Jun 28, 2010

நாய்க்கவிஞன் நாகராஜ்


 

   உங்களுக்கு நாய்க்கவிஞன் நாகராஜை தெரியாது. பரப்பரப்பான சென்னையின் பக்கா அடையாளமான வேளச்சேரியில் வாழும் ஒரு பரமாத்மா அவன். பார்ப்பதற்கு சினிமா நடிகனைப் போல் இருப்பான். தனுஷின் உடல், தல அஜித்தின் தல, சத்யராஜின் ஹேர் ஸ்டைல், சூர்யாவின் உயரம் என கலக்கல் காக்டெயில் அவன். லுங்கியும், கட்டம் போட்ட சட்டையும் அவனது சீருடை. அவ்வபோது லுங்கி காணாமல் போகுமென்றாலும் கவலைப்பட மாட்டான் நாகராஜ். வானத்தைப் போல அண்ணன் தம்பி காஸ்ட்யூம் போல சட்டையே முட்டி வரை இருக்கும். ஆனால் கேப்டனைப் போல லுங்கிக்குள் இன்சர்ட் செய்வது நாகராஜுக்கு அறவே பிடிக்காத செயல். இனி மிச்சமிருக்கும் கதையை நாம் நாய்க்கவிஞன் நாகராஜின் லேங்குவேஜிலே பார்க்கலாம்.

  வெல்டிங் குமாரு, பங்க் பிரபு, டெக் ரமேஷ் என அடைமொழி வச்சிக்கின்னு ஊரில சில பேரு டகால்ட்டி வேலை காட்டிட்டு இருந்தத பார்த்து ரியல் டெரர் நாகராஜுக்கு படா பேஜாரா ஆச்சு. நமக்குன்னு ஒரு வூடு இல்லாட்டியும் பர்வால்ல. பேருக்கு முன்னால் ஏதாச்சும் டைட்டில் வேணும்ன்னு முடிவு செஞ்சாரு. படிச்சா கூட பேருக்கு பின்னாலதான் போடுவாங்க. யாரையாவது அடிச்சாதான் பேருக்கு முன்னால டைட்டில் போடுவாங்கன்னு நாகராஜுக்கு தெரியாது. அவனா வச்சிக்கிட்ட டைட்டில்தான் நானூறு நாகராஜ். அதுக்கு அவன் சொன்ன ரீசன் எடுபடல. 100க்கே நம்ம நாகு நாட்டியம் ஆடுவான் என்பது ஊரறியும். ஆனா நூறு நாகராஜ்ன்னு பேரு வச்சா ரைமிங்கா வரல. அதனால் “நான் நூறு நாகராஜ்” என்பதை ஒண்ணா சேர்த்து நானூறு நாகராஜ்னு வச்சிக்கிட்டான்.

ஒரு நாள் இப்படித்தான் 100மில்லி அடிச்சிட்டு வந்தான் நாகு. மப்பு ஆள தூக்கவே உஷாரா ராஜேஷ்வரி தியேட்டருக்குள்ள நுழைஞ்சிட்டான் . அவன் கெட்ட நேரமோ என்னவோ அங்க டீ.ஆர் படம் ஓடிட்டு இருந்துச்சு. உயிருள்ள வரை உஷான்னு பேர் போட்டவுடனே நொட்டாங்கை பக்கம் திரும்பி அங்கிருந்தவனிடம் "நல்ல வேல.ஹீரோயின் பேரு மஞ்சுன்னு வைக்காம விட்டாங்க. இல்லன்னா படம் பேரு ம.... மஞ்சு" என்று நாகு முடிப்பதற்குள் நொட்டாங்கை ஆள் காணாமல் போயிட்டாரு.அவர காணோம்ன்னு உடனே நாகு டிசைட் பண்ணான். பேரு வச்ச அடுத்த நாளே தனக்கு ஒரு ரைட்டோ, லெஃப்ட்டோ தேடணும்ன்னு.வேற வழியில்லாமல் தனியா படம் பார்த்த நாகுக்கு ஏதோ சொல்வாங்களே. ஆங்.புல்லரிச்சுச்சு. அர்ஜென்ட்டா ஒரு லவ் பண்ணியே ஆகனுன்னு நாகுக்கு தோணுச்சு.  பாதில வெளிய வந்த டெரர் கண்ணுல பட்டது நம்ம பிங்கி. பிங்கிய பார்த்தவுடனே டீ.ஆர் கவிதை சொல்ல ஆரம்பிச்சான் நாகு.

