Jun 12, 2010

சில விளக்கங்கள்


 

நேற்று  கேட்ட புதிர் கேள்விகளில் 8,10 தவிர அனைத்திற்கும் சரியா வந்தாகிவிட்டது. சிலர் விடைக்கான லாஜிக் என்னவென்று கேட்டதால் விளக்கத்தோடு விடைகள் இதோ.

1) இந்த ஜேக்சன்பாக்கத்துக்கு பில்கேட்சால் வந்தது யோகம்.

ஜேக்சன், நிக்சன், ஜான்சன் என என்னா சன்களையும் துரை போட்டு விளிப்பதே நம் முன்னோர்கள் வழக்கமல்லவா? ஆகவே இது துரைப்பாக்கம். ஐடி துறையின் ஆதிக்கத்தால் இங்கே ரியல் எஸ்டேட் விலை மார்கெட் போன நடிகையின் ஆடையை போல் சர்ரென மேலே சென்றது

2) மிஸ்டர்+ஸ்கை+நான்+டவுன்

டிரான்ஸ்லேட் செய்ய வேண்டியதுதான். திரு+வான்+மீ+ஊர் = திருவான்மியூர்.

3) முட்டுக்காட்டு பாலம் உடைஞ்சா இங்கதான் குடி வரணும்

இரண்டு கேள்விகள் இதே ரீதியில் கேட்டதால்,இந்தக் கேள்விக்கும் நாம் அறிவுப்பூர்வமாகவே யோசிப்போம். இங்கதான் ட்விஸ்ட்டே. ஃப்ரீயா விடு பாட்டு கேட்டிருக்கிங்களா? “முட்டுக்காட்டு பாலம் உடைஞ்சா மேடவாக்கத்துல குடியேறு” .ஹிஹிஹிஹி. இது லேட்ரல் திங்கிங்னு சொல்லலாமா?

4) துரை பேர ஒழுங்கா சொல்ல வராம அத தமிழாக்கி, அதை மொட்டையாக்கி, அந்த பேர மறுபடியும் இங்கிலீஷ் ஆக்கி..உஸ்ஸ்ஸ்ஸ் இந்த பாலம் மட்டும் இது புரிஞ்சு கண்ணீர் விட்டா கர்நாட்காவுக்கே நாம தண்ணி சப்ளை பண்ணலாம்

ஹேமில்டன் பிரிட்ஜ். இதற்கு சுவாரஸ்யமான எஸ்.டி.டி உண்டு. ஹேமில்டன் என்பதை நம்ம ஆட்கள் நாளடைவில் அமட்டன் வாராவதி ஆக்கினார்கள். பின்னாளில் ஒரு நல்லாத்மா அதை ஆங்கிலப்படுத்தி பார்பர் பிரிட்ஜ் ஆக்கிவிட்டார்

5) எத்தனை நாள் ஆனாலும் இந்த ஏரியா புதுசுதான். ஆனா கிடைக்குற ஐட்டமெல்லாம் பழசுதான்.

புதுப்பேட்டை. பழைய ஆட்டோமொபைல் பாகங்கள் கிடைக்குமிடம். திருமலை படம் பார்த்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திருப்பார்கள். ஹிஹி

6) இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக ஜெயித்தார் என்பதற்காக “ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ சிந்தாமணின்னு”  சொல்லாதிங்கப்பா

ஆயிரம் விளக்கு. சில கேள்விகள் எளிதாக இருந்தால்தான் மற்றதை கண்டுபிடிக்க ஆர்வம் வருமாம். அதனால் இது போன்ற போட்டிகளில் ஈசியா சில கேள்விகள் வைப்பது புதிர் ஆசிரியரின் இராஜ தந்திரம். :)

7)  ஜேக்சன்பாக்கம் அளவுக்கு இல்லைதான். என்றாலும் “அய.ஊரா இது”ன்னு சொல்லக் கூடாது.

பாக்கம் + அய = அயப்பாக்கம். அம்பத்தூர் அருகில் இருக்கிறது. அம்பத்தூர் எங்க இருக்கா? ஆவ்வ்வ்வ்.

8) தலபேட்டைன்னு சொல்லலாம். அந்தளவுக்கு தலைக்கு மவுசான ஏரியாதான். ஆனா தலயில் இருக்கும் ஜந்து பேட்டைதான்.

அண்ணா சாலையில் நந்தனம் – சைதை வரும்போது இடதுபக்கம் போர்டு பார்க்கலாம். பேன் பேட்டை. பேன் என்பது தலையில் வசிக்கும் ஜந்துதானே???

