Jun 9, 2010

செம்மொழியின் குடிகாத்த செங்குடியறிஞர்


 

  மொக்கைவர்மனின் பால் தீராத அன்பு கொண்ட சிலர் “எங்கய்யா போனாரு எங்க மன்னரும், மங்குனி அமைச்சரும்” என கேள்வியாய் கேட்கிறார்கள். ஏழுவ மட்டும் கூட்டிட்டு வந்துட்ட என்ற உபதொல்லை வேறு. விஷயம் இதுதான். அடுத்த மொக்கைவர்ம பாகத்தின் கதைப்படி(டைரக்டர் தொணி வருதா?) மன்னரும், அவர்தம் சகாக்களும் ஒன்றாக அமர்ந்து குடிக்கிறார்கள். கதைப்படி ஆரம்பிக்கும்போது அவர்கள் சியர்ஸ் சொல்ல வேண்டும். அங்கதான் கதையில் ட்விஸ்ட் வருகிறது. ஆனால் மன்னர்காலத்தில் ஏது சியர்ஸ்? அப்படியென்றால் அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேண்டுமே? அந்த வார்த்தைக் குறித்த ஆராய்ச்சியாலே மன்னர் வர தாமதமாகிறது.

போகட்டும். இப்போது நாம் ஆராய்ச்சிக்கு வருவோம். ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் முன்னோர்கள் என்ன வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் என சில மூத்த, இளைய, புதிய, பழைய, பிரபல, பிராப்ள, சின்ன, பெரிய, லோக்கல், ஐ.எஸ்.டி , புக் போட்டவங்க, போடாதவங்க என எல்லோரையும் கேட்டேன். பல ஆச்சரிய பதில்கள் கிடைத்தன. ஒரு அன்பர் சொல்கிறார், சியர்ஸ் என்பதே சரக்கு சரியா ஊத்தியிருக்கானா.. அளவு கரீக்ட்டா என்பதை சோதிக்கவே சொல்லப்படுகிறதாம். ஆர்யா முதல் நித்யா வரை தமிழர்கள் அடுத்தவனை கண்மூடித்தனமாக நம்பியே மோசம் போகும் ஆசாமிகள் என்பதால் சியர்ஸ்க்கு வேலை இருந்திருக்காது என்கிறார். ம்ம்

cheers

அடுத்த பதிவர் இன்னும் விவ”ரம்”. அந்தக் காலத்தில் மண்பாண்டங்கள் அல்லவா உபயோகித்தார்கள். அதை மோதிக்கொள்ளும்போது உடைந்து விடாதா? அப்படி உடைந்த பாண்டங்கள் இருந்திருந்தால் “குற்றம். நடந்தது என்ன? நிகழ்ச்சியில் அதை தோண்டி போட்டிருக்க மாட்டார்களா என்று வினவினார். (அவங்க இல்லப்பா) அதனால் அந்தப் பழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவரது கருத்து.

அவரது கருத்தைக் கேட்டபின் இன்னொரு கேள்வியும் நம் ஆராய்ச்சியில் சேர்ந்துக் கொண்டது. ஆதி தமிழன் (அய்.ரெண்டுமே தள படம்) எதில் குடித்திருப்பான்? வட்டிலா, கலசமா, குவளையா, ஓலையா? நம் ஆராய்ச்சித் தாளில் இன்னொரு கேள்வியைக் கூட்டிக் கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அடுத்த பதிவர் பதில் தெரியாது என்று சொல்ல கூச்சப்பட்டு எதிர்கேள்வி கேட்டார். “உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் கேள்வி தோணுது?”. இதன் மூலம் தன்னை கவுண்டராகவும், என்னை செந்திலாகவும் ஆக்க முயலும் நுண்ணரசியல் புரிந்து நான் விலகிவிட்டாலும், இவ்வுலகிற்கு இந்தக் கேள்வி தோன்றிய வரலாற்றை சொல்லாவிட்டால் நான் நிஜ செந்திலாகும் அபாயம் இருப்பதால் இன்னொரு பத்தியை சேர்த்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்கள் எல்லாம் குடித்துவிட்டு கல்கி ஆசிரம பக்தர்கள் போல் மிதக்கும் வேளையில் நான் மட்டும் பியர் ஊறிய சிக்கனையும், ரம் ஏறிய கடலையையும், விஸ்கி வாசனை மட்டனையும் கொறித்துக் கொண்டிருந்தால் ஏன் தோன்றாது? அடுத்த புத்தாண்டு வருவதற்கு இன்னும் 6 மாதம் இருக்கிறது. இல்லையெனில் இனி சைட் டிஷ் சாப்பிடிவதில்லை என்ற உறுதிமொழியையாவது எடுத்து விடுவேன். இதுவும் போகட்டும். நாம் ஆராய்ச்சிக்கு வருவோம்.

