May 20, 2010

சிங்கம்..சிங்கம்.. He is துரைசிங்கம்


 

  சிங்கம். சூர்யாவின் 25வது படம். சன் டிவி டிரயிலரில் ”ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா” என்று அடிக்கும்போது மடாரென்று நம் தலையில் அடிப்பது போலவே இருந்தாலும் மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷம். இதுவரை விஜய் மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ்வாதிகளிடம் மாட்டிக் கொண்டிருந்தார். இதோ வறேண்டா நண்பா என சீறிப் பாய்கிறது இந்த நட்பு சிங்கம். ரிஸ்க் எடுப்பதெல்லாம் சூர்யாவுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்பதை நாமறிவோம். அதுக்குன்னு அனுஷ்காவையெல்லாமா ஜோடியாக்குவது? எத்தனை க்ளோஸ் ஷாட்தான் வைக்க முடியும்? தேடிப் பார்த்தேன். ஒரு ஸ்டில் கூட இருவரும் ஒன்றாக இருக்கும்படி முழு ஃபோட்டோ கிடைக்கவில்லை. சிங்கமும் ஒட்டகசிவிங்கியும் என்ன செய்யப் போகிறது என்று பார்க்கும் முன்னர், பாடல்கள் குறித்துப் பார்க்கலாம்.

1) Stole my heart (ஷான், மேகா) ஹரி

இதில் இரண்டு வெர்ஷன்கள் இருக்கிறது. ஹரியே எழுதிய பாடலென்று ஒன்றும், விவேகா எழுதியதாக ஒன்றும் இருக்கிறது. சின்ன வெர்ஷன் தான் எனது ஃபேவரிட். சின்னப் பாடல்தான் என்றாலும் கொள்ளை அழகு. அதுவும் பாடல் முடியும்போது புல்லாங்குழலும், கிடாரும் கலந்துக் கட்டி அடிப்பது சுகம். ராஜா பாடல்களில் வயலினைப் போல தற்கால இசையமைப்பாளர்களுக்கு கிட்டார். கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களிலும் உபயோகிக்கிறார்கள். ஹாரீஸ் distortion வகையில் அதிகம் கிடாரைப் பயன்படுத்துவார். தேவி எப்போதும் RAWவாக பயன்படுத்துவார். இதில் குழலும் கிட்டாரும் கலக்கியிருக்கும் விதத்திற்காக ஸ்பெஷல் ஷொட்டு. ஷானுக்கும் நல்ல பாடல் இது.

2) காதல் வந்தாலே (பாபா சேகல்,பிரியதரிஷினி) விவேகா

பைலா டைப் பாடல். வாடா மாப்ளேவின் ஒன்னு விட்ட மாமன் முறை எனலாம். ஃபெயிலே ஆகாத பீட். எஃப்.எம்மில் டெடிகேஷன்களுக்காக சமர்ப்பித்திருக்கிறார் இசையமைப்பாளர். தேவியின் ஆர்கெஸ்ட்ரைசேஷன் 440 வோல்ட்ஸ் த்ரீ ஃபேஸ் மின்சாரம். கேக்கின் மீதான செர்ரியாக பாபா சேகலின் எனர்ஜி துள்ளும் குரல். ”சட்டினியை விட்டுப்புட்டு இட்லியை தின்னுட்டேன்” என்று இவர் சொல்லும் அழகில் இன்னொரு உதித் நாரயணனாக எனக்கு தெரிகிறார். இந்தப் பாட்டுக்காகவாது யாரேனும் பார்ட்டி வைங்கப்பா.

இடுப்பு கொண்டை ஊசி..  சிரிப்பு  விண்டோ ஏசிதான்
முதுகு தேக்கு மரம்தான்.முழுசா பார்த்தா ஜுரம்தான்

மீசை திருத்த சின்ன கத்திரிக்கோலை வச்சேன்.
முத்த நினைப்பில் நானும் மூக்கை வெட்டிக்கிட்டேன்”

உனக்கு முன்னால நிலாவே டல்லா இருக்கு”,

கந்தசாமியின் மிச்சமாக தெரிந்தாலும் விவேகாவும் தன் பங்குக்கு துவைச்சு எடுக்கிறார்.  ஃபாஸ்ட்  பீட்டாக இல்லாமல் ஹெவி பீட்டில் ஒரு பெர்ஃபெக்ட் குத்துப் பாட்டு. அனுஷ்காவும் சூர்யாவுமா?? ம்ம்ம். Easily, PICK OF THE ALBUM.

