Jul 27, 2010

ஏலகிரி –2


 

ஏலகிரி – முதல் பகுதி

பாராகிளைடிங். ஏலகிரியின் இன்னொரு சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று. காதல் வந்த பையா கார்த்தி ”அப்படியே றெக்கை கட்டி பறக்கிற மாதிரி இருக்கு”ன்னு சொல்வாரே!! அது போல உண்மையிலே பறப்பது எவ்வளவு சுகம்? அதுதான் பாராகிளைடிங். YASA என்ற அசோசியேஷன் ஒன்றிருக்கிறது. ஆண்டுதோறும் இவர்கள் நடத்தும் பாராகிளைடிங் விழா ஆகஸ்ட் மாதம் 27,28,29ல் நடைபெறவிருக்கிறது. ஏலகிரி செல்ல திட்டமிடும் சகாக்கள் இந்த நாட்களில் சென்றால் இன்னுமொரு அற்புதமான அனுபவம் கிட்டும். முறையான பயிற்சியோடு உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அதைப் பார்ப்பதும் அலாதியானதுதான்.  சேம்பிளுக்கு இந்த வீடியோ

  மலை என்றாலே ட்ரெக்கிங் போகத்தானே வேண்டும்? ஏலகிரி மலையில் ட்ரெக்கிங் செல்ல நினைப்பவர்கள் மேலே சொன்ன YASA  கிளப்பை தொடர்பு கொள்ளலாம். கைடு உடன் செல்வது பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குவதோடு பாதுகாப்பானதும் கூட. நேரமில்லாததால் நாங்கள் சிறிது தூரம் மட்டுமே சென்றோம். காடு எப்போதுமே எனக்கு விருப்பமானது. அடுத்த நொடி வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியத்தைப் போல காடும் ஒவ்வொரு அடியிலும் ஏதேனும் ஒரு ஆச்சரியத்தை வைத்திருக்கிறது. முன்னேறும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் ஒரு சிந்தனையை காடு தூண்டிக் கொண்டேயிருக்கிறது. தூரத்தில் தெரிந்த பெரிய கல்லை எப்படியாவது போய் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னேறிக் கொண்டிருந்தோம்.  இங்கேயெல்லாம் யாரும் எளிதில் வந்திருக்க மாட்டார்கள் என்றெண்ணிக் கொண்டிருக்கும் போதே அழகிய ஹார்ட் வடிவத்தினுள் ramesh love kanika  கண்ணில் பட்டது. காற்று புக முடியாத இடத்தில் கூட காதல் நுழையும் என்பார்கள். அங்கே காதல் இருந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ரமேஷின் சகாக்கள் சிலரின் பெயரும் கனிகாவின் தோழிகள் பெயரும் அதே அழகியலோடு செதுக்கப்பட்டிருந்தது.

DSC00697 DSC00711

(நடிகரும் இயக்குனரும்) 

  ஒரு வழியாக இரவு அறை வந்து சேர்ந்தோம். இரவு உணவு முடித்துக் கொண்டு 12 ஏக்கரையும் சுற்றி வந்தோம். நல்ல குளிர். கூடவே நல்ல இருள். பேசிக் கொண்டே நடந்தோம். சற்று திகிலாகத்தான் இருக்கு என்றேன் நான்.  திடீரென உற்சாகமானார் ஆதி. திகில் என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னவரின் மூளையில் கதையொன்று உதித்தது. நடைபயிற்சியை ரத்து செய்துவிட்டு இயக்குனர் ஆதியும், நடிகர் கார்க்கியும் அறையை நோக்கி விரைந்தோம். வழக்கம் போல் தயாரிப்பாளர் சோக முகத்தோடு எங்களை மெதுவாக பின் தொடர்ந்தார். படத்தின் வெற்றி அவரை சிரிக்க வைத்துவிடுமென்பது இயக்குனரின் நம்பிக்கை. இருளில் லொகேஷன் அருமையென்றாலும் கைவசம் இருந்த கேமரா அதற்கு தோதானது அல்ல என்பதால் அறைக்குள்ளே ஷூட்டிங். ரத்தம் உறையவைக்கும் அந்த திகில் குறும்படம் பற்றி எதுவும் பேசக்கூடாது என இயக்குனர் சொல்லியிருப்பதால் அமைதி காக்கிறேன். அடுத்து அருவிக்கு போவோம்.

  ஏலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது ஜலகம்பாறை என்ற அருவி. மலையின் உச்சியில் இருந்து அந்த அருவிக்கு இறங்க ஒத்தையடி பாதை இருக்கிறதாம். ஆனால் வழி தெரியாததால் நாங்கள் காரிலே செல்ல முடிவு செய்தோம். இன்னும் நாங்கள் குளிக்கவில்லை என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஏலகிரி மலையிறங்கி கூட்ரோடு வந்து வலதுபுறம் திரும்பினால் சென்னை.இடதுபுறம் திரும்பினால் திருப்பத்தூர். அங்கே இருந்து 16 கிமீ தூரம் சுமாரான சாலையில் சென்றால் மலையின் இன்னொருபுறம். அங்கே இருக்கிறது ஜலகம்பாறை அருவி. ஆள் நடமாட்டமே இல்லாத அந்த சாலையில் காரோட்டி பழக விரும்பினார் ஆதி. எனவே ஓட்டுனர் பொறுப்பை அவரிடம் தந்துவிட்டு நம்ம சகா கேட்ட கேள்விக்கு பதில் யோசிக்கத் தொடங்கினேன். அது என்ன ஜலகம்பாறை? இதுதான் கேள்வி. ஜலம் என்றால் நீர். கம் என்றால் வா. பாறை என்றால் தெரியுமே? அதனால் பாறைவழியாக நீரே வா என்பதுதான் அதன் அர்த்தம் என்றதைக் கேட்டு நாலாவது கியரில் இருக்கும்போதே வண்டியை நிறுத்தினார் ஆதி. எனக்கு ஓட்டத் தெரியலனாலும் பரவாயில்லை. நீ யோசிக்காத என்றபடி தற்காலிக பணியை ராஜினாமா செய்தார். ஏன் நம்ம ஊர் குழந்தைகள் அறிவாளிகள் ஆக முடிவதில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டேன். வாங்க நாம குளிக்க போவோம்.

DSC00734   DSC00683

(இரண்டும் ஒரே வேகத்தில் சென்றபோது எடுக்கப்பட்டது)

  வண்டியை நிறுத்தும் முன்னரே பார்க்கிங் டோக்கனை நீட்டினார். 20 ரூபாயாம். கூடவே ஃபால்ஸுல தண்ணி வருது சார் என்று அவர் சொன்ன செய்தி எனக்கும், சகாக்கும் சந்தோஷம் தந்தாலும் குளிக்கனுமா என்ற சோகம் ஆதியின் முகத்தில் காட்டு மரத்தில் படரும் கொடியைப் போல படர்வதை நான் கவனிக்க தவறவில்லை. துண்டோடும் மாற்றுத் துணியோடும் அருவியை நோக்கி நடந்தோம். அருவி ஏலகிரி அளவிற்கு கூட பிரபலமடையவில்லை. அருகே இருந்த முருகன் கோவிலுக்குத்தான் வந்திருந்த சொற்ப கூட்டமும். கோவிலுக்கு செல்லும் முன் அருவியில் குளிக்க வேண்டுமென்பது ஐதீகம் போல. அருவியை நெருங்கியதாக தெரியவில்லை. தண்ணீர் கொட்டும் எந்த சத்தமும் கேட்கவில்லை. ஆனால் எதிரில் நனைந்தபடி வந்த சிலர் நம்பிக்கையை தந்தார்கள். சென்னையில் குளிக்காமல், ஏலகிரி வந்தும் குளிக்காமல் இங்கே வந்துதான் குளிக்க வேண்டுமென்பது ஜலகம்பாறை முருகனின் ஆசைப் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அருவியை அடைந்தால்….

DSC00718 DSC00724

இதற்கு பெயர் அருவியாம். இதுக்கு குருவி படமே தேவல என்று கும்மாளமிட்டார் ஆதி. உண்மைதான். ஃபால்ஸ்ல தண்ணி வருதுன்னு பார்க்கிங் பெரியவர் சொன்ன செய்தி Falls news அல்ல, False news என்று புரிந்துக் கொண்டோம். சீசன் இல்லையென்றாலும் அருவி தோற்றமேயில்லை அதற்கு. வேறு வழியின்றி குளித்துவிட்டு… சரி நனைந்துவிட்டு மீண்டும் திரும்பினோம். நீங்கள் ஏலகிரி சென்றால் மறக்காமல் ஜலகம்பாறையும் சென்று பல்பு வாங்காமல் திரும்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

அதற்குள் சகாவின் அலைபேசியும், ஆதியின் அலைபேசியும் அலற ஆரம்பித்துவிட்டது. இதோடு ஜூட் விட வேண்டியதுதான் என்பதைப் புரிந்துக் கொண்டு வண்டியை சென்னைப் பக்கம் விட்டேன். வழியில் ஆம்பூரில் ருசியான பிரியாணி மூன்று வாங்கிக் கொண்டோம். கடைசி நிறுத்தமாக ஒரு மரத்தடியில் நிறுத்தி சிக்கனை ஸ்வாஹா செய்துவிட்டு மீண்டும் கிளம்பிய ஐந்தே நிமிடத்தில் ஒரு பெரிய்ய்ய்ய சத்தம். ஆதி வீட்டில் வெள்ளியிரவு கொசுக்களோடு போரிட்டுக் கொண்டிருந்தபோது கேட்ட அதே சத்தம். கொர்ர்ர்ர்ர்ர்..

