Jun 17, 2010

நிலவில் தேனிலவு


 

பீச்சுக்கு போறேன் என்றவுடன் வேண்டாம் என்றாள் தோழி. சுனாமி வருவதாக சொல்லியிருக்கிறார்களாம். ச்சே எப்படித்தான் என் பிளான் கசிகிறதென்றே தெரியவில்லை

__________________________________________________________________________________

கார கொழம்பு சாப்பிட்டேன் என்றாள் தோழி. உதடு படாமால் சாப்ட்டியா என்றேன். ஏன் என்கிறாள் வழக்கம் போல தெரியவில்லை என்பதை குறிக்கும் அப்பாவி முகத்துடன்.  உதடு பட்டா ஸ்வீட் கொழம்பு ஆகிடாதா என்றவுடன் பாய்ந்து வருகிறாள் சர்க்கரை நோய் தருவதற்கு. அக்கறையான காதலிதான் கேட்டேன் கடவுளிடம். சர்க்கரையால் ஆனவளை தந்துவிட்டார்.

_________________________________________________________________________________

100 ரோஜா எடுத்துக்கோ. ஒரு ஊசியும் நூலும். மாலையா கோர்த்துக்கோ. கண்ணாடி முன்னால போ. இதுதான்  குரங்கு கையில் பூமாலை என்று சிரித்தாள் தோழி. அழைப்பை துண்டித்துவிட்டு அவள் வீட்டிற்கே சென்று அவளை தூக்கிக் கொண்டு சொன்னேன். "இத விட்டு பூவாம்.நூலாம். வேற வேலையில்ல". அதிசயமாய் புரிந்துக்கொண்ட‌ தோழி குரங்காய் மாறிக் கொண்டிருந்தாள்.

_________________________________________________________________________________

அவளும் உன் தோழிதானே? இவளுமா என்று சண்டையிழுப்பதே தோழியின் வேலை. நான் என்ன மன்மதனா? ஏழைக்கேத்த எள்ளுருண்டை நீதாண்டா செல்லம் என்று சமாளிப்பேன்.சரியென்று சென்றவள் திரும்ப வந்து சொன்னாள் 'நான் என்ன எள்ளுருண்டையா?. நீ பில்கேட்ஸ் விட பணக்காரண்டா". ம்ம் என்ற நான் "அப்ப நீ உலக உருண்டையா?" என்றேன். டம்டிப்டுமால்டங்க்

_________________________________________________________________________________

வார்த்தைகள் ஏதாவதொன்றை தவறாக பேசினால் உதட்டைக் கடித்துக் கொள்வது தோழியின் வழக்கம். அது தண்டனை என்று சொல்லிக் கொள்வாள். ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று

_________________________________________________________________________________

நான் எழுதிய கவிதைகளை படித்த தோழி சொன்னாள் "இந்த உலகத்திலே லூசு பசங்கதான் இப்படி நல்ல நல்ல கவிதையெல்லாம் எழுதுவாங்க". “உங்கப்பன விடவா பெரிய லூசு இருக்காங்க உலகத்துல” என்றேன். சண்டைக்கு வருகிறாள் விஷயம் புரியாத என் செல்ல கோபக்காரி

_________________________________________________________________________________

நிலாவுக்கு போக டிராவல் ஏஜென்ட்டெல்லாம் இருக்காங்களாம். நம்ம ஹனிமூனுக்கு அங்க போகலாமா என்கிறாள் பைத்தியக்காரி. நான் நிலவில் கொண்டாடுபவனல்ல, நிலவோடே தேனிலவு கொண்டாட போகிறவன் என்பதை புரிய வைக்க வேண்டும் அவளுக்கு.

36 கருத்துக்குத்து:

விக்னேஷ்வரி on June 17, 2010 at 1:15 AM said...

ஓ, உங்கூர்ல மழை பெய்யுதோ... எஃபெக்ட் நல்லாத் தான் இருக்கு கார்க்கி.

வார்த்தைகள் ஏதாவதொன்றை தவறாக பேசினால் உதட்டைக் கடித்துக் கொள்வது தோழியின் வழக்கம். அது தண்டனை என்று சொல்லிக் கொள்வாள். ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று //

இது டாப். பிக் ஆஃப் த போஸ்ட்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on June 17, 2010 at 1:42 AM said...

