Jun 22, 2010

மொழி..தமிழ்மொழி..செம்மொழி..


 

முக்கிய செய்தி: NDTV – Hindu news channel இன்று காலை நடத்திய செம்மொழி மாநாடு குறித்த கலந்துரையாடல் இன்றும், நாளையும் மாலை 5.30 ஒளிப்பரப்பாகிறது. அதன் மறுஒளிபரப்பு அடுத்த நாள் காலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகும். இரண்டு கல்லூரி மாணவ,மாணவியும் கேபிள், அப்துல்லா, நர்சிம், ஆதி (எ) தாமிரா, வெண்பூவும் கலந்துக் கொண்டோம்.

 

wctc_t   

வழக்கறிஞருக்கும் வழக்குரைஞருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. முன்னவர் அது தொடர்புடைய அறிவு கொண்டவர். பின்னவர் வழக்காடும் உரிமம் பெற்றவர். நமது நீதிமன்றங்களில் ஒருவருக்காக இன்னொருவர் வழக்காட வேண்டுமென்றால் அவர் தன்னை வழக்குரைஞராக பார் கவுன்சலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதே போல மருத்துவர்களுக்கு என்றும் ஒரு அமைப்பு இருக்கிறது. செம்மொழி அந்தஸ்தும் அப்படித்தான். இவர்கள் அங்கீகரிக்காவிட்டால் தமிழ் செம்மொழி இல்லையா என்ற  கேள்விகள் கேட்பதில் அர்த்தம் இல்லை. சீனம், ஹீப்ரூ, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் வரிசையில் இப்போது தமிழும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமையவில்லையா?இதை நாம் கொண்டாடவிட்டாலும் குறைந்தபட்சம் அது குறித்து அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

மொழி:

மொழி என்பது இருவருக்கிடையே கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள மட்டும் உதவும் கருவியாகவே பலரால் கருதப்படுகிறது. மொழியால்தான் சிந்திக்கிறோம். சிந்தனைதான் நம்மை உருவாக்குகிறது.  ஒவ்வொரு மனிதனும் அவரவர் தாய்மொழியில்தான் சிறப்பாக சிந்திக்க முடியும். நாம் சிந்திக்கும் எந்தவொரு விதயமும் மற்ற மொழிகளுக்கு அதன் பின்னரே வடிவம் மாற்றப்படுகின்றன. இவையாவும் புரிந்துக் கொள்ள மறுத்து மொழியை வெறும் ஒரு கருவியாக பார்த்து மற்ற மொழியினை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த ரீதியில் யோசிப்பவர்கள் பிற மொழியையும் அப்படியே தான் நினைக்கக்கூடும். ஜீவனில்லாமல் மொழியை பேசுவதில் எந்த ஒரு முன்னேற்றமும் காண முடியாது. மொழி என்பது வெறும் எழுத்துக்களோ, சொற்களோ அல்ல. அது ஒரு இனத்தின், மரபின், மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. நமக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய அனுபவங்களின் தொகுப்புதான் மொழி. இதனால்தான் மொழி என்பது ஒரு இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு.

தமிழ்மொழி:

மேலே சொன்னவையாவும் தமிழ் மொழிக்கு மட்டுமே ஏற்புடையது அல்ல. அது எல்லா மொழிக்கும் பொதுவானது. தமிழ் என் தாய்மொழியாகையால் அது குறித்து நான் தெரிந்துக் கொள்ள வேண்டியது கடமையாகும். உலகின் தொன்மையான மொழிகளில் முக்கியமானது தமிழ். 3000 வருட  பழமையான மொழி என்று அறியப்படுகிறது.  நம் எல்லோருக்கும் தெரிந்த வரலாற்றுப்பூர்வமான திருக்குறளே 2000 வருட பழமையானது. நம் மொழியின் பெருமைகளை எடுத்துக்காட்டுவது சங்க இலக்கியங்கள். ஆனால் அவை கூட நம்மிடம் இப்போது முழுமையாக இல்லை. நம்மிடம் முழுமையாக இருக்கும் சங்க இலக்கியங்கள்

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்.

எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

பத்துப்பாட்டு : திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.

பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.

“ - யுவகிருஷ்ணாவின் கட்டுரையிலிருந்து”

இன்னுமின்னும் ஏராளமான சிறப்புகளை முன்னிறுத்தி தமிழ் செம்மொழியென 2004ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நாம் எதையெதையோ நினைத்து பெருமைப்பட்டு கொள்ளும்போது நிச்சயம் நான் தமிழ் பேசுபவன் என்று பெருமைப்படுவதில் தவறேதும் இல்லை.அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் இன்று கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கிறது.

மாநாடு அவசியமா? :

மாநாடுகள், கருத்தரங்குகள் எல்லாம் எதனால் நடத்தப்படுகின்றன? அது தொடர்புடைய அறிஞர்கள், ஆர்வலர்கள் ஓரிடத்தில் ஒன்று திரண்டு அதுகுறித்து மேலும் ஆய்வு நடத்தவும்,அவர்களின் ஆய்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்ளவும். ஆகவே அந்த ஒரு மாநாடும், கருத்தரங்கும் மேலே சொன்ன விதயங்களுக்கு வாய்ப்பளித்தால் அவை வரவேற்கப்பட வேண்டியவையே. இந்த மாநாட்டில் வெளியாகவிருக்கும் ஒரு சிறப்பு மலர் பற்றி பார்ப்போம். அஜயன் பாலாவை பலர் அறிவோம். அவர் எழுதும் ஒரு புத்தகம் வெளியாகவிருக்கிறது. உ.வே சுவாமிநாதரைப் போல தமிழ் இலக்கியங்களை ஓலைச்சுவடியில் இருந்து காப்பாற்றி தந்த அறிஞர்கள் 120 பேரின் வாழ்க்கை வரலாறாக வெளியாகவிருக்கிறது இந்த நூல். இது ஒரு மாதிரிதான். இது போல ஏராளாமான நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் நமக்கு கிடைக்கும் என்னும்போது மாநாட்டை வரவேற்பதில் என்ன தவறிருக்க முடியும்?

அதற்கென ஒரு அமைப்பு இருக்கிறதே என்று கேட்கலாம். கடைசியாக 1995ல் நடைபெற்றது. அதன் பின் 15 வருடமாக எந்த ஒரு மாநாடும் நடைபெறவில்லை. அந்த மாநாடு நடந்த போது எனக்கு விவரம் தெரியவில்லை. குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது நடத்தி இருக்கலாமே? 15 வருடம் என்பது பெரிய இடைவெளியாக தெரியவில்லையா? இதன் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் ஆயிரமாயிரம் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட என் தாய்மொழிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டை ஆதரிக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. மாநாடு சிறப்பாக அமைய ஏதேனும் கருத்து சொல்லலாம். செய்யப்பட வேண்டியவைப் பற்றி பட்டியலிடலாம். அதை விட்டு மாநாடே புறந்தள்ள வேண்டியது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஈழம்:

இனத்தின் அடையாளம்தானே மொழி: ஒரு இனமே அழிக்கப்பட்டும், வதைக்கப்பட்டும் வரும் சூழலில் இது அவசியமா என்றதொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. ஈழத்தில் எஞ்சியிருக்கும் மக்களின் துயர் துடைக்க தேவையான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டே ஆக வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதையும் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டையும் இணைத்துப் பார்த்தல் என்பது சரியான பார்வையாக தெரியவில்லை. நமது கண்ணில் ஒரு கண் பழுதாகிவிட்டதே என்பதற்காக உண்பதை நாம் நிறுத்திவிடுகிறோமா? மற்ற பாகங்களும் செயல்பட சக்தி வேண்டுமே. ஈழம் ஒரு துயரமான நிகழ்வு என்பது உண்மைதான். ஆனால் அதற்காக மற்ற செயல்பாடுகளை நிறுத்துவதென்பது அறிவுப்பூர்மவமான செயலாகாது.

இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். இந்த மாநாட்டினால என்ன பயன் என்பதை நேரிடையாக கண்ட சம்பவம் ஒன்றுண்டு. என்னுடன் பணிபுரிந்த நண்பன் ஒருவன் கேட்டான் “எப்போடா தமிழ் செம்மொழியாச்சு”. தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதை உயிர்வாழும் ஓவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ளவேனும் இம்மாநாடு அவசியமாகிறது.

வாழ்க தமிழ்.

30 கருத்துக்குத்து:

Cable Sankar on June 22, 2010 at 11:45 PM said...

ஒகே ரைட்டு ஒத்துக்கறேன் நீ தமிழன்னு.. ஆனா ஏன்..? :)

சுசி on June 23, 2010 at 12:57 AM said...

//”மொழி..தமிழ்மொழி..செம்மொழி..
(கார்க்கி)”//

தமிழன் கார்க்கி :))

வெயில்ல நின்னு நிழலுக்கு ஏங்குற நிலமை வந்திராம இருக்க, ஏன் நீங்க சொல்லி இருக்கிற நண்பன் மாதிரி எதிர்காலம் ஆகாம இருக்க எதுனா செய்யணும். அதுக்காக மத்தத பின்னாடி தள்ளி விட்டுடலாம்.

தமிழ் வளர இல்லேன்னாலும் வாழ, இங்க என் பசங்களுக்கு தமிழ் கத்துக்குடுக்கிறேன். ஒரு காலத்துல புலம் பெயர் வாழ் தமிழர்கள்தான் தமிழ் பேசுவாங்க போலனு கேலி பேசினாலும் ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது.

நல்லா எழுதி இருக்கிங்க.. ஆழ்ந்த சிந்தனை.. வர வர உங்க எழுத்து ஒரு மார்க்கமாத்தான் போயிட்டு இருக்கு. பாராட்டுக்கள்.

// வாழ்க தமிழ்.//

சி.வேல் on June 23, 2010 at 2:48 AM said...

"தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதை உயிர்வாழும் ஓவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ளவேனும் இம்மாநாடு அவசியமாகிறது. வாழ்க தமிழ்."

சுறா படத்தில் விஜய் சொல்லியிருக்கலாமோ ? இன்னும் நிறையபேருக்கு தெரியப்பட்டிருக்கும்

கயல் on June 23, 2010 at 3:38 AM said...

இத்தனை செறிவா ஒரு பதிவு. ஆழமா உண்மை. நல்லதொரு கருத்து! பகிர்தமைக்கு நன்றி.

Ŝ₤Ω..™ on June 23, 2010 at 6:46 AM said...

Saga.. Nee indru mudhal "Semmozhi Tamizhan Karki" endru anbodu azhaikappaduvaai..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on June 23, 2010 at 8:04 AM said...

//ஒகே ரைட்டு ஒத்துக்கறேன் நீ தமிழன்னு.. ஆனா ஏன்..? :)//

:))))

கார்க்கி, சொந்த அரசியல் கலக்காத உண்மையில் மக்களுக்கு உருப்படியாய் தமிழை செம்மொழியாய் கொண்டு செல்லும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நானும் வரவேற்கிறேன்.

நாய்க்குட்டி மனசு on June 23, 2010 at 8:27 AM said...

அப்பப்போ கலக்கலா எழுதுறது கார்க்கியின் style

தராசு on June 23, 2010 at 8:44 AM said...

ஓ. கே ரைட்டு ஒத்துக்கறேன், நீ தமிழன்னு. இத்தோட நிறுத்திக்கறேன்.

taaru on June 23, 2010 at 10:03 AM said...

வாழ்க தமிழ்.... நிறைய விடயங்கள் புதிதாய் உள்ளது.. நன்றி சகா.

Anbu on June 23, 2010 at 10:17 AM said...

Present sir

பிரபா on June 23, 2010 at 10:22 AM said...