DSC00663

30 கருத்துக்குத்து:

ILA(@)இளா on July 28, 2010 at 12:09 AM said...

//குறும்படம் பற்றி எதுவும் பேசக்கூடாது என இயக்குனர்//
ங்கொய்யால இன்னொன்னா? எப்படி? ஒரு இடத்துல உக்கார வெச்சிகிட்டு பேசுவீங்களே அதுதானே. நாங்க எல்லாம் என்னய்யா பாவம் பண்ணினோம்? இப்படி மொக்கை போட நாங்கதான் சிக்கினோமா?

ILA(@)இளா on July 28, 2010 at 12:11 AM said...

//ஃபால்ஸுல தண்ணி வருது சார் //
வேற, உஷா ஃபேன் விட்ட காத்தா வரம்போவுதுன்னு கேட்கலாம்னா.. படத்தைப் பார்த்தாதான் தெரியுது யாருக்கோ வருதுன்னு உச்சா போனது..

SenthilMohan on July 28, 2010 at 12:29 AM said...

எல்லாப் போட்டோக்கும் comment கொடுத்திட்டு கடைசி போட்டோக்கு மட்டும் போடல. Oh...For Readers comment?

தமிழ்ப்பறவை on July 28, 2010 at 12:55 AM said...

ஜூப்பர்... நைஸ் போஸ்ட்.
ரெண்டாவது பாரா அருமை...
சம்பந்தமேயில்லாத போஸ்ட்டில கூட தோழிகளை நுழைத்த கார்க்கியின் அறிவு என்னே!
//ரமேஷின் சகாக்கள் சிலரின் பெயரும் கனிகாவின் தோழிகள் பெயரும்//
:-)
நானும் இதே போல் ஒரு இடம் போக ப்ளான் பண்ணியாச்சு. எக்ஸிக்யூட் பண்ண வேண்டியதுதான் பாக்கி...

SenthilMohan on July 28, 2010 at 12:59 AM said...

//*ரமேஷின் சகாக்கள் சிலரின் பெயரும் கனிகாவின் தோழிகள் பெயரும் அதே அழகியலோடு செதுக்கப்பட்டிருந்தது.**/
நீங்க செதுக்குனத சொல்லாம விட்டுடீங்க. இல்ல அது ஏதும் தனிப் பதிவா?
//*சீசன் இல்லையென்றாலும் அருவி தோற்றமேயில்லை அதற்கு**/
2/3 வருடங்களாகவே அந்த அருவியில் நீர்வரத்து இல்லை என்று யாரோ சொன்னங்க.
//* குருவி தேவல என்று கும்மாளமிட்டார் ஆதி. **/
உனக்கு மட்டும் எப்டி சகா எதுகை மோனை-ல, 'குருவி,ஆதி'-னு தளபதி வந்துடுறார்?

அப்புறம் அங்க ஏதோ artificial lake ஒன்னு இருக்கு, boat pedaling கூட போகலாம்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அங்க போகலையா? இல்ல அதும் நீங்க குளிச்ச அருவி மாதிரி டுபாக்கூர் மேட்டரா?

sweatha on July 28, 2010 at 2:06 AM said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... on July 28, 2010 at 2:58 AM said...

//
அது என்ன ஜலகம்பாறை? இதுதான் கேள்வி. ஜலம் என்றால் நீர். கம் என்றால் வா. பாறை என்றால் தெரியுமே? அதனால் பாறைவழியாக நீரே வா என்பதுதான் அதன் அர்த்தம்
//
அடடா......... என்ன ஒரு விளக்கம்... உங்களோட விளக்கத்த ஜலகம்பாறைல எழுதி வைக்காம
வந்துட்டீங்களே...

சுசி on July 28, 2010 at 3:03 AM said...

// பாறைவழியாக நீரே வா என்பதுதான் அதன் அர்த்தம் //

கார்க்கி.. ஜலகம்பாறை அருவியில வந்தத விட ஜாஸ்தி தண்ணி என் கண்ல.. உங்க அறிவ நினைச்சு புல்லரிச்சு போயி வந்த ஆ க..