3) என் இதயம் (சுசித்ரா) நா.முத்துக்குமார்

அனுஷ்காவுக்கு காதல் வந்துடுச்சாம். அப்படி ஒரு மெலடி. தேவியின் இசை என்று சொல்லிவிட்டு இந்த மெட்டை ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு என்று சொன்னால் திட்ட மாட்டிங்க? பீட்டும் ஓகேதான். கிட்டாரும் ஓக்கேதான். சுசியின் குரல்தான் சற்று நெருடுகிறது. மஹதின்னு ஒருத்தங்க இருந்தாங்களே!!! அவங்க பாடறதில்லையா? நா.முத்துக்குமாருக்கு பேமண்ட் தந்தாங்களான்னு தெரியல. மென்மையாகவும் இல்லாமல், பீட்டாகவும் இல்லாமல் பாட்டு முடிகிறது. தம்மடிப்பிங்களா?

4) சிங்கம் சிங்கம் (தேவிஸ்ரீபிரசாத், மேகா) நா.முத்துக்குமார்

ஒரே வகுப்பு. ஒரே புத்தகம். ஒரே ஆசிரியர். ஆனா ஒருவர் 100 எடுப்பார்.இன்னொருவர் முட்டைக் கூட வாங்குவார். அப்படித்தான் இசையும். அதே கிட்டார்.. அதே கீ போர்டு. கற்க கற்க என வேட்டையாடு விளையாடுவில் ஹாரீஸ் அட்டகாசம் பண்ணியிருப்பார். அப்படி ஒரு பாட்டு சார் என்றுதான் ஹரியும் சொல்லியிருப்பார். மேலோட்டாமாக பார்த்தால் அப்படி தெரியலாம். ஆனால் கிளாஸ் அதுவென தெளிவாக புரிகிறது. எத்தனை ஹிட்ஸ் தந்தாலும் தேவிஸ்ரீ, ஹாரீஸ், யுவன் இடத்துக்கு வர முடியாது. இன்னொரு டமால் டுமீல் பாட்டு. சூர்யாவை இடுப்பளவுக்கு துப்பாக்கியுடன் 150 ஷாட் எடுத்து வைத்திருப்பார்கள் . நா.முத்துக்குமாருக்கு கையிலே பணம் தந்து செட்டில் பண்ணியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

ரவுடிகளின் ராஜ்ஜியங்கள் ரணகளமாய் இருக்கும்
காவல்துறை தேர்ந்தெடுத்து சிங்கத்தினைதான் அனுப்பும்

5) நானே இந்திரன் (பென்னி, மாணிக்க விநாயகம்), விவேகா

ஆடுறா ராமா பாட்டே போக்கிரி பொங்கலின் காப்பி. அதை இன்னொரு காப்பி போட்டிருக்கிறார் தேவி. ஆரம்ப அடியே ஆதாராமாயிருக்கிறது. சரணத்தின் முதல் இருவரிகளும் மென்மையாய் ஒலிக்கும்போது கன்ஃபார்ம் ஆகிவிடுகிறது. அதிரடி ஓபனிங் பாடல்கள் புடிக்குமென்றால் ரசிக்கலாம். பென்னிக்கு இதெல்லாம் வேணாங்க. சூர்யாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரிவதில்லை. இன்னொரு மாஸ் ஹீரோவாக மாறாமால் தூங்க மாட்டேன் என்றிருக்கிறார் போல. விவேகா, சூர்யாவுக்கு கபிலன் போல.

குலதெய்வம் ஆறுமுகம். எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம் 

அதான் சார். இப்படித்தான் அவரும் ஹெல்த் மினிஸ்டர் ஆகனும்னு சொல்லிட்டே இருந்தார். இப்ப இந்த நிலமையில இருக்காரு.  நீங்களும் இன்னைக்கே அட்மிட் ஆயிடுங்க. எல்லோரும் டாக்டர் ஆயிடலாம்.

