Jul 4, 2010

கார்க்கி பாவம்


 

  யாவரும் நலம்னு சொல்ற சுசி ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க. சரி. எழுதலாம்னு தலைப்ப பார்த்தா...... "கார்க்கி வித் அவுட் தோழிகள்".. எவ்ளோ நல்ல மனசு?

என்னடா செய்யலாம்ன்னு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து யோசிக்கலாம்ன்னு இருந்தேன். ரூமா? அட தோழிங்கன்னாலே பட்ஜெட் அதிகம் பாஸ். ரூமெல்லாம் பத்தாது. சரி விஷயத்திற்கு வருவோம். முதலில் காலையில் தூங்கி எழுவதில் இருந்து தூங்கும்வரை நான் செய்யும் அன்றாட வேலையத்தான் எழுதி வச்சேன்.பின்ன என்னங்க? இப்ப மட்டும் என்ன நமக்கு 12 தோழிகளா இருக்காங்க? அப்படின்னு எழுதி முடிச்சிட்டு டெலீட் பண்ணிட்டேன். ஏன்னா பேசிக்கலி நான் பொய் சொல்லமாட்டேன். என் பேரு என்ன பரம‌சிவன் பேருல ஆரம்பிக்குதா இல்ல ராமர் பேருல முடியுதா? அத விடுங்க. உண்மையை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

1) இனிமேல  பொறை ஏறாது. அதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இட்லி சாப்பிடும்போது தோழி என்னை நினைச்சு பொறை ஏறினா தண்ணி குடிக்கலாம். தண்ணி குடிக்கும்போதும் தோழி நினைச்சு அதுக்கும் பொறை ஏறினா என்ன செய்றது?

2) பெட்ரோல் விலை குறையும். ஆமாங்க. அன்னைக்கு ஒரு பெட்ரோல் பங்குல பார்த்தேன். “Save petrol.Avoid Girl Friends”உண்மைதான். 60  கி.மீ தந்த பைக்க விட்டு தோழிக்காக யமஹா வாங்கினேன். அது 40தான் கொடுக்குது. அது மட்டுமில்லாம வண்டி நல்லாயிருக்குன்னு எக்ஸ்ட்ரா கொஞ்ச தூரம் ஓட்ட சொல்றா. எவ்ளோ பெட்ரோல் வேஸ்ட்? அதனால் தோழி இல்லைன்னா பெட்ரோல் மிச்சம். பெட்ரோல் மிச்சம்ன்னா விலை குறைவு.

3) நல்ல வெளிச்சமா லைட் எரியிற இடத்துல சாப்பிடலாம். ஆமாங்க. ரொமாண்ட்டிக்கா இருக்கும்ன்னு எத்தனை தடவதான் கேண்டில் லைட் டின்னருக்கே போறது? "நீ சிரிக்கிறப்ப உன் கூட எங்க சாப்பிட்டாலும் அது கேண்டில் லைட் டின்னர்தான் செல்லம். ஏன்னா நீயே ஒரு மெழுகு பொம்மைதான்"ன்னு சொன்னா கூட வொர்க் அவுட் ஆகாது. அதுக்கு எதுக்கு தோழி சிரிக்கணும்ன்னுதானே கேட்கறீங்க? கே.லை. டின்னர்ல மெழுகு "பளீர்"ன்னு எரிஞ்சிட்டு இருக்குமில்ல? அதான்.

4) அடுத்து மிஸ்டு கால்ஸோஃபோபியா. ஸ்கூல் போகும்போது நான் மிஸ்ஸூக்கே பயப்படாதாவன். ஆனால் இந்த மிஸ்டு கால்ஸ் பார்த்தா..உஸ்ஸ்ஸ். மிஸ்டு கால்ஸ் கூட பிரச்சனையில்லை. அதுக்கு முன்னால் நம்பர் வரும் பாருங்க. சச்சின் 20-20 ல அடிக்கிற மாதிரி 52, 68ன்னுதான் இருக்கும். ஒரு தடவ 108 கால்ஸ் எல்லாம் மிஸ் ஆயிருக்கு. அதுக்கெல்லாம் கவலைப்படாம சைலண்ட்ல போட்டு மேட்ச் பார்க்கலாம்.

5) நமக்கு எல்லாம் எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கும். அது சரிதான். ஆனா தேடி வாங்கிட்டு வருவா பாருங்க. ஒரு நாள் ஒரு குர்தா வாங்கிட்டு வந்தா. நானும் பார்த்துட்டு நல்லா இருக்கே. துப்பட்டா இல்லையா? எப்போ போடப்போறன்னு கேட்டா "இது உனக்குதாண்டா செல்லம்"ன்னு டெரர் ஆயிட்டா.இன்னொரு நாள் எப்படிடா தொப்பைய குறைக்கலாம்ன்னு பிளான் போட்டுட்டு இருக்கேன். டைட்ஸ் வாங்கிட்டு வந்து "இது போடு அம்மு. ஆர்ம்ஸ் சூப்பரா இருக்கு"ம்னு சொல்றா. விட்டா ஃபர்ஸ்ட் நைட்க்கு ரேமன்ட்ஸ்ல சூட் வாங்கித் தருவா. அதுல இருந்து எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

6) பதிவெழுத கஷ்டப்படுவேன். எதுவும் எழுதி டிராஃப்டில் வைக்காத நேரத்தில் தோழியே சரணம்ன்னு எழுத உட்கார்ந்தா தோழி அப்டேட்ஸ் வேகமா ரெடி ஆயிடும். இனிமேல முடியாது. மண்டையை உடைச்சு, மசாலவ தெளிச்சு கவிதையோ, புனைவோதான் எழுதணும். ம்ம்

7) முக்கியமா தூங்கலாங்க. நல்லா தூங்கலாம். தோழிகிட்ட இருக்கிற பெரிய பிரச்…….

