Jul 30, 2010

கும்மலாம் வாங்க

56 கருத்துக்குத்து

 

image

 

இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் அப்துல்லாவிற்கும்,

 

ca copy

அக்மார்க் யூத் கேபிள் சங்கர் அவரக்ளுக்கும்

 

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

டிஸ்கி: பர்ட்டே அன்று அடிக்கத்தான் கூடாது. கும்மலாம். ஆசை தீர கும்மலாம். ஸ்டார்ட் மீஸீக்

Jul 28, 2010

ஜோக்கர் ஏழு

22 கருத்துக்குத்து

 

அப்போது ஏழுமலை தண்ணியடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்தியிருந்தான்.பாலாஜியின் நண்பன் ஒருவனின் பிறந்த நாள் ட்ரீட்டில் மட்டும் அடிப்பதற்கு ஆறுவிடம் அனுமதி வாங்கிக் கொண்டான். இரண்டு ஃபுல் எம்சியும் ஒரு டஜன் பியர்களும் அடிப்பதற்கு வெறும் எட்டு பேர் மட்டுமே இருந்தோம். வரவேண்டியவர்களில் மூவர் வராதது ஏழுவுக்கு அதீத சந்தோஷத்தை கொடுத்தது.

   சைட் டிஷ்களும்,சாப்பிட சப்பாத்திகளும் நிரம்பி வழிந்தன. சியர்ஸ் சொல்லி முதல் சிப் மட்டுமே அடித்திருந்தோம். முதல் சிப்பிலே ஹீரோ ஆட ஆரம்பித்தார். பர்த்டே பேபிக்கு ஏழுமலையின் லீலைகள் தெரியாது. சப்பாத்தியை ஒரு கடி கடித்த பேபி சொன்னார்

"மச்சி சப்பாத்தி சாஃப்ட்டா(soft) இருக்குடா. எங்க வாங்கின?"

"சாப்ட்டா எப்படிடா இருக்கும்? காலியாயிடுமே" என்றான் ஏழு.

"இல்ல. தின்னா(Thin) இருக்குன்னு சொன்னேன்"

"தின்னா மட்டும் எப்படிடா இருக்கும்"?.

ங்கொய்யால உனக்கு சப்பாத்தி கிடையாது

எனக்கு மெஸ்சில் இருந்து கொண்டு வந்த‌ உப்புமாவே போதும்.

சும்மா சொன்னேன்டா. கோச்சிக்காத.

அதுக்கில்லடா. உப்புமா வாரத்துல ஒரு நாள்தான் போடறாங்க. அதான் உப்புமா சாப்பிட்டாவாது என் உடம்பு "உப்பு-மான்னு” பார்க்கிறேன்

(வெறுப்புடன் பாலாஜி பக்கம் திரும்பி சொன்னான்)

உஸ்ஸ்ஸ். போதுமடா சாமி.  எனக்கு தக்காளி ரசம் வேணும் மச்சி.சரக்கடிச்சா அதான் நம்ம ஃபேவரிட்.

(குறுக்கே பாய்ந்த ஏழு சொன்னான்)

எங்க ஹாஸ்டல் மெஸ்ஸுல ரசம் ரொம்ப தண்ணியா இருக்கும் சார்.

ரசம் அப்படித்தாங்க இருக்கும்

அட நீங்க வேற எங்கம்மா நல்லா ரவுண்டா கெட்டியா செய்வாங்க.

என்னது கெட்டியாவா?

ஆமாம் பாஸ். ஆனா அது தக்காளி ரசம் இல்ல. அதிரசம்ன்னு சொல்வோம்.

பாதரசத்தை முகத்தில் கொட்டியது போல் கடுப்பான அவரிடம் மீண்டும் சொன்னான் ஏழு

“இப்ப நமக்கு தேவை அதிரசமோ தக்காளி ரசமோ இல்ல சார். சமரசம் தான். சமாதானமா போயிடுவோம்.

தன் பங்குக்கு ஒரு ரசத்தை சொல்லுவோமென பாலாஜியும் களத்தில் இறங்கினான் “பார்த்து ஏழு. அப்புறம் அவன் விரசமா திட்டிடுவான்”

பழரசம் குடிக்கிறப்ப நவரசமும் வெளிய வரத்தாண்டா செய்யும்.இல்லைன்னா இந்த கருமத்த எதுக்கு குடிக்கனும்?

கடுப்பான பர்த்டே பாய் ஆறு பக்கம் திரும்பி “can i say something?” என்றான். அதற்குள் அடுத்த சிப்பை சுவைத்த ஏழுவுக்கு கோபம் குலுங்கிய பியர் போல பொத்துக் கொண்டு வந்தது.

டேய். யாரை பார்த்து கேணைன்னு சொல்ற?”

என்னடா உளர்ற என்றான் ஆறு

இவன்தானே மச்சி உன்னைப் பார்த்து “கேணை சே சம்திங்க்”னு சொன்னான்

என்ன செய்வது என்று புரியாத ஆறு பர்த்டே பேபியை வெளியே அழைத்து சென்றான். ஏழுவைப் பற்றி விளக்கி சொன்னான். பியருக்கும், தண்ணிக்கும், ஏழுவுக்கும் இடையே இருக்கும் பந்தம் அவருக்கு விளக்கப்பட்டது.உள்ளே  வரும்போது சிரித்துக் கொண்டே வந்தார்கள். ஏழுவைப் பார்த்து பிறந்தநாள் கொயந்த சொல்லுச்சு

“பீர்பால் கூட இப்படித்தான். ஏதாவது காமெடியா சொல்லிட்டே இருப்பார். ஆனா புத்திசாலித்தனமா பேசுவார். எனக்கு இவர புடிச்சு இருக்கு”

அப்படி புத்திசாலித்தனமா ஏதாவது பண்ணான்னா பரவாயில்லையே. இவன் ஒரு ஜோக்கருங்க என்று ஆறு சொன்னவுடன் ஏழுவுக்கு அழுகை அழுகையாக வந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் வேகமாக அறையை விட்டு வெளியேறினான். தடுக்கப் போன பாலாஜியையும் தடுத்து நிறுத்தினான் ஆறு. அரை மணி நேரம் கழித்து கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடனும், கண்ணில் கொஞ்சம் கண்ணீருடனும் வந்தான் ஏழு.

எங்கடா போனா? எதுக்கு அழுவுற என்றேன் நான்.

அதான் சொன்னானே.. பீர்பால் தான் புத்திசாலியாம். அதான் நானும் புத்திசாலி ஆகப் போகிறேன் என்றபடி பிளாஸ்டிக் பையிலிருந்த பால்பாக்கெட்டை எடுத்தவன் சொன்னான்.

“இந்த பீரோட இந்த பாலை மிக்ஸ் பண்ணா பீர்பால். அதை அடிச்சா நானும் புத்திசாலி ஆயிட போறேன்.”

என்ன செய்வதென்று தெரியாமல் கன்னாபின்னாவென சிரித்து வைத்தோம்.

Jul 27, 2010

ஏலகிரி –2

30 கருத்துக்குத்து

 

ஏலகிரி – முதல் பகுதி

பாராகிளைடிங். ஏலகிரியின் இன்னொரு சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று. காதல் வந்த பையா கார்த்தி ”அப்படியே றெக்கை கட்டி பறக்கிற மாதிரி இருக்கு”ன்னு சொல்வாரே!! அது போல உண்மையிலே பறப்பது எவ்வளவு சுகம்? அதுதான் பாராகிளைடிங். YASA என்ற அசோசியேஷன் ஒன்றிருக்கிறது. ஆண்டுதோறும் இவர்கள் நடத்தும் பாராகிளைடிங் விழா ஆகஸ்ட் மாதம் 27,28,29ல் நடைபெறவிருக்கிறது. ஏலகிரி செல்ல திட்டமிடும் சகாக்கள் இந்த நாட்களில் சென்றால் இன்னுமொரு அற்புதமான அனுபவம் கிட்டும். முறையான பயிற்சியோடு உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அதைப் பார்ப்பதும் அலாதியானதுதான்.  சேம்பிளுக்கு இந்த வீடியோ

  மலை என்றாலே ட்ரெக்கிங் போகத்தானே வேண்டும்? ஏலகிரி மலையில் ட்ரெக்கிங் செல்ல நினைப்பவர்கள் மேலே சொன்ன YASA  கிளப்பை தொடர்பு கொள்ளலாம். கைடு உடன் செல்வது பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குவதோடு பாதுகாப்பானதும் கூட. நேரமில்லாததால் நாங்கள் சிறிது தூரம் மட்டுமே சென்றோம். காடு எப்போதுமே எனக்கு விருப்பமானது. அடுத்த நொடி வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியத்தைப் போல காடும் ஒவ்வொரு அடியிலும் ஏதேனும் ஒரு ஆச்சரியத்தை வைத்திருக்கிறது. முன்னேறும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் ஒரு சிந்தனையை காடு தூண்டிக் கொண்டேயிருக்கிறது. தூரத்தில் தெரிந்த பெரிய கல்லை எப்படியாவது போய் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னேறிக் கொண்டிருந்தோம்.  இங்கேயெல்லாம் யாரும் எளிதில் வந்திருக்க மாட்டார்கள் என்றெண்ணிக் கொண்டிருக்கும் போதே அழகிய ஹார்ட் வடிவத்தினுள் ramesh love kanika  கண்ணில் பட்டது. காற்று புக முடியாத இடத்தில் கூட காதல் நுழையும் என்பார்கள். அங்கே காதல் இருந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ரமேஷின் சகாக்கள் சிலரின் பெயரும் கனிகாவின் தோழிகள் பெயரும் அதே அழகியலோடு செதுக்கப்பட்டிருந்தது.

DSC00697 DSC00711

(நடிகரும் இயக்குனரும்) 

  ஒரு வழியாக இரவு அறை வந்து சேர்ந்தோம். இரவு உணவு முடித்துக் கொண்டு 12 ஏக்கரையும் சுற்றி வந்தோம். நல்ல குளிர். கூடவே நல்ல இருள். பேசிக் கொண்டே நடந்தோம். சற்று திகிலாகத்தான் இருக்கு என்றேன் நான்.  திடீரென உற்சாகமானார் ஆதி. திகில் என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னவரின் மூளையில் கதையொன்று உதித்தது. நடைபயிற்சியை ரத்து செய்துவிட்டு இயக்குனர் ஆதியும், நடிகர் கார்க்கியும் அறையை நோக்கி விரைந்தோம். வழக்கம் போல் தயாரிப்பாளர் சோக முகத்தோடு எங்களை மெதுவாக பின் தொடர்ந்தார். படத்தின் வெற்றி அவரை சிரிக்க வைத்துவிடுமென்பது இயக்குனரின் நம்பிக்கை. இருளில் லொகேஷன் அருமையென்றாலும் கைவசம் இருந்த கேமரா அதற்கு தோதானது அல்ல என்பதால் அறைக்குள்ளே ஷூட்டிங். ரத்தம் உறையவைக்கும் அந்த திகில் குறும்படம் பற்றி எதுவும் பேசக்கூடாது என இயக்குனர் சொல்லியிருப்பதால் அமைதி காக்கிறேன். அடுத்து அருவிக்கு போவோம்.

  ஏலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது ஜலகம்பாறை என்ற அருவி. மலையின் உச்சியில் இருந்து அந்த அருவிக்கு இறங்க ஒத்தையடி பாதை இருக்கிறதாம். ஆனால் வழி தெரியாததால் நாங்கள் காரிலே செல்ல முடிவு செய்தோம். இன்னும் நாங்கள் குளிக்கவில்லை என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஏலகிரி மலையிறங்கி கூட்ரோடு வந்து வலதுபுறம் திரும்பினால் சென்னை.இடதுபுறம் திரும்பினால் திருப்பத்தூர். அங்கே இருந்து 16 கிமீ தூரம் சுமாரான சாலையில் சென்றால் மலையின் இன்னொருபுறம். அங்கே இருக்கிறது ஜலகம்பாறை அருவி. ஆள் நடமாட்டமே இல்லாத அந்த சாலையில் காரோட்டி பழக விரும்பினார் ஆதி. எனவே ஓட்டுனர் பொறுப்பை அவரிடம் தந்துவிட்டு நம்ம சகா கேட்ட கேள்விக்கு பதில் யோசிக்கத் தொடங்கினேன். அது என்ன ஜலகம்பாறை? இதுதான் கேள்வி. ஜலம் என்றால் நீர். கம் என்றால் வா. பாறை என்றால் தெரியுமே? அதனால் பாறைவழியாக நீரே வா என்பதுதான் அதன் அர்த்தம் என்றதைக் கேட்டு நாலாவது கியரில் இருக்கும்போதே வண்டியை நிறுத்தினார் ஆதி. எனக்கு ஓட்டத் தெரியலனாலும் பரவாயில்லை. நீ யோசிக்காத என்றபடி தற்காலிக பணியை ராஜினாமா செய்தார். ஏன் நம்ம ஊர் குழந்தைகள் அறிவாளிகள் ஆக முடிவதில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டேன். வாங்க நாம குளிக்க போவோம்.