_____________________________________

எல்லாப் பாடல்களும் கேட்டபின் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது.இந்த ஸ்டில் பார்த்துட்டு அந்த விஷயத்த படிங்க.

singam310809_4

ஆறுச்சாமியை சாமி என்றது போல, இதில் சூர்யா துரைசிங்கம். அதான் சிங்கம். அவ்ளோதான். காதல் வந்தாலே, Stole my heart பாடல்களை மட்டும் டவுன்லோடு செஞ்சுக்கோங்க.

23 கருத்துக்குத்து:

SShathiesh-சதீஷ். on May 20, 2010 at 1:17 AM said...

விஜய்க்கு போட்டியாகா சூர்யா வருக வருக.... என்னது கார்க்கி சிங்கமா யாரப்பா சிங்கத்துக்கு முன்னுக்கு அ போடிறது....

RaGhaV on May 20, 2010 at 1:39 AM said...

அருமையான விமர்சனம் சகா.. மிகவும் ரசித்தேன்.. :-))

சுசி on May 20, 2010 at 1:58 AM said...

//இதோ வறேண்டா நண்பா என சீறிப் பாய்கிறது இந்த நட்பு சிங்கம்.//
:))

நல்ல விமர்சனம் கார்க்கி..

//இந்தப் பாட்டுக்காகவாது யாரேனும் பார்ட்டி வைங்கப்பா.//
வைங்களேன்பா.. கேக்குறாரில்ல..

நாய்க்குட்டி மனசு on May 20, 2010 at 8:14 AM said...

அதை இன்னொரு காப்பி போட்டிருக்கிறார் //
மருமகள் ஏற்கனவே போட்ட டிகாஷனில் காபி போடா"அவங்க கண்டு பிடிச்சிட மாட்டாங்களா?" மாமியார்
"இத்தனை நாள் நீங்க கண்டு பிடிச்சீங்களா? " மருமகள்
இது தான் நினைவு வருது.

கார்த்திகைப் பாண்டியன் on May 20, 2010 at 8:59 AM said...

எனக்கு எந்தப் பாட்டுமே பிடிக்கல சகா.. one crap of an album..:-(((

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on May 20, 2010 at 9:10 AM said...

கார்க்கி படத்துல 1.02 லேர்ந்து 1.06 அப்புறம் 2.25 லேர்ந்து 2.32 காட்சிகள பாருங்க அதுக்குத்தான் நாங்க படத்துக்கே போறோம், வெறும் ஹீரோயின அனிமேஷன்ல மாத்தி காமிச்சு நாங்க ஒன்னும் ஒரே படத்த ஓஹோன்னு கொண்டாடலன்னு சூர்யா ரசிகர்கள் பேசிக்கறாங்க!

Cool buddy! :)

Pradeep on May 20, 2010 at 9:49 AM said...

Enna ippidi posukkunu sollitteega.. sura padathayae paakura ooraiyaa ithu.. dont worry be happy

ஜெனோவா on May 20, 2010 at 10:07 AM said...

//அதான் சார். இப்படித்தான் அவரும் ஹெல்த் மினிஸ்டர் ஆகனும்னு சொல்லிட்டே இருந்தார். இப்ப இந்த நிலமையில இருக்காரு. நீங்களும் இன்னைக்கே அட்மிட் ஆயிடுங்க. எல்லோரும் டாக்டர் ஆயிடலாம்.//
ROFL !!.. :))

இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன் சகா, :)
இசை விமர்சனத்திற்கு நன்றி !

Maduraimalli on May 20, 2010 at 10:20 AM said...

//ஆறுச்சாமியை சாமி என்றது போல, இதில் சூர்யா துரைசிங்கம். அதான் சிங்கம். அவ்ளோதான்.

Vettaikaranla anushkha, surala tamanna mathiri irukkaathu bossu

கார்க்கி on May 20, 2010 at 11:00 AM said...

சதீஷ், கஷ்டபடாதிங்க சகா.. உங்கள அபப்டி சொல்ல நான் விடமாட்டேன் :)

நன்றி ராகவ்

நன்றி சுசி

நாய்க்குட்டி, ஹிஹிஹிஹி

கா.பா, காதல் வந்தாலே????

