Jun 15, 2010

தற்கொலை


 

  பாதி வரை எரிந்து சாம்பலான சிகரெட்டின் முனை போல ரயிலில் சுருண்டு கிடந்தான் மதன்.  புதிதாய் மாற்றி அமைக்கப்பட்ட சைடு அப்பர் அவனுக்கு தோதாக இல்லை. மேலும் ரயிலின் தடக் தடக் சத்தத்தை அவனது இதய துடிப்பு வெல்வதையும் அவன் விரும்பவில்லை. தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டே கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.

  இன்னும் வரவில்லை அழைப்பு. துல்லியமாய் தெரிந்த TFT displayல் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மது. அந்த வசீகர சிரிப்பையும் மீறி இடது ஓரத்தில், இந்திய பொருளாதாரம் போல மேலும் கீழும் ஏறி இறங்கும் டவரையே வெறித்துக் கொண்டிருந்தான். சிக்னல் கிடைக்காமல் போகும் சமயங்களில் தட்டிப் பார்த்தான். அது கோவத்தின் வெளிப்பாடா அல்லது நோக்கியா இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டிப்ஸா எனத் தெரியவில்லை. மணி 12ஐ தாண்டி இருந்தது.

“Send me SMS if i am not reachable" .

  sent items ல் இருந்த அதே மெசேஜை பத்தாவது முறையாக ஃபார்வர்ட் செய்தான். “Message sent"  என்று சொல்லி தன் மீது எந்த தவறும் இல்லை என வாக்குமூலம் தந்தது ஏர்டெல் சேவை. மீண்டும் sent itemsக்கு சென்று மதுவிற்குத்தானே அனுப்பினோம் என்று தன் பக்க நியாயத்தை உறுதி செய்து கொண்டான். காரணமே இல்லாமால் அந்த நடு இரவில் இறங்கி சென்று சார்ஜ் செய்தான். ஐந்தே நிமிடத்தில் Battery full என்று காட்டியது. தூக்கம் வராமல் முன்தினம் நடந்ததை மெல்ல அசைப் போட்டான்.

மது.

என்ன?

நான் வேற ஒண்ணும் கேட்கல. அடிக்கடி ஃபோன் செய். அது போதும்.

புரிஞ்சிக்கோ மதன். என்னால் முடியறப்ப கண்டிப்பா செய்றேன்.

நான் என்ன அரை மணி நேரமா பேச சொல்றேன் ஜஸ்ட் 2 மினிட்ஸ்.

ம்ம்.. சரி.

முடியலன்னா ஒரு எஸ்.எம்.எஸ். அவ்ளோதாம்ப்பா.

ம்ம்

என்ன. எல்லாத்துக்கும் ம்ம் னு சொன்னா என்ன அர்த்தம்?

கிளம்பறீயா? ட்ரெயினுக்கு டைம் ஆச்சு.

ட்ரெய்னுக்குத்தானே ஆச்சு. எனக்கு இல்லையே.

ஜோக்கா? Be serious மதன். ஒழுங்கா போய்ட்டு வா.

எனக்கு போகவே பிடிக்கல. ஒரு மாதிரி இருக்குடா.

எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். (வேகமாக நடந்தாள்)

ப்ளீஸ். கால் பண்ண மறக்காத. அது மட்டும் போதும். (கத்தினான்)

   இரண்டு கைகளிலும் இருந்த லக்கேஜ் அவன் கண்களை துடைக்க இடைஞ்சலாய் இருந்தது. அது மட்டுமல்ல நகரத் தொடங்கிய ரயிலில் ஏறும்போதும் தொல்லை தந்தது. பெர்த்தை கண்டுபிடித்து பைகளை வைத்துவிட்டு Compose செய்தான்.“Send me SMS if i am not reachable". அப்போதுதான் முதல் முறை அந்த புறா பறந்தது.

