May 23, 2010

டெவில் ரிட்டர்ன்ஸ்


 

    கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பினார் பப்லு. பப்லு யாரென தெரியாதவர்களுக்கு.. அக்கா பையன். அக்கா எப்படி பையனா இருக்க முடியும் என என் மொக்கையை எனக்கே ரிப்பீட் அடிக்காமல் கேளுங்க. மொக்கையில் இருந்து விஜய் வரை எல்லாமே எங்களுக்கு அப்படியொரு பொருத்தம். அவனைப் பற்றி தெரிய இதைப் படியுங்கள்.

DOY சோப் போட்டுதான் குளிப்பான் பப்லு. ஒவ்வொரு முறையும் விதவிதமான பொம்மைகள் வடிவத்தில் வாங்குவான். இந்த முறை சிங்கம். கவரைப் பிரித்தவன் என்னிடம் காட்டி சொன்னான், ”தூள் சோப்புடா. இத போட்டு குளிச்சா ஃப்ரெஷ்ஷா இருக்கும் தெரியுமா?”

”சிங்கம் கடிச்சுடாதாடா” என்றபடி சோப்பை வாங்கிய நான் கைத்தவறி கீழேப் போட்டுவிட்டேன்.

கோவத்துடன் முறைத்த பப்லு சொன்னார் “ தூள் சோப்புன்னுதான் சொன்னேன். நீ அத உடைச்சு சோப்பு தூள் ஆக்கிடுவியே”

இன்னொரு உதாரணம்..

யோகாவெல்லாம் செய்கிறான் பப்லு. வீட்டுக்கே வந்து சொல்லித் தருகிறார் மாஸ்டர் ஒருவர். ஆர்வத்தில் இவன் எல்லாத்தையும் கொஞ்சம் அதிகமாகவே செய்கிறான் போல. பத்மாசனத்தில் அமர்ந்தவனை முன்னே வர சொல்லி இருக்கிறார். வேகமாக சாய்ந்தவன் தொபுக்கடீர் என்று குடை சாய்ந்த வண்டியை போல் கவிழ்ந்து விட்டானாம். ரப்பர் போல வளையறீயேப்பா என்றாராம் மாஸ்டர். மேட்டர் அதுவல்ல. மறுநாள் ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தவன் தப்பாக எழுதிவிட்டு கையால் அழிக்க முயற்சி செய்திருக்கிறான். ஏண்டா என்றால், இவன் தான் ரப்பர் ஆச்சே. அதனால்தானாம்

இதெல்லாம் பழசு.. இந்த விடுமுறையில் நடந்ததைப் பார்ப்போம்.

பீச்சுக்கு சென்றால் நானும் பப்லுவும் 50ரூபாய்க்காவது பலூன் ஷூட் செய்வோம். ஹார்ஸ் ரைடிங், ஷூட்டிங்.. இதெல்லாம் ஐ.பி.எஸ் ஆகவிருக்கும் பப்லுவுக்கு டிரெயினிங்.ஹிஹிஹி. விஷயம் என்னவென்றால் நேற்று ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், ”மம்மி இவன் ஒரு கடைல 50 ரூபாய் சுட்டுட்டான்” என்றான் பப்லு. அக்காவும் என்னடா என்பது போல் முறைக்க, சிரித்துக் கொண்டே சொன்னான் “பலூன் சுட்டான் மம்மி”

இதைக் கேட்ட என் மம்மி ஒரு பழையக் கதை சொன்னார்கள். அப்போது நான் அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருந்தேனாம்.(தூள் படம் பார்த்தவர்கள் அமைதியாக இருக்கவும்). அப்பாவிடம் வந்து 50 கி.மீ ஸ்பீடில் ஓடுன பஸ்ஸ சைக்கிளில் ஓவர்டேக் செய்ததாக சொல்லியிருக்கேன். அவரும் வேகமாக போகக் கூடாது என்று சொல்ல, பதிலுக்கு நான் சொன்னது” ஆனா நான் ஓவர்டேக் செஞ்சப்ப அது நின்னுக்கிட்டுதான் இருந்தது”

பப்லு என்னைப் பார்த்து அப்ப நீயும் என் டீம்தாண்டா என்றான். ரெண்டு மம்மியும் ஒன்றாக சொன்னார்கள். ம்க்கும்

_______________________________________________________________________

இது பண்ருட்டியில் நடந்தது.

”சக்கர சீக்கிரம் வைடா. ஸ்ரீ சாப்பிட உட்கார்ந்திட்டான் பாரு” என்று சொன்னாராம் பப்லு பாட்டி. சக்கரபாணியும் பொறுப்பாக இட்லி வைத்திருக்கிறான். “உன்னை சக்கரதானே வைக்க சொன்னாங்க. இட்லி வைக்கிற” என்றானாம் பப்லு.

இது போன்ற தொடர் மொக்கைகளை கவனித்த பக்கத்து வீட்டு அக்கா (கவனிக்க: பப்லுவுக்கு அக்கா) “என்னம்மா பேசுறான்.. எங்கடா கத்துக்கிட்ட?” என்று வியந்தாராம். எங்க கார்க்கி மாமாகிட்ட கத்துக்கிட்டேன் என்று பதில் சொன்னானாம் பப்லு.தகவலோடு  ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?????????

_______________________________________________________________________________

22 கருத்துக்குத்து:

ர‌கு on May 23, 2010 at 10:54 PM said...