நைட்டுல தூங்க தேவை பாய்
ஃபைட்டுல உடஞ்சு போகும் வாய்
இன்னொரு கடவுள் மாதிரிடா தாய்
பிங்கி.. நீ ரொம்ப அழகான நாய்..

ஹேய் டண்டணக்கா டணக்கு டக்கா..

என்று இல்லாத கேசத்தை கோதினான் நாகு. ஆமாங்க. பிங்கின்றது நாய். தன்னோட முதல் கவிதையே நாய பத்தி பாடினான் நாகு. அதுதான் அவனுக்கு பின்னால..இல்ல இல்ல முன்னால வரலாற்றுல பிளேஸ் வாங்கித் தந்துச்சு. நானூறு நாக்ராஜ் ஃப்ளாப் ஆனாலும் "நாய்க்கவிஞன் நாகராஜ்" செம ஹிட்ங்க. சன் டிவி ஹிட் மாதிரி இல்லாம செம ஹிட்.

   ஒரு வழியா பேரு வாங்கிட்டான் நாகு. நெக்ஸ்டு ஆக்டிவிட்டியா தனக்கு ரைட்டு ஹேண்ட் ஒருத்தன தேடினான். அந்த நேரத்துல கபால்ன்னு வந்து செட் ஆனவன் தான் பிலாக் ரவி. பார்க்க கருப்பா இருப்பானான்னு கேட்காதிங்க. நம்ம ரவி மூர் மார்கெட்டுல பழய பொஸ்தகம் வித்துட்டு இருந்தவன். அதுல ஃபாரின் லிட்ரேச்சர் எல்லாம் கிடக்கும்.அது என்ன கண்ட்ரி? துண்டு துண்டா போச்சே. நம்ம ஜெயம் ரவி கூட லட்சுமிராயை டாவடிப்பாரே. ரஷ்யா மாமு. அந்த நாட்டு பொஸ்தகம் எல்லாம் நம்ம ரவிக்கு அத்துப்படி. தலைப்பு மட்டும்தான். அப்படி ஒரு பொஸ்தகம் தான் வெண்ணிற இரவுகள். இதென்னடா டகால்ட்டியா கீது. நைட்டு எப்படி வெள‌ளையாகும்ன்னு நம்ம ரவி கண்ணு முழிச்சு பார்த்தாரு. நைட்டு கருப்பாவே போச்சு. மறுநாள் பகல்ல கண்ணு டப்ஸாகி பகல் கருப்பாயிடுச்சு ரவிக்கு. "ரவின்னா சூரியன். சூரியன்னா பகல். அதனால் நீ இனிமேல் பிலாக் ரவி" என்று அழைக்கப்படுவாய் என அவன் கடைக்கு ரெகுலரா பொஸ்தகம் வாங்குற மோரு ஒருத்தரு..டங் ஸ்லிப்.. சார் ஒருத்தரு ரவிக்கு நேம் வச்சிட்டாரு. அன்னையிலிருந்து இன்னைக்கு வரை சாதா ரவி "பிலாக் ரவி" னு எல்லோரும் காலிங்.

நாகுவும், ரவியும் படா தோஸ்த் ஆயிட்டாங்க. அதுல குஜால் மேட்டர் என்னன்னா ரெண்டு பேரும் சண்முகத்துக்கு.அட அதில்லப்பா..ஆங் சமூகத்துக்கு குட் செய்ய ஸ்டார்ட் பண்ணாங்க‌. ஊருல இருந்த பெர்சுங்க எல்லாம் எவ்ளோ சொல்லிப் பார்த்துச்சுங்க. முடியவே முடியாது. செஞ்சிதான்  தீருவோம்ன்னு அடம் புடிச்சான் நாகு.செஞ்சி இல்லன்னாலும் திருவண்ணாமலையாவது செய்வோம்ன்னு கூடவே சொன்னான் பிலாக் ரவி. ஃபர்ஸ்ட் ஜாபா கூத்து போடுற சரவணன் மேல பிராது கொடுத்தான் நாகு. ரவி அவன் பார்ட்டுக்கு ராமாயண‌ நாடகம் போட்ட மணி மேல பிராது கொடுத்தான். இதுல நெக்ஸ்ட் காமெடி என்னன்னா அவன் இவன் கிட்ட பிராது கொடுத்தான். இவன் அவன் கிட்ட பிராது கொடுத்தான். என்னங்டான்னு ஓரு பெருசு கேட்டப்ப நாகு சொன்னான் " மாடுக்கு புல்லுக்கட்டுதான் புடிக்கும். பசங்களுக்கு கிரிக்கெட்டுதான் புடிக்கும்.ஆனா ரவிக்கு ஜாக்கெட்டுதான் புடிக்கும். அவ்ளோ நல்லவன்". கண்ணுல கலங்கி காதுல இருந்தெல்லாம் தண்ணியா கொட்டுச்சு ரவிக்கு. பதிலுக்கு அவன் சொரியத் தொடங்கினான் "நீங்கலாம் ஃபிகர்தான் சுகர்ன்னு கவித பாடறீங்க. நாகுதான் வாய் இருக்கும் வரை நாய பத்தி கவிதை பாடுவேன்னு சொல்றான். அவந்தான் நல்லவன். அதான் அவன் கிட்ட பிராது கொடுத்தேன்"

