Jul 9, 2010

ஆணிகள் அதிகமான நேரத்தில் பதிவு போடுவது எப்படி? - 10 வழிகள்


 

ஆணி அதிகமாகும் நேரங்களில் பெரும்பாலும் மீள்பதிவுகளே போடுகிறோம். அப்படியில்லாமல் புதிய பதிவு என்ன போடலாம் என சில டிப்சுகள்

1) டேமேஜர் ஆணியை அசைன் செய்தவுடன் ஆணியா என நான் அலறும் முன்பே ஆணி நம்மை கண்டு ஆ”நீயா” என அலறியது எனத் தொடங்கும் சிறுகதை எழுதலாம்.

2) தமிழ் மாதங்களில் ஆடிக்கு அடுத்து ஆனி வரும். எனவே அதிகம் ஆடினால் ஆனி தொடர்ந்து வரும் என எச்சரிக்கப் பதிவு போடலாம்.

3) நமீதா பொது நிகழ்ச்சிகளுக்கு சேலையில் வருவதும், அரசியல்வாதிகள் சொன்ன வாக்கை காப்பாற்றுவதும், காவிரியில்(தமிழகத்தில்) நீர் கரைபுரண்டு ஓடுவதும், நான் வேலை செய்வதும் அரிதாக நடப்பது என்பது போன்ற ஒப்பீட்டு பதிவுகள் போடலாம்.

4)ஆணியே இல்லை என்றும்
ஆணிப் புடுங்க வாய்ப்புமில்லை என்றும்
பிரிண்டர் ரூமில்
பிரிண்ட் எடுத்தப்படி பேசிக்கொண்டனர்;
பிரிண்ட் வந்ததும்
வெளியே வந்த நேரம்
கைகள் பல முளைத்திருந்த
கையில் அரிவாளோடு
பார்த்து முறுவலித்த
அய்யனார் போன்ற டேமேஜர்
அடுக்கினார் ஆணிகளை

என்பது போன்ற வீரியமிக்க அனுஜன்யா கவிதைகள் எழுதி கவிதை பதிவுகள் போடலாம்.

5) நான் ஆதவன் போன்ற ஆளாக இருந்தால் ஆணி புடுங்கலாம் வாங்க எனறு இது போன்ற சொந்த தயாரிப்புகளை ரிலீஸ் செய்யலாம்

ss

6) டேமேஜரிடம் இந்தக் கதையைக் காட்டி ஆணி புடுங்குவதால் நடக்கக்கூடிய விபரீதத்தை எடுத்து சொல்லி, அவரும் மனமிறங்கி உங்களை ஆணியிலிருந்தோ அல்லது வேலையில் இருந்தோ விடுவித்த உண்மை சம்பவத்தை பதிவாக போடலாம்.

7) ஆணி புடுங்கும் பெண்களே உஷார் என்பது போன்ற சமூக அக்கறை பதிவுகள் போடலாம்.

8) பொறுக்கி, தடியன், நாய், பேய் என யாரையாவது திட்டி பதிவெழுதலாம்.

சாரிங்க. நிஜமா ஆணி அதிகமா இருக்கு. அதனால் எட்டு வழிகளோடு எஸ் ஆகிக்கிறேன். நேற்று கமெண்ட்டிய நல் உள்ளங்களுக்கும், இன்று கமெண்ட்ட போடும் புண்ணியவான்களுக்கும், நன்றி நன்றி நன்றி

24 கருத்துக்குத்து:

ஆதிமூலகிருஷ்ணன் on July 9, 2010 at 1:42 AM said...

ரொம்ப வழக்கமான உத்திகள். லிட்டில் போரிங்.!

சுசி on July 9, 2010 at 2:31 AM said...

கலக்கிட்டிங்க கார்க்கி..

மீதி ரெண்டு வழிக்கும் வழி பண்ணுங்கப்பா.

சாந்தப்பன் on July 9, 2010 at 3:10 AM said...

இப்போதைய ட்ரெண்ட் 7 & 8-ம் தான்னு நினைக்கிறேன்!

பிரதீபா on July 9, 2010 at 3:11 AM said...

"பத்து பாத்தா மனுஷன் வாழ்வ பிரிச்சுக்கோ.. நீ எந்த பத்தில் இப்ப இருக்க நெனச்சுக்கோ.. "

DrPKandaswamyPhD on July 9, 2010 at 4:24 AM said...

கார்க்கி,
இன்னிக்குத்தான் ஆணி பிடுங்கறதுன்னா என்னன்னு கண்ணால பார்த்தனுங்க.

தெய்வசுகந்தி on July 9, 2010 at 4:33 AM said...

//தமிழ் மாதங்களில் ஆடிக்கு அடுத்து ஆனி வரும். எனவே அதிகம் ஆடினால் ஆனி தொடர்ந்து வரும் என எச்சரிக்கப் பதிவு போடலாம்.//

ஆனிக்கு அடுத்துதான் ஆடி வரும்னு ஞாயபகம்!! தப்போ? :-)

கலாநேசன் on July 9, 2010 at 6:14 AM said...

