்ட் கலக்கல்..

பா.ராஜாராம் on July 15, 2010 at 1:31 AM said...

பிடிச்ச ஏழு..பிடிச்ச மேட்டர். :-) கலக்கல் பாஸ். :-))

//ஒரு மினி பியரை அடித்துவிட்டான் ஏழு. அவசரத்தில் ராவாக வேறு அடித்துவிட்டான்//

சின்னப் புள்ள தனமாவுல இருக்கு. :-)

சீனு on July 15, 2010 at 2:16 AM said...

செம கலக்கல் பதிவு கார்க்கி ...
கல்லூரி நினைவுகள் நிறைய கிளறி விட்டுடீங்க !!!

தர்ஷன் on July 15, 2010 at 6:03 AM said...

மீள் பதிவு மாதிரி இருக்கே சகா

மகேஷ் : ரசிகன் on July 15, 2010 at 7:52 AM said...

Super

தெய்வசுகந்தி on July 15, 2010 at 8:14 AM said...

lol:)))

தராசு on July 15, 2010 at 8:57 AM said...

ஆங், இது இது பதிவு.. ரொம்ப நாளைக்கப்புறம் ரசிச்சு படிச்சேன் தல.

கார்த்திகைப் பாண்டியன் on July 15, 2010 at 9:51 AM said...

//ஆங், இது இது பதிவு.. ரொம்ப நாளைக்கப்புறம் ரசிச்சு படிச்சேன் தல.//

athethaan..super...:-)))))))

மோகன் குமார் on July 15, 2010 at 9:54 AM said...

//“சார் எங்கள ரேப் பண்ணப் போறீங்களா?”//

:))

Nice Yezhu post after some time.

Bala on July 15, 2010 at 9:56 AM said...

செம superb தல..
"சார் போலிஸ்ன்னா எதையும் முறையா செய்யனும் தான். ஆனா வன்முறையா செய்யக் கூடாது "
வடிவேலு பஞ்ச் மாதிரியே இருக்கு கார்க்கி...
படிக்காமலே பாஸ் ஆகனும். இண்டெர்வ்யூவே இல்லாம வேலைக்குப் போகனும். வேலையே செய்யாம சம்பளம் வாங்கனும்.
பல பேரோட ஆசைய சொல்லிடிங்களே சகா?!

Anbu on July 15, 2010 at 10:17 AM said...

:-))

கார்க்கி on July 15, 2010 at 10:39 AM said...

ப்ரொபிளாகர், நன்றி

பறவை, பியர் எப்படி? ராவாவா, தண்ணி கலந்ததா?

நன்றி வெட்டி. நலமா?

நன்றி கஃபில்

நன்றி வசந்த் :)

பா.ரா, ஏழு கேட்டா கோச்சிப்பான் சார்.எங்க கேங்கிலே முதலில் பெரிய மனுஷன் ஆனது அவன் தானாம்

நன்றி சீனு. அப்ப நீங்களும் தண்ணி கலந்து அடிக்கிற பார்ட்டியா?

தர்ஷன், :)).. பழைய ஏழு பதிவுகளில் இன்னும் பெட்டரா பன்ணியிருக்கலாம்னு நினைக்கிற கதைஅக்ளை தூசி தட்டினேன். பழசுனாலும் சிலத கட் பண்ணி, பல புது மேட்டர சேர்த்திருக்கிறேன். நன்றி

நன்றி ரசிகன்

நன்றி தெய்வசுகந்தி

நன்றி தராசண்ணே :))

நன்றி கா.பா

மோகன், ரேப்ன்னு வந்தா உடனே நைஸ்ன்னு சொல்லிடுவீங்களே.. யப்பா :))

நன்றி பாலா..ஹிஹிஹி

நன்றி அன்பு

நேசன்™..., on July 15, 2010 at 11:41 AM said...

அவன் ஏழா?........இல்ல ஏழரையா?.......

ர‌கு on July 15, 2010 at 11:55 AM said...

ரொம்ப‌ நாளைக்க‌ப்புற‌ம் இதுதான் சாள‌ர‌ம்னு ப்ரூவ் ப‌ண்ணியிருக்கீங்க‌..ர‌சிச்சு ப‌டிச்சேன் ச‌கா:))

பித்தன் on July 15, 2010 at 11:58 AM said...

நல்ல இருக்கு சகா....

விக்னேஷ்வரி on July 15, 2010 at 12:34 PM said...

மீள்ஸ்ன்னாலும் சிரிக்க முடிந்தது. சூப்பர்.

Busy on July 15, 2010 at 1:01 PM said...

Kalakkal.... Saga............

ப.செல்வக்குமார் on July 15, 2010 at 1:30 PM said...

அடுத்து எட்டுன்னு போட்டு இன்னொரு கதைய போடுங்க ..!!

குசும்பன் on July 15, 2010 at 6:10 PM said...

ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு ஏழு வந்து:) கலக்கல்

vinu on July 15, 2010 at 6:26 PM said...

roamba naallukku pinnal nalla siricheann sir thanks thanks a lot

கார்க்கி on July 15, 2010 at 10:20 PM said...

நேசன், அவன் ஏழுதான். மத்தவஙக்ளுக்கு ஏழரை

ரகு, நன்றி சகா

நன்று பித்தன்

மீள்சிரிப்பா விக்கி? ஆனா 40% மாத்தியிருக்கிறேன்

நன்றி பிசி

நன்றி செல்வக்குமார். எட்டெல்லாம் கிடையாதுப்பா

நன்றி குசும்பரே. ம்ம்ம்

நன்றி வினு. சந்தோஷமாக இருக்கு

SenthilMohan on July 16, 2010 at 4:09 PM said...

பாதி 'மீள்'ஸ்ன்னாலும் கும்முன்னு Full Meals மாதிரி இருக்கு. ஏழு ரசிகர் மன்றம் சார்பாக ஒரு விண்ணப்பம். ஏழு அவர்கள் தற்போது வேலை செய்யும் இடத்தில் செய்யும் தர்க்கங்களை புட்டிக்கதையில் Add செய்யும்படி கேட்டுக்கொள்கின்றோம்...றோம்...றோம்...றோம்.

பரிசல்காரன் on July 17, 2010 at 8:33 AM said...

Interesting saga!

ஆதிமூலகிருஷ்ணன் on July 19, 2010 at 10:48 AM said...

பரிசல்காரன் said...
Interesting saga!

//ஆமா.!

 

all rights reserved to www.karkibava.com