Jul 1, 2010

யூசர் பிசி


 

அதிசயமா நேத்து வேலையெல்லாம் கம்மியா இருந்துச்சு. சரி சில பேருக்கு ஃபோன் பண்ணி பேசலாம்ன்னு எடுத்தேங்க‌

இராவணன் படம் பத்தி கேட்கலாம்ன்னு விக்ரமுக்கு ஃபோன் போட்டா..
 நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்ற பின்புனு பாடுது.

சரி. தலைவர்கிட்டயாவது பேசலாம்ன்னு விஜய்க்கு ஃபோன போட்டா
அடங்கொப்புறான சத்யமா நான் காவல்காரன்னு பாடுச்சு. சரி படம் பேரு கன்ஃபர்ம் பண்னிட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.

அடுத்து தலகிட்ட பேசுவோம்ன்னு ஃபோன போட்டா ஆ மெல்ல நட‌ மெல்ல நட மேனி என்னாகும்ன்னு பாடுது. நாம ஏதாவது விளையாட்டா சொன்னாலும் ராஜா தம்பி கோச்சிக்கும்ன்னு கம்முன்னு வச்சிட்டேன்.

இதென்னடா வம்பா போச்சேன்னு தற்போதைய ஹாட் சூர்யாவுக்கு ஃபோன போட்டா "சிங்கத்த கூண்டுல கத்தி பார்த்திருப்ப.. சர்க்கஸ்ல கத்தி பார்த்திருப்ப. மொபைல்ல பேசி கேட்டிருக்கியா.." சொல்லுச்சு. லைட்டா அடிச்சாலே என் செல் காலி. இதுல ஓங்கியடிச்சா என்னாகுறதுன்னு அதையும் கட் பண்ணிட்டேன்.

இனி நோ சில்லறைன்னு டைரக்டா  எந்திரன் எப்போ வரும்ன்னு கேட்க சூப்பர்ஸ்டாருக்கு ஃபோன் போட்டா விடுகதையா இந்த வாழ்க்கைன்னு பாடுது

நமக்கும் சினிமாவுக்கும் ராசியில்லைன்னு பதிவர்கள் சில பேருக்கு ஃபோன் பண்ணேன். என்ன சொல்ல? யார் யார் என்னென்ன ரிங்டோன் வச்சிருக்காங்கன்னு நீங்க‌ளே பாருங்க,

1) கேபிள் சங்கர்  - சினிமா சினிமா..பாபா..சினிமா சினிமா

2) சிவராமன்(மங்களூர் சிவா) ‍  - என் கேள்விக்கு என்ன பதில்?

3) பரிசல் - நல்லவன்..எனக்கு நானே நல்லவன்

4) ஆதி   - பொண்டாட்டி சொன்னா கேட்டக்கனும் புத்தியில் வாங்கிப் போட்டக்கனும்

5) குசும்பன் -  சிரி சிரி சிரி..கண்ணில் நீர் வர சிரி

6) நர்சிம் -  அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்

இவங்க எல்லாம் வேஸ்ட்ன்னு கடைசியா "அந்த" பதிவருக்கு ஃபோன் போட்டேங்க. சத்யமா என்னால நம்ப முடியல. எப்ப பண்ணாலும் யூசர் பிசி பிசின்னே வருது.இப்ப கூட கடைசியா ட்ரை பண்ணேன்..ம்ம்..யூசர் பிசியாம்.யாராவது அவருடைய ரிங்டோன் என்னென்னு தெரிஞ்சா சொல்லுங்களேன்.

28 கருத்துக்குத்து:

Anbu on July 1, 2010 at 10:24 AM said...

me the first..

Anbu on July 1, 2010 at 10:25 AM said...

புன்னகை மன்னன் தீம் மீயூசிக்...

தாரணி பிரியா on July 1, 2010 at 10:31 AM said...

லேபிள் போதுமா

பரிசல்காரன் on July 1, 2010 at 10:34 AM said...

எனக்கு நீ சொன்ன பாட்டு ரெம்பப் பிடிச்சதுப்பா..

கிடைக்குதான்னு பார்க்கறேன்!

SanjaiGandhi™ on July 1, 2010 at 10:44 AM said...

நான் கூட என் நம்பருக்கு கூப்டு பார்த்தேன் கார்க்கி.. கொய்யால பிசி பிசின்னு சொல்லுது.. :)

பிரியமுடன் பிரபு on July 1, 2010 at 10:45 AM said...

who is that>

மங்களூர் சிவா on July 1, 2010 at 11:03 AM said...

:))
+1

சுசி on July 1, 2010 at 11:03 AM said...

சூர்யா சூப்பர்..

நேசன்™..., on July 1, 2010 at 11:39 AM said...

அந்தப் பிஸி பதிவரோட ரிங்க்டோன் " தோழியா அவள் காதலியா யாரடி?...........

நேசன்™..., on July 1, 2010 at 11:40 AM said...

\பரிசல்\................நீங்க......நீங்க......ரெம்ப நல்லவரு!...........

"ராஜா" on July 1, 2010 at 11:42 AM said...

சகா தப்பா உங்க ஏரியா கூர்க்காவுக்கு கால் போட்டா "உன்கொப்புரானு சத்தியமா நான் காவல்காரன்" பாட்டுதான் கேக்கும் ...

உங்க தலைவர் போன் எப்பவுமே switch offலேயே இருக்காமே ... கடன்காரங்க தொல்லை நெறைய இருக்குமோ?