மொழி பற்றிய பார்வை பற்றுடையதாகவே இருக்கிறது, அதேவேளை நமது பிறப்பை போலவே நமது தாய் மொழியும் தற்செயலானது. , நம் மொழியும் இப்ப செம் மொழி சந்தோஷ படலாம்.

கார்க்கி on June 23, 2010 at 10:47 AM said...

கேபிள், என்ன இது?

நன்றி சுசி

வேல், நக்கலுக்கு நன்றி

நன்றி கயல். மைல்டா டவுட்டா இருக்கா? கார்க்கி பிளாகுதாங்க‌

சென், நன்றி

ஷங்கர், வரலாற்றில் எது பதிவாகும் என்று யோசித்து செயல்படலாம். இந்த அரசியல் எல்லாம் அதில் பதிவாகப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்

நன்றி நாய்க்குட்டி

நன்றி தராசு

நன்றி டாரு

ஓகே, அன்பு

பிரபா உண்மைதான். அதனால்தன முதலில் மொழியின் முக்கியத்துவம் பற்றி சொல்லிவிட்டு என் தாய்மொழிக்கு பிறகு வந்தேன். நன்றி

Ponkarthik on June 23, 2010 at 12:09 PM said...

//ஏராளாமான நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் நமக்கு கிடைக்கும் என்னும்போது மாநாட்டை வரவேற்பதில் என்ன தவறிருக்க முடியும்?//
அருமை சகா..

//ஈழம் ஒரு துயரமான நிகழ்வு என்பது உண்மைதான். ஆனால் அதற்காக மற்ற செயல்பாடுகளை நிறுத்துவதென்பது அறிவுப்பூர்மவமான செயலாகாது// மீண்டும் ஒரு முறை அருமை....

Tanvi on June 23, 2010 at 1:39 PM said...

எச்சூச்மி, இங்கே கார்க்கின்னு ஒரு சகா இருந்தாரு. எங்கே போயிருக்காருன்னு தெரியுமா...

Nivas on June 23, 2010 at 2:44 PM said...

//மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு.//

நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. தமிழில் பேசுவதும், எழுதுவதும் கேவலம் என்றும் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் பேசுவது பெருமை என்றும் நினைக்கும் மூடர்கள் இருக்கும் வரை நம் தமிழை காக்க இதுபோன்ற மாநாடுகளாவது வேண்டும் என்பது என் கருத்து.

எட்வின் on June 23, 2010 at 3:45 PM said...

மாநாடு சரி தான்... ஆனா இத்தன செலவு பண்ணி தான் பண்ணனும்னு இருக்கா. இந்த செலவுல உருப்படியா தமிழுக்கு எதும் பண்ணலாமில்ல மூத்த முதல்வரு.

எட்வின் on June 23, 2010 at 3:47 PM said...

வாழ்த்துக்கள் சொல்ல மறந்திட்டேனே. எதுக்கா ndtv ன் கலந்துரையாடலில் பங்கு பெற்றதுக்கு தான் :)

Anonymous said...

//இரண்டு கல்லூரி மாணவ,மாணவியும் கேபிள், அப்துல்லா, நர்சிம், ஆதி (எ) தாமிரா, வெண்பூவும் கலந்துக் கொண்டோம்//

கலந்துரையாடலில் பங்கு பெற்றதற்கு வாழ்த்துக்கள்

வந்தியத்தேவன் on June 23, 2010 at 4:00 PM said...

செம்மொழி மாநாட்டில் தப்பில்லை, ஆனால் அதற்காக ரகுமானால் இசையமைக்கப்பட்ட பாடலில் எத்தனை தமிழ்க் கொலைகள். செம்மொழிப் பாடலுக்கு ஏன் ரகுமானின் மேற்கத்திய இசை நம்மிடம் தான் தமிழிசை இருக்கின்றதே? அதனை ஏன் கெளதம் மேனன் என்ற ஆங்கிலத்தில் தமிழ்ப் படம் எடுப்பவரிடம் இயக்ககொடுக்கவேண்டும். அத்துடன் அவர் தன்னை மேனன் என அடையாளம் காட்டுபவர்.