/////அவளும் உன் தோழிதானே? இவளுமா என்று சண்டையிழுப்பதே தோழியின் வேலை. நான் என்ன மன்மதனா? ஏழைக்கேத்த எள்ளுருண்டை நீதாண்டா செல்லம் என்று சமாளிப்பேன்.சரியென்று சென்றவள் திரும்ப வந்து சொன்னாள் 'நான் என்ன எள்ளுருண்டையா?. நீ பில்கேட்ஸ் விட பணக்காரண்டா". ம்ம் என்ற நான் "அப்ப நீ உலக உருண்டையா?" என்றேன். டம்டிப்டுமால்டங்க்////////////


top but

////டம்டிப்டுமால்டங்க் /////

இதற்கு என்ன அர்த்தம் !

சுசி on June 17, 2010 at 2:08 AM said...

ரொம்ப நல்லாருக்கு :))

இராமசாமி கண்ணண் on June 17, 2010 at 6:25 AM said...

top but

////டம்டிப்டுமால்டங்க் /////

இதற்கு என்ன அர்த்தம் !//

ஒ மகசீயா. ஓகோ மகசீயா வுக்கு என்ன அர்த்தமோ அதே அர்தம்தான் இல்லையா கார்க்கி.

taaru on June 17, 2010 at 6:26 AM said...

அது உங்களுக்கு ரொம்ப பக்கத்தில வந்துருச்சு...னு கடைசி ரெண்டு தோழி அப்டேட்ஸ் உம் நல்லாவே காட்டுது... வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் on June 17, 2010 at 7:23 AM said...

தோழி அப்டேட்ஸ் படித்தீர்களா என்று கேட்டார் ஒரு நண்பர். அப்டேட்ஸை நான் படித்துவிட்டேன். தோழியை கார்க்கி படித்துக் கொண்டிருக்கிறான் என்றேன்.

ஹி..ஹி..ஹி..

சகா.. ஒரு புக் போட்டுடலாம்ப்பா. நல்லா இருக்கு. தொடர்ந்து எழுது.

மகேஷ் : ரசிகன் on June 17, 2010 at 7:51 AM said...

அசத்தல்!

உதடு கடி மேட்டர் நச்!


PiT போட்டிக்கு ஃபோட்டோ அனுப்பிட்டீங்களா?

நாய்க்குட்டி மனசு on June 17, 2010 at 8:08 AM said...

தலைப்பு "நிலவோடு தேனிலவு" னு இருந்தா இன்னும் நல்ல இருக்கும்னு நினைக்கிறேன்.

தராசு on June 17, 2010 at 8:53 AM said...

ஜூப்பர் தல,

//நிலவோடே தேனிலவு கொண்டாட போகிறவன்//

எப்பன்னு தான் சொல்லித் தொலைங்களேன்.

Anbu on June 17, 2010 at 10:03 AM said...

ஒன்னுமே புரியலையே அண்ணே...

கார்க்கி on June 17, 2010 at 10:05 AM said...

விக்கி, நேத்துதான் வெயிலான்னு கேட்டீங்க????? :))

சங்கர், அடி பின்றாங்கன்னு அர்த்தம் பாஸ்

நன்றி சுசி

இராமசாமி, அதே அதே

டாரு, ஹிஹிஹி...

பரிசல், நீங்களும் சீக்கிரம் ஆணாதிக்க லிஸ்டுல வந்துட போறீங்க. உங்க இமேஜ மெயிண்டைன் பண்ணுங்க சகா

மகேஷ், நல்ல வேளை PITனு இங்கிலீஷ்ல சொன்னிங்க. தலைப்பு மகிழ்ச்சியாம்.. கலவர பூமில எங்கத்த போய் எடுக்கிறது?

நாய்குட்டி, ஆனா சொல்ல வர்ற விஷயம் அந்த அப்டேட்ட படிக்க ஆர்மபிச்ச உடனே தெரிஞ்சிடுமே

தராசண்ணே, உஙக்ளுக்குத்தான் என் மேல எவ்ளோ அக்கறை.. !!!

அன்பு, நீ சின்னப்பையன். அவசரப்படாத

புன்னகை on June 17, 2010 at 11:13 AM said...

