Jun 30, 2010

காதல் சொல்ல வருகிறார்கள்

32 கருத்துக்குத்து

 

காதல் சொல்ல வந்தேன் 

யுவனும் – நா.முத்துக்குமாரும் இணைவது புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு முறை சேரும்போது இசையில் ஏதாவது புதியதாய் இருக்கும். செல்வராகவன், லிங்குசாமி என ஜாம்பவான்கள் வரிசையில் பூபதி பாண்டியன் இவர்களோடு சேர்கிறார். அவரின் திருவிளையாடல் ஆரம்பம் எனக்கு மிகவும் பிடித்த படம். ஆனால் பாடல் காட்சியமைப்பில் சொதப்புவார். இந்த முறை ரெக்கார்டிங் ஸ்டுடியோ பக்கம் வந்தாரா எனத் தெரியவில்லை. யுவனும், முத்துவும் முழு சுதந்திரத்தோடு செய்தது போல் வந்திருக்கிறது பாடலெல்லாம். இயக்குனர் இருவரிடமும் ஒன்றே ஒன்றுதான் சொல்லியிருக்ககூடும்.

“யுவன்.. கிடார், கீ போர்டு, கிலாரினெட், புல்லாங்குழல், உடுக்கைன்னு எந்த நோட்ஸ் வேண்டும்ன்னா போடுங்க. கூடவே காதல் நோட்ஸும் எல்லாப் பாடலிலும் இருக்கணும்”.

“முத்து. உயிரெழுத்தோ. மெய்யெழுத்தோ.. அதனூடே காதெலெழுத்தும் இருக்கணும்”

காதல் சொல்ல வந்தேன் என காதல் சொல்ல வந்திருக்கிறார்கள். காதலை சொல்லியும் இருக்கிறார்கள். சமீபத்தில் என்னைக் கவர்ந்த மிக சிறந்த ஆல்பத்தைப் பற்றி இந்தப் பதிவு. இதை யுவன் இசை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Untitled

1) ஒரு வானவில்லின் -   ‍ உதித் நாரயாணன்

ட்ரம்ப்பெட் தெரியுமா? தெனாலியில் ஓ ஜாயே என்று அதில் வாசிக்கும்போது ஆடாமல் இருக்க முடியுமா? பெரும்பாலான ஓப்பனிங் குத்தில் ட்ரம்ப்பெட் அல்லது கிளாரினெட் இருக்கும். இந்த காதல் பாட்டிலும் ட்ரம்ப்பெட் ஆதிக்கம் என்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள். செம்மொழி மாநாட்டை ஆதரிப்பதற்கும் உதித் நாராயண் குரலை ரசிப்பதற்கும் ஏதும் ஸ்நான பிராப்தி இருக்கக் கூடாதென வேண்டிக் கொள்கிறேன். வழக்கம் போல மிகச் சரியாக உச்சரிப்பை தவறாகத்தான் செய்கிறார். பருவாயில்லை. நல்லாத்தான் இருக்கு.

குடைகள் இருந்துமே மழையில் நனைவது காதல் வந்த பின் தானே

நேற்று வரையில் நான் காற்று வீசினால் நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும் நெருப்பில் எரிந்ததே இல்லை

காதல் வந்தவனின் நிலையை விவரிப்பது முத்துக்குமாருக்கு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிடுவது போலத்தான். வெளுத்து வாங்குகிறார். என்னோட ஃபேவரிட் பாட்டு இப்போதைக்கு இதுதான்.

2) அன்புள்ள சந்தியா  - கார்த்திக்

ஆரம்பத்தைக் கேட்டு 90களின் தேவா பாட்டு போல இருப்பதாகத்தான் முதலில் தோன்றும். எனக்குத் தோன்றியது. மென்சோகம். குறிப்பாக சொல்லப் போனால “வெண்மேகம் பெண்ணாக உருவானதோ” வகையை சேர்ந்தது. கார்த்திக்கின் குரலில் இன்னும் இனிமை. இன்னும் கொஞ்சம் சோகம். கேட்க கேட்க மெல்ல மனதை பிசைகிறது.

தூறல் வந்தால் கோலங்கள் அழியும் காலம் போனால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே

அடி கோவில் மூடினால் கூட கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை..

தாயைக்கண்டால் தன்னாலே ஓடும்.. பிள்ளைப்போல என் காதல் ஆகும்

என்றோ யாரோ உன் கையைத் தொடுவான்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே அது நானாகக் கூடாதா?

முத்துக்குமாரை நம்பி பாட்டெடுக்கலாம்.. இனி படமே எடுப்பார்கள் போல.

3) என்ன என்ன ஆகிறேன் - விஜய் யேசுதாஸ்

யுவனின் ஆல்பத்தில் இவர் தொடர்ந்து வருகிறார். கலக்குகிறார். காதல் கொண்டேனில் “காதல் காதல்”, பின் சண்டக்கோழியில் “தாவணிப் போட்ட தீபாவளி” என இந்த கூட்டணியின் வெற்றிப் பட்டியல் நீளமானது. இது இன்னொரு எண்ட்ரீ. கேட்டுக்கேட்டு சலித்த பீட்டோடுதான் தொடங்குகிறது. மிக சாவகாசமாகத்தான் பரிச்சயம் ஆகிறது. மற்ற பாடல்களின் ஆதிக்கத்தில் காணாமல் போனாலும், மெலடி காதலர்களால் காப்பற்றப்படக்கூடும். எடுத்து சொல்லுமளவுக்கு வரிகள் எதுவும் நினைவிலில்லை. ஆனால் எல்லா வரிகளும் பாடலின் தொனிக்கு ஏற்றது போன்றே ஒலிக்கிறது.

4) ஓ ஷாலா -  யுவன் (பாடல் ‍ சாரதி)

போகாதே போகாதே, ஒரு கல் என சோக கீதம் மட்டுமே வாசித்து வந்த யுவனின் பாடகர் வாழ்க்கையில் ”என் காதல் சொல்ல தேவையில்லை” என வசந்தம் வரவழைத்தவர் முத்துக்குமார் & லிங்குசாமி. இந்த முறை இன்னும் கொஞ்சம் குஷியோடு இறங்கிவிட்டார். இரண்டாவது இண்டெர்லியுடில் வரும் கிடார் ரசிக்க வைக்கிறது. இறுதி வரிகளில் பீட்டைக் கூட்டி கோட்டை கட்டுகிறார் யுவன் .

முதல் தூறல் அது காயவே ஜென்மம் நூறு கோடி ஆகுமே
மறுத்துறல் மதியானமே.. நியாயமா?

தலைக்கோதி அவள் சாப்பிட.. மேஜைக் காகமே ஆகிறேன்
சிதறாதோ ஒரு சாதமே ஏங்கினேன்

அழகான ஒரு ஊர்வலம் நீயும் நானும் சேர்ந்து போவதேன்?
பேருந்தே குலசாமியாய் ஆனதே

5) சாமி வருகுது - சிதம்பரம் சிவக்குமார்

கோக் ஜில்லுன்னு இருக்குன்னு கூட வெந்நீர் சேர்த்ததுண்டா நீங்கள்? சாம்பாரில் காரம் அதிகம்ன்னு சர்க்கரை சேர்த்துப்பிங்களா? இது போன்ற வித்தியாசமான காக்டெயில் தான் இந்தப் பாட்டு. அட்றா சக்கைன்னுதான் சொல்ல தோணுது. சூப்பர் பக்தி மெட்டு. உடுக்கை சத்தம் இன்னும் காதுல ஒலிக்குது. இந்த மாதிரி பாட்டு ஒண்ணும் புதுசு இல்ல. ஆனா மேட்டர் புதுசு. ஒரு ரெண்டு வரி சேம்பிள் பாருங்க.

சாமி வருகுது காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்  கொடுக்க வருகுது

நீ கூழு ஊத்தி கொண்டாட காலம் வருகுது

ஜோதி வருகுது காதல் ஜோதி வருகுது
அவ என்னோட பாதியின்னு சேதி வருகுது.

   ரொம்ப சாதாரணமான மெட்டு. அதிகம் மெனக்கெடாத கம்போசிங். அலட்டிக்காம, சங்கதி இல்லாம பாடகர் பாடுறாரு, இவந்தாண்டா கவிஞன்னு கொண்டாட வாய்ப்பில்லாத வரிகள். ஆனால் கேட்கும் போதே ஆனந்தமாய் இருக்கிறது. கொண்டாட்டமான மனநிலையில் கேட்கும்போது மனம் இன்னும் லயிக்கிறது. ஒரு சோதனை முயற்சி. எல்லோருக்கும் பிடிக்கும்ன்னு சொல்ல முடியாது. காட்சிப்படுத்தலில் கவனம் தேவை.

மொத்தத்தில் காதல் கலவைதான் ”காதல் சொல்ல வந்தேன்.” காதலையும், இசையையும்  காதலிப்பவர்கள் தாராளமாக 100ருபாய் தந்து இசைத்தட்டு வாங்கலாம்.

_______________________________________________________________________________

படத்தைப் பற்றி:

Kadhal_Solla_Vandhen_movie_stills_01   வின்னர் ”கைப்புள்ள” என்ற கேரக்டரின் சிற்பியே பூபதி பாண்டியன் என்று சொல்வார்கள். இவரின் படங்களில் காமெடி சற்று தூக்கலாகவே இருக்கும். இதிலும் காதலும், காமெடியும் கலந்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் ஆரம்பித்த புதிதில் “ஜோ” என்று ஒருவர் வந்தார். பின் காணாமல் போனார். லயோலா கல்லூரி மாணவர் என்று அறிந்து அவரைத் தேடியது ஒரு கதை. எனக்கு மிகவும் பிடித்தவர். ஜோ. அவர்தான் படத்தின் நாயகன் என்று போஸ்டரைப் பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன். இதில் இருக்கும் அனைவருமே என் விருப்பத்திற்குரியவர்கள். போலவே, மேலே இருக்கும் படமும். எனக்கு ஏதேதோ ஞாபகப்படுத்துகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

Jun 28, 2010

நாய்க்கவிஞன் நாகராஜ்

35 கருத்துக்குத்து

 

   உங்களுக்கு நாய்க்கவிஞன் நாகராஜை தெரியாது. பரப்பரப்பான சென்னையின் பக்கா அடையாளமான வேளச்சேரியில் வாழும் ஒரு பரமாத்மா அவன். பார்ப்பதற்கு சினிமா நடிகனைப் போல் இருப்பான். தனுஷின் உடல், தல அஜித்தின் தல, சத்யராஜின் ஹேர் ஸ்டைல், சூர்யாவின் உயரம் என கலக்கல் காக்டெயில் அவன். லுங்கியும், கட்டம் போட்ட சட்டையும் அவனது சீருடை. அவ்வபோது லுங்கி காணாமல் போகுமென்றாலும் கவலைப்பட மாட்டான் நாகராஜ். வானத்தைப் போல அண்ணன் தம்பி காஸ்ட்யூம் போல சட்டையே முட்டி வரை இருக்கும். ஆனால் கேப்டனைப் போல லுங்கிக்குள் இன்சர்ட் செய்வது நாகராஜுக்கு அறவே பிடிக்காத செயல். இனி மிச்சமிருக்கும் கதையை நாம் நாய்க்கவிஞன் நாகராஜின் லேங்குவேஜிலே பார்க்கலாம்.

