May 27, 2010

போடாங்ங்ங்ங்ங்


 

xxx: சகா எபப்டி இருக்கிங்க?

me : மிக்க நலம். தாங்கள்?

xxx : என்னப்பா? மொக்கை தர்பார் எழுதிட்டு இருக்கியா? தூய தமிழ்ல விளாசுற.. ஆனா சகா. மொக்கை தர்பார் எழுதறத நிறுத்துங்க. அதெல்லாம் கலோக்கியலா ஏழு சொன்னாதான் நல்லா இருக்கு

me : ரைட்டு சகா.அதை நான் எபப்வோ ஸ்டாப் பண்ணிட்டேன். நன்றி

xxx : அட.இதுக்கெல்லாம் எதுக்கு சகா தேங்க்ஸ். நர்சிம் அளவுக்கு உன்னால கவிதையெல்லாம் எழுத முடியலனாலும் எப்பவாது கவிதைன்னு எழுதி உயிர வாங்குவியே. அது கூட ஸ்டாப் பண்ணிடலாம். என்னைக் கேட்டா சிறுகதை கூட வேணாம்

me : சிறுகதையுமா பாஸ்? அது மாசத்துக்கு ஒண்ணுதான் எழுதறேன். வேணாமா?

xxx : என்னவோ உங்கிட்ட சொல்லனுன்னு தோணுச்சுப்பா. நீயெல்லாம் நல்லா எழுதறவன் அதனால் சொன்னேன்

me : ம்ம்ம்

xxx :   தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்றேன். எதுக்கு சினிமா விமர்சனம்? அதுவும் பிரச்சினை வர்ற மாதிரி. There are many things under they sky. y cinema? விட்றுப்பா. இசை விமர்சனம் ஓக்கே. ஆனா அதையும் ஸ்டாப் பண்றது நல்லது

me : ம்ம்

xxx : ஏன் சொல்றேன்னா, சாளரத்த படிச்சா ஜாலியா இருக்கும்ன்னு நம்பறாங்க. எதுக்கு வீண் சண்டை? விஜய் பத்தி எழுதறதையும் நிறுத்திடு.

me : அது வந்து சகா.

xxx : உன் இஷ்டம்ப்பா. நீ எல்லோருக்கும் பொதுவானவன். அதனால் சொன்னேன்..

me : ம்ம்

xxx : புதுசா ஃபோட்டோ எல்லாம் போடுற. கலக்கல்

me : நன்றி சகா

xxx : ஆனா அதுக்கு தனியா ஒரு பிளாக வச்சிக்கோ. அதே மாதிரி தோழி அப்டேட்ஸ் தான் ட்விட்டர்ல போடறியே. மறுபடியும் எதுக்கு பிளாகுல? ஏன் சொல்றேன்னா அப்பதான் உனக்கு ட்விட்டர்லயும் ஃபாலோயர்ஸ் கூடுவாங்க. அததுக்கு ஒரு ஸ்பெஷல் வச்சிக்கோ.. ஆல் ஏரியாலும் நீ கில்லிப்பா

me : ஆமா சகா. நல்ல ஐடியா

xxx : நீ தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்றேன். கார்க்கி எதுக்கு மெசெஜ் சொல்லனும்? குசும்பனே கிண்டலடிச்சார். அதனால சிவா, ரூம் மேட் மாதிரி மெசெஜ் சொல்ற பதிவ தவிர்த்தா நல்லது. அப்புறம் நீ ஏன் வீட்டுல இருக்கிறவங்கள பத்தி எழுதற? பப்லுவுக்கு கண்ணு பட்டுடும். இன்னொரு தடவ அந்த பேர பிளாகுல பார்த்தேன். அவ்ளோதான்

me : ரைட்டு சகா. உங்க அக்கறைக்கு நன். சரி விடுங்க

xxx : உன் பிசினஸ் எல்லாம் எழுதறியே. அது ஓக்கே.

me : அப்ப அத பத்தி மட்டும் எழுதவா?

xxx : எல்லா விஷயத்தையும் எழுதிட்டா உனக்குன்னு என்ன இருக்கு சகா? அதை எழுதாம இருந்தா நல்லதுன்னு தோணுது.

