May 21, 2010

ஏழுவுக்கு வந்த டவுட்டு


 

சென்னைக்கு வந்திருந்தான் ஏழு. வழக்கம் போல் முதல் நாள் இரவு அடித்த பியர் ஏழுவுக்கு இன்னமும் போதையைத் தந்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் அன்று இண்டெர்வ்யூ இருந்ததால் காலையிலே குளித்து புத்தாடை அணிந்து, டை கட்டி சேல்ஸ் ரெப் போல தயாராகி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான். பாலாஜியின் நண்பன் ஒருவர் தனது கப்பல் போன்ற காரில் வந்து ஏழுவையும் பாலாஜியையும் பிக்கப் செய்துக்கொண்டு கிளம்பினார். வழக்கம் போல பாலாஜி  பின்புற சீட்டில் அமர்ந்து மொபைலில் கடலை விவசாயம் செய்ய ஆரம்பித்தான். இனி ஏழுவும், அந்த நண்பரும்

ஹலோ.நான் ஏழுமலை.

ஹாய் நான் அண்ணாமலை

கூல் பாஸ்.நாம ஒண்ணா சேர்ந்தா வெற்றிதான்

என்ன சொல்றீங்க?

மலை மலை. ஹிட்டுன்னுதானே சொன்னாங்க? இல்லையா?

ஓ அதுவா… அப்புறம்.. வேற என்ன?

அடுத்து மாஞ்சா வேலு பாஸ். சீக்கிரம் ரிலீஸ் ஆகுது.

ஹலோ. அத விடுங்க. நீங்க எப்படி இருக்கிங்க?

ஃபைன். எனக்கு கார் சம்பந்தமா ஒரு டவுட்டுங்க

சொல்லுங்க. நான் ஆட்டோமொபைல்தான்.

ஓ.பெட்ரோலா டீசலா?

நக்கலா? நான் படிச்சது ஆட்டோமொபைல்ன்னு சொன்னேங்க

நல்ல வேளை.. நீங்க வெட்னரி டாக்டர் ஆகல..

ஏன் உங்களுக்கு ஃப்ரீயா வைத்தியம் பார்த்திருப்பேனா?

இல்லங்க. நான் நாய்.நான் மாடுன்னு நீங்களே சொல்லிக்கிட்டு இருப்பிங்கல்ல?

ஷிட். ரொம்ப கடிக்காதிங்க. உங்க டவுட்டு என்ன?

விடுங்க சார். அத புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்ல ரொம்ப பொறுமை வேணும். நீங்க டென்ஷன் ஆவறீங்க..

அதெல்லாம் இல்ல பாஸ். எனக்கு ஆட்டோமொபைல்ல இண்டெரெஸ்ட் அதிகம். கேளுங்க

பெட்ரோல்ல ஓடுற காரு, கேஸல் ஓடுற காருன்னு சொல்றாங்களே..

ஆமா..

ஆனா எல்லா காரும் ரோடுலதானே ஓடுது?

இதெல்லாம் எல்.கே.ஜி காமெடி சார். வேற சொல்லுங்க

ஹிஹிஹி. மறுபடியும் உங்க பொறுமைய சோதிச்சேன். கூலாதான் இருக்கிங்க.

ஏசி ஓடுது சார்.

அதான் சார் அடுத்த டவுட்டு.

என்ன?

காருல வர்ற கரண்ட் எல்லாமே டிசி தானே?

ஆமா.

அப்புறம் எப்படி ஏசி ஓடுது?

ஆவ்வ்வ்வ்வ்..உருப்படியா ஒரு டவுட்டும் இல்லையாங்க.

இருக்குங்க. இப்ப வர்றேன் விஷயத்துக்கு. வண்டி வாங்கி இஞ்சின எவ்ளோ வருஷம் கழிச்சு மாத்துவீங்க?

அதெல்லாம் மாத்த தேவையில்லை சார்.

டயர்?

ரெண்டு வருஷத்துல

சீட் கவர்?

அது நம்ம இஷ்டம் சார். நான் பொதுவா ஒரு வருஷத்துல மாத்துவேன்.

அப்புறம் ஏன் சார் கியர மட்டும் அடிக்கடி மாத்தறீங்க?

அய்யோ.. 1960 கடியிலே இருக்கிங்களே..

சார் நான் இறங்குற இடம் வந்துடுச்சு. உருப்படியா என் டவுட்ட கேட்டுட்டு போறேன்.

ம்ம்

Which is the longest car in india?

ஹாஹா.அதுலதான் இப்ப நீங்க இருக்கீங்க..

நல்லதா போச்சு சார். என் டவுட்டு என்னன்னா, காரை நீங்க வச்சிருக்கிங்க. கார வச்சிருந்த சினிமா கவர்ச்சி நடிகை சொப்பனசுந்தரிய இப்ப யார் வச்சிருக்கா???

!@#$%^&*&^%$#@

33 கருத்துக்குத்து:

புன்னகை on May 21, 2010 at 10:20 AM said...