  வெல்டிங் குமாரு, பங்க் பிரபு, டெக் ரமேஷ் என அடைமொழி வச்சிக்கின்னு ஊரில சில பேரு டகால்ட்டி வேலை காட்டிட்டு இருந்தத பார்த்து ரியல் டெரர் நாகராஜுக்கு படா பேஜாரா ஆச்சு. நமக்குன்னு ஒரு வூடு இல்லாட்டியும் பர்வால்ல. பேருக்கு முன்னால் ஏதாச்சும் டைட்டில் வேணும்ன்னு முடிவு செஞ்சாரு. படிச்சா கூட பேருக்கு பின்னாலதான் போடுவாங்க. யாரையாவது அடிச்சாதான் பேருக்கு முன்னால டைட்டில் போடுவாங்கன்னு நாகராஜுக்கு தெரியாது. அவனா வச்சிக்கிட்ட டைட்டில்தான் நானூறு நாகராஜ். அதுக்கு அவன் சொன்ன ரீசன் எடுபடல. 100க்கே நம்ம நாகு நாட்டியம் ஆடுவான் என்பது ஊரறியும். ஆனா நூறு நாகராஜ்ன்னு பேரு வச்சா ரைமிங்கா வரல. அதனால் “நான் நூறு நாகராஜ்” என்பதை ஒண்ணா சேர்த்து நானூறு நாகராஜ்னு வச்சிக்கிட்டான்.

ஒரு நாள் இப்படித்தான் 100மில்லி அடிச்சிட்டு வந்தான் நாகு. மப்பு ஆள தூக்கவே உஷாரா ராஜேஷ்வரி தியேட்டருக்குள்ள நுழைஞ்சிட்டான் . அவன் கெட்ட நேரமோ என்னவோ அங்க டீ.ஆர் படம் ஓடிட்டு இருந்துச்சு. உயிருள்ள வரை உஷான்னு பேர் போட்டவுடனே நொட்டாங்கை பக்கம் திரும்பி அங்கிருந்தவனிடம் "நல்ல வேல.ஹீரோயின் பேரு மஞ்சுன்னு வைக்காம விட்டாங்க. இல்லன்னா படம் பேரு ம.... மஞ்சு" என்று நாகு முடிப்பதற்குள் நொட்டாங்கை ஆள் காணாமல் போயிட்டாரு.அவர காணோம்ன்னு உடனே நாகு டிசைட் பண்ணான். பேரு வச்ச அடுத்த நாளே தனக்கு ஒரு ரைட்டோ, லெஃப்ட்டோ தேடணும்ன்னு.வேற வழியில்லாமல் தனியா படம் பார்த்த நாகுக்கு ஏதோ சொல்வாங்களே. ஆங்.புல்லரிச்சுச்சு. அர்ஜென்ட்டா ஒரு லவ் பண்ணியே ஆகனுன்னு நாகுக்கு தோணுச்சு.  பாதில வெளிய வந்த டெரர் கண்ணுல பட்டது நம்ம பிங்கி. பிங்கிய பார்த்தவுடனே டீ.ஆர் கவிதை சொல்ல ஆரம்பிச்சான் நாகு.

நைட்டுல தூங்க தேவை பாய்
ஃபைட்டுல உடஞ்சு போகும் வாய்
இன்னொரு கடவுள் மாதிரிடா தாய்
பிங்கி.. நீ ரொம்ப அழகான நாய்..

ஹேய் டண்டணக்கா டணக்கு டக்கா..

என்று இல்லாத கேசத்தை கோதினான் நாகு. ஆமாங்க. பிங்கின்றது நாய். தன்னோட முதல் கவிதையே நாய பத்தி பாடினான் நாகு. அதுதான் அவனுக்கு பின்னால..இல்ல இல்ல முன்னால வரலாற்றுல பிளேஸ் வாங்கித் தந்துச்சு. நானூறு நாக்ராஜ் ஃப்ளாப் ஆனாலும் "நாய்க்கவிஞன் நாகராஜ்" செம ஹிட்ங்க. சன் டிவி ஹிட் மாதிரி இல்லாம செம ஹிட்.

   ஒரு வழியா பேரு வாங்கிட்டான் நாகு. நெக்ஸ்டு ஆக்டிவிட்டியா தனக்கு ரைட்டு ஹேண்ட் ஒருத்தன தேடினான். அந்த நேரத்துல கபால்ன்னு வந்து செட் ஆனவன் தான் பிலாக் ரவி. பார்க்க கருப்பா இருப்பானான்னு கேட்காதிங்க. நம்ம ரவி மூர் மார்கெட்டுல பழய பொஸ்தகம் வித்துட்டு இருந்தவன். அதுல ஃபாரின் லிட்ரேச்சர் எல்லாம் கிடக்கும்.அது என்ன கண்ட்ரி? துண்டு துண்டா போச்சே. நம்ம ஜெயம் ரவி கூட லட்சுமிராயை டாவடிப்பாரே. ரஷ்யா மாமு. அந்த நாட்டு பொஸ்தகம் எல்லாம் நம்ம ரவிக்கு அத்துப்படி. தலைப்பு மட்டும்தான். அப்படி ஒரு பொஸ்தகம் தான் வெண்ணிற இரவுகள். இதென்னடா டகால்ட்டியா கீது. நைட்டு எப்படி வெள‌ளையாகும்ன்னு நம்ம ரவி கண்ணு முழிச்சு பார்த்தாரு. நைட்டு கருப்பாவே போச்சு. மறுநாள் பகல்ல கண்ணு டப்ஸாகி பகல் கருப்பாயிடுச்சு ரவிக்கு. "ரவின்னா சூரியன். சூரியன்னா பகல். அதனால் நீ இனிமேல் பிலாக் ரவி" என்று அழைக்கப்படுவாய் என அவன் கடைக்கு ரெகுலரா பொஸ்தகம் வாங்குற மோரு ஒருத்தரு..டங் ஸ்லிப்.. சார் ஒருத்தரு ரவிக்கு நேம் வச்சிட்டாரு. அன்னையிலிருந்து இன்னைக்கு வரை சாதா ரவி "பிலாக் ரவி" னு எல்லோரும் காலிங்.

நாகுவும், ரவியும் படா தோஸ்த் ஆயிட்டாங்க. அதுல குஜால் மேட்டர் என்னன்னா ரெண்டு பேரும் சண்முகத்துக்கு.அட அதில்லப்பா..ஆங் சமூகத்துக்கு குட் செய்ய ஸ்டார்ட் பண்ணாங்க‌. ஊருல இருந்த பெர்சுங்க எல்லாம் எவ்ளோ சொல்லிப் பார்த்துச்சுங்க. முடியவே முடியாது. செஞ்சிதான்  தீருவோம்ன்னு அடம் புடிச்சான் நாகு.செஞ்சி இல்லன்னாலும் திருவண்ணாமலையாவது செய்வோம்ன்னு கூடவே சொன்னான் பிலாக் ரவி. ஃபர்ஸ்ட் ஜாபா கூத்து போடுற சரவணன் மேல பிராது கொடுத்தான் நாகு. ரவி அவன் பார்ட்டுக்கு ராமாயண‌ நாடகம் போட்ட மணி மேல பிராது கொடுத்தான். இதுல நெக்ஸ்ட் காமெடி என்னன்னா அவன் இவன் கிட்ட பிராது கொடுத்தான். இவன் அவன் கிட்ட பிராது கொடுத்தான். என்னங்டான்னு ஓரு பெருசு கேட்டப்ப நாகு சொன்னான் " மாடுக்கு புல்லுக்கட்டுதான் புடிக்கும். பசங்களுக்கு கிரிக்கெட்டுதான் புடிக்கும்.ஆனா ரவிக்கு ஜாக்கெட்டுதான் புடிக்கும். அவ்ளோ நல்லவன்". கண்ணுல கலங்கி காதுல இருந்தெல்லாம் தண்ணியா கொட்டுச்சு ரவிக்கு. பதிலுக்கு அவன் சொரியத் தொடங்கினான் "நீங்கலாம் ஃபிகர்தான் சுகர்ன்னு கவித பாடறீங்க. நாகுதான் வாய் இருக்கும் வரை நாய பத்தி கவிதை பாடுவேன்னு சொல்றான். அவந்தான் நல்லவன். அதான் அவன் கிட்ட பிராது கொடுத்தேன்"

ரெண்டு பேரும் தோள்ள கைப்போட்டுக்குன்னு அடுத்த பிராதுக்கு வழித்தேடி போனாங்க. காணாம போன எஸ்.ஏ.ராஜ்குமார் வந்தா "லாலாலா"ன்னு ட்யூனாவது போடுவாரு. நாம என்ன செய்றது? இந்த டுபாக்கூர் ஃப்ரெண்ட்ஸ் அடுத்து என்ன காமெடி செய்றாங்கன்னு பார்ப்போம். இப்ப அல்லாரும் வூட்டுக்கு போங்க.

Jun 27, 2010

தோழி = உலக அழகி

31 கருத்துக்குத்து

 

உன் மடியில் இருக்கும்போதே சாக வேண்டும் என்றேன் தோழியிடம். ஏன்டா செல்லம் என்பது போல் பார்த்தாள். செத்து சொர்க்கம் போவதை விட சொர்க்கத்தில் இருக்கும்போதே சாவது மேல் இல்லையா?

_____________________________________________________________________________

பச்சை இலையை அரைச்சு வச்சா எப்படி சிவப்பாகும் என்ற‌படி மருதாணி இலையைப் பறித்தாள் தோழி.அவள் ஸ்பரிசம் பட்டவுடன் சிவந்தது மருதாணி இலை, வெட்கப்படும் அவள் கன்னங்களைப் போல.

_____________________________________________________________________________

எத்தனை முறை சொன்னாலும் நம்ப மறுக்கிறாள் தோழி. அவளுடன் பேசும்பொழுது மட்டும் என் அலைபேசியின் சார்ஜ் ஏறிக்கொண்டுதானிருக்கும். இறங்குவதேயில்லை. என்னைப் போல.

___________________________________________________________________________

யாருமில்லா (எங்களைத் தவிர‌) கடற்கரையில் தோழியும் நானும் அமர்ந்திருந்தோம். அலைகள் காலைத் தொட வருவதும், இவள் நகர்ந்துக் கொள்வதுமாய நேரம் கழித்தோம். “இவ்ளோ தண்ணியும் குடிநீரா மாத்திட்டா பஞ்சமேயிருக்காது இல்ல” என்றாள். "ம்ம்.நீதான் ஒத்துக்க மாட்றியே" என்றேன். புரியாமல் முழிக்கிறாள் என் பிரியசகி.

____________________________________________________________________________

தோழியைத் தூக்கிப் பார்த்து கொஞ்சம் குண்டாயிட்ட மாதிரி இருக்கே என்றேன். நான் உன்னை தூக்கவா என்றாள். முடியாது என்று சிரித்து தொலைத்துவிட்டேன்.மழைக்கால வானம் போல முகம் இருண்டது. தூறலைப் போல கண்களில் கண்ணீர் முட்ட தோழி சொன்னாள் "மனசுல சுமக்கிறவளுக்கு கையில சுமக்க முடியாதா?”

_____________________________________________________________________________

  உலக அழகி ரொம்ப அழகா இருக்காங்களாம். இராவணன் போலாம் வறியா என்றாள் தோழி.

ஒரு
உலக அழகியே
உலக அழகியை ரசிக்கிறது
அடடே கார்க்கி

 முக்கிய குறிப்பு:   கார்க்கி = !

Jun 25, 2010

புன்னகையோ..மவ்வல் மவ்வல்

22 கருத்துக்குத்து

 

பாஸ்கர்... என் நண்பன்.. கண்டுபுடிச்சிட்டிங்களா? ஆம்.அவனும் விஜய் ரசிகன் தான். தலைவர் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கப் போறேன். ஒரு டயலாக் சொல்லு மச்சி என்றான். ரூம் போடாமல், தலையை சொறியாமல், மோட்டுவளையைப் பார்க்காமல், மூளையை கசக்காமல் ஒரு டயலாக் சொன்னேன்..

தலைவா..