9) சிகரெட்டைக் கண்டாலே "ஆ"வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

இது நிச்சயம் லேட்ரல் திங்கிங்தான். சிகரெட் என்றால் தம். ஆவென தம்மைப் பார்த்து கத்துபவர்கள் என்றால் ஆதம்பாக்கம். மேலும் சிகரெட்டை கண்டாலே வெறுக்கும் உத்தமர் கார்க்கி அவர்கள் வசிப்பிடமும் ஆதம்பாக்கம்தான்

10) ப்ரதர்டவுந்தான். ஆனால் அண்ணா நகர் இல்லை

உடனே தம்பியை வச்சு ஏரியா பேரு யோசித்தவர்கள் ஹிஹிஹிஹிஹி. இது அண்ணன்+ஊர் =அண்ணனூர். அதெஆம் சென்னையா பாஸ் என்கிறீர்களா? சென்னை மாநகராட்சி விரிவு செய்த விஷயம் தெரியாதா உங்களுக்கு???

18 கருத்துக்குத்து:

ராசராசசோழன் on June 12, 2010 at 9:29 AM said...

நல்ல பொழுதுபோக்கு...

ப்ரியமுடன்...வசந்த் on June 12, 2010 at 9:30 AM said...

//8) தலபேட்டைன்னு சொல்லலாம். அந்தளவுக்கு தலைக்கு மவுசான ஏரியாதான். ஆனா தலயில் இருக்கும் ஜந்து பேட்டைதான்.

அண்ணா சாலையில் நந்தனம் – சைதை வரும்போது இடதுபக்கம் போரு பார்க்காலாம். பேன் பேட்டை. பேன் என்பது தலையில் வசிக்கும் ஜந்துதானே???
//

செம்ம யோசிப்பு... சூப்பர் சகா..

kumaresh on June 12, 2010 at 10:11 AM said...

enakku channai pathi onnum theriyathu aanaalum romba neram yosikka vachathu... idhu kooda nalla than irukku... nice...

ஜெட்லி on June 12, 2010 at 11:13 AM said...

//உத்தமர் கார்க்கி//

ஆமாம் நேத்து பி.பி.சி.யில் சொன்னாங்க....

சுசி on June 12, 2010 at 11:23 AM said...

நான் ஒண்ணும் சொல்லலை..

அப்புறம் தலைப்பை மாத்தி வச்சிட்டு காலை வாரி விடுவிங்க :((

சொல்லலைனுட்டு இவ்ளோ சொல்லி இருக்கிங்களேனு கேப்பிங்க??

//உத்தமர் கார்க்கி//

அதிஷா on June 12, 2010 at 11:37 AM said...

மவனே இன்னொரு வாட்டி கேள்வி பதில் போட்ட.. !

♠ ராஜு ♠ on June 12, 2010 at 12:13 PM said...

\ஹேமில்டன் என்பதை நம்ம ஆட்கள் நாளடைவில் அமட்டன் வாராவதி ஆக்கினார்கள். பின்னாளில் ஒரு நல்லாத்மா அதை ஆங்கிலப்படுத்தி பார்பர் பிரிட்ஜ் ஆக்கிவிட்டார்\\

ஹா ஹா ஹா..
தேவரெட்டியார் குப்பத்தை இப்போ எப்பிடி கூப்புடுறாங்க தெரியுமா..?

தனுசுராசி on June 12, 2010 at 3:07 PM said...

நகுமோ, ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போதும் போது நானுன் இளம்கொடி....

மாதேவி on June 12, 2010 at 4:46 PM said...

:)

சுகந்தி on June 12, 2010 at 7:37 PM said...

நல்லா யோசிச்சுருக்கீங்க கார்க்கி :))

ர‌கு on June 12, 2010 at 8:05 PM said...

//கார்க்கி அவர்கள் வசிப்பிடமும் ஆதம்பாக்கம்தான்//

அப்போ Job Slum இல்லியா :(

பரிசல்காரன் on June 12, 2010 at 9:59 PM said...

தலைப்பு - அட்டகாசம்.. ஸாரி.. தூள்.. ச்சே.. மறுபடி ஸாரி... கில்லிமா!

Software Engineer on June 12, 2010 at 10:24 PM said...

Good Entertainment! வோட்டு போட்டுட்டேன்!

Magesh on June 13, 2010 at 9:06 PM said...
This comment has been removed by the author.
மகேஷ் : ரசிகன் on June 13, 2010 at 9:08 PM said...
This comment has been removed by the author.
Magesh on June 13, 2010 at 11:08 PM said...
This comment has been removed by the author.
மகேஷ் : ரசிகன் on June 13, 2010 at 11:09 PM said...

அன்னிக்குக் கேள்வியைப் பார்த்து மயங்கினவன் இப்போ தான் எழுந்தேன். இந்த விளக்கங்கள் எல்லாம் பார்த்தா........
மறுபடியும் கண்ணக்கட்டுதே!!!!!!!!

Karthik on June 14, 2010 at 10:19 PM said...

நபநப :)

 

all rights reserved to www.karkibava.com