ரெண்டு பேரும் தோள்ள கைப்போட்டுக்குன்னு அடுத்த பிராதுக்கு வழித்தேடி போனாங்க. காணாம போன எஸ்.ஏ.ராஜ்குமார் வந்தா "லாலாலா"ன்னு ட்யூனாவது போடுவாரு. நாம என்ன செய்றது? இந்த டுபாக்கூர் ஃப்ரெண்ட்ஸ் அடுத்து என்ன காமெடி செய்றாங்கன்னு பார்ப்போம். இப்ப அல்லாரும் வூட்டுக்கு போங்க.

35 கருத்துக்குத்து:

ramesh on June 29, 2010 at 12:12 AM said...

வெகு நாட்கள் கழித்து மனம் விட்டு சிரித்தேன்.

//தனுஷின் உடல், தல அஜித்தின் தல, சத்யராஜின் ஹேர் ஸ்டைல், சூர்யாவின் உயரம் என கலக்கல் காக்டெயில் //

//படிச்சா கூட பேருக்கு பின்னாலதான் போடுவாங்க. யாரையாவது அடிச்சாதான் பேருக்கு முன்னால டைட்டில் போடுவாங்கன்னு நாகராஜுக்கு தெரியாது.//

// "நல்ல வேல.ஹீரோயின் பேரு மஞ்சுன்னு வைக்காம விட்டாங்க. இல்லன்னா படம் பேரு ம.... மஞ்சு"//

குபீர்ன்னு சிரித்த இடங்கள்.

ப்ரியமுடன்...வசந்த் on June 29, 2010 at 2:29 AM said...

//அப்படி ஒரு பொஸ்தகம் தான் வெண்ணிற இரவுகள். இதென்னடா டகால்ட்டியா கீது. நைட்டு எப்படி வெள‌ளையாகும்ன்னு நம்ம ரவி கண்ணு முழிச்சு பார்த்தாரு. நைட்டு கருப்பாவே போச்சு. மறுநாள் பகல்ல கண்ணு டப்ஸாகி பகல் கருப்பாயிடுச்சு ரவிக்கு. "ரவின்னா சூரியன். சூரியன்னா பகல். அதனால் நீ இனிமேல் பிலாக் ரவி"//

பிலாக் ரவிக்கான விளக்கம் கண்ணு சுத்துதுடா சாமீய்ய்...

சகா உங்ககிட்ட இருந்து ரொம்ப நாளைக்கப்புறம் காமெடி காக்டெயில்..

பிரதீபா on June 29, 2010 at 4:37 AM said...

//கேப்டனைப் போல லுங்கிக்குள் இன்சர்ட் //
இந்த மாதிரி தீவிரவாதிங்க கூட டிரஸ் பண்ண மாட்டாங்க. :))

//நல்ல வேல.ஹீரோயின் பேரு மஞ்சுன்னு வைக்காம விட்டாங்க. இல்லன்னா படம் பேரு ம.... மஞ்சு" //
ரொம்ப நேரம் சிரிச்சேங்க !!

//பிங்கி.. நீ ரொம்ப அழகான நாய்.. ஹேய் டண்டணக்கா டணக்கு டக்கா//
TR படத்த இதுக்குதான் பாக்கனுங்கறது. எத்தன அருமையா(!!) கவித வருது பாருங்க :)))

//சண்முகத்துக்கு.அட அதில்லப்பா..ஆங் சமூகத்துக்கு குட் செய்ய...
செஞ்சி இல்லன்னாலும் திருவண்ணாமலையாவது...
ஃபிகர்தான் சுகர்...நாகுதான் வாய் இருக்கும் வரை நாய //
இன்னா மேரி திங் உட்டிருக்கே நைனா நீ !!