வந்தாரை வாழவைக்கும் தமிழனாக இருப்பதால் தான் எல்லோரும் எம்மேல் ஏறிவிட்டு தூ எனத் துப்பிவிட்டுச் செல்கின்றார்கள்.

புதிய புத்தகங்கள் தமிழ்மொழிக்கு நிச்சயம் வலுச்சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேவேளை மாநாட்டில் சினிமாக் கவிஞர்கள் பலரின் கவியரங்கமும் சினிமாக்காரர்களின் பட்டிமன்றமும் தேவையா? சினிமாவுக்கு வெளியில் பல கவிஞர்கள் அருமையான கவிதை எழுதுகின்றார்கள்.

ப.செல்வக்குமார் on June 23, 2010 at 4:00 PM said...

அருமையாக கூறியுள்ளீர்கள்.. எனது கருத்தும் இதுவே ..

வந்தியத்தேவன் on June 23, 2010 at 4:00 PM said...

வாழ்த்துக்கள்.உங்கள் கலந்துரையாடலின் காணொளியை விரைவில் வெளியிடுங்கள்.

கார்க்கி on June 23, 2010 at 4:21 PM said...

wநன்றி பொன்கார்த்திக்

விக்கி, நாளையே மரண மொக்கையோட வரவிருக்கிறார்

நன்றி நிவாஸ்

எட்வின், இது குறித்துதான் அந்த கலந்துரையாடல். வீடியோ வந்தபின் பதிவேற்றுகிறேன்

நன்றி சின்ன அம்மிணி

வந்தியத்தேவன், எனக்கும் அந்த பாடல் பிடிக்கவில்லை. சினிமா கவிஞர்கள் பட்டிமன்றம் தேவையா என்பது நல்ல கேள்வி. ஆனால் சினிமாவில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை விலக்குவது சரியா?. வீடியோ வந்தவுடன் பதிவிடுகிறேன் சகா. நன்றி

நன்றி செல்வக்குமார்

மறத்தமிழன் on June 23, 2010 at 4:21 PM said...

கார்க்கி,

உயர் தமிழ் செம்மொழியாம் தமிழுக்கு மாநாடு அவசியமா?
என்றால் அவசியம் தான்,
ஆனால் எப்போது என்றால்...
முள்ளிவாய்க்கால் முகாம்களில் செம்மறி ஆட்டு மந்தைகளைப்போல‌
முடங்கிகிடக்கும் மக்களை மீள்குடியமர்த்திய பிறகு நடத்தியிருக்கலாம்.

போரின்போதுதான் 40 எம்பிக்கள் இருந்தும் ஒன்னுமே செய்யமுடியவில்லை.
போர் முடிந்துவிட்டது..
இதோ நம்மினம் நம் கண் முன்னாலேயே அழிக்கப்பட்டு விட்டது.
கொடும்பாவி பாதகன் ராஜ பக்செ தமிழினப் படுகொலையை நடத்தியதோடு மட்டுமல்லாமல் போருக்கு உதவியதற்காக பன்னாட்டு நிறுவனங்களின் கைகூலி காங்கிரசு அரசிற்கு நன்றி தெரிவிக்க வந்துட்டு போய்ட்டான்.
இங்கிருத்து ஒருத்தர் புலின்னு சொல்லிட்டு போய்ட்டு அவனை பார்த்து விட்டு மியாவ் மியாவ்னு பூனை மாதிரி திரும்பி வந்துட்டார்.
தமிழ் நாட்டு எம்பிகள் 40 பேருமே தமிழன் என்று சொல்வதற்குகூட தகுதியில்லாதவர்கள்.

கன்னல் மொழியாம் அன்னைத்தமிழை துரோக காங்கிரசு கயவர்களோ சந்தர்ப்பவாத திமுக அரசோ (அ)அதிமுகவோ கொண்டாட அவசியம் இல்லை.