 

j 020

பதிவு பாதிதான் இருக்குன்னு நினைக்காதிங்க. எனக்கு இருக்கிறதோ சின்ன இதயம். எவ்ளோ நேரம்தான் அதுவும் தோழி இனி இல்லைன்னுறத தாங்கும்? அதான் பாதில டப்ஸுன்னு வெடிச்சிடுச்சு. இனிமேல இந்த மாதிரி கொடூரமான தலைப்பு எல்லாம் கொடுக்காதிங்க. கார்க்கி பாவம்.

22 கருத்துக்குத்து:

Madumitha on July 4, 2010 at 11:50 PM said...

கார்க்கி - தோழி = ?

radhika on July 4, 2010 at 11:53 PM said...

karki with out thozhi????????

chanceless.

thiruvilayadal tharumi ippo ketta solvaru "senrthe iruppathu" karkiyum thozhiyumnu.

Dinesh on July 5, 2010 at 12:21 AM said...

parra ethukum thozhi'ngadan mudha ala vandhu comment podaranga...

தமிழ்ப்பறவை on July 5, 2010 at 12:33 AM said...

யோவ்... தோழி இல்லைன்னு, சொல்லியே ‘தோழி அப்டேட்ஸ்’ போட்டுட்ட... ஜகஜ்ஜாலக் கில்லாடியா நீர்...

சுசி on July 5, 2010 at 12:43 AM said...

கற்பனையே பண்ண முடியாத அளவுக்கு இருக்குதா என்ன.. அச்சச்சோ.. இந்த பழியெல்லாம் என்னய வந்து சேர போதாஆஆஆ..

ஆவ்வ்வ்.. இப்போ நான் பாவம்.

//இனிமேல இந்த மாதிரி கொடூரமான தலைப்பு எல்லாம் கொடுக்காதிங்க.//

சரிங்க. அடுத்த தடவை கர்ணகொடூரமான தலைப்பா கொடுத்துட்றேன். ஓக்கேவா??

யோ வொய்ஸ் (யோகா) on July 5, 2010 at 12:46 AM said...

ஆமாம், கார்க்கி பாவம்தான் சகா.

ஆமா யாரந்த கார்க்கி????

கயல் on July 5, 2010 at 1:17 AM said...

உங்கள பார்த்தா பாவம் இல்ல.. ரொம்ப பாவம்..ஆனா சுசி இந்த தண்டனை கொஞ்சம் அதிகம் தான் இவருக்கு.

//
Madumitha said...
கார்க்கி - தோழி = ?
//

இதுக்கு என்ன பதில்..?
என் பதில் null/0.

என்ன கார்க்கி சரியா?

ர‌கு on July 5, 2010 at 7:15 AM said...

//நல்லா தூங்கலாம்//

இனிமேதான் தூங்க‌ முடியாது ச‌கா

... on July 5, 2010 at 8:05 AM said...

சகா இனிமேல கொஞ்சம் பாத்து இருங்க..
நான் இல்லாம இருந்தா நீ இவ்ளோ சந்தோசமா இருப்பியான்னு ( உங்க feelingsa தப்பா புரிஞ்சுகிட்டு தான் :) ) உங்கள பெண்டு நிமிர்த்த போறாங்க உங்க தோழி...
சரி எப்படியோ, வெகு விரைவில் அடுத்த தோழி updates வந்துரும்.. ( எப்படி சமாதான paduthuneenganu தான்.. ஹி.. ஹி.. )

மகேஷ் : ரசிகன் on July 5, 2010 at 8:09 AM said...

:))))))))))))

தராசு on July 5, 2010 at 8:51 AM said...

ரைட்டு

ஷர்புதீன் on July 5, 2010 at 9:33 AM said...

:)

kumaresh on July 5, 2010 at 11:08 AM said...

nice one

விக்னேஷ்வரி on July 5, 2010 at 11:17 AM said...

ரொம்பப் பாவம் கார்க்கி.

தினேஷ் கமெண்ட் சூப்பர். :)

புன்னகை on July 5, 2010 at 12:40 PM said...

எங்களுக்கே உங்களை அப்படி நெனச்சு பாக்க பாவமா இருக்கு கார்க்கி! :-(

Kafil on July 5, 2010 at 4:21 PM said...

hehhehheh hhhheehhe.... ellam maaya ellam saayaa.. kuthunga esamaan kuthunga.. intha pombalangale ipdithaan..

பரிசல்காரன் on July 5, 2010 at 4:35 PM said...

கார்க்கி பாவம்தான்... ஆனா.. நாங்க அதைவிட பாவம் இல்லையா சகா...

அறிவிலி on July 5, 2010 at 7:13 PM said...

மேல இருக்கற கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன்

ஆதிமூலகிருஷ்ணன் on July 5, 2010 at 11:53 PM said...

பதிவு அழகு.

முடிவு கலக்கல்.

ILA(@)இளா on July 6, 2010 at 3:40 AM said...

படம் நல்லா இருக்கு.

Karthik on July 6, 2010 at 11:37 AM said...

:))))

kadaisila ennayum arasiyalvathi aakkiteenga karki..

vanila on July 6, 2010 at 8:54 PM said...

நல்ல பதிவு.. நன்றி கோயிஞ்சாமி..

 

all rights reserved to www.karkibava.com