Jul 27, 2010

ஏலகிரி – 1


 

  ”இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவர் யாருமில்லை” என்றார் வைரமுத்து. சென்ற சில நாட்களில் இருந்த இறுக்கமான சூழ்நிலையில் மனம் சற்று களைத்துதான் போயிருந்தது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சகஜமானது என்றாலும் எதிர்க்கொள்ளும் தருணங்கள் உவப்பானவை. அப்படிப்பட்ட ஒரு வெள்ளிக்கிழமையன்றுதான் நம்ம சகா ஒருவர் அழைத்தார். சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் ஏலகிரி மலைக்கு செல்லவிருப்பதாகவும், வர இயலுமா என்றும் கேட்டார். உடன் நம்ம ஆதி தாமிராவும், இன்னொரு நண்பர் மட்டுமே வருவதாகவும் சொன்னார். ஹுண்டாய் ஐ10ல் அதற்கு மேல் எப்படி போவது? நடப்பது நடக்கட்டும்.. நாம் காரில்தானே போகிறோமென சரியென்று சொல்லி வைத்தேன்.

சனிக்கிழமை அதிகாலையில் கிளம்ப வேண்டியிருந்ததால் வெள்ளியிரவே ஆதியின் வீட்டிற்கு சென்றுவிட்டேன். கொட்டி கிடந்த படங்களில் எதைப் பார்க்கலாமென 20 நிமிடம் கலந்து பேசினோம். கடைசியில் கே டிவியில் ஓடிக் கொண்டிருந்த படிக்காதவனை பார்த்து முடித்தோம். அதன் பின் தூங்கப்போனால் தயாராக இருந்தது கொசுக்களின் படை. என்ன முயற்சித்தும் பலனில்லை. கிஞ்சித்தும் இரக்கமில்லாமல் கடித்து வைத்தன. ஓசியில் ஓ நெகட்டிவ் குடித்தன பல கொசுக்கள். சில மட்டுமே ஓல்ட்மங்க் பாசிட்டிவை ருசி பார்த்தது  என்பது ஆதியின் குறட்டை சத்தத்தில் தெளிவாக புரிந்தது. மறுநாள் அதிகாலை நால்வரோடு கிளம்ப வேண்டிய மகிழுந்து கடைசி நேர மாறுதலால் மூவரோடு திரு உலா கிளம்பியது. அர்ஜுனராக ஆதி பின்னிருக்கையில் அமர, கிருஷ்ணராக நான் ரதத்தை கிளப்பினேன்.10 மணிக்கு முன்பாகவே மலையேறிவிடுவோம். அங்கே ஒரு அருவி இருக்கிறது என்று பயண ஒருங்கிணைப்பாளர் சொன்னதால் குளிக்காமலே கிளம்பினோம். திருப்புகழ் நினைவில் இல்லாததால் கோல்கேட் உதவியுடன் பற்களை மட்டும் சுத்தப்படுத்திக் கொண்டோம்.

DSC00407 ஏலகிரி மலை வேலூர் அருகே இருக்கிறது. சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே இடது புறம் திரும்பினால் 25 கி.மீ தொலைவில் ஏலகிரி கூட்ரோடு. அங்கே இருந்து 13 கிமீ மலைப்பயணம். மற்ற மலை வாசஸ்தலங்களைப் போல ஏலகிரி மலைச்சாலை கடினமானதில்லை. நாமே எளிதில் ஓட்டிச் செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 1410 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஏலகிரியை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கிறார்கள். மற்ற விவரங்களை இங்கே சென்று படித்துக் கொள்ளலாம் என்பதால் நாம் எங்கள் பயணம் பற்றி பேசுவோம்.

வழுக்கி செல்லும் நடை என்னும் பதிவுலக டெம்ப்ளேட் பின்னூட்டம் போலல்லாது நிஜமாகவே வழுக்கி செல்லும் தார்ச்சாலையில் 120 கி.மீ வேகத்தில் போய்க் கொண்டிருந்தோம். பெட்ரோல் ஃபில் செய்து கொண்டு வந்திருந்த சகாவுக்கு வாயால் நன்றி சொன்னால் போதாது என்று வழியில் அவருக்கு காஃபி வாங்கித்தர ஒரு முறை நிறுத்தினோம்.  அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலூரைத் தாண்டிக் கொண்டிருந்த போது அழகான ஒரு இடத்தில் நிறுத்த சொன்னார் ஆதி. இது போன்றதொரு பயணத்தில் இதுதான் சுகம். நிறுத்தி நிறுத்தி ரசிக்கலாம். கைவசம் இருந்த SLRக்கு வேலை வந்துவிட்டது. சுட்டுத் தள்ளினோம். பெங்களூர் வரை காரில் பயணிப்பதே சுகமான அனுபவம். அப்படியொரு சாலைக்கு ஆங்காங்கே 40ரூபாய்(TOLL) கொடுப்பது நியாயம்தான்.