யப்பாடி யப்பாடி !! ஏழுவுக்கு செம்ம போட்டியாள் போலிருக்கு இந்த நாய்க்கவிஞன் நாகராஜ்.

மொத்ததுல brand name-அ கெட்டியா பிடிச்சுட்டு இருக்கீங்க !! அருமை !!

தெய்வசுகந்தி on June 29, 2010 at 5:54 AM said...

:-))))))

மகேஷ் : ரசிகன் on June 29, 2010 at 7:52 AM said...

very funny...

ஆமா... ஏதாச்சும் உள்குத்து இருக்கா?

மகேஷ் : ரசிகன் on June 29, 2010 at 7:53 AM said...

//தனுஷின் உடல், தல அஜித்தின் தல, சத்யராஜின் ஹேர் ஸ்டைல், சூர்யாவின் உயரம் என கலக்கல் காக்டெயில் //

:)))))))))))))))))

Muthusamy Palaniappan on June 29, 2010 at 8:45 AM said...

நீங்கலாம் ஃபிகர்தான் சுகர்ன்னு கவித பாடறீங்க. நாகுதான் வாய் இருக்கும் வரை நாய பத்தி கவிதை பாடுவேன்னு சொல்றான். அவந்தான் நல்லவன். அதான் அவன் கிட்ட பிராது கொடுத்தேன்

தராசு on June 29, 2010 at 8:52 AM said...

கலக்கல் தல.

♠ ராஜு ♠ on June 29, 2010 at 9:31 AM said...

எம்புட்டு நாளாச்சு இப்பிடி ஒரு உள்குத்து பதிவு படிச்சு...!
:-)

முரளிகண்ணன் on June 29, 2010 at 9:56 AM said...

:-)))))

Anbu on June 29, 2010 at 9:57 AM said...

\\எம்புட்டு நாளாச்சு இப்பிடி ஒரு உள்குத்து பதிவு படிச்சு...!
:-)\\\

Repeat..

roomno104 on June 29, 2010 at 10:10 AM said...

kalakunga :))))))))))

SenthilMohan K Appaji on June 29, 2010 at 10:47 AM said...

அப்ப கூடிய சீக்கிரம் writerNayon release ஆகிடுவார்.

கார்க்கி on June 29, 2010 at 10:51 AM said...

நன்றி ரமேஷ்

வசந்த், தேங்க்ஸூப்பா

பிரதீபா, என்ன சொல்றீங்க? அப்ப இவரையும் தொடர் நாயகன் ஆக்கிடலமா? செட் ஆகுமா???

நன்றி தெய்வசுகந்தி

மகேஷ், எனக்கு தெரிஞ்சு எந்த உள்குத்தும் இல்ல.ஆனால் உங்க கற்ப‌னை சக்திக்கு இடமளிக்கிறேன் அதனால்தான் லேபிள் :)

முத்துசாமி, :)

நன்றி தராசண்ணே

ராஜூ, நீ ஏம்ப்ப்பா கொளுத்தி போடுற???????????????

வாங்க முரளி

அன்பு, அவனை நம்பாத. அவ்ளோதான் சொல்லுவேன்

நன்றி ரூம் ந.14

ஜ்யோவ்ராம் சுந்தர் on June 29, 2010 at 10:55 AM said...

ம்ஹூம், எனக்குச் சரியா புரியல :)

சுசி on June 29, 2010 at 11:03 AM said...

மொக்கை சாமி புது ரூட்ல வராரா..

உங்க இன்னொரு வடிவம் சூப்பர்..

நேசன்™..., on June 29, 2010 at 11:18 AM said...

என் படிப்பு மேல சத்தியமா இதுல உள்குத்து இருக்கு!........

ர‌கு on June 29, 2010 at 12:03 PM said...

உள்குத்தேஏஏஏஏஏஏஏஏஏதான் :))

நாக‌ராஜ் யாருன்னு ஒரு சில‌ க்ளூஸ் வெச்சு க‌ண்டுபுடிச்சுட்டேன், பிலாக் ர‌வி 'அவ‌ரா'?! ஏதோ ச‌மூக‌த்துக்கு ந‌ம்மால‌ முடிஞ்ச‌து ;))

மங்களூர் சிவா on June 29, 2010 at 12:32 PM said...