விடியலை அறிவிக்க வந்த சூரியன் மதனைக் கண்டு ஹாய் சொல்லிப் போனது. அப்போதும் அந்த வசீகர சிரிப்பிலே மூழ்கி கிடந்தான் மதன். இறங்குமிடம் வந்ததும் போர்ட்டரை தேடினான். இந்த ரெண்டு சின்ன பைக்கு போர்ட்டரா என்று யாரும் இவனை கவனிக்கவில்லை. முதுகில் ஒன்று, இடது கையில் ஒன்றுமாய் ஆக்கிக் கொண்டு, வலது கையில் அலைபேசியை பார்த்தபடி நடக்க தொடங்கினான். அவ்வபோது 121க்கு அழைத்து லைன் க்ளியர் என்பதை உறுதி செய்து கொண்டான்.

லாட்ஜ் வேணுமா சார்? ஏ.சி இருக்கு என்றவனிடம் , அந்த லாட்ஜில் ஏர்டெல் சிக்னல் கிடைக்குமா என்று வினவினான். ஒரு வழியாய் அறைக்குள் வருவதற்குள் அரை நாள் முடிந்து விட்டது. கால் இன்னும் வரவில்லை. குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஏனோ சில நிமிடங்களிலே மீண்டும் குழப்பமாய் அலையத் தொடங்கினான். சில மணி நேர அவஸ்தைக்குப் பின் டைரியைத் திறந்து எழுதத் தொடங்கினான்.

செய்வதென முடிவாகிவிட்டது.
எதைக் கொண்டு
என்பதில் தொடங்கியது
சில குழப்பங்கள்.
துப்பாக்கிகள்
எளிதில் கிடைப்பதில்லை.
பர்மா பஜார் கத்திகள்
100% வெல்வதில்லையாம்.
அருவிகள் தேடிச் செல்ல
நேரமில்லை.
என்ன செய்துவிடும் கயிறு?
சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி

“Anitha calling"...

____________________________________-

பிற்சேர்க்கை:

இதையும் கதையென ஏற்றுக் கொண்டு முடிவு என்ன சகா என்று சிலர் கேட்டார்கள். அதனால் ஒரு விளக்கம்.

1)  அனிதா என்பவள் மதுவின் தோழி. அவள் அழைத்து இருவருக்குள்ளும் காதல் மலரலாம்.

2) அந்த நேரத்தில் அவனுக்கு தேவை ஒரு ஆறுதல். அது யாரிடமிருந்து கிடைத்தாலும் அந்த தற்கொலை முயற்சியை அவன் கைவிட்டு விடுவான் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

3) அனிதாவின் மொபைலில் இருந்து மது அழைப்பதாக இருக்கலாம்.

4) அல்லது டைரியில் அப்படி எழுதிவிட்டு அவன் இறந்துவிடுகிறான். நீல நிறத்தில் இருப்பவை எல்லாம் டைரியில் எழுதப்பட்டது. நடந்தது அல்ல.

முடிவு நம்ம இஷ்டம்

21 கருத்துக்குத்து:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on June 15, 2010 at 1:03 AM said...

////“Anitha calling"...//////


ஆஹா யாருங்க அது !

சுசி on June 15, 2010 at 1:12 AM said...

அப்போ மது என்கின்ற பெண் என்ன ஆனாங்க??

ILA(@)இளா on June 15, 2010 at 1:41 AM said...

அப்போ மது என்கின்ற பெண் என்ன ஆனாங்க??
??

Kathir on June 15, 2010 at 1:55 AM said...

Aani romba adhigamaa saga.

idha munnadiyee padichu irukennn.

:)

Kafil on June 15, 2010 at 4:47 AM said...

meel pathivu y saga

அத்திரி on June 15, 2010 at 7:10 AM said...

கிகிகிகி;...................

பரிசல்காரன் on June 15, 2010 at 7:47 AM said...

:-)

ஏற்கனவே பாராட்டிட்டேன்..

நாய்க்குட்டி மனசு on June 15, 2010 at 8:05 AM said...

ஏற்கனவே படிச்சவங்க Be silent. நாங்களே புதுசு மாதிரி போட்டு இருக்கோம். இல்ல கார்க்கி?
ஒரு மது போனா இன்னொரு அனிதா. தற்கொலை செய்ய துணியாதீர்கள் இளைஞர்களே !

