Jul 2, 2010

திருந்துமா பதிவுலகம்?


 

  தமிழ் பதிவுலகம் வளர்ந்துக்கிட்டே இருக்கும் சமயத்தில்,  தினமும் பல புதிய பதிவர்கள் எழுத வந்துக் கொண்டிருக்கும் வேளையில், போட்டி அதிகமாகிக் கொண்டே போகும் நேரத்தில், **** காலத்தில், &&&&& கணத்தில், த்தில், தில் ல் ஸப்பா….. புதிய பதிவர்களுக்கு சில டிப்ஸ். அவ்ளோதாங்க விஷயம். சில பேரு இந்த வாரப் பதிவர் போடறாரு.  அப்ப நாம என்ன செய்யலாம்னு யோசிச்சதில் உருவானது இந்த அரிய பதிவு. வகுப்புக்கு போகலாமா நண்பர்களே?

how-to-blog-blackboard-classroom_id785240_size485

முதல் ஸ்டெப்.(நாம என்ன கணக்கா போடறோம்?) பேரு வைக்கிறது. உங்க உண்மையான பெயரிலே வெற்றிக்கான கீ, அதாங்க சாவி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அந்தப் பெயரையே வைத்துக் கொள்ளலாம். அல்லது புனைபெயர் யோசிக்க வேண்டும். வலையுலகம் ஒரு கடல். அதில் நீந்த கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் ஹாயாக பரிசல் ஓட்டி ஜெயித்தவர் பரிசல்காரன். அதே போல் நீங்களும் கட்டுமரக்காரன், மோட்டர் போட்காரன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். பரிசல் எல்லாம் ஜுஜுபி. என் டார்கெட்டே வேற என்று நினைப்பவர்கள் ஸ்பீடு போட்காரன், அல்லது அவரவர் டார்கெட்டுக்கு ஏற்ப டைட்டானிக் வரைக்கும் பெயர் வைத்துக் கொள்ளலாம்.தமிழ் 3000 வருட பழைமையான மொழி. அதற்கென ஒரு வைப்ரேஷன் உன்டு. எனவே முட்டாள் முருகேசன், லூஸ் மோகன் போன்ற பெயர்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதுவாகவே மாறக்கூடும்.வலைப்பூவின் பெயருக்கும் இது பொருந்தும்

நீங்கள் நகைச்சுவை திலகமா? காமெடி சும்மா காவிரி(கர்நாடகவில்) மாதிரி கரைபுரண்டு ஓடுமா? அப்ப பேரு வைப்பதில் சில சிக்கலுங்கோவ். ஏற்கனவே குசும்பன், நையாண்டி நைனா, குறும்பன்னு எல்லா பேரும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுவிட்டது. கவலை வேண்டாம். சில்மிஷ சித்தப்பா, நக்கலு நடராஜு, கிச்சு கிச்சு கிரண், என்று பல பெயர்கள் என்வசம் இருக்கு. உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்.

நீங்கள் மற்றவர்களை கலாய்க்க போகிறீர்கள் என்றால் மட்டுமே மேலே சொன்ன பெயர்கள். மற்றவர்களால் கலாய்க்கப்பட போகிறீர்கள் என்றால் வேறு சில பெயர்கள் உண்டு. உப்பு, சீனி, கறிவேப்பிலை என்பது போன்ற பெயர்கள் எளிதில் மற்றவர்கள் மனதில் ”சிக்கிட்டாண்டா ஒருத்தன்” என்ற நம்பிக்கையை தரும் என்று வரலாறு சொல்கிறது .

பேரு வச்சாச்சு? கடைக்கு வருபவர்களுக்கு சோறு வைக்கனும் இல்ல? அதாங்க பதிவு. என்ன எழுதலாம்? முதல் பதிவாக பிரபல, மூத்த,(அடைப்புக் குறிக்குள் ‘ர’ போட்டுக்கலாம்) பதிவர்களை திட்டி ஒரு பதிவு போடலாம். அல்லது, அப்போது வெளியாகும் ஏதாவது ஒரு படத்தை பொதுபுத்தியின் பார்வையில் இல்லாமல் வித்தியாசமாக யோசித்துப் பதிவு போடலாம். இதனால் நீங்கள் அறிவு ஜீவியாகவோ, அல்லது குறைந்தபட்சம் அறிவு மணிரத்னமாகவோ அடையாளம் காணப்படுவீர்கள். அப்புறம் என்ன? வித்தவுட்டில் நிற்கும் ரஜினி, ஆபாச நடிகர் சல்மான் கானின் அந்தரங்கம் என்று ஏதாவது கேள்வி கேட்கும் பதிவுகளாக போட்டு பிழைத்துக் கொள்ளலாம்.

