Jun 10, 2010

100 வாட்ஸ் பல்பு


 

    வலையுலகில் புது முயற்சின்னு ஒரு மொக்கை போட்டேன் இல்லயா? அதைப் பார்த்துட்டு பெங்களூரு சகா ஒருவர் அழைத்தார். ஏன் சகா அப்படி பண்ணிங்கன்னு எடுத்த எடுப்பிலே இன் ஸ்விங்கிங் யார்க்கர் வீசினார் அந்த அக்ரம். அலறிய நான் தாதா போல பதட்டத்தில் இன் ஸ்விங்கரை உள்ளே விட ஸ்டெம்ப் எகிறியது. சுதாரித்து என்ன விஷயமென்று கேட்ட போது சொன்னார். தோழி அப்டேட்ஸில் தோழி வெட்கப்படுவதாக எழுதினால் அவர் தோழி வெட்கப்படுவதை யோசித்துப் பார்ப்பாராம். நான் எழுதுவதையெல்லாம் அப்படி ஒன்றி படிப்பது அவர் வழக்கமாம். அப்படி கற்பனை செய்து படிக்கும் வாய்ப்பு தராமல் படம் போட்டது பிடிக்கவில்லையென்றார். இவர் தாமிரா அண்ணன்,அண்ணியிடம் அடிவாங்கும் பதிவுகளை படிக்க மாட்டாரா என்று மனதில் எழுந்த கேள்வியை கேட்கவில்லை. அக்கிரமத்தை தொடர்ந்த அக்ரம் அடுத்து ஐன்ஸ்டீன் பந்து வீசினார் “Make things Simple. Not simpler” என்றாராம் அந்த அறிஞர். வேறு வழியின்றி யூசுஃப் பதானை களமிறக்கினேன். ‘அதாவது வாழைப்பழம் தந்தா போதும். உரிச்செல்லாம் தர வேண்டாம்’ அதானே சகா என்றேன். டொக்.

______________________________________________________________________________

சாளரத்தின் நெடுநாளைய வாசகி ராதிகாவை சிலர் அறிவீர்கள் என நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு சுத்தியலின் புகைப்படத்தை அனுப்பி “சகா. உங்க பிளாகுக்கு கண்ணு பட்டுடுச்சு. சுத்தி போடணும். அதான் இந்தப் படத்த அனுப்பியிருக்கேன். சைடு பாரிலோ,பதிவிலோ போடுங்க” என்று மடலிட்டார்.  நானும் டாப் சைட் பாரில் சேர்த்தேன். நேற்று இன்னொரு மடலிடுகிறார் “சகா. உங்களுக்கும் கண்ணு பட்டிருக்கும். அதே மாதிரி சுத்தி ஒண்ணு வாங்கி தலையிலே போட்டுக்கோங்க”. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. வீட்டு பின்புறம் அதிக வெளிச்சம் வேண்டுமென  100 வாட்ஸ் பல்பு கேட்டிருந்தார்கள் அம்மா. ராதிகாவிடம் வாங்கிய பல்பை தோட்டத்தில் எரியவிட்டதில் அம்மாவுக்கு சந்தோஷம்.பளீர்ன்ன்ன்ன்ன்னு எரிகிறதாம்

________________________________________________________________________________

வலையுலகத்தால் என்னென்ன நன்மைகள் என்று கேட்டிருந்தார் நண்பர் ஒருவர். அது எப்படிங்க கரெக்க்க்க்க்டான நேரத்துல கேட்கறீங்க என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். எனக்கு தெரிந்து இதுதான் டாப் 5 ஆக இருக்கும். வெறெதாவது இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

1) வாசிக்கும் பழக்கம். எனக்கு இதுதான் முக்கியமான நன்மையாக தெரிகிறது

2) நமக்குள் இருக்கும் திறமையை(அப்படி ஏதாவது இருந்தா) நமக்கு தோதான நேரத்தில், நம் விருப்பபடி வெளிக்காட்ட ஒரு நல்ல மேடை.

