May 10, 2010

விஞ்ஞான சிறுகதை


 

கி.பி. 2020.

அந்த கிராமத்தின் மிக குறுகலான சந்தில் இருக்கும் வீட்டில் இருந்துதான் அந்த சத்தம் கேட்டது.  அந்த வீட்டின் சன்னல் வழியே தெறித்து வந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் “50 FEET ROAD” என்று ஒளிர்ந்துக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே வழிகாட்டி மீது விழுந்தது. விழுந்த அதிர்வில் வீட்டின் வெளியே நின்றிருந்த ஹார்வெஸ்டர் மிஷினின் அலாரம் கீகீகீயென கத்தத் தொடங்கியது. மிச்சமிருந்த உயிரைக் கொண்டு இன்னமும் பாடியது ஸ்பீக்கர்.

நில்லுடா என்ற குரலுக்கு பதில் சொல்லாமல் வெளியே வந்த ராகேஷ், தன் வாட்ச்சை அழுத்த தூரத்தில் நின்ற ஹார்லி டேவிட்சன் பைக் உறும தொடங்கியது. ஏறியமர்ந்தவன் முறுக்கிய வேகத்தில், வீட்டு மெயின் கேட் சென்சாரின் சிக்னல் கண்ட்ரோலுக்கு கடந்து திறப்பதற்குள் முன் சக்கரம் நங்கென கேட்டின் மீது மோதியது. ஓவர் ஸ்பீட் அலாரமும் சேர்ந்து அடிக்க “அப்பனும், அலாரமும் அடங்கினதா சரித்தரமே இல்ல போலிருக்கு” என்றபடி வெளியேறினான் ராகேஷ்.

”விளையாடத்தானே போறான். அவனை ஏன் திட்டறீங்க?” வழக்கமான அம்மாவின் பணியை செவ்வனே தொடங்கினாள் கலையரசி. ராகேஷின் அம்மா. ”அவன் என்ன கோல்ஃப் விளையாடவா போறான்? நம்பிட்டே இரு. அவன் பைக்ல ஜிபிஎஸ் நேத்துதான் செட் செஞ்சேன். அவன் எங்க போறான்,, என்ன பண்றான்னு காட்றேன் வா என அழைத்தார் ராகேஷின் அப்பா.  அவர் சென்ற அந்த அறையின் கதவு, அவரின் கைரேகையை பதிவு செய்து சோதனை செய்தபின் திறந்தது “வாங்க நல்லக்கண்ணு” என்ற வரவேற்பும் தந்தது. 72 இன்ச் எல்.ஈ.டியை ஆன் செய்தவர் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி ரிமோட்டாக மாற்றினார். எதையோ அவர் அழுத்த அந்த பிரம்மாண்ட திரையில் ராகேஷின் ஹார்லி டேவிட்சன் பச்சை நிற புள்ளியாக தெரிந்தது. வலது கீழ் மூலையில் சிவப்பு நிறத்தில் 250 KMPH என்று ஒளிர்வதைக் கண்டு இன்னும் பிபி ஏறியது அவருக்கு. பார்த்தியா 200ல போனா கெளரவ குறைச்சல் சாருக்கு” என்று அம்மாவிடம் சண்டைக்கு போனார்.

அவன் எங்கதாங்க போறான் என்று உங்களைப் போலவே கலையரசியும் ஆர்வம் தாங்காமால் கேட்டார். “மேப்ல பாரு. ”வில்லேஜ் வில்லாவுக்கு போறாரு.  அதுவும் காலைல 6 மணிக்கு. அங்க என்ன தெரியுமா?அதையும் காட்றேன்”.  என்றவர் அருகில் இருந்த இன்னொரு திரையில் பிரவுசரை ஓப்பன் செய்தார். www.villagevilla.com என்று தளத்தில் நுழைந்தவர், ஒரு வீடியோவை க்ளிக்கி ஓட விட்டார்.

வில்லா முழுக்க அலங்கார விளக்குகளால் ஜோடிக்கப் பட்டிருந்தது. நியான் விளக்குகளின் வெளிச்சம் அந்த கட்டிடம் முழுவதையும் தங்கம் போல தகதகவென ஜொலிக்க வைத்தது. இரண்டு வயது குழந்தை முதல் 75 வயது கிழவர் வரை அனைவரின் முகத்திலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை காண முடிந்தது. இளம்பெண்கள் குளிரையும் பொருட்படுத்தாது தங்கள் புல் ஓவரை கழட்டி தலைக்கு மேல் சுற்றி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். வேகமாக பார்க்கிங்கில் நுழைந்த ராகேஷ், அட்டையை ஸ்வைப் செய்தபின் அந்த கூண்டுக்குள் வண்டியைத் தள்ளினான். அது அப்படியே அலேக்காக பைக்கை மேலே தூக்கி சென்று ஒரிடத்தில் இறக்கி வைத்து மீண்டும் பழைய இடத்துக்கே வந்தது.நேரம் சரியாக 6 மணியாக அந்த 80 அடி திரை மின்ன தொடங்கியது. கீழிருந்து மேலாக திரை விலக உள்ளேயும் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.