எதுவுமே எழுத இல்லையா? அல்லது கோர்வையாக எழுத வரவில்லையா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு கலந்து கட்டி அடிக்கும் பதிவுகள். அவியல், காக்டெயில், கொத்து பரோட்டா, மிக்ஸ்ட் ஊறுகாய், கூட்டாஞ்சோறு போன்ற டைப் பதிவுகள் எழுதி காலத்தை ஓட்டலாம். ஜூவியில் இதை படிச்சேன். விஜய் டிவியில் அதைப் பார்த்தேன். நிலாவில் தண்ணி இருக்காம், அண்டார்டிக்காவிலும் ஊழல் இருக்காம்ன்னு நாலு மேட்டர கலக்கிட்டு, கடைசியா இவன் கவிதையை படிச்சேங்க. அட்டகாசம்ன்னு அடுத்தவன் கவிதை போட்டு முடிச்சிடலாம். நீங்க விக்ரம் ரசிகர் என்றால் தூள் என்றும் போடலாம். வருபவன் எல்லாம் கவிதை நல்லா இருக்குன்னு டைப் பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நல்லா இருக்குன்னு மட்டும் போடுவாங்க. இந்த மாதிரி பதிவுக்கு பேரு தான் ரொம்ப முக்கியம். இப்ப டிமாண்ட் கூட. பயப்படாதிங்க. அதுக்கும் எங்கிட்ட சரக்கு இருக்கு. ”சைனா சரக்கும் சில சைடிஷ்களும்”, ”தொகையறாவும், பல்லவியும், சரணமும்” , ”நச்சுன்னு நாலு மேட்டர்” இப்படி பல இருக்குங்க.

என்ன எழுதியும் பிரபலமாக முடியலையா? இருக்கவே சமூகம். உங்க கோவத்தையெல்லாம் காட்ட வழியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் குறித்து கிறுக்கலாம். சண்முகத்தை கேள்வி கேட்கலாம். எங்கெல்லாம் பிரச்சினை வருகிறதோ அத‌ற்கு நாமதான் விடிவெள்ளி என நாமே நினைத்துக் கொன்டும் தீர்வெழுதலாம். எனக்கு ரீமா சென் பிடிப்பதில்லை, அமர்த்தியா சென்னையே பிடிக்கும். எனக்கு கவுண்டமணி சத்தம் பிடிக்கும் அளவிற்கு கோவில்மணி சத்தம் பிடிக்காது என ஏதாவது சொல்லலாம்.

எழுதும் போது பல பிரச்சினை வரும். (பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்). அதில் முக்கியமானது ஸ்பெல்லிங் மிஸ்டேக். ”புண்ணியவான்”ன்னு போன பதிவுல சரியா எழுதி இருப்பிங்க. அடுத்த பதிவுல “புன்னியவான்” அப்படின்னு தெரியாம போட்டுடுவீங்க. யாராவது வந்து ”நேத்து சரியா எழுதின. இன்னைக்கு ஏன் குழப்பம்னு?” கேட்பாங்க. உடனே அசராம, இன்னைக்கும் “புண்ணியவான்” ன்னு எழுதினா இவன் ஒரே மாதிரி எழுதறான்னு சொல்லுவாங்க. அதான் டிஃப்ரென்ஸ் காட்றேன்னு சொல்லி சமாளிக்க தெரியனும். அது இல்லன்னா பின்னூட்டம் மட்டுமே போட்டு சூடு ஏத்துற ஜிமெயில் ஜின்னா, ஹாட்மெயில் அர்னால்ட் டைப் ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும்.

அவ்ளோதானான்னு கேட்காதிங்க. இப்படி ஆரம்பிங்க. அப்புறம் நீங்க‌ளும் என்னை மாதிரி அட்வைஸ் அயயசாமியா மாறிடுவீங்க.ஆல் தி பெஸ்ட்.

பி.கு: தலைப்பு சம்பந்தமே இல்லாம இருக்கான்னு யோசிக்காதிங்க. இதுவும் ஒரு பழைய டெக்னிக் தான்.உங்களுக்கு சொல்லிக் கொடுக்கத்தான் அப்ப‌டி வச்சேன் அடிச்சு ஆடுங்க பாஸ்.

47 கருத்துக்குத்து:

Sivaji Sankar on July 2, 2010 at 10:27 AM said...

:)

முரளிகண்ணன் on July 2, 2010 at 10:28 AM said...

நீல நிற கமெண்டுகள் அருமை

கும்க்கி on July 2, 2010 at 10:29 AM said...