நல்ல பயணம்.. எங்களுக்கும்..

Mahesh on July 28, 2010 at 7:04 AM said...

நல்லா எஞ்சாய் பண்ணீங்களா....

நடிகர் தலைல தேன்கூடு... இயக்குனர் கைல லாலிபாப்.... ஏன் இப்பிடி?

இராகவன் நைஜிரியா on July 28, 2010 at 7:23 AM said...

மிக மிக சுவாரசியமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

vanila on July 28, 2010 at 8:30 AM said...

ரைட்டு..

ஜில்தண்ணி - யோகேஷ் on July 28, 2010 at 9:33 AM said...

போட்டோக்கள் செம செம

ஜாலியான அனுபவங்கள் :)

கார்க்கி on July 28, 2010 at 9:56 AM said...

இளா, அது எங்க குறும்பட பயணத்தில் முதல் முயற்சி. இது உலக குறும்ப்ட பயணத்திலே முதல் முயற்சி. 2 நிமிட திகில் படம். ஹிஹிஹி

செந்தில், அருவி ஃபோட்டோக்கு கூடத்தான் கமெண்ட்டல. அழகான ஃபோட்டோக்கு எதுக்கு சார் கமெண்ட்?
அப்புறம், பெடலிங் போட்லதான் நாங்க போனோம்.முதல் பகுதில படங்கள் இருக்கு பாருங்க

பரணி, நன்றி. எங்க சகா? ஹார்ட்டின்ல பேரு எழுதின இடத்துக்கா? ரைட்டு

நன்றி சுவேதா. காசு வருதான்னு பார்க்கலாம்

வழிப்போக்கன், நீங்க போனா எழுதிட்டு வர மாட்டிங்களா பாஸ்?

சுசி, ஹிஹிஹி...நன்றி

மஹேஷ், அதுதான் ஃபோட்டோகிராஃபியாம். நமக்கு அதெல்லாம் தெரியாது. விட்டுடுவோம் பாஸ் :)

நன்றி ராகவனண்ணே

வாநிலா, என்ன ரைட்டு?

நன்றி ஜில்தண்ணி

லோகேஷ்வரன் on July 28, 2010 at 10:08 AM said...

சகா ஜலகம்பரையில சீசன் ல போனா குளிக்க கூட விட மாட்டாங்க.. அவ்ளோ தண்ணி வரும் ... இப்போ சீசன் இல்ல ....

spice on July 28, 2010 at 10:08 AM said...

அடுத்த நொடி வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியத்தைப் போல ...........anbe sivan dialogue..my favorite too...

Anbu on July 28, 2010 at 11:15 AM said...

கடைசி போட்டோவில் இருக்குற பொம்மைக்குட்டி நல்லா இருக்கு அண்ணே...

முடிந்தால் குற்றாலம் வாங்க அண்ணே..கலக்கலா இருக்கும்..

வழிப்போக்கன் - யோகேஷ் on July 28, 2010 at 11:27 AM said...

//
வழிப்போக்கன், நீங்க போனா எழுதிட்டு வர மாட்டிங்களா பாஸ்?
//
போங்க பாஸ்...... நான் கல்வெட்டு ரெடி பண்ணி வக்கிற பிளான்ல இருக்கேன்...

தராசு on July 28, 2010 at 11:37 AM said...

அந்த திகில் பட இயக்குநர் ஏன் கிலி பிடித்து நிற்கிறார்????

Nivas on July 28, 2010 at 12:01 PM said...

//
அது என்ன ஜலகம்பாறை? இதுதான் கேள்வி. ஜலம் என்றால் நீர். கம் என்றால் வா. பாறை என்றால் தெரியுமே? அதனால் பாறைவழியாக நீரே வா என்பதுதான் அதன் அர்த்தம்
//

என்ன ஒரு தத்துவம், இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிட்டு நீங்களும் பக்கத்துல உக்காந்துக்கங்க, உங்களுக்கு பின்னல் வரும் சந்ததியினர் படிச்சி புரிஞ்சி தெளிவா நடந்துக்குவாங்க

M.G.ரவிக்குமார்™..., on July 28, 2010 at 12:52 PM said...

சகா கலக்கல்!....இதுக்காகவே நீங்க அடிக்கடி ஏதாவது டூர் போகலாம்!..........

அமுதா கிருஷ்ணா on July 28, 2010 at 1:02 PM said...

