May 19, 2010

இப்படியும் செய்யலாம் ரத்ததானம்


 

   அட்சய திருதியை அன்று காலையில் வீட்டுக்கு வந்த‌ தோழி “உடனே ஒரு முத்தம் தாடா “ என்றாள். என்னவென்று கேட்டதற்கு ”அன்று என்ன வாங்கினாலும் பல மடங்கு பெருகும்” என்றாள். ”வழக்கமாய் எல்லோரும் அன்று  தங்கம்தானே வாங்குவார்கள். இங்கு தங்கமே வாங்குகிறதே “ என்றேன். பற்கள் தெரிய சிரித்து வைரக்கல்லையும் காட்டினாள் தோழி

___________________________________________________________________________________

ஒல்லியாக இருப்பதை உன்னதமாக கருதும் தோழியிடம் சொன்னேன் உன் பிறந்தநாளில் இரத்ததானம் செய்தேன் என்று. நகத்தைக் கடித்து துப்பியவள் சொன்னாள் “எனக்கே தந்திருக்கலாமே”. அப்போதிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கும் என்னிடம் எதற்கு சிரிக்கிறாய் என்று இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள் பச்சிளங்குழந்தை.

___________________________________________________________________________________

”உன் ஜாதகம் வேணும்டா. எனக்கு எட்டில் ராகு இருக்கிறாராம்.இப்ப நேரம் சரியில்லையாம். உனக்கு ஏழில் இருந்தா பொருத்தம் நல்லாயிருக்குமாம்” என்கிறாள் தோழி.  எட்டு,ஏழு என எல்லாக் கட்டங்களிலும் உன் பெயர்தானடி இருக்கிறது என்றேன். கட்டிப்பிடித்தவளிடம் மேலும் சொன்னேன் “இப்போ உன்னை சனி வேற பிடிச்சிக்கிச்சு”

___________________________________________________________________________________

தோழியுடன் இருப்பதையே முழுநேர வேலையாக செய்துக் கொண்டிருக்கும் என்னிடம்  என் மாமா என்னடா செய்ற என்று அதட்டியபோது தைரியமாக "லவ் பண்றேன்" என்றேன்.சன்னமான குரலில் கேட்டார் "எவ்வளவுடா தினக்கூலி?". தோழியிடம் சொல்லி வருத்தப்பட்ட போது என் கன்னங்களிலும் உதடுகளிலும் மாறிமாறி பலமுறை முத்தமிட்டாள். பின் என் கண்களை உற்று நோக்கி சொன்னாள் "அது நாளுக்குநாள் ஏறிக்கொண்டிருக்கிறது என சொல்"

___________________________________________________________________________________

”நீதான் அறிவாளி ஆச்சே. முதலிரவில் என்னவெல்லாம் பண்ணுவாங்க சொல்லு பார்ப்போம்” என்றாள் தோழி. “நான் அறிவாளிதான். ஆனா உனக்கு சொல்லி புரியவைக்க முடியாது” என்றபடி அவளருகில் நகர்ந்தேன். “வேற என்ன செய்றது” என்றபடி அவளும் என்னருகில் வருகிறாள். சீக்கிரம் போயேன் சூரியனே என்று காத்திருக்கத் தொடங்கினேன் நான்

___________________________________________________________________________________

பி.கு: 5 லட்சம் ஹிட்ஸுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

27 கருத்துக்குத்து:

சுசி on May 19, 2010 at 2:26 AM said...

மறுபடி வாழ்த்துக்கள் கார்க்கி..

இன்னும் பல லட்ஷம் ஹிட்ஸ்கள் தொட்டு.. வேணாம் விட்டுடறேன்..

பாத்துப்பா.. இந்த ரேஞ்சில போனா
உங்க தோழிங்க ஆளாளுக்கு அடிச்சிக்க ஆரம்பிச்சு ப்ளட் பாங்க் காலி ஆய்டும்.