ஆஸ்கர் இல்லைன்னா என்ன..
பாஸ்கர்.. நான் இருக்கிறேன்

நோ நோ நோ. அப்ப‌டியெல்லாம் திட்டக் கூடாது. நான் பாவம்.

_________________________________________________________________________________

வெகுகவனமாய் என்னைத் தொடர்கிறது
அயரும் பொழுதொன்றிற்காக
மிகக் கவனமாய் தொடர்கிறது
தடுமாறப்போகும் அந் நொடிக்காக
அதி நெருக்கமாய் தொடர்கிறது
அதைவிட வெகுகவனமாய்த்தான் நான்
ஆனாலும்
ஓர் அதிகாலை நேரத் தோட்டத்தில்
உதிர்ந்திருந்த மலரொன்றை
எடுத்து மண் தட்டி நுகரும் தருணத்தில்
என்னைத் தழுவிச் சூழ்ந்தது
தீதும் நன்றும்

சகா.இப்படியெல்லாம் நீ எழுதிவியா என்றுதான் எல்லோரும் கேட்டார்கள். எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறாங்க‌ளோ? ஆம். அதை எழுதியது நானல்ல. நர்சிம். பிளாகுல எழுதலனாலும் தினமும் ஏதாவது எழுதி வைங்க சகா. இல்லன்னா டச் விட்டுப் போகுமென்றேன். எழுத்து என்பது நீச்சல் போல எனக்கு. அதெல்லாம் மறக்காது என்றார். சரிதான். அவருக்கு நீச்சல் அடிக்கத் தெரியாது போல என்று சொல்லிவிட்டு வைத்தேன். சொன்னது காதில் விழுந்துவிட்டது போல். திரும்ப அழைத்து " என்ன சொன்ன சகா" என்றார். "இல்ல.உண்மையா ஏதாவது எழுதினிங்கன்னா மெயில் பண்ணுங்க" என்றேன். நான் மட்டும்தானே படிக்கப் போறேன் என நினைத்து பயபுள்ள விவரமான கவிதையை அனுப்பினார். நேசன் என்பவர் சரியா கண்டுபிடித்திருந்தார். இந்த மாதிரி ஆளுங்க ஆசைப்பட்டா எழுதலாம் இல்ல என்றேன். தெளிவாக இருக்கிறார். பிளாக் வேண்டாமென. விளங்கதாவர். நான் அடுத்த மொக்கையைப் போடறேன். வாங்க‌

______________________________________________________________________________

சரவண பவனுக்கு நீண்ட நாள் கழித்து சென்றிருந்தேன். சர்வரிடம் பாசுந்தி என்றேன். இல்லை என்றார். அப்போ பாசு லேதுன்னு செப்பண்டி என்றேன். முறைத்துக் கொண்டே சென்றார். பின் சாம்பார் வடைக்கு பதில் போண்டாவை எடுத்து வந்தார்.வடைதானே கேட்டேன் என்றேன்.  அதற்கும் ஒரு முறை முறைத்துக் கொண்டே சென்றார். கடைசியாக சாத்துக்குடி ஜூஸ் சொன்னான் என் நண்பன். ரொம்ப லேட்டாக ”சாத்துக்குடி” என்று டேபிளில் டொக்கென்று வைத்தார் சர்வர். நண்பனிடம் ”பாத்துக்குடி” என்றேன். இந்த முறை சிரித்துக் கொண்டே சென்றார் சர்வர். அவருடைய பாஸை சொன்னதாக நினைத்தாரோ என்னவோ?_____________________________________________________________________________

கணிணியும், இணையமும் தரும் வாய்ப்புகள் ஆச்சரிய‌மானது என்பதை நாமறிவோம். ஆனால் அதை முழுமையாக நாம் பயன்படுத்துகிறோமா?இன்னமும் சஞ்சிகையில் எழுதுவது போலதான் 99% வலைப்பூக்கள் இருப்பதாக கருதுகிறேன். அகராதி என்பதை நாமறிவோம். இணைய அகராதி என்றாலும் பெரும்பாலும் அது அர்த்தத்தை மட்டும் தருவதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால் நீங்கள் மதன் கார்க்கி & குழு உருவாக்கிய அகராதி கண்டதுண்டா? ஒரு வார்த்தையை கொடுத்தால் அதன் தமிழ் அர்த்தம்,ஆங்கில அர்த்தம், வகை, வார்த்தைப் பயன்பாடு, ஒலியோட்டம்.. இவை மட்டுமல்லாமல் அந்த வார்த்தை எந்தெந்த திருக்குறள்களில் எல்லாம் வருகிறதோ அந்த குறள்கள், பாரதியார் பாடல்கள்... இன்னும் இருக்கிறது.. வருகின்ற முடிவுகளை பிளாகர், டிவிட்டர் மற்றும் இன்னபிற சமூகத்தளஙக்ளில் பகிர்ந்துக் கொள்ள ஏதுவான சுட்டிகள்.. இன்னும் சேர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். நமக்கு எந்த வார்த்தைத் தேவையோ அதை தமிழில்தான் கொடுக்க வேண்டுமென்றில்லை. ஆங்கிலத்திலும் டைப்பலாம். அகராதியின் சுட்டி இங்கே. பாராட்டுவோம் அவர்களை. அகராதியை பயன்படுத்துவோம்.

நான் "மவ்வல்" என்ற வார்த்தையை தேடினேன். இன்னும் சேர்க்கவில்லையாம் அவர்கள். ஹிஹிஹி

_________________________________________________________________________________

சென்ற வாரம் பாடலாசிரியர் முத்துக்குமார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எதிர்பார்த்தது போலவே எளிமையான மனிதராக இருந்தார். பேச்சில் கவிஞரைப் போல காட்டிக் கொள்ளவில்லை. பாடல் எழுதுவதை விடவும் இயக்குன‌ராகும் ஆர்வமே அவருக்கு அதிகமாக இருக்கிறது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். யார் விடுறா இப்போ? இன்னும் பல நல்லப் பாடல் வேணும் எங்களுக்கு என்றேன். அவரிடம் கேட்க வேண்டுமென வெகு நாட்களாக மனதில் இருந்தக் கேள்வியை கேட்க எப்படி மறந்து போனேன் என்று தெரியவில்லை.

"கடும் விஷத்தினை குடித்தாலும்
அடிகொஞ்ச நேரம் க‌ழித்தே உயிர் போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்..
காதல் என்றால் பெண்ணே..சித்ரவதைதான்"

உடனே உயிர் போய்விடும் என்றால் எப்படி சித்ரவதை ஆகும்? அடுத்த முறை கேட்டு வருகிறேன். அவர் எழுதியதிலே எனக்கு மிகவும் பிடித்த இரு வரிகள்

தென்னை மரமே தென்னை மரமே..
உடம்பில் வளையல்கள் ஏனோ.
திருமணம் உனக்குதானோ

"உன் கண்களிலே என் வயதறிந்தேன்"

Jun 24, 2010

NDTV – Hindu இணையத்தில் பார்க்கலாம்

7 கருத்துக்குத்து

 

நான், ஆதி, அப்துல்லா, கேபிள், வெண்பூ, நர்சிம் மற்றும் சில சில மாணவர்கள் பங்குபெற்ற உலக செம்மொழி மாநாடு குறித்த கலந்துரையாடலை இன்று மாலை 5.30க்கு இங்கே காணலாம்

நண்பர்கள் யாராவது இதை பதிவு செய்து அனுப்பினால் தன்யனாவேன்.

Jun 22, 2010

மொழி..தமிழ்மொழி..செம்மொழி..

30 கருத்துக்குத்து

 

முக்கிய செய்தி: NDTV – Hindu news channel இன்று காலை நடத்திய செம்மொழி மாநாடு குறித்த கலந்துரையாடல் இன்றும், நாளையும் மாலை 5.30 ஒளிப்பரப்பாகிறது. அதன் மறுஒளிபரப்பு அடுத்த நாள் காலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகும். இரண்டு கல்லூரி மாணவ,மாணவியும் கேபிள், அப்துல்லா, நர்சிம், ஆதி (எ) தாமிரா, வெண்பூவும் கலந்துக் கொண்டோம்.

 

wctc_t   

வழக்கறிஞருக்கும் வழக்குரைஞருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. முன்னவர் அது தொடர்புடைய அறிவு கொண்டவர். பின்னவர் வழக்காடும் உரிமம் பெற்றவர். நமது நீதிமன்றங்களில் ஒருவருக்காக இன்னொருவர் வழக்காட வேண்டுமென்றால் அவர் தன்னை வழக்குரைஞராக பார் கவுன்சலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதே போல மருத்துவர்களுக்கு என்றும் ஒரு அமைப்பு இருக்கிறது. செம்மொழி அந்தஸ்தும் அப்படித்தான். இவர்கள் அங்கீகரிக்காவிட்டால் தமிழ் செம்மொழி இல்லையா என்ற  கேள்விகள் கேட்பதில் அர்த்தம் இல்லை. சீனம், ஹீப்ரூ, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் வரிசையில் இப்போது தமிழும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமையவில்லையா?இதை நாம் கொண்டாடவிட்டாலும் குறைந்தபட்சம் அது குறித்து அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

மொழி:

மொழி என்பது இருவருக்கிடையே கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள மட்டும் உதவும் கருவியாகவே பலரால் கருதப்படுகிறது. மொழியால்தான் சிந்திக்கிறோம். சிந்தனைதான் நம்மை உருவாக்குகிறது.  ஒவ்வொரு மனிதனும் அவரவர் தாய்மொழியில்தான் சிறப்பாக சிந்திக்க முடியும். நாம் சிந்திக்கும் எந்தவொரு விதயமும் மற்ற மொழிகளுக்கு அதன் பின்னரே வடிவம் மாற்றப்படுகின்றன. இவையாவும் புரிந்துக் கொள்ள மறுத்து மொழியை வெறும் ஒரு கருவியாக பார்த்து மற்ற மொழியினை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த ரீதியில் யோசிப்பவர்கள் பிற மொழியையும் அப்படியே தான் நினைக்கக்கூடும். ஜீவனில்லாமல் மொழியை பேசுவதில் எந்த ஒரு முன்னேற்றமும் காண முடியாது. மொழி என்பது வெறும் எழுத்துக்களோ, சொற்களோ அல்ல. அது ஒரு இனத்தின், மரபின், மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. நமக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய அனுபவங்களின் தொகுப்புதான் மொழி. இதனால்தான் மொழி என்பது ஒரு இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு.

தமிழ்மொழி:

மேலே சொன்னவையாவும் தமிழ் மொழிக்கு மட்டுமே ஏற்புடையது அல்ல. அது எல்லா மொழிக்கும் பொதுவானது. தமிழ் என் தாய்மொழியாகையால் அது குறித்து நான் தெரிந்துக் கொள்ள வேண்டியது கடமையாகும். உலகின் தொன்மையான மொழிகளில் முக்கியமானது தமிழ். 3000 வருட  பழமையான மொழி என்று அறியப்படுகிறது.  நம் எல்லோருக்கும் தெரிந்த வரலாற்றுப்பூர்வமான திருக்குறளே 2000 வருட பழமையானது. நம் மொழியின் பெருமைகளை எடுத்துக்காட்டுவது சங்க இலக்கியங்கள். ஆனால் அவை கூட நம்மிடம் இப்போது முழுமையாக இல்லை. நம்மிடம் முழுமையாக இருக்கும் சங்க இலக்கியங்கள்

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்.

எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

பத்துப்பாட்டு : திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.

பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.

“ - யுவகிருஷ்ணாவின் கட்டுரையிலிருந்து”

இன்னுமின்னும் ஏராளமான சிறப்புகளை முன்னிறுத்தி தமிழ் செம்மொழியென 2004ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நாம் எதையெதையோ நினைத்து பெருமைப்பட்டு கொள்ளும்போது நிச்சயம் நான் தமிழ் பேசுபவன் என்று பெருமைப்படுவதில் தவறேதும் இல்லை.அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் இன்று கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கிறது.