//ஆனா நான் ஓவர்டேக் செஞ்சப்ப அது நின்னுக்கிட்டுதான் இருந்தது//

முடிய‌ல‌ ச‌கா! அஞ்சாவ‌து ப‌டிக்கும்போதேவா?!

//தகவலோடு ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம்//

உங்க‌ள‌ ஹீரோன்னு நினைச்சேன், ஆன்ட்டி ஹீரோவா? ;)))

கமலேஷ் on May 23, 2010 at 11:14 PM said...

ரொம்ப அழகா நகைச்சுவையோட எழுதறீங்க...ரசிச்சி படிக்க முடியுது...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

Anonymous said...

இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?????????//

ம்ம்க்கும் :))

பா.ராஜாராம் on May 23, 2010 at 11:34 PM said...

devil returns 2 own country? :-))

-பப்லு பேரவை.
சவுதி அரேபியா.

முகிலன் on May 24, 2010 at 12:03 AM said...

// கமலேஷ் said...
ரொம்ப அழகா நகைச்சுவையோட எழுதறீங்க.//

சகா எவ்வளவு சோகத்தோட -
//தகவலோடு ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ????????//
- இப்பிடி எழுதியிருக்காரு. இதைப் போய் நகைச்சுவைன்னு கிண்டல் பண்றீங்களே பாஸு..

:)))

சுசி on May 24, 2010 at 12:19 AM said...

அப்போ தோழி அப்டேட்ஸ்ல அந்த அக்காவும் வருவாங்களா கார்க்கி??

// (கவனிக்க: பப்லுவுக்கு அக்கா) //

பப்லு குருவை மிஞ்சிய சிஷ்யன்.

டம்பி மேவீ on May 24, 2010 at 5:01 AM said...

நான் பப்லு நான் நேர்ல பார்த்தபோ அமைதியாக தானே இருந்தாரு ????? ஒரு வேளை அப்ப நீங்க அவரோட இல்லை, அதான் அமைதியாக இருந்தாரோ

பிரசன்னா on May 24, 2010 at 8:12 AM said...

//ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம்//

நீங்கதான் அவருக்கு மாமா.. அவர் இல்லை ;)

(சும்மா விளையாட்டுக்கு ..)

தராசு on May 24, 2010 at 9:51 AM said...

//தகவலோடு ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம்//

இப்படியே எழுதிகிட்டும் புலம்பிகிட்டும் எத்தனை நாளைக்கு தல. சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க....

எறும்பு on May 24, 2010 at 10:05 AM said...

ஹீ ஹீ

:)

கார்க்கி on May 24, 2010 at 10:22 AM said...

ஹலோ ரகு..பப்லுவுக்கு அக்கானன அது ஆண்ட்டியா???

நன்றி கமலேஷ்

மயிலக்கா, ஹிஹிஹிஹி

பா.ரா, சவுதில மேலவை இருக்காங்க?

முகிலன், அவரு அதை சொல்லலைங்க... நல்லவங்க

சுசி, நான் இன்னும் அவங்கள பார்க்கலங்க

மேவீ, அன்னைக்கு அவனை சரியா பார்க்கல... தலைவர் யார் கூட பிசியா இருந்தாருன்னு கவனிக்கலையா?

பிரசன்னா, ஆவ்வ்வ்வ்வ்

தராசண்ணே... ம்ம்

ஹிஹிஹி. எறும்பண்ணே

Vidhoosh(விதூஷ்) on May 24, 2010 at 12:02 PM said...

//இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?????????//

க்கும்... ஆமாமா.. உங்களுக்குத்தான் பத்தலை... இதெல்லாம் ஏற்கனவே சரியா சொல்லித் தரவேண்டாமா?

//உங்க‌ள‌ ஹீரோன்னு நினைச்சேன், ஆன்ட்டி ஹீரோவா? ;)))///

அதெல்லாம் இல்லீங்க ரகு.. "அங்கிள்" ஆகி ஆன்ட்டியை தேடும் ஹீரோ..

கும்க்கி on May 24, 2010 at 12:24 PM said...

:))

பப்லூ ராக்ஸ்..

Anonymous said...

ரசித்தேன்

RaGhaV on May 24, 2010 at 3:38 PM said...

//தகவலோடு ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம்//

அப்ப தோழி..??

எறும்பு on May 24, 2010 at 3:55 PM said...

RaGhaV said...
//அப்ப தோழி..?? //

த்ரிஷா கிடைக்கலைனா திவ்யா

:)

~~Romeo~~ on May 24, 2010 at 5:59 PM said...

பப்லு ஹ்ம்ம் ... அடுத்த தடவை பதிவர் சந்திப்பு நடந்தால் உடன் அழைத்து வரவும் ..

விக்னேஷ்வரி on May 25, 2010 at 12:19 PM said...

பாவம் அம்மா. ஒரு கார்க்கி போதாதா...

ஆதிமூலகிருஷ்ணன் on May 25, 2010 at 12:42 PM said...

ஹிஹி..

நர்சிம் on May 25, 2010 at 5:31 PM said...

நடத்துங்க.

Jenbond on May 26, 2010 at 4:36 PM said...

Raavanan review?

மகேஷ் : ரசிகன் on May 26, 2010 at 5:52 PM said...

வர வர ஓவராப் போறீங்க!

கேக்க யாரும் இல்லன்ற தெனாவெட்டா?

பப்லுவ எப்படி டெவில்னு சொல்லலாம்?

வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினாத்தான் சரி வரும் போல இருக்கே!

 

all rights reserved to www.karkibava.com