3) எல்லா  துறை சார்ந்த விஷயங்களையும் தமிழிலே படிக்கலாம்

4) நம் ரசனைக்கேற்ற நட்பு வட்டம் கிடைக்கும்

5) அலுவலகத்தில் வேலைப்பளுவில் இருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் வேலை செய்வதாக பாவ்லா காட்டியபடியே ரிலாக்ஸ் செய்யலாம்

______________________________________________________________________________

ராவணன் இசை குறித்து எழுத எண்ணியிருந்தேன். உசுரே போகுதேவை தவிர்த்து வேறெதுவும் கவரவில்லை. ரகுமான் பாடல்கள் எப்போதும் ஸ்லோ பாய்சன்தானே என்று பொறுமையுடன் கேட்டுக் கொண்டேயிருந்தேன். ம்ஹூம். காட்டு சிறுக்கி ஆரம்பத்தில் ஈர்த்தாலும் எப்படா முடியும் என்று ஆகிறது. வீரா வீராவும் களைக்கட்டவில்லை. வேறுவழியில்லாமல் உசுரே போகுதே மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னேரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். உசுரே போகுதே பாடல் பாய்ஸ் படத்தில், பசங்க எல்லாம் ஜெயிலில் இருக்கும் போது பாடும் “ஜெயிலே ஜெயிலே செண்ட்ரல் ஜெயிலே” பாடலின் மெட்டில் போடப்பட்டது. அதைப் பாடியது நம்ம சித்தார்த்,

__________________________________________________________________________________

பதிவு ரொம்ப சின்னதா இருக்கு. ஒரு தோழி அப்டேட்ஸோட முடிக்கிறேன்

“நீ என் தோழியா கிடைக்க நான் எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும் என்றேன் தோழியிடம். சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள். நானே இவ்ளோ என்றால் நீ எவ்ளோ புண்ணியம் செஞ்சிருக்கணும் என்றேன்.

28 கருத்துக்குத்து:

சுசி on June 10, 2010 at 12:59 AM said...

அதான் இன்னைக்கு உங்க பிளாக் ஜகஜ்ஜோதியா இருக்கா??

ப்ரியமுடன்...வசந்த் on June 10, 2010 at 1:06 AM said...

பல்ப் வாங்கி வாங்கி ஆயிரம் பல்ப் வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகிடாதீங்க சகா உஷாரு...

தோழி அப்டேட்ஸில் தோழியே எப்பொழுதும் பல்ப் வாங்குகிறார் என்னவாம் ஆணாதிக்கமா? இப்பிடி கேள்விகள் வரலாம் உஷாரு சகா...

ஆபிஸ்ல பாவ்லா செய்றத யாரவது உங்க டேமேஜரோட ஃப்ரண்ட்ஸ் வாசித்து தொலைத்திருக்கப்போகிறார்கள் உஷாரு சகா...

ர‌கு on June 10, 2010 at 1:12 AM said...

//அலுவலகத்தில் வேலைப்பளுவில் இருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் வேலை செய்வதாக பாவ்லா காட்டியபடியே ரிலாக்ஸ் செய்யலாம்//

இப்போ இதைத்தான் செஞ்சுகிட்டிருக்கேன் ;)))


ஏன் ச‌கா, உங்க‌ளுக்கு ர‌ஹ்மானை பிடிக்காதா? அவ‌ரைப் ப‌த்தி சில‌ ச‌ம‌ய‌ம் நெக‌ட்டிவ்வாக‌வே எழுத‌ற‌ மாதிரி ஒரு ஃபீல்

வ‌லையுல‌கின் இன்னொரு ந‌ன்மை....24x7 ச‌ர்வீஸ் ;))) எந்த‌ நேர‌ம் திர‌ட்டியை திற‌ந்தாலும் ஏதாவ‌து புதுசு புதுசா ப‌திவுக‌ள் வ‌ந்துகிட்டேதான் இருக்கு

பிரதீபா on June 10, 2010 at 2:41 AM said...

"வலையுலகத்தால் என்னென்ன நன்மைகள்"-தொடர்ச்சி
6 ) யாரையாச்சும் பிடிக்கலன்னா அனானியா போயி திட்டிட்டு வரலாம்
7 )'நான் யாரு தெரியுமில்ல'ன்னு கெத்து விட்டுக்கலாம்.. கிக்கிக்கீ
8 ) (என்னை மாதிரி) எழுதவே தெரியாத அரை வேக்காடு எல்லாம் வலைப்பூ ஆரம்பிச்சு எழுதற கெட்டுரையை யாருமே பிடிக்காம கிழிச்சுப்போட முடியாது.
9 ) பட்டையா அடி வாங்கின சொந்த அனுபவத்த எழுதிட்டு , யாரோ வாங்கின மாதிரி சொல்லிக்கலாம். (அவ்வவ்வ்வ்வ்)

சும்மா தமாசுக்கு கார்க்கி.