கடைசி போட்டோ ஆதி கார்க்கியினை மலை உச்சியிலிருந்து தள்ளி விடும் போது தயாரிப்பாளர் எடுத்தது என்று நினைக்கிறேன்..

ப.செல்வக்குமார் on July 28, 2010 at 1:21 PM said...

///ரத்தம் உறையவைக்கும் அந்த திகில் குறும்படம் பற்றி எதுவும் பேசக்கூடாது என இயக்குனர் சொல்லியிருப்பதால் அமைதி காக்கிறேன்///
வேண்டாம் .. இப்பவே பயமா இருக்கு ..!!

ப.செல்வக்குமார் on July 28, 2010 at 1:24 PM said...

///மீண்டும் கிளம்பிய ஐந்தே நிமிடத்தில் ஒரு பெரிய்ய்ய்ய சத்தம். ஆதி வீட்டில் வெள்ளியிரவு கொசுக்களோடு போரிட்டுக் கொண்டிருந்தபோது கேட்ட அதே சத்தம். கொர்ர்ர்ர்ர்ர்.////
நான் கூட பயந்தே போயிட்டேன் ..!!

ஆதிமூலகிருஷ்ணன் on July 28, 2010 at 4:18 PM said...

2 மணி நேரம் செலவழித்து போட்டிங் போனதை ஒரே வரியில் முடித்ததும், வேடிக்கை கூட பார்க்காத பாராகிளைடிங்கை ஒரு பாராவும் எழுதியதையும் தவிர, அழகாக, அளவாக எழுதப்பட்ட பயணக்கட்டுரை.

படிக்கவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறாய்.

மேலும் இந்தக் குட்டிப்பயணத்தை நீயே முழுமையாக கவர் செய்துவிட்டதால் நானும் எழுதி மக்களை சோதனை செய்யவேண்டாம் என நினைக்கிறேன். சரிதானே..

ஆதிமூலகிருஷ்ணன் on July 28, 2010 at 4:22 PM said...

அப்புறம் மீண்டும் மீண்டும் நான் இல்ல, நான் இல்லன்னு கத்துறதிலிருந்தே மக்களுக்கு விளங்கியிருக்கும் யார் குறட்டை விடுகிறார் என்பது. எனக்காவது பரவாயில்லை 7 கழுதை வயசாவுது (மனைவி இன்னும் ஒரு தடவை கூட குறட்டை என்ற சொல்லை சொல்லியதில்லை என்பது வேறு விஷயம்). ஆனால் உன் நிலை சிக்கல்தான். விடியோ ஆதாரமும் இருக்கிறது. குறட்டை விடுவதில் நீ சிங்கம் சூர்யாவைப்போல என்பது யாருக்கும் தெரியாமலிருப்பதே நல்லது. ஹிஹி..

ஆதிமூலகிருஷ்ணன் on July 28, 2010 at 4:24 PM said...

ஏற்கனவே ஊர்கூடி என்னை கும்முவார்கள். இந்த அழகில் ஏன் இத்தனை பில்டப்பு குறும்படத்துக்கு? இருக்கிறது, போட்டாலும் கும்மி.. போடாட்டாலும் கும்மி.. அவ்வ்வ்வ்...

நாய்க்குட்டி மனசு on July 28, 2010 at 6:14 PM said...

தோழி பேரை எங்கேயாவது எழுதிட்டு வர்றது தானே?

பிரதீபா on July 28, 2010 at 7:02 PM said...

எப்பாப் பாரு எல்லாரும் போன எடத்துக்கே போனா எப்படி தும்பி ? எங்க ஊரு பக்கம் வாங்க... கொடிவேரி, பவானி சாகர், கோபி, மத்தாளக்கொம்பு, பெரியவாய்க்கால், குண்டேரிப்பள்ளம், தெங்குமராட்டா, கடம்பூர் இன்னும் நிறைய இடங்கள் இருக்குங்க பாக்க.

கார்க்கி on July 29, 2010 at 12:13 AM said...

அனைவருக்கும் நன்றி

ஆதி, என்னது? குறட்டையா? கார்க்கிக்கு அரட்டை அடிக்கத்தான் தெரியும்

நாய்க்குட்டி, எத்தனை பேருங்க எழுதறது????

பிரதீபா,ரெண்டு நாளில் வந்து போற தூரம் இருக்கனும் :))

nivas@12 on July 29, 2010 at 7:35 PM said...

//தோழி பேரை எங்கேயாவது எழுதிட்டு வர்றது தானே?//

//எத்தனை பேருங்க எழுதறது????//

ada namba allu

 

all rights reserved to www.karkibava.com