DSC00411   ஏலகிரி மலையடிவாரம் சேர்ந்த போது மணி 9.45. அருவியைப் பற்றி  விசாரித்தால் யாருக்கும் தெரியவில்லை. மலையேறும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆதியின் வார்த்தையில் தெரிந்த சோம்பேறித்தனத்தை மதித்து மேலே ஏறினோம். பல முறை சென்றிருந்தாலும் நானே வண்டி ஓட்டிக் கொண்டு மலையேறுவது இதுதான் முதல் முறை என்றேன். மலையேறிய பின் தான் வண்டி ஓட்டக் கூடாது என்றார் ஆதி. அவர் மலை அவருக்கு. குரங்குகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வண்டியை நிறுத்த லாவகமான இடம் கண்டவுடன் இறங்கினோம். அருவியைத் தேடினோம். கிடைக்கவில்லை. சிரித்தார் ஆதி. ஏன் எதற்கு என்றெல்லாம் சுஜாதாவைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆதியிடம் வேண்டாம். “காடுகள் மலைகள்.. தேவன் கலைகள்” எளிதில் சொல்லிவிட்டார் கவியரசர். எவ்வளவு உண்மையது!!. நேர்த்தியாய் வாரப்பட்ட தலைவியின் கேசத்தின் நடுவே செல்லும் வகிடைப்போல் அத்தனை அழகாய் தெரிந்தது சாலை. மேலே இருந்து பார்க்கும்போது சின்னஞ்சிறுசாய் வண்டிகள், வகிடில் ஊறும் பேன் போல தெரிந்தன.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தாஜ் ரிசார்ட் வரவேற்றது. 12 ஏக்கர் பரப்பளவில் நன்றாகவே இருந்தது ரிசார்ட். ஒற்றை கரும்புள்ளி அதன் அழகிற்கு போதாது என்பதால் மூவராக சென்றோம். குளியல் ஒன்றை போட்டுவிடலாம் என பார்த்தால்.. ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.. நம்ம ஊரில் எல்லாம் ரூமுக்குள்ளேதானே ஃப்ரிட்ஜ் வைப்போம். அங்கே ஃப்ரிட்ஜுக்குள்ளே ரூமை வைத்திருந்தார்கள். பெரியவர்கள் இடம் இருந்து ஏதாவது கத்துக்க வேண்டுமமென்பதால் ஆதியிடமிருந்து ”அதைக்” கற்றுக் கொண்டேன். முகத்தை ஃப்ரெஷாக கழுவிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு நான் ரெடி என்றேன். முதல் நாள் படிக்காதவன், கொசு, டிரைவிங் என எல்லாமும் சேர்ந்து முகத்தை டல்லாக்கியிருந்தது. மலர்ச்சி தர பெங்களூரில் இருந்து யாராவது வராமலா போய் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நானும், என் சோனி கேமராவும் கிளம்பினோம்.

DSC00485   ஏலகிரியில் பார்த்து ரசிக்க என அதிக இடங்கள் இல்லை. ஒரு அழகான ஏரி. அதிகம் கூட்டமில்லாத ஒரு பூங்கா. இன்னும் முகமூடி அணிந்துக் கொள்ளாத மலைகிராமத்து மக்கள். இது போன்று கிடக்கும் ஓரிரு பூக்களை அழகாய் தொடுக்க இதமான காலநிலை என்ற நூல். இன்னும் அதிகம் மாசுபடாத இடம். கூட்டமும் அதிகமில்லை. முதல் வேலையாக மூவரும் ஒரு போட்டில் ஏறி, ஏரியின் நடுப்பகுதிக்கு விரைந்தோம். சுற்றிலும் நீர். ஜில்லென்ற காற்று. ரசனையான நண்பர்கள். ஏதோ ஒன்று குறைவது போல் தெரிய, அழைத்தோம் ராஜாவை.

”அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது”

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா”

“சிலுசிலுவென குளிரடிக்குது சிறு அரும்புகள் மலர் வெடிக்குது”

ரம்மியமான பொழுதில்லையா? மனம் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.  விதவிதமான டிசைன்களில் மேகம் எங்களுக்காக வரைந்துக் கொண்டிருந்தது. யாரும் பேசவில்லை. ஒவ்வொருவரின் எண்ணங்களும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தன. முழுவதுமாய் ஏறட்டும். மற்றவை நாளை பகிர்ந்துக் கொள்கிறேன்.

 DSC00457 _____________________________________________________________________________

--- பாராகிளைடிங் (Paragliding)

--- trekking

--- நாங்கள் தேடிய அந்த அதிசய அருவி

--- ஆதியின் குறும்பட முயற்சி

இன்னும் சில விஷயங்கள் அடுத்த பாகத்தில்

26 கருத்துக்குத்து:

சினேகன் on July 27, 2010 at 12:27 AM said...

அண்ணா ஏழைகளின் ஓட்டி இல்லை
அது ஏழைகளின் ஊட்டி

தர்ஷன் on July 27, 2010 at 12:29 AM said...

//-- பாராகிளைடிங் (Paragliding)
--- trekking
--- நாங்கள் தேடிய அந்த அதிசய அருவி
--- ஆதியின் குறும்பட முயற்சி இன்னும் சில விஷயங்கள் அடுத்த பாகத்தில்//

sun tvயில் "நிஜம்" பார்க்கின்றீர்களோ

மின்னுது மின்னல் on July 27, 2010 at 12:37 AM said...

வர்ணனை நல்லா இருக்கு !!

சுசி on July 27, 2010 at 1:21 AM said...

இன்னமும் நான் ரெஸ்ட் எடுக்கலை.. அதுக்குள்ள அடுத்த பயணம் கூட்டிப்போறிங்களா..

ரொம்ப அழகா இருக்கு படங்கள்.
எழுத்தும் கூட.

தமிழ்ப்பறவை on July 27, 2010 at 1:26 AM said...

அப்பாடா... ஏலகிரியைப்பத்தி ஒரு போஸ்ட் போட்டு புண்ணியம் தேடிக்கிட்டீங்க... நல்ல பகிர்வு...

Balaji saravana on July 27, 2010 at 6:33 AM said...

//ஒவ்வொருவரின் எண்ணங்களும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தன//
எங்களுக்கும் தான் கார்க்கி..
உங்களோட சேர்ந்து பயணிச்ச மாதிரி இருக்கு உங்களோட சின்ன சின்ன வர்ணனைகள்..

Mahesh on July 27, 2010 at 6:53 AM said...

எங்க ஊர் உடுமலைப்பேட்டையைக் கூட ஏழைகளின் ஊட்டின்னு சொல்லுவாங்க. பரிசலைக் கேளுங்க... வாயெல்லாம் பல்லா சொல்லுவாரு :))))))))))))

பரிசல்காரன் on July 27, 2010 at 7:25 AM said...

எஞ்சாய் மேடி!


மகேஷை வழிமொழிகிறேன்..

நாய்க்குட்டி மனசு on July 27, 2010 at 8:08 AM said...

முகத்தை ஃப்ரெஷாக கழுவிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு நான் ரெடி என்றேன். //

குளிச்சிட்டு புறப்பட்டவங்களை விட fresh ஆக இருந்திருப்பீங்களே?
பாச்சலர் நீங்க ஊர் சுற்ற புறப்பட்டீங்க சரி, குடும்பஸ்தர்கள் குடும்பத்தை விட்டு இப்படி புறப்படறது சரியா?

இராகவன் நைஜிரியா on July 27, 2010 at 8:10 AM said...

மனதை லேசாக்க, இது மாதிரி பிராயணங்கள் அவசியம். மலைப் பகுதிகளுக்கு போகும் போது, அதுவும் நல்ல நண்பர்களுடன் போகும் போது இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... on July 27, 2010 at 8:31 AM said...

உங்க கூடவே ஏற்காடு வந்தது போல இருக்கு....

தராசு on July 27, 2010 at 8:51 AM said...

ரொம்ப நாளா போகணும்னு நினைச்ச இடம். நீங்க போயிட்டு வந்துட்டீங்க, கலக்கல் நடை. அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க தல

செ.சரவணக்குமார் on July 27, 2010 at 9:33 AM said...

சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் சகா.

களைத்துப்போன மனதிற்கு பயணத்தை விட சிறந்த மருந்து ஏதாவது இருக்கிறதா என்ன?

அடுத்த பகுதியையும் விரைவில் வெளியிடுங்கள்.