(ஹீ ஹீ நீங்க ரொம்ப நல்லவரு கோவிச்சிக்க மாட்டீங்க .... )

ர‌கு on July 1, 2010 at 12:03 PM said...

லேபிள்ல‌ ரெண்டு மூணு வார்த்தைக‌ள் போட‌லாம். ஒரு ப‌த்தியே எழுதி புதிய‌ புர‌ட்சி ப‌டைத்திருக்கிறீர்க‌ள் :))

சும்மா விளையாட்டுக்குதான்னாலும் ந‌ர்சிம் ப‌த்தின‌ வ‌ரியை த‌விர்த்திருக்க‌லாம் ச‌கா. It hurts...:(

முரளிகண்ணன் on July 1, 2010 at 12:11 PM said...

நர்சிம் மொபைலில் இருக்க வேண்டிய ரிங் டோன்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

KATHIR = RAY on July 1, 2010 at 12:17 PM said...

"அந்த" பதிவருக்கு ஃபோன் போட்டேங்க
யூசர் பிசி பிசின்னே வருது

கொஞ்சம் அந்த மாதிரி சொல்றீங்களோ

தராசு on July 1, 2010 at 12:56 PM said...

இதுல ஒருத்தருக்கு "சம்சாரம் அது மின்சாரம்"ங்கற ட்யூனல்ல இருக்கணும்,

நீங்க ஏன் மாத்தி மாத்தி டெல்லிங்??

கார்க்கி on July 1, 2010 at 1:10 PM said...

அன்பு, ஹிஹிஹி

தா.பி, நானும் கேட்கிறேன். போதுமில்ல?

பரிசல், பூ விழுந்தா பூப்பாதை

சஞ்சய்,உஙக்ளுக்கு ஃபோன் பண்ணா ங்கொய்யால பிசின்னுதான் சொல்லும் :)

பிரபு, பஸ்லே சொல்ல நினைச்சேன். அது..அது..அது..ஹிஹி நான் தான்

நன்றி சிவா

நன்றி சுசி.

நேசன், அதெல்லாம் இல்லை பாஸ்

ராஜா, ஹிஹிஹி..ஹேஹேஹே..ஹாஹாஹா..முடியல சகா முடியல. செம ஜோக்

ரகு, நீங்க பாட்டுக்கு ஏதாவ்து பத்த வச்சிடாதிங்க..:).. பகடிய பகடியா
பாருங்க:)

முரளி, :)

கதிர், இல்ல இல்ல. இது இந்த மாதிரிதான்

தராசண்னே.. அதெல்லாம் மாறி அடங்கிட்டாரு.அதான்

பித்தன் on July 1, 2010 at 2:07 PM said...

நரசிம் போனில் இருக்க வேண்டிய ரிங் டோன்

சிரிச்சி சிசிசி வந்தா சீனா தானா.....

ஆதிமூலகிருஷ்ணன் on July 1, 2010 at 2:40 PM said...

hehe.. good selection of songs.

விக்னேஷ்வரி on July 1, 2010 at 2:52 PM said...

ஆதி, ஏன் சிரிப்போட இப்படி ஒரு சமாதானம் ;)

அன்புடன் அருணா on July 1, 2010 at 3:30 PM said...

/யூசர் பிசி பிசின்னே வருது/
அடடா!ஏமாந்துட்டீங்களா??அதுதான் அவங்க ரிங்க் டோனே!!

ILA(@)இளா on July 1, 2010 at 5:48 PM said...

நீங்கள் தொடர்பு கொண்ட சந்தாதாரர் தோழியோடு பேசிக்கொண்டிருக்கிறார். அநேகமாக நாளைக்கு இதே நேரம் அழையுங்கள்

கார்க்கி on July 1, 2010 at 6:06 PM said...

பித்தன், :)

நன்றி ஆதி..

விக்கி, இதோட விட்டொமேன்னு நினைக்கிறாரோ???

டீச்சர், ஹிஹிஹி..இப்படியெல்லாம் வைக்கிறாங்க??

இளா, சந்தாதாரரா?????????????

Karthik on July 1, 2010 at 8:28 PM said...

//ஆ மெல்ல நட‌ மெல்ல நட மேனி என்னாகும்

F2 ரேஸர் கிட்ட என்ன வெளாட்டு இது?

தமிழ்ப்பறவை on July 1, 2010 at 8:58 PM said...

மொக்கை.... :-)

ILA(@)இளா on July 1, 2010 at 9:19 PM said...

//சந்தாதாரரா/
ஷ்ஹ்ச் ஹ்ஹ்ச் நீங்கதான்பா

ILA(@)இளா on July 1, 2010 at 9:20 PM said...

யூசர் பிசி"//
User PC இப்படித்தான் நான் முதல்ல நினைச்சேன்

கார்க்கி on July 2, 2010 at 10:36 AM said...

கார்த்திக், :)))).. ம்க்கும்ண்ணே

தமிழ்ப்பறவை, கூப்ட்டிங்களா?

இளா, இது என்ன கவிதையா? பன்முகத்தன்மை இருக்கே!!!!

ராம்ஜி_யாஹூ on July 2, 2010 at 2:22 PM said...

I too read as Ilaa- User PC then only I realised user busy

Will Endhiran also be like Raavanan

 

all rights reserved to www.karkibava.com