DSC00734   DSC00683

(இரண்டும் ஒரே வேகத்தில் சென்றபோது எடுக்கப்பட்டது)

  வண்டியை நிறுத்தும் முன்னரே பார்க்கிங் டோக்கனை நீட்டினார். 20 ரூபாயாம். கூடவே ஃபால்ஸுல தண்ணி வருது சார் என்று அவர் சொன்ன செய்தி எனக்கும், சகாக்கும் சந்தோஷம் தந்தாலும் குளிக்கனுமா என்ற சோகம் ஆதியின் முகத்தில் காட்டு மரத்தில் படரும் கொடியைப் போல படர்வதை நான் கவனிக்க தவறவில்லை. துண்டோடும் மாற்றுத் துணியோடும் அருவியை நோக்கி நடந்தோம். அருவி ஏலகிரி அளவிற்கு கூட பிரபலமடையவில்லை. அருகே இருந்த முருகன் கோவிலுக்குத்தான் வந்திருந்த சொற்ப கூட்டமும். கோவிலுக்கு செல்லும் முன் அருவியில் குளிக்க வேண்டுமென்பது ஐதீகம் போல. அருவியை நெருங்கியதாக தெரியவில்லை. தண்ணீர் கொட்டும் எந்த சத்தமும் கேட்கவில்லை. ஆனால் எதிரில் நனைந்தபடி வந்த சிலர் நம்பிக்கையை தந்தார்கள். சென்னையில் குளிக்காமல், ஏலகிரி வந்தும் குளிக்காமல் இங்கே வந்துதான் குளிக்க வேண்டுமென்பது ஜலகம்பாறை முருகனின் ஆசைப் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அருவியை அடைந்தால்….

DSC00718 DSC00724

இதற்கு பெயர் அருவியாம். இதுக்கு குருவி படமே தேவல என்று கும்மாளமிட்டார் ஆதி. உண்மைதான். ஃபால்ஸ்ல தண்ணி வருதுன்னு பார்க்கிங் பெரியவர் சொன்ன செய்தி Falls news அல்ல, False news என்று புரிந்துக் கொண்டோம். சீசன் இல்லையென்றாலும் அருவி தோற்றமேயில்லை அதற்கு. வேறு வழியின்றி குளித்துவிட்டு… சரி நனைந்துவிட்டு மீண்டும் திரும்பினோம். நீங்கள் ஏலகிரி சென்றால் மறக்காமல் ஜலகம்பாறையும் சென்று பல்பு வாங்காமல் திரும்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

அதற்குள் சகாவின் அலைபேசியும், ஆதியின் அலைபேசியும் அலற ஆரம்பித்துவிட்டது. இதோடு ஜூட் விட வேண்டியதுதான் என்பதைப் புரிந்துக் கொண்டு வண்டியை சென்னைப் பக்கம் விட்டேன். வழியில் ஆம்பூரில் ருசியான பிரியாணி மூன்று வாங்கிக் கொண்டோம். கடைசி நிறுத்தமாக ஒரு மரத்தடியில் நிறுத்தி சிக்கனை ஸ்வாஹா செய்துவிட்டு மீண்டும் கிளம்பிய ஐந்தே நிமிடத்தில் ஒரு பெரிய்ய்ய்ய சத்தம். ஆதி வீட்டில் வெள்ளியிரவு கொசுக்களோடு போரிட்டுக் கொண்டிருந்தபோது கேட்ட அதே சத்தம். கொர்ர்ர்ர்ர்ர்..

DSC00663

ஏலகிரி – 1

26 கருத்துக்குத்து

 

  ”இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவர் யாருமில்லை” என்றார் வைரமுத்து. சென்ற சில நாட்களில் இருந்த இறுக்கமான சூழ்நிலையில் மனம் சற்று களைத்துதான் போயிருந்தது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சகஜமானது என்றாலும் எதிர்க்கொள்ளும் தருணங்கள் உவப்பானவை. அப்படிப்பட்ட ஒரு வெள்ளிக்கிழமையன்றுதான் நம்ம சகா ஒருவர் அழைத்தார். சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் ஏலகிரி மலைக்கு செல்லவிருப்பதாகவும், வர இயலுமா என்றும் கேட்டார். உடன் நம்ம ஆதி தாமிராவும், இன்னொரு நண்பர் மட்டுமே வருவதாகவும் சொன்னார். ஹுண்டாய் ஐ10ல் அதற்கு மேல் எப்படி போவது? நடப்பது நடக்கட்டும்.. நாம் காரில்தானே போகிறோமென சரியென்று சொல்லி வைத்தேன்.

சனிக்கிழமை அதிகாலையில் கிளம்ப வேண்டியிருந்ததால் வெள்ளியிரவே ஆதியின் வீட்டிற்கு சென்றுவிட்டேன். கொட்டி கிடந்த படங்களில் எதைப் பார்க்கலாமென 20 நிமிடம் கலந்து பேசினோம். கடைசியில் கே டிவியில் ஓடிக் கொண்டிருந்த படிக்காதவனை பார்த்து முடித்தோம். அதன் பின் தூங்கப்போனால் தயாராக இருந்தது கொசுக்களின் படை. என்ன முயற்சித்தும் பலனில்லை. கிஞ்சித்தும் இரக்கமில்லாமல் கடித்து வைத்தன. ஓசியில் ஓ நெகட்டிவ் குடித்தன பல கொசுக்கள். சில மட்டுமே ஓல்ட்மங்க் பாசிட்டிவை ருசி பார்த்தது  என்பது ஆதியின் குறட்டை சத்தத்தில் தெளிவாக புரிந்தது. மறுநாள் அதிகாலை நால்வரோடு கிளம்ப வேண்டிய மகிழுந்து கடைசி நேர மாறுதலால் மூவரோடு திரு உலா கிளம்பியது. அர்ஜுனராக ஆதி பின்னிருக்கையில் அமர, கிருஷ்ணராக நான் ரதத்தை கிளப்பினேன்.10 மணிக்கு முன்பாகவே மலையேறிவிடுவோம். அங்கே ஒரு அருவி இருக்கிறது என்று பயண ஒருங்கிணைப்பாளர் சொன்னதால் குளிக்காமலே கிளம்பினோம். திருப்புகழ் நினைவில் இல்லாததால் கோல்கேட் உதவியுடன் பற்களை மட்டும் சுத்தப்படுத்திக் கொண்டோம்.

DSC00407 ஏலகிரி மலை வேலூர் அருகே இருக்கிறது. சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே இடது புறம் திரும்பினால் 25 கி.மீ தொலைவில் ஏலகிரி கூட்ரோடு. அங்கே இருந்து 13 கிமீ மலைப்பயணம். மற்ற மலை வாசஸ்தலங்களைப் போல ஏலகிரி மலைச்சாலை கடினமானதில்லை. நாமே எளிதில் ஓட்டிச் செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 1410 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஏலகிரியை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கிறார்கள். மற்ற விவரங்களை இங்கே சென்று படித்துக் கொள்ளலாம் என்பதால் நாம் எங்கள் பயணம் பற்றி பேசுவோம்.

வழுக்கி செல்லும் நடை என்னும் பதிவுலக டெம்ப்ளேட் பின்னூட்டம் போலல்லாது நிஜமாகவே வழுக்கி செல்லும் தார்ச்சாலையில் 120 கி.மீ வேகத்தில் போய்க் கொண்டிருந்தோம். பெட்ரோல் ஃபில் செய்து கொண்டு வந்திருந்த சகாவுக்கு வாயால் நன்றி சொன்னால் போதாது என்று வழியில் அவருக்கு காஃபி வாங்கித்தர ஒரு முறை நிறுத்தினோம்.  அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலூரைத் தாண்டிக் கொண்டிருந்த போது அழகான ஒரு இடத்தில் நிறுத்த சொன்னார் ஆதி. இது போன்றதொரு பயணத்தில் இதுதான் சுகம். நிறுத்தி நிறுத்தி ரசிக்கலாம். கைவசம் இருந்த SLRக்கு வேலை வந்துவிட்டது. சுட்டுத் தள்ளினோம். பெங்களூர் வரை காரில் பயணிப்பதே சுகமான அனுபவம். அப்படியொரு சாலைக்கு ஆங்காங்கே 40ரூபாய்(TOLL) கொடுப்பது நியாயம்தான்.

DSC00411   ஏலகிரி மலையடிவாரம் சேர்ந்த போது மணி 9.45. அருவியைப் பற்றி  விசாரித்தால் யாருக்கும் தெரியவில்லை. மலையேறும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆதியின் வார்த்தையில் தெரிந்த சோம்பேறித்தனத்தை மதித்து மேலே ஏறினோம். பல முறை சென்றிருந்தாலும் நானே வண்டி ஓட்டிக் கொண்டு மலையேறுவது இதுதான் முதல் முறை என்றேன். மலையேறிய பின் தான் வண்டி ஓட்டக் கூடாது என்றார் ஆதி. அவர் மலை அவருக்கு. குரங்குகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வண்டியை நிறுத்த லாவகமான இடம் கண்டவுடன் இறங்கினோம். அருவியைத் தேடினோம். கிடைக்கவில்லை. சிரித்தார் ஆதி. ஏன் எதற்கு என்றெல்லாம் சுஜாதாவைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆதியிடம் வேண்டாம். “காடுகள் மலைகள்.. தேவன் கலைகள்” எளிதில் சொல்லிவிட்டார் கவியரசர். எவ்வளவு உண்மையது!!. நேர்த்தியாய் வாரப்பட்ட தலைவியின் கேசத்தின் நடுவே செல்லும் வகிடைப்போல் அத்தனை அழகாய் தெரிந்தது சாலை. மேலே இருந்து பார்க்கும்போது சின்னஞ்சிறுசாய் வண்டிகள், வகிடில் ஊறும் பேன் போல தெரிந்தன.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தாஜ் ரிசார்ட் வரவேற்றது. 12 ஏக்கர் பரப்பளவில் நன்றாகவே இருந்தது ரிசார்ட். ஒற்றை கரும்புள்ளி அதன் அழகிற்கு போதாது என்பதால் மூவராக சென்றோம். குளியல் ஒன்றை போட்டுவிடலாம் என பார்த்தால்.. ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.. நம்ம ஊரில் எல்லாம் ரூமுக்குள்ளேதானே ஃப்ரிட்ஜ் வைப்போம். அங்கே ஃப்ரிட்ஜுக்குள்ளே ரூமை வைத்திருந்தார்கள். பெரியவர்கள் இடம் இருந்து ஏதாவது கத்துக்க வேண்டுமமென்பதால் ஆதியிடமிருந்து ”அதைக்” கற்றுக் கொண்டேன். முகத்தை ஃப்ரெஷாக கழுவிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு நான் ரெடி என்றேன். முதல் நாள் படிக்காதவன், கொசு, டிரைவிங் என எல்லாமும் சேர்ந்து முகத்தை டல்லாக்கியிருந்தது. மலர்ச்சி தர பெங்களூரில் இருந்து யாராவது வராமலா போய் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நானும், என் சோனி கேமராவும் கிளம்பினோம்.

DSC00485   ஏலகிரியில் பார்த்து ரசிக்க என அதிக இடங்கள் இல்லை. ஒரு அழகான ஏரி. அதிகம் கூட்டமில்லாத ஒரு பூங்கா. இன்னும் முகமூடி அணிந்துக் கொள்ளாத மலைகிராமத்து மக்கள். இது போன்று கிடக்கும் ஓரிரு பூக்களை அழகாய் தொடுக்க இதமான காலநிலை என்ற நூல். இன்னும் அதிகம் மாசுபடாத இடம். கூட்டமும் அதிகமில்லை. முதல் வேலையாக மூவரும் ஒரு போட்டில் ஏறி, ஏரியின் நடுப்பகுதிக்கு விரைந்தோம். சுற்றிலும் நீர். ஜில்லென்ற காற்று. ரசனையான நண்பர்கள். ஏதோ ஒன்று குறைவது போல் தெரிய, அழைத்தோம் ராஜாவை.

”அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது”

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா”

“சிலுசிலுவென குளிரடிக்குது சிறு அரும்புகள் மலர் வெடிக்குது”

ரம்மியமான பொழுதில்லையா? மனம் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.  விதவிதமான டிசைன்களில் மேகம் எங்களுக்காக வரைந்துக் கொண்டிருந்தது. யாரும் பேசவில்லை. ஒவ்வொருவரின் எண்ணங்களும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தன. முழுவதுமாய் ஏறட்டும். மற்றவை நாளை பகிர்ந்துக் கொள்கிறேன்.