கார்க்கி on July 27, 2010 at 9:43 AM said...

சினேகன், நன்றி சார். மாத்திட்டேன். டைப்பிங் எரர்

தர்ஷன், ஹிஹிஹி

நன்றி மின்னல்

சுசி, நீங்களும் டூரா?

பரணி, இதுக்கு என்ன சகா அர்த்தம்? அப்போ எது பாவம் சேர்த்த பதிவு? :))

நன்றி பாலாஜி

மகேஷ், உடுமலைபேட்டை மலைப்பக்கமா???

பரிசல், பல்ல காணோமே?????

நாய்க்குட்டி, செல்லமே இண்டெரெஸ்ட்டா போது. அதை விட்டு வர முடியாதுன்னு சொன்ன என்ன செய்வாங்க?

ராகவன், உண்மைதாண்ணா...

வழிப்போக்கான், என் கூட வந்ததுக்கு நன்றி. ஆனா நாம போனது ஏலகிரி சாமி ஏலகிரி :)

நன்றி தராசு... போட்டுடுவோம்

நன்றி சரவணக்குமார்

Karthik on July 27, 2010 at 10:06 AM said...

ஜூப்பரு. தலைப்பு மட்டும் கார்க்கி டச் இல்லாம நான் வெச்ச மாதிரி இருக்கு. மத்தபடி ஜில்ல்ல். அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங். :)

அந்த ராஜா பாட்டெல்லாம் நீங்க பாடினீங்களா?

மங்களூர் சிவா on July 27, 2010 at 10:28 AM said...

nice.

எம்.எம்.அப்துல்லா on July 27, 2010 at 10:59 AM said...

//குரங்குகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது

//

அப்புறம் ஏன்டா நீங்களும் போனீங்க??

லோகேஷ்வரன் on July 27, 2010 at 10:59 AM said...

ஏலகிரி லிருந்து பத்து நிமிஷம் வந்தா எங்க ஊரு திருப்பத்தூர் .. சொல்லி இருந்தா நான் guide ah வந்து இருப்பனே சகா ..

Nivas on July 27, 2010 at 12:42 PM said...

ஆஹா! ஏலகிரி ஏழைகளின்-கிரி
அழகான வர்ணனை கார்க்கி
"போட்டோ கண்ணாடி முன்னாடி நின்னு எடுத்தீங்க போல"

ப.செல்வக்குமார் on July 27, 2010 at 2:05 PM said...

நல்லா இருக்கு அண்ணா ...!!
//சில மட்டுமே ஓல்ட்மங்க் பாசிட்டிவை ருசி பார்த்தது என்பது ஆதியின் குறட்டை சத்தத்தில் தெளிவாக புரிந்தது. ///
என்ன ஒரு நக்கல் ...!!

மோகன் குமார் on July 27, 2010 at 3:03 PM said...

சில மாதங்கள் முன் நாங்களும் சென்றோம்; உங்க ஸ்டைலில் நல்லா எழுதிருக்கீங்க. Good.

tamildigitalcinema on July 27, 2010 at 4:06 PM said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

கார்க்கி on July 27, 2010 at 4:07 PM said...

கார்த்திக், ரொம்ப நேரம் யோசிச்சேன். தூக்கம் வந்த்தால அபப்டியே போட்டேன். கார்த்திக் டச்ல தலைப்பு வச்சிருக்கேன் இல்ல!! அதுக்கு பாராட்டனும் நீ

நன்றி மங் சிங்.

அப்துல்லாண்ணே, அதனாலதான் உங்கள் விட்டுட்டு நாங்க மட்டும் போனோம்

லோகேஷ், மிஸ் ஆயிடுச்சே சகா.. விடுங்க அடுத்த மாசம் வந்தாலும் வருவேன். வேற டீமோட

நிவாஸ், எபப்டி கண்டுபிடிச்சிங்க சகா? சூப்பர் :)))

நன்றி செல்வக்குமார்

நன்றி மோகன். எங்க தங்கனிங்க?

லோகேஷ்வரன் on July 27, 2010 at 6:12 PM said...

அருவி ???? ஒ ஜலகாம்பாறைய சொல்றீங்களா ?

Kathir on July 27, 2010 at 10:26 PM said...

சுவாரஸ்யம்..

Nivas on July 28, 2010 at 11:31 AM said...

//எபப்டி கண்டுபிடிச்சிங்க சகா? சூப்பர் :)))//

கேமரா SONY தான? அத வச்சிதான் சகா. Mirror Image .

 

all rights reserved to www.karkibava.com