me : புட்டிகதைகள், காக்டெயில் மட்டும் தான் இருக்கு

xxx : இப்பலாம் நீ காக்டெயில்னு தலைப்பு வைக்காம எழுதற போலிருக்கு. ஆனா ஒன்னு சொல்றேன் சகா. அந்த மாதிரி தொகுப்பு பதிவு மலிவாயிடுச்சு. மொக்கையை குறை. அந்த மாதிரி வேணாம். வலையுலக மேட்டரும் பொதுவான ஆட்களுக்கு புரியாது. சோ ஸ்டாப் தட் நான்சென்ஸ் டூ

me : சரி சகா.  வாரம் 4 புட்டிக்கதை போட்டு ஜமாய்ச்சிடுவோம்

xxx : அய்யோ. அப்படி டைல்யூட் பண்ணிடாத சகா. மாசம் ஒண்ணோ ரெண்டோ போடு

me : ம்ம். அப்படி சொல்றீங்களா?

xxx : ஏதோ நீ நல்லா வருவன்னு நம்பிக்கை இருக்கிறதால் நேரம் ஒதுக்கி சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். மொக்கைதான் உன் பலம். ஆனா கொஞ்ச நாளைக்கு மொக்கையே எழுதாம இரு. அப்புறம் பாரு உன் எழுத்த. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா?

me : ச்சே. அப்படியில்ல சகா.

xxx : சரி அதெல்லாம் விடு. நாளைக்கு என்னப்பா போஸ்ட்?

me :  போடாங்ங்ங்ங்ங்ங்ங்க…

31 கருத்துக்குத்து:

ஷர்புதீன் on May 27, 2010 at 8:55 AM said...

:-)

நர்சிம் on May 27, 2010 at 9:05 AM said...

இதேதானா உங்ககிட்டயும்..ரைட்ட்ட்ட்டு

முகிலன் on May 27, 2010 at 9:19 AM said...

ஆனாலும் ஆதியை நீங்க இப்பிடித் திட்டியிருக்கக் கூடாது..

(ஏதோ என்னால முடிஞ்சது)

செ.சரவணக்குமார் on May 27, 2010 at 9:26 AM said...

சிரிச்சு முடியல நண்பா. கடைசி பதில் தான் டாப்பு.

செ.சரவணக்குமார் on May 27, 2010 at 9:27 AM said...

//டெரர் பார்ட்டி, பதிவுலக ஒசாமா//

லேபிள் கலக்கல்.

தராசு on May 27, 2010 at 9:32 AM said...

கலக்கல்.

//நீயெல்லாம் நல்லா எழுதறவன் அதனால் சொன்னேன் //

//நீ எல்லோருக்கும் பொதுவானவன். அதனால் சொன்னேன்.//

//ஆல் ஏரியாலும் நீ கில்லிப்பா //

//விஜய் பத்தி எழுதறதையும் நிறுத்திடு//

புன்னகை on May 27, 2010 at 9:55 AM said...

Loved it!!! :-)

வால்பையன் on May 27, 2010 at 9:58 AM said...

நான் சொல்ல நினைச்சதை அப்படியே ஒருத்தர் சொல்லியிருக்காரே!

:)

மோகன் குமார் on May 27, 2010 at 10:25 AM said...

//ஆனாலும் ஆதியை நீங்க இப்பிடித் திட்டியிருக்கக் கூடாது.. //

!!!!
????

காவேரி கணேஷ் on May 27, 2010 at 10:28 AM said...

அப்படியே,
நீங்க என்னவெல்லாம் தலைப்புல எழுதுறீங்களோ அதல்லாம் சந்தடி சாக்குல புட்டு வச்சுடீயப்பா

kumaresh on May 27, 2010 at 10:57 AM said...

label superb, naan padhi padichappo enna nenacheano athayae neenga kadaisiyila solliteenga

சுசி on May 27, 2010 at 11:16 AM said...

இம்புட்டு திறமையா உங்களுக்குள்ள..

கார்க்கியையே கேள்வி கேக்கரார்னா அவர் லேபிளுக்கு பொருத்தமானவர் தான்.. :)))

எட்வின் on May 27, 2010 at 11:23 AM said...

லேபிள் அட்டகாசம் சகா,

தலைப்பு அத விட அதிரடி. ஒய் பிளட் சேம் பிளட் :)

கும்க்கி on May 27, 2010 at 11:28 AM said...

மனசாட்சியுடன் உமது உரையாடல் அருமை..

:))

RaGhaV on May 27, 2010 at 11:47 AM said...