மாநாடு அவசியமா? :

மாநாடுகள், கருத்தரங்குகள் எல்லாம் எதனால் நடத்தப்படுகின்றன? அது தொடர்புடைய அறிஞர்கள், ஆர்வலர்கள் ஓரிடத்தில் ஒன்று திரண்டு அதுகுறித்து மேலும் ஆய்வு நடத்தவும்,அவர்களின் ஆய்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்ளவும். ஆகவே அந்த ஒரு மாநாடும், கருத்தரங்கும் மேலே சொன்ன விதயங்களுக்கு வாய்ப்பளித்தால் அவை வரவேற்கப்பட வேண்டியவையே. இந்த மாநாட்டில் வெளியாகவிருக்கும் ஒரு சிறப்பு மலர் பற்றி பார்ப்போம். அஜயன் பாலாவை பலர் அறிவோம். அவர் எழுதும் ஒரு புத்தகம் வெளியாகவிருக்கிறது. உ.வே சுவாமிநாதரைப் போல தமிழ் இலக்கியங்களை ஓலைச்சுவடியில் இருந்து காப்பாற்றி தந்த அறிஞர்கள் 120 பேரின் வாழ்க்கை வரலாறாக வெளியாகவிருக்கிறது இந்த நூல். இது ஒரு மாதிரிதான். இது போல ஏராளாமான நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் நமக்கு கிடைக்கும் என்னும்போது மாநாட்டை வரவேற்பதில் என்ன தவறிருக்க முடியும்?

அதற்கென ஒரு அமைப்பு இருக்கிறதே என்று கேட்கலாம். கடைசியாக 1995ல் நடைபெற்றது. அதன் பின் 15 வருடமாக எந்த ஒரு மாநாடும் நடைபெறவில்லை. அந்த மாநாடு நடந்த போது எனக்கு விவரம் தெரியவில்லை. குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது நடத்தி இருக்கலாமே? 15 வருடம் என்பது பெரிய இடைவெளியாக தெரியவில்லையா? இதன் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் ஆயிரமாயிரம் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட என் தாய்மொழிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டை ஆதரிக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. மாநாடு சிறப்பாக அமைய ஏதேனும் கருத்து சொல்லலாம். செய்யப்பட வேண்டியவைப் பற்றி பட்டியலிடலாம். அதை விட்டு மாநாடே புறந்தள்ள வேண்டியது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஈழம்:

இனத்தின் அடையாளம்தானே மொழி: ஒரு இனமே அழிக்கப்பட்டும், வதைக்கப்பட்டும் வரும் சூழலில் இது அவசியமா என்றதொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. ஈழத்தில் எஞ்சியிருக்கும் மக்களின் துயர் துடைக்க தேவையான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டே ஆக வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதையும் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டையும் இணைத்துப் பார்த்தல் என்பது சரியான பார்வையாக தெரியவில்லை. நமது கண்ணில் ஒரு கண் பழுதாகிவிட்டதே என்பதற்காக உண்பதை நாம் நிறுத்திவிடுகிறோமா? மற்ற பாகங்களும் செயல்பட சக்தி வேண்டுமே. ஈழம் ஒரு துயரமான நிகழ்வு என்பது உண்மைதான். ஆனால் அதற்காக மற்ற செயல்பாடுகளை நிறுத்துவதென்பது அறிவுப்பூர்மவமான செயலாகாது.

இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். இந்த மாநாட்டினால என்ன பயன் என்பதை நேரிடையாக கண்ட சம்பவம் ஒன்றுண்டு. என்னுடன் பணிபுரிந்த நண்பன் ஒருவன் கேட்டான் “எப்போடா தமிழ் செம்மொழியாச்சு”. தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதை உயிர்வாழும் ஓவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ளவேனும் இம்மாநாடு அவசியமாகிறது.

வாழ்க தமிழ்.

Jun 20, 2010

கவித..கவித..

26 கருத்துக்குத்து

 

மு.கு: தோழி கூட சண்டையா சகான்னு கேட்காதிங்க. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. :)

வேறொன்றும் அறியேன்

மழை பெய்து கொண்டிருக்கிறது
எதிர்வீட்டுப் படியில் நிற்கும்
அம்மணச் சிறுவன் அழுகிறான்
சிறுமியொருத்தி நனைந்த பாவாடையை
குனிந்து பிழிகிறாள் நனைந்துகொண்டே
வேகவாகனம் கத்திக்கப்பலாய்
தெரு நிறை தண்ணீரில் சுழலும் ஜவ்வுக்காகிதம்
தலையை ஆட்டி சிறகுலர்த்தும் பறவை
வில்லாய் வளையும் திண்ணைப் பூனை
விடைத்து நிற்கும் காதுகளோடு ஜிம்மி
மழை சத்தம் அதிகமாய்க் கேட்கிறது
விறுவிறுவென உள்ளே சென்று
எல்லாக் கதவுகளையும் அடைத்துகொண்டு
மசிஇருட்டுக் கூடத்தில் அமர்ந்திருக்கிறேன்
மழை பெய்து கொண்டிருக்கிறது
இன்னமும்...


****************************************************


பிறர் தர ...

வெகுகவனமாய் என்னைத் தொடர்கிறது
அயரும் பொழுதொன்றிற்காக
மிகக் கவனமாய் தொடர்கிறது
தடுமாறப்போகும் அந் நொடிக்காக
அதி நெருக்கமாய் தொடர்கிறது
அதைவிட வெகுகவனமாய்த்தான் நான்
ஆனாலும்
ஓர் அதிகாலை நேரத் தோட்டத்தில்
உதிர்ந்திருந்த மலரொன்றை
எடுத்து மண் தட்டி நுகரும் தருணத்தில்
என்னைத் தழுவிச் சூழ்ந்தது
தீதும் நன்றும்.

Jun 18, 2010

இன்னொரு 10

26 கருத்துக்குத்து

 

மண்டையை குழப்பும் 10 கேள்விகள்:

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, சோனியா என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

5)  பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது ஆணாதிக்கமா?

6) செம்மொழி மாநாட்டை நடத்துவதன் மூலம் கோவையை மதிமுக ஆக்குகிறதா தமிழக அரசு?அதவாது கோவையை “தலைகீழாக” மாற்றுகிறதா?

7) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

8) சூப்பர் சிங்கர் ஜூனியர் –2 பட்டம் வென்ற அல்கா, அஞ்சா நெஞ்சரிடம் வாக்கு சேகரிக்கும் பணியை அவுட்சோர்சிங் செய்திருப்பாரா?

9) வடிவேலும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

10) எதிர்பதிவே போட முடியாதபடி 9 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

Jun 17, 2010

நிலவில் தேனிலவு

36 கருத்துக்குத்து

 

பீச்சுக்கு போறேன் என்றவுடன் வேண்டாம் என்றாள் தோழி. சுனாமி வருவதாக சொல்லியிருக்கிறார்களாம். ச்சே எப்படித்தான் என் பிளான் கசிகிறதென்றே தெரியவில்லை

__________________________________________________________________________________

கார கொழம்பு சாப்பிட்டேன் என்றாள் தோழி. உதடு படாமால் சாப்ட்டியா என்றேன். ஏன் என்கிறாள் வழக்கம் போல தெரியவில்லை என்பதை குறிக்கும் அப்பாவி முகத்துடன்.  உதடு பட்டா ஸ்வீட் கொழம்பு ஆகிடாதா என்றவுடன் பாய்ந்து வருகிறாள் சர்க்கரை நோய் தருவதற்கு. அக்கறையான காதலிதான் கேட்டேன் கடவுளிடம். சர்க்கரையால் ஆனவளை தந்துவிட்டார்.

_________________________________________________________________________________

100 ரோஜா எடுத்துக்கோ. ஒரு ஊசியும் நூலும். மாலையா கோர்த்துக்கோ. கண்ணாடி முன்னால போ. இதுதான்  குரங்கு கையில் பூமாலை என்று சிரித்தாள் தோழி. அழைப்பை துண்டித்துவிட்டு அவள் வீட்டிற்கே சென்று அவளை தூக்கிக் கொண்டு சொன்னேன். "இத விட்டு பூவாம்.நூலாம். வேற வேலையில்ல". அதிசயமாய் புரிந்துக்கொண்ட‌ தோழி குரங்காய் மாறிக் கொண்டிருந்தாள்.

_________________________________________________________________________________

அவளும் உன் தோழிதானே? இவளுமா என்று சண்டையிழுப்பதே தோழியின் வேலை. நான் என்ன மன்மதனா? ஏழைக்கேத்த எள்ளுருண்டை நீதாண்டா செல்லம் என்று சமாளிப்பேன்.சரியென்று சென்றவள் திரும்ப வந்து சொன்னாள் 'நான் என்ன எள்ளுருண்டையா?. நீ பில்கேட்ஸ் விட பணக்காரண்டா". ம்ம் என்ற நான் "அப்ப நீ உலக உருண்டையா?" என்றேன். டம்டிப்டுமால்டங்க்

_________________________________________________________________________________

வார்த்தைகள் ஏதாவதொன்றை தவறாக பேசினால் உதட்டைக் கடித்துக் கொள்வது தோழியின் வழக்கம். அது தண்டனை என்று சொல்லிக் கொள்வாள். ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். தப்ப மட்டும் நீ செய். தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று

_________________________________________________________________________________

நான் எழுதிய கவிதைகளை படித்த தோழி சொன்னாள் "இந்த உலகத்திலே லூசு பசங்கதான் இப்படி நல்ல நல்ல கவிதையெல்லாம் எழுதுவாங்க". “உங்கப்பன விடவா பெரிய லூசு இருக்காங்க உலகத்துல” என்றேன். சண்டைக்கு வருகிறாள் விஷயம் புரியாத என் செல்ல கோபக்காரி

_________________________________________________________________________________

நிலாவுக்கு போக டிராவல் ஏஜென்ட்டெல்லாம் இருக்காங்களாம். நம்ம ஹனிமூனுக்கு அங்க போகலாமா என்கிறாள் பைத்தியக்காரி. நான் நிலவில் கொண்டாடுபவனல்ல, நிலவோடே தேனிலவு கொண்டாட போகிறவன் என்பதை புரிய வைக்க வேண்டும் அவளுக்கு.

Jun 15, 2010

இன்னும் பெயரிடவில்லை

25 கருத்துக்குத்து

 

   செகந்திராபாத் ரயில்வே நிலைய முதலாவது பிளாட்ஃபாரத்திற்கு சார்மினர் எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிடங்களில் வந்து சேரும் என்று தெலுங்கில் சொன்னார்கள். ப்ளாட்ஃபாரத்தில் இருந்த நான் தண்டவாளத்தில் பாதுகாப்பாக இறங்கிவிடலாமா என்று யோசிக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன். 18, 19 வயதிருக்கும். தமன்னாவை பார்த்து ”ஏங்க்கா இவ்ளோ குண்டாயிட்டிங்க” என்று கேட்க அவளால் முடியும். குழந்தையின் சிணுங்கல் மட்டுமே இருந்தது. குமரியின் வளங்களை காண முடியவில்லை.  அவள் சிரிப்பில் என்னை தொலைக்க எத்தனித்த நேரம், அவளை நோக்கி சிலர் வந்தார்கள். வந்ததில் நால்வர் பெண்டிர், இருவர் ஆண்கள் என்பதை கண்டறிய சற்று சிரமப்பட்டுத்தான் போனேன்.