உங்களுக்கு சொல்லிக் கொடிக்கத்தான்..

கொடிங்க..கொடிங்க...

ஹாட்மெயில் அர்னல்டு.

கும்க்கி on July 2, 2010 at 10:34 AM said...

கடல்லியே பரிசல் ஓட்டுனவரா...?
ஏம்ப்பா நீ அவர இப்படி ஓட்டர...?

கும்க்கி on July 2, 2010 at 10:35 AM said...

கட்டுமரக்காரன்” அப்படீன்னு வச்சு கடல்ல ஓடலாமுங்களா எசமான்..?

கும்க்கி on July 2, 2010 at 10:36 AM said...

தமிழ் 3000 வருட பழைமையான மொழி. அதற்கென ஒரு வைப்ரேஷன் உன்டு.

அதான் கோயமுத்தூரே குலுங்குச்சாமுல்ல....க.மொழி மாநாட்டுல.

Anbu on July 2, 2010 at 10:37 AM said...

:-))

கும்க்கி on July 2, 2010 at 10:38 AM said...

எனவே முட்டாள் முருகேசன்...


இந்த சித்தூரு., பெத்தூரு.,அந்தூரு..இந்தூரு முருகேசன்னு வச்சுக்கலாமுங்களா...?

வெறும்பய on July 2, 2010 at 10:39 AM said...

தங்களை எனது ஆஸ்தான குருவாக ஏற்றுகொள்கிறேன்..

கும்க்கி on July 2, 2010 at 10:39 AM said...

உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்...

சொல்லிப்போடுவேன்..அப்புறம் உங்களுக்குத்தான் சிக்கல்...பரவால்லையா..?

கும்க்கி on July 2, 2010 at 10:39 AM said...

வெறும்பய said...

தங்களை எனது ஆஸ்தான குருவாக ஏற்றுகொள்கிறேன்.

காணிக்கை எங்கே..?

கும்க்கி on July 2, 2010 at 10:41 AM said...

இதனால் நீங்கள் அறிவு ஜீவியாகவோ, அல்லது குறைந்தபட்சம் அறிவு மணிரத்னமாகவோ அடையாளம் காணப்படுவீர்கள்.

ஏன் இந்த பூக்கோ., ழான் சார்த்தர் ரேஞ்சுக்கு ஆக முடியாதுங்களா சாரே...?

கும்க்கி on July 2, 2010 at 10:42 AM said...

அடடா....பதிவு பிரமாதம்.

(பிஎஸ் என் எல் 3ஜி விளம்பரத்தில் வருவது போல படித்து கொல்லவும்)

தராசு on July 2, 2010 at 11:06 AM said...

திருந்துமா பதிவுலகம்?????

இதுல இருக்கற உள்குத்து எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா???

இப்படிக்கு

எல்லாத்துக்கும் கனிக்ஷன் குடுப்போர் சங்கம்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on July 2, 2010 at 11:15 AM said...

சாளரம்னு வந்தா கூரையையே தலை மேல போட்டா எப்படி? :)

சுசி on July 2, 2010 at 11:19 AM said...

அலுக்காம கிளாஸ் எடுக்கரிங்க வாத்யாரே..

roomno104 on July 2, 2010 at 11:27 AM said...
This comment has been removed by the author.
வெறும்பய on July 2, 2010 at 11:30 AM said...

காணிக்கை எங்கே..?

///

ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிறது ஆஸ்தான குருவே...

♠ ராஜு ♠ on July 2, 2010 at 12:10 PM said...

நான் ஏதாவது சொல்லி, அதை யாராவது ரிப்பிட்டு போட்டு. பதிலுக்கு நீங்க ஏதாவது சொல்லி...அட போங்கப்பா...!

ர‌கு on July 2, 2010 at 12:23 PM said...

//சில்மிஷ சித்தப்பா//

கில்மா ப‌ட‌ டைட்டில் மாதிரியிருக்கு :))

என் மனச் சிதறல்கள்... on July 2, 2010 at 12:29 PM said...

எதோ ஒரு உந்துதல்ல உள்ள வந்துட்டேன்..
கண்ண கட்டி பதிவுலகத்துல விட்ட மாதிரி இருந்தது..
இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்துருக்கு கார்க்கி..
நன்றி வாத்தியாரே...
இவண்,
ஒரு புதுப் பையன்..

ezhilan on July 2, 2010 at 12:58 PM said...

