May 5, 2010

உஷார் பத்ரி ரெய்டு


 

join__gurlzgroup__008  

  ”ஏண்டா என்னைப் பார்த்து பேச மாட்ற. பசங்க பார்த்து பேசினாதான் பொண்ணுங்களுக்கு புடிக்கும்” என்கிறாள் தோழி. என் கண்ணையே நான் பார்த்து பேசணுமா என்ன” என்றேன் நான். சற்று நேரம் யோசித்தவள் “நான் உன் கண்ணுன்னு சொல்றியா?” என்றாள். “ஆமாம். கண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பதுதான் இப்போதைய கேள்வி” என்றேன். மீண்டும் முழிக்கத் தொடங்கினாள்.

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

”எத்தனை தடவை நான் கேட்காம நீ ஐ லவ் யூ சொல்லியிருப்ப” என்று சண்டைக்கு வருகிறாள் தோழி. ”உனக்கு கேட்கும்படி ஐ லவ் யூ சொல்லி மாட்டிக்க நான் என்ன முட்டாளா?” என்றேன் நான்.  ஐ லவ் யூ என்று மற்ற தோழிகளிடம் சொல்வதைத்தான் சொன்னேன் என்பது வழக்கம் போல் புரியிவைல்லை என் செல்லத்துக்கு.

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

ஒவ்வொரு முறை என்னைக் கட்டிக்கோ என்று இரண்டு கைகளையும் தோழி நீட்டும் போதும் இரண்டடி முன்னால் செல்வேன் நான். நான் கேட்கும் போதெல்லாம்  கையை மட்டும் நீட்டுவாள்.  # உஷார் பத்ரி ரெய்டு

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

தொலைபேசியை சிரித்துக்கொண்டே எடுக்காதே என்றால் முடியாது என்கிறாள் தோழி .எடுத்த பின்பும்  ரிங் அடித்துக் கொண்டிருப்பதாய் நினைத்து பேசாமலே இருக்கிறேன் என்பதை சொன்னால் மீண்டும் சிரிப்பாள் என விட்டுவிட்டேன்

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

சஞ்சிகையில் பார்த்ததுண்டு. புத்தகமாய் பார்த்ததுண்டு..வாழ்த்து அட்டையில் கூட. இப்போதுதான் முதல் முறை சுடிதாரில் பார்க்கிறேன் கவிதைகளை என்றேன் தோழியிடம். கவிதை நான் சரி. கவிதைகள்ன்னா யாரெல்லாம் என்று மிரட்டினாள். கவிதைகள் காண என் கண் சென்ற திசையைக் கண்டவள் அடிக்க துரத்தினாள்

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

நகம் கடிக்கும் பழக்கத்தை விடுமாறு சொன்னேன் தோழியிடம். தங்க பஸ்பம் உடம்புக்கு நல்லதுதானே என்றாள். பைத்தியக்காரி. வைரம் வயித்தையே அறுத்துடும் என்பது கூட அறியவில்லை அவள்.

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

பூக்கள் இரண்டை அழகாய்  எம்பிராய்டரி போடப்பட்டிருந்த சட்டையில் வந்தாள் தோழி. என் சிரிப்பைக் கண்டு பயந்தவள் அதை மறைக்கும்படி மேல்சட்டை அணிந்தாள். பூக்களை மறைத்த பூக்களையே மறைக்கிறாயே என்றேன். உதடு சுழித்து தன் அறியாமையை மீண்டும் நிரூபித்தாள்

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

உதடுகள் பேசும் வார்த்தைகளை விட இதயங்கள் பேசும் வார்த்தைக்கு அர்த்தம் அதிகம் என்கிறாள் தோழி. சரியென்ற நான் ஒரு கமலஹாசன் முத்தம் தாயேன் என்றேன். துள்ளி வந்தவளிடம் இதற்கு மட்டும் உதடுகள் எதற்கு என்றவுடன் வெட்கி, நாணி, கோணி ஓடினாள், முத்தம் தந்த பின் தான்.

44 கருத்துக்குத்து:

அன்புடன்-மணிகண்டன் on May 5, 2010 at 11:41 PM said...

ஹ்ம்ம்ம்... பெருமூச்சு.. வேறொன்னுமில்ல.. :)

அன்புடன்-மணிகண்டன் on May 5, 2010 at 11:45 PM said...