”இளைய தளபதி விஜய் நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன்” என்ற எழுத்தின் மேல் ஸ்லீவ்லெஸ் டாப்புடனும், அழகிய கார்கோவுடனும் நின்று கொண்டிருந்தார் நடிகர் விஜய். ஒரே நேரத்தில் வில்லா முழுக்க இருந்த ரசிகர் மன்ற எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள் ஒளிரத் துவங்கின. “LONG LIVE OUR CM – Rakesh& frds” என்ற கேப்ஷனோடு இருந்த எல்.ஈ.டியை தனது கூலிங் கிளாசில் இருந்த கேமரா மூலம் படம்பிடித்துக் கொண்டிருந்தான் ராகேஷ்.

வீடியோவில் லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த ராகேஷின் அப்பா சொன்னார் “இவனையெல்லாம் பி.ஈ படிக்க வைத்து வேலைக்காக ஒவ்வொரு ஐ.டிபார்க்குக்கும் அலைய வச்சிருக்கணும். இம்போர்ட்டட் ஹார்வெஸ்டர் மிஷினும், ஸ்பெயின் நாட்டு மாடு 10ம் வாங்கித தந்திருக்கேன் இல்ல. இப்படித்தான் சினிமா சினிமான்னு விஜய் படம் பார்த்துட்டு இருப்பான். எல்லாம் என் தலையெழுத்து. ” கோவத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தவர் காலில் ஸ்பீக்கர் தட்டுப்பட்டு பாடத் தொடங்கியது

“இவனைப் போல தலைவன் யாரடா..
இவனை வெல்ல இங்கே யாரு கூறடா”

பிகு: படம் முடிந்து வெளியே வந்ததில் பாதி பேர் தத்தம் மொபைலில் டைப்பி பதிவு போட்டன்னர். அனைவரும் சொல்லி வைத்தது போல “இனிமேல் விஜய் படம் பார்க்கக்கூடாது. இவன் திருந்தவே மாட்டான்” என்பதாக இருந்தது அது.

40 கருத்துக்குத்து:

சுசி on May 11, 2010 at 12:25 AM said...

ஓ.. இதான் அதா..

கலக்கறேள் கார்க்கி.. நேத்து ஃபோட்டோகிராஃபி இன்னைக்கு விஞ்ஞான கதை.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..
(பேசின அமவுண்ட் நினைவிருக்கட்டும்)

யார் கண்டா.. 2020ல பப்லு இத செஞ்சாலும் செய்யலாம்..

சுசி on May 11, 2010 at 12:27 AM said...

மீ த ஃபர்ஷ்டேய்னு சொல்ரதும் ரொம்ப குஷியா இருக்கு.. ஹிஹிஹி..

மங்களூர் சிவா on May 11, 2010 at 12:46 AM said...

:))

மங்களூர் சிவா on May 11, 2010 at 12:47 AM said...

@சுசி
என்னது 2020லயும் விஜய் ரசிகன் மாடுதான் மேய்ப்பானா???
:))

இராமசாமி கண்ணண் on May 11, 2010 at 1:03 AM said...

@சுசி
என்னது 2020லயும் விஜய் ரசிகன் மாடுதான் மேய்ப்பானா???
:))
-- ரிப்பிட்டு.

பேநா மூடி on May 11, 2010 at 1:05 AM said...

Sagaa.. Mudiyala..
Paattu jupper.. Music karthik raja payan thaana..

வெற்றி on May 11, 2010 at 1:23 AM said...

:)))))

அப்பாவி தங்கமணி on May 11, 2010 at 2:24 AM said...

//இவனையெல்லாம் பி.ஈ படிக்க வைத்து வேலைக்காக ஒவ்வொரு ஐ.டிபார்க்குக்கும் அலைய வச்சிருக்கணும்//

சொந்த கதையோ... சோக கதையோ....

2020 லயும் விஜய் படமா... நான் வல்ல விளையாட்டுக்கு... ஆள விடுங்க... நான் 2019 லையே மண்டைய போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்...

முகிலன் on May 11, 2010 at 2:30 AM said...

2020ல விஜய் முதல்வரா...

தமிழ்நாட்டை ஆண்டவன் தான் காப்பாத்தணும்.

Rathi on May 11, 2010 at 2:59 AM said...

நல்ல வேளை பப்லு உங்கள் கனவை பாதியிலேயே கலைசிட்டார் போல!!