 DSC00457 _____________________________________________________________________________

--- பாராகிளைடிங் (Paragliding)

--- trekking

--- நாங்கள் தேடிய அந்த அதிசய அருவி

--- ஆதியின் குறும்பட முயற்சி

இன்னும் சில விஷயங்கள் அடுத்த பாகத்தில்

Jul 25, 2010

விஷுவல் ட்ரீட்

27 கருத்துக்குத்து

 

  நாளை மாலை ரெசிடன்சியில் ட்ரீட் தருகிறாளாம். வரச்சொல்கிறாள் தோழி.ஒவ்வொரு முறையும் அவளைப் பார்ப்பதே எனக்கு விஷுவல ட்ரீட் தான் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்வாள் அவள்?

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

”என்னை கல்யாணம் பண்ணிப்பியா” என்றேன் தோழியிடம். ”நான் உன்னை லவ் பண்றதே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கதாண்டா” என்றாள். நான் அவளை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதே காலம் எல்லாம் அவளைக் காதலிக்கத்தான் என்பதை அவளிடம் எப்படி சொல்வது?

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

DSC00488

”எனக்கு உன் புகைப்படங்களில் பிடித்ததே இந்த ஒரு படம் தான். நான் முத்தமிட்ட கன்னத்தை வேறு யாரும் தொட்டுவிட முடியாதாபடி வேலி அமைத்து வைத்திருக்கிறாயே. அதனால்” என்று சிரிக்கிறாள் என் உயிர்வாங்கிப்பிசாசு.

”உம் என்று சொல்.வில்லாய் வளைவேன்.குருவியாய் பறப்பேன். சுறாவாய் கடலில் நீந்துவேன்”என்றேன் தோழியிடம். “ம்ஹூம். எனக்கு இந்த அழகியதமிழ்மகன் போதும்” என்கிறாள்.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

”இப்பலாம் நீ என்கிட்ட மிஸ் யூ ன்னு சொல்றதே இல்லை” - தோழியின் லேட்டஸ்ட் புலம்பல் இது. எப்படித்தான் அவள் பிறந்தநாளன்று நடந்ததை மறந்தாளோ தெரியவில்லை.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

   சாப்பிட்டுக் கொண்டே அலைபேசிய தோழி கேட்டாள் “ என்னை நினைச்சியா செல்லம்? பொறையேறுச்சு.. அதான்”. இதெல்லாம் உண்மையென்றால் நீ எப்பவோ பொறையேறியே செத்திருக்கனும்” என்றேன். “அது தெரியும் எங்களுக்கு. ஏடாகூடமா ஏதாவது நினைச்சியான்னு கேட்டேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பொறையேறியது எனக்கு. கள்ளி.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தோழி சிரிக்கும் போது விழுந்த கன்னக்குழியில் வழக்கம் போல் முத்தமிட்டேன். ”புதுசா எங்க டீமுல கார்த்திக்ன்னு ஒருத்தன் வந்திருக்கான். அவனை கூப்பிடறப்பலாம் கார்க்கின்னு சொல்லி மாட்டிக்கிறேண்டா அம்மு” என்று முத்தம்மறந்து புலம்பினாள் தோழி. அவளிடம் என் புது டீம் மேட் அனிதாவிற்கும் கன்னத்தில் குழி விழுகிறது என்பதை எப்படி சொல்வது?

Jul 22, 2010

டீ.ஆரின் புதிய படம் - அதிர்ச்சிகரமான தகவல்கள்

13 கருத்துக்குத்து

 

மீண்டும் ஒரு முறை தன்னை அழுத்தமாய் நிரூபிக்க காதல் கதைகள் கை கொடுக்காதென்று தெரிந்து அதிரடி மசாலா படங்கள் இயக்குவதென்று முடிவு செய்து சில உச்ச நடிகர்களை சந்திக்கிறார் தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர் (சப்பா.. முடிச்சுட்டேன்).முதலில் சுள்ளான் தனுஷிடம் செல்கிறார்.

டீஆர்: தம்பி தனுஷு உனக்குத்தான் திரையுலகம் புதுசு
எனக்கு பழசு..எப்பவும் உண்டு எனக்கு தனி மவுசு

தனுஷ்: சார்.. கதைய சொல்லுங்க சார்.

டீஆர்: உங்கிட்ட இல்லாதது சதை
எங்கிட்ட இருக்கறது கதை
வில்லனுக்கு விழும் உதை
நீதான் கொடுக்கனும் அதை..

வில்லனுக்கு ஒரு தங்கச்சி
ஆனா அவளோ உன் கட்சி
அவள தூக்கிட்டுபோய் வச்சி
பாட்டு ஒன்னு பாடுற மச்சி..

தனுஷ்: மெலடியா குத்துப் பாட்டா சார்?

டீ.ஆர்: (கையில் சிட்டிகை போட்டுக்கொன்டே பாடத் துவங்குகின்றார்)
உன் தங்கச்சியை கண்டேன்
என் கட்சியில் இழுத்தேன்
அழைத்ததும் வந்துவிட்டாள்
அவளுடன் வருவேன்
வேண்டியதை தருவேன்
ஆப்பை அவளே வைத்திடுவாள்"னு உன் பாட்டையே ரீமிக்ஸ் பண்ணிடுவோம்...

(அதற்குள் கஸ்தூரிராஜா அங்கே வர ஏரியா சூடாகிறது. இது சிம்புவின் சதி என க.ராஜா சொல்ல தனுஷ் உஷாராய் எஸ்கேப்புகிறார்)

அடுத்து அஜித்திடம் செல்கிறார் டீ.ஆர்.

அஜித் : சார்.வாங்க சார். நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும்.

டீ.ஆர் : உன் வயித்துல இருக்கு பாரு தல 12 பேக்
பேசும்போதே வருது ஸ்பெல்லிங் மிஸ்டேக்
வாலி ஆசையெல்லாம் பழைய வரலாறு
உனக்கும் தமிழுக்கும் இருக்கு தகறாரு

அஜித் : என்ன சார் நீங்க. அத்திப்பட்டி தெர்யுமா ஸார். அது ஒரு கர்ப்பு சர்த்திரம். இன்னமும் வய்று எர்யுது ஸார்.

டீஆர் : உடம்பு மேல ஓடு வச்சிருக்கும் ஆமை
என் கதையில் வர்ற ஹீரோ ஒரு ஊமை
இந்தப் படத்துல உனக்கு இல்ல டயலாக்
ஓப்பனிங் ஸீன்லயே நடக்குது வெட்லாக்..

க்ளோஸப்புல காட்டுறோம் மும்தாஜோட செஸ்டு
இதுதான் இந்தக் கதையில வர்ற முதல் ட்விஸ்டு
அதுக்குள்ள‌ இருக்கு ஒரு பர்ஸ்
கதைப்படி அவங்க ஒரு நர்ஸ்

அஜித்: ஸார் அப்டியே ஓப்பனிங் சாங்குக்கு அவங்களையே ஆடிட சொல்லுங்க. நான் ஆட்னா அஜித் ரொம்பத்தான் ஆட்றானு சொல்வாங்க.

டீஆர்: அதுதான் உன் படத்துல‌ வழக்கம்
எனக்கும் இனி அதுதான் பழக்கம்
பரமசிவன்ல ஆடினாங்கப்பா ரகஸியா
இதுல மும்தாஜ் ஆடனும் செக்ஸியா

இதுதான் ஓப்பனிங் சாங். மை நேம் இஸ் பில்லாவ மறுபடியும் ரீமிக்ஸ் பண்றோம். ரீமிக்ஸையே ரீமிக்ஸ் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட்டு. இதாம்ப்பா பாட்டு. அதுக்கேத்தா மாதிரி உன் உடம்ப நீ ஆட்டு

"பே பே பே பேபே
பேபே பேபே
பே பே பேபே பேபே பேபே
பேபே பேபே
பேபேபே பேபேபே பேபே....." (இதை மை நேம் இஸ் பில்லாவின் ராகத்தில் பாட முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு ஷொட்டு வைத்துக் கொள்ளுங்கள்)

அஜித் : பாட்ல அப்பப்ப நான் திர்ம்பி திர்ம்பி பார்க்ற மாத்ரி செய்யலாம் ஸார். பேக்கிரவுண்ட் சவுண்ட்ல “i am back i am back”வச்சிடுங்க ஸார்.

டீஆர்: எனக்கே வேலை சொல்ல நீ யாரு?
அப்படின்னா வேற டைரக்டர பாரு
திரையுலகத்தில நான் தான் சாரு
என் ஹீரோ தயிறு.. நீ வெறும் மோரு

கோபமாக அங்கிருந்து வெளியேறி விஜயிடம் செல்கிறார் அடுக்குமொழி ஆண்டவன். அஜித்திடம் கோபப்பட்டு வருவதை அறிந்து ஆவலுடன் வரவேற்கிறார் இளைய தளபதி.. போக்கிரியில் பிரபுதேவாவை அழைப்பது போல ராகத்துடன் அழைக்கிறார்.

விஜய் : அண்ணா... வாங்கண்ணா.. வாங்கண்ணா..

(பதிலுக்கு டீ.ஆர். ஆடுங்கடா பாடலின் பீட்டை வாயாலே போடுகிறார்.போதாதென்று ஒரு குட்டி ஆட்டமும் போடுகிறார்)

விஜய் : அப்புறம் என்னங்கண்ணா மேட்டரு. வீராசாமி மாதிரி ஏதாவது படம் எடுக்கிறீங்களா?

டீஆர்: எலுமிச்சைன்னா இங்கிலீஷ்ல லைம்
உங்களுக்கு இப்ப பேட் டைம்
டீஆரு பேச்சுல‌ எப்பவுமே ரைம்
நாம ஒன்னா படம் பண்ண எய்ம்.

(டீ.ஆரின் சதியை "ககபோ" செய்து கொண்ட தளபதி உஷாராகிறார்)

விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா. வேணும்னா உங்க பையன் சிம்புவ வச்சி எடுங்க. நான் ஒரு பாட்டு பாடுறேன்.

டீ.ஆர் : என் கையே எனக்கு ஒரு கம்பு
எனக்கு இன்னுமிருக்கு தெம்பு
எனக்கு பிடிக்காத பையன் சிம்பு
ஏன்னா அவன் பொண்ணுங்க சொம்பு.

அதே வேகத்தில் திரும்பி வந்து பிரஸ் மீட் வைத்து அடுத்த படத்தின் பெயர் "கருப்பனின் காதலி" என‌ வெளியிடுகிறார் டீ.ஆர்.

நிருபர்: படத்தோட பேர பார்த்தா விஜய்காந்த் நடிக்கிற படம் மாதிரி தெரியுதுங்களே. யார் சார் ஹீரோ?

டீ.ஆர்: உங்க கேள்வி ரொம்ப நைஸு
அவருக்கு வைக்கிறீங்க ஐஸு
எனக்கு இன்னும் ஆகல வயசு
38 தான் என் இடுப்பு சைஸு

(சிரித்துக் கொண்டே குறிப்பெடுக்க மறந்து செல்கின்றனர் நிருபர்கள்)

Jul 21, 2010

கார்க்கி என்கிற பால்..

25 கருத்துக்குத்து

 

  பப்லு பெரியவனாகிக் கொண்டேயிருக்கிறான். சென்ற வாரம் நானும் பப்லுவும் அவரவர் அம்மாவும் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கைத்தறி கண்காட்சிக்கு சென்றுக் கொண்டிருந்தோம்.  கார்க்கிக்கு கல்யாணம் (ம்க்கும்) ஆயிட்டா இப்படியெல்லாம் போக முடியாது என்ற ரீதியில் ஏதோ ஒன்றை சொன்னார் அக்கா. உடனே பப்லு சொன்னான் “ஆண்ட்டிக்கிட்ட உங்க ஹஸ்பெண்ட கொஞ்சம் நேரம் கொடுங்கன்னு கேட்டு கூட்டிட்டு போயிடலாம் பாட்டி. கவலைப்படாத”.

வெங்காயத்தில் ஒண்ணுமில்ல உரிச்சுப் பார்த்தா...
கல்யாணம் கூட வெங்காயம்தான் செஞ்சு பார்த்தா..
மனம் எனும் தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித் தரும்
தோழிதான் எப்போதும் இங்க  காந்தி தாத்தா

______________________________________________________________________________

சென்ற வார ஞாயிற்றுக்கிழமை பதிவர் கிரிக்கெட் அணி ஆட்டத்தை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தது. புது பால், செகண்ட் ஹேண்டில் வாங்கிய புது பேட், கடனாக 3 ஸ்டம்ப்பு என எல்லாம் தயார். ஆள் ஒல்லியாக இருந்தாலும் ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் என லக்கியும், வாட் எ கோ இன்சிடன்ஸ் தோழர்! நானும் ஆல் ரவுண்டர் தான் என அதிஷாவும் கூட ரெடி. எங்க பக்கம்தான் வெற்றி என்பதை நிரூபிக்க பதிவர் வெற்றியையும் அழைத்துக் கொண்டோம். இன்னும் ரிஷி உள்ளிட்ட வாசகர்ளையும் தயார்படுத்திவிட்டோம். போக வேண்டியதுதான். ஸ்டெம்ப்ப நட வேண்டியதுதான். பந்த போட வேண்டியதுதான் என்ற நினைத்த நேரத்தில் வந்தது மழை. சபையை அடுத்த ஞாயிறு வரை ஒத்தி வைத்திருக்கிறோம்.  இதுவே எங்களுக்கு தோல்வியென இன்னொரு சாரார் சொல்லிக் கொண்டிருப்பதாக தகவல். இந்த வாரம் மழை வந்தாலும் விளையாட வேண்டும் என்று அணியின் தலைவர் சொல்லியிருக்கிறார்.