சொல்ல மறந்துட்டேன்.. நீங்க நடத்துங்க பாஸ்.. :) :)

Truth on May 6, 2010 at 12:44 AM said...

பெஸ்ட்!

Kiruba on May 6, 2010 at 1:11 AM said...

கலக்குறீங்க கார்க்கி! உங்க தோழி கொடுத்து வச்சவங்க.

சுசி on May 6, 2010 at 1:49 AM said...

எல்லாமே கலக்கல்.. கடைசி செம..

சிவகாமி சிவகாமி சிவகாமி..

கமல் சொன்னது..

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

கார்க்கி சொல்றது..

மீ த எஸ்கேப்பேய்..

nagarajan on May 6, 2010 at 3:15 AM said...

Saga, kurumbu jasthi aaidichu

டம்பி மேவீ on May 6, 2010 at 6:15 AM said...

"உஷார் பத்ரி ரெய்டு (கார்க்கி)"


யார் அந்த பத்ரி ..... இது தோழி அப்டேட்ஸ் இல்லையா ??

(உங்களுக்கும் கிழக்குக்கும் எதாவது சண்டையா ?????)

இந்த பதிவு நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை....

இரா.சிவக்குமரன் on May 6, 2010 at 6:18 AM said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........................

பட்டாபட்டி.. on May 6, 2010 at 6:23 AM said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க பாஸ்..

taaru on May 6, 2010 at 7:47 AM said...

இங்க தான் நிக்குறீங்க சகா... அருமை..ரொம்ப ரசித்தது...!!!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on May 6, 2010 at 8:29 AM said...

சீயான் கார்க்கி...........!

(ஒதுங்கிக்கறோம் சைடு! ) :)

மகேஷ் : ரசிகன் on May 6, 2010 at 8:33 AM said...

Cute....

Last four are awesome!

kalakkurel ponga.

நாய்க்குட்டி மனசு on May 6, 2010 at 8:37 AM said...

”எத்தனை தடவை நான் கேட்காம நீ ஐ லவ் யூ சொல்லியிருப்ப” என்று சண்டைக்கு வருகிறாள் தோழி. ”உனக்கு கேட்கும்படி ஐ லவ் யூ சொல்லி மாட்டிக்க நான் என்ன முட்டாளா?” என்றேன் நான். ஐ லவ் யூ என்று மற்ற தோழிகளிடம் சொல்வதைத்தான் சொன்னேன் என்பது வழக்கம் போல் புரியிவைல்லை என் செல்லத்துக்கு//
ஆண்களுக்கு இப்படி ஒண்ணுமே புரியாதவங்களைத்தான் ரொம்ப பிடிக்கும் இல்ல? அதனாலேயே நாங்க புரியாத மாதிரி நடிக்கிறோம்கிறது அவங்களுக்கு புரியிறதில்ல.

மகேஷ் : ரசிகன் on May 6, 2010 at 8:47 AM said...

// நாய்க்குட்டி மனசு said...

ஆண்களுக்கு இப்படி ஒண்ணுமே புரியாதவங்களைத்தான் ரொம்ப பிடிக்கும் இல்ல? அதனாலேயே நாங்க புரியாத மாதிரி நடிக்கிறோம்கிறது அவங்களுக்கு புரியிறதில்ல. //

அப்படிப் போடு அருவாள!

U on May 6, 2010 at 8:58 AM said...

கார்க்கி,

இந்த தோழி மேட்டர் உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

என். உலகநாதன் on May 6, 2010 at 8:59 AM said...

கார்க்கி,

இந்த தோழி மேட்டர் உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

தராசு on May 6, 2010 at 9:13 AM said...

//கவிதைகள் காண என் கண் சென்ற திசையைக் கண்டவள் அடிக்க துரத்தினாள்//

)))))))))))))))

செ.சரவணக்குமார் on May 6, 2010 at 9:15 AM said...

கலக்கல் கார்க்கி. கடைசி அப்டேட் சூப்பர்.

ஜானு... on May 6, 2010 at 9:45 AM said...

:-) :-) :-)

புன்னகை on May 6, 2010 at 9:49 AM said...

//ஒவ்வொரு முறை என்னைக் கட்டிக்கோ என்று இரண்டு கைகளையும் தோழி நீட்டும் போதும் இரண்டடி முன்னால் செல்வேன் நான். நான் கேட்கும் போதெல்லாம் கையை மட்டும் நீட்டுவாள்.//
தோழி மானம் கப்பலேருதுடோய்! :-)

கார்க்கி on May 6, 2010 at 9:56 AM said...