கலக்கல்! சீக்கிரம் கல்யாணம் செய்ய வாழ்த்துக்கள்! :-)

புன்னகை on June 17, 2010 at 11:15 AM said...

//டம்டிப்டுமால்டங்க் இதற்கு என்ன அர்த்தம் !//
பதம் பிரித்து பொருள் கொள்க!
டம் டிப் டுமால் டங்க் - சரி தானே கார்க்கி?

குசும்பன் on June 17, 2010 at 11:24 AM said...

//தோழி அப்டேட்ஸ் படித்தீர்களா என்று கேட்டார் ஒரு நண்பர். அப்டேட்ஸை நான் படித்துவிட்டேன். தோழியை கார்க்கி படித்துக் கொண்டிருக்கிறான் என்றேன்.//

வாசகர் இல்லையா பரிசல்?:))

நல்லவேளை இதையும் பதிவில் எழுதாம விட்ட:)

நேசன்™..., on June 17, 2010 at 11:42 AM said...

\\நிலவோடே தேனிலவு கொண்டாட போகிறவன் என்பதை புரிய வைக்க வேண்டும் அவளுக்கு//நீங்க புரிய வைக்குறதுக்குள்ள விஜய் ஆஸ்கார் வாங்கிடுவாரு!.....

வால்பையன் on June 17, 2010 at 12:22 PM said...

//வார்த்தைகள் ஏதாவதொன்றை தவறாக பேசினால் உதட்டைக் கடித்துக் கொள்வது தோழியின் வழக்கம். அது தண்டனை என்று சொல்லிக் கொள்வாள். ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று/


இம்புட்டு வன்முறை ஆகாது!

ஜானு... on June 17, 2010 at 12:26 PM said...

;-)

மாரி-முத்து on June 17, 2010 at 12:28 PM said...

//வார்த்தைகள் ஏதாவதொன்றை தவறாக பேசினால் உதட்டைக் கடித்துக் கொள்வது தோழியின் வழக்கம். அது தண்டனை என்று சொல்லிக் கொள்வாள். ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று//

:)

ர‌கு on June 17, 2010 at 12:29 PM said...

//தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று//

என் தோழியிட‌ம் சொன்னேன், கார்க்கி இதுபோல‌ எழுதியிருக்கிறார் என்று. அவ‌ள் சொன்னாள், "நான் த‌ப்பெல்லாம் ப‌ண்ண‌மாட்டேன், ஆனா நீ அடிக்க‌டி த‌ண்ட‌னை குடு" :))

அனார் on June 17, 2010 at 12:38 PM said...

//வார்த்தைகள் ஏதாவதொன்றை தவறாக பேசினால் உதட்டைக் கடித்துக் கொள்வது தோழியின் வழக்கம். அது தண்டனை என்று சொல்லிக் கொள்வாள். ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று//

சகோ, இந்த வரிகள் புதியவனின் கவிதையை நினைவு படுத்துகின்றன.

//சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நகம் கடித்து
தவறாக சொல்லிவிட்டதாய்
நினைத்து
உதடு கடித்து
உன் வெட்கத்தைக்
கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...
ஆனாலும்
உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........//

http://puthiyavanonline.blogspot.com/2009/02/blog-post_21.html

கார்க்கி on June 17, 2010 at 1:06 PM said...

புன்னகை, சரிதான். ஆனால் தோழி கேப்பே விடாமல் அடித்தாள்...அதான் அபப்டி எழுதினேன்

குசும்பா..அமைதி..அமைதி.

நேசன், ஹிஹிஹி..

வால்ண்ணே, நான் தண்டனை கொடுத்தா மைல்டா இருக்கும். அதனால் சொன்னேன்

நன்றி ஜானு

நன்றி மாரிமுத்து

ரகு.. இப்படி கேட்கிர அளவுக்கா விட்டு வைக்கிறது? உஙக்ளுக்கு எல்லாம் எதுக்குதான் தோழியோ.. அய்யோ அய்யோ

அனார்,
புதியவனின் பதிவு 2009 ஃபிஃப்ரவரியில் எழுதியிருக்கார். இத பாருங்க.
http://www.karkibava.com/2008/11/blog-post_07.html

நிச்சயம் அவரும் காப்பியடித்தார் என்று சொல்லவில்லை. இது மாதிரி பல பேருக்கு தோணலாம். :)

அமுதா கிருஷ்ணா on June 17, 2010 at 1:37 PM said...

