Jul 21, 2010

பரிசல் 10க்கு எதிர் குத்து


 

   மனைவி கணவன் முகத்தில் குத்து விட நினைக்கும் (அல்லது விடும்) 10 தருணங்கள்ன்னு பெருசல்…சாரி, பரிசல் பதிவு போட்டிருக்காரு. நாமளும் ”தோழி டேஷ் விடும் 10 தருணங்கள்ன்னு எழுதலாம்னு உட்கார்ந்தேன். பத்தையும் நாமளே வாங்கினா நியாயமா? அதான் 5 பாயிண்ட் தோழி சொல்வது. 5 பாயிண்ட் நான் சொல்வது. சரிதானே?

Ladies first:

1) மெல்லியதாய் தூறல் போடும் மாலையில் கைக்கோர்த்து பீச்சில் சுற்றிவிட்டு, சில்லென்ற தென்றல் முகத்தில் மோத பைக்கில் கட்டியணைத்துக் கொண்டு லாங் டிரைவ் போய்விட்டு, போதும்போதுமென சாப்பிட்டு டின்னரை, தின்னராக மாற்றிவிட்டு அக்கடான்னு நாமும் டயர்டாகி மொபைலும் டயர்டாகி ஆஃபான உடன் படுத்த பின்பு தேவையில்லாம நடு ராத்திரி வீட்டுக்குள்ள எகிறி குதிச்சு ”குட் நைட் சொல்ல மறந்திட்டியே செல்லம்”ன்னு பேய் மாதிரி வந்து நிப்பானே. அப்ப..

2) நாளைக்கு மறக்காம 5 மணிக்கெல்லாம் பீச்சுக்கு வந்துடு அம்முன்னு சொல்லிவிட்டு 7.22 வரைக்கும் ஒளிஞ்சு இருந்து பார்த்துட்டு கிளம்பறப்ப வந்து முகத்துக்கு நேரா “ஓய்”ன்னு பயமுறுத்துவானே..அப்ப..

3) கோவிலுக்கு போய் சாமி கும்பிடாம போற வர்ற ஆண்ட்டிகளை சைட்டடிச்சிட்டு, வெளிய வந்து என்னடா பண்ணன்னு கேட்டா “இல்லை செல்லம். அந்த ஆண்ட்டியோட குழந்தை மாதிரி நம்ம குழந்தையும் சிரிக்கும்போது கன்னத்துல குழிவிழுமில்ல”ன்னு டகால்ட்டி வேலை காட்டுவானே..அப்ப..

4) அவன் பர்த்டேக்கு ஆசையா சட்டை வாங்கப் போன இடத்துல அதை மறந்துட்டு எனக்கு இந்த குர்தாதாண்டா பிடிச்சிருக்குன்னு  சொன்னத பெரிசா நினைச்சுக்கிட்டு அவன் பர்தேடே அன்னைக்கு வெட்கமேயில்லாம அந்த லேடீஸ் குர்தாவோட வந்து என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி “இப்ப ஓக்கேவா?நீ ஆசைப்பட்டா மாதிரியே வந்ததுட்டேன் கண்ணு”ன்னு மானத்தை வாங்குவானே..அப்ப..

5) லீவுக்கு ஊருக்கு போய்ட்டு வர்றன்னைக்கு, அவன பொறுத்தவரைக்கும் அதிகாலையான 7 மணிக்கே பஸ்ஸ்டாண்டுல பைக்கோடு காத்திட்டு இருக்கிறவன கட்டிப்பிடுச்சு பப்ளிக் இடம்னு கூட பார்க்காம ஆசையா முத்தம் கொடுத்தா “இன்னும் பல்லு விளக்கலையான்னு” கேட்பானே..அப்ப

____________________________________________________________________________

இப்ப ஜெண்டில்மேன் டர்ன்:

1) அழகா பாவாடை தாவணி போட்டுக்கிட்டு, தலை நிறைய மல்லியப் பூவை வச்சிக்கிட்டு, கண்ணாடி வளையல டசன் கணக்குல போட்டுக்கிட்டு எந்த மேக்கப்பும் இல்லாம பொங்கி வழியும் அழகோடு வர்றவ நெத்தில பொட்டு மட்டும் இல்லாம இருக்கிறத பார்த்துட்டு திட்டப் போனா “நீதாண்டா வைக்கணும். அதான்னு” இளிப்பாளே.. அப்ப கொடுக்கணும் கன்னத்துல ஒண்ணு