மணி, அந்த ஹெடர் ஃபோட்டோல தோழி ஃபோட்டோவும் சேர்த்திடுவோமா? :)

நன்றி ட்ரூத். நல்லபடியா போச்சா?

கிருபா, ம்க்கும்ண்ணே :)

சுசி, சொல்லுங்க. குணா எல்லோரையும் அபிராமின்னு சொல்வாரு. கார்க்கி எல்லோரையும் தோழின்னு சொல்வாருன்னு சொல்லி மாட்டிவிடுங்க

நாகராஜன், தோழிக்குதானே? ஆமா சகா

மேவீ, நீ என்ன எதிர்பார்த்த? தோழன் அப்டேட்ஸா? அடிங்

சிவா, ம்ம்ம்ம்

பட்டாப்பட்டி, யோசிச்சு எழுதுங்க பாஸ். யாராவ்து quote செய்து வேற மாதிரி திரிச்சிட போறாங்க :))

டாரு, கொஞ்சம் உட்கார்ந்துக்கவா?

பலா பட்டறை, புரியலங்க நிஜமா

நன்றி ரசிகன்.. ஆனா இப்படி அருவாள போட்டா நான் என்ன ஆகறது?

நாய்க்குட்டி, அவ்ளோ எல்லாம் யோசிக்காதிங்க. நான் ஏதோ விளையாட்டுக்கு எழுதறேன் :)

U& உலகநாதன், விரைவில் உண்மையாக ஆகிடுமான்னுதான் நான் பார்த்துட்டு இருக்கேங்க

நன்றி தராசண்ணே

சரவணக்குமார், நன்றி சகா

நன்றி ஜானு

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on May 6, 2010 at 10:06 AM said...

சீயான் கார்க்கி...........!

சீயான் விக்ரமையே தூக்கி சாப்பிட்ட இடுகை!

--

(ஒதுங்கிக்கறோம் சைடு! ) :)

இது நீங்க வைத்த தலைப்பின் நீட்சி!

லோகேஷ்வரன் on May 6, 2010 at 10:32 AM said...

//பூக்கள் இரண்டை அழகாய் எம்பிராய்டரி போடப்பட்டிருந்த சட்டையில் வந்தாள் தோழி. என் சிரிப்பைக் கண்டு பயந்தவள் அதை மறைக்கும்படி மேல்சட்டை அணிந்தாள். பூக்களை மறைத்த பூக்களையே மறைக்கிறாயே என்றேன். உதடு சுழித்து தன் அறியாமையை மீண்டும் நிரூபித்தாள்//

பூ வுக்குள் ஒளித்திருக்கும் கனி கூட்டம் அதிசயம்... அப்படின்னு பாட்டு பாடி இருந்தா புரிஞ்சி இருக்கும் சகா

தாரணி பிரியா on May 6, 2010 at 10:34 AM said...

எல்லாமே சூப்பர்.

அப்புறம் இனியும் தோழி இல்லை, இது எல்லாம் கற்பனைன்னு பொய் சொல்லாதீங்க கார்க்கி :).

புன்னகை on May 6, 2010 at 10:52 AM said...

//அப்புறம் இனியும் தோழி இல்லை, இது எல்லாம் கற்பனைன்னு பொய் சொல்லாதீங்க கார்க்கி :)//
இன்னும் எத்தன நாள் தான் சொல்லாம இருக்கப் போறீங்க? சொல்லிடலாம்ல? :-)

விக்னேஷ்வரி on May 6, 2010 at 11:26 AM said...

நல்லா ஃபீல் பண்றீங்க. அதை எழுத்துக்கள்ல இன்னும் நல்லா கொண்டு வாங்க கார்க்கி. ம்ஹூம், இப்படி எழுத கார்க்கி தேவையில்லை.

Kafil on May 6, 2010 at 11:28 AM said...

karki--spelling mistkae pa...thozhi updates padichaale enakku neraya idea kedaikuthu thanks...hehehe

RaGhaV on May 6, 2010 at 11:55 AM said...

:-))

Hanif Rifay on May 6, 2010 at 1:19 PM said...

ஆஹா...நடத்துங்க பாஸ்..மச்சக்கார தோழி...

பிள்ளையாண்டான் on May 6, 2010 at 2:16 PM said...