பதிலே கிடைக்காமல் ஆராய்ச்சி இன்னமும்  எந்திரன் படம் போல ஆகிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் இவைதான்

"CHEERS என்பதற்கு இணையான தூய தமிழ்ச்சொல் என்ன இருக்கிறது? (கூட்டாக தண்ணியடிக்கும்போது தமிழர் பயன்படுத்திய வார்த்தை)"

தமிழர் கூட்டாக தண்ணியடித்தார்களா?

அப்படி தண்ணியடிக்கும்போது தங்கள் பாத்திரங்களை மோதிக்கொண்டார்களா?

தமிழர்கள் எதில் மதுவைக் குடித்தார்கள்? (கலசமா?, வட்டிலா? )

- இவையெல்லாம் துணைக்கேள்விகள்

இதற்கு சரியான பதில்கள் தரும் அறிஞர்களுக்கு செம்மொழி மாநாட்டில் கலைஞர் கையால ஒரு குவாட்டரோ, ஃபுல்லோ பரிசாகக் கிடைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறேன். யோசித்து பாருங்கள். ஹலோ அதுக்கு எதுக்கு மேல பார்க்கறீங்க? செம்மொழி என்று மார்தட்டும் வேளையில் சியர்ஸுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லையென்பது எவ்வளவு வேதனையான விஷயம்? கண்டுபிடியுங்கள்

எப்படியும் நம் மக்கள் இதற்கு சரியான பதத்தை கண்டு பிடித்துவிடுவார்கள். அது எனக்கு கவலையில்லை. என் ஒரே கவலையெல்லாம் அப்படி கண்டுபிடிக்கப்போகும் அறிஞருக்கு ஒரு குவார்ட்டரோ, ஃபுல்லோ தரப்போகும் கலைஞருக்கு “செம்மொழியின் குடிகாத்த செங்குடியறிஞர்'” என்று பட்டமளித்து யாராவது பாராட்டு விழா நடத்திவிடுவார்களோ என்பதே. :(

பி.கு : மேலே இருக்கும் படத்திற்கு குசும்பன் சொன்ன கமெண்ட்

“ஸ்டாலினும் அழகிரியும் இப்படி ஒன்னா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்”

16 கருத்துக்குத்து:

புன்னகை on June 9, 2010 at 10:46 AM said...

Side bar-ல இது என்ன புதுசா? ராதிகா மட்டும் தான் சொன்னாங்களோ??? :x

சுசி on June 9, 2010 at 11:16 AM said...

:)

தராசு on June 9, 2010 at 11:44 AM said...

//"CHEERS என்பதற்கு இணையான தூய தமிழ்ச்சொல் என்ன இருக்கிறது? (கூட்டாக தண்ணியடிக்கும்போது தமிழர் பயன்படுத்திய வார்த்தை)"//

"ச்சீயர்ஸ்" - தமிழ்ல எழுதுனா இப்படித்தான இருக்கும்.

//தமிழர் கூட்டாக தண்ணியடித்தார்களா?//

பெரிய கைபம்பா இருந்த ரெண்டு பேரோ அல்லது மூணு பேரோ சேர்ந்து தண்ணியடிச்சாங்க, சின்ன கை பம்ப்பா இருந்தா ஒருத்தர்தான் தண்ணியடிக்க முடியும்.

//அப்படி தண்ணியடிக்கும்போது தங்கள் பாத்திரங்களை மோதிக்கொண்டார்களா?//

அது வந்து கைபம்புக்கு கீழ யார் பாத்திரத்தை வைக்கறதுங்கறதுலதான் மோதல் வருமே ஒழிய, தண்ணியடிக்கும்போது மோத முடியாது. ஏன்னா அப்பதான் கைகள் ரெண்டும் கைபம்ப அடிச்சிட்டிருக்குமே.

//தமிழர்கள் எதில் மதுவைக் குடித்தார்கள்? (கலசமா?, வட்டிலா? )//

இந்த கேள்விக்கான பதிலை சாய்ஸ்ல விட்டர்றேன்.

Nivas on June 9, 2010 at 2:25 PM said...