அட நோகாமத்தான் நோம்பிருக்க முடியாதப்பா..
கொஞ்சம் தோற்காமத்தான் வெற்றிவந்தா நிலைக்காதப்பா
வெற்றி மட்டும் ஆசைப்பட்டா தோல்வி மேல கோவப்பட்டா
நிச்சயமா அவன் ஒரு காலி டப்பா

________________________________________________________________________________

திருவாளர். சாரு அவர்களுக்கு 20 ஆயிரம் பணம் தந்த பதிவர் ஒருவர் இருக்கிறார். சில மாதம் முன் அவரை சந்தித்த போது இந்த விஷயத்தை சொன்னார். உண்மையிலே அவர் அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படுவதாக நினைத்துதான் தந்தாராம். நித்யானந்த ஆசிரமத்தில் ஏதோ ஸ்பெஷல் பூஜைக்கு சாரு அவர்கள் ஒரு லட்சம் தந்து ஏமாந்ததாக எழுதியிருந்தாராம்.அவர் தந்த பணம் அதில் போயிருக்குமோ என்று பெருங்கவலை கொண்டார். அது பரவாயில்லை என்று இப்போது நினைத்திருப்பார். சாருவும், அவர் வளர்க்கும் உயர் ரக நாயும் இருக்கும் புகைப்படம் சென்ற வார விகடனில் வந்திருக்கிறது. அது மட்டும் அவர் கண்ணில் பட்டால் அந்த நாய்க்கா என் காசு என்று துணுக்குறக்கூடும்.

வெற்றியில சிரிச்சாக்கா திமிரு மச்சி
தோல்வியில சிரிச்சாக்கா தில்லு மச்சி
ஜெயிக்கிறவன் மைனாரிட்டி தோற்கிறவன் மெஜாரிட்டி
அவன் போடும் ஓட்டுலதான் ஆளுங்கட்சி

________________________________________________________________________________

தில்லாலங்கடி பாடல்களோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். மனதை உருக்கும் மெலடி இல்லை. உயிரைப் பிழியும் சோகப் பாடல்கள் இல்லை. சிம்பொனி போன்ற புது முயற்சிகள் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களும் பிடித்திருக்கிறது. முடிந்தால் சமீபத்தில் வந்து ஹிட்டாகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் குறித்தும், நான் மகான் அல்ல பற்றியும் எழுதவிரும்புகிறேன்.  இந்த வருடம் யுவனின் வருடம். கோவா, பையா, காதல் சொல்ல வந்தேன், தில்லாலங்கடி, நான் மகான் அல்ல என்று கோல்களாக அடித்துக் கொண்டிருக்கிறார். (எவ்வளவு நாள்தான் சிக்சர் என்றே சொல்வது!)

  மேலே இருக்கும் பத்திகளின் முடிவில் இருக்கும் வரிகள் தில்லாலங்கடி படத்தில் வரும் ஒரு பாடலில் வரிகளின் சாயலில் எழுதப்பட்டவையே. . தோல்வியை பற்றி மட்டுமே பாடுகிறது அப்பாடல். தோல்வியை பற்றி மட்டுமே பாடி வெற்றிப்பெற்ற பாடல்கள் பல உண்டு. ஆனால் இவ்வளவு குதூகலத்தோடும், கொண்டாட்டத்தோடும் சொன்னதாக நினைவிலில்லை.

உன் நண்பன் யாருன்னு தெரிந்துக்கொள்ள தோத்தா போதும்
உன்னை ஒட்டிவந்த கெட்டதெல்லாம் காத்தா ஓடும்
சொந்தங்கள தேர்ந்தெடுக்கும் தப்புகள ஓரங்கட்டும்
தோல்விக்கு கோவிலே கட்ட வேணும்.

________________________________________________________________________________

இந்த ஜூலையோடு பதிவெழுத வந்து இரண்டு வருடம் முடிகிறது.ஒரு சில மாதம் தவிர மற்ற நாட்களில் முழுவதுமாக இயங்கியிருக்கிறேன். இந்த அனுபவத்தை எழுத எத்தனித்தால் தொடர்கதையாகத்தான் எழுத  நேரிடும். மேலும் விக்ரமண் பட ரீதியில் செண்டிமெண்ட் காட்சிகளும் வருமென்பதால் விட்டுவிடுகிறேன். 2 வருடமாக பிளாகர் சேவையை பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு ஒரு சின்ன ஐடியாவோடு முடித்துக் கொள்கிறேன்.

பின்னூட்டங்கள்தான் பதிவுலகத்தின் அபார வெற்றிக்கு காரணமென சொன்னார் நண்பர் ஒருவர். நாம் எழுதும் பதிவுக்கு வெளியிட்ட சில நிமிடங்களிலே வந்து சேரும் கருத்துரைகள் தரும் உத்வேகம் அடர்த்தியானது என்கிறார். எனவே பதிவை படிக்கும் வாசகர்கள் தங்கள் கருத்துகளை அவர்கள் குரலிலே பதிவு செய்ய வாய்ப்பளித்தால் எப்படியிருக்கும்? அனானிகள் ஆசை தீர திட்டக்கூடுமென்றாலும் இது ஒரு புதுவித அனுபவம் தரக்கூடுமில்லையா? வாய்ஸ் கமெண்ட்ஸ் என்றொரு வசதி வந்தால் நல்லா இருக்கும் தானே!

நம்ம பதிவ படிச்சு பிளாகர் இத செய்யப் போறதில்லைன்னு தெரியும். . சும்மா சொல்லி வைப்போம். நாளையே இந்த சேவை வந்தால் என் பெயரை Karki The paul (ஆக்டோபஸ் மேட்டர் தெரியுமில்ல) என்று அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பரிசல் 10க்கு எதிர் குத்து

35 கருத்துக்குத்து

 

   மனைவி கணவன் முகத்தில் குத்து விட நினைக்கும் (அல்லது விடும்) 10 தருணங்கள்ன்னு பெருசல்…சாரி, பரிசல் பதிவு போட்டிருக்காரு. நாமளும் ”தோழி டேஷ் விடும் 10 தருணங்கள்ன்னு எழுதலாம்னு உட்கார்ந்தேன். பத்தையும் நாமளே வாங்கினா நியாயமா? அதான் 5 பாயிண்ட் தோழி சொல்வது. 5 பாயிண்ட் நான் சொல்வது. சரிதானே?

Ladies first:

1) மெல்லியதாய் தூறல் போடும் மாலையில் கைக்கோர்த்து பீச்சில் சுற்றிவிட்டு, சில்லென்ற தென்றல் முகத்தில் மோத பைக்கில் கட்டியணைத்துக் கொண்டு லாங் டிரைவ் போய்விட்டு, போதும்போதுமென சாப்பிட்டு டின்னரை, தின்னராக மாற்றிவிட்டு அக்கடான்னு நாமும் டயர்டாகி மொபைலும் டயர்டாகி ஆஃபான உடன் படுத்த பின்பு தேவையில்லாம நடு ராத்திரி வீட்டுக்குள்ள எகிறி குதிச்சு ”குட் நைட் சொல்ல மறந்திட்டியே செல்லம்”ன்னு பேய் மாதிரி வந்து நிப்பானே. அப்ப..

2) நாளைக்கு மறக்காம 5 மணிக்கெல்லாம் பீச்சுக்கு வந்துடு அம்முன்னு சொல்லிவிட்டு 7.22 வரைக்கும் ஒளிஞ்சு இருந்து பார்த்துட்டு கிளம்பறப்ப வந்து முகத்துக்கு நேரா “ஓய்”ன்னு பயமுறுத்துவானே..அப்ப..

3) கோவிலுக்கு போய் சாமி கும்பிடாம போற வர்ற ஆண்ட்டிகளை சைட்டடிச்சிட்டு, வெளிய வந்து என்னடா பண்ணன்னு கேட்டா “இல்லை செல்லம். அந்த ஆண்ட்டியோட குழந்தை மாதிரி நம்ம குழந்தையும் சிரிக்கும்போது கன்னத்துல குழிவிழுமில்ல”ன்னு டகால்ட்டி வேலை காட்டுவானே..அப்ப..

4) அவன் பர்த்டேக்கு ஆசையா சட்டை வாங்கப் போன இடத்துல அதை மறந்துட்டு எனக்கு இந்த குர்தாதாண்டா பிடிச்சிருக்குன்னு  சொன்னத பெரிசா நினைச்சுக்கிட்டு அவன் பர்தேடே அன்னைக்கு வெட்கமேயில்லாம அந்த லேடீஸ் குர்தாவோட வந்து என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி “இப்ப ஓக்கேவா?நீ ஆசைப்பட்டா மாதிரியே வந்ததுட்டேன் கண்ணு”ன்னு மானத்தை வாங்குவானே..அப்ப..

5) லீவுக்கு ஊருக்கு போய்ட்டு வர்றன்னைக்கு, அவன பொறுத்தவரைக்கும் அதிகாலையான 7 மணிக்கே பஸ்ஸ்டாண்டுல பைக்கோடு காத்திட்டு இருக்கிறவன கட்டிப்பிடுச்சு பப்ளிக் இடம்னு கூட பார்க்காம ஆசையா முத்தம் கொடுத்தா “இன்னும் பல்லு விளக்கலையான்னு” கேட்பானே..அப்ப

____________________________________________________________________________

இப்ப ஜெண்டில்மேன் டர்ன்:

1) அழகா பாவாடை தாவணி போட்டுக்கிட்டு, தலை நிறைய மல்லியப் பூவை வச்சிக்கிட்டு, கண்ணாடி வளையல டசன் கணக்குல போட்டுக்கிட்டு எந்த மேக்கப்பும் இல்லாம பொங்கி வழியும் அழகோடு வர்றவ நெத்தில பொட்டு மட்டும் இல்லாம இருக்கிறத பார்த்துட்டு திட்டப் போனா “நீதாண்டா வைக்கணும். அதான்னு” இளிப்பாளே.. அப்ப கொடுக்கணும் கன்னத்துல ஒண்ணு

2) இடது பக்கம் கன்னம் மட்டும் இட்லி மாதிரி ஏன் வீங்கியிருக்குன்னு கேட்கும் போது “வீட்டுல நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு. நாங்களும் அவனும் உனக்கு ஒண்ணான்னு கேட்டாங்க. இல்லப்பா. அவன் தான் எனக்கு முக்கியம்ன்னு சொன்னேண்டா. அதான் அப்பா அடிச்சிட்டாருன்னு” மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு கதை விடுவாளே.. அப்ப வீங்காத இன்னொரு கன்னத்துல சப்புன்னு…

3) உன்னைக் கட்டிக்கிட்டு என்ன செய்யப் போறேனோ!! சமையல் பத்தி ஏதாவது தெரியுமா? கிச்சன் பக்கம் போயிருக்கியான்னு நாம வெசனத்துல வசனம் பேசறப்ப ”எனக்கு ஸ்டவ் பத்தியெல்லாம் தெரியாது. உன்னை லவ் பண்ண மட்டும்தான் தெரியும்ன்னு டீ.ஆரோட ரெண்டு விட்ட கொழுந்தியா மக மாதிரி பேசுவாளே. அப்ப நச்சுன்னு தலையில ஒண்ணு…

4) நம்ம க்ளோஸ் ஃப்ரெண்டுக்கு கால் பண்ணி இனிமேல அவன உன்கூட தண்ணிப் பார்ட்டிக்கு கூட்டிட்டு போனா அவ்ளோதான்ன்னு எதுக்கு மிரட்டினேன்னு கேட்டா “அவன் பொறந்ததுல இருந்து உன் ஃப்ரெண்டுதான். ஆனா நான் உனக்கு பொறக்கப் போற பொண்ணோட முதல் ஃப்ரெண்டுன்னு” டயலாக் விடுவாளே.. உஸ்ஸ்ஸ்.. அப்ப

5)  ஆஃபீஸ்ல வேலை கழுத்தை நெரிக்கும்போது இப்ப நீ வந்தே ஆகணும்ன்னு நச்சரிச்சு. அடம் புடிச்சு, செல்’லரிச்சு , டேமேஜர் கால்ல விழுந்து ஒரு வழியா அரை நாள் லீவ் போட வச்சு இன்னும் பல ச்சு வேலை செஞ்சு அவள பார்க்கப் போனா என்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுவாளே.. மவளே அப்படியே அவள..