முகிலன் on May 11, 2010 at 6:40 AM said...

அந்தப் படத்துக்கும் சுறா கதைதானா?

பிரசன்னா on May 11, 2010 at 6:49 AM said...

//LONG LIVE OUR CM //

ஓ அப்போ CM ஆன பிறகும் நடிப்பாரா? அவ்வு (அவ்வ்வ்வவ்வ்வ்வ்'s shorter version)

மகேஷ் : ரசிகன் on May 11, 2010 at 8:45 AM said...

ரைட்டு.....

Bala on May 11, 2010 at 9:16 AM said...

உங்கள் கதையில் இருந்து பெறப்படும் நீதி,

2020 ஆம் ஆண்டுக்கு பிறகு கூட விஜய் திருந்த மாட்டார்.

அவர் திருந்தமாட்டார் என்று தெரிந்தும் அவர் படம் பார்ப்பதை யாரும் நிறுத்த மாட்டார்கள்

முதலமைச்சர் விசயத்தில் மக்களுக்கு எப்போதுமே மூளை இருக்காது.

பி.கு. : இளைய தளபதி விஜய் மற்றும் குட்டி தளபதி சஞ்சய் இணைந்து கலக்கும் என்றிருந்தால் சூப்பராக இருக்கும்.

சங்கர் on May 11, 2010 at 9:36 AM said...

// முகிலன் said...
அந்தப் படத்துக்கும் சுறா கதைதானா?//

சுறால கதையா? என்ன கொடுமை தினேஷு

கார்க்கி on May 11, 2010 at 10:19 AM said...

@சுசி,
நன்றி

@சிவா,
2020ல இஞ்சினியரிங் படிச்சா வேலை கிடைக்காது. விவசாயம்தான் ஹிட்டாகும் என்பதே கதையின் அடிநாதம். அது புரியாம பேசிட்டு வெட்டி கலாய்த்தல வேறயா? :)))

@ராமசாமி,
மேல சொன்னதும் உங்களுக்கும்தான் பாஸ் :)

பேநா மூடி,
ஏன் பாஸ்? 10 வருஷத்துல மணிசர்மா,விஜய் ஆண்டனி எல்லாம் இருக்க மாட்ங்களா?

நன்றி வெற்றி

தங்கமணி,
ஏதோ என்னால் முடிஞ்ச ஒரு சேவை நாட்டுக்கு. ஒரு தங்கமணி அப்பீட்டேய்

@முகிலன்,
2020 விஜயும் ஆண்டவன் ஆயிடுவாரு சகா. அதாவது தமிழகத்தை “ஆண்டவர்”னு சொல்ல வறேன் :))

@ரதி,
ஹிஹிஹி... கனவு நனவாகும் ஒரு நாள் மேடம் :)

@பிரசன்னா,
பழச மறக்கிற ஆள் நாங்க இல்ல பாஸ் :)

@மகேஷ்,
என்ன சொல்ற? கட்சில சேர்ந்துக்கிறியா?

@பாலா,
நீங்க சொன்னதுல இரண்டாவதுதான் முக்கியமான மேட்டர் :)

@சங்கர்,
அதானே? அது கதையா? காவியம் பாஸ் காவியம். ரைட்டா சங்கர்?

இரசிகை on May 11, 2010 at 10:34 AM said...

:)

nice.....!

வால்பையன் on May 11, 2010 at 10:42 AM said...

விஜய் கூட திருந்திரலாம், ஆனா உங்களை தான் என்ன பண்றதுன்னு தெரியல!

கரன் on May 11, 2010 at 10:50 AM said...

விஜய் படங்களிலேயே இதுவரை காணாத படுதோல்வியைச் சந்தித்துள்ளது சுறா.
-thathstamil.com

ஆனால்,

முதல் வாரத்தில் சென்னையில் மட்டும் 2.05 கோடி ரூபாய்கள் வரை வசூலித்துள்ளது.
-behindwoods.com

---------------------------------

தங்கள் கற்பனைக் கதையில் உள்ள உண்மை சுடுகிறது.
நன்றி.

விரைவில் தளபதி நல்ல மாற்றங்களோடு வருவாரென நம்புவோம்.
நம்பிக்கைதானே வாழ்க்கை!

Anonymous said...

no no
me the first.


:)))):))

Anonymous said...

2020 லயும் விஜய் படமா... நான் வல்ல விளையாட்டுக்கு... ஆள விடுங்க... நான் 2019 லையே மண்டைய போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்-----

no no

avasarapada pidathu....

கில்லிகள் on May 11, 2010 at 11:05 AM said...

