Jun 20, 2010

கவித..கவித..


 

மு.கு: தோழி கூட சண்டையா சகான்னு கேட்காதிங்க. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. :)

வேறொன்றும் அறியேன்

மழை பெய்து கொண்டிருக்கிறது
எதிர்வீட்டுப் படியில் நிற்கும்
அம்மணச் சிறுவன் அழுகிறான்
சிறுமியொருத்தி நனைந்த பாவாடையை
குனிந்து பிழிகிறாள் நனைந்துகொண்டே
வேகவாகனம் கத்திக்கப்பலாய்
தெரு நிறை தண்ணீரில் சுழலும் ஜவ்வுக்காகிதம்
தலையை ஆட்டி சிறகுலர்த்தும் பறவை
வில்லாய் வளையும் திண்ணைப் பூனை
விடைத்து நிற்கும் காதுகளோடு ஜிம்மி
மழை சத்தம் அதிகமாய்க் கேட்கிறது
விறுவிறுவென உள்ளே சென்று
எல்லாக் கதவுகளையும் அடைத்துகொண்டு
மசிஇருட்டுக் கூடத்தில் அமர்ந்திருக்கிறேன்
மழை பெய்து கொண்டிருக்கிறது
இன்னமும்...


****************************************************


பிறர் தர ...

வெகுகவனமாய் என்னைத் தொடர்கிறது
அயரும் பொழுதொன்றிற்காக
மிகக் கவனமாய் தொடர்கிறது
தடுமாறப்போகும் அந் நொடிக்காக
அதி நெருக்கமாய் தொடர்கிறது
அதைவிட வெகுகவனமாய்த்தான் நான்
ஆனாலும்
ஓர் அதிகாலை நேரத் தோட்டத்தில்
உதிர்ந்திருந்த மலரொன்றை
எடுத்து மண் தட்டி நுகரும் தருணத்தில்
என்னைத் தழுவிச் சூழ்ந்தது
தீதும் நன்றும்.

26 கருத்துக்குத்து:

கே.ஆர்.பி.செந்தில் on June 21, 2010 at 12:03 AM said...

என்ன சண்டை ...
அப்புறம் மழை விட்டவுடன் சொல்லுங்கள் ..

பரிசல்காரன் on June 21, 2010 at 12:10 AM said...

சார்.. நீங்க எங்கயோஓஓஓ போய்ட்டீங்க சார்...

சுசி on June 21, 2010 at 12:37 AM said...

ரொம்ப நல்லாருக்கு கார்க்கி.

ஸ்டைல் வித்யாசமா இருக்கு.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on June 21, 2010 at 12:44 AM said...

இரண்டும் அருமை

Cable Sankar on June 21, 2010 at 8:39 AM said...

அஹா.. கவிஞரை சந்தித்ததும்.. கவிதை பொங்குதே.. :)

தராசு on June 21, 2010 at 8:53 AM said...

தீதும் நன்றும் - கலக்கல்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on June 21, 2010 at 9:12 AM said...

சூப்பர் கார்க்கி! :))

SenthilMohan K Appaji on June 21, 2010 at 9:54 AM said...

//*பரிசல்காரன் said...
சார்.. நீங்க எங்கயோஓஓஓ போய்ட்டீங்க சார்...**/
ரிபீட்......ட்டு.

ஏன் சகா நீங்களும் புரிந்தும், புரியாத மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் on June 21, 2010 at 10:22 AM said...

எங்கயோ போய்ட்டீங்க

புன்னகை on June 21, 2010 at 10:51 AM said...

ஏன் இப்படியெல்லாம்?

ர‌கு on June 21, 2010 at 11:06 AM said...

அட‌ப் போங்க‌ பாஸ்! ஜாலியா ஏதாவ‌து ப‌டிச்சு வார‌த்தை ஆர‌ம்பிப்போம்னு வ‌ந்தா....:(

Anbu on June 21, 2010 at 11:43 AM said...

:-)

VELU.G on June 21, 2010 at 12:07 PM said...

இரண்டு கவிதைகளும் அருமை

விக்னேஷ்வரி on June 21, 2010 at 1:24 PM said...

எப்போவும் இப்படி உக்காந்து பொறுமையா எழுதினா என்ன.. எழுதணுமேன்னு இனி எழுதினீங்க........

Mohan on June 21, 2010 at 2:52 PM said...

இர‌ண்டாவ‌து க‌விதை கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன்னாடியே வ‌ந்திருக்க‌னுமோ:-)! இர‌ண்டு க‌விதைக‌ளும் ந‌ன்றாக‌ இருந்த‌ன‌.

Kafil on June 21, 2010 at 2:55 PM said...

intha kavitha nejamma neenga eluthunatha illa copya... ithula unga style illaya saga.. aana nalla irundhuthu, oru pacha mannukulla ivlo theramaya..

பாலா on June 21, 2010 at 3:07 PM said...

super mappi

ரமேஷ் வைத்யா on June 21, 2010 at 3:22 PM said...

muthal kavithai ovvoru variyum visual effect superb

நேசன்™..., on June 21, 2010 at 4:15 PM said...

இப்படித் தாங்க இன்னொருத்தரும் கவிதை எல்லாம் எழுதுவாரு!
இத விட இன்னும் நல்லாவே யாருக்கும் புரியாத மாதிரி எழுதுவாருங்க! அவர ஆணாதிக்கவாதி, பொறுக்கி அப்படி இப்படின்னு கண்டபடி பேசி எழுதவே முடியாத படி பண்ணிட்டாங்க!.........நீங்களும் அப்படி...........

நேசன்™..., on June 21, 2010 at 4:16 PM said...

ஆயிடக்கூடாதுங்க!

ரமேஷ் வைத்யா on June 21, 2010 at 5:48 PM said...

//நுகரும் தருணத்தில் //
mugarum tharuNaththil

பா.ராஜாராம் on June 21, 2010 at 5:56 PM said...

இரண்டு கவிதைகளும், ரொம்ப பிடிச்சிருக்கு.

தர்ஷன் on June 21, 2010 at 6:40 PM said...

இரண்டாவது கவிதை எப்ப எழுதியது சகா
நீங்கள் இப்படியும் எழுதுவீங்களா அருமை சகா

Karthik on June 21, 2010 at 10:45 PM said...

நாளைக்கு வந்து கருத்து சொல்றேன். வலது மூலையில் கெட்ட சகுனம். :)

ஆதிமூலகிருஷ்ணன் on June 23, 2010 at 6:29 PM said...

யேய்ய்.. வாட்டிஸ் திஸ்? ரொம்ப நால்லாருக்குதுபா.!

Vidhoosh(விதூஷ்) on June 24, 2010 at 5:07 PM said...

கவிதைகள் அருமையாக இருக்குங்க. இப்படியே எழுதினா என்ன?

 

all rights reserved to www.karkibava.com