Jun 27, 2010

தோழி = உலக அழகி


 

உன் மடியில் இருக்கும்போதே சாக வேண்டும் என்றேன் தோழியிடம். ஏன்டா செல்லம் என்பது போல் பார்த்தாள். செத்து சொர்க்கம் போவதை விட சொர்க்கத்தில் இருக்கும்போதே சாவது மேல் இல்லையா?

_____________________________________________________________________________

பச்சை இலையை அரைச்சு வச்சா எப்படி சிவப்பாகும் என்ற‌படி மருதாணி இலையைப் பறித்தாள் தோழி.அவள் ஸ்பரிசம் பட்டவுடன் சிவந்தது மருதாணி இலை, வெட்கப்படும் அவள் கன்னங்களைப் போல.

_____________________________________________________________________________

எத்தனை முறை சொன்னாலும் நம்ப மறுக்கிறாள் தோழி. அவளுடன் பேசும்பொழுது மட்டும் என் அலைபேசியின் சார்ஜ் ஏறிக்கொண்டுதானிருக்கும். இறங்குவதேயில்லை. என்னைப் போல.

___________________________________________________________________________

யாருமில்லா (எங்களைத் தவிர‌) கடற்கரையில் தோழியும் நானும் அமர்ந்திருந்தோம். அலைகள் காலைத் தொட வருவதும், இவள் நகர்ந்துக் கொள்வதுமாய நேரம் கழித்தோம். “இவ்ளோ தண்ணியும் குடிநீரா மாத்திட்டா பஞ்சமேயிருக்காது இல்ல” என்றாள். "ம்ம்.நீதான் ஒத்துக்க மாட்றியே" என்றேன். புரியாமல் முழிக்கிறாள் என் பிரியசகி.

____________________________________________________________________________

தோழியைத் தூக்கிப் பார்த்து கொஞ்சம் குண்டாயிட்ட மாதிரி இருக்கே என்றேன். நான் உன்னை தூக்கவா என்றாள். முடியாது என்று சிரித்து தொலைத்துவிட்டேன்.மழைக்கால வானம் போல முகம் இருண்டது. தூறலைப் போல கண்களில் கண்ணீர் முட்ட தோழி சொன்னாள் "மனசுல சுமக்கிறவளுக்கு கையில சுமக்க முடியாதா?”

_____________________________________________________________________________

  உலக அழகி ரொம்ப அழகா இருக்காங்களாம். இராவணன் போலாம் வறியா என்றாள் தோழி.

ஒரு
உலக அழகியே
உலக அழகியை ரசிக்கிறது
அடடே கார்க்கி

 முக்கிய குறிப்பு:   கார்க்கி = !

31 கருத்துக்குத்து:

ஷர்புதீன் on June 27, 2010 at 11:05 PM said...

:)

Ganesh on June 27, 2010 at 11:09 PM said...

:)

ர‌கு on June 27, 2010 at 11:10 PM said...

ரெண்டாவ‌து சூப்ப‌ர் :))

க‌டைசி அப்டேட் விக்ர‌ம‌ன் ப‌ட‌ ட‌ய‌லாக் மாதிரியிருக்கு. இம்முறை தோழி அப்டேட்ஸில் ஏதோ ஒண்ணு குறையுது ச‌கா

Kafil on June 27, 2010 at 11:30 PM said...

thala kallakkal saga

சுசி on June 27, 2010 at 11:39 PM said...

நல்லா இருக்கு..

சாந்தப்பன் on June 28, 2010 at 1:11 AM said...

அடடே!

நாய்க்குட்டி மனசு on June 28, 2010 at 7:54 AM said...

“இவ்ளோ தண்ணியும் குடிநீரா மாத்திட்டா பஞ்சமேயிருக்காது இல்ல” என்றாள். "ம்ம்.நீதான் ஒத்துக்க மாட்றியே" என்றேன். புரியாமல் முழிக்கிறாள் என் பிரியசகி.//
அவள் மட்டுமா நானும் தான்.

தராசு on June 28, 2010 at 8:57 AM said...

தோழியெல்லாம் சரித்தான், ஏழு எங்கய்யா போனார்?????

kumaresh on June 28, 2010 at 9:38 AM said...

முக்கிய குறிப்பு: கார்க்கி = !

!!!!!!!!!!!!

மின்னுது மின்னல் on June 28, 2010 at 9:39 AM said...

“இவ்ளோ தண்ணியும் குடிநீரா மாத்திட்டா பஞ்சமேயிருக்காது இல்ல” என்றாள். "ம்ம்.நீதான் ஒத்துக்க மாட்றியே" என்றேன்.
//

கார்க்கி on June 28, 2010 at 10:08 AM said...

நன்றி ஷர்புதீன்

நன்றி கணேஷ்

நன்றி ரகு. அப்படியா? எடக்குமடக்கான விஷயஙக்ளை தவிர்த்திருக்கிறேன் :)

கஃபில், தல கலக்கல்ன்னா? என்னையா சொல்றீங்க?

நன்றி சுசி

சாந்தப்பன், ஹிஹிஹி

நாய்க்குட்டி, தோழி கால்பட்டா கடல் தண்ணி குடிதண்ணியா மாறிடப் போது. இது புரியலையா?

தராசண்ணே, தோழி தண்ணியடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் எப்படி நான் ஏழு கூட பாருக்கு போறது?

குமரேஷ், :)))))))

மின்னல், காப்பி பண்ணிட்டு ஏதோ சொல்ல ம்றந்துட்டிங்க சகா

Anonymous said...