2) இடது பக்கம் கன்னம் மட்டும் இட்லி மாதிரி ஏன் வீங்கியிருக்குன்னு கேட்கும் போது “வீட்டுல நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு. நாங்களும் அவனும் உனக்கு ஒண்ணான்னு கேட்டாங்க. இல்லப்பா. அவன் தான் எனக்கு முக்கியம்ன்னு சொன்னேண்டா. அதான் அப்பா அடிச்சிட்டாருன்னு” மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு கதை விடுவாளே.. அப்ப வீங்காத இன்னொரு கன்னத்துல சப்புன்னு…

3) உன்னைக் கட்டிக்கிட்டு என்ன செய்யப் போறேனோ!! சமையல் பத்தி ஏதாவது தெரியுமா? கிச்சன் பக்கம் போயிருக்கியான்னு நாம வெசனத்துல வசனம் பேசறப்ப ”எனக்கு ஸ்டவ் பத்தியெல்லாம் தெரியாது. உன்னை லவ் பண்ண மட்டும்தான் தெரியும்ன்னு டீ.ஆரோட ரெண்டு விட்ட கொழுந்தியா மக மாதிரி பேசுவாளே. அப்ப நச்சுன்னு தலையில ஒண்ணு…

4) நம்ம க்ளோஸ் ஃப்ரெண்டுக்கு கால் பண்ணி இனிமேல அவன உன்கூட தண்ணிப் பார்ட்டிக்கு கூட்டிட்டு போனா அவ்ளோதான்ன்னு எதுக்கு மிரட்டினேன்னு கேட்டா “அவன் பொறந்ததுல இருந்து உன் ஃப்ரெண்டுதான். ஆனா நான் உனக்கு பொறக்கப் போற பொண்ணோட முதல் ஃப்ரெண்டுன்னு” டயலாக் விடுவாளே.. உஸ்ஸ்ஸ்.. அப்ப

5)  ஆஃபீஸ்ல வேலை கழுத்தை நெரிக்கும்போது இப்ப நீ வந்தே ஆகணும்ன்னு நச்சரிச்சு. அடம் புடிச்சு, செல்’லரிச்சு , டேமேஜர் கால்ல விழுந்து ஒரு வழியா அரை நாள் லீவ் போட வச்சு இன்னும் பல ச்சு வேலை செஞ்சு அவள பார்க்கப் போனா என்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுவாளே.. மவளே அப்படியே அவள..

_________________________________________________________________________________

 

 

 

என்னடா இதெல்லாம் இந்த ”அப்ப அப்ப” எல்லாம் அடிக்கிற தருணங்களான்னு சந்தேகமா இருக்கா? பரிசலுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. முகத்துல குத்து வாங்குறாரு. எனக்கு என்னங்க? இதெல்லாம் நாங்க இழுத்து வச்சு இச் இச் அடிக்கிற தருணங்கள்ன்னு தோழி சொல்ல சொன்னாங்க. டேஷ் விடன்னு தானே சொன்னேன்? அந்த டேஷ்ல முத்தம்ன்னு போட்டுக்கோங்க.

35 கருத்துக்குத்து:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) on July 21, 2010 at 7:53 AM said...

super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) on July 21, 2010 at 7:53 AM said...

me the 1st

நாய்க்குட்டி மனசு on July 21, 2010 at 7:55 AM said...

அதானே பார்த்தேன், கார்க்கியாவது தோழி முகத்தில குத்துறதாவது.

Faaique Najeeb on July 21, 2010 at 8:39 AM said...

உங்கள் இருவரையும் பார்க்கும் பொது அடுத்தவர்கள் டேஷ் விட நினைக்கும் சந்தர்ப்பம் பற்றியும் எழுத வேண்டாமா?

Cable Sankar on July 21, 2010 at 8:41 AM said...

