Jun 25, 2010

புன்னகையோ..மவ்வல் மவ்வல்


 

பாஸ்கர்... என் நண்பன்.. கண்டுபுடிச்சிட்டிங்களா? ஆம்.அவனும் விஜய் ரசிகன் தான். தலைவர் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கப் போறேன். ஒரு டயலாக் சொல்லு மச்சி என்றான். ரூம் போடாமல், தலையை சொறியாமல், மோட்டுவளையைப் பார்க்காமல், மூளையை கசக்காமல் ஒரு டயலாக் சொன்னேன்..

தலைவா..

ஆஸ்கர் இல்லைன்னா என்ன..
பாஸ்கர்.. நான் இருக்கிறேன்

நோ நோ நோ. அப்ப‌டியெல்லாம் திட்டக் கூடாது. நான் பாவம்.

_________________________________________________________________________________

வெகுகவனமாய் என்னைத் தொடர்கிறது
அயரும் பொழுதொன்றிற்காக
மிகக் கவனமாய் தொடர்கிறது
தடுமாறப்போகும் அந் நொடிக்காக
அதி நெருக்கமாய் தொடர்கிறது
அதைவிட வெகுகவனமாய்த்தான் நான்
ஆனாலும்
ஓர் அதிகாலை நேரத் தோட்டத்தில்
உதிர்ந்திருந்த மலரொன்றை
எடுத்து மண் தட்டி நுகரும் தருணத்தில்
என்னைத் தழுவிச் சூழ்ந்தது
தீதும் நன்றும்

சகா.இப்படியெல்லாம் நீ எழுதிவியா என்றுதான் எல்லோரும் கேட்டார்கள். எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறாங்க‌ளோ? ஆம். அதை எழுதியது நானல்ல. நர்சிம். பிளாகுல எழுதலனாலும் தினமும் ஏதாவது எழுதி வைங்க சகா. இல்லன்னா டச் விட்டுப் போகுமென்றேன். எழுத்து என்பது நீச்சல் போல எனக்கு. அதெல்லாம் மறக்காது என்றார். சரிதான். அவருக்கு நீச்சல் அடிக்கத் தெரியாது போல என்று சொல்லிவிட்டு வைத்தேன். சொன்னது காதில் விழுந்துவிட்டது போல். திரும்ப அழைத்து " என்ன சொன்ன சகா" என்றார். "இல்ல.உண்மையா ஏதாவது எழுதினிங்கன்னா மெயில் பண்ணுங்க" என்றேன். நான் மட்டும்தானே படிக்கப் போறேன் என நினைத்து பயபுள்ள விவரமான கவிதையை அனுப்பினார். நேசன் என்பவர் சரியா கண்டுபிடித்திருந்தார். இந்த மாதிரி ஆளுங்க ஆசைப்பட்டா எழுதலாம் இல்ல என்றேன். தெளிவாக இருக்கிறார். பிளாக் வேண்டாமென. விளங்கதாவர். நான் அடுத்த மொக்கையைப் போடறேன். வாங்க‌

______________________________________________________________________________

சரவண பவனுக்கு நீண்ட நாள் கழித்து சென்றிருந்தேன். சர்வரிடம் பாசுந்தி என்றேன். இல்லை என்றார். அப்போ பாசு லேதுன்னு செப்பண்டி என்றேன். முறைத்துக் கொண்டே சென்றார். பின் சாம்பார் வடைக்கு பதில் போண்டாவை எடுத்து வந்தார்.வடைதானே கேட்டேன் என்றேன்.  அதற்கும் ஒரு முறை முறைத்துக் கொண்டே சென்றார். கடைசியாக சாத்துக்குடி ஜூஸ் சொன்னான் என் நண்பன். ரொம்ப லேட்டாக ”சாத்துக்குடி” என்று டேபிளில் டொக்கென்று வைத்தார் சர்வர். நண்பனிடம் ”பாத்துக்குடி” என்றேன். இந்த முறை சிரித்துக் கொண்டே சென்றார் சர்வர். அவருடைய பாஸை சொன்னதாக நினைத்தாரோ என்னவோ?_____________________________________________________________________________

