Jun 3, 2010

மழை


 

   மழையும் காதலும் ரம்மியமானது என்றால் மழையில் காதலி உடன் இருப்பதை என்னவென்பது? பாண்டிச்சேரியில் இருப்பது போன்ற நேரான சாலைகளில், மழை நின்றும் நிற்காத தூறலில் காதலியின் கைகோர்த்தபடி நடந்து சென்று கடலை தரிசிப்பது சுகம். சுகம் என்பது கூட சரியா? அந்த பரவசநிலைக்கு ஏற்ற வார்த்தை எனக்குத் தெரியவில்லை. அவள் நனைவாள். அவளோடு இவனும் நனைவான். இருவரும் நடுங்குவார்கள். கூடவே மழையும் நடுங்கும். கைகளை குறுக்கே அணைத்து குளிருக்கு இதமாக்கிக் கொள்ளும் போது தன்னை அணைத்துக் கொள்ள மாட்டாளா என்று அவன் நினைத்துக் கொள்வதுண்டு. கைகளை எடுக்க மாட்டாளா என்று மழையும் நினைப்பதுண்டு.

rain-benches (1)

   மழை வந்து கழுவி சென்ற சாலை சுத்தமாய் இருக்கும். நனைந்து கிடக்கும் பூக்களைக் கூட மிதிக்காமல் மெல்ல நடந்து வருவாள். அவள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துளிகளை பார்த்து அவனுக்கு பொறாமை எழும். சற்றே வலுவான துளிகள் அவள் கன்னம் வழி உதடுகளை அடையும்போது, வலுவிழுந்து கீழே விழத் தயாராகும். அதுவரை சைவமாக இருந்தவனை அவளது இதழ் வருடும் மழைத்துளி அசைவமாக்கக்கூடும். தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் அந்த துளியை கைகளில் ஏந்தியவன் பொறாமை மறந்து கடவுளைக் கண்டவனைப் போல் மூர்ச்சையாகி இருப்பான். தீர்த்தமாய் பருகிக் கொண்டிருப்பான்.

ஆனந்தமாய் ஓடும் ஓடையின்  குறுக்கே இருக்கும் பாலத்தில் அவள் அமர்வாள். எழுதி வைத்த கவிதைத் தாள்களை அந்த மெல்லிய மழையினூடே அவளிடம் கொடுத்துப் படிக்க சொல்லுவான் அவன்.

நான் தானே நடக்கிறேன்

அது என்ன என் பின்னால்

உன் நிழல்?

சிரித்துக் கொள்வாள் அவள். எரிந்துக் கொண்டிருப்பான் அவன். நெருப்பை அணைக்கும் மழை கூட இவனுக்கு மட்டும் பெட்ரோலாய் பொழிந்துக் கொண்டிருக்கும். கவிதை எனப்படும் கிறுக்கல்கள் கொண்ட தாளை முக்கோணமாய் மடிப்பாள். லப்டப் இதயம் டப்டப் என மாறித்துடிக்கும். உதடுகளால் காகிதத்தை ஈரமாக்கி  கிழிப்பாள். எழுதி இருந்த எழுத்துக்கள் அதிசயமாக உயிர்பெற்று உயிர் கொடுத்த அதிசயத்தை ரசிக்கத் தொடங்கும். காகிதம் கப்பலாகி, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் டைட்டானிக் போல பெருமித ஓட்டம் ஓடும். அவள் கைகளால் கப்பல்கள் ஆவதை  விட வேறு என்ன பெருமை கிடைத்து விடக்கூடும் அவன் கவிதைகளுக்கு?

ஓடை வேறு வழியாக கடலை நோக்கி ஓட, இவர்கள் வேறு வழியாக நடக்க துவங்குவார்கள். மழை நின்ற சமயம் சிறிய மரமொன்றின் கீழ் நின்று கொண்டு, இலைகள் சேகரித்த துளிகளை உலுக்கி  அவளின் மேல் விழச்செய்யும்போது மலரை சேர்ந்ததாய் உணரக்கூடும் மழைத்துளி. ஒரு செல்ல சிணுங்கல் செய்தபடி மரத்தை விட்டு கடலை நோக்கி ஓடுவாள் அவள். மரமும், இலைகளும் அவனை முறைத்தப்படி நிற்க, பயந்தபடி இவள் பின்னாள் ஓடி ஒளிந்துக் கொள்வான் அவன். அவளிடன் உனக்கு என்னடா வேலை என்று மீண்டும் பெய்யத் தொடங்கும் மழை. முகத்தை வான் நோக்கி உயர்த்தி மழையை ரசித்தபடி நடப்பாள் அவள். முத்தாகிவிட வேண்டும் என்ற ஆசையில் அவள் மேல் விழும் மழைத்துளி.

இறுதியாய் கடலை அடைவார்கள். கரையில் நிற்கும் அவளை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு உயரமாய் எழும்பி வரும் அலைகள். கடலை உசுப்பிவிட, நான் முத்தமிடுகிறேன் பார் என்று கொட்டிவரும் மழை. மழையிலும் கரையாத ஐஸ்கிரீம் சிலை நீயென ஆச்சரியப்பட்டு போவான் அவன். ஆசையோடு ஒரு காலை மட்டும் அலையில் நனைப்பாள் அவள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சாத்தியம் மட்டுமல்ல, எளிதானதும் என்றபடி கைகளில் ஏந்தி குடிப்பான் அவன். வெட்கத்தில் முகத்தை மூடுவாள் அவள். இவர்கள் காதலுக்கு குறுக்கே வர மனமின்றி நின்று போகும் மழை. சோகத்தில் அழுது அழுதே குடிநீரை மீண்டும் உப்பாக்கும் கடல். நமக்கு மட்டும் இனி என்ன வேலை? அவர்கள் காதலித்துப் போகட்டும். நாம் விடைபெறுவோம்

27 கருத்துக்குத்து:

ILA(@)இளா on June 3, 2010 at 12:37 AM said...