_________________________________________________________________________________

 

 

 

என்னடா இதெல்லாம் இந்த ”அப்ப அப்ப” எல்லாம் அடிக்கிற தருணங்களான்னு சந்தேகமா இருக்கா? பரிசலுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. முகத்துல குத்து வாங்குறாரு. எனக்கு என்னங்க? இதெல்லாம் நாங்க இழுத்து வச்சு இச் இச் அடிக்கிற தருணங்கள்ன்னு தோழி சொல்ல சொன்னாங்க. டேஷ் விடன்னு தானே சொன்னேன்? அந்த டேஷ்ல முத்தம்ன்னு போட்டுக்கோங்க.

Jul 19, 2010

உஸ்ஸ்ஸ்ஸ் (கார்க்கி)

23 கருத்துக்குத்து

This_is_what_I_call_Workload

workload (1)

workload

workload-overload

Jul 16, 2010

விக்னேஷ்வரிக்கு வாழ்த்துகள்

27 கருத்துக்குத்து

 

  தேவதை என்ற வார இதழில் பதிவர் விக்னேஷ்வரியின் பதிவொன்றும், அவரைப் பற்றிய தகவல்களும் புகைப்படத்துடன் வெளிவந்திருக்கின்றன.

வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

scan0002

மறக்காம எல்லோரும் புத்தகத்த வாங்கிடுங்க. ஒரு ஆச்சரியம் காத்திருக்கு. 

Jul 15, 2010

கிரிக்கெட்.. அன்றும் இன்றும்

22 கருத்துக்குத்து

 

cricket-ball

வறண்டு கிடக்கும் ஏரியைப் பார்த்து யார் வயிறு எரிந்தாலும் எங்களுக்கு எரிந்ததில்லை. எங்களுக்கு என்றால் எனக்கும் எங்கள் டீமுக்கும், எங்களோடு மோதும் டீமுக்கும், மற்றும் அந்த ஏரியில் கிரிக்கெட் விளையாடும் ஏனைய 37 டீம்களுக்கும் தான். . 92 உலக கோப்பைக்குப் பின்னால் எங்கள் ஊர் ஏரிகளுக்கு பெயர் மாறின. சின்ன ஏரிக்கு அடிலைட். பெரிய ஏரிக்கு சிட்னி. வழியில் கிடக்கும் சின்ன சின்ன திட்டுகளுக்கு மெல்பர்ன் உட்பட இதர பேர்கள். ஏரி கிரிக்கெட்டும், ஏரியா கிரிக்கெடும் களைக் கட்டிய நாட்கள் அவை.

நிஜமாக ஆஸ்திரேலிய செல்ல அவ்வளவு மெனக்கெடத் தேவையில்லை. ஆனால் எங்கள் சிட்னியில் மேட்ச் என்றால் போச்சு. சைக்கிளில்தான் போக வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பும்போது கையில் ஓரிரு நோட்டுகள் அவசியம். ஜாண்ட்டி ரோட்ஸை ஆஸ்தான வீரராக கொண்டவர்கள் என்றால் புதுசாக இல்லாமல், தடியான பேண்ட்டாக இருக்க வேண்டும். ஏரிகளில் சறுக்கினால் பேண்ட்டோடு காலும் கிழிய நேரிடும். உள்ளே ஒரு ரவுண்ட் நெக் டீஷர்ட்டும் மேலே முழுக்கை சட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும். சித்திரை மாச வெயிலுக்கு சரியான டிரஸுடா என்று அக்கா கிண்டலடிப்பாள். ஹிஹிஹி என இளித்துவிட்டு போய்விடுவது நல்ல கிரிக்கெட் வீரனுக்கு அழகு.மைதானத்தை.. மன்னிக்க, சிட்னியை அடைந்தபின் மேல் சட்டையை கசங்காமல் கழட்டி வைத்துவிட்டு விளையாட வேண்டும்.

  பிளந்து கிடக்கும் பூமியில் ஸ்டெம்ப்பை இறக்குவது கடினமில்லை. அதை விழாமல் பாதுகாப்பதுதான் விஷயமே. ஒரே ஒரு ஸ்டெம்ப்பை மட்டும் நட்டு வைத்துவிட்டு எதிரணி வரும்வரை லேக் பிராக்டீஸ  செய்வது மரபு. நாலைந்து பேர் ஆடுவதை வேடிக்கைப் பார்த்து மூன்றாம் உலகப்போருக்கு முன்னோட்டம் போல அமையும் ஒரு சின்ன சண்டையின் முடிவில் பேட் நம்ம கைக்கு வரும். பொடியனை அழைத்து போடுடா என்றால் ஒத்தை ஸ்டெம்ப்பையும் குறிப்பார்த்து வீசிவிடுவான். முதல் பந்திலே நட்ட ஸ்டெம்ப் நாலைந்தடி தள்ளிச் சென்று விழுவதை பார்ப்பது போல் கொடுமை வேறில்லை.  பொடியனுக்கு டீமில் இடம் கிடைத்து விடும். அடுத்து எப்போது நம்ம கைக்கு பேட் வருமென்று பொடியன் கவனிக்க ஆரம்பித்துவிடுவான். அவன் பந்து போட்ட உடன் மூன்றாம் உலகப் போரை நிஜமாகவே நடத்தி பேட்டை வாங்கினால், பந்து வீசுபவன் கூலாக அந்த பொடியனை கூப்பிடுவான். இந்த முறை கோவத்தில் வெளுக்கலாம் என்று மட்டையை சுழட்டினால்… ம்ஹும்..

இந்த களேபரங்களுக்கு இடையே எதிரணியும் வந்துவிடும். நம்பர் போட்ட டீஷர்ட்டை கண்டதும் முதல் நடுக்கம் வரும். வந்தவர்கள் நம்மைப் போல ஓசி காஜுடன் ஆரம்பிக்காமல் சிட்னியை வலம் வருவது, கேட்ச் பிராக்டிஸ் செய்வது என நடுக்கத்தை கூட்டுவார்கள்.  தமிழ் சினிமாவில் வில்லன் குரூப் ஹீரோயினை கதற கதற கற்பழிக்க வேண்டுமென்று துரத்தும் போது ஹீரோவுக்கு செய்தி போகும். அது போல எதிரணி பலமறிந்து யாராவது ஒரு பொடியனை அழைத்து ”மோட்டுக் கடையில ரமேஷண்ணன் இருப்பாரு. அவரையும், செந்திலண்ணாவையும் மேட்ச் இருக்குன்னு கூட்டிட்டு வாடா” என தந்தி பறக்கும். வழக்கம் போல டாஸ் தோத்துவிட்டு எதிரணி கேப்டனிடம் அண்ணன்கள் இன்னும் வரல. பவுலிங் எடுத்துக்கிறீங்களா பாஸ்” என்ற பேச்சுவார்த்தை நடக்கும். பெரும்பாலும் இது போன்ற பேச்சுவார்த்தைகள் நமக்கு சாதகமாக இருக்குமென்பதாலே கேப்டன் பதவி நம்மிடம் தங்கும். இல்லையேல் போச்சு.

பிறந்ததே பீடி பிடிக்க என்பதுதான் செந்திலண்ணாவின் கொள்கை.பாதி தூரம் வந்ததும் பொடியனிடம் ”கடைக்கு திருப்புடா. பீடி வாங்கனும்” என்பார். இதை முதலிலே தெரிந்து பொடியனிடம் காசு கொடுத்தனுப்பவது கேப்டனின்  பொறுப்பு. அண்ணன்கள் வருவதற்குள் இங்கே 10 ஓவர் முடிந்திருக்கும். உண்மையில் 12 ஓவரே முடித்திருக்கலாம்.. ஆனால் இருந்த 8 விக்கெட்டும் அப்பீட் ஆனதால் காத்திருக்கும் படலம் தொடங்கியிருக்கும். எடுத்த 32 ரன்னை 33வது முறையா கூட்டி பாஸ் 34 என்றால் கூலாக “ஓக்கே ஜி. 35ஆ வச்சிக்கோங்க” என்று பந்தால் அடித்தது போதாமல் வார்த்தையால் வெளுப்பான் எதிரணி 10ஆம் நம்பர். அவன் தான் அவங்க விஜய்காந்த்.

பீடியோடு செந்திலும், ரமேஷும் வருவார்கள். இன்னும் அஞ்சு ஓவர் இருக்குண்ணா. 80ரன்னாச்சும் வேண்டுமென்றால் சிரிப்பார். போதுமாடா என்பததன் அர்த்தம். அதுவரை சோர்ந்து போயிருக்கும் எங்க டீமுக்கு உற்சாகம் வரும். செந்திலண்ணாவின் முதல் ஃபோருக்கு சவுண்ட் பறக்கும். உடனே ஃபீல்டிங்கை மாத்துவான் 10ஆம் நம்பர். செந்திலண்ணா பீடியை கீழே போட்டு விட்டு கையை மணலில் தேய்க்கும் போதே ஜிவ்வென ஏறும் நமக்கு. அடுத்த ஓவரில் சிக்சர் லைனில் ஒரு கேட்ச் பிடிப்பார்கள். ரமேஷண்ணாவின் கட் அண்ட் ரைட் பேச்சில் அது சிக்சர் என ஆகிவிடும். அப்படியும் ஸ்கோர் கடைசியில் அம்பத்தி மூணோ நாலோதான் இருக்கும்.

எதிரணி ஹைலைட்ஸை வர்ணிக்க ஏதுமிருக்காது. 7வது ஓவரிலே 42ஐ தொட்டிருப்பார்கள். பீடி கட்டு முடிந்திருக்கும். அல்லது முடித்திருப்பார்கள். இதை சாக்காக வைத்து ஒரே சைக்கிளில் இரண்டு அண்ணாக்களும் கிளம்பிவிடுவார்கள். செந்தில் போட்ட ஓவரை தொடர பாதி பேரும், ரமேஷ் நின்றிருந்த லாங் ஆனுக்கு மீதிப் பேரும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

தோற்ரது என்னவோ கேப்டன் மட்டும்தான் என்பது போல மற்ற அனைவரும் சினிமா கிசுகிசுக்களை சந்தோஷமாக பேசிக் கொண்டு வருவார்கள். நாம் மட்டும் ஆட்டோகிராஃப் சேரனைப் போல சைக்கிளை மெதுவாக சிந்தினையோடு உருட்டிக் கொண்டு போவோம். அந்த சிந்தனை கூட அடுத்த வாரம் யாரோடு மேட்ச் போடலாம் என்பதாகத்தான் இருக்கும்.

________________________________________________________________________________

   இப்படித்தாங்க நானும் இருந்தேன். கிரிக்கெட் என்றால் தூக்கம், சாப்பாடு எதுவும் தேவைப்படாது. ஏற்கனவே ஒரு முறை பதிவர்கள் கிரிக்கெட் அணி தொடங்க நினைத்தோம். வேறு சில காரணங்களால் முடியாமல் போனது. இப்போது லக்கியும் அதிஷாவும் உறுதியாக இருக்கிறார்கள்.  எப்படி திமுக அதிமுக ஒன்றாக இணைவது நடக்காதோ, அது போல இவர்கள் பிரிவதும் சாத்தியமில்லை. எனவே தைரியமாக களத்தில் இறங்க முடிவு செய்தோம். இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தி.நகர் சோமசுந்தரம் மைதானத்தில் முதல் போட்டி. காலை 7 மணிக்கு. யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். வராவிட்டாலும் சின்ன போட்டியாட 8 பேர் இருக்கிறோம். ஆர்வம் இருப்பவர்கள் வாருங்கள். அடுத்த வருட கலைஞர் கோப்பை தான் நம்ம டார்கெட்.

மேலதிக தகவலுக்கு:

லக்கி       : 9841354308

அதிஷா : 9500061607

கார்க்கி : 9789887048

டிஸ்கி : படம் பார்த்து பயம் வேண்டாம். நாம் விளையாடப் போவது டென்னிஸ் பந்தில்தான்

ஏழுவும் ஸ்டேஷனும்

28 கருத்துக்குத்து

 

  அன்று பாலாஜியின் பிறந்த நாள். ஏழுவை நம்பி  பாருக்கு போவதில் யாருக்கும் உடன்பாடில்லை. ஹாஸ்டலுக்கே சரக்கை வாங்கி வருவதென முடிவு செய்தோம். ஏழுவும் நானும் நண்பனின் பல்சரை வாங்கிக் கொண்டு மஹாலட்சுமி ஒயின்ஸுக்கு சென்றோம். MC, Signature என்று எல்லாவற்றிலும் ஆஃப் வாங்கிக் கொண்டோம். வாங்கும்போதே ஆரம்பித்தான் ஏழு. ஒயின்ஷாப் ஓனரை நோக்கி சொன்னான் “சச்சின் டெண்டுல்கரை விட உங்க கிட்டதான் சார் நிறைய பேர் Signature வாங்கி இருப்பாங்க”

  நான் சைட் டிஷ் வாங்க சென்ற கேப்பில் ஒரு மினி பியரை அடித்துவிட்டான் ஏழு. அவசரத்தில் ராவாக வேறு அடித்துவிட்டான். இருவரும் சரக்கோடும் சைட் டிஷோடும் கிளம்பினோம்.