என்னமா யோசிக்கிறார்பா? கலக்கல்ஸ்!

சின்ன அம்மிணி on May 6, 2010 at 2:27 PM said...

நல்லா இருக்கு கார்க்கி, ரசித்தேன்

Palay King on May 6, 2010 at 2:34 PM said...

நல்ல பதிவு நன்றி வெற்றி !!

Vidhoosh(விதூஷ்) on May 6, 2010 at 3:19 PM said...

இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு...

"கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா.. ரப்பர் வாயி"

"இந்த உப்புமாவையே இன்னும் பத்து நாளைக்கு கிண்டுவுயா..."

"இது ஒண்ணுதான் இப்போ பாக்கி.. ஆபீசுக்கு தொலையனும் ... தள்ளு தள்ளு.." #உஷார் கார்கி

"i am in a meeting. will call you" டக்

"எச்சி கைய தம்ப்ளருக்குள்ள விட்டு கொண்டு வராதன்னு எத்தன தரம் சொல்றது"

"மூதேவி மூதேவி"

அன்புடன்-மணிகண்டன் on May 6, 2010 at 3:52 PM said...

//அந்த ஹெடர் ஃபோட்டோல தோழி ஃபோட்டோவும் சேர்த்திடுவோமா? :)//
கண்டிப்பப்பா... :)

விதூஷ்.. உங்க கமெண்ட் அதகளம்.. :) :)

லோகேஷ்வரன் on May 6, 2010 at 4:50 PM said...

//"கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா.. ரப்பர் வாயி"//

என்ன கார்கி சந்தடி சாக்குல யாரையோ ரப்பர் வாயினு சொல்லிட்டாங்க

கார்க்கி on May 6, 2010 at 5:34 PM said...

புன்னகை, தோழி மானம் ஏன் போகப்போது?

லோகேஷ், ரைட்டு

தா.பி, அட நம்புங்க மேடம். தோழி இருக்காங்க. ஆனா வேர்னுதாங்க தெரியல :)

காஃபில், கார்க்கின்னு சரியாதானே டைப்பி இருக்கிங்க. என்ன மிஸ்டேக்?

நன்றி விக்கி. கவனத்தில் கொள்கிறேன்

ராகவ், ஹிஹிஹி

ஹனிஃப், உண்மையாகவே நான் தான் மச்சக்காரன் சகா

நன்றி பிள்ளையாண்டான்

நன்றி அம்மிணி

palay king, நன்றி பரிசல்

விதூஷ், அஞ்சு வருஷம் ஆகுமா? அப்புறம் மூதேவின்னு ரெண்டுதான் சொல்லியிருக்கிங்க

மணி, ஹிஹிஹி..ஆனா எந்த தோழியோட ஃபோட்டோ?

லோகேஷ், உங்கள இல்லை சகா., வாலண்டியர வந்து வண்டில ஏறாதிங்க :)

நர்சிம் on May 6, 2010 at 6:13 PM said...

பை த வே,.. பேரு உஷா வா சகா?

நர்சிம் on May 6, 2010 at 6:16 PM said...

//தோழி மானம் கப்பலேருதுடோய்! :-)//

;)

செந்தழல் ரவி on May 6, 2010 at 6:23 PM said...

நல்லா பொதுவுல ஜொள்ளறீங்க !!!

ஜொள்ளுவதெல்லாம் ஜொள்ளல்ல. கார்க்கி தோழி ஜில்லே லொள்ளே ஜொள்ளு.

Kiruba on May 6, 2010 at 11:57 PM said...

இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படியே எங்கியோ இருக்காங்கன்னு சொல்லிட்டிருப்பீங்க. இப்பத்தான் ரூட் க்ளியராயிடுச்சில்ல?

ஜெகநாதன் on May 7, 2010 at 6:44 AM said...

Classic!
Vidhoosh... U r 100% correct!!

இரசிகை on May 7, 2010 at 10:11 PM said...

:)

vidoosh comment...:))

ஆதிமூலகிருஷ்ணன் on May 9, 2010 at 7:08 PM said...

ஒவ்வொன்றும் அழகிய, ரசனைமிக்க கவிதைகள்.

kayal on May 12, 2010 at 4:44 PM said...

shokka soneenga vidoosh !thozhiyai vida thozhan thaan ignorant aaga iruppathu pol therigirathu..

 

all rights reserved to www.karkibava.com