உண்மையா சொல்லப்போனா *தமிழ் மேல பற்று இன்னும் அதிகம் ஆகும்
*நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது
*நம்ம எப்படி மற்றதுல இருந்து நம்ம படைப்பை வித்யாசப்படுத்தி காமிப்போம்ன்னு க்ரியேடிவிடி வரும்

இன்னும் சொல்லிட்டே போலாம்ங்க.குசும்பன் வந்தா வித்யாசமான கோணத்துல எதாச்சும் சொல்லுவாரு.. :-)

ராசராசசோழன் on June 10, 2010 at 6:20 AM said...

உங்க திறமைக்கு நீங்க இங்க இருக்கவேண்டிய ஆளு இல்ல....

taaru on June 10, 2010 at 6:24 AM said...

அக்கினிப் பழமுன்னு தெரிஞ்ச பின்னும்...
அடிக்கடி நாக்கு துடிக்குதடி...
ஆஹா அருமை...

taaru on June 10, 2010 at 6:26 AM said...

நீங்க கொடுத்தும்.. தோழி புண்ணியமும் பண்ணி இருக்கீங்க தான்... அத சொல்லவா வேணும்...

LK on June 10, 2010 at 6:32 AM said...

தல எங்க அந்த சுத்திய காணோம்???

Balavasakan on June 10, 2010 at 7:19 AM said...

நம் ரசனைக்கேற்ற நட்பு வட்டம் கிடைக்கும்//

கரக்ட் பாஸ்..

நாய்க்குட்டி மனசு on June 10, 2010 at 8:30 AM said...

வலையுலக பயன்களில் நாலாவது பாயிண்ட் தான் ரொம்ப முக்கியம். ரொம்ப கஷ்டமான விஷயமும் அது தான்.

மகேஷ் : ரசிகன் on June 10, 2010 at 8:57 AM said...

நல்லவேள ராதிக சுத்தியலோட நிறுத்தினாங்க....

சம்மட்டி கொடுக்கலாம்னு நினைச்சுட்டிருந்தேன்.

மகேஷ் : ரசிகன் on June 10, 2010 at 8:58 AM said...

ஐய்யைய்யோ... சொந்த பேர்லயே வந்து உண்மையச் சொல்லிட்டேனே...

தராசு on June 10, 2010 at 9:03 AM said...

//இவர் தாமிரா அண்ணன்,அண்ணியிடம் அடிவாங்கும் பதிவுகளை படிக்க மாட்டாரா என்று மனதில் எழுந்த கேள்வியை கேட்கவில்லை.//

வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் ஆதி அண்ணன் எங்கும் அடி வாங்கியதில்லை என்பதை இந்த சமயத்தில் பதிவுலகுக்கு எடுத்துக் கூற கடமைப் பட்டுள்ளேன். என்ன அப்பப்ப ஒட்டியிருக்கற மண்ண மட்டும் கிளியர் பண்ணீட்டு போயிட்டே இருக்கணும்.

பரிசல்காரன் on June 10, 2010 at 9:22 AM said...

முதல் பத்தியின் உவமை உத்திகள் ரசிக்க வைத்தன சகா.

Mythili on June 10, 2010 at 9:56 AM said...

good, interesting.

கும்க்கி on June 10, 2010 at 10:02 AM said...

அய்யா.,

வாசித்தேன்.

அம்புட்டுதான்.

Anbu on June 10, 2010 at 10:03 AM said...

\\\ராசராசசோழன் said..

உங்க திறமைக்கு நீங்க இங்க இருக்கவேண்டிய ஆளு இல்ல...\\\\\

உங்க பதிவினை விட இந்த கமெண்ட் நல்லா இருக்கு அண்ணே....

கார்க்கி on June 10, 2010 at 11:01 AM said...

சுசி, அது முத கமெண்ட் போட்டவரால

வசந்த், அதான் ராதிகாவிடம் நான் பல்பு வாங்கியிருக்கேனே???