கல்லூரி படிப்பு முடிந்து ஊருக்கு திரும்புவது போன்று தெரிந்தது. அழைத்துச் செல்ல அவளின் அப்பாவும், அம்மாவும் வந்திருந்தார்கள். அம்மா முன்னரே ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டார். இடம் பிடித்திருப்பார் என நினைக்கிறேன். ஏறும்போது அவர் கையில் கைக்குட்டையை காணவில்லை. அப்பா மட்டும் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும். மற்றவர்கள் சிரிப்பு அவள் சிரிப்பு போல் இல்லை. அது சரி. நமக்கு தேவதைதானே முக்கியம்? அவளை மறைப்பது போலவே அந்த அறுவரும் நின்றுக் கொண்டிருந்தார்கள். 360 டிகிரியும் சுற்றி வந்தேன்.  இராட்சச நண்பர்கள். நான் பார்க்க முடியவில்லை என்பதை விட அவளுக்கு காற்றாவது வருமா என்ற சந்தேகமே என்னை கஷ்டப்படுத்தியது. தேவதைகளுக்கு வேர்க்குமா என்று கண்டறிய வேண்டும்.

அந்த இரண்டு பேரில் ஒருவன் நன்றாக இருந்தான். அவனது சிரிப்பும் கியூட்டாக இருந்தது. அவன் தான் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தான். அவளும் அவன் சொல்ல ஆரம்பிக்கும்போதே சிரிக்கத் தொடங்குவதை சரியாக செய்து கொண்டிருந்தாள். எல்லாம் ரிப்பீட் ஜோக் போல என நினைத்துக் கொண்டேன். அவள் அவனின் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள். எப்படியும் அவனை கைவிட்டு என்னை நோக்கித்தானே வர வேண்டும்?

ஆம். நேரமாகி விட்டதால் ரயிலில் ஏறி சன்னலோரம் அமர்ந்தேன். எனக்கு எதிர் இருக்கையில் தேவதையின் அம்மா. அய். மீண்டும் அவர்களை நோக்கி பார்வையை திருப்பினேன். முதலில் அந்த க்யூட் பையன் தான் அழுவதற்கு ஆரம்பித்தான். அவனுக்கு மட்டும்தான் ரயில் கிளம்பும் நேரம் தெரிந்திருக்க வேண்டும். தேவதை அவனது கைகளை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவன் அழுகை அதிகமாக தேவதை அவனை இறுக அணைத்துக் கொண்டாள். நட்பில் நெகிழ்ந்து போய்விட்ட தேவதையைப் பார்த்து சிரித்தேன். கொடுத்து வைத்தவள். வைத்தவன். ஒருவர் பின் ஒருவராக கலைந்தார்கள். ஆளுக்கொரு திசையில் அழுகை. ஒவ்வொருவராக தேடித்தேடி அணைத்து ஆறுதல் சொன்னாள் தேவதை. விக்ரமன் பட லாலாலா எனக்கு மட்டும் கேட்டது.

”கன்னி மலர்கள் கூட படிக்கும். காளை மனதில் சாரல் அடிக்கும். கல்லூரி சாலை எங்கள் வேடந்தாங்கல்”. சரியான்தான்யா சொல்லியிருக்கார் வாலி என்று நினைத்துக் கொண்டேன். அவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்ட நாட்களாகத்தான் இருந்திருக்கும். ரயில் பாட ஆரம்பித்தது. 12 கண்களும் அப்போதுதான் ஒரே திசையை பார்த்தன. ரயிலை நோக்கி. தேவதையின் அப்பா ரயிலேறிக் கொண்டார். தேவதை இன்னும் ஏறவில்லை. இன்னொரு பெண் அவளை ஆரத்தழுவிக் கொண்டாள். இன்னொருத்தி அவர்களை தேற்றி தேவதையை ரயிலேற சொன்னாள். அந்த இரு பையன்களும் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன். ரயிலோடு ஓடி வந்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் மட்டும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நின்று விட க்யூட் ப்ளாட்ஃபார்ம் முடியும்வரை ஓடி வந்தான். அழுது கொண்டேதான். முடிவில் நின்றுவிட்டான். ரயில் தொடர்ந்து சென்றுக் கொண்டேயிருந்தது தேவதையை சுமந்தபடி. தேவதை படியில் நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள். இவன் நிச்சயம் நமக்கு போட்டிதான் என்றபடி நகம் கடித்துக் கொண்டிருந்தேன் நான். ரயிலின் வேகம் கூட வேண்டும், என் விரல்களாவது தப்பிக்க வேண்டுமே!

ஹைதையை விட்டு மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது சார்மினார். எதுவும் பேசாமல் உறைந்திருந்தார் தேவதையின் அப்பா. பாவம். பயம் இருக்கத்தானே செய்யும்? அம்மாவோ கண்கள் மூடி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தேவதை மட்டும் அவளுக்கு வந்த பரிசுகளை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிரிப்பு மட்டும் ஓயவில்லை. அது சிரிப்பு கூட இல்லை. மெல்லிய புன்னகை எனலாம். என்னையும் பார்த்து சிரித்தாள். இது சிரிப்புதான். அப்பாவைப் பார்த்தேன். மாமாவை தேற்றுவோம் முதலில் என பேச்சுக் கொடுத்தேன். தயங்கி தயங்கித்தான் பேசினார். வேண்டாமடா விஷ பரீட்சை என அப்பாவை விட்டு அப்பர் பெர்த்திற்கு தாவினேன். தூங்கியும் விட்டேன்.

மறுநாள் காலை சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தோம். பாதி தூக்கத்தில் இறங்கினேன். தேவதை தனக்கு பிடித்த கிஃப்ட்டை மட்டும் கையிலெடுத்துக் கொண்டாள். அம்மா முடிந்தவரை எடுத்துக் கொண்டார்கள். அப்பாவால் எல்லாவற்றையும் எடுக்க முடியாது. போர்ட்டரும் காணவில்லை. சான்சுடா கார்க்கி என்று உதவினேன். அப்பாவும் நானும் பின்னால் செல்ல, தேவதையும் அம்மாவும் முன்னால் சென்றார்கள்.

காலெஜ் லைஃபே தனிதான் சார் என்றேன்.

ம்ம் என்றார்.

ஆனா இந்த பசங்க செஞ்சது ஓவர். இப்பலாம் சேட், மொபைல்ன்னு ஆன பிறகு எதுக்கு இவ்ளோ சீன் போடறாங்க? அவ்ளோ அக்கறை இருந்தா மாசம் ஒரு தடவ வந்துட்டு போகலாம். நான் வாராவாரம் வறேன் சார்

…………..

என்ன சார்?

ஆமாம்ப்பா. அவ இன்னும் ஒரு மாசம்தான் உயிரோட இருப்பா. அவளுக்கு…..

ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் செத்துக் கொண்டிருந்தேன்.

என் கையிலிருந்த பைகளையும் வாங்கிக் கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றார். நான் அப்படியே  நின்றுவிட்டேன். கண்களில் திரண்ட நீர்த்துளி ஏனோ அந்த க்யூட் நண்பன் என் கண்ணை விட்டு மறைந்த கடைசி காட்சியை நினைவுப்படுத்தி சென்றது.

தற்கொலை

21 கருத்துக்குத்து

 

  பாதி வரை எரிந்து சாம்பலான சிகரெட்டின் முனை போல ரயிலில் சுருண்டு கிடந்தான் மதன்.  புதிதாய் மாற்றி அமைக்கப்பட்ட சைடு அப்பர் அவனுக்கு தோதாக இல்லை. மேலும் ரயிலின் தடக் தடக் சத்தத்தை அவனது இதய துடிப்பு வெல்வதையும் அவன் விரும்பவில்லை. தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டே கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.

  இன்னும் வரவில்லை அழைப்பு. துல்லியமாய் தெரிந்த TFT displayல் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மது. அந்த வசீகர சிரிப்பையும் மீறி இடது ஓரத்தில், இந்திய பொருளாதாரம் போல மேலும் கீழும் ஏறி இறங்கும் டவரையே வெறித்துக் கொண்டிருந்தான். சிக்னல் கிடைக்காமல் போகும் சமயங்களில் தட்டிப் பார்த்தான். அது கோவத்தின் வெளிப்பாடா அல்லது நோக்கியா இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டிப்ஸா எனத் தெரியவில்லை. மணி 12ஐ தாண்டி இருந்தது.

“Send me SMS if i am not reachable" .

  sent items ல் இருந்த அதே மெசேஜை பத்தாவது முறையாக ஃபார்வர்ட் செய்தான். “Message sent"  என்று சொல்லி தன் மீது எந்த தவறும் இல்லை என வாக்குமூலம் தந்தது ஏர்டெல் சேவை. மீண்டும் sent itemsக்கு சென்று மதுவிற்குத்தானே அனுப்பினோம் என்று தன் பக்க நியாயத்தை உறுதி செய்து கொண்டான். காரணமே இல்லாமால் அந்த நடு இரவில் இறங்கி சென்று சார்ஜ் செய்தான். ஐந்தே நிமிடத்தில் Battery full என்று காட்டியது. தூக்கம் வராமல் முன்தினம் நடந்ததை மெல்ல அசைப் போட்டான்.

மது.

என்ன?

நான் வேற ஒண்ணும் கேட்கல. அடிக்கடி ஃபோன் செய். அது போதும்.

புரிஞ்சிக்கோ மதன். என்னால் முடியறப்ப கண்டிப்பா செய்றேன்.

நான் என்ன அரை மணி நேரமா பேச சொல்றேன் ஜஸ்ட் 2 மினிட்ஸ்.

ம்ம்.. சரி.

முடியலன்னா ஒரு எஸ்.எம்.எஸ். அவ்ளோதாம்ப்பா.

ம்ம்

என்ன. எல்லாத்துக்கும் ம்ம் னு சொன்னா என்ன அர்த்தம்?

கிளம்பறீயா? ட்ரெயினுக்கு டைம் ஆச்சு.

ட்ரெய்னுக்குத்தானே ஆச்சு. எனக்கு இல்லையே.

ஜோக்கா? Be serious மதன். ஒழுங்கா போய்ட்டு வா.

எனக்கு போகவே பிடிக்கல. ஒரு மாதிரி இருக்குடா.

எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். (வேகமாக நடந்தாள்)

ப்ளீஸ். கால் பண்ண மறக்காத. அது மட்டும் போதும். (கத்தினான்)

   இரண்டு கைகளிலும் இருந்த லக்கேஜ் அவன் கண்களை துடைக்க இடைஞ்சலாய் இருந்தது. அது மட்டுமல்ல நகரத் தொடங்கிய ரயிலில் ஏறும்போதும் தொல்லை தந்தது. பெர்த்தை கண்டுபிடித்து பைகளை வைத்துவிட்டு Compose செய்தான்.“Send me SMS if i am not reachable". அப்போதுதான் முதல் முறை அந்த புறா பறந்தது.

விடியலை அறிவிக்க வந்த சூரியன் மதனைக் கண்டு ஹாய் சொல்லிப் போனது. அப்போதும் அந்த வசீகர சிரிப்பிலே மூழ்கி கிடந்தான் மதன். இறங்குமிடம் வந்ததும் போர்ட்டரை தேடினான். இந்த ரெண்டு சின்ன பைக்கு போர்ட்டரா என்று யாரும் இவனை கவனிக்கவில்லை. முதுகில் ஒன்று, இடது கையில் ஒன்றுமாய் ஆக்கிக் கொண்டு, வலது கையில் அலைபேசியை பார்த்தபடி நடக்க தொடங்கினான். அவ்வபோது 121க்கு அழைத்து லைன் க்ளியர் என்பதை உறுதி செய்து கொண்டான்.