அய்யா வணக்கம். பதிவுலகம் பற்றி சிறிது கூறியுள்ளீர்கள்.இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் கூறினால் இனி வரும் நண்பர்களுக்கும் இப்போது ஏதோ கிறுக்கிக்கொண்டிருக்கும் சில அறிவு ஜீவிகளுக்கும் நன்மை பயக்குமே நல்லதை செய்வோம்.நல்லவர்களை வாழவைப்போம்.நாமும் நன்றாக வாழ்ந்து காட்டுவோம். காலிங்கராயர்.

வெடிகுண்டு முருகேசன் on July 2, 2010 at 1:01 PM said...

முட்டாள் முருகேசன், லூஸ் மோகன் போன்ற பெயர்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதுவாகவே மாறக்கூடும்
//


கலக்கல் :)

Anbu on July 2, 2010 at 1:05 PM said...

\\\♠ ராஜு ♠ said...

நான் ஏதாவது சொல்லி, அதை யாராவது ரிப்பிட்டு போட்டு. பதிலுக்கு நீங்க ஏதாவது சொல்லி...அட போங்கப்பா...!\\\

இந்த வசனம் யாருக்கு தல...

வெடிகுண்டு முருகேசன் on July 2, 2010 at 1:12 PM said...

அதில் நீந்த கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் ஹாயாக பரிசல் ஓட்டி ஜெயித்தவர் பரிசல்காரன்.
//


நீங்க ஜன்னல் வழி எட்டி பார்த்துகிட்டு இருக்கிங்க


சீக்கிரம் புக்கு போடுங்க

ஆதிமூலகிருஷ்ணன் on July 2, 2010 at 1:14 PM said...

பழைய கள், புதிய மொ.. இல்லையில்லை பழைய மொந்தையிலேயே..

வெடிகுண்டு முருகேசன் on July 2, 2010 at 1:16 PM said...

பதிவர்களை திட்டி ஒரு பதிவு போடலாம்
//


முக்கியமா அவனை தமிழ்மணத்தில் இருந்து தூக்கு
இவனை புறக்கனி போன்ற வார்த்தைகள் இருக்க வேண்டும் ::)

வெடிகுண்டு முருகேசன் on July 2, 2010 at 1:20 PM said...

பழைய கள், புதிய மொ.. இல்லையில்லை பழைய மொந்தையிலேயே.
//

வந்துட்டாரு மூலம் போய்யா பொத்திகிட்டு

இது மாதிரி அடிச்சி விரட்டும் பின்னுட்டங்கள் அனானி பெயரில் போடவேண்டும்

:)

வெடிகுண்டு முருகேசன் on July 2, 2010 at 1:23 PM said...

உங்க கோவத்தையெல்லாம் காட்ட வழியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் குறித்து கிறுக்கலாம்
//


ஒடுக்கபட்டவர்களை பற்றி கிறுக்காமல்
பாப்பான் இஸ்லாம் குறித்து எழுதினால் ஹிட்டு பறக்கும்

வெடிகுண்டு முருகேசன் on July 2, 2010 at 1:41 PM said...

அது இல்லன்னா பின்னூட்டம் மட்டுமே போட்டு சூடு ஏத்துற ஜிமெயில் ஜின்னா, ஹாட்மெயில் அர்னால்ட் டைப் ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும்
//

நீங்க சூடாவா இருக்கிங்க :))

பட்டாபட்டி.. on July 2, 2010 at 1:56 PM said...

முதல் பதிவாக பிரபல, மூத்த,(அடைப்புக் குறிக்குள் ‘ர’ போட்டுக்கலாம்) பதிவர்களை திட்டி ஒரு பதிவு போடலாம்.
//


டாங்ஸ் பிரபல வாத்தியாரே..
எதுக்குனு கேக்கிறீங்களா?

என்னொட கண்ண தொறந்த, குலசாமி நீங்க...ஹி..ஹி

வெண்பூ on July 2, 2010 at 2:02 PM said...

//
தமிழ் 3000 வருட பழைமையான மொழி. அதற்கென ஒரு வைப்ரேஷன் உன்டு. எனவே முட்டாள் முருகேசன், லூஸ் மோகன் போன்ற பெயர்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதுவாகவே மாறக்கூடும்.
//

மெய்ய‌லுமா? :)))

அப்ப‌ நான் இப்ப‌ இருக்குற‌த‌ விட‌ வெள்ள்ள்ள்ள்ள்ள்ளையாவா ஆகிடுவேன்? அவ்வ்வ்வ்வ்

சந்ரு on July 2, 2010 at 3:35 PM said...

ஆஹா.. இப்படி எல்லாம் இருக்கிறதா? தெரிந்திருந்தா நானும்..........

இரசித்தேன், சிரித்தேன்

Mythili on July 2, 2010 at 4:13 PM said...

enaku thamil-la eluthave varamatenguthu, nan enga pathivu podarathu....

