Jun 30, 2010

காதல் சொல்ல வருகிறார்கள்


 

காதல் சொல்ல வந்தேன் 

யுவனும் – நா.முத்துக்குமாரும் இணைவது புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு முறை சேரும்போது இசையில் ஏதாவது புதியதாய் இருக்கும். செல்வராகவன், லிங்குசாமி என ஜாம்பவான்கள் வரிசையில் பூபதி பாண்டியன் இவர்களோடு சேர்கிறார். அவரின் திருவிளையாடல் ஆரம்பம் எனக்கு மிகவும் பிடித்த படம். ஆனால் பாடல் காட்சியமைப்பில் சொதப்புவார். இந்த முறை ரெக்கார்டிங் ஸ்டுடியோ பக்கம் வந்தாரா எனத் தெரியவில்லை. யுவனும், முத்துவும் முழு சுதந்திரத்தோடு செய்தது போல் வந்திருக்கிறது பாடலெல்லாம். இயக்குனர் இருவரிடமும் ஒன்றே ஒன்றுதான் சொல்லியிருக்ககூடும்.

“யுவன்.. கிடார், கீ போர்டு, கிலாரினெட், புல்லாங்குழல், உடுக்கைன்னு எந்த நோட்ஸ் வேண்டும்ன்னா போடுங்க. கூடவே காதல் நோட்ஸும் எல்லாப் பாடலிலும் இருக்கணும்”.

“முத்து. உயிரெழுத்தோ. மெய்யெழுத்தோ.. அதனூடே காதெலெழுத்தும் இருக்கணும்”

காதல் சொல்ல வந்தேன் என காதல் சொல்ல வந்திருக்கிறார்கள். காதலை சொல்லியும் இருக்கிறார்கள். சமீபத்தில் என்னைக் கவர்ந்த மிக சிறந்த ஆல்பத்தைப் பற்றி இந்தப் பதிவு. இதை யுவன் இசை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Untitled

1) ஒரு வானவில்லின் -   ‍ உதித் நாரயாணன்

ட்ரம்ப்பெட் தெரியுமா? தெனாலியில் ஓ ஜாயே என்று அதில் வாசிக்கும்போது ஆடாமல் இருக்க முடியுமா? பெரும்பாலான ஓப்பனிங் குத்தில் ட்ரம்ப்பெட் அல்லது கிளாரினெட் இருக்கும். இந்த காதல் பாட்டிலும் ட்ரம்ப்பெட் ஆதிக்கம் என்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள். செம்மொழி மாநாட்டை ஆதரிப்பதற்கும் உதித் நாராயண் குரலை ரசிப்பதற்கும் ஏதும் ஸ்நான பிராப்தி இருக்கக் கூடாதென வேண்டிக் கொள்கிறேன். வழக்கம் போல மிகச் சரியாக உச்சரிப்பை தவறாகத்தான் செய்கிறார். பருவாயில்லை. நல்லாத்தான் இருக்கு.

குடைகள் இருந்துமே மழையில் நனைவது காதல் வந்த பின் தானே

நேற்று வரையில் நான் காற்று வீசினால் நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும் நெருப்பில் எரிந்ததே இல்லை

காதல் வந்தவனின் நிலையை விவரிப்பது முத்துக்குமாருக்கு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிடுவது போலத்தான். வெளுத்து வாங்குகிறார். என்னோட ஃபேவரிட் பாட்டு இப்போதைக்கு இதுதான்.

2) அன்புள்ள சந்தியா  - கார்த்திக்

ஆரம்பத்தைக் கேட்டு 90களின் தேவா பாட்டு போல இருப்பதாகத்தான் முதலில் தோன்றும். எனக்குத் தோன்றியது. மென்சோகம். குறிப்பாக சொல்லப் போனால “வெண்மேகம் பெண்ணாக உருவானதோ” வகையை சேர்ந்தது. கார்த்திக்கின் குரலில் இன்னும் இனிமை. இன்னும் கொஞ்சம் சோகம். கேட்க கேட்க மெல்ல மனதை பிசைகிறது.

தூறல் வந்தால் கோலங்கள் அழியும் காலம் போனால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே

அடி கோவில் மூடினால் கூட கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை..

தாயைக்கண்டால் தன்னாலே ஓடும்.. பிள்ளைப்போல என் காதல் ஆகும்

என்றோ யாரோ உன் கையைத் தொடுவான்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே அது நானாகக் கூடாதா?