மச்சி நான் ஓட்டறேன்டா வண்டிய என்றான் ஏழு.

நானும் சரி என்று சொல்லிவிட்டு பாட்டில்களை சைட் பாக்ஸில் வைத்தேன். தத்துவம் சொல்லும் முன் ஏழு ஒரு டைப்பாக சிரிப்பான். அதே போல சிரித்தவன் சொன்னான் “பாரு மச்சி. சரக்க சைட் பாக்ஸ்ல வச்சிட்டு சைடு டிஷ நீ வச்சிருக்க. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல சரக்கு மெயினுக்கு வந்துடும். இது சைடுல போயிடும்.

நானும் என் பங்குக்கு வாழ்க்கை ஒரு வட்டம்தான்.ஆனா இவ்ளோ சின்ன வட்டமா இருக்கே என்றேன். மீண்டும் சிரித்தவன் சொன்னான் “அதனால்தான் தண்ணியடிக்கும் போது ரவுண்டுன்னு சொல்றோம் மச்சி”

இதுக்கு மேல் ஆகாதென்று வாயை மூடிக் கொண்டு கிளம்பினோம். சிறிது தூரம் வரை சரியாகத்தான் ஓட்டினான். மெதுவாக வண்டியும், ஏழுவும் ஆடுவதை பார்த்துவிட்டு வண்டியை நிறுத்த சொன்னேன். படுபாவி சரியாக அங்கே நின்றிருந்த போலிசின் அருகில் சென்று நிறுத்தினான். இறங்கும் போதே ஆடியவனை அவர்களும் பார்த்துவிட்டார்கள். அருகில் வந்தவர் இன்ஸ்பெக்டர் போல தெரிந்தது.

என்னப்பா இப்படி ஆடுற என்றார் இன்ஸ்பெக்டர். திருவாய் மலர்ந்தான் ஏழு

ஜோடி நம்பர் ஒன் சீசன் 4க்கு ட்ரை பண்றேன் சார்.

ஆனா உன்னை பார்த்தா கேடி நம்பர் 1 மாதிரி இருக்கே. ஓட்டத் தெரியுமா?

எங்க செட்டிலே நான் தான் எல்லோரையும் நல்லா ஓட்டுவேன் சார்.

டேய். என்ன நக்கலா? உன் உருவத்துக்கு இந்த வண்டி தேவையா?

அப்ப கப்பல், ப்ளைட் ஓட்டறவங்க எல்லாம் உங்கள மாதிரி இருப்பாங்களா சார்?

எனக்கு வேர்க்க ஆரம்பித்தது. குறுக்கே பேச முயன்றபோது வாயை மூட சொன்னார்கள்.

வண்டில RC இருக்காடா?

MCதான் இருக்கு சார்

நல்ல வேளை அவருக்கு புரியவில்லை. ஆனால் ஏழு தண்ணியடித்திருக்கிறான் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்த வண்டில மொத்தம் எத்தன கீரு இருக்குன்னு தெரியுமா?

அது தெரில சார். ஆனா ரெண்டு பீரு இருக்கு என்று இந்த முறை தெளிவாக சொன்னான் சண்டாளன். எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. என்னையும் அவனையும் ஜீப்பில் ஏற்றினார்கள். நான் கெஞ்சும் போதெல்லாம் சிரித்து சிரித்து அவர்களை மேலும் எரிச்சல் படுத்தினான் ஏழு.

சார். நாங்க என்ன சரக்கையா கடத்தனோம்? ரூமுக்கு வாங்கிட்டு போய் அடிக்கறது தப்பா சார்?

வாய மூடிட்டு வாடா. உன்னையெல்லாம் கவனிக்கற விதத்துல கவனிச்சாதான் திருந்துவீங்க என்றார் ஏட்டு.

சார் போலிஸ்ன்னா எதையும் முறையா செய்யனும் தான். ஆனா வன்முறையா செய்யக் கூடாது என்றவன் வாயில் லத்தியால் லேசாகத் தட்டினார் ஏட்டு. ஸ்டேஷனுக்குள் நுழைந்தது ஜீப். இருவரையும் ஒரு பென்ச்சில் அமர வைத்தார்கள்.

பரவாயில்ல மச்சி. என் நாலாங்கிளாஸ் வாத்யாரே நான் தப்பு செஞ்சா பென்ச்சுல நிக்க சொல்வார். போலிஸ் உட்கார சொல்றாங்க” என்றான் ஏழு. நான் செய்வதறியாமல் முழு சரக்கிருந்தும் ஆடாமல் அசையாமல் நிற்கும் ஜான் எக்‌ஷா ஃபுல் பாட்டிலைப் போல் இருந்தேன்.ஒரு லெட்டர் ஒண்ணு வாங்கிட்டு விட்டுவிட சொன்னார் இன்ஸ்பெக்டர். ஆனால் அந்த ஏட்டு எங்களுக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கினார்.

ஏம்ப்பா. காலேஜ் படிக்கற. இப்படியா நடக்கறது? நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போணும்னு ஆசை இல்லையா?

எனக்கு மூணு ஆசை சார் என்றான் ஏழு. கம்முன்னு இருடா என்ற என்னை அவன் மதிக்கவேயில்லை.படிக்காமலே பாஸ் ஆகனும். இண்டெர்வ்யூவே இல்லாம வேலைக்குப் போகனும். வேலையே செய்யாம சம்பளம் வாங்கனும்.

இதெல்லாம் எப்படிப்பா நடக்கும் என்று இன்னமும் பொறுமையாக கேட்டார் ஏட்டு.

மத்தத விடுங்க சார். இப்ப நீங்க வேலையே செய்யாம‌ சம்பளம் வாங்லையா?

ஏட்டுவின் முகம் மாறியது. ஏழுவை கன்னத்தில் ஒண்ணு விட்டு மன்னிப்புக் கேட்க தொடங்கினேன். இதெல்லாம் சரிப்படாது நீங்க ட்ரெஸ் கழட்டுங்க என்றார்.அடி பலமாக விழுந்து விட்டது ஏழுவுக்கு. கன்னத்தைத் தடவிக் கொண்டே சன்னமான குரலில் கேட்டான். “சார் எங்கள ரேப் பண்ணப் போறீங்களா?”

நல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் வந்து எங்களை விடுதலை செய்தார். ஆனால் சரக்கையெல்லாம் கொடுக்கவில்லை. கடுப்பில் இருந்த நான் ஏழுவை அங்கேயே விட்டுவிட்டு ஹாஸ்டலுக்கு சென்றேன். எனக்கு முன்பே அங்கு ஆட்டோவில் வந்த ஏழு கலாட்டா செய்துக் கொண்டிருந்தான். நாங்களும் கண்டுக்காமல் விட்டதில், பிரச்சனை பெரிதாகி மறுநாள் அவனை விடுதியில் இருந்து எடுத்து விட்டார்கள். வழக்கம்போல் தொட்டியில் தலையைக் கவிழ்த்து மப்பை இறக்கிக் கொண்டிருந்தவனிடம் வந்த ஹாஸ்டல் வார்டன், ஏண்டா ஹாஸ்டலுக்குள்ளே தண்ணியடிக்கலாமா என்றார்.

தலையை சிலுப்பிக் கொண்டு பதில் சொன்னான் ஏழு “ பாட்டில்ல குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடுன்னு” போட்டிருக்கு சார். விடுதிக்குனு போடல.”

Jul 14, 2010

சகா’வரம்

25 கருத்துக்குத்து

 

 Untitled

எப்படா நம்ம கல்யாணம் என்றேன் தோழியிடம். “GOD ONLY KNOWS" என்றாள்.. அதனால்தான் அவளிடம் கேட்டேன் என்று கூட தெரியவில்லை என் தேவதைக்கு.

______________________________________________________________________________________________________________

10 நாள் பிரிஞ்சு இருப்பியே.. என் ஞாபகம் வந்தா என்ன செய்வ என்றேன் தோழியிடம். மனசுக்குள்ள இருக்கியேடா, எப்ப வேணும்னாலும் உன்னை பார்க்கலாம் என்று சொன்னாள். அவள் திரும்பியவுடன் என்னை நானே பார்க்க வேண்டுமென்றிருக்கிறேன்

______________________________________________________________________________________________________________

வாட்டர் ப்ரூஃப் போல ஹீட் ப்ரூஃப் மொபைல் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். எதுக்கு என்கிறாள் தோழி. என்னவளின் முத்தத்தின் வெப்பத்தை தாங்க வேண்டுமே அது!!!

______________________________________________________________________________________________________________

“உன் உதிரம் போலே நான் உன்னுடலில் ஓடுவேன்."  என்று தோழியிடம் சொன்னது தப்பா போச்சு.விரலை வெட்டிகொண்டு உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு என்கிறாள்

______________________________________________________________________________________________________________

தெரியாமல் தோழியுடன் சிங்கம் படத்துக்கு போய்விட்டேன். இடைவேளையில் கொக்கரிக்கிறாள் “முத்தத்த பாட்டிக்கிட்ட வாங்கியிருப்ப..அம்மாக்கிட்ட வாங்கியிருப்ப. குழந்தைக்கிட்ட வாங்கியிருப்ப. என்னை மாதிரி வயசு பொண்ணுக்கிட்ட வாங்கியிருக்கியா?உன் தோழிக்கிட்ட வாங்கியிருக்கியா? வாங்கியிருக்கியா? உதட்டுல கொடுத்தா 440 வோல்ட்ஸ் பவருடா”

______________________________________________________________________________________________________________

டயட்டில் இருக்கிறேன் என்று தெரியாமல் சொல்லிவிட்டேன் தோழியிடம். முத்தம் கேட்டால் “டயட்டுல இருக்கும்போது ஸ்வீட் எதுக்கு” என்று கேட்கிறாள் கள்ளி.

______________________________________________________________________________________________________________

கடவுளைக் கண்டால் என்ன வரம் கேட்பாய்? சாகாவரம் தானே என்றேன் தோழியிடம். கண் சிமிட்டி, உதடு பிரித்து, கன்னம் குழியாக சிரித்தவள் சொன்னாள் ”எனக்கு சகாவரம் போதும் செல்லம்”

Jul 13, 2010

கவிப்பேரரசுக்கு வாழ்த்துக்கள்

41 கருத்துக்குத்து

 

ஒரு பொன்மாலைப் பொழுதில் துவங்கியது வைரமுத்து அவர்களின் திரைவாழ்க்கை. பூமரங்களோடு தமிழ்நாட்டு மக்களும் சாமரம் வீசி, பூங்கதவை திறந்து வைத்தனர். கதவு திறந்த கனம் மடைதிறந்து தாவும் நதியலையென வைரமுத்துவின் தமிழ் பொங்கிவந்தது. தமிழ் என்னும் அக்னிசூரியன் வைரமுத்து என்னும் மரத்தின் மீது பொழிய, பாடல்கள் என்னும் நிழல்கள் நாம் இளைப்பாற ஏதுவாகின. இன்றுவரை இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். கொண்டிருக்கிறோம். கொண்டிருப்போம்.

இலக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களிலும் இவரின் பங்களிப்பு இருந்தாலும் ஒரு பாடலாசிரியராகவே என்னை வெகுவாக கவர்கிறார்.

”முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுகிறதோ அது மழையோ”

என்பதில் தொடங்கி இதோ இந்த மாத இறுதியில் வெளிவரவிருக்கும் எந்திரனில் இப்படி எழுதி இருக்கிறார்

அஃறிணையின் கடவுள் நான்
காமுற்ற தெய்வம் நான்
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கான் சிங்கம் நான்.

தொழில்நுட்பத்தின் உச்சத்தில் ஒன்றாக ரோபோவை கூறலாம். அது தொடர்பான படத்தில், அந்த ரோபோவைப் பற்றி விளக்கும் வரிகளில் சிலிக்கான் என்பதைத் தவிர எங்கேயும் பிறமொழி கலப்பில்லை. தமிழில் இதுவரை வந்த பப்(Pub) பாடல்களில் சிறந்ததென சொல்லப்படுவது “யாக்கைத் திரி”. அதிலும் தமிழைத் தவிர வேறில்லை. ஆய்த எழுத்து படப் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட வேற்று மொழி வார்த்தைகள்

“ஆறு டிகிரியில்”, “என் ஹார்மோன் நதியில்”, “ஹேய் குட்பை நண்பா”, (இன்னும் ஓரிரு வார்த்தைகள் இருக்கலாம்) அவ்வளவே.