ஷங்கர், ஆதவன்ல நயந்தாரா கேரக்டர் எப்படி இருந்துச்சு.. அந்த மாதிரி அனுஷ்காவுக்கு முக்கியமான கேரக்டராம் சிங்கத்துல..

பிரதீபா, பேங்குல காச போடலாம். அதுக்குன்னு ஃபினான்ஸ் கம்பெணில போட முடியுமா?

நன்றி ஜெனோவா

மதுரைமல்லி, அதே மாதிரிதான் அனுஷ்கா கேரக்டர் இருக்குமென்கிறேன் நான். எவ்ளோ பந்தயம்???

_______________________-

ஒரு விஷயம். எவ்ளோ பேரு செந்தில் 60 இட்லி சாப்பிட்ட மாதிரி விஜய் வித்யாசமா நடிப்பாருன்னு நம்பிக்கைல எல்லா படத்தையும் பார்த்தீங்க? ஆனா இதுவரைக்கும் மாறினாரா? ஆனா சூர்யாவ பாருங்க.. நல்லா நடிச்சிட்டு இருந்தவரு இப்படி மாறிட்டாரு... இதுல இருந்து என்ன தெரியுது? விஜய் யார் மாதிரியும் மாற மாட்டாரு.. எல்லோரும் விஜய் மாதிரி ஆகத்தான் ட்ரை பண்ணுவாங்க... போங்க பாஸ்.. முதல்ல நீங்க படிங்க. அப்புறமா உங்க புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்க

மோனி on May 20, 2010 at 11:16 AM said...

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, (மணிரத்னம்) -
அப்புறம்...
ABCDEDGHIJKLMNOPQUSTUVWXYZ,
Then
1,2,3,4,5,6,7,8,9,0

ஆத்தா நான் ஃபெயிலாயிட்டேன்...

Maduraimalli on May 20, 2010 at 11:27 AM said...

tea innum varlae..

athukkulae soodi irukkathu, pakathu kadai copy of tea sonna eppidi saga... poruppaar bhoomi aalvar

ஜெட்லி on May 20, 2010 at 12:14 PM said...

பாட்டு செம ஹிட்....!!
விஜய்க்கு அடுத்த இடம் சூர்யாக்கு தான்னு நினைக்கிறேன்...

லோகேஷ்வரன் on May 20, 2010 at 12:36 PM said...

//இதுவரை விஜய் மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ்வாதிகளிடம் மாட்டிக் கொண்டிருந்தார். இதோ வறேண்டா நண்பா என சீறிப் பாய்கிறது இந்த நட்பு சிங்கம்//

இன்னிக்கு காலைள்ள வந்த sms

பாட்ஷா டயலாக் ..

ANTONY : உன்னை ஆதவன் படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .

BADSHA: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு சிங்கம் Trailer காட்டி 3Sec ல

முடிக்கிறேன் ..

ர‌கு on May 20, 2010 at 12:46 PM said...

சூர்யா உய‌ர‌ம் க‌ம்மிங்க‌ற‌துக்காக‌ இவ்வ‌ளோ ந‌க்க‌ல் அடிச்சிருக்க‌ வேணாம் ச‌கா, டாம் க்ரூஸ், ஷாரூக்கான், ஆமிர்கான்லாம் கூட‌ உய‌ர‌ம் க‌ம்மிதான். அவ‌ங்க‌ள்லாம் உய‌ர‌மான‌ ஹீரோயின்ஸ்கூட‌ ந‌டிக்க‌லியா என்ன‌?

இரசிகை on May 20, 2010 at 2:01 PM said...

//
ஒரு விஷயம். எவ்ளோ பேரு செந்தில் 60 இட்லி சாப்பிட்ட மாதிரி விஜய் வித்யாசமா நடிப்பாருன்னு நம்பிக்கைல எல்லா படத்தையும் பார்த்தீங்க? ஆனா இதுவரைக்கும் மாறினாரா? ஆனா சூர்யாவ பாருங்க.. நல்லா நடிச்சிட்டு இருந்தவரு இப்படி மாறிட்டாரு... இதுல இருந்து என்ன தெரியுது? விஜய் யார் மாதிரியும் மாற மாட்டாரு.. எல்லோரும் விஜய் மாதிரி ஆகத்தான் ட்ரை பண்ணுவாங்க... போங்க பாஸ்.. முதல்ல நீங்க படிங்க. அப்புறமா உங்க புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்க
//

:))

கார்க்கி on May 20, 2010 at 2:40 PM said...