லாட்ஜ் வேணுமா சார்? ஏ.சி இருக்கு என்றவனிடம் , அந்த லாட்ஜில் ஏர்டெல் சிக்னல் கிடைக்குமா என்று வினவினான். ஒரு வழியாய் அறைக்குள் வருவதற்குள் அரை நாள் முடிந்து விட்டது. கால் இன்னும் வரவில்லை. குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஏனோ சில நிமிடங்களிலே மீண்டும் குழப்பமாய் அலையத் தொடங்கினான். சில மணி நேர அவஸ்தைக்குப் பின் டைரியைத் திறந்து எழுதத் தொடங்கினான்.

செய்வதென முடிவாகிவிட்டது.
எதைக் கொண்டு
என்பதில் தொடங்கியது
சில குழப்பங்கள்.
துப்பாக்கிகள்
எளிதில் கிடைப்பதில்லை.
பர்மா பஜார் கத்திகள்
100% வெல்வதில்லையாம்.
அருவிகள் தேடிச் செல்ல
நேரமில்லை.
என்ன செய்துவிடும் கயிறு?
சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி

“Anitha calling"...

____________________________________-

பிற்சேர்க்கை:

இதையும் கதையென ஏற்றுக் கொண்டு முடிவு என்ன சகா என்று சிலர் கேட்டார்கள். அதனால் ஒரு விளக்கம்.

1)  அனிதா என்பவள் மதுவின் தோழி. அவள் அழைத்து இருவருக்குள்ளும் காதல் மலரலாம்.

2) அந்த நேரத்தில் அவனுக்கு தேவை ஒரு ஆறுதல். அது யாரிடமிருந்து கிடைத்தாலும் அந்த தற்கொலை முயற்சியை அவன் கைவிட்டு விடுவான் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

3) அனிதாவின் மொபைலில் இருந்து மது அழைப்பதாக இருக்கலாம்.

4) அல்லது டைரியில் அப்படி எழுதிவிட்டு அவன் இறந்துவிடுகிறான். நீல நிறத்தில் இருப்பவை எல்லாம் டைரியில் எழுதப்பட்டது. நடந்தது அல்ல.

முடிவு நம்ம இஷ்டம்

Jun 14, 2010

வேலையத்த வேலை

29 கருத்துக்குத்து

 

Untitled 

  MCR வேட்டிகள் விளமபரத்தில் கம்பீரமாக வருகிறார் சுப்ரீம் ஸ்டார். நன்றாகவே இருக்கிறார். அந்த விளம்பரமும் அவருக்கு தோதாக இருக்கிறது. அதை ரசித்துக் கொண்டிருந்த போதே ஒரு ஐடியா உதயமானது. நமது மற்ற ஸ்டார்களும் இது போன்று விளம்பரத்தில் நடித்தால் எந்தெந்த பொருட்களுக்கு நடிப்பார்கள்? எந்தெந்த பொருட்களுக்கு நடிக்க கூடாது. மேட்ச் த ஃபாலோயிங் போல ட்ரை பண்ணுங்க பாஸ்

நடிகர்கள்

நடிக்க வேண்டியது

நடிக்க கூடாதது

சூர்யா .

ஐடியா மொபைல்

ஃபிட்னஸ் ஒன் ஜிம்

பிரபுதேவா .

காம்ப்ளன்

காம்ப்ளன்

பிரசாந்த்

ஃபிட்னஸ் ஒன் ஜிம்

ஜில்லெட்

அஜித் .

ஜில்லெட்

அஷ்வினி ஹேர் ஆயில்

சத்யராஜ்

மலையாள மனோரமா

ஐடியா மொபைல்

சிம்பு

அஷ்வினி ஹேர் ஆயில்

மலையாள மனோரமா

 

காரணம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். உதாரணத்திற்கு அஜித் நடிக்க வேண்டிய விளம்பரம் ஐடியா மொபைல். ஏனெனில் அவர்களது விளம்பரம் “வாக்&டாக்”. நடப்பதிலும், பேசுவதிலும் அவர அடிச்சிக்க முடியுமா? இது போல் யோசிங்க மக்கா.

   மேலும், உங்களுக்கு தோன்றும் பெர்ஃபெக்ட் காம்பினேஷன்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்க.

_________________________________

பிற்சேர்க்கை:

யாரும் விடை சொல்லாததால் நானே சொல்லிடறேன்

நடிகர்கள்

நடிக்க வேண்டியது

நடிக்க கூடாதது

சூர்யா .

ஃபிட்னஸ் ஒன் ஜிம்

காம்ப்ளன்

பிரபுதேவா .

மலையாள மனோரமா

ஜில்லெட்

பிரசாந்த்

அஷ்வினி ஹேர் ஆயில்

ஐடியா மொபைல்

அஜித் .

ஐடியா மொபைல்

ஃபிட்னஸ் ஒன் ஜிம்

சத்யராஜ்

காம்ப்ளன்

அஷ்வினி ஹேர் ஆயில்

சிம்பு

ஜில்லெட்

மலையாள மனோரமா

Jun 12, 2010

சில விளக்கங்கள்

18 கருத்துக்குத்து

 

நேற்று  கேட்ட புதிர் கேள்விகளில் 8,10 தவிர அனைத்திற்கும் சரியா வந்தாகிவிட்டது. சிலர் விடைக்கான லாஜிக் என்னவென்று கேட்டதால் விளக்கத்தோடு விடைகள் இதோ.

1) இந்த ஜேக்சன்பாக்கத்துக்கு பில்கேட்சால் வந்தது யோகம்.

ஜேக்சன், நிக்சன், ஜான்சன் என என்னா சன்களையும் துரை போட்டு விளிப்பதே நம் முன்னோர்கள் வழக்கமல்லவா? ஆகவே இது துரைப்பாக்கம். ஐடி துறையின் ஆதிக்கத்தால் இங்கே ரியல் எஸ்டேட் விலை மார்கெட் போன நடிகையின் ஆடையை போல் சர்ரென மேலே சென்றது

2) மிஸ்டர்+ஸ்கை+நான்+டவுன்

டிரான்ஸ்லேட் செய்ய வேண்டியதுதான். திரு+வான்+மீ+ஊர் = திருவான்மியூர்.

3) முட்டுக்காட்டு பாலம் உடைஞ்சா இங்கதான் குடி வரணும்

இரண்டு கேள்விகள் இதே ரீதியில் கேட்டதால்,இந்தக் கேள்விக்கும் நாம் அறிவுப்பூர்வமாகவே யோசிப்போம். இங்கதான் ட்விஸ்ட்டே. ஃப்ரீயா விடு பாட்டு கேட்டிருக்கிங்களா? “முட்டுக்காட்டு பாலம் உடைஞ்சா மேடவாக்கத்துல குடியேறு” .ஹிஹிஹிஹி. இது லேட்ரல் திங்கிங்னு சொல்லலாமா?

4) துரை பேர ஒழுங்கா சொல்ல வராம அத தமிழாக்கி, அதை மொட்டையாக்கி, அந்த பேர மறுபடியும் இங்கிலீஷ் ஆக்கி..உஸ்ஸ்ஸ்ஸ் இந்த பாலம் மட்டும் இது புரிஞ்சு கண்ணீர் விட்டா கர்நாட்காவுக்கே நாம தண்ணி சப்ளை பண்ணலாம்

ஹேமில்டன் பிரிட்ஜ். இதற்கு சுவாரஸ்யமான எஸ்.டி.டி உண்டு. ஹேமில்டன் என்பதை நம்ம ஆட்கள் நாளடைவில் அமட்டன் வாராவதி ஆக்கினார்கள். பின்னாளில் ஒரு நல்லாத்மா அதை ஆங்கிலப்படுத்தி பார்பர் பிரிட்ஜ் ஆக்கிவிட்டார்

5) எத்தனை நாள் ஆனாலும் இந்த ஏரியா புதுசுதான். ஆனா கிடைக்குற ஐட்டமெல்லாம் பழசுதான்.

புதுப்பேட்டை. பழைய ஆட்டோமொபைல் பாகங்கள் கிடைக்குமிடம். திருமலை படம் பார்த்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திருப்பார்கள். ஹிஹி

6) இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக ஜெயித்தார் என்பதற்காக “ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ சிந்தாமணின்னு”  சொல்லாதிங்கப்பா

ஆயிரம் விளக்கு. சில கேள்விகள் எளிதாக இருந்தால்தான் மற்றதை கண்டுபிடிக்க ஆர்வம் வருமாம். அதனால் இது போன்ற போட்டிகளில் ஈசியா சில கேள்விகள் வைப்பது புதிர் ஆசிரியரின் இராஜ தந்திரம். :)

7)  ஜேக்சன்பாக்கம் அளவுக்கு இல்லைதான். என்றாலும் “அய.ஊரா இது”ன்னு சொல்லக் கூடாது.

பாக்கம் + அய = அயப்பாக்கம். அம்பத்தூர் அருகில் இருக்கிறது. அம்பத்தூர் எங்க இருக்கா? ஆவ்வ்வ்வ்.

8) தலபேட்டைன்னு சொல்லலாம். அந்தளவுக்கு தலைக்கு மவுசான ஏரியாதான். ஆனா தலயில் இருக்கும் ஜந்து பேட்டைதான்.

அண்ணா சாலையில் நந்தனம் – சைதை வரும்போது இடதுபக்கம் போர்டு பார்க்கலாம். பேன் பேட்டை. பேன் என்பது தலையில் வசிக்கும் ஜந்துதானே???

9) சிகரெட்டைக் கண்டாலே "ஆ"வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

இது நிச்சயம் லேட்ரல் திங்கிங்தான். சிகரெட் என்றால் தம். ஆவென தம்மைப் பார்த்து கத்துபவர்கள் என்றால் ஆதம்பாக்கம். மேலும் சிகரெட்டை கண்டாலே வெறுக்கும் உத்தமர் கார்க்கி அவர்கள் வசிப்பிடமும் ஆதம்பாக்கம்தான்

10) ப்ரதர்டவுந்தான். ஆனால் அண்ணா நகர் இல்லை

உடனே தம்பியை வச்சு ஏரியா பேரு யோசித்தவர்கள் ஹிஹிஹிஹிஹி. இது அண்ணன்+ஊர் =அண்ணனூர். அதெஆம் சென்னையா பாஸ் என்கிறீர்களா? சென்னை மாநகராட்சி விரிவு செய்த விஷயம் தெரியாதா உங்களுக்கு???

Jun 11, 2010

சென்னை ராஜா&ராணிக்களே வருக வருக

26 கருத்துக்குத்து

 

ஒரு சின்ன சிட்டி புதிர். சென்னையின் எல்லா ஏரியாவிலும் நீங்க கில்லி என்றால் விடை சொல்லுங்க பார்க்கலாம்.

1) இந்த ஜேக்சன்பாக்கத்துக்கு பில்கேட்சால் வந்தது யோகம்.

2) மிஸ்டர்+ஸ்கை+நான்+டவுன்

3) முட்டுக்காட்டு பாலம் உடைஞ்சா இங்கதான் குடி வரணும்

4) துரை பேர ஒழுங்கா சொல்ல வராம அத தமிழாக்கி, அதை மொட்டையாக்கி, அந்த பேர மறுபடியும் இங்கிலீஷ் ஆக்கி..உஸ்ஸ்ஸ்ஸ் இந்த பாலம் மட்டும் இது புரிஞ்சு கண்ணீர் விட்டா கர்நாட்காவுக்கே நாம தண்ணி சப்ளை பண்ணலாம்

5) எத்தனை நாள் ஆனாலும் இந்த ஏரியா புதுசுதான். ஆனா கிடைக்குற ஐட்டமெல்லாம் பழசுதான்.

6) இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக ஜெயித்தார் என்பதற்காக “ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ சிந்தாமணின்னு”  சொல்லாதிங்கப்பா

7)  ஜேக்சன்பாக்கம் அளவுக்கு இல்லைதான். என்றாலும் “அய.ஊரா இது”ன்னு சொல்லக் கூடாது.

