Jun 1, 2010

ஹலோ.. ஹலோ (கார்க்கி)


 

ரொம்ப நாளாக எஃப்.எம்முக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.

ஹலோ சூரியன் எஃப்.எம்

ஒழுங்கா சொல்லுங்க. ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?

சூரியன் எஃப்.எம் தாங்க.

அப்படியா? நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?

கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.

ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?

சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.

அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?

வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?

நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.

முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?

மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.

ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.

மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.

புறாக் கூடு போல முப்பது ரூமு..

ஓகே சார். உங்க வழிக்கே வறேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?

நான் தாங்க பாடினேன். ஏன். நல்லாயில்லையா?

ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.

இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.

என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

அப்படியில்ல  சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?

ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?

நான் ரெடி.

உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?

மந்திரா

சார். இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல  யார புடிக்கும்?

கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?

சார். ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.

ஓக்கே சார்  தோனியின் சொந்த ஊர் எது?

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?

பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.

ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)

யாரு சார் அது பக்கத்துல?

ஆறு.

அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.

அதான் ஆறு.

ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. த்ரிஷா என் தங்கச்சி. அடுத்த கேள்விய கேளுங்க.

அடுத்த ரவுண்ட் ஜி.கே

B.K தெரியும். அது என்ன G.K.?

சார். ஜெனரல் நாலெட்ஜ்.

அப்படி ஒரு சரக்கா?

டொக்.

ஏழுவின் நிலைய லேட்டாக புரிந்தக் கொண்ட அவர் லைனை கட் செய்கிறார்

______________________________________________________________

பி.கு : நண்பர் ஒருவரின் வேண்டுக்கோளுக்கிணங்க மீண்டும் ஒரு மீள்பதிவு

32 கருத்துக்குத்து:

மாயாவி on June 1, 2010 at 1:01 AM said...

உங்க புட்டி கதைகள் ல என்னோட நெ 1 இடம் இந்த கொத்து தான் boss....

ஆனா இப்போ ஏன் போட்ருகீங்க நு தான் புரில........
:)

ப்ரியமுடன்...வசந்த் on June 1, 2010 at 1:13 AM said...

//ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?//

சகா இதுதான் எனக்கு பிடிச்சது...

மதுரை சரவணன் on June 1, 2010 at 1:18 AM said...

மிகவும் நன்றாக இருந்தது. அசத்துங்க...வாழ்த்துக்கள்

ர‌கு on June 1, 2010 at 1:51 AM said...

ஒவ்வொரு வ‌ரியும் ம‌ர‌ண‌க்க‌டி ச‌கா :))

சுசி on June 1, 2010 at 1:56 AM said...

ஏழு ஏழுதான் கார்க்கி..

மரண மொக்கை..

இராகவன் நைஜிரியா on June 1, 2010 at 2:49 AM said...

சிரிச்சுகிட்டே இருக்கேன் கார்க்கி...

கலக்கல்.

RaGhaV on June 1, 2010 at 6:35 AM said...

பதிவு பட்டய கிளப்புது.. :-)

யாசவி on June 1, 2010 at 6:39 AM said...

கார்க்கி,

கலக்கிட்டீங்க.

சிரிச்சிட்டே இருக்கேன்

senthil on June 1, 2010 at 7:02 AM said...

super

நாய்க்குட்டி மனசு on June 1, 2010 at 8:24 AM said...

அக்னி மறைந்த (நான் அக்னி வெயிலை சொன்னேன்) இளம் காலை வேளையில் சிரிக்க வைத்த கார்க்கி க்கு ஒரு 'ஒ'(அது எப்படி போட்டாலும் நெடில் வர மாட்டேங்குதுங்க)

தராசு on June 1, 2010 at 8:51 AM said...

எப்ப வேண்ணா படிக்கலாம் இதை.

டிஸ்கி : பல நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீள் பின்னூட்டம்.

வெறும்பய on June 1, 2010 at 9:47 AM said...

அருமையான காமெடி,
நல்ல பதிவு வாழ்த்துக்கள்,

sivakasi maappillai on June 1, 2010 at 10:23 AM said...

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

ரென்டு நாளா சுறா விளம்பரம் தினத்தந்தி ல் இல்லையே!

ஏன்???

Phantom Mohan on June 1, 2010 at 11:38 AM said...

மரண மொக்கடா சாமி!