முத்துக்குமாரை நம்பி பாட்டெடுக்கலாம்.. இனி படமே எடுப்பார்கள் போல.

3) என்ன என்ன ஆகிறேன் - விஜய் யேசுதாஸ்

யுவனின் ஆல்பத்தில் இவர் தொடர்ந்து வருகிறார். கலக்குகிறார். காதல் கொண்டேனில் “காதல் காதல்”, பின் சண்டக்கோழியில் “தாவணிப் போட்ட தீபாவளி” என இந்த கூட்டணியின் வெற்றிப் பட்டியல் நீளமானது. இது இன்னொரு எண்ட்ரீ. கேட்டுக்கேட்டு சலித்த பீட்டோடுதான் தொடங்குகிறது. மிக சாவகாசமாகத்தான் பரிச்சயம் ஆகிறது. மற்ற பாடல்களின் ஆதிக்கத்தில் காணாமல் போனாலும், மெலடி காதலர்களால் காப்பற்றப்படக்கூடும். எடுத்து சொல்லுமளவுக்கு வரிகள் எதுவும் நினைவிலில்லை. ஆனால் எல்லா வரிகளும் பாடலின் தொனிக்கு ஏற்றது போன்றே ஒலிக்கிறது.

4) ஓ ஷாலா -  யுவன் (பாடல் ‍ சாரதி)

போகாதே போகாதே, ஒரு கல் என சோக கீதம் மட்டுமே வாசித்து வந்த யுவனின் பாடகர் வாழ்க்கையில் ”என் காதல் சொல்ல தேவையில்லை” என வசந்தம் வரவழைத்தவர் முத்துக்குமார் & லிங்குசாமி. இந்த முறை இன்னும் கொஞ்சம் குஷியோடு இறங்கிவிட்டார். இரண்டாவது இண்டெர்லியுடில் வரும் கிடார் ரசிக்க வைக்கிறது. இறுதி வரிகளில் பீட்டைக் கூட்டி கோட்டை கட்டுகிறார் யுவன் .

முதல் தூறல் அது காயவே ஜென்மம் நூறு கோடி ஆகுமே
மறுத்துறல் மதியானமே.. நியாயமா?

தலைக்கோதி அவள் சாப்பிட.. மேஜைக் காகமே ஆகிறேன்
சிதறாதோ ஒரு சாதமே ஏங்கினேன்

அழகான ஒரு ஊர்வலம் நீயும் நானும் சேர்ந்து போவதேன்?
பேருந்தே குலசாமியாய் ஆனதே

5) சாமி வருகுது - சிதம்பரம் சிவக்குமார்

கோக் ஜில்லுன்னு இருக்குன்னு கூட வெந்நீர் சேர்த்ததுண்டா நீங்கள்? சாம்பாரில் காரம் அதிகம்ன்னு சர்க்கரை சேர்த்துப்பிங்களா? இது போன்ற வித்தியாசமான காக்டெயில் தான் இந்தப் பாட்டு. அட்றா சக்கைன்னுதான் சொல்ல தோணுது. சூப்பர் பக்தி மெட்டு. உடுக்கை சத்தம் இன்னும் காதுல ஒலிக்குது. இந்த மாதிரி பாட்டு ஒண்ணும் புதுசு இல்ல. ஆனா மேட்டர் புதுசு. ஒரு ரெண்டு வரி சேம்பிள் பாருங்க.

சாமி வருகுது காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நீ கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

   ரொம்ப சாதாரணமான மெட்டு. அதிகம் மெனக்கெடாத கம்போசிங். அலட்டிக்காம, சங்கதி இல்லாம பாடகர் பாடுறாரு, இவந்தாண்டா கவிஞன்னு கொண்டாட வாய்ப்பில்லாத வரிகள். ஆனால் கேட்கும் போதே ஆனந்தமாய் இருக்கிறது. கொண்டாட்டமான மனநிலையில் கேட்கும்போது மனம் இன்னும் லயிக்கிறது. ஒரு சோதனை முயற்சி. எல்லோருக்கும் பிடிக்கும்ன்னு சொல்ல முடியாது. காட்சிப்படுத்தலில் கவனம் தேவை.

மொத்தத்தில் காதல் கலவைதான் ”காதல் சொல்ல வந்தேன்.” காதலையும், இசையையும்  காதலிப்பவர்கள் தாராளமாக 100ருபாய் தந்து இசைத்தட்டு வாங்கலாம்.