இன்னும்...இன்னும்..இன்னும் எதிர்பார்த்தேன்..கிறேன்...:)

Faaique Najeeb on July 21, 2010 at 8:45 AM said...

குரல் இனிமையாக இருக்கிறது என்று விளையாட்டாக சொன்னதை சீரியசாக எடுத்து உன்னுடைய குரலில் பாடத்துவங்குவாயே.. ஷப்பா!!!! அப்ப வாய்லையே கும்'னு ஒன்னு...

தராசு on July 21, 2010 at 9:40 AM said...

என்ன கொடுமை சார் இது???

//பத்தையும் நாமளே வாங்கினா நியாயமா? அதான் 5 பாயிண்ட் தோழி சொல்வது. 5 பாயிண்ட் நான் சொல்வது. சரிதானே?//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... on July 21, 2010 at 10:00 AM said...

//
பரிசலுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. முகத்துல குத்து வாங்குறாரு. எனக்கு என்னங்க? இதெல்லாம் நாங்க இழுத்து வச்சு இச் இச் அடிக்கிற தருணங்கள்ன்னு தோழி சொல்ல சொன்னாங்க
//

சரியாத்தான் சொல்லி இருக்காங்க...

பிரசன்னா on July 21, 2010 at 10:02 AM said...

மனைவியும் இல்லாமல் தோழியும் இல்லாமல் அல்லாடுபவர்கள், இரண்டும் இருக்கும் நண்பர்களை ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்.. ஹீ ஹீ

http://tamilkothu.blogspot.com/2010/07/blog-post_21.html

புன்னகை on July 21, 2010 at 10:08 AM said...

Welcome back!!! :-)

தர்ஷன் on July 21, 2010 at 10:13 AM said...

கொஞ்சம் சினிமாத் தனமா இருக்கோ

vanila on July 21, 2010 at 10:17 AM said...

ரைட்டு ..

கார்க்கி on July 21, 2010 at 10:40 AM said...

நன்றி ரமேஷ்

நாய்க்குட்டி, ஹிஹிஹி

நஜீப், ஏன் இந்த் மர்டர்வெறி?

கேபிள்ஜி, உஸ்ஸ்ஸ்ஸ்

தராசண்னே, அப்ப நான் ‘அது” இல்லைதானே?

வழிப்போக்கான், தேங்க்ஸ் சொல்ல சொன்னாங்க

பிரசன்னா, செம குத்து சாரி..கொத்து பாஸ்

புன்னகை, நன்றி

தர்ஷன், எந்த சினிமா? களவானியா, கந்தசாமியா? :))

வாநிலா, ஓக்கேங்க

பித்தன் on July 21, 2010 at 10:56 AM said...

ஒரு பொண்ண உஷார் பண்ணனும்னா ரொம்ப மெனக் கெட வேண்டியது இருக்கு போல நமக்கு இந்த ஆட்டம் பிடிக்களைடோய், நான்கலீலாம் யூத்துஇல்ல....

பரிசல்காரன் on July 21, 2010 at 11:03 AM said...

என்னமோ நாங்க முத்தமே வாங்காத மாதிரியும் இவனுக குத்தே வாங்காத மாதிரியும்...


போங்கடா போங்கடா... இன்னும் நாலைஞ்சு வருஷம் கழிச்சு நீ எழுதப்போறத நானும் படிக்கத்தானே போறேன்..

vinu on July 21, 2010 at 11:03 AM said...

unga thozi updates eppa padithaalum orea kaathula pugai pugaiya varum ippo ennaddaaana


orea aasai aasai ya varuthu

naamalum kaathalikkalam pola irrukkea

விக்னேஷ்வரி on July 21, 2010 at 11:16 AM said...

எல்லாமே சூப்பர் கார்க்கி. நிஜமாவே சொல்லுங்க, தோழி பேர் லைலாவா...

விக்னேஷ்வரி on July 21, 2010 at 11:17 AM said...

போங்கடா போங்கடா... இன்னும் நாலைஞ்சு வருஷம் கழிச்சு நீ எழுதப்போறத நானும் படிக்கத்தானே போறேன்.. //

கிருஷ்ணா, நோ ஸ்டொமக் பர்னிங். சின்னப்பய, போகட்டும் பாவம். :)

LOSHAN on July 21, 2010 at 11:33 AM said...