நல்லா இருந்தது

சூரியன் on June 1, 2010 at 12:10 PM said...

// என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.//

ஒவ்வொரு வ‌ரியும் ம‌ர‌ண‌க்க‌டி ச‌கா :)

காதலிஸம் on June 1, 2010 at 12:21 PM said...

//யாரு சார் அது பக்கத்துல?
ஆறு.
அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.
அதான் ஆறு.
ஓ.ஆறுதான் அவர் பேரா?//


மிகச் மிகச் சிற(ரி)ப்பு...

Kafil on June 1, 2010 at 12:57 PM said...

agila indhiya 7 peravaikku naan thaan ko pa se

narumugai on June 1, 2010 at 1:35 PM said...

உஷ்ஷப்பா... என்னா மொக்கைடா சாமி..


www.narumugai.com
நமக்கான ஓரிடம்

பிரதீபா on June 1, 2010 at 2:21 PM said...

எத்தன வாட்டி வேணாலும் படிக்கலாங்க. ஏழு எல்லாருக்கும் பிடிச்சவர். உண்மையாவே இப்படி நடந்திருந்தா, fm RJ வேலைய விட்டே ஒடீருக்கும் :)))))))))))

Maduraimalli on June 1, 2010 at 2:39 PM said...

Machi good news singam super hit.. treat in ECR this weekend.. coming?

LK on June 1, 2010 at 3:22 PM said...

hahaha inniku irukara nilamayala manasa light akkiduchi boss thanks

மங்குனி அமைச்சர் on June 1, 2010 at 6:27 PM said...

சார் , சரக்குல நிறைய தண்ணி மிக்ஸ் பண்ணிடிங்க , காட்டமா இல்லை (அப்படினாலாவது அடுத்த ரவுண்டு ஸ்ட்ராங்கா ஊத்தி தருவார்ல )
ஹி.ஹி.ஹி

மங்குனி அமைச்சர் on June 1, 2010 at 6:28 PM said...

// யாசவி said...
கார்க்கி,

கலக்கிட்டீங்க.

சிரிச்சிட்டே இருக்கேன்
////


யாசவிக்கு எக்ஸ்ட்ரா ஒரு கட்டிங் ஆடர்

kayal on June 1, 2010 at 6:56 PM said...

அறிவான நகைச்சுவையா இருந்தது ! இது மாதிரி தொடர்ந்து எழுதுங்கள் ! ஏழு தான் உங்க ஏரியா ! ரொம்ப பிடிச்சதால இந்த கமெண்ட் !

Anbarasu Selvarasu on June 2, 2010 at 10:55 AM said...

கலக்கிட்டீங்க கார்க்கி. மிக அருமை.
அன்பரசு செல்வராசு

அஹமது இர்ஷாத் on June 2, 2010 at 5:04 PM said...

இவ்வளவும் சொல்லிப்புட்டு திரும்பவும் FM கேட்ககூடாது ஆமா..

பட்டுப்பூச்சி on June 2, 2010 at 5:19 PM said...

Comment pottachii..
U started to scribble... Neenga recentaa ethi vittu commentaa kummi sagadichavarium seekram elutha sollunga.

Karthik on June 2, 2010 at 10:29 PM said...

//Blogger மாயாவி said...
உங்க புட்டி கதைகள் ல என்னோட நெ 1 இடம் இந்த கொத்து தான் boss....

+1 :)

rajan on June 9, 2010 at 4:36 PM said...

I laughed out loudly atleast 3 times when reading-Hello, Hello.. excellent, keep it up.

எஸ்.ஏ.சரவணக்குமார் on June 9, 2010 at 6:47 PM said...

சிரிச்சிட்டே இருக்கேன்!!!...ரசித்தேன்!

Deva on June 11, 2010 at 6:41 AM said...

அடிச்சா சரக்கோட மப்பு எல்லாம் எறங்குற அளவுக்கு சிரிச்சிட்டேன் குரு......... இன்னும் நிறைய எதிர் பாக்றேன்!! :)

பெயர் சொல்ல விருப்பமில்லை on June 17, 2010 at 3:28 PM said...

சொல்லி சொல்லி அடிக்கிறதுங்கறது இதுதானோ?
(இன்னிக்குதான் உங்க பதிவுலகத்துக்கு வந்திருக்கேன்....சாரி!)

 

all rights reserved to www.karkibava.com