மோனி, என்ன இதெல்லாம்??

மதுரைமல்லி, அதெல்லாம் சொல்லலாம் சகா.. ஹரியை பத்தியும் எங்களுக்கு தெரியும்..:)))

ஜெட்லீ, நானும் மூனு பாட்டு ஹிட்டுன்னுதான் சொல்லியிருக்கேன்.. விஜய்க்கு அடுத்த இடம் சொன்னதற்கு நன்றி :)

லோகேஷ், ஹிஹிஹி..எனக்கு இன்னொன்னு வந்துச்சு.. இங்க வேணாம்

ரகு, யார் நடிச்சாலும் கிண்டல் அடிக்கத்தான் செய்யனும்.. உயரம் குறைவாக இருப்பது பிரச்சினையில்லை. அப்புறம் ஏன் ஆறடி ஆளுக்கு ஆசைப்படனும் என்பதே கேள்வி.அப்புறம், ஏன் சூர்யாவை கிண்டலடிச்சா வேணாம்னு சொல்றீங்க? :))

நன்றி ரசிகை :)

Anbu on May 20, 2010 at 6:11 PM said...
This comment has been removed by the author.
ஷர்புதீன் on May 20, 2010 at 8:15 PM said...

i willbe in chesscube.com with the ID - vellinila, u can catch me daily around 8-10pm

Maduraimalli on May 21, 2010 at 8:03 AM said...

saga, visay had made trend in TN with attu movies.. also got many fans like you.. surya need to make happy for visay fans..for other fans check the
link below

http://sify.com/movies/Suriya-s-deadly-fight-scenes-in-Raktha-Charithra-imagegallery-kollywood-kfupvIiabhj.html

unga thalaivarukku ithu ellam act panna varathaa?? athu sari act panni therinja thaanaenu solla varringala

கார்க்கி on May 21, 2010 at 10:25 AM said...

அன்பு, ஏம்ப்பா டெலீட்டிட்ட :))

ஷர்புதீன், நான் வந்தேனே. உங்கள காணோம். என் ஐடி iamkarki

mathuraimalli, நான் சூர்யாவுக்கு நடிக்க தெரியடஹுன்னு சொல்ல.இங்க சிங்கம் பத்தி பேசறோம். அதுக்கு பதில் சொல்லுங்க...

லெமன் ஜூஸ் வேணுமா? உங்க தலைவர் கழுத்துல இருக்குங்க. எடுத்துகலாம் :)

மாரி-முத்து on May 21, 2010 at 8:15 PM said...

கலக்கல்...
//சிங்கமும் ஒட்டகசிவிங்கியும் ன்னு ஆரம்பிச்சு//...
//வாடா மாப்ளேவின் ஒன்னு விட்ட மாமன் முறை ...//
//இன்னொரு மாஸ் ஹீரோவாக மாறாமால் தூங்க மாட்டேன் என்றிருக்கிறார் ...//
//அதான் சார். இப்படித்தான் அவரும் ஹெல்த் மினிஸ்டர் ஆகனும்னு சொல்லிட்டே இருந்தார். இப்ப இந்த நிலமையில இருக்காரு. நீங்களும் இன்னைக்கே அட்மிட் ஆயிடுங்க. எல்லோரும் டாக்டர் ஆயிடலாம்....//.


சிரிச்சு சிரிச்சு ....முடியல...

கிறிச்சான் on July 26, 2010 at 11:19 AM said...

சார், நீங்கல்லாம் ஒலக சினிமா பாக்குறவங்க, ஹீரோ'வோட உயரத்தையே ஏன் நோண்டுறீங்க?
ஏன் ஒயரம் கொறைவானவங்க, ஒயரம் கூடின பொண்ணு கூட நடிக்க கூடாதா?
கல்யாணம் பண்ணப் பிடாதா?
காதல் கூட ஒயரம் பாத்து தான் பண்ணனும் போல இருக்கே?

இது என்ன லாஜிக்'னு சொல்லி தாங்க ப்ளீஸ்!!!

 

all rights reserved to www.karkibava.com