_______________________________________________________________________________

படத்தைப் பற்றி:

Kadhal_Solla_Vandhen_movie_stills_01   வின்னர் ”கைப்புள்ள” என்ற கேரக்டரின் சிற்பியே பூபதி பாண்டியன் என்று சொல்வார்கள். இவரின் படங்களில் காமெடி சற்று தூக்கலாகவே இருக்கும். இதிலும் காதலும், காமெடியும் கலந்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் ஆரம்பித்த புதிதில் “ஜோ” என்று ஒருவர் வந்தார். பின் காணாமல் போனார். லயோலா கல்லூரி மாணவர் என்று அறிந்து அவரைத் தேடியது ஒரு கதை. எனக்கு மிகவும் பிடித்தவர். ஜோ. அவர்தான் படத்தின் நாயகன் என்று போஸ்டரைப் பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன். இதில் இருக்கும் அனைவருமே என் விருப்பத்திற்குரியவர்கள். போலவே, மேலே இருக்கும் படமும். எனக்கு ஏதேதோ ஞாபகப்படுத்துகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

32 கருத்துக்குத்து:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) on June 30, 2010 at 12:32 AM said...

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..... தகவல்கள் அசத்தல்

மகேஷ் : ரசிகன் on June 30, 2010 at 1:12 AM said...

Enjoy enjoy....

Ravanan pathutu ippa than room vanthen..... :D

சுசி on June 30, 2010 at 2:38 AM said...

ரொம்ப நல்லா இருக்கு கார்க்கி..

சுசி on June 30, 2010 at 2:38 AM said...

ரொம்ப நல்லா இருக்கு கார்க்கி..

சுசி on June 30, 2010 at 2:40 AM said...

ஹிஹிஹி.. ரொம்ப நல்லா எழுதி இருந்திங்களா.. ஆகோ ல ரெண்டு தடவை ஒரே கமண்ட போட்டுட்டேன்..

ப்ரியமுடன்...வசந்த் on June 30, 2010 at 3:21 AM said...

//தலைக்கோதி அவள் சாப்பிட.. மேஜைக் காகமே ஆகிறேன்
சிதறாதோ ஒரு சாதமே ஏங்கினேன்//

செம்மையா எழுதிருக்காருங்க சகா..

இதெல்லாம் ரசிச்சு எழுதுற கண்டிப்பா நீங்களும் ஒரு காகம்தான்...

ஜெட்லி... on June 30, 2010 at 5:29 AM said...

பாட்டு கேட்டேன் ரெண்டு பாட்டு நல்லா இருக்கு....
கேட்க கேட்க பிடிக்குமோ என்னவோ...

நாய்க்குட்டி மனசு on June 30, 2010 at 7:38 AM said...

செம்மையா எழுதிருக்காருங்க சகா..

இதெல்லாம் ரசிச்சு எழுதுற கண்டிப்பா நீங்களும் ஒரு காகம்தான்...//

அப்போ நீங்க !!

தராசு on June 30, 2010 at 8:59 AM said...

உள்ளேன் ஐயா

செந்தில் குமார் வாசுதேவன் on June 30, 2010 at 9:05 AM said...

அண்ணாச்சி, ஓ ஷாலா பாட்டு, நா.முவோடதில்ல.. சாரதின்னு ஒருத்தரோடது..

முரளிகுமார் பத்மநாபன் on June 30, 2010 at 9:07 AM said...

எனக்கு ரெண்டுமே பிடிச்சிருக்கு சகா. பாடலும் பதிவும்

கார்க்கி on June 30, 2010 at 9:58 AM said...

நன்றி உலவு

மகேஷ், இப்பதானே உடம்பு சரியாச்சு. ஏம்ப்பா?

நன்றி சுசி

வசந்த், எல்லாப் பாடலுமே வரிகள் கலக்கல்

ஜெட்லீ, ரெண்டு பாட்டு இன்ஸ்டட்ன்ட் ஹிட். மீதியெல்லாம் கேளுங்க. குறிப்பா சாமி வருகுது

நாய்க்குட்டி, நீங்க பேர்டாங்க?

ரைட்டு தராசு

செந்தில் அபப்டியா??? இவங யூஸ் பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்றீங்களா?

நன்றி முரளி..

Anbu on June 30, 2010 at 10:21 AM said...