ILA(@)இளா on May 19, 2010 at 3:22 AM said...

மறுபடி வாழ்த்துக்கள் கார்க்கி..

இராமசாமி கண்ணண் on May 19, 2010 at 4:26 AM said...

enjoy.

டம்பி மேவீ on May 19, 2010 at 4:40 AM said...

கார்க்கி ..மாமாவுக்கு தெரிஞ்சு போயிருச்சா ????? பேஷ் பேஷ் இனி எந்த பிரச்சனையும் இருக்காதுல (இருந்தாலும் உங்களுக்கு இரண்டு காது இருக்குன்னு எனக்கு தெரியும்)"ஒல்லியாக இருப்பதை உன்னதமாக கருதும் தோழியிடம் சொன்னேன் உன் பிறந்தநாளில் இரத்ததானம் செய்தேன் என்று. நகத்தைக் கடித்து துப்பியவள் சொன்னாள் “எனக்கே தந்திருக்கலாமே”. அப்போதிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கும் என்னிடம் எதற்கு சிரிக்கிறாய் என்று இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள் பச்சிளங்குழந்தை."


"A"

(இதை என்கிட்டே சொல்லி ரொம்ப நாளாகிருச்சுல. இப்ப தான் பாலிஷ் போட்டு எழுத தைரியம் வந்ததா ????)

டம்பி மேவீ on May 19, 2010 at 4:43 AM said...

தோழி அப்டேட்ஸ் - கார்கியின் கல்யாண நேரம் நெருங்குதுன்னு சொல்லலாமா ???? (கோழி அப்டேட்ஸ்யை வம்புக்கு இழுக்காதிங்க)

மகேஷ் : ரசிகன் on May 19, 2010 at 8:12 AM said...

சே... லவ் பண்றவங்க கூட சேரவே கூடாது.

மகேஷ் : ரசிகன் on May 19, 2010 at 8:13 AM said...

வழக்கம் போல நல்லாயிருக்கு சகா.

சிலது அஜால் குஜாலா இருக்கு.

மகேஷ் : ரசிகன் on May 19, 2010 at 8:14 AM said...

ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள்.

♠ ராஜு ♠ on May 19, 2010 at 9:08 AM said...

ரெண்டாவது....உலக் குசும்பய்யா உமக்கு!

"ராஜா" on May 19, 2010 at 9:39 AM said...

//“இப்போ உன்னை சனி வேற பிடிச்சிக்கிச்சு”

உண்மைய ஒத்துக்க ஒரு மனசு வேணும் சகா , அது உங்ககிட்ட நெறைய இருக்கு...

Anbu on May 19, 2010 at 9:58 AM said...

\\\தோழியுடன் இருப்பதையே முழுநேர வேலையாக செய்துக் கொண்டிருக்கும் என்னிடம்\\\

Phone attend pannathapaye ninaichen... :-(

Singam..?

கார்க்கி on May 19, 2010 at 11:01 AM said...

நன்றி சுசி..

நன்றி இளா :)

நன்றி இராமசாமி

மேவி, நீ ரொம்ப நல்லவன்ப்பா

மகேஷ், நீயும் என் சாதியாப்பா? எனக்கு லவ்ன்னா அறவே பிடிக்காது

ராஜூ, அப்போ முதல் உலக குசும்பு உமக்கா?

ராஜா, ஆமா சகா.எல்லா விஷயத்திலும் :))

அன்பு, நேத்து வகையா ஒரு இடத்துல மாட்டிக்கிட்டேன்.. நைட்டு இ.கோ.மு.சி படம் வேற போய் நொந்தேன்.இன்னைக்கு கால் பண்றேன்ப்பா

மோகன் குமார் on May 19, 2010 at 11:24 AM said...

Adults Only Pathivu!!

Cable Sankar on May 19, 2010 at 11:57 AM said...

அஞ்சு லட்சத்துக்கு வாழ்த்துக்கள்.:_)

லோகேஷ்வரன் on May 19, 2010 at 12:53 PM said...