தராசு on June 15, 2010 at 8:56 AM said...

நாய் குட்டி மனசு சொன்னாப்புல நான் சைலண்ட்.

ப்ரியமுடன்...வசந்த் on June 15, 2010 at 9:07 AM said...

மது ஸ்டார்ட்டிங் , அனிதா தான் கிளை மேக்ஸ் ?

"ராஜா" on June 15, 2010 at 9:27 AM said...

கலக்கல் சகா நான் இப்பதான் படிக்கிறேன்...

கார்க்கி on June 15, 2010 at 10:25 AM said...

சங்கர், ஹிஹி..

மது அவ்ளோதான் சுசி..

இளாண்ணே, நீங்களுமா?

கதிர், ஹேப்பியா இருக்குங்க. :)

கஃபில், வேற என்ன? ஆணிதான்

அத்திரி, என்ன ஆச்சு?????????????

பரிசல், அதுக்கு ஆல்ரெடி நன்றி சொல்லியாச்சு

நாய்க்குட்டி, அதேதான்

தராசண்ணே, அபப்டி பழைய ஆளுங்க நகரணும்ண்ணே

வசந்த், புது க்ளைமேக்ஸ் பாருங்க

நன்றி ராஜா

புன்னகை on June 15, 2010 at 10:46 AM said...

Waiting for "தோழி அப்டேட்ஸ்" :-)

♠ ராஜு ♠ on June 15, 2010 at 11:03 AM said...

...........இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி
“Anitha calling"...

”ஹலோ,சொல்லு அனி”

“ச்சீ,பேசாத.நீ எவளோ மதுன்ற பொண்ணைத்த்தான் லவ் நிஜமா பண்றன்னு வினோத் என்கிட்ட சொல்லிட்டான். இனிமேலும் நடிக்காத..”

“அனி, நான் சொல்றத ஒரு நிமிஷம்....”-அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே இணைப்பு துண்டிக்கப்பட்டது.

விரக்தியுடன் மதன்,கீழே அமர்ந்து மனதிற்குள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

“ச்சே, இந்த வடையும் போச்சே!”

*****************************

எப்புடி..?
இது என் மாதிரி, தினத்தந்தி கள்ளக்காதல் வாசகர்களுக்கான முடிவு.
:-)

விக்னேஷ்வரி on June 15, 2010 at 4:14 PM said...

தோழி‘கள்’ உள்ள சகாக்களுக்கு மது என்ன, அனிதா என்ன... ஏதோ ஒரு தோழியை வெச்சு தோழி அப்டேட்ஸ் கிடைச்சதேன்னு தொடர வேண்டியது தான்.

கார்க்கி on June 15, 2010 at 5:28 PM said...

புன்னகை, எழுதிடலாம் சீக்கிரம்..

ராஜு, ஹிஹிஹி

விக்கி, நீங்களுமா?:))

____________

நண்பர் ஒருவர் மடலிட்டார். அனிதா என்பது மதுவின் இன்னொரு பெயராக கூட இருக்கலாம் என்கிறார். அல்லது, மதுவின் பெயரை அனிதாவென அவன் சேவ் பண்ணியிருக்கலாம். ம்ம்ம்

ILA(@)இளா on June 15, 2010 at 5:57 PM said...

அனிதா, மதனோட அக்காவா இருந்தா?

மங்களூர் சிவா on June 15, 2010 at 6:20 PM said...

/
ILA(@)இளா said...

அனிதா, மதனோட அக்காவா இருந்தா?
/
:)
கொள்ளு பாட்டியா இருந்தா - அப்படின்னு கேக்காம விட்டீங்களே :)))))

Karthik on June 15, 2010 at 10:15 PM said...

மீள்ஸா? ஹ்ம்ம்..

Karthik on June 15, 2010 at 10:16 PM said...

20.

Madumitha on June 16, 2010 at 9:03 AM said...

இதெல்லாம் ரொம்ப ஒவருங்க சாமீயேய்..

 

all rights reserved to www.karkibava.com