நிலாவுடன் தேனிலவு...த்ரீ மச்...

கயல் on June 17, 2010 at 2:02 PM said...

எல்லாமே ரொம்ப நல்லாருக்குங்க!
:-)

பிரதீபா on June 17, 2010 at 2:51 PM said...

சில சமயம் எதாச்சும் ஒன்னு ரொம்ப ரசிக்கும்படி இருக்காது; ஆனா இந்த வாட்டி தோழி அப்டேட்ஸ் எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்குங்க..

//எப்படித்தான் என் பிளான் கசிகிறதென்றே தெரியவில்லை //
//அக்கறையான காதலிதான் கேட்டேன் கடவுளிடம். சர்க்கரையால் ஆனவளை தந்துவிட்டார்//
இது உங்களோட brand-style

//"இத விட்டு பூவாம்.நூலாம். வேற வேலையில்ல"//
//தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் //
அராஜக ரொமான்ஸ் :-)

//“உங்கப்பன விடவா பெரிய லூசு இருக்காங்க உலகத்துல”//
அப்படிப் போடுங்க !!

//நான் நிலவில் கொண்டாடுபவனல்ல, நிலவோடே தேனிலவு கொண்டாட போகிறவன் //
இதை விட அழகான வரிகளை எந்தக் காதலனும் சொல்லிவிட முடியாது !!

தலைப்பும் தலைப்புக்கு போட்டிருக்கற படமும் (யாருமே பாராட்டலையா) ரொம்ப அருமைங்க !!

சரி, நீங்களும் உங்க 'காதலி'யும் அடுத்து எப்போ பிஸ்ஸா ஹட்டுக்கு போவீங்க? :-)

Maduraimalli on June 17, 2010 at 3:24 PM said...

இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..
அடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..
பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது??


விஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..
எத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.


http://loshan-loshan.blogspot.com/2010/06/blog-post.html

பெயர் சொல்ல விருப்பமில்லை on June 17, 2010 at 3:31 PM said...

எல்லாமே சூப்பர்!
//வார்த்தைகள் ஏதாவதொன்றை தவறாக பேசினால் உதட்டைக் கடித்துக் கொள்வது தோழியின் வழக்கம். அது தண்டனை என்று சொல்லிக் கொள்வாள். ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று //

இது சூப்பரோ சூப்பர்!

கும்க்கி on June 17, 2010 at 5:18 PM said...

புக் போட்டுடலாம்பா...

:))

Kafil on June 17, 2010 at 5:20 PM said...

kavitha kavitha.... kalakkureenga saga... unga vayasu ungala uncle postukku thallinaalum, ipdiyellam romantica eluthi, youthunnu confirm panreenga illaya saga.. ithula enna benefitna neenga youthnnu confirm aagalennalum, nalla kavinggar apdinnu confirm aagipochu.... njy

Karthik on June 17, 2010 at 8:30 PM said...

good one this time. :)

Meyalogam on June 17, 2010 at 10:27 PM said...

She is one lucky girl

Madumitha on June 17, 2010 at 10:52 PM said...

சும்மா பிச்சு உதர்றீங்க..

தாரணி பிரியா on June 17, 2010 at 11:07 PM said...

ellame super

ப்ரியமுடன்...வசந்த் on June 18, 2010 at 10:04 AM said...

சிம்ப்ளி சூப்பர்ப்..

காரக்குழம்பு ஒரே அஜால் குஜால் போங்க..... :)))

Sen22 on June 18, 2010 at 2:52 PM said...

Super Kavithaigal..

i enjoyed a lott....

ஆதிமூலகிருஷ்ணன் on June 18, 2010 at 5:17 PM said...

ஹைலி ரொமாண்டிக்.!

தமிழ்ப்பறவை on July 1, 2010 at 8:24 PM said...

இத இவ்ளோ நாள் படிக்காம விட்டுட்டேன்...
சிம்ப்ளி சூப்பர்ப்...
கடிக்கிறதுல கார்க்கி மன்னர்தான்...:-)

 

all rights reserved to www.karkibava.com