என்ன சகா இது வரைக்கும் 10 லிட்டர் blood donate பண்ணி இருப்பீங்களோ !!! ... அட hospital a தான் சகா !!!!

விக்னேஷ்வரி on May 19, 2010 at 1:13 PM said...

நீ நடத்து ராசா..

ர‌கு on May 19, 2010 at 1:23 PM said...

ஹிட்ஸுக்கு வாழ்த்துக‌ள் ச‌கா!

தோழி அப்டேட்ஸ்ல‌ 5 ல‌ட்ச‌ம் ஹிட்ஸ் ப‌த்தி குறிப்பிட்டு இருக்கீங்க‌ளே, தோழியோட‌ பெய‌ர் 'அஞ்சு'ங்க‌ற‌துக்கான‌ குறியீடோ?

வ‌ர‌ வ‌ர‌ தோழி அப்டேட்ஸ் 'A' Oneஆ இருக்கு ச‌கா ;)

நீங்க‌ ஏன் தோழி அப்டேட்ஸை ஒரு புத்தக‌மா கொண்டுவ‌ர‌க்கூடாது? பிப்ர‌வ‌ர் 14, 2011 அன்னைக்கு ரிலீஸ் ப‌ண்ண‌லாமே ;)

முரளிகுமார் பத்மநாபன் on May 19, 2010 at 1:38 PM said...

ஊப்ப்ப்ப்ஸ்............ :-)

தர்ஷன் on May 19, 2010 at 2:00 PM said...

தான் ஹீரோவாக நடித்த குறும்படத்தில் முத்தமிடுதல் பற்றி ஏக தயக்கம் காட்டிய கார்க்கியா இது

செந்தழல் ரவி on May 19, 2010 at 3:37 PM said...

கட்(டி)டுடைத்துத்துட்டீங்க கார்க்கி !!

5 லட்சம் வாழ்த்துக்கள் !!

கார்க்கி on May 19, 2010 at 3:41 PM said...

மோகன் குமார், அதெல்லாம் இல்லங்கண்ணா

நன்றி கேபிள். உங்க ஹிட்ஸுலயும் நான் பாதி. உங்க வயசிலும் நான் பாதி

லோகேஷ், அப்படியே ஓடிடுங்க சகா

விக்கி, இது எதுக்கு?ஹிட்ஸுக்கா, தோழிக்கா?

ரகு, நல்ல ஐடியாதான்.. பார்ப்போம். ஏற்கனவே செல்வா கொலைவெறில இருக்காராம். நன்றி

என்ன ஆச்சு முரளி?

தர்ஷன், ஹிஹிஹி அது நடந்து 8 வருஷம் ஆவுது சகா

pappu on May 19, 2010 at 4:36 PM said...

முடியல! இவங்களையெல்லாம் என்ன செய்யலாம்?

RaGhaV on May 19, 2010 at 7:24 PM said...

கத்திரி வெயில் எஃப்க்டா சகா..? ;-)

Anonymous on May 19, 2010 at 8:06 PM said...

ஊர்ல இருக்குறவன எல்லாம் தோழி அப்டடே என்கின்ற பெயரில் வன்முறையில் இறங்க வைக்க பாக்குறீங்க நண்பரே... நல்லதுக்கு இல்ல...

nagarajan on May 19, 2010 at 10:20 PM said...

Layla effecta....

Kafil on May 19, 2010 at 11:08 PM said...

"A" one nanbare...

Devanand on May 23, 2010 at 1:51 AM said...

ஒன்னு ரெண்டு தேவதைகளின் தேவதை புத்தகத்துல ஏற்கனவே படிச்சது சார். நீங்க தவறா எடுத்துக்காதீங்க. அந்த ஒன்னு ரெண்டு இல்லாமயே உங்க எழுத்து நல்லவே இருக்கு!

 

all rights reserved to www.karkibava.com