Karthik on July 2, 2010 at 4:55 PM said...

என்ன சொல்றது? :)

மறத்தமிழன் on July 2, 2010 at 5:00 PM said...

கார்க்கி,

தலைப்பை பார்த்தவுடன் மறுபடியும் மொதல்ல இருந்தோன்னு
நினைச்சேன்.
நல்ல வேலை,அப்படியொன்றும் இல்லை.

மத்தபடி பதிவு...புதியவர்களுக்கு உதவலாம்.

கும்க்கி on July 2, 2010 at 5:39 PM said...

மறத்தமிழன் said...

மத்தபடி பதிவு...புதியவர்களுக்கு உதவலாம்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

இப்படிப்பட்ட நல்லவங்க இருக்கறதாலதான் ஏதோ கொஞ்சமாச்சும் மழை பெய்யுது....

மங்குனி அமைச்சர் on July 2, 2010 at 7:06 PM said...

அப்போ என்னோட நெக்ஸ்ட் டார்கெட் நீங்கதான்

பரிசல்காரன் on July 2, 2010 at 9:48 PM said...

//தமிழ் 3000 வருட பழைமையான மொழி. அதற்கென ஒரு வைப்ரேஷன் உன்டு//

மூன்று திருத்தங்கள்...

பழமையான
அதிர்வு
உண்டு


ஹி..ஹி..ஹி..

Anonymous said...

ஆஹா. எப்படி எல்லாம் யோசிக்கறீங்க. Excellent. அப்புறம், தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததுன்னா தமிழ் 3000 ஆண்டுகளை விட பழமையான மொழி.

ஜெட்லி... on July 2, 2010 at 10:51 PM said...

நல்ல ஐடியா...நான் வரும்போது இந்த மாதிரி
ஐடியா எல்லாம் கிடைக்கலிய....

லேகா on July 2, 2010 at 10:59 PM said...

//உப்பு, சீனி, கறிவேப்பிலை என்பது போன்ற பெயர்கள் எளிதில் மற்றவர்கள் மனதில் ”சிக்கிட்டாண்டா ஒருத்தன்” என்ற நம்பிக்கையை தரும் என்று வரலாறு சொல்கிறது//

:-))

ரிஷபன்Meena on July 3, 2010 at 9:44 AM said...

(பதிவு) உலகமே தெரியாத அப்பாவிகளுக்கு, இதைப் படித்து தெரிந்து கொள்ள பரிந்துரைக்கிறேன்.

தமிழ் பதிவுகள் மொத்தமாய் நீங்க சொன்ன வரையறைக்குள் தான் இயங்குது.

பின்னூட்ட சூறாவள்யாக வேண்டுமானால்

தல கலக்கிட்ட!!

நல்ல பகிர்வு நன்றி நண்பரே!

சாதிய வெறியனுகள விட்டுத்தள்ளுங்க தல

போன்ற டெம்ப்ளேட் கமெண்டுகளை ரெடியாக வைத்திருக்க வேண்டும்

ரமேஷ் வைத்யா on July 3, 2010 at 11:51 AM said...

பழைமை என்பதே சரி.
ஒரு மனுஷன் தப்பாக்கூட சரியா எழுத விடமாட்டீங்களே...

ப.செல்வக்குமார் on July 3, 2010 at 4:00 PM said...

///நீங்கள் நகைச்சுவை திலகமா? காமெடி சும்மா காவிரி(கர்நாடகவில்) மாதிரி கரைபுரண்டு ஓடுமா? அப்ப பேரு வைப்பதில் சில சிக்கலுங்கோவ். ஏற்கனவே குசும்பன், நையாண்டி நைனா, குறும்பன்னு எல்லா பேரும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுவிட்டது. கவலை வேண்டாம். சில்மிஷ சித்தப்பா, நக்கலு நடராஜு, கிச்சு கிச்சு கிரண், என்று பல பெயர்கள் என்வசம் இருக்கு. உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்////

நான் கோமாளி அப்படின்னு வச்சிருக்கேன் .. நல்லா இருக்கும்களா...???

Narendrakumar on July 4, 2010 at 12:55 AM said...

/உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்./

என் பெயர் நரேன் (http://naren-talk.blogspot.com)

கலாநேசன் on July 4, 2010 at 8:44 AM said...

//என் பெயர் நரேன்//

'நடுத்தெரு நரேன்.' நல்லா இருக்குங்களா. இல்லேன்னா விட்டுருங்க. அடிக்கல்லாம் வரக்கூடாது. அட கார்க்கில்ல பேர் வைக்கறேன்னாரு...

 

all rights reserved to www.karkibava.com