//தமிழ் மாதங்களில் ஆடிக்கு அடுத்து ஆனி வரும். எனவே அதிகம் ஆடினால் ஆனி தொடர்ந்து வரும் என எச்சரிக்கப் பதிவு போடலாம்.

ஆனிக்கு அடுத்துதான் ஆடி வரும்னு ஞாயபகம்!! தப்போ? :-)//

சரிதாங்க. ஆனிக்கு அடுத்து தான் ஆடி வரும். ஆனா ஆபிஸ்ல ஆணி கூடவே ஆப்பு வரும்.

Anonymous said...

நான் ஆதவன் என்பவர் யார். ரொம்ப நல்லா செய்திருக்கிறார். எப்படி என்று சொல்லிக்கொடுங்களேன்.

மகேஷ் : ரசிகன் on July 9, 2010 at 7:54 AM said...

:)

தராசு on July 9, 2010 at 8:54 AM said...

ஆணி அதிகம்னு சொல்றதால இத ஒத்துக்கறோம்

வழிப்போக்கன் on July 9, 2010 at 10:58 AM said...

;-)

வழிப்போக்கன் on July 9, 2010 at 11:11 AM said...

போடுறதுக்கு ஒண்ணுமே இல்லைனா கூட நிறைய பேர் மீள் பட்திவு தான் போடுறாங்க.

மோகன் குமார் on July 9, 2010 at 11:12 AM said...

Profile போட்டோவில் ஒல்லியாக தெரிகிறீர்களே எப்படிங்ண்ணா?

பரிசல்காரன் on July 9, 2010 at 12:11 PM said...

டாஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்....

ர‌கு on July 9, 2010 at 12:57 PM said...

//8) பொறுக்கி, தடியன், நாய், பேய் என யாரையாவது திட்டி பதிவெழுதலாம்//

ஆணாதிக்க‌வாதி....இதை விட்டுட்டீங்க‌ளே!

கார்க்கி on July 9, 2010 at 1:36 PM said...

ஆதி.. இதுவும் மீள்பதிவுதான் :)

சுசி, நன்றி

சாந்தப்பன், அது எவர்க்ரீன் சகா

பிரதீபா, நான் முதல் 10..

டாக்டர் கந்தசாமி, நன்றி :)

தெய்வ சுகந்தி, தலைகீழா சொல்லி பாருங்க. :)

கலாநேசன், கரீக்ட்டு

அனாமிகா, அவரே வந்து சொல்வார் :)

மகேஷ், :)

தராசண்ணே, நன்றி

வழிப்போக்கன், ஆமாங்க.

மோகன், சிம்பிள். நான் ஒல்லியா இருப்பதால் ஃபோட்டோவிலும் அபப்டி தெரிகிறேன்

பரிசல், அது டாயா? நாயா?

ரகு, என்னை நானே திட்ட ஐடியா தரணுமா? போங்கு சகா நீங்க‌

pinkyrose on July 9, 2010 at 2:29 PM said...

aama aani pidungrathuna ennappaaa?
apram naan pink cross aarambikkalaamnu irukan neenga than first member enna solringa?! :))))

vanila on July 9, 2010 at 5:44 PM said...

பேணிக்காத்திட வேண்டிய பொக்கிஷம் - தேடிட
காணினும் கிட்டுமோ வலைத்தளம் எதினினும்
நாணிக்குளைகின்ற நாய்தான் வாலைப்போல் -
கோணி எழுதாமல், ஆணித்தரமான வார்த்தைகளாலே..

வாழ்க நீ எம்மான்.. வளர்க நின் தொண்டு..

உண்மையாவே வேலை இல்லையா கார்க்கி ...

We pshychic "paul"iographic institute - an agency providing highest standards of professionalism in predictions for all types of sports. We pride ourselves on our efficient, that our predictions are 100 % trustable. we need some experienced pundits who can predict things such ......
Along with your resume also send the details mentioned below.

No of Hands:-
Total Years of Experience:-
Contact Details:-

pinkyrose on July 10, 2010 at 2:40 PM said...

கார்க்கி சார்...
யோசிக்காம எழுதுனா கமெண்ட் போட மாட்டீங்களா?

சௌந்தர் on July 10, 2010 at 2:43 PM said...

அட இன்னிக்குத்தான் ஆணி பிடுங்கறதுன்னா இது தான ஹி ஹி ஹி ஹி

ப.செல்வக்குமார் on July 10, 2010 at 3:57 PM said...

//ஆ”நீயா” என அலறியது எனத் தொடங்கும் சிறுகதை எழுதலாம்///
எல்லோருக்கும் ஒரே தலைப்பா ..??
//ஆடினால் ஆனி தொடர்ந்து வரும் என எச்சரிக்கப் பதிவு ///
ஆனிக்கு அப்புறம் தானே ஆடி வரும் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) on July 10, 2010 at 6:34 PM said...

pinnitteenga

Karthik on July 12, 2010 at 3:00 PM said...

நான் படிக்க விரும்புற மீள்பதிவு நீங்க எப்ப போடுவீங்கனு தெரியல. நிறைய இருக்கே கார்க்கி. :(

சி. கருணாகரசு on July 12, 2010 at 6:53 PM said...

ஆ”நீயா”
மிக ரசித்தேன்.

 

all rights reserved to www.karkibava.com