   மெட்டுக்குள் முத்தெடுக்கும் கலை இவருக்கு கைவந்த கலை. எந்த ஒரு சந்தத்திலும் சற்றேறக்குறைய என்றில்லாமல் சதக்கென சென்று அமர்ந்துவிடும் இவரின் வார்த்தைகள். பல உருது கவிதைகள் இவரால் மிக அழகாக தமிழ்ப்படுத்தப்பட்டதுண்டு.

“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி..
சற்றே நிமிர்ந்தேன்..தலை சுற்றிப்போனேன்.. ஆஹா!!!! அவனே வள்ளலடி”

இது ஒரு உருது கவிஞனின் கற்பனைதான். ஆனால் மிக அழகாக மொழி பெயர்க்கப்பட்டதாக உணர்கிறேன். ”மொழி” படத்தின் மொத்தக்கதையையும் உள்வாங்கி ஒரு பாடல் எழுத வேண்டியிருந்தது. கதை கேட்டபின் வைரமுத்து அவர்களுக்கு ஒரு உருது கவிதை நினைவுக்கு வந்திருக்கிறது. சற்றே அதை மாற்றி எழுதுகிறார், மொத்த கதையையும் இரண்டே வரிகளில்

“இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை”

உசுரே போகுதே பாடல் வெளிவந்த நாளன்று நண்பன் ஒருவன் அது 80களின் சாயலில் எழுதப்பட்டதாகவும், இன்றைய தலைமுறை அதை ஏற்காது எனவும் சொன்னான். தினமும் புதிதாய் குறைந்தது 10 பேருக்கு அழைத்துப் பேச வேண்டிய வேலையில் இருக்கும் எனக்கு, ஒரு முறையாவது இதைக் கேட்கும் வாய்ப்பு இல்லாத நாளில்லை. வைரமுத்து காலத்தை வென்ற கலைஞன்.

மணிரத்னத்தின் சமீபத்தில் படங்களில் நடக்கும் விஷயம் இது. தமிழில் எழுதப்படும் பாடல் ஜாவித் அக்தரால் இந்தியில் எழுதப்படும். ”  ஏ அஜ்னபி” என்று அவர் எழுதியதன் அர்த்தத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டு எழுதினார் கவிப்பேரரசு. :துண்டு துண்டான உயிரை வைத்துக் கொண்டு வாழ்கிறேன்” என்று எழுதியதை “என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா” என்று மாற்றினார்.   வைரமுத்து தமிழில் எழுதியதை ஜாவித் மொழிபெயர்த்ததும் உண்டு.

 “ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்”

இதை மொழிபெயர்க்க முடியாமல் திண்டாடியதாக பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஜாவித்.

சோகத்தை வைரமுத்துவின் பேனா எழுதும் பாங்கே வேறு. அலைபாயுதேவில் ஒரு காட்சி. அழுதுஅழுது வீங்கிய கண்களோடு ஷாலினி பாடுவதாக வரும் வரி.

“அந்த குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே”

சிந்துபைரவியில் கதைநாயகி தன் பெற்றோரைப் பற்றி தெரிந்துக்கொள்கிறார். ஆனால் அம்மாவென்று அழைக்க முடியாத சூழ்நிலை.எழுதுகிறார் வைரமுத்து

பெண்கன்று பசுத்தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை

நிலைமையை விளக்கிய பாடலாசிரியர் சோகத்தின் வீரியத்தை இப்படி சொல்கிறார்

என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைத்திருப்பேனே”

______________________________________________________________________________

நேற்று இரவு ட்விட்டரில் வைரமுத்து ஸ்பெஷல் என பிடித்த வரிகளை பலரும் ட்விட்டிக் கொண்டிருந்தோம். அதன் சுட்டி இதோ

எழுதிக் கொண்டே போகலாம். காதலைப் போல கவிப்பேரரசுவின் பாடல்களும் முடிவிலிதான்.

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களோடு முடித்துக் கொள்கிறேன்

 

 

Jul 9, 2010

ஆணிகள் அதிகமான நேரத்தில் பதிவு போடுவது எப்படி? - 10 வழிகள்

24 கருத்துக்குத்து

 

ஆணி அதிகமாகும் நேரங்களில் பெரும்பாலும் மீள்பதிவுகளே போடுகிறோம். அப்படியில்லாமல் புதிய பதிவு என்ன போடலாம் என சில டிப்சுகள்

1) டேமேஜர் ஆணியை அசைன் செய்தவுடன் ஆணியா என நான் அலறும் முன்பே ஆணி நம்மை கண்டு ஆ”நீயா” என அலறியது எனத் தொடங்கும் சிறுகதை எழுதலாம்.

2) தமிழ் மாதங்களில் ஆடிக்கு அடுத்து ஆனி வரும். எனவே அதிகம் ஆடினால் ஆனி தொடர்ந்து வரும் என எச்சரிக்கப் பதிவு போடலாம்.

3) நமீதா பொது நிகழ்ச்சிகளுக்கு சேலையில் வருவதும், அரசியல்வாதிகள் சொன்ன வாக்கை காப்பாற்றுவதும், காவிரியில்(தமிழகத்தில்) நீர் கரைபுரண்டு ஓடுவதும், நான் வேலை செய்வதும் அரிதாக நடப்பது என்பது போன்ற ஒப்பீட்டு பதிவுகள் போடலாம்.

4)ஆணியே இல்லை என்றும்
ஆணிப் புடுங்க வாய்ப்புமில்லை என்றும்
பிரிண்டர் ரூமில்
பிரிண்ட் எடுத்தப்படி பேசிக்கொண்டனர்;
பிரிண்ட் வந்ததும்
வெளியே வந்த நேரம்
கைகள் பல முளைத்திருந்த
கையில் அரிவாளோடு
பார்த்து முறுவலித்த
அய்யனார் போன்ற டேமேஜர்
அடுக்கினார் ஆணிகளை

என்பது போன்ற வீரியமிக்க அனுஜன்யா கவிதைகள் எழுதி கவிதை பதிவுகள் போடலாம்.

5) நான் ஆதவன் போன்ற ஆளாக இருந்தால் ஆணி புடுங்கலாம் வாங்க எனறு இது போன்ற சொந்த தயாரிப்புகளை ரிலீஸ் செய்யலாம்

ss

6) டேமேஜரிடம் இந்தக் கதையைக் காட்டி ஆணி புடுங்குவதால் நடக்கக்கூடிய விபரீதத்தை எடுத்து சொல்லி, அவரும் மனமிறங்கி உங்களை ஆணியிலிருந்தோ அல்லது வேலையில் இருந்தோ விடுவித்த உண்மை சம்பவத்தை பதிவாக போடலாம்.

7) ஆணி புடுங்கும் பெண்களே உஷார் என்பது போன்ற சமூக அக்கறை பதிவுகள் போடலாம்.

8) பொறுக்கி, தடியன், நாய், பேய் என யாரையாவது திட்டி பதிவெழுதலாம்.

சாரிங்க. நிஜமா ஆணி அதிகமா இருக்கு. அதனால் எட்டு வழிகளோடு எஸ் ஆகிக்கிறேன். நேற்று கமெண்ட்டிய நல் உள்ளங்களுக்கும், இன்று கமெண்ட்ட போடும் புண்ணியவான்களுக்கும், நன்றி நன்றி நன்றி

Jul 4, 2010

கார்க்கி பாவம்

22 கருத்துக்குத்து

 

  யாவரும் நலம்னு சொல்ற சுசி ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க. சரி. எழுதலாம்னு தலைப்ப பார்த்தா...... "கார்க்கி வித் அவுட் தோழிகள்".. எவ்ளோ நல்ல மனசு?

என்னடா செய்யலாம்ன்னு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து யோசிக்கலாம்ன்னு இருந்தேன். ரூமா? அட தோழிங்கன்னாலே பட்ஜெட் அதிகம் பாஸ். ரூமெல்லாம் பத்தாது. சரி விஷயத்திற்கு வருவோம். முதலில் காலையில் தூங்கி எழுவதில் இருந்து தூங்கும்வரை நான் செய்யும் அன்றாட வேலையத்தான் எழுதி வச்சேன்.பின்ன என்னங்க? இப்ப மட்டும் என்ன நமக்கு 12 தோழிகளா இருக்காங்க? அப்படின்னு எழுதி முடிச்சிட்டு டெலீட் பண்ணிட்டேன். ஏன்னா பேசிக்கலி நான் பொய் சொல்லமாட்டேன். என் பேரு என்ன பரம‌சிவன் பேருல ஆரம்பிக்குதா இல்ல ராமர் பேருல முடியுதா? அத விடுங்க. உண்மையை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

1) இனிமேல  பொறை ஏறாது. அதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இட்லி சாப்பிடும்போது தோழி என்னை நினைச்சு பொறை ஏறினா தண்ணி குடிக்கலாம். தண்ணி குடிக்கும்போதும் தோழி நினைச்சு அதுக்கும் பொறை ஏறினா என்ன செய்றது?

2) பெட்ரோல் விலை குறையும். ஆமாங்க. அன்னைக்கு ஒரு பெட்ரோல் பங்குல பார்த்தேன். “Save petrol.Avoid Girl Friends”உண்மைதான். 60  கி.மீ தந்த பைக்க விட்டு தோழிக்காக யமஹா வாங்கினேன். அது 40தான் கொடுக்குது. அது மட்டுமில்லாம வண்டி நல்லாயிருக்குன்னு எக்ஸ்ட்ரா கொஞ்ச தூரம் ஓட்ட சொல்றா. எவ்ளோ பெட்ரோல் வேஸ்ட்? அதனால் தோழி இல்லைன்னா பெட்ரோல் மிச்சம். பெட்ரோல் மிச்சம்ன்னா விலை குறைவு.

3) நல்ல வெளிச்சமா லைட் எரியிற இடத்துல சாப்பிடலாம். ஆமாங்க. ரொமாண்ட்டிக்கா இருக்கும்ன்னு எத்தனை தடவதான் கேண்டில் லைட் டின்னருக்கே போறது? "நீ சிரிக்கிறப்ப உன் கூட எங்க சாப்பிட்டாலும் அது கேண்டில் லைட் டின்னர்தான் செல்லம். ஏன்னா நீயே ஒரு மெழுகு பொம்மைதான்"ன்னு சொன்னா கூட வொர்க் அவுட் ஆகாது. அதுக்கு எதுக்கு தோழி சிரிக்கணும்ன்னுதானே கேட்கறீங்க? கே.லை. டின்னர்ல மெழுகு "பளீர்"ன்னு எரிஞ்சிட்டு இருக்குமில்ல? அதான்.

4) அடுத்து மிஸ்டு கால்ஸோஃபோபியா. ஸ்கூல் போகும்போது நான் மிஸ்ஸூக்கே பயப்படாதாவன். ஆனால் இந்த மிஸ்டு கால்ஸ் பார்த்தா..உஸ்ஸ்ஸ். மிஸ்டு கால்ஸ் கூட பிரச்சனையில்லை. அதுக்கு முன்னால் நம்பர் வரும் பாருங்க. சச்சின் 20-20 ல அடிக்கிற மாதிரி 52, 68ன்னுதான் இருக்கும். ஒரு தடவ 108 கால்ஸ் எல்லாம் மிஸ் ஆயிருக்கு. அதுக்கெல்லாம் கவலைப்படாம சைலண்ட்ல போட்டு மேட்ச் பார்க்கலாம்.

5) நமக்கு எல்லாம் எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கும். அது சரிதான். ஆனா தேடி வாங்கிட்டு வருவா பாருங்க. ஒரு நாள் ஒரு குர்தா வாங்கிட்டு வந்தா. நானும் பார்த்துட்டு நல்லா இருக்கே. துப்பட்டா இல்லையா? எப்போ போடப்போறன்னு கேட்டா "இது உனக்குதாண்டா செல்லம்"ன்னு டெரர் ஆயிட்டா.இன்னொரு நாள் எப்படிடா தொப்பைய குறைக்கலாம்ன்னு பிளான் போட்டுட்டு இருக்கேன். டைட்ஸ் வாங்கிட்டு வந்து "இது போடு அம்மு. ஆர்ம்ஸ் சூப்பரா இருக்கு"ம்னு சொல்றா. விட்டா ஃபர்ஸ்ட் நைட்க்கு ரேமன்ட்ஸ்ல சூட் வாங்கித் தருவா. அதுல இருந்து எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

6) பதிவெழுத கஷ்டப்படுவேன். எதுவும் எழுதி டிராஃப்டில் வைக்காத நேரத்தில் தோழியே சரணம்ன்னு எழுத உட்கார்ந்தா தோழி அப்டேட்ஸ் வேகமா ரெடி ஆயிடும். இனிமேல முடியாது. மண்டையை உடைச்சு, மசாலவ தெளிச்சு கவிதையோ, புனைவோதான் எழுதணும். ம்ம்

7) முக்கியமா தூங்கலாங்க. நல்லா தூங்கலாம். தோழிகிட்ட இருக்கிற பெரிய பிரச்…….

