Jul 14, 2010

சகா’வரம்


 

 Untitled

எப்படா நம்ம கல்யாணம் என்றேன் தோழியிடம். “GOD ONLY KNOWS" என்றாள்.. அதனால்தான் அவளிடம் கேட்டேன் என்று கூட தெரியவில்லை என் தேவதைக்கு.

______________________________________________________________________________________________________________

10 நாள் பிரிஞ்சு இருப்பியே.. என் ஞாபகம் வந்தா என்ன செய்வ என்றேன் தோழியிடம். மனசுக்குள்ள இருக்கியேடா, எப்ப வேணும்னாலும் உன்னை பார்க்கலாம் என்று சொன்னாள். அவள் திரும்பியவுடன் என்னை நானே பார்க்க வேண்டுமென்றிருக்கிறேன்

______________________________________________________________________________________________________________

வாட்டர் ப்ரூஃப் போல ஹீட் ப்ரூஃப் மொபைல் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். எதுக்கு என்கிறாள் தோழி. என்னவளின் முத்தத்தின் வெப்பத்தை தாங்க வேண்டுமே அது!!!

______________________________________________________________________________________________________________

“உன் உதிரம் போலே நான் உன்னுடலில் ஓடுவேன்."  என்று தோழியிடம் சொன்னது தப்பா போச்சு.விரலை வெட்டிகொண்டு உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு என்கிறாள்

______________________________________________________________________________________________________________

தெரியாமல் தோழியுடன் சிங்கம் படத்துக்கு போய்விட்டேன். இடைவேளையில் கொக்கரிக்கிறாள் “முத்தத்த பாட்டிக்கிட்ட வாங்கியிருப்ப..அம்மாக்கிட்ட வாங்கியிருப்ப. குழந்தைக்கிட்ட வாங்கியிருப்ப. என்னை மாதிரி வயசு பொண்ணுக்கிட்ட வாங்கியிருக்கியா?உன் தோழிக்கிட்ட வாங்கியிருக்கியா? வாங்கியிருக்கியா? உதட்டுல கொடுத்தா 440 வோல்ட்ஸ் பவருடா”

______________________________________________________________________________________________________________

டயட்டில் இருக்கிறேன் என்று தெரியாமல் சொல்லிவிட்டேன் தோழியிடம். முத்தம் கேட்டால் “டயட்டுல இருக்கும்போது ஸ்வீட் எதுக்கு” என்று கேட்கிறாள் கள்ளி.

______________________________________________________________________________________________________________

கடவுளைக் கண்டால் என்ன வரம் கேட்பாய்? சாகாவரம் தானே என்றேன் தோழியிடம். கண் சிமிட்டி, உதடு பிரித்து, கன்னம் குழியாக சிரித்தவள் சொன்னாள் ”எனக்கு சகாவரம் போதும் செல்லம்”

25 கருத்துக்குத்து:

தமிழ்ப்பறவை on July 14, 2010 at 12:38 AM said...

gud updates...
//வோட்ல்ஸ்// தோழி உணர்ச்சிவசப்பட்டதுல நாக்கு குழறிடுச்சு போல... :-)

Kafil on July 14, 2010 at 1:14 AM said...

kalakkal

ILA(@)இளா on July 14, 2010 at 1:52 AM said...

அது எல்லாம் சரி, இந்த profileஅ இருக்கிற படம் எடுத்து ஒரு 15 வருசம் இருக்குமா?

பதிவு, வழமை போல் அருமை

டம்பி மேவீ on July 14, 2010 at 5:18 AM said...

“முத்தத்த பாட்டிக்கிட்ட வாங்கியிருப்ப..அம்மாக்கிட்ட வாங்கியிருப்ப. குழந்தைகிட்ட வாங்கியிருப்ப. என்னை மாதிரி வயசு பொண்ணுக்கிட்ட வாங்கியிருக்கியா?உன் தோழிக்கிட்ட வாங்கியிருக்கியா? வாங்கியிருக்கியா? உதட்டுல கொடுத்தா 440 வோட்ல்ஸ் பவருடா”

பாஸ் என்னை சின்ன பசங்களோட மனசை இப்படி எழுதி அலைபாய வைக்காதீங்க ...நான் பாவம்இப்படிக்கு
மேவி
தலைவர்
ஒன்னுக்கே வழி இல்லாமல் காஞ்சி போய் இருப்பவர்கள் சங்கம்

கலாநேசன் on July 14, 2010 at 6:19 AM said...

பதிவு,வழக்கம் போல் அருமை.

மகேஷ் : ரசிகன் on July 14, 2010 at 8:05 AM said...

சிங்கம் சிங்கம்....

மகேஷ் : ரசிகன் on July 14, 2010 at 8:12 AM said...

உருகுதே மருகுதே

Cable Sankar on July 14, 2010 at 8:27 AM said...

ஏன் ரெண்டு மூனு ரிப்பீட்டு..?

Faaique Najeeb on July 14, 2010 at 9:00 AM said...

