May 28, 2010

பைக்க மாத்துடா கார்க்கி


 

  எப்படி சகா ஒருத்தவங்கள இந்தளவுக்கு லவ் பண்ண முடியும் என்று வியந்தார் சகா ஒருவர். தோழி அப்டேட்ஸ் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று அவரிடம் சொன்னதை போட்டு தந்துவிட்டார் தோழியிடம். “பின்ன. உனக்கும் இதுல பெரும்பங்கு இல்லையா செல்லம்” என்று சமாதானப்படுத்தினேன் தோழியை.

__________________________________________________________________________________

திடீரென கண்கள் வீங்கிவிட்டன தோழிக்கு. . என் கண்ணுக்குள்ள வராதன்னு சொன்னா கேட்டியா என்கிறாள் அவள். எப்போது அவள் மனதுக்குள் நுழையலாம் என்று காத்திருக்கிறேன் நான்

__________________________________________________________________________________

பாதி தின்ன ஐஸ் கீரிமை தா என்றேன் தோழியிடம். கொடுத்தவள் “ஐஸ் க்ரீம் நல்லா இருக்கா” என்கிறாள். “லூசு.. நீ சாப்பிட்டபின் எப்படி ஐஸாக இருக்கும்? ஹாட் க்ரீம் நல்லாத்தான் இருக்கு” என்றேன்

__________________________________________________________________________________

எங்க ஏரியா  பதிவர் ஒருவரின் பக்கத்துவீட்டுக்காரர் தன் மனைவியிடம் கேட்டாராம் “கார் கீயை நீதானே வச்சிருக்க” என்று . கூகிள் பஸ்ஸில் போட்டு அவர் மானத்தை வாங்கியதை தெரியாமல் தோழியிடம் காட்டிவிட்டேன். உடனே பேர் மாத்துடா என்றவளிடம் சொன்னேன் “இப்பவாது அது காரோட கீ என்று சமாளிக்கலாம். பேர் மாத்திட்டா என்ன செய்ய” என்றேன். வழக்கம் போல் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த லைலா சர்வ நிச்சயம்

____________________________________________________________________________________

அடுத்த புயலுக்காவது தன் பெயரை வைக்க சொன்னாள் தோழி, அடிச்சு ஓயும் புயலுக்கு உன் பெயரை வைக்க முடியாது, ஓயாமல் அடிக்கும் புயலுக்கு தான் உன் பெயரை வைக்கலாம் என்றேன்! – குசும்பன் சொன்னது

__________________________________________________________________________________

சன் டிவியின் ட்ரெயிலரைப் போல தோழி அப்டேட்ஸ் பலரையும் எரிச்சல்படவைக்கிறதாம். ஆக, தோழி அப்டேட்ஸ் சூப்பர் ஹிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

____________________________________________________________________________________

இந்த பைக்கை தயவு செய்து மாத்தேண்டா என்று நச்சரித்துக் கொண்டேயிருப்பாள் தோழி. ”உனக்கு என்ன பிரச்சினை. நீ உட்கார எவ்ளோ இடம் இருக்கு பாரு” என்று ரிப்பீட்டிக் கொண்டேயிருந்தேன் நான். சில்லிய மழைத்தூறலில் நனைந்துக் கொண்டே கடற்கரையோரம் சென்று கொண்டிருந்தபோது நெருங்கியமர்ந்தவள் சொன்னாள் “அதனால்தாண்டா மாத்த சொல்றேன்”.

yamaha_fz16_color_1

26 கருத்துக்குத்து:

RaGhaV on May 28, 2010 at 1:13 AM said...

//வழக்கம் போல் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாள்.//

தோழிய மொதல்ல அப்டேட் செய்யுங்க..

சுசி on May 28, 2010 at 1:24 AM said...

//தோழி அப்டேட்ஸ் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று அவரிடம் சொன்னதை போட்டு தந்துவிட்டார் தோழியிடம்.//

அவங்க உங்கள அநியாயத்துக்கு நம்பராங்க.. பாவம் நீங்க..

Kafil on May 28, 2010 at 1:32 AM said...

Ayya, neenga love panreengala illaya.. ore confusiona irukku, bablu kitta solli investigate panna sollanum... vara vara unga veetla rombo chellam kodukuraangappa.. kandichuveikanum

ILA(@)இளா on May 28, 2010 at 1:35 AM said...

//தோழி அப்டேட்ஸ் //
Version மாறாம இருந்தாச் சரிதான்

டம்பி மேவீ on May 28, 2010 at 6:06 AM said...

ஒரு வேளை இருக்கிற இடம் உங்களுக்கே போதாது போல் இருக்குன்னு கூட உங்களை வேற பைக் அவங்க வாங்க சொல்லிருக்கலாம்

டம்பி மேவீ on May 28, 2010 at 6:07 AM said...

"RaGhaV said...
//வழக்கம் போல் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாள்.//

தோழிய மொதல்ல அப்டேட் செய்யுங்க.."


green green green :)

மகேஷ் : ரசிகன் on May 28, 2010 at 7:33 AM said...

சகா... வர வர சின்னவீடு பாக்யராஜ் மாதிரி எழுதுறீங்க.

மகேஷ் : ரசிகன் on May 28, 2010 at 7:34 AM said...

// ஒரு வேளை இருக்கிற இடம் உங்களுக்கே போதாது போல் இருக்குன்னு கூட உங்களை வேற பைக் அவங்க வாங்க சொல்லிருக்கலாம்... //

ஹைய்யோ ஹைய்யோ

அத்திரி on May 28, 2010 at 8:54 AM said...