கார்க்கி இதெல்லாம் வேறயா.நல்லா இருக்கு

அடடே ஆச்சர்ய குறி அத விட்டுடீங்க பாருங்க.

முரளிகண்ணன் on June 28, 2010 at 10:24 AM said...

சகா கலக்கல்.

\\மனசுல சுமக்கிறவளுக்கு கையில சுமக்க முடியாதா?”

\\

யே தில் மாங்கே மோர்

புன்னகை on June 28, 2010 at 10:43 AM said...

//தோழியைத் தூக்கிப் பார்த்து கொஞ்சம் குண்டாயிட்ட மாதிரி இருக்கே என்றேன்.//
அப்போ தோழி குண்டான காரணம் அப்படின்னு ஒரு தோழி அப்டேட்ஸ் வருமா? :P

Anbu on June 28, 2010 at 11:05 AM said...

:-))

ஆதிமூலகிருஷ்ணன் on June 28, 2010 at 1:04 PM said...

கண்களில் கண்ணீர் முட்ட தோழி சொன்னாள் "மனசுல சுமக்கிறவளுக்கு கையில சுமக்க முடியாதா?”
//

உண்மையிலேயே இது கொஞ்சம் ஓவருப்பா..

பிரதீபா on June 28, 2010 at 3:44 PM said...

ஒன்னு ரெண்டு நீங்க ஏற்கனவே பீல் பண்ணிட்ட மாதிரி இருக்கே !!
அது சரி, நீ அழகா இருக்க ன்னு தோழி கிட்ட ஒரு வாட்டியா சொல்றீங்க !!
(தோழிய நான் பாத்தேன் போட்டோ ல .. ம்ம்.. இதுக்கும் மேல எதாச்சும் சொல்லனுமா என்ன?)

vinu on June 28, 2010 at 5:22 PM said...

ஒரு
உலக அழகியே
உலக அழகியை ரசிக்கிறது

oru
sweet stallea
paniyaram
sappidukirathu ![aachiriya kuri]

but still your's cute pa

vinu on June 28, 2010 at 5:28 PM said...

tholiya nee kathaliya nee yaradi peannea.

Bala on June 28, 2010 at 5:38 PM said...

தலைவரே, டிவில வேட்டைக்காரன் பாத்தீங்களா? நீங்க அசல் பாக்கனும்னு சொன்னீங்க கடைசீல வேட்டைக்காரன போட்டுட்டாங்களே?

Bala on June 28, 2010 at 5:45 PM said...

//தோழி கால்பட்டா கடல் தண்ணி குடிதண்ணியா மாறிடப் போது. இது புரியலையா?

நான் கூட விஜய் பாட்டுல வர்ற வரியை பத்திதான் சொல்றீங்க போலன்னு நெனச்சுட்டேன்.

தெய்வசுகந்தி on June 28, 2010 at 7:40 PM said...

:-))))

அத்திரி on June 28, 2010 at 7:56 PM said...

ரொம்ப முத்தி போச்சு................ஒன்னும் சொல்றதுக்கு இல்லை

Chitra on June 28, 2010 at 8:27 PM said...

nice. :-)

நாய்க்குட்டி மனசு on June 28, 2010 at 8:48 PM said...

கடற்கரைக்கு போயிட்டு தண்ணியில கால் நனைக்காத பொண்ணா? கார்க்கிக்கு இப்படி ஒரு தோழியா?

மகேஷ் : ரசிகன் on June 28, 2010 at 11:16 PM said...

சகா... ஹால் புக் பண்ணனும். ஐயர்கிடா சொல்லனும், ஜவுளி எங்க எடுக்கலாம் ? எவ்ளோ வேல இருக்கு.... ஆரம்பிச்சிடலாமா?

கார்க்கி on June 28, 2010 at 11:37 PM said...

கிட்டிப்புள்ளு, ஹிஹிஹி.அத மறக்கலாமா?

வாங்க முரளி. எவ்ளோ நாள் ஆச்சு?

புன்னகை, தோழி குண்டாயிட்டாளா? எப்போ?

ஆதியண்ணே, விடுங்கண்ணே

பிரதீபா, அபப்டியா? ஆச்சரியம். நானே இன்னும் பார்க்கல :)

வினு, நன்றி..

நன்றி தெய்வசுகந்தி

அத்திரி, இல்ல சகா. இன்னும் இல்ல‌

நாய்க்குட்டி, கார்க்கி இருக்கிறப்ப வேறு எதுவும் தெரியலயாம். சொல்ல சொன்னா தோழி

மகேஷ், முதல்ல மாத்திரயை ஒழுங்கா போட்டு தூங்கு... ராஸ்கோலு

Karthik on June 29, 2010 at 9:38 PM said...

ஸப்பா..:))

Ŝ₤Ω..™ on June 30, 2010 at 6:46 PM said...

saga.. Kadaisi matter juperu..

தமிழ்ப்பறவை on July 1, 2010 at 9:11 PM said...

//கார்க்கி = !//
இது மேட்டரு...
ஆமா அது என்ன புவனா
முக்கிய குறிப்பு: புவனா ஒரு கேள்விக்குறி

வெற்றி on July 3, 2010 at 12:19 PM said...

//எத்தனை முறை சொன்னாலும் நம்ப மறுக்கிறாள் தோழி. அவளுடன் பேசும்பொழுது மட்டும் என் அலைபேசியின் சார்ஜ் ஏறிக்கொண்டுதானிருக்கும். இறங்குவதேயில்லை. என்னைப் போல. ___________________________________________//

nice lines sagaa :)

 

all rights reserved to www.karkibava.com