சுறா தோல்விதான். ஆனா தட்ஸ்தமிழில் சொல்வது போல் படுதோல்வியில்லை.சென்னையில் இரண்டாவது வீக் எண்ட் வசூல் மட்டும் 57 லட்சம்.முதல் வாரயிறுதியில் 90 லட்சம். அசல், பையாவெல்லாம் முதல் வாரமே 62, 65 லட்சங்கள்தான்.

source- behindwoods.com

அதை நம்பமுடியாது என்பவர்கள் சினிமாவில் இருப்பவர்களை கேட்ட தெரிந்துக் கொள்ளுங்கள். படம் சுமார்தான் என்றாலும் கலெக்‌ஷன் ஸ்டெடி.

அதிஷா on May 11, 2010 at 11:16 AM said...

நல்ல பதிவு நன்றி குசும்பன்

அதிஷா on May 11, 2010 at 11:17 AM said...

மச்சி 20 வருஷத்துக்கு முன்னால ராமராஜன் கூட இப்படித்தான்.. எல்லாரும் அவரோட படத்தை பார்ப்பாங்க பார்த்துட்டு திட்டுவாங்க!

குசும்பன் on May 11, 2010 at 11:21 AM said...

கார்க்கி அந்த பையன் நீதானே?:)))

நேசன்..., on May 11, 2010 at 11:27 AM said...

ஒரு விஜய் ரசிகரா இதைத் தவிர வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க?.......

கார்க்கி on May 11, 2010 at 11:55 AM said...

நன்றி ரசிகை

வால், விடுங்க பாஸ்.. ஊருல இன்னும் நிறைய பேரு இருக்காங்க. அவஙக்ள போய் திருத்துங்க :)

நன்றி கரண்.

நன்றி சூர்யா

கில்லிகள், இது யாருக்கு? கரணுக்கா?

// அதிஷா said...
நல்ல பதிவு நன்றி குசும்பன்
//

நன்றி லக்கி

குசும்பன், என்னை மாதிரி ஒரு பையன்னு வச்சுக்கொங்களேன் :))

நேசன், நீங்கதான் விஜய் ரசிகர் இல்லயில்லையா? என்ன செஞ்சிருக்கிங்கன்னு சொல்லுங்க சகா :)))

ஜானு... on May 11, 2010 at 12:16 PM said...

:-) ha ha ha ..

♠ ராஜு ♠ on May 11, 2010 at 12:29 PM said...

கலக்கல்...!

Ganesh on May 11, 2010 at 12:37 PM said...

:)))))

கரன் on May 11, 2010 at 1:12 PM said...

கில்லிகள் said...
//படம் சுமார்தான் என்றாலும் கலெக்‌ஷன் ஸ்டெடி.//

அதைத்தான்(யதார்த்தத்தை) நானும் கூறவந்தேன்.

கார்க்கி said...
//கில்லிகள், இது யாருக்கு? கரணுக்கா?

நானும் உங்க ஆளுதான் சகா...


மேலதிக கொசுறு தகவல்:

one week chennai collection of movies :
unnaippol oruvan - 1.60 Crore
VTV - 1.83 Crore
aadhavan - 1.99 Crore
Asal - 1.56 Crore
Sura - 2,05 Crore

-behindwoods.com

பனங்காட்டான் on May 11, 2010 at 2:26 PM said...

அய்யய்யோ இந்த அநியாயத்தக் கேட்க யாருமே இல்லையா?

விக்னேஷ்வரி on May 11, 2010 at 4:31 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்

Deivasuganthi on May 11, 2010 at 6:45 PM said...

:-))

அனுஜன்யா on May 11, 2010 at 7:14 PM said...

நல்லா இருக்கே - செம்ம ஸ்பீடா போகுதேன்னு பார்த்தா, மொக்கை போடாம இருக்க முடியல உன்னால :). சீரியசாகவே ஒரு sci-fi கதை எழுதேன்.

அனுஜன்யா

அறிவிலி on May 11, 2010 at 7:34 PM said...

மை காட்... விஞ்ஞான கதையா???
தலைப்புல எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லியே?

ஷர்புதீன் on May 11, 2010 at 9:51 PM said...

ANAND WON!!!!

ஆதிமூலகிருஷ்ணன் on May 12, 2010 at 12:24 AM said...

அப்பாவி தங்கமணி, வால்பையன், பனங்காட்டான், அனுஜன்யா.. கமெண்டுகளுக்கு ரிப்பீட்டு.!!

கார்க்கி on May 12, 2010 at 1:44 AM said...

அனைவருக்கும் நன்றி

@அனுஜன்யா,
தல..நீங்க சொல்லி தட்டுவோமா? எழுதிடறேன்..

ஷர்புதீன்,
பார்த்தேன் தல.. :)

தமிழ்ப்பறவை on May 13, 2010 at 12:15 AM said...

thalai.. really nice... enjoyed it...

 

all rights reserved to www.karkibava.com