பரிசல்காரன் on July 21, 2010 11:03 AM said...
என்னமோ நாங்க முத்தமே வாங்காத மாதிரியும் இவனுக குத்தே வாங்காத மாதிரியும்...//
haa haa..


பத்தும் முத்து..
ரசித்தேன். சிரித்தேன்..

நல்லாத் தான் வாங்கி இருக்கீங்க போலிருக்கே..
நீங்க எதை சொன்னீங்களோ அதை ;)

M.G.ரவிக்குமார்™..., on July 21, 2010 at 11:48 AM said...

\\போங்கடா போங்கடா... இன்னும் நாலைஞ்சு வருஷம் கழிச்சு நீ எழுதப்போறத நானும் படிக்கத்தானே போறேன்//36 வயதில் கல்யாணம் செய்ய வைக்க நினைக்கும் அடாவடி முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.!........
இவண்,
கார்க்கியின் தோழிக்குக் கோயில் கட்டும் கமிட்டி,
கொண்டயக் கவுண்டம் பாளையம் கிளை.

Balaji saravana on July 21, 2010 at 12:28 PM said...

கலக்கல் கார்க்கி..
இந்த பதிவை தோழி படித்துவிட்டு, நீங்கள் மேலும் நிறைய டேஷ்கள் வாங்க வாழ்த்துக்கள் சகா...

ஆதிமூலகிருஷ்ணன் on July 21, 2010 at 12:37 PM said...

கலக்கல்ஸ். ஒவ்வொன்றும் கவிதை. ரெண்டாம் பகுதியில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். குத்துக்கும், முத்துக்கும் நடுப்புள்ளியில் நின்றது சிறப்பு.

ர‌கு on July 21, 2010 at 12:44 PM said...

ஹாஹ்ஹா ப‌ரிச‌ல் க‌மெண்ட் சூப்ப‌ர் :)))

Nivas on July 21, 2010 at 1:42 PM said...

:-)

மோகன் குமார் on July 21, 2010 at 2:40 PM said...

Romantic :))

ப.செல்வக்குமார் on July 21, 2010 at 4:39 PM said...

ஓ. இதுதான் எதிர் பதிவா...??
அருமையா இருந்துச்சு அண்ணா ...!!

யோ வொய்ஸ் (யோகா) on July 21, 2010 at 6:42 PM said...

நாங்க இழுத்து வச்சு இச் இச் அடிக்கிற தருணங்கள்


அவ்வ்வ்வ் சகா

தெய்வசுகந்தி on July 21, 2010 at 7:28 PM said...

:-))!!!!!!!!!!!

ஆதிமூலகிருஷ்ணன் on July 21, 2010 at 8:27 PM said...

நல்லதொரு பிளாஸ்டராக எடுத்துக்கொண்டு நம் தளத்துக்கு வரவும்.

http://www.aathi-thamira.com/2010/07/blog-post_856.html

Joseph on July 21, 2010 at 8:46 PM said...

எனக்கு தெரியும்லே,
அதெல்லாம் கல்யாணமானவங்க ஏரியா கதவ சாத்திட்டு கால்ல விழுவாங்க. நாமெல்லாம் தோழின்னா டப்புன்னு விழுந்துருவோம்ல. எப்டி குத்துவிட முடியும்?

Karthik on July 21, 2010 at 8:55 PM said...

ரொம்ம்ம்ப நல்ல லவ்வா? முடியல. :))

மங்களூர் சிவா on July 21, 2010 at 9:53 PM said...

:)

ஜில்தண்ணி - யோகேஷ் on July 21, 2010 at 11:51 PM said...

பேஷ் பேஷ் நல்லா குத்துறீங்க போங்க :

நாங்களும் குத்துவோம்ல

http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_21.html

ILA(@)இளா on July 27, 2010 at 1:56 AM said...

போன வாரம் சிறந்த பதிவு

என்பார்வையில்(சிபஎபா)
, இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.

Anonymous said...

குத்துக்களும் அருமை
முத்தாக்களும் அருமை

 

all rights reserved to www.karkibava.com