8) தலபேட்டைன்னு சொல்லலாம். அந்தளவுக்கு தலைக்கு மவுசான ஏரியாதான். ஆனா தலயில் இருக்கும் ஜந்து பேட்டைதான்.

9) சிகரெட்டைக் கண்டாலே "ஆ"வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

10) ப்ரதர்டவுந்தான். ஆனால் அண்ணா நகர் இல்லை.

Jun 10, 2010

100 வாட்ஸ் பல்பு

28 கருத்துக்குத்து

 

    வலையுலகில் புது முயற்சின்னு ஒரு மொக்கை போட்டேன் இல்லயா? அதைப் பார்த்துட்டு பெங்களூரு சகா ஒருவர் அழைத்தார். ஏன் சகா அப்படி பண்ணிங்கன்னு எடுத்த எடுப்பிலே இன் ஸ்விங்கிங் யார்க்கர் வீசினார் அந்த அக்ரம். அலறிய நான் தாதா போல பதட்டத்தில் இன் ஸ்விங்கரை உள்ளே விட ஸ்டெம்ப் எகிறியது. சுதாரித்து என்ன விஷயமென்று கேட்ட போது சொன்னார். தோழி அப்டேட்ஸில் தோழி வெட்கப்படுவதாக எழுதினால் அவர் தோழி வெட்கப்படுவதை யோசித்துப் பார்ப்பாராம். நான் எழுதுவதையெல்லாம் அப்படி ஒன்றி படிப்பது அவர் வழக்கமாம். அப்படி கற்பனை செய்து படிக்கும் வாய்ப்பு தராமல் படம் போட்டது பிடிக்கவில்லையென்றார். இவர் தாமிரா அண்ணன்,அண்ணியிடம் அடிவாங்கும் பதிவுகளை படிக்க மாட்டாரா என்று மனதில் எழுந்த கேள்வியை கேட்கவில்லை. அக்கிரமத்தை தொடர்ந்த அக்ரம் அடுத்து ஐன்ஸ்டீன் பந்து வீசினார் “Make things Simple. Not simpler” என்றாராம் அந்த அறிஞர். வேறு வழியின்றி யூசுஃப் பதானை களமிறக்கினேன். ‘அதாவது வாழைப்பழம் தந்தா போதும். உரிச்செல்லாம் தர வேண்டாம்’ அதானே சகா என்றேன். டொக்.

______________________________________________________________________________

சாளரத்தின் நெடுநாளைய வாசகி ராதிகாவை சிலர் அறிவீர்கள் என நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு சுத்தியலின் புகைப்படத்தை அனுப்பி “சகா. உங்க பிளாகுக்கு கண்ணு பட்டுடுச்சு. சுத்தி போடணும். அதான் இந்தப் படத்த அனுப்பியிருக்கேன். சைடு பாரிலோ,பதிவிலோ போடுங்க” என்று மடலிட்டார்.  நானும் டாப் சைட் பாரில் சேர்த்தேன். நேற்று இன்னொரு மடலிடுகிறார் “சகா. உங்களுக்கும் கண்ணு பட்டிருக்கும். அதே மாதிரி சுத்தி ஒண்ணு வாங்கி தலையிலே போட்டுக்கோங்க”. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. வீட்டு பின்புறம் அதிக வெளிச்சம் வேண்டுமென  100 வாட்ஸ் பல்பு கேட்டிருந்தார்கள் அம்மா. ராதிகாவிடம் வாங்கிய பல்பை தோட்டத்தில் எரியவிட்டதில் அம்மாவுக்கு சந்தோஷம்.பளீர்ன்ன்ன்ன்ன்னு எரிகிறதாம்

________________________________________________________________________________

வலையுலகத்தால் என்னென்ன நன்மைகள் என்று கேட்டிருந்தார் நண்பர் ஒருவர். அது எப்படிங்க கரெக்க்க்க்க்டான நேரத்துல கேட்கறீங்க என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். எனக்கு தெரிந்து இதுதான் டாப் 5 ஆக இருக்கும். வெறெதாவது இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

1) வாசிக்கும் பழக்கம். எனக்கு இதுதான் முக்கியமான நன்மையாக தெரிகிறது

2) நமக்குள் இருக்கும் திறமையை(அப்படி ஏதாவது இருந்தா) நமக்கு தோதான நேரத்தில், நம் விருப்பபடி வெளிக்காட்ட ஒரு நல்ல மேடை.

3) எல்லா  துறை சார்ந்த விஷயங்களையும் தமிழிலே படிக்கலாம்

4) நம் ரசனைக்கேற்ற நட்பு வட்டம் கிடைக்கும்

5) அலுவலகத்தில் வேலைப்பளுவில் இருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் வேலை செய்வதாக பாவ்லா காட்டியபடியே ரிலாக்ஸ் செய்யலாம்

______________________________________________________________________________

ராவணன் இசை குறித்து எழுத எண்ணியிருந்தேன். உசுரே போகுதேவை தவிர்த்து வேறெதுவும் கவரவில்லை. ரகுமான் பாடல்கள் எப்போதும் ஸ்லோ பாய்சன்தானே என்று பொறுமையுடன் கேட்டுக் கொண்டேயிருந்தேன். ம்ஹூம். காட்டு சிறுக்கி ஆரம்பத்தில் ஈர்த்தாலும் எப்படா முடியும் என்று ஆகிறது. வீரா வீராவும் களைக்கட்டவில்லை. வேறுவழியில்லாமல் உசுரே போகுதே மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னேரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். உசுரே போகுதே பாடல் பாய்ஸ் படத்தில், பசங்க எல்லாம் ஜெயிலில் இருக்கும் போது பாடும் “ஜெயிலே ஜெயிலே செண்ட்ரல் ஜெயிலே” பாடலின் மெட்டில் போடப்பட்டது. அதைப் பாடியது நம்ம சித்தார்த்,

__________________________________________________________________________________

பதிவு ரொம்ப சின்னதா இருக்கு. ஒரு தோழி அப்டேட்ஸோட முடிக்கிறேன்

“நீ என் தோழியா கிடைக்க நான் எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும் என்றேன் தோழியிடம். சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள். நானே இவ்ளோ என்றால் நீ எவ்ளோ புண்ணியம் செஞ்சிருக்கணும் என்றேன்.

Jun 9, 2010

செம்மொழியின் குடிகாத்த செங்குடியறிஞர்

16 கருத்துக்குத்து

 

  மொக்கைவர்மனின் பால் தீராத அன்பு கொண்ட சிலர் “எங்கய்யா போனாரு எங்க மன்னரும், மங்குனி அமைச்சரும்” என கேள்வியாய் கேட்கிறார்கள். ஏழுவ மட்டும் கூட்டிட்டு வந்துட்ட என்ற உபதொல்லை வேறு. விஷயம் இதுதான். அடுத்த மொக்கைவர்ம பாகத்தின் கதைப்படி(டைரக்டர் தொணி வருதா?) மன்னரும், அவர்தம் சகாக்களும் ஒன்றாக அமர்ந்து குடிக்கிறார்கள். கதைப்படி ஆரம்பிக்கும்போது அவர்கள் சியர்ஸ் சொல்ல வேண்டும். அங்கதான் கதையில் ட்விஸ்ட் வருகிறது. ஆனால் மன்னர்காலத்தில் ஏது சியர்ஸ்? அப்படியென்றால் அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேண்டுமே? அந்த வார்த்தைக் குறித்த ஆராய்ச்சியாலே மன்னர் வர தாமதமாகிறது.

போகட்டும். இப்போது நாம் ஆராய்ச்சிக்கு வருவோம். ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் முன்னோர்கள் என்ன வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் என சில மூத்த, இளைய, புதிய, பழைய, பிரபல, பிராப்ள, சின்ன, பெரிய, லோக்கல், ஐ.எஸ்.டி , புக் போட்டவங்க, போடாதவங்க என எல்லோரையும் கேட்டேன். பல ஆச்சரிய பதில்கள் கிடைத்தன. ஒரு அன்பர் சொல்கிறார், சியர்ஸ் என்பதே சரக்கு சரியா ஊத்தியிருக்கானா.. அளவு கரீக்ட்டா என்பதை சோதிக்கவே சொல்லப்படுகிறதாம். ஆர்யா முதல் நித்யா வரை தமிழர்கள் அடுத்தவனை கண்மூடித்தனமாக நம்பியே மோசம் போகும் ஆசாமிகள் என்பதால் சியர்ஸ்க்கு வேலை இருந்திருக்காது என்கிறார். ம்ம்

cheers

அடுத்த பதிவர் இன்னும் விவ”ரம்”. அந்தக் காலத்தில் மண்பாண்டங்கள் அல்லவா உபயோகித்தார்கள். அதை மோதிக்கொள்ளும்போது உடைந்து விடாதா? அப்படி உடைந்த பாண்டங்கள் இருந்திருந்தால் “குற்றம். நடந்தது என்ன? நிகழ்ச்சியில் அதை தோண்டி போட்டிருக்க மாட்டார்களா என்று வினவினார். (அவங்க இல்லப்பா) அதனால் அந்தப் பழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவரது கருத்து.

அவரது கருத்தைக் கேட்டபின் இன்னொரு கேள்வியும் நம் ஆராய்ச்சியில் சேர்ந்துக் கொண்டது. ஆதி தமிழன் (அய்.ரெண்டுமே தள படம்) எதில் குடித்திருப்பான்? வட்டிலா, கலசமா, குவளையா, ஓலையா? நம் ஆராய்ச்சித் தாளில் இன்னொரு கேள்வியைக் கூட்டிக் கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அடுத்த பதிவர் பதில் தெரியாது என்று சொல்ல கூச்சப்பட்டு எதிர்கேள்வி கேட்டார். “உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் கேள்வி தோணுது?”. இதன் மூலம் தன்னை கவுண்டராகவும், என்னை செந்திலாகவும் ஆக்க முயலும் நுண்ணரசியல் புரிந்து நான் விலகிவிட்டாலும், இவ்வுலகிற்கு இந்தக் கேள்வி தோன்றிய வரலாற்றை சொல்லாவிட்டால் நான் நிஜ செந்திலாகும் அபாயம் இருப்பதால் இன்னொரு பத்தியை சேர்த்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்கள் எல்லாம் குடித்துவிட்டு கல்கி ஆசிரம பக்தர்கள் போல் மிதக்கும் வேளையில் நான் மட்டும் பியர் ஊறிய சிக்கனையும், ரம் ஏறிய கடலையையும், விஸ்கி வாசனை மட்டனையும் கொறித்துக் கொண்டிருந்தால் ஏன் தோன்றாது? அடுத்த புத்தாண்டு வருவதற்கு இன்னும் 6 மாதம் இருக்கிறது. இல்லையெனில் இனி சைட் டிஷ் சாப்பிடிவதில்லை என்ற உறுதிமொழியையாவது எடுத்து விடுவேன். இதுவும் போகட்டும். நாம் ஆராய்ச்சிக்கு வருவோம்.

பதிலே கிடைக்காமல் ஆராய்ச்சி இன்னமும்  எந்திரன் படம் போல ஆகிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் இவைதான்

"CHEERS என்பதற்கு இணையான தூய தமிழ்ச்சொல் என்ன இருக்கிறது? (கூட்டாக தண்ணியடிக்கும்போது தமிழர் பயன்படுத்திய வார்த்தை)"

தமிழர் கூட்டாக தண்ணியடித்தார்களா?

அப்படி தண்ணியடிக்கும்போது தங்கள் பாத்திரங்களை மோதிக்கொண்டார்களா?