 

j 020

பதிவு பாதிதான் இருக்குன்னு நினைக்காதிங்க. எனக்கு இருக்கிறதோ சின்ன இதயம். எவ்ளோ நேரம்தான் அதுவும் தோழி இனி இல்லைன்னுறத தாங்கும்? அதான் பாதில டப்ஸுன்னு வெடிச்சிடுச்சு. இனிமேல இந்த மாதிரி கொடூரமான தலைப்பு எல்லாம் கொடுக்காதிங்க. கார்க்கி பாவம்.

Jul 2, 2010

திருந்துமா பதிவுலகம்?

47 கருத்துக்குத்து

 

  தமிழ் பதிவுலகம் வளர்ந்துக்கிட்டே இருக்கும் சமயத்தில்,  தினமும் பல புதிய பதிவர்கள் எழுத வந்துக் கொண்டிருக்கும் வேளையில், போட்டி அதிகமாகிக் கொண்டே போகும் நேரத்தில், **** காலத்தில், &&&&& கணத்தில், த்தில், தில் ல் ஸப்பா….. புதிய பதிவர்களுக்கு சில டிப்ஸ். அவ்ளோதாங்க விஷயம். சில பேரு இந்த வாரப் பதிவர் போடறாரு.  அப்ப நாம என்ன செய்யலாம்னு யோசிச்சதில் உருவானது இந்த அரிய பதிவு. வகுப்புக்கு போகலாமா நண்பர்களே?

how-to-blog-blackboard-classroom_id785240_size485

முதல் ஸ்டெப்.(நாம என்ன கணக்கா போடறோம்?) பேரு வைக்கிறது. உங்க உண்மையான பெயரிலே வெற்றிக்கான கீ, அதாங்க சாவி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அந்தப் பெயரையே வைத்துக் கொள்ளலாம். அல்லது புனைபெயர் யோசிக்க வேண்டும். வலையுலகம் ஒரு கடல். அதில் நீந்த கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் ஹாயாக பரிசல் ஓட்டி ஜெயித்தவர் பரிசல்காரன். அதே போல் நீங்களும் கட்டுமரக்காரன், மோட்டர் போட்காரன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். பரிசல் எல்லாம் ஜுஜுபி. என் டார்கெட்டே வேற என்று நினைப்பவர்கள் ஸ்பீடு போட்காரன், அல்லது அவரவர் டார்கெட்டுக்கு ஏற்ப டைட்டானிக் வரைக்கும் பெயர் வைத்துக் கொள்ளலாம்.தமிழ் 3000 வருட பழைமையான மொழி. அதற்கென ஒரு வைப்ரேஷன் உன்டு. எனவே முட்டாள் முருகேசன், லூஸ் மோகன் போன்ற பெயர்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதுவாகவே மாறக்கூடும்.வலைப்பூவின் பெயருக்கும் இது பொருந்தும்

நீங்கள் நகைச்சுவை திலகமா? காமெடி சும்மா காவிரி(கர்நாடகவில்) மாதிரி கரைபுரண்டு ஓடுமா? அப்ப பேரு வைப்பதில் சில சிக்கலுங்கோவ். ஏற்கனவே குசும்பன், நையாண்டி நைனா, குறும்பன்னு எல்லா பேரும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுவிட்டது. கவலை வேண்டாம். சில்மிஷ சித்தப்பா, நக்கலு நடராஜு, கிச்சு கிச்சு கிரண், என்று பல பெயர்கள் என்வசம் இருக்கு. உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்.

நீங்கள் மற்றவர்களை கலாய்க்க போகிறீர்கள் என்றால் மட்டுமே மேலே சொன்ன பெயர்கள். மற்றவர்களால் கலாய்க்கப்பட போகிறீர்கள் என்றால் வேறு சில பெயர்கள் உண்டு. உப்பு, சீனி, கறிவேப்பிலை என்பது போன்ற பெயர்கள் எளிதில் மற்றவர்கள் மனதில் ”சிக்கிட்டாண்டா ஒருத்தன்” என்ற நம்பிக்கையை தரும் என்று வரலாறு சொல்கிறது .

பேரு வச்சாச்சு? கடைக்கு வருபவர்களுக்கு சோறு வைக்கனும் இல்ல? அதாங்க பதிவு. என்ன எழுதலாம்? முதல் பதிவாக பிரபல, மூத்த,(அடைப்புக் குறிக்குள் ‘ர’ போட்டுக்கலாம்) பதிவர்களை திட்டி ஒரு பதிவு போடலாம். அல்லது, அப்போது வெளியாகும் ஏதாவது ஒரு படத்தை பொதுபுத்தியின் பார்வையில் இல்லாமல் வித்தியாசமாக யோசித்துப் பதிவு போடலாம். இதனால் நீங்கள் அறிவு ஜீவியாகவோ, அல்லது குறைந்தபட்சம் அறிவு மணிரத்னமாகவோ அடையாளம் காணப்படுவீர்கள். அப்புறம் என்ன? வித்தவுட்டில் நிற்கும் ரஜினி, ஆபாச நடிகர் சல்மான் கானின் அந்தரங்கம் என்று ஏதாவது கேள்வி கேட்கும் பதிவுகளாக போட்டு பிழைத்துக் கொள்ளலாம்.

எதுவுமே எழுத இல்லையா? அல்லது கோர்வையாக எழுத வரவில்லையா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு கலந்து கட்டி அடிக்கும் பதிவுகள். அவியல், காக்டெயில், கொத்து பரோட்டா, மிக்ஸ்ட் ஊறுகாய், கூட்டாஞ்சோறு போன்ற டைப் பதிவுகள் எழுதி காலத்தை ஓட்டலாம். ஜூவியில் இதை படிச்சேன். விஜய் டிவியில் அதைப் பார்த்தேன். நிலாவில் தண்ணி இருக்காம், அண்டார்டிக்காவிலும் ஊழல் இருக்காம்ன்னு நாலு மேட்டர கலக்கிட்டு, கடைசியா இவன் கவிதையை படிச்சேங்க. அட்டகாசம்ன்னு அடுத்தவன் கவிதை போட்டு முடிச்சிடலாம். நீங்க விக்ரம் ரசிகர் என்றால் தூள் என்றும் போடலாம். வருபவன் எல்லாம் கவிதை நல்லா இருக்குன்னு டைப் பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நல்லா இருக்குன்னு மட்டும் போடுவாங்க. இந்த மாதிரி பதிவுக்கு பேரு தான் ரொம்ப முக்கியம். இப்ப டிமாண்ட் கூட. பயப்படாதிங்க. அதுக்கும் எங்கிட்ட சரக்கு இருக்கு. ”சைனா சரக்கும் சில சைடிஷ்களும்”, ”தொகையறாவும், பல்லவியும், சரணமும்” , ”நச்சுன்னு நாலு மேட்டர்” இப்படி பல இருக்குங்க.

என்ன எழுதியும் பிரபலமாக முடியலையா? இருக்கவே சமூகம். உங்க கோவத்தையெல்லாம் காட்ட வழியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் குறித்து கிறுக்கலாம். சண்முகத்தை கேள்வி கேட்கலாம். எங்கெல்லாம் பிரச்சினை வருகிறதோ அத‌ற்கு நாமதான் விடிவெள்ளி என நாமே நினைத்துக் கொன்டும் தீர்வெழுதலாம். எனக்கு ரீமா சென் பிடிப்பதில்லை, அமர்த்தியா சென்னையே பிடிக்கும். எனக்கு கவுண்டமணி சத்தம் பிடிக்கும் அளவிற்கு கோவில்மணி சத்தம் பிடிக்காது என ஏதாவது சொல்லலாம்.

எழுதும் போது பல பிரச்சினை வரும். (பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்). அதில் முக்கியமானது ஸ்பெல்லிங் மிஸ்டேக். ”புண்ணியவான்”ன்னு போன பதிவுல சரியா எழுதி இருப்பிங்க. அடுத்த பதிவுல “புன்னியவான்” அப்படின்னு தெரியாம போட்டுடுவீங்க. யாராவது வந்து ”நேத்து சரியா எழுதின. இன்னைக்கு ஏன் குழப்பம்னு?” கேட்பாங்க. உடனே அசராம, இன்னைக்கும் “புண்ணியவான்” ன்னு எழுதினா இவன் ஒரே மாதிரி எழுதறான்னு சொல்லுவாங்க. அதான் டிஃப்ரென்ஸ் காட்றேன்னு சொல்லி சமாளிக்க தெரியனும். அது இல்லன்னா பின்னூட்டம் மட்டுமே போட்டு சூடு ஏத்துற ஜிமெயில் ஜின்னா, ஹாட்மெயில் அர்னால்ட் டைப் ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும்.

அவ்ளோதானான்னு கேட்காதிங்க. இப்படி ஆரம்பிங்க. அப்புறம் நீங்க‌ளும் என்னை மாதிரி அட்வைஸ் அயயசாமியா மாறிடுவீங்க.ஆல் தி பெஸ்ட்.

பி.கு: தலைப்பு சம்பந்தமே இல்லாம இருக்கான்னு யோசிக்காதிங்க. இதுவும் ஒரு பழைய டெக்னிக் தான்.உங்களுக்கு சொல்லிக் கொடுக்கத்தான் அப்ப‌டி வச்சேன் அடிச்சு ஆடுங்க பாஸ்.

Jul 1, 2010

யூசர் பிசி

28 கருத்துக்குத்து

 

அதிசயமா நேத்து வேலையெல்லாம் கம்மியா இருந்துச்சு. சரி சில பேருக்கு ஃபோன் பண்ணி பேசலாம்ன்னு எடுத்தேங்க‌

இராவணன் படம் பத்தி கேட்கலாம்ன்னு விக்ரமுக்கு ஃபோன் போட்டா..
 நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்ற பின்புனு பாடுது.

சரி. தலைவர்கிட்டயாவது பேசலாம்ன்னு விஜய்க்கு ஃபோன போட்டா
அடங்கொப்புறான சத்யமா நான் காவல்காரன்னு பாடுச்சு. சரி படம் பேரு கன்ஃபர்ம் பண்னிட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.

அடுத்து தலகிட்ட பேசுவோம்ன்னு ஃபோன போட்டா ஆ மெல்ல நட‌ மெல்ல நட மேனி என்னாகும்ன்னு பாடுது. நாம ஏதாவது விளையாட்டா சொன்னாலும் ராஜா தம்பி கோச்சிக்கும்ன்னு கம்முன்னு வச்சிட்டேன்.

இதென்னடா வம்பா போச்சேன்னு தற்போதைய ஹாட் சூர்யாவுக்கு ஃபோன போட்டா "சிங்கத்த கூண்டுல கத்தி பார்த்திருப்ப.. சர்க்கஸ்ல கத்தி பார்த்திருப்ப. மொபைல்ல பேசி கேட்டிருக்கியா.." சொல்லுச்சு. லைட்டா அடிச்சாலே என் செல் காலி. இதுல ஓங்கியடிச்சா என்னாகுறதுன்னு அதையும் கட் பண்ணிட்டேன்.

இனி நோ சில்லறைன்னு டைரக்டா  எந்திரன் எப்போ வரும்ன்னு கேட்க சூப்பர்ஸ்டாருக்கு ஃபோன் போட்டா விடுகதையா இந்த வாழ்க்கைன்னு பாடுது

நமக்கும் சினிமாவுக்கும் ராசியில்லைன்னு பதிவர்கள் சில பேருக்கு ஃபோன் பண்ணேன். என்ன சொல்ல? யார் யார் என்னென்ன ரிங்டோன் வச்சிருக்காங்கன்னு நீங்க‌ளே பாருங்க,

1) கேபிள் சங்கர்  - சினிமா சினிமா..பாபா..சினிமா சினிமா

2) சிவராமன்(மங்களூர் சிவா) ‍  - என் கேள்விக்கு என்ன பதில்?

3) பரிசல் - நல்லவன்..எனக்கு நானே நல்லவன்

4) ஆதி   - பொண்டாட்டி சொன்னா கேட்டக்கனும் புத்தியில் வாங்கிப் போட்டக்கனும்

5) குசும்பன் -  சிரி சிரி சிரி..கண்ணில் நீர் வர சிரி

6) நர்சிம் -  அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்

இவங்க எல்லாம் வேஸ்ட்ன்னு கடைசியா "அந்த" பதிவருக்கு ஃபோன் போட்டேங்க. சத்யமா என்னால நம்ப முடியல. எப்ப பண்ணாலும் யூசர் பிசி பிசின்னே வருது.இப்ப கூட கடைசியா ட்ரை பண்ணேன்..ம்ம்..யூசர் பிசியாம்.யாராவது அவருடைய ரிங்டோன் என்னென்னு தெரிஞ்சா சொல்லுங்களேன்.

 

all rights reserved to www.karkibava.com