கணிணியும், இணையமும் தரும் வாய்ப்புகள் ஆச்சரிய‌மானது என்பதை நாமறிவோம். ஆனால் அதை முழுமையாக நாம் பயன்படுத்துகிறோமா?இன்னமும் சஞ்சிகையில் எழுதுவது போலதான் 99% வலைப்பூக்கள் இருப்பதாக கருதுகிறேன். அகராதி என்பதை நாமறிவோம். இணைய அகராதி என்றாலும் பெரும்பாலும் அது அர்த்தத்தை மட்டும் தருவதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால் நீங்கள் மதன் கார்க்கி & குழு உருவாக்கிய அகராதி கண்டதுண்டா? ஒரு வார்த்தையை கொடுத்தால் அதன் தமிழ் அர்த்தம்,ஆங்கில அர்த்தம், வகை, வார்த்தைப் பயன்பாடு, ஒலியோட்டம்.. இவை மட்டுமல்லாமல் அந்த வார்த்தை எந்தெந்த திருக்குறள்களில் எல்லாம் வருகிறதோ அந்த குறள்கள், பாரதியார் பாடல்கள்... இன்னும் இருக்கிறது.. வருகின்ற முடிவுகளை பிளாகர், டிவிட்டர் மற்றும் இன்னபிற சமூகத்தளஙக்ளில் பகிர்ந்துக் கொள்ள ஏதுவான சுட்டிகள்.. இன்னும் சேர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். நமக்கு எந்த வார்த்தைத் தேவையோ அதை தமிழில்தான் கொடுக்க வேண்டுமென்றில்லை. ஆங்கிலத்திலும் டைப்பலாம். அகராதியின் சுட்டி இங்கே. பாராட்டுவோம் அவர்களை. அகராதியை பயன்படுத்துவோம்.

நான் "மவ்வல்" என்ற வார்த்தையை தேடினேன். இன்னும் சேர்க்கவில்லையாம் அவர்கள். ஹிஹிஹி

_________________________________________________________________________________

சென்ற வாரம் பாடலாசிரியர் முத்துக்குமார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எதிர்பார்த்தது போலவே எளிமையான மனிதராக இருந்தார். பேச்சில் கவிஞரைப் போல காட்டிக் கொள்ளவில்லை. பாடல் எழுதுவதை விடவும் இயக்குன‌ராகும் ஆர்வமே அவருக்கு அதிகமாக இருக்கிறது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். யார் விடுறா இப்போ? இன்னும் பல நல்லப் பாடல் வேணும் எங்களுக்கு என்றேன். அவரிடம் கேட்க வேண்டுமென வெகு நாட்களாக மனதில் இருந்தக் கேள்வியை கேட்க எப்படி மறந்து போனேன் என்று தெரியவில்லை.

"கடும் விஷத்தினை குடித்தாலும்
அடிகொஞ்ச நேரம் க‌ழித்தே உயிர் போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்..
காதல் என்றால் பெண்ணே..சித்ரவதைதான்"

உடனே உயிர் போய்விடும் என்றால் எப்படி சித்ரவதை ஆகும்? அடுத்த முறை கேட்டு வருகிறேன். அவர் எழுதியதிலே எனக்கு மிகவும் பிடித்த இரு வரிகள்

தென்னை மரமே தென்னை மரமே..
உடம்பில் வளையல்கள் ஏனோ.
திருமணம் உனக்குதானோ

"உன் கண்களிலே என் வயதறிந்தேன்"

22 கருத்துக்குத்து:

டம்பி மேவீ on June 25, 2010 at 8:13 AM said...

raittu

டம்பி மேவீ on June 25, 2010 at 8:14 AM said...

me the first...

starting to office.. so not able to post an detailed comment

ஷர்புதீன் on June 25, 2010 at 8:15 AM said...

:)

சுரேகா.. on June 25, 2010 at 8:17 AM said...

சரி..! :)

நர்சிம் கவிதை சிறப்பு!

கவிஞர் நா.மு! இன்றைக்கு தமிழ் சினிமாவின் நம்பிக்கை !

நாய்க்குட்டி மனசு on June 25, 2010 at 8:31 AM said...

நல்ல காரியம் செய்தீங்க கார்க்கி, நர்சிம் நல்ல எழுத்தாளர், உணர்வின் வேகத்தில் அவர் செய்த தவறுக்கு (தப்பல்ல ) அவர் பெற்ற தண்டனை மிக அதிகம் என்பது 'என்' எண்ணம். அவர் நல்லா எழுதுறார்னு நினைக்கிறவங்க நிறைய பேர். அவர்கள் சார்பாக நன்றி.

தராசு on June 25, 2010 at 9:03 AM said...

தீதும் நன்றுவையும் பத்தி எனக்கு அப்பவே ஒரு சந்தேகம்னு சொன்னா நம்பவா போறீங்க, சரி, ரைட்டு விடுங்க நம்பாதீங்க.

மதன் கார்க்கி - வாவ்,,,,, இந்த கார்க்கிகளே இப்படித்தானா!!!!!!!!!!!!

Vidhoosh(விதூஷ்) on June 25, 2010 at 9:27 AM said...

அப்டியா செய்தி? அதானே பார்த்தேன்.... அப்போ வாழ்த்துக்களை நர்சிம் பக்கம் திருப்பி விடுங்க.

மற்றதெல்லாம், கொஞ்சம் பழகின எழுத்து மாதிரி இருக்கு.

அகராதி அருமை - புக்மார்க் பண்ணியாச்சு.

யோ வொய்ஸ் (யோகா) on June 25, 2010 at 9:54 AM said...