“முத்தத்த பாட்டிக்கிட்ட வாங்கியிருப்ப..அம்மாக்கிட்ட வாங்கியிருப்ப. குழந்தைகிட்ட வாங்கியிருப்ப. என்னை மாதிரி வயசு பொண்ணுக்கிட்ட வாங்கியிருக்கியா?உன் தோழிக்கிட்ட வாங்கியிருக்கியா? வாங்கியிருக்கியா? உதட்டுல கொடுத்தா 440 வோட்ல்ஸ் பவருடா”

பாஸ் என்னை சின்ன பசங்களோட மனசை இப்படி எழுதி அலைபாய வைக்காதீங்க ...நான் பாவம்

ஒத்த பிகர்'கூட இல்லாமல் அடுத்தவன் பிகர்'ய் பார்த்து ஏங்குவோர் சங்கம்

தராசு on July 14, 2010 at 9:13 AM said...

சரி, சரி, ஒத்துக்கறோம்.

பரிசல்காரன் on July 14, 2010 at 9:58 AM said...

ஜஸ்ட் மிஸ்ஸு சகா....!

பித்தன் on July 14, 2010 at 10:02 AM said...

uthattula koduththaa transformer vedichchudum jaakkirathai......

கார்க்கி on July 14, 2010 at 10:18 AM said...

பறவை, ஹிஹிஹி..

நன்றி கஃபில்

இளா, முதல்ல இருக்கிற ஒண்ண எடுத்திடுங்க. 2005

மேவீ, அந்த சங்கத்தின் அமைப்பாளரே நான் தான். சும்மா இருப்பா

கலாநேசன், வழக்கம் போல நன்றி :)

மகேஷ், உடம்பு சரியில்லையா? ரெஸ்ட் எடுப்பா :)

கேபிளண்ணே, கரெக்ட்டா சொன்னிங்க. ஆனா ஒண்ணுதான். :))

நஜீப், ஹிஹிஹி

தராசு, புரொஃபைல் ஃபோட்டோ கலக்கல்

பரிசல், என்ன சகா?

பித்தன், அதென்ன நரசிம்மாவா சகா? :)

Maduraimalli on July 14, 2010 at 11:00 AM said...

தெரியாமல் தோழியுடன் சிங்கம் படத்துக்கு போய்விட்டேன். இடைவேளையில் கொக்கரிக்கிறாள்

// Inimae therinjae poga aarambichuduvinga...

Karthik on July 14, 2010 at 11:38 AM said...

நல்ல அப்டேட்ஸ்..:)

"ராஜா" on July 14, 2010 at 11:54 AM said...

//தெரியாமல் தோழியுடன் சிங்கம் படத்துக்கு போய்விட்டேன்

ரெண்டு பெரும் பத்திரமா இருக்கீங்கள?

ர‌கு on July 14, 2010 at 11:59 AM said...

//விரலை வெட்டிகொண்டு உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு என்கிறாள்//

தோழி பேரு 'லைலா'வா ச‌கா ;))

கார்க்கி on July 14, 2010 at 12:08 PM said...

//ahamedirshad1984//

இந்த பதிவுக்கு எதுக்கு நெகட்டிவ் ஓட்டு என்று நான் தெரிந்துக் கொள்ளலாமா ரிஷாத் அவர்களே????

___________________________

மதுரைமல்லி, நீங்க ரொம்ப ஷார்ப்புண்ணே

நன்றி கார்த்திக்.

ராஜா, நலமே. lol

ரகு, ஹிஹிஹி. தோழி என்பதுதான் அவ பேரு சகா

ப.செல்வக்குமார் on July 14, 2010 at 3:23 PM said...

அதி பயங்கரம் ...!!

தர்ஷன் on July 14, 2010 at 7:12 PM said...

:))

விக்னேஷ்வரி on July 14, 2010 at 11:16 PM said...

என்ன சொல்ல வர்றிங்க. தோழி கடவுளா, தேவதையா இல்லை எல்லாமா?

தப்பு தப்பா பேசினா காக்கா தலைல கொத்தும்.

காதுல இருக்கும் போதே மொபைல் வெடிச்சிடப் போகுது சகா. அப்புறம் செவிட்டு சகா வேண்டானுடும் தோழி.

ஓய், சேம் அப்டேட்?

இன்னும் சிங்கம் பார்க்கல. ஷிவானி ஓவர் டு யூ.

கள்ளி இனிக்குமா? கொஞ்சம் நக்கிப் பாருங்க. ஒரேடியா டிக்கெட்டு தான்.

எந்த சகா, சகா?

விக்னேஷ்வரி on July 14, 2010 at 11:16 PM said...

//வோட்ல்ஸ்// தோழி உணர்ச்சிவசப்பட்டதுல நாக்கு குழறிடுச்சு போல... :-) //
ஹாஹாஹா... செம.

மகேஷ் : ரசிகன் on July 14, 2010 at 11:44 PM said...

பொன்மேனி உருகுதே....

vinu on July 15, 2010 at 6:38 PM said...

back with bang ......cute karkii loveeeeeeeeeeeeeeeeee it

ILA(@)இளா on July 20, 2010 at 1:23 AM said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.

 

all rights reserved to www.karkibava.com