இப்பவாவது தமிழன்கிற நினைப்பு இருந்தா மத்திய அரசிற்கு ஒரு நெருக்கடியை கொடுத்து முதல்ல உணவு,உடை மற்றும் வீடிலந்து தவிக்கும் அம்மக்களுக்கு வேண்டியதை செய்துவிட்டு அப்புறம் நீங்க செம்மொழி மானாட்டை திமுக மாநாடு போல நடத்தினாலும் சரி..காங்கிரசு மாநாடு போல நடத்தினாலும் சரி..ஒருத்தனும் ஒன்னும் சொல்ல மாட்டான்.

மற்றபடி தமிழைப்பற்றி நல்லா எழுதியிருக்கிங்க..

ஆதிமூலகிருஷ்ணன் on June 23, 2010 at 6:24 PM said...

மிக நன்றாக எழுதியிருக்கிறாய். இன்னும் நிறைய வரலாற்றுக்குறிப்புகளோடு எழுதியிருந்தால் மிகச்சிறப்பான ஒரு கட்டுரையாக மலர்ந்திருக்கும். நல்ல ரைட்அப். அவ்வப்போது இதுமாதிரி எழுதவும்.

Kafil on June 23, 2010 at 7:00 PM said...

karki, enakku antha paatu konjam pudikkala means the tune and all i also felt its too angliszed, but thts the special of tamil isnt, adaptive!!! to anything... tamil is adaptive to anything new, if its not going to be modernized then it might lack behind right,

தாரணி பிரியா on June 23, 2010 at 8:47 PM said...

வாழ்த்துகள் கார்க்கி. பதிவு வழக்கம்போல நல்லா இருக்கு :)

சரவணகுமார் on June 23, 2010 at 9:38 PM said...

முத்தொள்ளாயிரம் முழுமையாகக் கிடைத்த சங்க நூல் என்பது மிகத் தவறான ஒரு செய்தி

///முத்தொள்ளாயிரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முத்தொள்ளாயிரம் என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை.

முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை.

பல்லாண்டுகளுக்கு முன்னர் புறத்திரட்டு ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும் தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும்.

மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.///

இதெல்லாம் கூகிளில் தேடினாலே கிடைக்கும் சாதாரண விடயங்கள்தான்.தப்பாக எழுதப் பட்ட ஒன்றை கோட் செய்து படிப்பவர்களுக்கும் தப்பான தகவல்களை அளிக்கிறீர்கள்.

கவனமாகக் கையாளவும்

அதிலை on June 23, 2010 at 11:51 PM said...

please someone tell me was it worth destroying a huge amount of trees for the sake of a language?

valarntha mozhiyayai iniyum valarkka indha iyatkai padukolai nyaayama?

AUM - The Unique on June 24, 2010 at 12:54 PM said...

"பொங்கு தமிழ்" நடக்க வேண்டிய இடத்தில் செம்மொழி மாநாடு நடக்குது... இது தேவை என்றே எண்ணுகிறேன். ஆயிரம் அரசியல் கலப்பு, சுயலாபம் கருதி விடயங்களை மேற்கொண்டு இருந்தாலும்...பரவாயில்லை .... தமிழன் இன்னும் இருக்கிறான் என்பதை டாம்பீகமாக தான் இன்றைய காலகட்டத்தில் காட்டவேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறோம். ஆகவே அதையும் செய்வோம்.... உலகெங்கும் உள்ளான் தமிழன் என்பது உணர்த்தப்பட வேண்டும்.

Leo on July 5, 2010 at 6:44 PM said...

ஒரு மொழியால் எப்போது அந்த இனத்திற்கு வருமானமும் முன்னேற்றமும் இல்லையோ அப்பொழுது அந்த மொழி அழிய ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம இதை என்னகு நெருங்கிய ஒருவர் கூற கேட்றேன். இதூ முழிக்க உண்மை, எப்போது நாம் அறிவியலும் அது சார்ந்த தொழில் நுட்பங்களையும் ஆங்கிலத்தில் படிக்க அரம்பிதொமோ அப்பொழுதே நம் மொழி அழிய துடங்கி விட்டது...

 

all rights reserved to www.karkibava.com