எல்லாமே நல்லாயிருக்கு சகா

vanila on June 25, 2010 at 10:12 AM said...

தலைவா.. ஆஸ்கர் இல்லைன்னா என்ன..
பாஸ்கர்.. நான் இருக்கிறேன்

செம்மொழிச்சுடரே ... புதுதில்லி தொலைக்காட்சிப்பொழிவே.. அருமைய்யா.. அருமை.. நர்சிம்மிடம் என் வாழ்த்துக்களைப்பகிரவும்..

கார்க்கி on June 25, 2010 at 10:32 AM said...

மேவீ, நீ டீட்டெயில்லா போட்டுட்டாலும்.. :))

நன்றி ஷர்புதீன்..

சுரேகா, ஆம் தல. நிச்சயமாய்

நாய்க்குட்டி, மிக்க நன்றி

தராசண்ணே, நம்பறேன். ஆனா அடுத்த வரில ஏன் "அவர" கலாய்ச்சிடிங்க..:)

நன்றி விதூஷ். டைவெர்ட் பண்ணியாச்சு

நன்றி யோகா..

வாநிலா, நிச்சயம். நன்றி

Mohan on June 25, 2010 at 10:58 AM said...

உடனே உயிர் போயிடுச்சுன்னா,அவனால தன் காதலியைக் கடைசியா ஒரு தடவை பார்க்கவோ (அ) நினைக்கவோ முடியாது.அதைத்தான் கவிஞர் சித்ரவதை என்கிறாரோ!

சுசி on June 25, 2010 at 11:20 AM said...

நர்சிம் கவிதை உங்க போஸ்ட்ல படிச்சது சந்தோஷமா இருந்தாலும் "யாவரும் கேளிர்" மறுபடி உறவுகளோட பேசணும்.. பதிவுகள் மூலமா.

மதன் கார்க்கிக்கு குழுவுக்கு வாழ்த்துகள்.

புன்னகை on June 25, 2010 at 12:08 PM said...

:-(

புன்னகை on June 25, 2010 at 12:09 PM said...

என்ன கேட்காம என் பேர எப்படி தலைப்பா வைக்கலாம்??? அதுக்கு தான் முந்தைய கமெண்ட்!

சாந்தப்பன் on June 25, 2010 at 1:10 PM said...

நர்சிம் கவிதை, நச்!!


மத்த தெல்லாம் வழக்கம் போல..

ப.செல்வக்குமார் on June 25, 2010 at 2:45 PM said...

நீங்கள் கூறிய அகராதி இணையத்தளம் சென்று பார்த்தேன் .. அருமை ...!!

roomno104 on June 25, 2010 at 3:45 PM said...

Agaraadhiyil "கார்கி" endru thedi parthirgala...?

நேசன்™..., on June 25, 2010 at 4:02 PM said...

நான் நர்சிம்முக்குத் தனியா ஒரு மெயில் பண்ணேன் சகா!
தயவு செஞ்சு எழுதுங்கன்னு சொல்லீருந்தேன்!ஆனா.........அவர் மனசுல ஏதோ இருக்கு!.....

கபிலன் on June 26, 2010 at 12:11 AM said...

அன்பின் கார்க்கி..
சாரளத்தின் வழி நர்சிமின் கவிதைக்காற்றை அனுப்பியமைக்கு நன்றி.
தீதும் நன்றும் மாறிக்கொண்டே இருக்கும் என அவரிடம் சொல்லுங்கள்.
பதிவுலகை வெறுக்கும் நிலைக்கு அவர் வந்தது சரியாகப்படவில்லை.

தமிழ் பற்றிய உங்கள் கடந்த பதிவு அருமை.

நேரமிருப்பின்....நண்பர்களே...என் புதிய பதிவுக்கும் வருகை தாருங்கள்.
இதை எழுத கூச்ச மாகத்தான் இருக்கிறது.மன்னிக்க.

அன்புடன் கபிலன்.

தர்ஷன் on June 26, 2010 at 6:27 PM said...

ஆளாளுக்கு அவர காய்ச்சி எடுத்தப் பின் எப்படி எழுதத் தோன்றும். அனைவரும் சொல்லி வைத்தாற் போல் நல்லா இருக்கே இப்படியும் எழுதுவீங்களா எனக் கேட்டப் போது காதில் புகை போயிருக்குமே
நண்பரை என்ன torture ஏனும் கொடுத்து எழுத வைத்து விடுங்கள் சகா torture

கயல் on June 27, 2010 at 3:44 AM said...

:)

ஆதிமூலகிருஷ்ணன் on June 28, 2010 at 1:14 PM said...

அப்படியே சிங்கம் பாட்டைப்பற்றியும் கேக்குறதுதானே நா.முவிடம். என்கிட்ட மாட்டினார்னா சிங்கத்தைவிட்டே கடிக்கவிட்டுருவேன்.

 

all rights reserved to www.karkibava.com