நம்ம பேவரைட் எப்போதுமே கார்த்திக் தான் அண்ணா.. பாட்டு எல்லாமே நல்லாதான் இருக்கு..நீங்க எழுதியதை படித்ததுக்கு அப்புறம் கேட்டா இன்னும் நல்லா இருக்கு..

பாணா காத்தாடி - பைத்தியம் பிடிக்குது பாட்டு கேட்டுப்பாருங்க...

செந்தில் குமார் வாசுதேவன் on June 30, 2010 at 10:47 AM said...

http://www.behindwoods.com/tamil-music-reviews/review-1/kadhal-solla-vandhen.html

http://www.raaga.com/channels/tamil/album/T0002476.html

:) அப்டில்லாம் சொல்ல முடியுங்களாண்ணா? சாரதிங்கறவங்கதான் எழுதிருக்காங்க.. கொஞ்சம் மாத்திடுங்க..

செந்தில் குமார் வாசுதேவன் on June 30, 2010 at 10:50 AM said...

அப்படியே 'அய்யனார் - பனியே பனியே' வும் 'பானா - பைத்தியம் புடிக்குது' வும் கேளுங்கண்ணா.. சும்மா அள்ளுது..

தாரணி பிரியா on June 30, 2010 at 11:41 AM said...

காலையில கேட்டப்ப பெருசா ஏதும் தோணலை. நைட் கேட்டப்ப ஆஹான்னு இருந்தது. அன்புள்ள சந்தியா ஒ மனமே போல எனக்கு தோணுச்சு :)

முரளிகண்ணன் on June 30, 2010 at 12:40 PM said...

படம் வெற்றி பெற வாழ்த்துவோம்

கார்க்கி on June 30, 2010 at 2:58 PM said...

அன்பு, கேட்டேன். நல்ல பாடல்

செந்தில், இசைத்தட்டிலே நா.மு பேர் தான் இருக்கு. இவங்கள நம்பாதிங்க :)
அய்யணார் பாடல் கேட்க வேண்டும்

தா.பி, கேட்க கேட்க ரொம்ப புடிக்குது. தனுஷ் பாட்டு போல‌

நன்றி முரளி

baba on June 30, 2010 at 4:24 PM said...

மிக அருமையான இசை விமர்சனம் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இசைப்பிரியன் on June 30, 2010 at 4:59 PM said...

Enna nyaabagam varuthunnu chitthu solli konjam puriyuthunnu nenaikaren , Correctaannu sollunga ...

இசைப்பிரியன் on June 30, 2010 at 5:01 PM said...

By the way , Ho jaaye and other examples you told ... They were not Clarinets , I think Trumpets ... Precisely Brass Collection(Ensemble)

கார்க்கி on June 30, 2010 at 5:31 PM said...

பாபா, நன்றி.

அறிவு,
அதேதான். அந்த ஞாபக‌ம்தான் :))

அது ட்ரம்ப்பெட்தான். ட்ரெம்ப்பெட் பிராஸ்ள வரும். கிளாரினெட் முனையில் நாதஸ்வரம் போல மூங்கில் இணைப்பு இருக்கும். வித்தியாசம் கன்டுபிடித்துவிடலாம். ஆனால் சற்று சிரமம் தன. அந்தப் பாட்டுல ட்ரெம்பெட் காட்சில வருவதால் எளிதில் சொல்லியிருக்கலாம். மிஸ் பண்ணிட்ட. ஆனா இதுல அவ்ருவது எதுவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோபிநாத் on June 30, 2010 at 8:03 PM said...

சகா...நமக்கு விஜய்யேசுதாஸ் தான் ;)

இந்த வருஷம் யுவன் காட்டுல மழை தான் போல...அடுத்து அடுத்து ரெண்டு ஆல்பம் ரெடியாக இருக்கு ;))

ஆதிமூலகிருஷ்ணன் on June 30, 2010 at 11:14 PM said...

படம் வரட்டும். பாடல்கள் எப்படி பிச்சரைஸ் பண்ணியிருக்காங்கன்னு பாக்கலாம்.

செந்தில் குமார் வாசுதேவன் on June 30, 2010 at 11:26 PM said...

இது வேறயா? :) சரி சரி விடுங்க.. ஏன் இந்த ஏமாத்து வேலையோ இவங்களுக்கு..

பரிசல்காரன் on July 1, 2010 at 7:38 AM said...

வாங்கிடறேன்...

அருண்மொழிவர்மன் on July 1, 2010 at 9:25 AM said...