ரகு, அபப்டியெல்லாம் இல்ல பாஸ். வி.தா.வ ரொம்ப பிடிச்ச பாட்டுன்னு எழுதினேனே.. டேக்ஸீ டேக்ஸீ மை ஆல் டைம் ஃபேவரிட் ஆயாச்சு.. ரகுமான் பிடிக்காதுன்னு சொல்ல முடியுமா?

@பிரதீபா, உஙக்ளால டேமேஜ் பண்ண முடியலன்னா விட்டுடுங்க. இப்படி அவுட்சோர்சிங் எல்லாம் வேண்டாமே :)

ராசராசசோழன், ஏன் சார்? இதுல ஹவ் மெனி உள்குத்து????

டாரு, ஹிஹிஹிஹி

l.k, பல்பு வாங்கியபின் இன்னும் இருக்குமா பாஸ்??

பாலவாசகன், ஆம்

நாய்க்குட்டி, உண்மைதான்

மகேஷ், நல்லா இருப்பா நல்லா இரு

தராசண்ணே, உங்க கமெண்ட்ட பார்த்தா ஆதியண்னணே விழுந்து விழுந்து சிரிப்பார். அபப்டியே அது போன வாரம், இல்லைன்னா அது காலைல, நான் சொல்ரது மாலைலன்னு ஏதாவ்து ஒரு பிட்ட சேர்த்து சொல்லுங்க :)

நன்றி பரிசல். பவுண்டரி என்றாலும் யுசுஃபின் ஷாட் டாப் எட்ஜ். கிலாசிக் கிடையாது என்றும் எடுத்துக்கலாம் :)

நன்றி மைதிலி

கும்க்கி, அது போதுமே :)

அன்பு, சிங்கம் ஹிட் ஆயாச்சுன்னு நக்கலா? :)

அமுதா கிருஷ்ணா on June 10, 2010 at 11:14 AM said...

வலையுலக நன்மைகள் 100% கரெக்ட்..தோழியை அறிமுகப்படுத்த முடியுமா?

Vidhoosh(விதூஷ்) on June 10, 2010 at 11:41 AM said...

//5) அலுவலகத்தில் வேலைப்பளுவில் இருக்கும்போது, ///

இங்க ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப் போச்சு இல்ல.

அலுவலக"மே" அப்படீன்னு இல்ல வரணும்.

Vidhoosh(விதூஷ்) on June 10, 2010 at 11:41 AM said...

நேத்தி பதிவும் நல்லா இருந்தது.

Vidhoosh(விதூஷ்) on June 10, 2010 at 11:43 AM said...

அதுக்கும் முந்தின நாள் பதிவுல புது மாப்ளை ரியாக்ஷன் :)))) ROTFL

Karthik on June 10, 2010 at 12:00 PM said...

ம்ஹூம். ராவணன் பாட்டு தொடர்ந்து கேட்டதுல எனக்கு ரொம்ப பிடிக்குது.

Anbu on June 10, 2010 at 1:03 PM said...

\\\அன்பு, சிங்கம் ஹிட் ஆயாச்சுன்னு நக்கலா? :)\\

எங்களுக்கு எப்போதுமே ஹிட்டுதான் அண்ணே...

ராவணன் கெடாக்கறி பாட்டு ஹெட்போனில் எனக்காக ஒரேஒரு முறை கேட்டுப்பாருங்க..

Anbu on June 10, 2010 at 1:03 PM said...

\\\\ Karthik said...

ம்ஹூம். ராவணன் பாட்டு தொடர்ந்து கேட்டதுல எனக்கு ரொம்ப பிடிக்குது.\\\\

Same blood thala...

Maduraimalli on June 10, 2010 at 5:27 PM said...

Saga, ithu unmai thaana?

thatstamil.oneindia.in/movies/heroes/2010/06/10-tamil-actor-vijay-exhibitors-flop-movies-sura.html

மாரி-முத்து on June 10, 2010 at 6:13 PM said...

//5) அலுவலகத்தில் வேலைப்பளுவில் இருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் வேலை செய்வதாக பாவ்லா காட்டியபடியே ரிலாக்ஸ் செய்யலாம்//

எப்பிடித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ..

Kafil on June 10, 2010 at 7:05 PM said...

akramam

 

all rights reserved to www.karkibava.com