Welcome back!!! :-)

தாரணி பிரியா on May 21, 2010 at 10:21 AM said...

//னக்கு காரை சம்பந்தமா ஒரு டவுட்டு//

காரை சம்பந்தமா டவுட்டு வந்தா கொத்தனாரைதான் கேட்கணும்

Anbu on May 21, 2010 at 10:25 AM said...

:-)

தாரணி பிரியா on May 21, 2010 at 10:26 AM said...

அப்ப இந்த கேள்வியை மொக்கையில் கேட்ட அண்ணாதான் ஏழுமலையா ? :)

புன்னகை on May 21, 2010 at 10:29 AM said...

Hey me de 1st!!! :-)))))))))))))

soundar on May 21, 2010 at 10:32 AM said...

இப்படி கடிச்சி ரத்தம் வருது...

philosophy prabhakaran on May 21, 2010 at 10:37 AM said...

மரண கடி கடிச்சிருக்கீங்க...

மோனி on May 21, 2010 at 10:42 AM said...

முடியலை...

மோகன் குமார் on May 21, 2010 at 11:11 AM said...

Not like usual Yezhu..

Expectations are higher from you!!

ஜெனோவா on May 21, 2010 at 11:14 AM said...

சகா, கொஞ்சம் இப்படி பக்கத்துல வாங்க - மூக்கு கொஞ்சம் பெருசா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கணும்னு தோணுமாம் :)
செம்ம்ம்ம கடி !

அன்புடன் அருணா on May 21, 2010 at 11:24 AM said...

Welcome back ஏழு!

நர்சிம் on May 21, 2010 at 12:33 PM said...

கலக்கல் ஏழு

நாய்க்குட்டி மனசு on May 21, 2010 at 1:08 PM said...

well done lord labak doss!!

RaGhaV on May 21, 2010 at 1:10 PM said...

ரணகளம்.. ;-)

sharmily on May 21, 2010 at 1:37 PM said...

கலக்கல்..:)

பிரதீபா on May 21, 2010 at 1:43 PM said...

ஹைய்யா... ஏழு ஏழு !! :-))))

சுசி on May 21, 2010 at 1:47 PM said...

எல்லாரும் ஏழுவுக்கு ஜோரா ஒரு ஓ போடுங்க..

தர்ஷன் on May 21, 2010 at 2:05 PM said...

ம்ம்ம் ஏழுவிடமிருந்து இதை விட எதிர்பார்க்கிறோம்
பத்தாது சகா

vanila on May 21, 2010 at 2:37 PM said...

எழுவோட சீரீஸ்' லயே "இந்த பதிவு" ரொம்ப ரொம்ப கம்மி தான்..
we expect more from Ezhumalai.

V.Radhakrishnan on May 21, 2010 at 3:05 PM said...

;)

Maduraimalli on May 21, 2010 at 3:45 PM said...

saga, 1 good news :

http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/05/21-vijay-sura-vettaikaran-loss-theatre-owners.html

Vidhoosh(விதூஷ்) on May 21, 2010 at 4:51 PM said...

///ஹைய்யா... ஏழு ஏழு !! :-))))///
இப்டித்தான் நானும் ..

ஆனா..
ரொம்ப நாள் கழிச்சுஅதிர் வேட்டா இருக்கும்னு வந்தா புஸ்ஸ். :-(
இதுக்கெல்லாம் ஏழுவ எழுப்பி இருக்க வேண்டாம்ங்க ... ம்ச்

Jenbond on May 21, 2010 at 5:23 PM said...

ravanan song review?

அதிலை on May 21, 2010 at 6:28 PM said...

only 7.... post is 7.5

Kafil on May 21, 2010 at 6:48 PM said...

vimarsanam--- Eluvin Vaandhi.. {eppudi namma nun arasiyal}

மங்களூர் சிவா on May 21, 2010 at 9:33 PM said...

nice!

Palay King on May 22, 2010 at 12:09 AM said...

Buzzz

~~Romeo~~ on May 22, 2010 at 4:42 AM said...

ஏன்பா கவுண்டமணிக்கு அப்படியே பார்வர்ட் பண்ணிவிடு . விடைகிடச்சாலும் கிடைக்கலாம் .

அத்திரி on May 22, 2010 at 9:03 AM said...

பட்டய கிளப்பிட்ட சகா

லேகா on May 22, 2010 at 11:56 PM said...

:-))))))

கார்க்கி on May 24, 2010 at 12:27 PM said...

அனைவருக்கும் நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் on May 25, 2010 at 1:04 PM said...

நல்லாயிருந்தது. ஆனால் பழைய ஜோக்கில் முடித்திருந்தது ஒரு குறை.

cheena (சீனா) on May 27, 2010 at 6:05 AM said...

அன்பின் கார்க்கி

ஏழு - தாங்கலப்பா - முடியல

நல்வாழ்த்துகள் கார்க்கி
நட்புடன் சீனா

 

all rights reserved to www.karkibava.com