ஸூப்பர்!
+1

Ponkarthik on June 29, 2010 at 1:01 PM said...

//மாடுக்கு புல்லுக்கட்டுதான் புடிக்கும். பசங்களுக்கு கிரிக்கெட்டுதான் புடிக்கும்.ஆனா ரவிக்கு ஜாக்கெட்டுதான் புடிக்கும். அவ்ளோ நல்லவன்//

//நல்ல வேல.ஹீரோயின் பேரு மஞ்சுன்னு வைக்காம விட்டாங்க. இல்லன்னா படம் பேரு ம.... மஞ்சு//

சகா அருமை !!!

காதலிஸம் on June 29, 2010 at 2:19 PM said...

Latchumipathi,Latchumipathi,
idhula periya periya padama theriyuma?...
ithu varaikum
record dance than paathruken.

தனுசுராசி on June 29, 2010 at 2:35 PM said...

இதை ஒரு புனைவா எடுத்துகிட்டா யாரு நாகு யாரு ரவி... கொஞ்ச யோசிச்ச ஏதாவது பொறி சிக்குதான்னு பாக்குறேன்....

தனுசுராசி on June 29, 2010 at 2:37 PM said...

For Email follow up comments...

vinu on June 29, 2010 at 4:34 PM said...

i love thozi updates and all your "items".

this bloger is simply rocks

கார்க்கி on June 29, 2010 at 5:16 PM said...

செந்தில், ஹிஹிஹி

சுந்தர்ஜி, நீஙக்ளுமா. இது சும்மா கட்டுக்கதைங்க‌

சுசி, நன்றி

நேசன், நீங்க 10வது ஃபெயிலா பாஸ்???

ரகு,நீங்களுமா??? இல்ல இல்ல இல்ல

சிவா, எதுக்கு? ??

நன்றி பொன்கார்த்திக்

காதலிசம், கலக்கல் :)

தனுசுராசி, அதெல்லாம் ஃப்ரீயா விட்டு சிரிங்க பாஸ்> நானும் தனுசுதான்

நன்றி வினு

கும்க்கி on June 29, 2010 at 5:16 PM said...

அடிச்சு ஆடுங்க ப்ரதர்.,

:))

அடுத்த ரவுண்டு ஆரம்பமா..?

பிரதீபா on June 29, 2010 at 6:14 PM said...

அடப் பாவமே ... உள்குத்தா குத்தியிருக்கீங்களா நீங்க? அது தெரியாம, நான் ரசிச்சு, நானில்லைங்கோவ் !!
//தொடர் நாயகன் ஆக்கிடலமா? // -நல்லாத்தான் இருக்கும்; ஆனா கடசீல இங்கிலாந்து புட்பால் டீம் கதை ஆகிறப் போகுதுங்க !!

Karthik on June 29, 2010 at 9:25 PM said...

ஒரு உள்குத்தும் வெளங்கலையே.. நான் இன்னும் நல்லவனாவே ரிமைனிங் போல.. ஆவ்வ்..

Suhumar on June 29, 2010 at 11:01 PM said...

//தனுஷின் உடல், தல அஜித்தின் தல, சத்யராஜின் ஹேர் ஸ்டைல், சூர்யாவின் உயரம் என கலக்கல் காக்டெயில் //
சுருக்கமா விஜய் என்னு சொல்லலாம்...

கார்க்கி on June 30, 2010 at 12:11 AM said...

அனைவருக்கும் நன்றி.

சுகுமார், உங்க லென்ஸ் பவர் என்ன?

மதுரை சரவணன் on June 30, 2010 at 7:56 AM said...

அருமையான நகைச்சுவை எழுத்துக்கள். வாழ்த்துக்கள்

Anonymous said...

விஜய்-யின் "புண்"னகையை விட்டுட்டீங்களே பாஸ்

தமிழ்ப்பறவை on July 1, 2010 at 9:07 PM said...

புரிய்லை பாஸ்...

வெற்றி on July 3, 2010 at 12:11 PM said...

:)

வெற்றி on July 3, 2010 at 12:11 PM said...

சத்தமா சிரிக்கும் படியா ஒரு புனைவு :) நாகுவும் ரவியும் இந்த பக்கம் ஆளையே காணோமே..மட்டை ஆகிட்டாங்களோ :)

 

all rights reserved to www.karkibava.com