////விஜய் பத்தி எழுதறதையும் நிறுத்திடு

நல்லததான்யா சொல்லியிருக்காரு.. ;-)

ர‌கு on May 27, 2010 at 11:54 AM said...

நீங்க‌ ந‌ட‌த்துங்க‌ எச‌மான் :)

ஜெட்லி on May 27, 2010 at 12:44 PM said...

பதிவுலக ஒசாமா......

யார்ணா அது ??

பிரதீபா on May 27, 2010 at 1:10 PM said...

இதெல்லாம் பட்டை(எச்சூஸ் மீ, பட்டை என்றால் பாலிஷிங், பாலிஷிங்) தீட்டறதுக்குன்னு நெனச்சுக்குங்க !!

உண்மைத் தமிழன்(15270788164745573644) on May 27, 2010 at 1:20 PM said...

தம்பி..!

யாருப்பா அந்தத் தெய்வம்..?

கொஞ்சம் என்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கக் கூடாதா..?

குசும்பன் on May 27, 2010 at 1:41 PM said...

சின்னபுள்ளயா இருக்கச்ச xxx பார்த்தது, நீ என்னடான்னா இன்னும் xxx கூட பேசிக்கிட்டு இருக்க... பேட் பாய்!

கார்க்கி on May 27, 2010 at 2:09 PM said...

நன்றி ஷர்புதீன்

நர்சிம், அவர் எல்லோருக்கும் பொதுவானவர் சகா

முகிலன், ஹிஹிஹி.. ஆதிய இவ்ளோ மருவாதையா சொல்லுவோமா?

நன்றி சரவணகுமார்

தராசண்ணே, விஜய்ன்னா ஆஜர் ஆயிடுவீஙக்ளே :)

புன்னகை, ஹிஹிஹி.நன்றி

வால், அவர் உங்கக்கிட்டயும் சொல்ல சொன்னார்

மோகன், என்ன ஆச்சு சார்?

காவேரி கணேஷ், நான் இல்ல சார்.அவரு :)

நன்றி குமரேஷ்

சுசி, அது நான் இல்லைங்கோவ்

நன்றி எட்வின்

கும்க்கி, வோட்டுக்கு நன்றி

ராகவ், நல்லா இருங்க சகா

நன்றி ரகு

ஜெட்லீ, 1000 ரூபாய் டிடியுடன் அனுகவும்.(ஹலோ டிடின்னா அவங்க இல்ல)

பிரதீபா, இன்னுமா பாலீஷ் ஏத்தனும்????

உ.த. அண்ணே, சீக்கிரம் சொல்றேன்

குசும்பன், நான் இன்னும் சின்னப்புள்ளதானே???

அமுதா கிருஷ்ணா on May 27, 2010 at 2:58 PM said...

யாருப்பா அந்த xxx அடிக்கலாம் போல இருந்தது...சும்மா தானே

Nivas on May 27, 2010 at 4:29 PM said...

Hi Karki,

Good Thinking

மதன்செந்தில் on May 27, 2010 at 4:44 PM said...

கலக்கல் தொடருங்கள்..



www.narumugai.com

ILA(@)இளா on May 27, 2010 at 6:35 PM said...

அப்ப எழுதறத நிப்பாட்டப் போறீங்களா?

கார்க்கி on May 27, 2010 at 6:50 PM said...

அமுதா மேம், விட்டுடலாம். தெஇர்யாம சொல்லிட்டாரு :)

நன்றி நிவாஸ்.

நன்றி மதன்

நன்றி இளா..அபப்டித்தான் நினைச்சேன் ரெண்டு நாளா.. இன்னைக்கு ஒரு மொக்கை சிக்கிடுச்சேய்

Kafil on May 27, 2010 at 7:20 PM said...

Pathivukku Epdi Ellam matter pudikiraainga....hmmm

ஆதிமூலகிருஷ்ணன் on May 28, 2010 at 11:12 AM said...

தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த சாட் உரையாடலை பொதுவில் வைப்பது அநாகரீகம். உங்கூட டூ.! :-))

கார்க்கி on May 28, 2010 at 11:23 AM said...

கஃபில், ஹிஹிஹி

ஆதியண்ணே, சொல்லிடறேன்.. அந்த XXX என் மனசாட்சி ..ஹிஹிஹிஹிஹி

www.thalaivan.com on May 28, 2010 at 8:37 PM said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

விக்னேஷ்வரி on May 29, 2010 at 6:55 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com