யப்பா இந்த "தோழி" புலம்பல் தாங்கமுடியல......பயபுள்ளய யாராவது கண்டிச்சி வைங்க

தராசு on May 28, 2010 at 9:28 AM said...

என்ன பண்றது அத்திரி அண்ணே,

எத்தனையோ சொல்லி பாத்தாச்சு, ஒண்ணும் திருந்தற மாதிரி தெரியல.

புன்னகை on May 28, 2010 at 9:47 AM said...

உங்க புது வண்டியின் புகைப்படத்திற்கு மாற்றாக தோழி புகைப்படம் இருந்திருக்கலாம் ;-)

கார்க்கி on May 28, 2010 at 10:31 AM said...

ராகவ், அது முடியாதேப்பா

சுசி, அப்ப அவங்கதானே பாவம்?

கஃபில், ஹிஹிஹி.. அவங்கக்கிட்ட பேசும்போது இதெல்லாம் பேசாதிங்க சகா. :)))

இளா, யார் வந்தாலும் அவங்க தோழிதானே? அதனால்தான் பேரு சொல்லாம தோழின்னு சொல்றேன்..

மேவீ, உஙக்ளையும் உங்க பைக்கையும்தான் நான் பார்த்தேனே

மகேஷ், பாக்யராஜ் மாதிரியா? ஹவ் ஸ்விட். அவ்ளோ நல்லாவா இருக்கு? தேங்க்ஸ் சகா

அத்திரி, அதெல்லாம் தாண்டியாச்சுங்க

தராசன்ணே, அதெல்லாம் யூத்து மேட்டர்.. நீங்க சைடு வாங்கிக்கங்க

புன்னகை, இபோதைக்கு பைக் தன என் தோழின்னு வச்சிக்கோங்க

ஆதிமூலகிருஷ்ணன் on May 28, 2010 at 11:06 AM said...

வார்த்தை விளையாட்டுகள் என்று மட்டுமே சொல்லிவிடமுடியாத காதல் நறுக்குகள்.!

ஆதிமூலகிருஷ்ணன் on May 28, 2010 at 11:07 AM said...

ரசி'க்கிறாய்.

நர்சிம் on May 28, 2010 at 11:35 AM said...

பிடிச்சிருக்கு சகா…பைக்குக்கு வாழ்த்துகள்

ர‌கு on May 28, 2010 at 11:46 AM said...

//எப்படி சகா ஒருத்தவங்கள இந்தளவுக்கு லவ் பண்ண முடியும் //

"எப்படி சகா (ஒவ்)ஒருத்தவங்கள(யும்) இந்தளவுக்கு லவ் பண்ண முடியும்" இப்ப‌டில்ல‌ இருந்துருக்க‌ணும் ;))

// ”உனக்கு என்ன பிரச்சினை. நீ உட்கார எவ்ளோ இடம் இருக்கு பாரு” என்று ரிப்பீட்டிக் கொண்டேயிருந்தான் நான்//

யாரு...நீங்க‌ளா இப்ப‌டி சொன்னீங்க‌? இத‌ நாங்க‌ ந‌ம்ப‌ணும்..அட‌ போங்க‌ பாஸ்

ப‌ட‌த்துல‌ இருக்க‌ற‌து யாரோட‌ பைக்னு தெரிஞ்சுக்க‌லாமா ச‌கா? ;))) (க‌ம்பெனி பேரை சொல்லி க‌டிக்காதீங்க‌ :)

ரமேஷ் வைத்யா on May 28, 2010 at 2:38 PM said...

hahhahahhaha

மோகன் குமார் on May 28, 2010 at 3:19 PM said...

Last one is nice & romantic.

தர்ஷன் on May 28, 2010 at 4:30 PM said...

// திடீரென கண்கள் வீங்கிவிட்டன தோழிக்கு. . என் கண்ணுக்குள்ள வராதன்னு சொன்னா கேட்டியா என்கிறாள் அவள். எப்போது அவள் மனதுக்குள் நுழையலாம் என்று காத்திருக்கிறேன் நான் //

வர வர ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க சகா

கும்க்கி on May 28, 2010 at 11:16 PM said...

அவ்..அவ்...அவ்...

கடன் வாங்கிய பின்னூட்டம் ப்ரம் ராகவன் நைஜீரியார்.

கும்க்கி on May 28, 2010 at 11:18 PM said...

ப்ரதர்...மேல ரெண்டு பைக்கு..புக் செய்தாச்சா...?

விடாமல் தொறத்துவோர் சங்கம்
டமில்நாட்.

ஊர்சுற்றி on May 29, 2010 at 3:26 PM said...

:)

விக்னேஷ்வரி on May 29, 2010 at 6:31 PM said...

கடைசி அப்டேட் தவிர மற்றதெல்லாம் ஓவர் செல்ஃப் டேமேஜ் சகா.

அஹமது இர்ஷாத் on May 30, 2010 at 3:19 PM said...

என்னன்னு சொல்றது...?

மதுரை சரவணன் on May 31, 2010 at 1:35 AM said...

நல்லாவே எழுதுறீங்க.கடைசியில அசத்திட்டீங்க..வாழ்த்துக்கள்.

எனதுகுரல் on June 1, 2010 at 11:16 PM said...

Nice..especially last one...
//“அதனால்தாண்டா மாத்த சொல்றேன்”.

Copy right unda :)

 

all rights reserved to www.karkibava.com