//"CHEERS என்பதற்கு இணையான தூய தமிழ்ச்சொல் என்ன இருக்கிறது? (கூட்டாக தண்ணியடிக்கும்போது தமிழர் பயன்படுத்திய வார்த்தை)"//

இறவல் குடி (OC KUDI)

//தமிழர் கூட்டாக தண்ணியடித்தார்களா?//

தமிழர் கூட்டாக வா? ஹி ஹி ஹி

//அப்படி தண்ணியடிக்கும்போது தங்கள் பாத்திரங்களை மோதிக்கொண்டார்களா?//

பாத்திரத்தைதான் கேட்க வேண்டும்

//தமிழர்கள் எதில் மதுவைக் குடித்தார்கள்? (கலசமா?, வட்டிலா? )//

இரண்டிலும் இல்லை, வாயில்

கார்க்கி on June 9, 2010 at 3:53 PM said...

புன்னகை, எடுத்துட்டேன் :))

நன்றி சுசி

தராசண்ணே நீங்க ரொம்ப விவரம்

முதல் கருத்திற்கு நன்றி நிவாஸ்

எங்கப்பா போனாங்க எல்லோரும்???????1100 பேருல 4 பேருதானா???

பிரதீபா on June 9, 2010 at 3:56 PM said...

மீள்ஸ் !!

kumaresh on June 9, 2010 at 5:27 PM said...

(டைரக்டர் தொணி வருதா?) -- neenga directorna unga padathula hero yaaru thala... (அய்.ரெண்டுமே தள படம்) -- unga thala? vendam.... valikkithu....
அங்கதான் கதையில் ட்விஸ்ட் வருகிறது--- kadhai enga thala? ippo vena othukkalam... intha padathula unga thala than hero...

padivu-- comedy kadhambam.

Nivas on June 9, 2010 at 7:19 PM said...

//முதல் கருத்திற்கு நன்றி நிவாஸ்//

அப்போ
இரண்டாவதுக்கு நன்றி நன்றி
மூன்றாவதுக்கு நன்றி நன்றி நன்றி
நான்காவதுக்கு நன்றி நன்றி நன்றி நன்றியா? கார்க்கி

விலெகா on June 9, 2010 at 7:29 PM said...

தமிழர் கூட்டாக தண்ணியடித்தார்களா?

கூட்டாவ‌த‌ற்க்காக‌வே த‌ண்ணிய‌டித்தார்க‌ள்.


தமிழர்கள் எதில் மதுவைக் குடித்தார்கள்? (கலசமா?, வட்டிலா? )

கலசம்.(வட்டிக்கு வாங்கி குடித்ததால் மறுபடியும் வட்டி(லை)பயன்படுத்த விரும்பியிருக்க மாட்டார்கள்)


இரண்டு கேள்விக்களுக்கு சரியான பதிலை சொல்லியிருப்பதால் தயவு செய்து கலைஞர் கையால‌ கட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Karthik on June 9, 2010 at 7:56 PM said...

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியாச்சா டாக்டர்?

Kafil on June 9, 2010 at 8:03 PM said...

Cheers == Magilchi

avungallam koottaathaan thanni adhichaanga.. avvayaare thanni adichirukaangappa.. kallunnamai apdinnu valluvar thaniya oru pathive potrukkar.. appo nammallam appo irundhe sabaya kooti thanni adichurokkom..

raja- golden glass.. minister bronze glass, princess- silver glass.. business man- manpaandam, athukkum keela poor people olai.. eppdui..

avunga thanni adikkumpothu mothirukka mattanga.. mothi mudichuttuthaan vettrikku appuram thanni adichurupaanga.. veeranunga illaya athunaala..

ராசராசசோழன் on June 9, 2010 at 8:41 PM said...

இதுல யாரு அழகிரி யாரு ஸ்டாலின்... உங்க கேள்விக்கும் அவங்க தான் சரியான ஆள்...தமிழ் இன தலைவரின் வாரிசு அல்லவா...

பரிசல்காரன் on June 9, 2010 at 11:52 PM said...

கடவுளே...

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது...

ப்ரியமுடன்...வசந்த் on June 10, 2010 at 12:23 AM said...

// ஆதி தமிழன் (அய்.ரெண்டுமே தள படம்) //

உங்க திறமையே திறம...

Bala on June 10, 2010 at 8:10 PM said...

//ஆதி தமிழன் (அய்.ரெண்டுமே தள படம்)

நீங்க ரொம்ப டிப்ளோமேடிக்.
தல அப்படிங்கற வார்த்தையை கூட பயன்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறீங்களே?

தள அப்படின்னா என்ன?

கிறிச்சான் on June 21, 2010 at 11:21 AM said...

ஆதி , தமிழன்(அய்.ரெண்டுமே தள படம்) ///எப்புடி தல? இதெல்லாம் உங்களால மட்டும் தான் யோசிக்க முடியும்!!!

 

all rights reserved to www.karkibava.com