இந்தப் படத்துக்கு முதலில் வேறு பெயர் வைத்தார்களா/ முதலில் வேறு பெயரில் இந்த இசைத்தட்டைப் பார்த்திருக்கிறேன்

நான் அவளைச் சந்தித்தபோது என்ற பெயரில்

"ராஜா" on July 1, 2010 at 9:25 AM said...

சகா பதிவுக்கு சம்பந்தம் இல்லாதத ஒரு பின்னூட்டம் .... அசல் படம் டீவீயில பாத்தேன்னு அள்ளி விட்டீங்க ... வேட்டைக்காரன் படம் ஓடுச்சாமே டீவீயில ரெண்டு நாளா .. பாத்தீங்களா? அடுத்த படம் நேரடியா சன் DTHலதான் ரிலீசா?

ரோமியோவின் பக்கம் on July 1, 2010 at 11:49 AM said...

நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் என்னை இதிலும் பையாவிலும் கவர்க்திருக்கிறார்.அருமையான மெல்லிசை..பாடல்களின் உச்சரிப்பு அருமை..நல்லா இருக்கு சார்!!ஆனா டியூன் தானே எனக்கு பையா பாடல்களை ஞாபகப்படுத்துது....என்ன பண்ணலாம்....என்க்குன்னா 4 பாட்டு...ஓஹ் ஷாலு சூப்பர்..இளமைத் துள்ளல்..ஒரு வானவில்லை அருமை நல்ல குரல் தெரிவு...விஜய் ஜேசுதாஸ் பின்னுகிறார்.கார்த்திக் என்ன குரலய்யா உங்களுக்கு.....

யுவன் சார் புது டியூன் தாங்க!!இன்னும் ரசிக்கலாம்...

மாரி-முத்து on July 1, 2010 at 5:55 PM said...

ஒரு வானவில்லின் - பருவாயில்லை. நல்லாத்தான் இருக்கு

சரி

ஆனா ,

1. வாம்மா தொரியம்மா
இது வங்கக் கரியம்மா..

2. நடுக்கிற பட்டாம்பூச்சி நீதானே...

3. ஏதோ சவுக்கியம் பருவாயில்லை..

4. அவளைப் பார்த்த அந்த நிமிடம்
வளந்து பாக்க நெஞ்சம் தோன்றும்....

5. கனுவிலே கடுவுள் வந்தால்
தொங்கிடும் குளந்தை சிறிக்கும்....

6. தொட்டத்தில் குருவிச்சத்தம்
தொப்புக்குள் குயிலின் சத்தம்...

இதெல்லாம் பரவாயில்லையா!!!

தமிழ்ப்பறவை on July 5, 2010 at 12:40 AM said...

சகா இன்னைக்குத்தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்... நல்ல்லா இருக்கு...
ஓ ஷாலாவும்,என்ன என்ன ஆகிறேன், சாமி வருகுது பிடிச்சிருக்கு....இன்னும் லிரிக்ஸ் கவனிக்க ஆரம்பிக்கலை...

Anonymous said...

கார்கி,
நல்ல அலசல் :)
அன்புள்ள சந்தியாவும், ஓ ஷலாவும் (முதல் முறை கேக்கும் போது வாலிப வா வா நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது) அட்டகாசமா வந்திருக்கு. ஆனா "கற்பூர நாயகியே" - "கருப்பான கையாலே" ஆன மாதிரி "எங்கே மணக்குது சந்தானம் எங்கே மணக்குது" - "சாமி வருகுது, காதல் சாமி வருகுது" ன்னு பண்ணிடாறே நம்பாளு :)

பானா காத்தாடில - என் நெஞ்சில் (இதம்), பைத்தியம் பிடிக்குது, தாக்குதே கண் தாக்குதே -டிபிகல் யுவன்.

அய்யனார்ல தமன் சாமி ஆடி இருக்கார். கண்டிப்பா கேட்டுட்டு விமர்சனம் எழுதுங்க. பனியே, பனியே பாடலுக்கே தனி இடுகை போடலாம். அரிது அரிது கூட நல்ல தான் இருக்கு. தமன் விரைவில் ஒரு முதல் வரிசையில் இடம் பெறுவார் என நம்புகிறேன்.

இப்போ வம்சம்ல கூட "மருதாணி பூவு மேல" அட்டகாசமா இருக்கு.

 

all rights reserved to www.karkibava.com