ம்ம்ம்

Kafil on June 3, 2010 at 12:49 AM said...

Natpu neenga ipdiyellam urugi urugi Eluthinaalum Mass enga 7lukkuthaan... Poi Avara kootittu vaanga..manasukulla tastoveskynnu nenappu

கே.ஆர்.பி.செந்தில் on June 3, 2010 at 12:49 AM said...

//நான் தானே நடக்கிறேன்

அது என்ன என் பின்னால்

உன் நிழல்?//

தெளிவாயிட்டீங்க.. வாழ்த்துக்கள்

சுசி on June 3, 2010 at 1:05 AM said...

:)

ர‌கு on June 3, 2010 at 1:07 AM said...

ஏழெத்து லேபிளை போட‌ ம‌ற‌ந்துட்டீங்க‌ளா?

பிரதீபா on June 3, 2010 at 2:17 AM said...

கார்க்கி, சூப்பரு போங்க... ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க கிட்ட இருந்து ரொம்ப ரொம்ப நல்ல ரசனை-பதிவாக. வரிக்கு வரி பாராட்டுக்கள்.

பிரதீபா on June 3, 2010 at 2:22 AM said...

ஆஹா........மாடரேஷன்

ரங்கன் on June 3, 2010 at 7:18 AM said...

ஹேய்..நல்லா இருக்கு மேன்..!!

நல்ல ஃப்லோ..!!

நைஸ்..எடுத்து மேல வைக்கவும்(keep it up!)

ப்ரியமுடன்...வசந்த் on June 3, 2010 at 7:50 AM said...

photo selection super saga....

Maduraimalli on June 3, 2010 at 8:22 AM said...

Machi good news singam super hit.. treat in ECR this weekend.. coming?

Ganesh on June 3, 2010 at 8:35 AM said...

:)

shortfilmindia.com on June 3, 2010 at 8:39 AM said...

மொக்கையாய் எழுதற ஆள் நீதானா? :)

Karthik on June 3, 2010 at 8:51 AM said...

ஆணாதிக்க பதிவு. புறக்கணிக்கிறேன். ;)

மங்களூர் சிவா on June 3, 2010 at 10:32 AM said...

/
இவர்கள் காதலுக்கு குறுக்கே வர மனமின்றி நின்று போகும் மழை.
/


மழை வந்து நனைஞ்சாதான் காதலை அடுத்த கட்டத்துக்கு நவத்த முடியும். என்ன புள்ளையோ நீ போ!

பையா படம் போய் பாருப்பா!

சினிமா பாத்து சீரழிஞ்சோர் சங்கம்
மங்களூர்

புன்னகை on June 3, 2010 at 10:50 AM said...

//முத்தாகிவிட வேண்டும் என்ற ஆசையில் அவள் மேல் விழும் மழைத்துளி.//

மீள் பதிவாக இருந்த போதும், இது மட்டும் முரணாகத் தோன்றுகிறது கார்க்கி. சிப்பியில் விழும் மழைத்துளி தானே முத்தாகும்? பிறகு அவள் மீது விழுந்து மழைநீர் முத்தாகத் துடிக்கிறது என்றால் என்ன பொருள்?

kumaresh on June 3, 2010 at 10:50 AM said...

. ஆசையோடு ஒரு காலை மட்டும் அலையில் நனைப்பாள் அவள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சாத்தியம் மட்டுமல்ல, எளிதானதும் என்றபடி கைகளில் ஏந்தி குடிப்பான் அவன். வெட்கத்தில் முகத்தை மூடுவாள் அவள்.

romba nalla irindadu

i just enjoyed it

முரளிகுமார் பத்மநாபன் on June 3, 2010 at 10:56 AM said...

meel pathivaas sakaa ithu?

goindu on June 3, 2010 at 11:31 AM said...

Sooper

பட்டுப்பூச்சி on June 3, 2010 at 12:40 PM said...

karpanaiku nalla than irkuku... Nejathulla satyamaa ithellam nadakathu..:P

Mala varuthu.. seekarm veetuku ponnum.. bus la rush.. avalukoo veetuku poi dinner enna pannarathu, patharam kaluvanum nu thoughts.. Kalyanathuku appuram kathalikarathu rombavey kastam paa..

Seekram ippavey love pannuga

vanila on June 3, 2010 at 3:00 PM said...

MURALI IS ABSOLUTE.

நேசன்..., on June 3, 2010 at 5:31 PM said...

எப்போதும் கோபத்தைக் காதல் தான் அமைதிபடுத்தும்!

அதிலை on June 4, 2010 at 12:05 AM said...

kalavara boomiyil kadhala...

keep rocking Karki..

மாயாவி on June 4, 2010 at 12:15 AM said...

//இறுதியாய் கடலை அடைவார்கள்//
இங்கு கடலை மொத்தமாகவும் சில்லரயாகவும் விற்பனை செய்யப்படும்...

:) தொட்டுடீங்க சகா....

சங்கீதன் on June 4, 2010 at 5:07 AM said...

ஒவ்வொரு வரியும் பட்டாசு.. காதல் சரவெடி! :)

தராசு on June 4, 2010 at 12:24 PM said...

எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Goutam on June 5, 2010 at 4:54 PM said...

மிகவும் நன்றாக இறுந்தது கார்க்கி...

akila on June 7, 2010 at 10:13 AM said...

This is another good ex. for ur writting karki...go ahead with the same spirit...All the best

Akila

 

all rights reserved to www.karkibava.com