தமிழர்கள் எதில் மதுவைக் குடித்தார்கள்? (கலசமா?, வட்டிலா? )

- இவையெல்லாம் துணைக்கேள்விகள்

இதற்கு சரியான பதில்கள் தரும் அறிஞர்களுக்கு செம்மொழி மாநாட்டில் கலைஞர் கையால ஒரு குவாட்டரோ, ஃபுல்லோ பரிசாகக் கிடைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறேன். யோசித்து பாருங்கள். ஹலோ அதுக்கு எதுக்கு மேல பார்க்கறீங்க? செம்மொழி என்று மார்தட்டும் வேளையில் சியர்ஸுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லையென்பது எவ்வளவு வேதனையான விஷயம்? கண்டுபிடியுங்கள்

எப்படியும் நம் மக்கள் இதற்கு சரியான பதத்தை கண்டு பிடித்துவிடுவார்கள். அது எனக்கு கவலையில்லை. என் ஒரே கவலையெல்லாம் அப்படி கண்டுபிடிக்கப்போகும் அறிஞருக்கு ஒரு குவார்ட்டரோ, ஃபுல்லோ தரப்போகும் கலைஞருக்கு “செம்மொழியின் குடிகாத்த செங்குடியறிஞர்'” என்று பட்டமளித்து யாராவது பாராட்டு விழா நடத்திவிடுவார்களோ என்பதே. :(

பி.கு : மேலே இருக்கும் படத்திற்கு குசும்பன் சொன்ன கமெண்ட்

“ஸ்டாலினும் அழகிரியும் இப்படி ஒன்னா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்”

Jun 8, 2010

வலையுலகில் ஒரு புது முயற்சி

46 கருத்துக்குத்து

 

திருமணம் முடிந்து சில நாட்களில் அண்ணன் யூ.கே கிளம்பினான். அப்போது பப்லு கோடை விடுமுறைக்கு பாட்டி ஊருக்கு போயிருந்தான்.   கிளம்பும் முன் அவனிடம் பேச விரும்பிய பெரியமாமா அழைத்தார். “நான் பிசியா விளையாடிட்டு இருக்கேன்னு சொல்லு” என்று தகவல் சொல்லியனுப்பினார் விளையாட்டு வீரர். “நான் ஊருக்கு போறேன்னு சொல்லுங்க “ என்று தூதரிடம் கேசட் கொடுத்தனுப்பினார் பெரிய மாமா. வேகமாக ஓடிவந்து ஃபோனை எடுத்த பிளேயர் சொன்னார் “நீ யூ.கே.இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் ஃபோன்ல தான் பேச போற. அப்புறம் என்ன வித்தியாசம்?”

புது மாப்பிள்ளை எப்படி ரியாக்‌ஷன் கொடுத்தார் தெரியுமா?

th_brahmi3

_________________________________________________________________________

விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். பப்லுவும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவான். மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் பப்லு. அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றேன். மாடியேறி மூச்சிரைக்க இறங்கியவன் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினான். என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்கிறான்.

th_k5 Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

______________________________________________________________________

shriya

உதடால் அடிக்க வந்தவளை
உதட்டாலே தடுத்தேன்.
நான் செஞ்சா ரைட்டு,
நீ செஞ்சா தப்பு மன்னிப்புக் கேள்
என்றாள் தோழி.
ஐ ஆம் சாரி.
மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என்றேன்

th_raj2 சாரி சாரி சாரி சாரி சாரி

__________________________________________________________________________________

எனக்கும் தோழிக்கும் சின்ன சண்டை. ரொம்ப நேரம் சிந்தித்து தோழியே ஒரு அப்டேட் எழுதினாளாம். அதை எஸ்.எம்.எஸ் செய்தாள்

“avanukku ennai pidikkavillai
enakkum ennai pidikkavillai
ippoothu enna seyvathu?”

நானும் ரிப்ளை அனுப்பினேன். “வேறு என்ன செய்வது. இருவரும் எண்ணெய் இல்லாத தோசையே சாப்பிடலாம்”

தோழி இப்படித்தான் ஆயிருப்பாள்

crying

__________________________________________________________________________________

இது போன்ற புது முயற்சிகளை நீங்கள்

rp_chekka

இப்படி கைத்தட்டி ஆதரிக்க வேண்டும். அதைவிட்டு

th_venky4

இப்படியெல்லாம் செய்யக்கூடாது.

Jun 3, 2010

மழை

27 கருத்துக்குத்து

 

   மழையும் காதலும் ரம்மியமானது என்றால் மழையில் காதலி உடன் இருப்பதை என்னவென்பது? பாண்டிச்சேரியில் இருப்பது போன்ற நேரான சாலைகளில், மழை நின்றும் நிற்காத தூறலில் காதலியின் கைகோர்த்தபடி நடந்து சென்று கடலை தரிசிப்பது சுகம். சுகம் என்பது கூட சரியா? அந்த பரவசநிலைக்கு ஏற்ற வார்த்தை எனக்குத் தெரியவில்லை. அவள் நனைவாள். அவளோடு இவனும் நனைவான். இருவரும் நடுங்குவார்கள். கூடவே மழையும் நடுங்கும். கைகளை குறுக்கே அணைத்து குளிருக்கு இதமாக்கிக் கொள்ளும் போது தன்னை அணைத்துக் கொள்ள மாட்டாளா என்று அவன் நினைத்துக் கொள்வதுண்டு. கைகளை எடுக்க மாட்டாளா என்று மழையும் நினைப்பதுண்டு.

rain-benches (1)

   மழை வந்து கழுவி சென்ற சாலை சுத்தமாய் இருக்கும். நனைந்து கிடக்கும் பூக்களைக் கூட மிதிக்காமல் மெல்ல நடந்து வருவாள். அவள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துளிகளை பார்த்து அவனுக்கு பொறாமை எழும். சற்றே வலுவான துளிகள் அவள் கன்னம் வழி உதடுகளை அடையும்போது, வலுவிழுந்து கீழே விழத் தயாராகும். அதுவரை சைவமாக இருந்தவனை அவளது இதழ் வருடும் மழைத்துளி அசைவமாக்கக்கூடும். தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் அந்த துளியை கைகளில் ஏந்தியவன் பொறாமை மறந்து கடவுளைக் கண்டவனைப் போல் மூர்ச்சையாகி இருப்பான். தீர்த்தமாய் பருகிக் கொண்டிருப்பான்.

ஆனந்தமாய் ஓடும் ஓடையின்  குறுக்கே இருக்கும் பாலத்தில் அவள் அமர்வாள். எழுதி வைத்த கவிதைத் தாள்களை அந்த மெல்லிய மழையினூடே அவளிடம் கொடுத்துப் படிக்க சொல்லுவான் அவன்.

நான் தானே நடக்கிறேன்

அது என்ன என் பின்னால்

உன் நிழல்?

சிரித்துக் கொள்வாள் அவள். எரிந்துக் கொண்டிருப்பான் அவன். நெருப்பை அணைக்கும் மழை கூட இவனுக்கு மட்டும் பெட்ரோலாய் பொழிந்துக் கொண்டிருக்கும். கவிதை எனப்படும் கிறுக்கல்கள் கொண்ட தாளை முக்கோணமாய் மடிப்பாள். லப்டப் இதயம் டப்டப் என மாறித்துடிக்கும். உதடுகளால் காகிதத்தை ஈரமாக்கி  கிழிப்பாள். எழுதி இருந்த எழுத்துக்கள் அதிசயமாக உயிர்பெற்று உயிர் கொடுத்த அதிசயத்தை ரசிக்கத் தொடங்கும். காகிதம் கப்பலாகி, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் டைட்டானிக் போல பெருமித ஓட்டம் ஓடும். அவள் கைகளால் கப்பல்கள் ஆவதை  விட வேறு என்ன பெருமை கிடைத்து விடக்கூடும் அவன் கவிதைகளுக்கு?

ஓடை வேறு வழியாக கடலை நோக்கி ஓட, இவர்கள் வேறு வழியாக நடக்க துவங்குவார்கள். மழை நின்ற சமயம் சிறிய மரமொன்றின் கீழ் நின்று கொண்டு, இலைகள் சேகரித்த துளிகளை உலுக்கி  அவளின் மேல் விழச்செய்யும்போது மலரை சேர்ந்ததாய் உணரக்கூடும் மழைத்துளி. ஒரு செல்ல சிணுங்கல் செய்தபடி மரத்தை விட்டு கடலை நோக்கி ஓடுவாள் அவள். மரமும், இலைகளும் அவனை முறைத்தப்படி நிற்க, பயந்தபடி இவள் பின்னாள் ஓடி ஒளிந்துக் கொள்வான் அவன். அவளிடன் உனக்கு என்னடா வேலை என்று மீண்டும் பெய்யத் தொடங்கும் மழை. முகத்தை வான் நோக்கி உயர்த்தி மழையை ரசித்தபடி நடப்பாள் அவள். முத்தாகிவிட வேண்டும் என்ற ஆசையில் அவள் மேல் விழும் மழைத்துளி.

இறுதியாய் கடலை அடைவார்கள். கரையில் நிற்கும் அவளை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு உயரமாய் எழும்பி வரும் அலைகள். கடலை உசுப்பிவிட, நான் முத்தமிடுகிறேன் பார் என்று கொட்டிவரும் மழை. மழையிலும் கரையாத ஐஸ்கிரீம் சிலை நீயென ஆச்சரியப்பட்டு போவான் அவன். ஆசையோடு ஒரு காலை மட்டும் அலையில் நனைப்பாள் அவள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சாத்தியம் மட்டுமல்ல, எளிதானதும் என்றபடி கைகளில் ஏந்தி குடிப்பான் அவன். வெட்கத்தில் முகத்தை மூடுவாள் அவள். இவர்கள் காதலுக்கு குறுக்கே வர மனமின்றி நின்று போகும் மழை. சோகத்தில் அழுது அழுதே குடிநீரை மீண்டும் உப்பாக்கும் கடல். நமக்கு மட்டும் இனி என்ன வேலை? அவர்கள் காதலித்துப் போகட்டும். நாம் விடைபெறுவோம்

Jun 1, 2010

ஹலோ.. ஹலோ (கார்க்கி)

32 கருத்துக்குத்து

 

ரொம்ப நாளாக எஃப்.எம்முக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.

ஹலோ சூரியன் எஃப்.எம்

ஒழுங்கா சொல்லுங்க. ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?

சூரியன் எஃப்.எம் தாங்க.

அப்படியா? நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?

கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.

ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?

சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.

அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?

வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?

நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.

முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?

மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.

ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.

மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.

புறாக் கூடு போல முப்பது ரூமு..

ஓகே சார். உங்க வழிக்கே வறேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?

நான் தாங்க பாடினேன். ஏன். நல்லாயில்லையா?

ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.

இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.

என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

அப்படியில்ல  சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?

ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?

நான் ரெடி.

உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?

மந்திரா

சார். இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல  யார புடிக்கும்?

கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?

சார். ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.

ஓக்கே சார்  தோனியின் சொந்த ஊர் எது?

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?

பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.

ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)

யாரு சார் அது பக்கத்துல?

ஆறு.

அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.

அதான் ஆறு.

ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. த்ரிஷா என் தங்கச்சி. அடுத்த கேள்விய கேளுங்க.

அடுத்த ரவுண்ட் ஜி.கே

B.K தெரியும். அது என்ன G.K.?

சார். ஜெனரல் நாலெட்ஜ்.

அப்படி ஒரு சரக்கா?

டொக்.

ஏழுவின் நிலைய லேட்டாக புரிந்தக் கொண்ட அவர் லைனை கட் செய்கிறார்

______________________________________________________________

பி.கு : நண்பர் ஒருவரின் வேண்டுக்கோளுக்கிணங்க மீண்டும் ஒரு மீள்பதிவு

 

all rights reserved to www.karkibava.com